Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வாஷிங்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டனை நீக்கி அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஈரான், வடகொரியா மற்றும் ஆப்கானிஸ்தான் உடனான வெளியுறவு கொள்கையில் சரியாக செய்யப்படவில்லை என நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525032

  2. காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு.. ராக்கெட் வீசி தலிபான் தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ராக்கெட் வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் செப்டம்பர் 9 தீவிரவாதத் தாக்குதல் நடந்ததன் நினைவு நாளின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் பெரிய அளவில் பாதிப்பில்லை. காம்பவுண்டு வளாகத்தில் ராக்கெட் விழுந்து வெடித்தது. யாரும் இதில் காயமடையவில்லை.ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க தூதரக வளாகத்தில் பெரும் புகை சூழ்ந்தது. இதற்கு அருகில்தான் நேட்டோ அலுவலகம் உள்ளது. அங்கும் யாருக்கும் பாதிப்பில்லை. அமெரிக்கா - தலிபான் இடையில் நட…

  3. தென் ஆப்பிரிக்கா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நைஜீரியா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வைத்து பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தங்கள் நாட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டை சார்ந்தவர்கள் அபகரித்துக் கொள்வதாகவும், உள்நாட்டினருக்கு போதுமான தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என கடந்த சில நாட்களாக தென் ஆப்பிரிக்கா முழுவதும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்ளூர் மக்கள் குழுக்களாக இணைந்து வெளிநாட்டினர் நடத்திவரும் சிறு கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரையிலான அனைத்து வணிக நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். வெளிநாட்டவர்கள் …

  4. ஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம். ஈராக்கில் அஷுரா விழா எனப்படும் இஸ்லாமிய விழா ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலியாகி உள்ளனர். ஈராக்கில் கர்பாலா பகுதியில் எல்லா வருடமும் அஷுரா விழா கொண்டாடப்படுவது வழக்கம். முகமது நபியின் பேரன் முகமது ஹுசைன் மரணத்தை இந்த விழாவில் நினைவு கூறுவார்கள். இவரின் மரணம்தான் இசுலாமியர்களின் சன்னி, ஷியா பிரிவின் பிளவிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.இந்த அஷுரா விழாவில் ஈராக்கின் கர்பாலா பகுதியில் உள்ள ஹுசைன் மசூதியை நோக்கி மக்கள் எல்லோரும் வேகமாக ஓடுவார்கள். இதை ''துவாய்ரிஜ் ஓட்டம்'' என்று அழைக்கிறார்கள். 7ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அதிகாரத்தை கைப்பற்றுவதற்…

  5. பிரான்சில் ஜூன் – ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றில் 1,435 பேர் உயிரிழந்தனர்… September 9, 2019 பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றில் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அன்யஸ் புசாங், தெரிவித்துள்ளார். உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனத் தெரிவித்த அமைச்சர் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். பிரான்சில் கடந்த ஜுன் மாதத்தில் இதுவரை காலம் இல்லாத அளவுக்கு 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. ஏனைய ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா , பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் காலம் இல்லாத அளவுக்கு வ…

  6. 4,000 கார்களை காவிச்சென்ற கப்பல் கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை! தென்கொரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்திற்கு அருகேயுள்ள கடல்பகுதியில் கவிழ்ந்துள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு சுமார் 4,000 ஹூன்டாய் கோல்விஸ், கியா ரகக் கார்களை ஏற்றிச்சென்ற குறித்த கப்பல் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது கப்பலில் 24 பேர் இருந்துள்ளதாகவும், அதில் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் 4 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன நால்வரும் இயந்திர அறையில் இருந்ததாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களில் 13 பேர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர…

  7. அமெரிக்கா அதிக உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் தலிபான்கள் எச்சரிக்கை! தலிபான் போராளிகளுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாபதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில், அமெரிக்கா அதிக உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையைில் தலிபான்கள் பேச்சுவார்த்தையை இரத்துச் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலிபான் இயக்கம் விமர்சனம் செய்து வருகின்றது. அத்தோடு ட்ரம்பின் இம்முடிவிற்கு அமெரிக்கா அதிகமான உயிரிழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் , அமைதி, சொத்து இழப்புகள் அதிகரிக்கும் என தலிபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் தலிபான் பயங்கரவாத இயக்க…

  8. சீனாவின் பிடியில் இருந்து தங்களை விடுவிக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு ஹாங்காங் போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹாங்காங்கில் குற்றம் செய்பவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையம், விமான நிலையம், பல்கலைக் கழகம், தூதரகம் ஆகியவற்றின் முன், கருப்பு வெள்ளை முகமூடி, மஞ்சள் நிற ஆடை, குடை போராட்டம் உள்ளிட்ட பலவகை போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர்.இதையடுத்து, மசோதாவை திரும்ப பெற்று கொள்வதாக ஹாங்காங் அரசு கடந்த வாரம் உறுதி அளித்தது. ஆனால் போராட்டக் குழுவினர், தற்போது பெரும் ஜன…

    • 2 replies
    • 361 views
  9. இந்திய தூதரத்தை முட்டைகளை வீசி தாக்கிய பாகிஸ்தானியர்கள்.. ஒன்றுபட்டு சுத்தம் செய்த இந்தியர்கள் லண்டனில் இந்திய தூதரகத்தின் முன் பாகிஸ்தானியர்கள் முட்டைகளை வீசி போராட்டம் நடத்திய நிலையில் அங்கு குவிந்த இந்தியர்கள் அதனை ஒற்றுமையை இணைந்து சுத்தம் செய்தனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5ம் தேதி நீக்கியது. அத்துடன் அம்மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானியர்கள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது இந்திய தேசிய கொடியை கிழித்து ஆவேச முழக்கம் எழுப்பினர். மேலும் இந்தியர்கள் மீது தாக…

  10. தலிபான்களுடன் மேற்கொள்ளப்படவிருந்த அமைதி உடன்படிக்கை ரத்து – டிரம்ப்: September 8, 2019 தலிபான் அமைப்பினருடன் மேற்கொள்ளப்படவிருந்த அமைதி உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்று, ஞாயிறுக்கிழமை, கேம்ப் டேவிட்டில் தலிபான் தலைவர்களை டிரம்ப் சந்திக்க இருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றதனையடுத்து இவ்வாறு திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை ரத்து செய்த டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்தும் விலகியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ள நிலையில் தலிபான் அமைப்புடன் செய்துகொள்ளப்படவிருந்த ஒ…

  11. ENTERTAINMENT பொழுதுபோக்கு NEWS இத்தாலிய அழகுராணிப் போட்டியில் இலங்கை வம்சாவளிப் பெண் 30 வருடங்களுக்கு முன்னர் இத்தாலியில் குடியேறிய இலங்கைத் தம்பதிகைன் மகள் செவ்மி தாருகா பெர்ணாண்டோ, இத்தாலிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறார். அழகு கலாச்சாரக் கல்வியில் டிப்ளோமாவைப் பெற்றிருக்கும் 20 வயதுடைய தாருகா, ‘மொடல்’ ஆகப் பணிபுரிகிறார். அவர் வசிக்கும் வெனேற்றோ மாகாணத்தின் அழகுராணியாக முடிசூடப்பட்டிருந்த தாருகா நேற்றிரவு நடைபெற்ற இத்தாலிய அழகுராணிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறார். பிராந்தியங்களிலிருந்து பங்கு பற்றிய 187 பேரில் இருந்து தெரிவாகிப் பின்னர் நேற்றிரவு பங்கு பற்றிய 80 பேர்களில் இ…

  12. படத்தின் காப்புரிமை SULLI / Facebook Image caption தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக நடிகையும், பாடகியுமான சுல்லி மாறியுள்ளார். தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். #NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது. தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத…

    • 17 replies
    • 5.1k views
  13. துருக்கியின் எதிர்க்கட்சித் தலைவருக்கு 10 வருட சிறைத்தண்டனை துருக்கியின் முன்னணி அரசியல் தலைவரும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவருமான 47 வயதான Canan Kaftancioglu இற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டமை மற்றும் நாட்டை அவமதித்தமை ஆகிய காரணங்களுக்காகவே இந்த தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ருவிட்டர் வலைத்தளம் மூலமாக பல்வேறு பயங்கரவாத ஆதரவு கருத்துக்களை தெரிவித்தார் என்றும் அரச எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும், இதற்கு எதிராக தான் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கு…

  14. ‘பிறெக்சிட்’ (Brexit) – ஒரு பார்வை September 5, 2019 marumoli 0 Comments இன்னும் சில வாரங்களில், அக்டோபர் 31, 2019, கிறீன்விச் நேரம் இரவு 11:00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரியவிருக்கிறது. இதனால் பிரித்தானிய மக்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் என்ன என்பதை இக் கட்டுரை அலசுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் என்பது 28 நாடுகளைக் கொண்ட ஒரு கூட்டரசு. மக்களும், வர்த்தகமும் இன்நாடுகளின் எல்லைகளைக் கட்டுப்பாடுகளின்றி நகர்ந்து கொள்வதற்கு இக் கூட்டாட்சி அனுமதியளிக்கிறது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்க நாடுகளில் ஒன்று. பிறெக்சிட் பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்…

  15. முன்னாள் சிம்பாப்வே ஜனாதிபதி ரொபட் முகாபே காலமானார்! Published by J Anojan on 2019-09-06 11:45:57 மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாகவிருந்த ரொபட் முகாமே தனது 95 ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 1987 ஆம் ஆண்டிலிருந்து சிம்பாவ்வே தலைவராக இருந்த ரொபட் முகாபே கடந்த 2017 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக் காரணமாக பதவி இறக்கப்பட்டார். https://www.virakesari.lk/article/64220

  16. ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை பாலியல் வன்முறைக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய இருவரிற்கு அந்த நாட்டின் நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. 1998 முதல் 2008 வரையான காலப்பகுதியில் 450ற்கும் அதிகமானவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குபடுத்தியதாகவும் 32 பேரை பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட அன்ரியாஸ் -மரியோ என்ற பெயர்களால் அழைக்கப்படும் இருவரி;ற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. ஜேர்மனியின் வடபகுதியில் உள்ள ஹமெலின் என்ற பகுதியில் விடுமுறை முகாமிற்கு சென்ற சிறுவர்களை இவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் இருவரில் ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்த சிறுமியை பார்க்கசென்றவ…

    • 0 replies
    • 399 views
  17. காபூல் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு - 10 பேர் பலி ; 42 பேர் காயம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 42 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. காபூலின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க தூதரத்துக்கு அருகே காரில் வைக்கப்பட்ட குண்டொன்றே இவ்வாறு வெடித்துள்ளது. சம்வத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.இதில் சில நாட்களுக்கு தலிபான்களின் தாக்குதல…

  18. மிகவும் ஆபத்தான புயலாக எதிர்பார்க்கப்பட்ட டோரியன் புயல் பஹாமஸ் தீவுகளைச் சூறையாடியது. 285 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்திவாய்ந்த டொரியன் புயல், பஹாமாஸ் அருகே கரையைக் கடக்கும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பஹாமஸ் தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. காற்றின் வேகம் மற்றும் மழை வெள்ளத்தினால் வீடுகள் மற்றும் உடமைகள் அடித்துச் செல்லாமல் இருக்க மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். இதனிடையே அதி பயங்கரமான டொரியன் புயலை தான் கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட…

    • 6 replies
    • 950 views
  19. அணுசக்தி ஒப்பந்தத்தை, மீறப் போவதாக.. வல்லரசு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தால்தான் வல்லரசு நாடுகளுடன் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று (புதன்கிழமை) கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், ”கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகளின் அமுலாக்கத்தை நிறுத்திவைத்துள்ளோம். அந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீண்டும் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு …

  20. பிரான்சில் குளிர்சாதன கொள்கலனில் கடத்தப்பட்ட குடியேற்றவாசிகள் கைது! பிரான்சில் குளிர்சாதன கொள்கலன் கொண்ட வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 13 அகதிகள் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ்சில், Val-de-Marne மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பபெற்றுள்ளது. நேற்று நண்பகல் Rungis நகரில் வைத்து குறித்த வாகனம் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது 13 பேர் முறையாக குடிவரவு ஆவணங்கள் இன்றி அதில் பயணம் செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது, சாரதி கைது செய்யப்பட்டதோடு, வாகனத்தில் மறைந்திருந்த 13 அகதிகளும் மீட்கப்பட்டு குடிவரவுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட சாரதி போலந்து நாட்டு குடியுரி…

  21. லண்டனில் இந்திய தூதரகத்துக்கு முன்பாக, பாகிஸ்தானியர்கள் வன்முறை போராட்டம்! லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிராக பாகிஸ்தானியர்கள் சிலர் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது சட்டப்பிரிவை இந்திய மத்திய அரசு கடந்த மாதம் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்தநிலையில், பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசாங்கத்திற்கு …

  22. பிரித்தானிய மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் சடலம் : இந்திய அரசியல் தலைவர் மகனா? பிரித்தானிய மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் சடலம் தெலுங்கானா மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவரின் மகனுடையதா என்ற ரீதியில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலம் லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைகழகத்தில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில் காணாமல் போன உஜ்வால் ஸ்ரீஹர்ஷா சன்னி (வயது 24) என்ற இளைஞருடையதா என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. இவர் தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்ட பா.ஜ.க தலைவராக உள்ள ஹனி உதய் பிரதாப்பின் மகன் என தகவல்கள் வௌியாகியுள்ளன. இதனிடையே, கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இந்தியாவில் உள்ள பெற்றோரிடம் ஸ்ரீ ஹர்ஷா தொலைபேசி மூலம் உரையாடியுள்ள…

  23. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, அங்கு போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் ஹாங்காங்கை உலுக்கியதை தொடர்ந்து, கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் மசோதாவை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்கின்றன. ஜனநாயக ஆர்வலர்கள் முன்னெடுத்த இந்த போராட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் கைகோர்த்ததால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக இ…

  24. மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் நேற்றைய தினம் இந்த நிதி ஒதுக்கீ செய்யப்பட்டுள்ளது. மெக்ஸிகோ எல்லையில் 92 கி.மீ. தூரத்துக்கு 18 அடி உயரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கு பணியில் அமெரிக்க மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். இந்தநிலையில் இதனை திட்டமிட்ட வகையில் நிறைவேற்றுமாறு இராணுவ பொறியாளர் பிரிவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற அனுமதியின்றி எல்ல…

  25. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் மசோதாவை தாக்கல் செய்து, பார்லி.,யில் ஒப்புதல் பெற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பலமுறை ஓட்டெடுப்பு நடந்த போதும், அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு தோல்வியடைந்ததால், அவர் கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்கான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று (செப்.,3) அந்நாட்டு பார்லி.,யில் நடைபெற்று வந்தநிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி., பிலிப் லீ, எதிர்கட்சி எம்.பி.,க்களின் வரிசையில் அமர்ந்தார். பிலிப் லீ எதிர்கட்சியான சுதந்த…

    • 3 replies
    • 568 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.