உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
கொரோனா வைரஸ் தொற்றினால் 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிப்பு! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவை மட்டுமல்ல உலகையே அச்சுறுத்தி வருகிறது. நோயின் கோரத் தாக்கம் காரணமாக, உலக அளவில் சீனா தனிமைப்பட்டுள்ள நிலையில், தற்போது 35 இற்கும் மேற்பட்ட நாடுகளில், கொரோனா வைரஸ் வேகமாக பரவியுள்ளது. சீனாவின் எல்லைகளை தாண்டி, தென்கொரியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில், மிகவும் இரகசியம் காக்கு…
-
- 0 replies
- 306 views
-
-
மே மாதத்திற்குள் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராவிட்டால் இந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கொரோனா பரவி வருவதையடுத்து ஒலிம்பிக்ஸ் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. போட்டியை ஒத்தி வைக்கவோ வேறு இடத்திற்கு மாற்றவோ வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.polimernews.com/dnews/101701/கொரோனா-பாதிப்பு--ஒலிம்பிக்போட்டிகள்-ரத்தாக-வாய்ப்ப…
-
- 0 replies
- 349 views
-
-
2020: உலகை மிரட்டும் பலம்கொண்ட முதல் ஐந்து நாடுகளின் பட்டியல் வெளியானது உலகில் போர்க் களங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள முன்னணி நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலரை தங்கள் இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்கின்றன. இவ்வாறு, ஆயுதப் படைகளுக்கு மிக உயர்வான பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் ஆயுத வளத்தை அதிகரிப்பதற்காக பெருமளவான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, இராணுவ வலிமையைக் கண்காணிக்கும் வலைத்தளமான குளோபல் ஃபயர்பவர் (Global Firepower) பின்வரும் ஐந்து நாடுகளின் படைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று கூறுகின்றது. அவை இராணுவ வலிமை, நிதி முதல், தளவாட திறன் என்பவற்றுடன் ஒப்பிடப்பட்டு குறித்த…
-
- 8 replies
- 3.3k views
-
-
கொவிட் 19 வைஸ் சீனாவில் சுகாதார மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதை அடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் வனவிலங்குகளின் வர்த்தகம் மற்றும் நுகர்வை நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்தது, ஆரம்ப கொரோனா நோய்த்தொற்றுகள் ஹூபேயின் மாகாண தலைநகர் வுஹானில் உள்ள ஒரு வனவிலங்கு சந்தையில் இறைச்சிகளை கொள்வனவு செய்த நபர்களிடமிருந்து கண்டறியப்பட்டதையடுத்து குறித்த சந்தை முற்றாக மூடப்பட்டதுடன், வனவிலங்கு விற்பனையும் நாடளாவிய ரீதியில் நிறுத்திவைக்கப்பட்டது.</p> தற்போதைய சூழ்நிலையில் “கொவிட்19 வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் கிட்டத்தட்ட 2,700 பேர் வரை உயிரிழந்துள்னர். உலகில் இதாலி, ஈரான், தென்னாபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ள…
-
- 1 reply
- 454 views
-
-
மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து 1000 பேர் சொகுசு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நம் அண்டை நாடான சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 2,600 ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் என உலகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற சொகுசு ஓட்டலில் தங்கியுள்ள 1000த்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக வெளியான தகவலால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின்…
-
- 0 replies
- 762 views
-
-
ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்! ஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இதன்போது குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அம்புலன்ஸ்களையும் பொலிஸ் ஹெலிக்கொப்டர் ஒன்றையும் காணமுடிவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. முதலாவது துப்பாக்கி பிரயோகம் மதுபானசாலையொன்றில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பொலிஸார் இனந்தெரியாத எண்ணிக்கையானவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பி…
-
- 9 replies
- 1.5k views
-
-
கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் நாடாளுமன்றம் அனுமதி கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போர்த்துக்கலில் ஆளும் சோசலிசக் கட்சி உட்பட 5 அரசியல் கட்சிகளினால் கருணைக்கொலை குறித்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது. 230 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 127 உறுப்பினர்கள் குறித்த சட்டமுலத்திற்கு ஆதரவாகவும் ,124 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த நிலையில், சட்டமூலம் 3 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2 வருடங்களுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட குறித்த சட்டமூலம் நிலுவையிலிருந்த நிலையில் தற்போது அங்கீகாரமம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன…
-
- 0 replies
- 241 views
-
-
ஜேர்மனியில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட ஊர்வலமொன்றிற்குள் நபர் ஒருவர் வாகனத்தை செலுத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர். வோல்க்மார்சென் என்ற நகரில் இந்த சம்;பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள காவல்துறையினர் இது திட்டமிட்ட சம்பவமா என்பதை உடனடியாக சொல்லமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் சிலர் படுகாயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் குழந்தைகளும் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரோஸ் திங்கட்கிழமை என்ற நிகழ்வை கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலேயே நபர் ஒருவர் தனது வாகனத்தை செலுத்தியுள்ளார். குறிப்பிட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த மாநிலத்தி…
-
- 1 reply
- 485 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 2 ஆயிரத்து 592 பேர் உயிரிழப்பு! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் 2 ஆயிரத்து 592 பேர் உயிரிழந்துள்ளனர். 77 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் பீஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வுஹான் மாகாணத்தில் வேகமாக பரவி அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் நேற்று வரை கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 592 ஆக அத…
-
- 0 replies
- 395 views
-
-
கொரோனா அச்சுறுத்தல் : ஈரான் எல்லையை மூடியது பாகிஸ்தான்! கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக ஈரானுடனான எல்லையை பாகிஸ்தான் அரசாங்கம் தற்காலிகமாக மூடியுள்ளதுடன், சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் 2 ஆயிரத்து 592 பேர் உயிரிழந்துள்ளனர். 77 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக ஈரானில் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் காரணமாக பாகிஸ்தான் தனது எல்லைப் பாதையை தற்காலிகமாக மூடியுள்ளது. ஈரானில் இருந்து வரும் அனைத்து மக்களும் எல்லைப் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்களால் பரிச…
-
- 0 replies
- 348 views
-
-
டிரம்பின் பயணம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பையும், அவரது மனைவி மெலனியாவையும் சுமந்து வரப்போகிற அதிநவீன விமானம். இது பறக்கும் வெள்ளை மாளிகை. யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அமெரிக்க தேசியக்கொடியும், ஜனாதிபதியின் முத்திரையும் இடம் பெற்றிருக்கும். 1¾ கிரவுண்ட் விமானம் இந்த விமானம் 3 அடுக்குகளை கொண்ட பிரமாண்ட விமானம். இதன் மொத்த பரப்பளவு 4 ஆயிரம் சதுர அடி. கிட்டத்தட்ட 1¾ கிரவுண்ட். டிரம்புக்கும், அவரது மனைவிக்கும் சொகுசான பிரத்யேக சூட்... அதிலும் எக்சிகியூடிவ் சூட்... டிரம்பின் மூத்த ஆலோசகர்கள், அவரது பாதுகாப்பை கவனிக்கும் ரகசிய…
-
- 4 replies
- 617 views
-
-
கனடாவில் ரயில் தண்டவாளங்களில் பேரிகாடுகள் (barricades) வைப்பது முடிவுக்கு வர வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வலியுறுத்தியுள்ளார். கடற்கரையோர பகுதியில் எரிவாயு பைப் லைன் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பெர்டா, க்யுபெக், ஆன்டாரியா (British Columbia, Ontario, Alberta and Quebec ) பகுதிகளில் தண்டவாளங்களின் குறுக்கே பேரிகார்டுகளை அப்பகுதியினர் அமைத்துள்ளனர். இதனால் ரயில் சேவையும், சரக்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ட்ருடோ, பேரிகாடு விவகாரத்தில் சொந்த கனடா மக்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த விரும்பவில்லை என்றும், அமைதி வழியில் அவை அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப…
-
- 1 reply
- 639 views
-
-
வரும் நம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிர்ப்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அந்தஸ்தை பெறுவதில் பெர்னி சான்டர்ஸ் வலுவான முன்னிலையை பெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் நவாடா உட்கட்சி வாக்கெடுப்பில் சான்டர்ஸ் பெரும் வெற்றி பெற்றிருப்பது ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன. எனினும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் அதற்கு தொடர்ந்து நீண்ட போட்டி இடம்பெற்று வருகிறது. முன்னதாக நடைபெற்ற இரு மாநில வாக்கெடுப்புகளில் முன்தங்கி இருந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்றிருப்பதாக ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன. …
-
- 0 replies
- 337 views
-
-
அழிவின் விளிம்பில் சீனா- அனைத்தும் கையை மீறிவிட்டன! ஒப்புக் கொள்கிறேன்- துன்பத்தில் சீன ஜனாதிபதி Sumithiran கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவில் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் இது சீனாவின் "மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை" என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் என இரட்டை முயற்சிகளுக்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெய்ஜிங்கில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சீனப் பிரதமர் லி கெக்கியாங் தலைமை தாங்கினார்.. இதில் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் பங்கேற்றார்கள். இந்த கூட்…
-
- 5 replies
- 1.1k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ரஷ்யா மீண்டும் முயற்சி: புடினுக்கு கடும் கண்டனம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ரஷ்யா மீண்டும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க் கட்சி வேட்பாளர் பெர்னீ சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கலிபோர்னியா மாகாணம், பேக்கர்ஸ்பீல்ட் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில், “எனது பிரசாரத்துக்கு உதவுவதற்கு ரஷ்யா முயற்சிகள் செய்கிறது என கடந்த மாதம் அமெரிக்க அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். ரஷ்யா எவ்வாறு தலையிட முயற்சி செய்தது என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட எந்தவொரு முயற்சியையும் நான்…
-
- 0 replies
- 197 views
-
-
கொரானா வைரஸ் விவகாரம் தொடர்பான அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரிகள் அளித்த பேட்டியில், கொரானா வைரஸ் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஆயிரகணக்கான போலி கணக்குகள் வாயிலாக பல மொழிகளில் ரஷ்யா பொய் பிரசாரம் மேற்கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தனர். கொரானா வைரஸ் குறித்து பொய் தகவலை பரப்புவதன்மூலம், மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கையில் மீண்டும் ரஷ்யர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த குற்றச்சாட்டை மறுத்து, டாஸ் செய்தி நிறுவனத்துக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா அளித்துள்ள பேட்டியில் வேண்டுமென்ற…
-
- 0 replies
- 361 views
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸால் பல பிராந்தியங்களை தனிமைப்படுத்திய அரசு! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகையானது இத்தாலியில் 79 ஆக உயர்வடைந்துள்ளது. இதனால் அந்நாட்டு பிரதமர் கியிசெப் கோன்டே நேற்று (சனிக்கிழமை) அவசரகால திட்டத்தை அறிவித்துள்ளார். இத்தாலியில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தாலியின் லோம்பார்டி மற்றும் வெனெட்டோவின் வடக்கு பிராந்தியங்களில் உள்ள பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த இரண்டு பிராந்தியங்களிலும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதேவேளை கொரோனா பரவியுள்ள குறித்த பகுதிகளுக்கு சிறப்பு அனுமதியின்றி …
-
- 0 replies
- 459 views
-
-
விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட 12 பேரிற்கும் எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கு மலேசிய சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடரவேண்டிய தேவையில்லை என்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என சட்டமாஅதிபர் டன் சிறீ தொமி தோமஸ் தெரிவித்துள்ளார். 12பேருக்கும் எதிரான 34 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களிற்கு எதிராக தண்டனை வழங்குவதற்கான யதார்த்தபூர்வமான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். நபர்களை துதிப்பதும் போற்றுவதும் கொண்டாடுவதும் வழமையான விடயம் …
-
- 5 replies
- 590 views
-
-
மூட்டைப்பூச்சி தொல்லை அதிகமானதால் பிரான்ஸ் நாட்டில் அரசாங்கம் நிபுணர்களின் உதவிக்கு அழைப்பு விடுக்கும் அவசர எண்ணையும், இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 1950 ஆம் ஆண்டுகளில் மூட்டைப்பூச்சி தொல்லையை அகற்றியதாக பிரான்ஸ் நினைத்தது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகள் மீண்டும் வந்துள்ளன. இந்த விரும்பத்தகாத மீள் எழுச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, பிரான்ஸ் அரசாங்கம் வியாழக்கிழமை மூட்டைப்பூச்சி எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியது, இதற்கு ஒரு பிரத்யேக இணையதளம் மற்றும் தகவல் ஹொட்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் அனைவரும் பாதிக்கப்படலாம்" என்று அரசாங்கம் இணையதளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய பிரச்சாரத்தில் தொற்றுநோயைத் தடுப்பது மற்ற…
-
- 0 replies
- 313 views
-
-
2020 ஜனாதிபதி தேர்தலில் டொனால்டிரம்பை வெற்றிபெறச்செய்வதற்கான முயற்சிகளை ரஸ்யா மீண்டும் ஆரம்பித்துள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் தேர்தல்கள் தொடர்பான சிரேஸ்ட அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிற்கு தெரிவித்துள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்பினை தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்திருப்பதற்கான இலக்குடன் ரஸ்யா மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது என அவர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த வாரம் தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து காங்கிரஸ் உறுப்பினர்களிற்கு முழுமையான தகவல்களை வழங்கியுள்ளனர். ஹக்கிங்,சமூக ஊடகங்களை ஆயுதமாக்குதல்,தேர்தல் உள்கட்டமைப்புகளை தாக்குதல் உட்பட பல விடயங்கள் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ரஸ்யா டி…
-
- 1 reply
- 528 views
-
-
வினீத் கரே பிபிசி செய்தியாளர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து முதல்முறையாக இந்தியா வரும் அவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு வரும் திங்கட்கிழமையன்று டிரம்ப் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக பயணிக்க உள்ள டிரம்பை ஆயிரக்கணக்கான மக்கள் சாலை ஓரங்களில் இருந்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை டிரம்ப் திறந்து வைக்கிறார். அகமதாபாத்தில் டிரம்ப் இருக்கவுள்ள மூன்று மணி நேரத்திற்க…
-
- 1 reply
- 747 views
-
-
ஐக்கிய அமெரிக்க 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது போட்டியாளாரான ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனின் பிரசார முகாமின் மின்னஞ்சல்களை ரஷ்யா கசிய விடவில்லை என விக்கிலீக்ஸின் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்சே மறுத்தால் அவருக்கு பொதுமன்னிப்பளிப்பதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்தார் என பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள நீதிமன்றமொன்றில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரான டனா றொஹ்ரபச்சர் மூலம் இவ்விடயத்தை ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தியதாக ஜூலியன் அசாஞ்சேயின் வழக்கறிஞர் ஜெனிஃபர் றொபின்ஸன் ஆவணமொன்றில் தெரிவித்ததாக பிரித்தானியாவின் உள்ளூர் ஊடகச் சங்க செய்தி முகவரகம் செய்தி வெளி…
-
- 0 replies
- 516 views
-
-
சீனாவை விமர்சித்த அமெரிக்க ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு உத்தரவு சீனாவை ‘ஆசியாவின் நோய்’ என்று அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீற் (Wall Street) என்ற பத்திரிகையின் செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பாக அந்தப் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவரை சீனாவை விட்டு வெளியேறுமாறு சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. “China is the Real Sick Man of Asia” என்ற அந்தத் தலையங்கத்தை சீனாவின் வெளியுறவு அமைச்சகம், ‘நிறவெறி’ தன்மை கொண்டதாகவும் ஒரு குறிப்பிட்ட நாட்டை பாகுபடுத்திப் பிரிப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. அத்துடன், அமெரிக்காவில் சீன அரச ஊடகங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் சுட்டிக் காட்டி அமெரிக்காவை சீனா விமர்சித்துள்ளது. இதேவேளை, வோல் ஸ்ட்ரீற் ஜேர்னல் பத்திரிகை க…
-
- 1 reply
- 815 views
-
-
கனடாவில் மக்கள் வீதத்தில் அசுர வளர்ச்சியை கண்டுள்ள லண்டன்! கனடாவில் மக்கள் வீதத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நகரமாக லண்டன் மாறியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2018-19ஆம் ஆண்டில் லண்டனின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 2.3 சதவீதமாக உள்ளது. கனடாவில் கிச்சனர்-வாட்டர்லூவுக்கு 2.8 சதவீதமாக உள்ளது. லண்டனின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பெருநகரப் பகுதியின் மக்கள் தொகை 2019ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி 545,441 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இது அரை மில்லியன் மக்களைத் தொட்டுவிட்டது. இந்த அபரீத வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்தோரை ஈர்ப்பதில் லண்டன் ஒரு சிறந்த பங்களிப்பை வழங்குவதே காரணம் என குடியேற்றம் மற்றும் இன உறவுகளில் கனடா ஆராய்ச்சித் தலைவராக இருக்கும் ம…
-
- 3 replies
- 925 views
-
-
துருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் – புதிய எச்சரிக்கை வெளியானது! துருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் சிரியாவிற்குள் ஊடுருவலாம் என அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரிய அரசுப் படைகள் ரஷ்யப் படையின் உதவியுடன் இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றின. இதன் காரணமாக தற்போது சிரிய படைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. குறித்த பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிரியா – துருக்கி இடையே மோதல் வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் சிரியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 447 views
-