Sign in to follow this  
ampanai

ஒரே நாளில் 700 விமானங்களை ரத்து செய்தது லூப்தான்ஸா

Recommended Posts

ஜெர்மனியின் பிரபல லூப்தான்ஸா விமான நிறுவன ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்நிறுவனத்தின் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமாக திகழும் லூப்தான்ஸா, பல்வேறு நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவன ஊழியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று ஒரே நாளில் 700 விமானங்களை அந்நிறுவனம் ரத்து செய்தது.

பிராங்பர்ட்  விமான நிலையத்தில் மட்டும் 400 விமானங்களை லூப்தான்ஸா ரத்து செய்தது. முனிச் விமான நிலையத்தில் 250 விமானங்களும், மேலும் சில சிறிய விமான நிலையங்களில் 50 வரையிலான விமானங்களும் லூப்தான்ஸா நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டன.

இதனால் லூப்தான்ஸா நிறுவன விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

https://www.polimernews.com/dnews/87857/ஒரே-நாளில்-700-விமானங்களைரத்து-செய்தது-லூப்தான்ஸா

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ரதி, மற்றவர்கள் எதிர்ப்பார்கள் என்று அஞ்சாது உங்கள் கருத்துகளை துணிவாகவும், அதேவேளை பண்பாகவும், பல சந்தர்ப்பங்களில் மிகச்சரியாகவும் சொல்லும் நீங்கள் பாராட்டுக்கு உரியவர்.
    • இந்த இலக்கண, இலக்கிய தவறுகள், வேறுபாடுகள் எல்லாம் இங்கே அமெரிக்க அரச ஆவணங்களில் பொதுவாக இடம்பெறுபவை. இதற்கு காரணம் இந்த அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு பயன்படுத்துவதே அவர்களின் தேவை. சந்தேகம் இருப்பவர்கள் இலகுவாக ஒரு மின்னஞ்சலுடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஏதோ என்னால் முடிந்ததை செய்து இருக்கிறேன் 😊.
    • போட்டியை எளியமுறையில் திறம்பட நடத்தியதற்கு நன்றி கோசான்........!   💐
    • அதை இணைத்தவர் சுட்டிக்காட்டிய சில விடயங்கள். 1. Zip code 20530-0001 என வர வேண்டுமாம். தற்போதைய முறைப்படி Zip code xxxxx-xxxx format இல் தான் எழுதப்படுவதுண்டாம். 2. கீழேயுள்ள திகதி அச்சடிக்கப்பட்டிருக்க மேலேயுள்ள திகதி கையால் எழுதப்பட்டிருக்கிறது. 3. Date format - கீழே 11 November 2019 என்று போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் November 11, 2019 என்றே எழுதப்படுவதுண்டு. 4. jeopardise என்பதை அமெரிக்காவில் jeopardize என எழுதுவார்கள். 5. scrunity என்பது scrutiny என வர வேண்டும். 6. of the என்பது the என வர வேண்டும். 7. in order to என்பது to என வர வேண்டும். 8. intitated என்பது initiated என வர வேண்டும். 9. encl. என உபயோகித்துள்ளார்கள். 10. Chief - Policy என்பது Chief Counsel Policy என வர வேண்டும்.
    • மேற்கு நாடுகளிடம் ஒரு நாகரிம் இருந்தது. அவர்கள் ஒரு தலைவரை சர்வாதிகாரி.. போர்க்குற்றவாளி.. இனப்படுகொலையாளி.. ஏன் பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தி விட்டால்.. அதில் இருந்து இலகுவில் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். அந்த வரிசையில்.. எமது தேசிய தலைவரை பயங்கரவாதி என்றார்கள்.. அழியும் வரை உறுதியாக நின்று அழித்தார்கள். எமது தேசிய தலைவைரை எந்தச் சிங்களவனும் என்றும் வாழ்த்தியது கிடையாது.  அதேபோல் எமது தேசிய தலைவரும்.. தனது மண்ணுக்கும் மக்களுக்கு எதிரானவர்களை நோக்கி எச்சந்தர்ப்பதிலும் போலி வாழ்த்துக்களை வழங்கியதாகத் தெரியவில்லை. அதேபோல்...  சாதாரண தமிழ் மக்களிடமும் திடமான சில நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதனை அவர்களுக்கும் காலத்துக்கு காலம் வாக்குச் சீட்டுக்களால் காட்டியே வருகின்றனர். எமது தேசிய தலைவர் மீதான ஆதரவாக இருக்கட்டும்.. சிங்கள தேசம் மீதான எதிர்ப்பாக இருக்கட்டும்.. ஹிந்திய ஆக்கிரமிப்பு மீதான வெறுப்பாக இருக்கட்டும்.. எம் மக்கள் வாக்குச் சீட்டுக்களால் துணிந்து வெளிப்படுத்தியே வந்துள்ளனர்.  அது1977 இல் இருந்து தெளிவாகவே நிகழ்ந்து வருகிறது. சும்மா வாழ்த்துவது என்பது அரசியல் நாகரிகம் என்று சொல்லக் கூடாது. ஒரு போர்க்குற்றவாளியை.. ஒரு இனத்தை அழித்தவனை.. மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தவனை.. பல ஆயிரம் பேரின் காணாமல் போவதற்கு உடந்தையானவனை.. அரசுக் கட்டில் ஏற்றி வைத்து வாழ்த்துவதென்பது.. மனித இனத்துக்கு எதிரான ஒரு செயலும் கூட. ஒரு சாதாரண மனிதனைக் கொன்ற கொலைஞனை.. நாம் வாழ்த்த நமக்கு மனம் வருமாக. ஆனால்.. இந்த நிலையில்லாக் கொள்கைக் கும்பல்கள்.. வாழ்த்தும் போல் தெரிகிறதே. அதுவும்... பலரைக் கொன்றவனையே... வாழ்த்தும்.. வரவேற்கும். எமது தேசிய தலைவரை எந்தச் சிங்களவனும் வாழ்த்தியதாக வரலாறு கிடையாது. ஆனால்.. எம் மக்களையும் மண்ணையும் தலைமையையும் அழித்தவன் அவன் சிங்களவனாக இருக்கலாம்.. ஹிந்தியனாக இருக்கலாம்.. எம்மவர்களின் சிலர் ஒரு தெளிவான கொள்கை நிலைப்பாடு இன்றி.. கொலைஞர்களை வாழ்த்தி வரவேற்பதென்பது.. இவர்களின் பலவீனத்தையும் அவர்களின் அராஜகத்தையும் அங்கீகரிப்பது போன்றதே ஆகும். இந்த அரசியல் நாகரிகம் எமக்குத் தேவை தானா..?! அதிலும் மெளனம் மேலானது.  ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றவாளியை.. மனித இனத்தை அழித்தவனை..  ஒரு தரப்பு தமக்கான தலைவன் ஆக்குகிறது என்பதற்காக.. நாமும் ஆக்க வேண்டும்.. வாழ்த்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் அந்தக் குற்றவாளி தண்டனை அனுபவிக்கும் வரை அவனை நோக்கி நீதியை நிலைநாட்ட தான் முயல வேண்டும். மாறாக வாழ்த்தி வரவேற்பது என்பது.. எமது பலவீனத்தையே காட்டி நிற்கும். அவனின் அராஜகத்தை சர்வாதிகாரத்தை நாமே அங்கீகரித்து அடங்கிப் போவதாகவே இருக்கும். இது அல்ல எமது மக்களின் எதிர்பார்ப்பு..என்பதை வாக்குச் சீட்டுக்களால்... அவர்கள் பேசிய விதம் வெளிக்காட்டிய பின்னும்.. இப்படி வாழ்த்துவது கேவலத்திலும் கேவலம் ஆகும்.