Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரேன் ஜனாதிபதியை சந்தித்தார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்ரேன் தலைநகர் கீவ்வுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து 45 நாளாகிறது. இராணுவ கட்டமைப்புகளை தகர்க்கப் போவதாக கூறி போர்தொடுத்த ரஷ்யா, அடுக்குமாடி குடியிருப்புகள், வைத்தியசாலைகள், அரசு கட்டிடங்கள், குண்டு வீச்சு தவிர்ப்பு புகலிடங்கள் என தாக்குதல் வரம்பை நீட்டித்தது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற முடிந்தும் வெற்றி பெறாத நிலையில் ரஷ்ய படைகள் தனது கவனத்தை இப்போது கிழக்கு உக்ரைன் மீது திருப்பி உள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரேனுக்கு அமெரிக…

  2. உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தான் இப்படி கூறியதை நம்ப முடியவில்லை என்று கூறினார். அதேநேரம் அவர், ஜெலென்ஸ்கியை “மிகவும் துணிச்சலானவர்” என்றும் அழைத்தார். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ட்ரம்ப் இந்த விடயங்களை பேசினார். மூன்று ஆண்ட…

  3. உக்ரேன் தொடர்பான ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா (ஜெ.அனோஜன்) உக்ரேனை நேட்டோவில் இருந்து தடைசெய்ய வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையினை புதனன்று அமெரிக்கா நிராகரித்ததுடன், கெய்வின் எல்லைகளுக்கு அருகே மொஸ்கோவின் இராணுவக் குவிப்பால் தூண்டப்பட்ட நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வுக்கும் அழுத்தம் கொடுத்தது. உக்ரேன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மொஸ்கோவின் கோரிக்கைகளுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்யாவுக்கு முறையான பதிலைக் கொடுத்தார். இந் நிலையில் நேட்டோவுடன் ஒருங்கிணைந்து வழங்கப்பட்ட பிளிங்கனின் பதிலை தனது நாடு ஆய்வு செய்யும் என்று ஒரு ரஷ்ய அமைச்சர் கூறினார். நேட்டோ இராணுவக் கூட்டணியின் விரிவாக்கம் மற்றும் அது தொட…

  4. உக்ரேன் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்த இலங்கைத் தூதுவர் ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது உக்ரேன் அரசாங்கம் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. உதயங்க, உக்ரேனின் பிரிவினைவாதிகளுக்கு ஆயுத விநியோகப் பணிகளில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான குற்றச்சாட்டை உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முன்வைத்துள்ளார். இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். உக்ரேனின் குற்றச்சாட்டின்படி உதயங்க, பிரிவினைவாதிகளுக்கு ரைபிள்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை விநியோகித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனின் …

    • 3 replies
    • 381 views
  5. உக்ரேன் போரில் உலகளாவிய பேரழிவை தடுத்தவர் மோடி : அமெரிக்க சிஐஏ பாராட்டு By DIGITAL DESK 2 19 DEC, 2022 | 12:01 PM உக்ரேன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவைத் தடுப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) இயக்குநர் பில் பர்ன்ஸ் கூறியுள்ளார். உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு சாதகமானவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி புட்டின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டது. இது சர்வதேச அளவில் பேசும்பொருளானது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இந்…

  6. உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர, ஐரோப்பிய தலைவர்கள் 4 அம்ச திட்டம்! பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) உக்ரேனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வரவும் ரஷ்யாவிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவும் நான்கு அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார். அத்துடன், ஐரோப்பிய தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (02) உக்ரேன் அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் முன்வைக்க ஒப்புக்கொண்டதாகவும் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். இது ரஷ்யாவைத் தடுப்பதற்கு அவசியமானது என்று கெய்வ் கூறும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வொஷிங்டன் வழங்குவதற்கான ஒரு முக்கிய படியாகும். லண்டனில் நடந்த உச்சிமாநாட்டில், ஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனிய ஜனாதிபதிக்கு வலுவான ஆதரவை வழங்கினர் மற்றும் அவரது தேசத்திற்கு மேலும் உதவுவதாக உறுதியளித்த…

  7. உக்ரேன் போர் 3 ஆண்டு நிறைவு; தலைநகரில் ஒன்று குவிந்த ஐரோப்பிய, கனேடிய தலைவர்கள்! ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த பல தலைவர்கள் திங்கட்கிழமை (24) உக்ரேனின் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஆண்டு நிகழ்வில் கலந்து கொள்ள தலைநகர் கீவ்வில் ஒன்று கூடினர். இந்த விஜயத்தின் போது உக்ரேனை ஆதரிப்பது குறித்தும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் அவர்கள் விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உக்ரேன் அல்லது ஐரோப்பா சம்பந்தப்படாமல் அமெரிக்கா எந்த சமாத…

  8. உக்ரேன் போர் நிறுத்தம்; அமெரிக்காவின் முன்மொழிவுக்கு புட்டின் ஆதரவு! உக்ரேனில் போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை மொஸ்கோ கொள்கையளவில் ஆதரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை (13) தெரிவித்தார். இருந்த போதிலும், மோதலை விரைவாக நிறைவுக்குக் கொண்டுவருவதற்கான பல விளக்கங்களையும் நிபந்தனைகளையும் அவர் கோரினார். 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று, காயடையச் செய்தது. மேலும், மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயரச் செய்ததுடன், நகரங்களை இடிபாடுகளாக மாற்றியது மற்றும் மொஸ்கோவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக மிகக் கடுமையான மோதலைத் தூண்டியது. இந்த நிலையில், அமெரிக்க போர் நிறுத்த திட்ட…

  9. உக்ரேன் போர் விவகாரம்; ட்ரம்பும் ஜெலென்ஸ்கியும் மீண்டும் மோதல்! உக்ரேனில் மூன்று வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை (24) மீண்டும் மோதிக்கொண்டனர். கிரிமியா மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்க மறுத்ததற்காக அமெரிக்கத் தலைவர் ஜெலென்ஸ்கியைக் கண்டித்துள்ளார். கடந்த வாரம் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை எதிரொலிக்கும் விதமாக, ரஷ்யாவும் உக்ரேனும் அமெரிக்க அமைதித் திட்டத்திற்கு உடன்பட வேண்டிய நேரம் இது என்று ட்ரம்பின் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் கூறினார். “அல்லது அமெரிக்கா இந்த செயல்முறையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்” என்றும் அவர் எச்சரி…

  10. உக்ரேன் போர்; ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்காக சவுதி அரேபியா சென்றடைந்த அமெரிக்க அதிகாரி! உக்ரேனில் மொஸ்கோவின் ஏறக்குறைய மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்ய அதிகாரிகளுடன் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திங்களன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் பேசி, போர் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பலமுறை சபதம் செய்ததை அடுத்து இந்த பேச்சுவார்த்தைகள் வந்துள்ளன. காசா பகுதியின் …

  11. உக்ரேன் போர்; ரியாத்தில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த ரஷ்ய – அமெரிக்க அதிகாரிகள்! ரஷ்யா – அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் செவ்வாயன்று (18) சவுதி அரேபியாவில் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள திரியா அரண்மனையில் கூடிய தூதுக்குழுக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரும் தலைமை தாங்கினர். ரூபியோவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோரும் உடனிருந்தனர். அதேநேரத்தில், லாவ்ரோவ் கிரெம்ளினின் ரஷ்யாவின் வெளியுறவு ஆலோசகர் யூரி…

  12. உக்ரேன் போரில் ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்படுகிறது ; ஐ.நா. விசேட தூதுவர் பிரமிளா பட்டேன் தெரிவிப்பு By T. SARANYA 17 OCT, 2022 | 11:29 AM உக்ரேனில் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினர், பாலியல் வல்லுறவை ஒரு போரியல் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், அப்படையினருக்கு வயாகராவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாலியில் வன்முறைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட தூதுவர் பிரமிளா பட்டேன் தெரிவித்துள்ளார். ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியொன்றில் அவர் இதனைத் தெரிவிததுள்ளார். உக்ரேன் யுத்தத்தில் ஓர் ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டுள்ளதா என இச்செவ்வியின்போது பிரமிளா பட்டேனிடம் கேட்கப்பட்டது. அக்கேள்விக்கு அவர் …

  13. உக்ரேன் போருக்கு எதிராக ரஷ்யாவில் தொடர்ந்து போராட்டம் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர். உக்ரேன் மீது ரஷ்ய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரேன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரேன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து ரஷ்யாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான சென் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று நடைபெற்ற ப…

  14. உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர தற்காலிக நிர்வாகம் – புட்டின் பரிந்துரை! புதிய தேர்தல்களை நடத்தவும், போரில் ஒரு தீர்வை எட்டுவதற்கான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உக்ரேனை ஒரு தற்காலிக நிர்வாகத்தின் கீழ் வைக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பரிந்துரைத்ததாக மொஸ்கோ செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை செய்தி வெளியிட்டன. ரஷ்யாவுடனான உறவுகளை மீண்டும் நிலைநாட்டுவதன் மூலமும், மொஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரு நாடுகளுடனும் தனித்தனி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலமும் மோதலுக்கு ஒரு தீர்வை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கும் நிலையில், வடக்கு துறைமுகமான முர்மான்ஸ்க்கு விஜயம் செய்தபோது புட்டினின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட…

  15. உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு ட்ரம்ப் 50 நாள் காலக்கெடு! உக்ரேன் போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது அமெரிக்கா “மிகக் கடுமையான” வரிகளை விதிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (14) தெரிவித்தார். நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தொடர்பில் தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறினார். “ரஷ்யாவின் நடவடிக்கை தொடர்பில் நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். 50 நாட்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், நாங்கள் 100% வரிகளை விதிப்போம்” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாக சர்வதேச ஊடச் சேவையான ரொய்ட்டர்ஸ் ச…

  16. உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா விஜயம்! உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு வருகை தருவார்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனும் “விரைவில்” பேசுவேன் என்றும், மொஸ்கோ மீது இரண்டாம் கட்டத் தடைகளை விதிக்க தனது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மேலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை வரிகளை விதிக்கும் ட்ரம்பின் திட்டங்களையும் ஜெலென்ஸ்கி வரவேற்றார். உக்ரேன் மீதான முழ…

  17. உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு! உக்ரேனில் நடந்து வரும் மோதல் குறித்து கவனம் செலுத்துவதற்காக, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (16) சுமார் இரண்டரை மணி நேரம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொலைபேசி உரையாடலில் இரு தலைவர்களும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த உரையாடலானது மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக ட்ரம்ப் விவரித்தார். அதேநேரம், கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் இந்த அழைப்பை ‘மிகவும் தக…

  18. உக்ரேன் போர்; அமெரிக்கா – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம்! உக்ரேனில் ஒரு பரந்த போர் நிறுத்தத்தை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் திங்களன்று (24) சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். கடந்த வாரம் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இருவருடனும் பேசிய பின்னர், மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. பேச்சுவார்த்தைகளுக்கான திட்டமிடல் குறித்து விளக்கப்பட்ட ஒரு வட்டாரம், அமெரிக்கத் தரப்பை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த பணிப்பாளர் ஆண்ட்ர…

  19. உக்ரேன் போர்; சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிகள் சந்திப்பு!உக்ரேன் – மொஸ்கோவுக்கு இடையிலான சுமார் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் சனிக்கிழமை (15) தெரிவித்தனர். அதன்படி, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் சவுதி அரேபியாவுக்கு எதிர்வரும் நாட்களில் பயணம் மேற்கொள்வார்கள் என்று அமெரிக்க பிரதிநிதி மைக்கேல் மெக்கால் ரொய்ட்டர்ஸ் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார். என…

  20. உக்ரேன் போர்க்களத்தில் அவுஸ்திரேலியர் பலி By RAJEEBAN 06 SEP, 2022 | 11:59 AM உக்ரேன் போர்க்களத்தில் மருத்துவபணிகளில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குயின்ஸ்லாந்தின் தென்பகுதி நகரான நனாங்கோவை சேர்ந்த ஜெட் வில்லியம் டனகே என்ற 27 வயது நபர் உக்ரேனின் இசியம் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார். ஜெட் வில்லியம் டனகே செலுத்திக்கொண்டிருந்த மருத்துவ வாகனத்தை ரஸ்ய படையினர் இலக்குவைத்தனர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜெட் தனது வாழ்நாளில் ஏனையவர்களிற்கு உதவ முயன்றார் நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடியதை விட அதிக உதவிகளை அவர் குறுகிய காலத்தில் செய்தார் என குடும்பத்…

  21. உக்ரேன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த சீனாவிடம் இராணுவ உதவியை கோரியது ரஷ்யா ! சீனாவிடம் முதன்முறையாக இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா கோரியுள்ளது. உக்ரேன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீனாவிடம் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா கோரியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, வொஷிங்டனில் இருக்கும் சீன தூதரக செய்தித்தொடர்பாளர் பதில் அளிக்கையில், “ரஷ்யாவுக்கு சீனா உதவுவது குறித்த எந்த தகவலையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை” என்று மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்கட்கிழமையன்று ரோம் சென்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை ச…

  22. உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் : அமெரிக்க ஜனாதிபதி போலாந்து பயணம் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலாந்துக்கு பயணமாகவுள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா இன்று 26-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரேனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரேன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன. இதற்கிடையில், ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் உக்ரேனில…

  23. இந்தாள் ஒரு பெரிய நாட்டுப்பற்றுள்ள மனிதந்தானப்பா. தனது உக்ரேன் மீதான வலுத்தாக்குதலுக்கான (offense) மெய்யான மிகச் சிறந்த ஏரண விளக்கத்தை அந்த ஊடகவியலாளர்க்கு கொடுக்கின்றார். தனது வீட்டின் வாசலில் எவனேனும் பாரிய ஆயுதங்களைக் கொண்டு வந்து குவித்து விட்டு நான் உன்வீட்டின் மீது படையெடுப்பேன் என்றால் 'முந்துபவன் வெல்வான்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முந்திச் செயல்பட்டு தன் நாட்டைக் காத்துள்ளதான தொனியில் விளக்கம் அளிக்கின்றார். அவர்தம் மேலும் பல விளக்கங்களைக் காண கீழுள்ள நிகழ்படத்தை சொடுக்குக. 👌

  24. உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல்? அதிர்ச்சியில் உலக நாடுகள் ”தேவை ஏற்படின் உக்ரேன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷ்யா தயங்காது” என பெலரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது தற்போது தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் பெலரஸின் ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பருமான அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ள இக்கருத்தானது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் நாம் தயங்க மாட்டோம் . அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண…

    • 22 replies
    • 3k views
  25. உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா உக்ரேன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரேன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடந்துள்ளது. இதுநாள் வரையில் கீவ் நகரில் அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தவிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை (07) அன்று ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் ஒரு வயது குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி உட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.