Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வாஷிங்டன், மார்ச் 2-அமெரிக்க அதிபர் தேர்தலில் கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு, தெற்கு கரோலினாவில் நடந்த, 'பிரைமரி' தேர்தலில், ஜனநாயகக் கட்சியில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், 77, வெற்றி பெற்றார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான, 'பிரைமரி' மற்றும் 'காகஸ்' தேர்தல் நடந்து வருகிறது. இதில் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஓட்டளித்து தேர்வு செய்வர். குடியரசு கட்சி சார்பில், மீண்டும் போட்டியிட, அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். இதுவரை நடந்துள்ள பிரைமரி தேர்தல்களில் அவருக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தெற்கு கரோலினாவில், நேற்று நடந்த பிரைமரி தேர்தலில்…

    • 3 replies
    • 348 views
  2. அபுதாபியில் பிரமாண்ட இந்து ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும்,இடத்தையும் வழங்கியிருக்கிறது அமீரகம். ஐக்கிய அமீரகம் மத நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய சான்றாக விளங்கி வருகிறது.இந்த நாட்டில் மற்ற மதங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சீக்கிய குருத்துவார் மற்றும் புத்தர் கோவில் உள்ளிட்ட பலவற்றிற்கு உரிய அனுமதி வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.200 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்கு மதிப் பளித்து வருவது சிறப்பாகும்.இந்நிலையில் அபுதாபியில் பிரமாண்ட இந்து ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும், இடத்தையும் வழங்கியிருக்கிறது அமீரகம். அந்த இந்துக் கோவிலானது சாதாரணமாக அல்லாமல், சிறப்பா…

    • 0 replies
    • 570 views
  3. 5,000இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றும் நிகழ்வுகள் இரத்து- பிரான்ஸ் அரசாங்கம் அதிரடி நாட்டின் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது. அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினை அடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த பாரிஸ் அரை மராத்தான் போட்டியும் இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பாரிஸின் வடக்கே மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதியில், அனைத்து பொதுக்கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 100 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு இதுவரை அங்கு…

  4. கொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்! கொரோனா வைரஸ் கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் தெரிவித்துள்ளார். கொரோனா கிருமித்தொற்று நாட்டைப் பாதிக்காது என எந்த நாடும் தவறாக எண்ணக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக, சீனாவுக்கு வெளியே இத்தாலியில் மேலும் 650 பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உலக நாடுகள் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை …

  5. கொரோனா வைரஸ் தொற்று - வட கொரியாவில் என்ன நடக்கிறது?

    • 0 replies
    • 782 views
  6. தென்கொரியாவில் நிகழ்ந்த சில கொரோனா வைரஸ் மரணங்கள் தொடர்பாக, அந்நாட்டில் உள்ள மதப்பிரிவு ஒன்றின் தலைவர் கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஷின்சியோன்ஜி திருச்சபையின் நிறுவனர் லீ மான்-ஹீ மற்றும் 11 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதியும்படி தலைநகர் சோல் நகர அரசு தமது புலனாய்வு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாக, யார் யாருக்கு இந்த நோய் பரவியிருக்கக் கூடும் என்று ஒரு பட்டிலைத் தயாரிப்பதற்கு அதிகாரிகள் முயன்றபோது தங்கள் திருச்சபையின் சில உறுப்பினர்களின் பெயர்களை மறைத்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு தென் கொரியா. இதுவரை தென் கொரியாவில்…

    • 0 replies
    • 429 views
  7. சிரிய இராணுவத்தின் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்;த்தியுள்ளதுடன் அந்த நாட்டின் 100ற்கும் மேற்பட்ட டாங்கிகளை அழித்துள்ளதாக தெரிவித்துள்ள துருக்கி சிரியாவின் வான்பாதுகாப்பு அமைப்புமுறைகயும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சிரியாவின் தாக்குதலில் 30ற்கும் அதிகமான தனது படையினர் கொல்லப்பட்ட பின்னர் ஆரம்பித்துள்ள நடவடிக்கை மூலம் சிரிய இராணுவத்தினரிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கி குறிப்பிட்டுள்ளது. துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் குலுசி அகார் இதனை அறிவித்துள்ளார். துருக்கி சிரியாவில் மேற்கொண்டுள்ள நான்காவது நடவடிக்கையான ஸ்பிரிங் சீல்ட் மூலம் ஒரு ஆளில்லாவிமானம்,8 ஹெலிக்கொப்டர்கள்,103 டாங்கிகள்,72 நீண்ட தூர பீரங்கிகள்,ரொக்கட்ர் லோஞ்ஞர…

  8. துருக்கி முகாம்களை திறந்தது.. ஐரோப்பா நோக்கி சரிகிறது அகதிகள் வெள்ளம்..!

    • 2 replies
    • 645 views
  9. 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 2002ம் ஆண்டுமுதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு படைக்கு உதவும் வகையில் 14 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரவும், தனது வீரர்களை வாபஸ் பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார…

    • 7 replies
    • 613 views
  10. கொரோனாவின் பரவலால் சீனாவின் சுற்றுச்சூழல் மாசுபாடு பாரியளவு குறைவு! கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட விளைவுகளினால் சீனாவின் பிரதான நிலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுப்பாடானது பாரியளவு குறைந்துள்ளதாக நாசா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஆராச்சி நிலையங்கள் வெளியிட்டுள்ள செய்மதி படத்தில் சுட்க்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தி பணிகளை இடை நிறுத்தின. அது மாத்திரமல்லாமல் பல நகரங்களும் தனிமைப்படுத்தப்பட்மையினால் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாரியளவு மட்டுப்படுத்தப்பட்டது. இந் நிலையில் ஜனவரி 1- 20 ஆம் திகதிகள் வரை எடுத்…

  11. சிரியாவின் முக்கிய கூட்டத்தில் துருக்கி கடும் தாக்குதல்!- உயரதிகாரிகள் பலர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்! சிரிய இராணுவம் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டமொன்றில் துருக்கி வான்வழி தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் முக்கிய திருப்பங்களைப் பதிவு செய்யும் அல்-மஸ்டர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவின் அலெப்போவில் உள்ள செர்பெக் நகரில் சிரிய இராணுவ அதிகாரிகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட முக்கிய சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிலையில் இந்தச் சந்திப்பைக் குறிவைத்து துருக்கி வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சிரிய இரா…

  12. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டினர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் தாக்கிய பெண்மணி ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். நோய் தாக்கிய 15 பேர் சிகிச்சை பெற்று நலம்பெற்று வருவதாகவும், இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வலிமை தமது நாட்டுக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதே நிகழ்வில் பேசிய துணை அதிபர் மைக் பென்ஸ், கடந்த 14 நாட்களில் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டவர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித…

    • 0 replies
    • 537 views
  13. பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை கூட்டாக பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன. சமீபத்தில், குடிமக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அலுவலகம் அமைப்பதோடு, அங்கேயே தகவல்களைச் சேமிக்க தரவு சேவையகங்களை அமைப்பதையும் பாகிஸ்தான் அரசு கட்டாயமாக்கியது. இந்நிலையில் ஆசிய இணைய கூட்டணி சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், புதிய விதிகள் தங்கள் சேவைகளை பாகிஸ்தான் பயனர்களுக்கும், வணிகங்களுக்கும் கிடைக்கச் செய்வதை மிகவும் கடினமாக்குவதாக தெரிவித்துள்ளன. மேலும், அவை இணைய பொருளாதாரத்தின் வளர்ச்சி திறனை பாகிஸ்தானியர்களி…

    • 0 replies
    • 452 views
  14. அசோசியேட்டட் பிரஸ் மிகவும் ஆழமானதாக மாறிவரும் சுகாதார நெருக்கடி, வெள்ளிக்கிழமை நிதிச்சந்தைகளின் வீழ்ச்சி வர்த்தகங்கள், வர்த்தக நடவடிக்கைகள் மூடப்பட்டமை களியாட்ட நிகழ்வுகள்- விளையாட்டுப்போட்டிகள் இரத்து செய்யப்பட்டமை காரணமாக பொருளாதார நெருக்கடியாக மாற்றமடைந்துள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வீடுகளிற்கு செல்லுமாறு கேட்டுள்ளன,அதிகாரிகள் அயல்களையும் பாடசாலைகளையும் மூடியுள்ளனர். கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்கான பரந்து பட்ட நடவடிக்கைள் வேலைவாய்ப்புகளிற்கும்,இலாபங்களிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன. வெள்ளிக்கிழமை பல நாடுகள் தாங்கள் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து…

  15. ரஷிய தாக்குதலில் உயிரிழந்த துருக்கி வீரர்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள நேட்டோ அமைப்பு, துருக்கிக்கு ஆதரவாக கூடுதல் படைகளை அனுப்ப மறுத்துள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற ரஷியா ஆதரவுடன் சிரியாவும், போராளிகளின் ஆதரவுடன் துருக்கியும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் இட்லிப் மாகாணத்தில் சிரியா-ரஷிய கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் துருக்கி வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட 29 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள துருக்கி, இவ்விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த அவ்வமைப்பிற்கு கோரிக்கை விடுத்தது. அதன்படி பெல்ஜியத்தில் உள்ள தலைமையகத்தில் நடைபெற…

  16. சீனாவுக்கு வெளியே பல நாடுகளில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் நோய்தாக்கம் சீனாவில் ஓரளவிற்கு கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்திலிருந்து முழுமையாக குணமடைந்ததாக வைத்தியசாலையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டவர்களை நான்கு நாட்களின் பின் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர்கள் கொரோனா வைரஸ்ஸிற்கு நேர்மறையாக காணப்பட்டதாக சீனாவின் ஒரு வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி, குணமடைந்ததாக வைத்தியசாலையில் இருந்து அனுப்பப்பட்டு 18 நாட்களின் பின்னர் மீண்டும் …

    • 0 replies
    • 502 views
  17. கொரோனா வைரஸின் தாக்கம் தனது நாட்டு பிரஜைகளை வீட்டினுள்ளேயே இருக்குமாறு தொன்கொரியா அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் கூறிப்பிடுகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இது முக்கிய தருணம் எனவும் அநநாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச ரீதியில் பல மடங்குகளாக அதிரித்து வரும் கொரோனாவின் தாக்கம் , பல்வேறு நாடுகளிலும் தாக்கம் செலுத்தி வருகின்றது. எனவே இதில் இருந்து தாக்கத்தை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்களப்பட்டுள்ளதாக தெரவித்துள்ளதோடு , அநாவசியமாக வீட்டில் இருந்து வெளியில் செல்வதையும் தவிர்குமாறு அந்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/76795

    • 0 replies
    • 467 views
  18. மலேசிய அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் புதிய பிரதமராக 72 வயது முஹைதீன் யாசின் நியமிக்கப்பட்டு உள்ளார். உலகில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில், அண்மையில் நிகழ்ந்த அரசியல் நெருக்கடியை தொடர்ந்து, பிரதமர் மகாதீர்முகமது , தமது பதவியை ராஜினாமாசெய்திருந்தார். இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட மகாதீர் முகமது , தொடர்ந்து பதவியை தக்க வைக்கவும்,எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் பதவியை தட்டிப்பறிக்கவும் கடும் பலப்பரீட்சையில் ஈடுபட்டு வந்தனர். மலேசிய அரசியலில், அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில் முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசினை((Muhyiddin Yassin)) புதிய பிரதமராக நியமித்து, அந்நாட்டு மன்னர், அறிவிப்பு ஒ…

    • 0 replies
    • 816 views
  19. கொரோனா வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறைவரும் கிருமி நோய்- பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாகியுமான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஏற்கனவே 100 மில்லியன் டாலர்களை கொரோனோ வைரஸ் நோய்க்கு எதிராக போராடுவதற்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.பில்கேட்ஸ் இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் தலையங்கத்தில் எழுதி உள்ளதாவது:- ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை இது போன்ற நோய்க்கிருமி தாக்குதல் இருக்கும். கொரோனா வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறைவரும் கிருமி நோய் ஆகும். ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ள நாடுகள் இந்த கொரோனா வைரஸ் நோயை எதிர்க்க இப்போது தயாராக இருப்பதன் மூலம், நாம் உயிர்களைக் காப்பாற்ற முடியும், மேலும் இந்த வைரஸின் உல…

  20. கொரோனா பரவல் அச்சத்துக்கு மத்தியில் ஈரானிய பாராளுமன்றம் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சட்டமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஈரானிய சட்டமன்றத் செய்தித் தொடர்பாளரான அசாதுல்லா அப்பாஸி கூறுகையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை பாராளுமன்றம் எந்த அமர்வுகளையும் நடத்தாது என்றார். கொரோனா வைரஸின் பரவலால் சீனாவுக்கு வெளியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். தொற்றுநோயை சமாளிக்க முயற்சிக்கும் பணிக்குழுவிற்கு தலைமை தாங்கிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி உட்பட நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவளை ஈரானில் கொரோனா தொடர்பான…

  21. என்னை ஹரி என்று அழைக்கவும் : இளவரசர் ஹரி சசெக்ஸ் இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் தனது கடைசி உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவுக்குத் திரும்பி வந்தார். நேற்றிரவு லண்டன், கிங்ஸ் குரொஸ் ரெயில் நிலையத்திலிருந்து எல்என்இஆர் (LNER) ரெயிலில் எடின்பேர்க்கிற்குப் பயணித்தபோது ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் அவருக்குப் பாதுகாப்பு வழங்கினர். எடின்பேர்க்கிற்குச் சென்ற அவர் தனது அரச பட்டத்தைக் கைவிட்டதுடன் தன்னை ஹரி என்று மாத்திரமே அழைக்கவும் என்று தெரிவித்துள்ளார். இன்று காலை எடின்பேர்க்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா நிறுவனத்தைத் தொடங்கிவைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எடின்பேர்க் சர்வதேச மாநாட்டு மையத்த…

    • 6 replies
    • 1.2k views
  22. அமெரிக்க விமானத்தின் மீது சீனப் போர்க்கப்பல் லேசர் ஒளிக்கற்றையைச் செலுத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய்த் தீவு உள்ளது. இப்பகுதியில் பறந்த அமெரிக்கக் கடற்படையின் விமானத்தின் மீது, சீனப் போர்க்கப்பலில் இருந்து அபாயகரமான லேசர் ஒளிக்கற்றை செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது அபாயகரமான மற்றும் முறையற்ற செயல் அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த லேசர் ஒளிக்கற்றை விமானத்துக்கும் அதில் உள்ளவர்களுக்கும் கடும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது. பசிபிக் மண்டலத்திலும் தென்சீனக் கடல் பகுதியிலும் உலவும் சீனப் போர்க்கப்பல்கள் அப்பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அமெர…

  23. உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பிரிட்டன் அரசு லண்டன் விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுதளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லண்டன் முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பாரீஸ் ஒப்பந்தத்தின் படி செயல்பட பிரிட்டன் அரசு தவறி விட்டதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இதற்கு தடை விதித்துள்ள கீழ் நீதிமன்றம் அரசு உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்தது. ஆனால் இறுதி முடிவு பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தான் உள்ளது. இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்த அவர், புல்டோசர்கள் முன்பு படு…

    • 0 replies
    • 343 views
  24. ஹாரி மற்றும் மேகன் தம்பதிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறி கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வரும் ஹாரி தம்பதி, மார்ச் 31 ஆம் தேதி முதல் அரச பதவிகளில் இருந்து முற்றிலும் விலக உள்ளனர். இந்த நிலையில் சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட நபர்கள் என்ற காரணத்தினால் ஹாரி தம்பதிக்கு அளித்து வந்த சிறப்பு பாதுகாப்பை மார்ச் 1 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள போவதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர். அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறிய தம்பதிக்கு தங்கள் வரி பணத்தில் பாதுகாப்பு வழங்க பெரும்பாலான கனடா மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 423 views
  25. குவைத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் – 43 பேர் பாதிப்பு! குவைத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்தோடு இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஈரானுக்குச் சென்றவர்கள் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஹுபேயில் 65 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியும், 2,600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. அத்தோடு உலகளவில், இறப்பு எண்ணிக்கை சுமார் 2,800 அதிகரித்துள்ளதுடன், சுமார் 80,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். http://athavannews.com/kuwait-has-43-confirmed-cases-of-coronavirus-health-ministry/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.