உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி தெரிவு பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி (Zozibini Tunzi) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் நேற்று இடம்பெற்றது. இதில் இறுதி சுற்றில் தெரிவு செய்யப்பட்ட 7 பெண்களில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்டார். பிலிப்பைன்சின் முன்னாள் உலக அழகியான கேட்ரினா கிரே துன்சிக்கு பிரபஞ்ச அழகிக்கான கீரிடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகியாக துன்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னர் மேடையில் அவரது பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது. ‘என்னை போன்ற நிறத்தையும், முடியையும் உடைய பெண்கள் அழகானவர்கள்…
-
- 0 replies
- 336 views
-
-
நியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்! நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள 'White Island' என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் அப் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந் நாட்டு பிரதமர் ஜசிந்த ஆர்டெர்ன், எரிமலையானது வெடித்து, குமுற ஆரம்பித்த வேளையில் 'White Island' இல் அல்லது அதனை அண்மித்த பகுதியில் 100 சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளதாகவும் மேலும் பலர் கணக்கெடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எரிமலை வெடித்து, குமுற ஆரம்பித்த நேரத்தில் வேளையில் மேற்படி தீவில் மக்கள் இருந்துள்ளதா…
-
- 1 reply
- 647 views
-
-
சீனாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது – உலக வங்கியிடம் ட்ரம்ப் விடுத்த கோரிக்கை! சீனாவுக்கு கடன் வழங்கும் உலக வங்கியின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏன் உலக வங்கி சீனாவுக்கு கடன் வழங்குகிறது? இது சாத்தியமா? சீனாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது. இதனை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். ஐந்தாண்டுக்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டத்தில் சீனாவுக்கு நிதி வழங்க உலக வங்கி அண்மையில் ஒப்புக்கொண்டது. இதனைத் தொடர்ந்து உலக வங்கியை ட்ரம்ப் விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் வரிப் பணத்தைப் பயன்படுத்தி மனித உரிமைகள் மீறல் மற்றும் பலவீனமான நாடுகளில் இராணுவ ரீதியாகவோ …
-
- 1 reply
- 507 views
-
-
சவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள உணவகங்களில் நீடித்து வந்த ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி நுழைவாயில் முறை முடிவுக்கு வந்துள்ளது. இளவரசர் முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவகங்களில் தனித்தனி நுழைவாயில் முறை கட்டாயமில்லை என அந்நாட்டு நகராட்சிகள் மற்றும் ஊரக விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்களில் குடும்பத்துடன் வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழைவாயிலும், தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத…
-
- 0 replies
- 449 views
-
-
பின்லாந்து நாட்டை சேர்ந்த பெண் உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆனார். அந்த நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று நான்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. அக்கட்சியைச் சேர்ந்த அண்டி ரின்னே, பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் பின்லாந்தில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற தபால் துறை வேலைநிறுத்த விவகாரத்தை, பிரதமர் அண்டி ரின்னெ சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டி அவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கிக் கொண்டன. இதனால் அண்டி ரின்னே பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெற்ற சன்னா மரின் பிரதமராக தேர்ந்தெடுக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
500 மில்லியன் பயணங்களை மேற்கொண்ட வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்தது பிரித்தானியாவில் மிக நீண்ட காலமாக இயங்கிவந்த வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்துள்ளது. 1997 ஆம் ஆண்டில் இருந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள வந்த குறித்த ரயில் நேற்று (சனிக்கிழமை) சேவையை நிறுத்திக் கொண்டது. எனினும், இந்த வெர்ஜின் ரயில்களின் சேவைகள் அவந்தி மேற்கு கடற்கரைக்கு மாற்றப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர் ரிச்சார்ட் பிரான்சனின் வெர்ஜின் குழுமம் மற்றும் ஸ்ரேஜ்கோச் (Sir Richard Branson’s Virgin Group and Stagecoach) ஆகியோருக்குச் சொந்தமான குறித்த வெர்ஜின் ரயில்கள் கிட்டத்தட்ட 500 மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளன. இதன் இறுதிச் சேவை லண்டன்…
-
- 0 replies
- 359 views
-
-
அமெரிக்காவின் ஹவாய் பகுதியிலுள்ள பியர்ல் ஹார்பர் (Pearl Harbor) துறைமுகத்தில் ஜப்பான் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் 78ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 1941ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜப்பான் விமானப்படை, கடற்படை நடத்திய தாக்குதலில், அமெரிக்கர்கள் 2390 பேர் பலியாகினர். அந்நாட்டின் ஏராளமான போர் கப்பல்கள், விமானங்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் 78ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பியர்ல் ஹார்பரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் தாக்குதலில் உயிர் பிழைத்த அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.polimernews.com/dnews/91932/பியர்ல்-ஹார்பர்-தாக்குதல்சம்பவத்தின்-78ஆம்-ஆண்டுநினைவு-தினம்-அனுசரிப்பு
-
- 0 replies
- 570 views
-
-
அமெரிக்க கடற்படைத்தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்ஸாகோலா என்ற இடத்தில் கடற்படைத் தளம் அமைந்துள்ளது. பாதுகாப்பு மிகுந்த இந்தத் தளத்திற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் அங்கிருந்த கடற்படை வீரர்கள் குண்டுபாய்ந்து சுருண்டு விழுந்தனர். கடற்படை வீரர்கள் உடனடியாக அந்த நபரை சுட்டுக் கொன்றனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வீரர்கள் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. https://www.polimernews.com/dnews/91714…
-
- 1 reply
- 738 views
-
-
அட்லாண்டிக் பெருங்கடலில் அகதிகள் படகு விபத்து – 58 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆபிரிக்க நாடான மொரிட்டானியாவிலிருந்து சென்ற படகு அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த படகில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் 83 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு நிறுவனம் நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிற்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும். மௌரித்தேனியாவை நெருங்கும் போது படகில் எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஒரு அறிக்கையில்…
-
- 1 reply
- 634 views
-
-
ஈரானுக்கு எதிராக படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா? – பென்டகன் தகவல் ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய கிழக்குப் பகுதிக்கு இராணுவத்தை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டதாக வெளியான செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளது. ஈரானால் மத்தியக் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்காக சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமான படை வீரர்களை அங்கு அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது முற்றிலும் தவறான செய்தி என அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் அலிசா ஃபரா (Alyssa Farah ) தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015இல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்த…
-
- 0 replies
- 531 views
-
-
எதிர்வரும் 2020ஆம் ஆண்டைக் குறிக்கும் நிறம் வெளியீடு! எதிர்வரும் 2020ஆம் ஆண்டைக்குறிக்கும் நிறம் வெளியிடப்பட்டுள்ளது. Pantone நிறுவனத்தினால் இந்த நிறம் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஆண்டின் நிறம் ‘Classic Blue’ எனும் ஒரு வகை நீல நிறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே அதிகரிக்கும் பதற்றம், மனஉளைச்சலுக்கு ஒரு தீர்வாக நிறம் இருக்கும் என நம்பப்படுகிறது. நிறத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பாடல் ஒன்று வெளியிடப்படவுள்ளது. அவற்றுடன் நிறத்தைக் கொண்ட துணி வகையும், நிறத்தின் சுவையைக் குறிக்கும் தேநீர் வகையும் வெளியிடப்படவுள்ளன. கடந்த 21 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டைக் குறிக்கும் நிறத்தை Pantone நிறுவனம் வெளியிட்டு வருகி…
-
- 0 replies
- 424 views
-
-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அவர் மீது பதவி நீக்க தீர்மானத்தை பிரதிநிதிகள் அவை கொண்டுவரவுள்ளதாக அந்த அவையின் சபாநாயகரான நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி இது குறித்து கூறுகையில், ''அதிபர் மீதான பதவி நீக்க தீர்மானம் குறித்த நடவடிக்கைகளை தொடங்கிட பிரதிநிதிகள் அவையின் தலைவரை நான் இன்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார். பிரதிநிதிகள் அவையின் முக்கிய கமிட்டி அமைப்பு டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பது குறித்த பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக செய்தி வந்த மறுநாளில் இந்த கருத்தை நான்சி பெலோசி வெளியிட்டுள்ளார். தன் மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தால் அதனை விரைவாக நடத்துமாறு ஜனநாயக…
-
- 1 reply
- 502 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தாம் வென்றால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை (பிரெக்சிற்) அடுத்த மாத முடிவுக்குள் பூர்த்தி செய்வோம் எனவும், வரவு செலவுத் திட்டமொன்றை அடுத்தாண்டு பெப்ரவரி மாதத்தில் சமர்ப்பிப்போன் என பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பழமைவாதக் கட்சி நேற்று தெரிவித்துள்ளது. இம்மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பிரெக்சிற், பிரித்தானியாவின் நிலையைத் தீர்மானிக்கவுள்ள தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கின்ற நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை விட கருத்துக்கணிப்புகளில் பழமைவாதக் கட்சி முன்னிலையில் காணப்படுகிறது. எனினும், பெரும்பான்மை அரசாங்கமொன்றை அமைக்கக் கூடியளவுக்கு பழமைவாதக் கட்சி முன்னிலையிலுள்ளதா என்பது இன்னும் தெளிவில்லாமலே உ…
-
- 0 replies
- 409 views
-
-
இனந்தெரியாத நபர்கள் வெள்ளை வான்களில் இளம்பெண்களை பாலியல் நோக்கங்களிற்காகவும் உடல்பாகங்களை திருடுவதற்காகவும் கடத்துகின்றனர் என்ற முகநூல் தகவல்களால் அமெரிக்காவின் சில பகுதிகளில் அச்சநிலை உருவாகியுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒருங்கிணைக்கப்பட்ட அளவில் இவ்வாறான குற்றச்செயல் இடம்பெறுகின்றது என்பதற்கான ஆதாரங்கள் இல்லாத போதிலும் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள முகநூல்பதிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன இதன் காரணமாக ஆதாரமற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து அமெரிக்க நகரமொன்றின் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது. வெள்ளை வானிற்கு அருகில் உங்கள் வாகனங்களை நிறுத்தாதீர்கள் உங்களை யாராவது கடத்த முயன்றால் உங்கள் கையடக்க தொலைபேசியை பயன்பட…
-
- 0 replies
- 342 views
-
-
சீனாவில், உய்கர்(Uygur)இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வலியுறுத்தியும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், அமெரிக்கா, தனது நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. இதற்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்திருப்பதோடு, பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருக்கிறது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் (Xinjiang), தனித்துவ அடையாளங்களோடு வாழும் உய்கர் இன மக்களில், இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பெருமளவில் உள்ளனர். சிஞ்ஜியாங் மாகாணத்தில், சில ஆண்டுகளாக, ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, அங்குவாழும் முஸ்லீம் பிரிவினைவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என கூறி வருகிறது. மேலும், தடுப்ப…
-
- 0 replies
- 593 views
-
-
நேட்டோ உச்சிமாநாட்டின் போது ட்ரம்ப்பின் நடத்தை குறித்து கேலி செய்த உலக தலைவர்கள் – வைரலாகும் வீடியோ பிரித்தானியாவில் இடம்பெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த உலக தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பற்றி நகைச்சுவையாக பேசிய வீடியோ தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இறுதி நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை), பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் டச்சு பிரதமர் மார்க் ருட்டே ஆகியோர் உச்சிமாநாட்டின் போது டிரம்ப்பின் நடத்தை குறித்து கேலி செய்து பேசியுள்ளனர். 25 வினாடிகள் மட்டுமே உள்ள குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதில் “அதனால்தான் நீங்கள் தாமதமாக வந்தீர்களா?…
-
- 0 replies
- 365 views
-
-
மிகப்பெரிய தங்கக் கட்டி, ஸ்கொட்லாந்து ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது பிரித்தானியாவின் மிகப்பெரிய தங்கக்கட்டி ஸ்கொட்லாந்து ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 121.3 கிராம் எடையுள்ள இந்தத் தங்கம் இரண்டு துண்டுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரில் சுழியோடும் கருவியைப் பயன்படுத்தி புதையல் வேட்டைக்காரர் ஒருவர் இந்தத் தங்கத் துண்டுகளைக் கண்டெடுத்ததாகக் கூறியுள்ளார். கண்டெடுக்கப்பட்ட இந்த இரண்டு துண்டுகளும் மிகவும் தூய்மையாக இருந்தன என்றும் அவை 22 கரட் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு துண்டுகளும் ஒன்றாகச் சேர்ந்து தி ரீயூனியன் நக்கற் (The Reunion Nugget) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய தங்கக்கட்டியைவிட இது பெ…
-
- 0 replies
- 649 views
-
-
சூடான் நாட்டில் செராமிக் டைல்ஸ் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 18 பேர் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். சூடான் நாட்டின் தலைநகரான கார்த்தோமின் வடக்கு புறநகர் பகுதியான பகரியில் சலோமி என்ற செரமிக் டைல்ஸ் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் பெரிய டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட எரிவாயுவை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக எரிவாயு கசிந்து தீப்பற்றிக் கொண்டது. இதில் அந்த லாரி பல நூறு அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. தொழிற் சாலையின் பல இடங்களிலும் தீப்பற்றிக் கொண்டது. இதனால் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிர் தப்ப எண்ணி ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைக்கும் படையினரும் போலீசாரும் விரைந்து வ…
-
- 0 replies
- 374 views
-
-
தனது கனவு நகரை திறந்து வைத்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் Published by T Yuwaraj on 2019-12-04 16:46:14 வட கொரியாவின் கனவு நகரம் என பெயர் பெற்ற சம்ஜியோன் நகரத்தை அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் திறந்து வைத்துள்ளார். கிம் ஜோங் உன் குடும்பத்தினரின் பூர்வீகமாக கருதப்படும் பேக்ட் மலைக்கு அருகே, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சொகுசு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நகரத்தை கிம் ஜோங் உன் திறந்து வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 4000 குடும்பங்கள் வாசிக்க கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஹொட்டல்கள், சொகுசு விடுதிகள், கலாசார மையம் மற்றும் உயர்தர வைத்தியாசைகள் …
-
- 0 replies
- 479 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்து, விலகுகிறார் கமலா ஹாரிஸ்! 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டிக் களத்திலிருந்து வெளியேறவுள்ளதாக செனட்டர் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். நிதி பற்றாக்குறை காரணமாகவே அவர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 55 வயதான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்த ஒரேயொரு சிறுபான்மை இன பெண் வேட்பாளர் ஆவார். ஆனால் அவருடைய பிரசாரக் கொள்கைகள் ஆப்பிரிக்க – அமெரிக்க வாக்காளர்களிடையே பெரிதளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவருடைய சொந்த மாநிலமான கலிஃபோர்னியாவிலும் கமலா ஹாரிஸ் அதிகளவு வாக்கு வங்கியை பெறவில்லை. அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றி…
-
- 3 replies
- 619 views
-
-
நேட்டோ மாநாட்டுக்கு இடையே லண்டனில் பிரெஞ்ச் அதிபர் இமானுவல் மேக்ரானை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதத்தில் இருந்து சிலரை திரும்ப ஏற்பது தொடர்பான விவகாரத்தில் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் செய்தியாளர்களை சந்தித்த போது, சில நல்ல ஐ.எஸ். போராளிகளை தரட்டுமா என டிரம்ப் கேட்க, நாம் சீரியஸாக பேசலாம் என மேக்ரான் பதற்றமாக பதிலளித்தார். ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தவர்களை திரும்பப் பெறுவதில் பிரான்ஸ் பதிலளிக்காமல் தவிர்ப்பதாகவும் டிரம்ப் கூறினார். ஆனால் ஐ.எஸ். இயக்கத்தை ஒழிப்பதுதான் தமது அரசுக்கு முக்கியம் என்று மேக்ரான் பதிலளித்தார். அமெரிக்காவின் ஆதரவு பெற்ற குர்திஷ் படையினர் சுமார் 2 ஆயிரம் வெளிநாட்டு படைவீரர்களை சிரியாவின் உள்ளே அடைத்து…
-
- 0 replies
- 506 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் தவறான விதத்தில் நடந்துகொண்டார் என்ற அடிப்படையில் அவருக்கு எதிராக அரசியல் குற்ற பிரேரணையை கொண்டுவருவதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன என விசாரணைகளை முன்னெடுத்துள்ள குழு தெரிவித்துள்ளது. சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களிற்கான அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள குறிப்பிட்ட குழு அமெரிக்காவின் தேசிய நலன்களை விட டிரம்ப் தனது தனிப்பட்ட நலன்களிற்கு முக்கியத்துவம் அளித்தார் என தெரிவித்துள்ளது. 2020 இல் தான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக வெளிநாட்டின் உதவியை பெறமுயன்றார்-உக்ரைனின் உதவியை பெற முயன்றார் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. டிரம்பினை ஜனாதிபதி பதவியிலிருந்து ஏன் வெளியேற்ற…
-
- 0 replies
- 352 views
-
-
தடைகளுக்கு மத்தியில் வட கொரியாவில் நவீன நகரம்: வியப்பில் சர்வதேசம்! ‘நவீன நாகரிகத்தின் சுருக்கம்’ என்று அழைக்கப்படும் புதிய நகரத்தை வட கொரியா அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது. வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன், இன்று (செவ்வாய்க்கிழமை) சாம்ஜியோனில் சிவப்பு நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நகரம், நாட்டின் மிக முக்கியமான கட்டுமானத் திட்டங்களில் ஒன்றாகும். அத்தோடு, தனித்துவமான, அலங்காரமாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்த நகரம், வட கொரியாவின் வேறு எந்த நகரத்தையும் ஒத்திராத நகரம் என கூறப்படுகின்றது. 4,000 குடும்பங்களுக்கு இடமளிக்கக்கூடிய இந்த நகரம் – புதிய குடியிருப்புகள், ஒரு ஸ்கை சாய்வு…
-
- 0 replies
- 498 views
-
-
வெனிசுவேலா ஜனாதிபதிக்கு பதினைந்து நாடுகள் பயணத்தடை! வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு பதினைந்து நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன. ஆர்ஜென்டினா, பிரேஸில், அமெரிக்கா, கொலம்பியா, சிலி, பெரு உள்ளிட்ட அமெரிக்க நாடுகளே இவ்வாறு தடை விதித்துள்ளன. வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதனை ஏற்றுக் கொள்ள அவர் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகின்றார். இந்தநிலையிலேயே குறித்த நாடுகள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட சந்திப்பு ஒன்றினைத் தொடர்ந்து இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com/வெனிசுவேலா-ஜனாதிபதிக்…
-
- 0 replies
- 358 views
-
-
இங்கிலாந்து பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையை இரண்டு நாடுகளாக பிரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் இது நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதல் எனவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தல் இந்த மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக அந்நாட்டின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டது. இலங்கையில் காணப்படும் பிரச்சினைக்கு தீர்வாக…
-
- 0 replies
- 416 views
-