Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி பாகிஸ்தானின், லியாகத்ப்பூர் நகருக்கருகே இன்று காலை ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் 16 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் கராச்சி - ராவல்பிண்டிக்கு தேஜ்காம் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், லியாகத்ப்பூர் அருகே இன்று அதிகாலை வந்தபோது, ஒரு பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ, அடுத்தடுத்தப் பெட்டிகளுக்கும் பரவியது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் 16 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில…

  2. பெல்ஜியத்தில் கொள்கலனிற்குள் 12 பேர் உயிருடன் மீட்பு குளிரூட்டப்பட்ட கொள்கலன் ஒன்றிற்குள் காணப்பட்ட 12 குடியேற்றவாசிகளை உயிருடன் மீட்டுள்ளதாக பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பழங்கள் காய்கறிகள் அடங்கிய கொள்கலனிற்குள் 12 குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெல்ஜியத்தையும் நெதர்லாந்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையொன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிற்குள் இருந்து 11 சிரிய பிரஜைகளையும் சூடானை சேர்ந்த ஒருவரையும் உயிருடன் மீட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலந்தை சேர்ந்த டிரக்கின் சாரதி கொள்கலன் குறித்து சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு அறிவித்ததன் காரணமாகவே உள்ளே குடியேற…

  3. இணையத்தில் வைரலாகும் சூரியனின் ஒளிப்படம்! ஹாலோவின் தினத்தை முன்னிட்டு நாசா வெளியிட்டுள்ள சூரியனின் ஒளிப்படம் வைரல் ஆகிவருகிறது. தீய சக்திகளை விரட்டும் ஹாலோவின் திருவிழா ஒக்டோபர் 31ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அயலவர்களை பயமுறுத்தும் விதமாக பூசணிக்காய் உள்ளிட்டவற்றை விளக்குகள் கொண்டு மக்கள் அலங்கரிப்பார்கள். இந்நிலையில், ஹாலோவினுக்கு அலங்கரிக்கப்படும் ஜாக்கோ லேண்டர்ன் வடிவ பூசணிக்காயை போல சூரியன் காட்சியளிக்கும் ஒளிப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. சூரியனும் கூட ஹாலோவினை கொண்டாட தயாராகிவிட்டது என குறித்த ஒளிப்படம் தொடர்பாக நாசா நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/இணையத்தில்-வைரலாகும்-சூர/

  4. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்! Published by R. Kalaichelvan on 2019-10-30 12:41:07 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது. ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நல குறைவினால் கடந்த சில தினங்களுக்கு முன் பிணை வழங்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபிற்கு அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். …

    • 0 replies
    • 330 views
  5. பிரெக்ஸிற்றைக் குறிக்கும் 50 பென்ஸ் நாணயம் 31 ஆம் திகதி வெளியாகாது பிரெக்ஸிற்றைக் குறிக்கும் வகையில் ஓக்ரோபர் 31 ஆம் திகதி வெளியிடத் திட்டமிட்டிருந்த 50 பென்ஸ் நாணயங்கள் இந்த மாத இறுதியில் வெளியாகாது என்று கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு மேலும் மூன்றுமாதம் காலநீடிப்பு வழங்கப்படிருக்கும் நிலையில் 50 பென்ஸ் நாணயங்கள் வெளியாகும் திகதி பிற்போடப்பட்டுள்ளது. பிரெக்ஸிற்றைக் குறிக்க இன்னும் ஒரு நாணயம் தயாரிக்கப்படும் என்று திறைசேரியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறிய பின்னர் அது புழக்கத்திற்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மாத இறுதியில் பிரித்தானியா, …

  6. அமெரிக்காவில் பாலியல் முறைப்பாடுகளில் சிக்கிய பெண் காங்கிரஸ் உறுப்பினர் பதவி விலகல்! அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெண் காங்கிரஸ் உறுப்பினர் கேட்டி ஹில் (Katie Hill) தனது பதவியை துறந்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தின் 25 வது மாவட்டத்தில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு கேட்டி ஹில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், ஹில்லும் அவரது கணவரும் தங்களின் தேர்தல் பிரசார பணிகளில் பணியாற்றிய 20 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ரெட் ஸ்டேட் என்ற பழைமைவாத சமூக வலைத்தளம் செய்தி வௌியிட்டிருந்தது. ஹில்லும் குறித்த பெண்ணும் நெருக்கமாக இருந்த ஔிப்படத்தையும் அந்த …

  7. முன்கூட்டியே தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்து பிரிட்டன் எம்பிக்கள் வாக்களித்ததையடுத்து டிசம்பர் 12ம் தேதி பிரிட்டனில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு முன்பு இத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. பிரக்சிட் விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் தேக்க நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாக 438 எம்பிக்கள் வாக்களித்தனர். தேர்தல் வேண்டாம் என 20 எம்பிக்கள் மட்டுமே மறுத்தனர். நாளையுடன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரிட்டனுக்கு 3 மாத கால அவகாசம் அளித்துள்ளது ஐரோப்பிய …

    • 0 replies
    • 325 views
  8. பக்தாதியின் பின் சதாம் ஹுசைனின் இராணுவ அதிகாரி ஐ.எஸ். தலைவன் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனின் இராணுவத்தில் சேவையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராசிரியர் என அழைக்கப்படும் இவரின் பெயர் அப்துல்லா கர்தாஸ் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் பயங்கரவாதி அபுபக்கர் பக்தாதி சிறைப்படுத்தப்பட்டிருந்த போது அவருடன் சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர் எனவும் கூறப்படுகின்றது. இவர் பக்தாதியில் நெருங்கிய கொள்கை வகுப்பாளராக செயற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. ஐ.எஸ். அமைப்பின் செய்தி ஊடகமான அமாக் வ…

  9. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை (பிரெக்சிற்) அடுத்தாண்டு ஜனவரி 31ஆம் திகதி வரை தாமதப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் இன்று இணங்கியுள்ளதாக ஐரோப்பிய சபையின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/பரகசறற-தமதபபடதத-ஐரபபய-ஒனறயம-இணஙகயத/50-240503 Brexit: European leaders agree extension to 31 January EU leaders have agreed in principle to extend Brexit until 31 January 2020 - meaning the UK will not leave as planned on Thursday. EU Council President Donald Tusk said it was a "flextension" - meaning the UK could leave before the deadline if a deal was approved by Parliament. It comes as MPs prep…

    • 0 replies
    • 327 views
  10. போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து சிலி நாட்டில் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் துறைமுகத்தில் இருந்த கடை ஒன்று சூறையாடப்பட்டது. லத்தின் அமெரிக்காவின் வளமிக்க நாடான சிலியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு மக்களிடையே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டம் நடத்தப்பட்டதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்நிலையில், வால்பரைசோ நகரில் உள்ள துறைமுகத்தில் திரண்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்த கடை ஒன்றில் இருந்த பொருட்களை அள்ளி சென்றனர். https://www.polimernews.com/dnews/86352/சிலி-நாட்டில்-போக்குவரத்துகட்டண-உயர்வை-கண்டித்துதொடரும்-போராட்டம்

    • 2 replies
    • 638 views
  11. ஸ்பெயினில் தனி நாடு கேட்டுப் போராடிய கேட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ஏறத்தாழ 3,50,000 மக்கள் பார்சிலோனாவில் வீதியில் இறங்கி போராடினர். கேட்டலோனியா சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இவர்கள் அமைதியான ஒரு பேரணியையும் மேற்கொண்டனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சனிக்கிழமை சில பிரிவினைவாத குழுக்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையில் முடிந்தது. 2017ஆம் ஆண்டு கேட்டலோனியா எனும் தனி நாட்டை வலியுறுத்தி சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு சட்டத்திற்குப் புறம்பாக ஸ்பெயினில் நடந்தது. இதுவரை 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்ட…

    • 0 replies
    • 468 views
  12. பிரித்தானியாவில் லொறியொன்றின் கொள்கலனிலிருந்து 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். எசெக்சில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வோர்ட்டர் கிளேட் கைத்தொழில் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிலிருந்தே 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். பல்கேரியாவிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த லொறியிலிருந்தே சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். வட அயர்லாந்தை சேர்ந்த லொறிச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://yarl.com/forum3/forum/34-உலக-நடப்பு/?do=add

  13. லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை எவ்வளவு காலம் தாமதப்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரும் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பிரக்சிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 322 பேரும், எதிராக 306 பேரும் வாக்களித்தனர்.இதனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த புதிய ஒப்பந்தமும் நிராகரிக்கப்பட்டது. மேலும், பிரக்சிட்…

    • 0 replies
    • 515 views
  14. கலிபோர்னியாவில் காட்டு தீ – 36 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிப்பு அமெரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக 2 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் மின்சாரமின்றி அவதியுறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. காட்டுத் தீ ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வைத்துள்ளதோடு பல வீடுகள் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. குறித்த பகுதியில் பலத்த காற்று வீசுவதனால், காட்டுத் தீ மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கதிற்காக, 36 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை மதியம் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். …

  15. படத்தின் காப்புரிமை Lisa Maree Williams / getty images Image caption உளுருவில் மலையேற்றம் தடை செய்யப்படவுள்ளதால் அங்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆஸ்திரேலியாவில் ஏயர்ஸ் ராக் என பரவலாக அறியப்பட்ட உளுரு எனும் ஒரு குன்று சனிக்கிழமை முதல் வெளியாட்கள் செல்லவே தடை செய்யபட்ட இடமாக மாறிவிடும். நீண்ட காலமாக இந்த மலைக் குன்றின் மீது ஏற வேண்டாம் என அனான்கு பூர்வகுடி இன மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த மலையை புனிதமாக கருதி பாதுகாத்தும் வந்தனர். கடந்த 2017ம் ஆண்டு, உளுரு பகுதிக்கு வருகை தந்தவர்களி…

  16. பொருளாதார பிரச்சனை மற்றும் ஊழலை கண்டித்து ஈராக்கில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கண்ணீர்புகைக் குண்டுகளையும், கையெறி குண்டுகளையும் வீசி கலவரக்காரர்களை ராணுவத்தினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் வேளையில் அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி இம்மாதம் தொடக்கத்தில் தலைநகர் பாக்தாத்தில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டதில் வன்முறை வெடித்தது. இது குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் அடெல் அப்துல் மஹதி, மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட சுதந்திரம் உண்டு என்றும், அதற்காக வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது …

  17. லெபனான் நாட்டில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலந்து கொண்டனர். லெபனானில் அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார சீர்த்திருத்தங்கள், புதிய வரி விதிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அங்கு கனமழை பெய்தபோதும், ரெயின் கோட் அணிந்தும், குடைகள் மற்றும் கொடிகளை பிடித்தபடி Jal el Dib நகர் சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் அமைதியாக போராடி வருவதால், அவர்களை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். https://www.p…

    • 0 replies
    • 302 views
  18. திடீர் திருப்பம்: குர்திஷ் போராளிகள் மீதான தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது துருக்கி வடக்கு சிரியாவில் குர்திஷ் மீதான எல்லை தாண்டிய தாக்குதலை நிறுத்துவதற்கு துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார். பென்ஸ் மற்றும் துருக்கியின் ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்கு இடையே அங்காராவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் ஐந்து நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் எனவும், துருக்கியின் எல்லையில் இருந்து குர்திஷ் போராளிகள் பின்வாங்க வேண்டும் எனவும் துருக்கி வலியுறுத்தியது. இந்த நிலையில் குர்திஷ் தலைமையிலான போராளிகளை பின்வாங்கச் செய்வதற்கு அமெரிக்கா உதவும் என தெரிவிக்க…

    • 3 replies
    • 1.2k views
  19. முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையில் ரஷ்ய – துருக்கி ஜனாதிபதிகள் கைச்சாத்து குர்திஷ் படை­யி­னரை துருக்­கி­யி­னு­ட­னான சிரிய எல்­லை­யி­லி­ருந்து வெளி­யேற்­று­வதை நோக்­காகக் கொண்ட உடன்­ப­டிக்­கையில் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினும் துருக்கி ஜனா­தி­பதி தாயிப் எர்­டோ­கனும் கைச்­சாத்­திட்­டுள்­ளனர். மேற்­படி உடன்­ப­டிக்­கையை வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க உடன்­ப­டிக்­கை­யாக அந்­நா­டுகள் குறிப்­பிட்­டுள்­ளன. இரு நாடு­களின் ஜனா­தி­ப­திகளுக் கு­மி­டையே இடம்­பெற்ற பேச்­சு­ வார்த்­தை­க­ளை­ய­டுத்தே மேற்படி உடன்­ப­டிக்கை எட்­டப்­பட்­டுள் ளது. துருக்கி இந்த மாத ஆரம்­பத்தில் தனது நாட்டின் தெற்­கே­யுள்ள சிரிய பிராந்­தி­யத்தில் நிலை­கொண்­டுள்ள குர்திஷ் …

  20. பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றத்தை ஜனவரி வரை ஒத்திவைக்க தீர்மானம் 'பிரெக்சிட்' எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக புதிதாக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்தது. இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தீர்மானத்துக்கு எதிராக அதிக எம்.பி.க்கள் வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. பிரெக்சிட் என்று அழைக்கப்படும் இதற்கான நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் வெளியேறுவதற்கு பிரிட்டனுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 27 நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன…

    • 11 replies
    • 1.3k views
  21. தென் கொரியா நிர்மாணித்த உல்லாசத் தளத்தை தகர்க்க வட கொரியத் தலைவர் உத்தரவு! தென் கொரியாவுடன் இணைந்து நிர்மாணித்த உல்லாசத் தளத்தை தகர்ப்பதற்கு, வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். மவுண்ட் கும்காங் (Mount Kumgang) பகுதியில் உள்ள குறித்த சுற்றுலாப் பயணிகள் வளாகம், பயனற்றுப் போய் இருப்பதாகத் தெரிவித்து அதை தகர்க்குமாறு கிம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில்மிக்க மலைப்பாங்கான இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த உல்லாசத் தளத்துக்கு, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான தென்கொரியர்கள் சுற்றுலா சென்று வந்தனர். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட பாதையைத் தாண்டிச் சென்ற தென் கொரியப் பயணி ஒருவரை, வட கொரிய ராணுவ வீரர் சுட்டுக் கொன்றதால், கடந்த 2008…

  22. போட்ஸ்வானாவில் 100 யானைகள் உயிரிழப்பு – ஆந்த்ராக்ஸ் தொற்று சந்தேகம்! தென் ஆபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் நூற்றுக்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளின் உயிரிழப்புக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று ஒரு காரணமாக இருக்கலாம் என்று போட்ஸ்வானா அரசாங்கம் சந்தேகம் வௌியிட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் மாத்திரம் 14 யானைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், சில யானைகள் உயிரிழந்தமைக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று காரணமென விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை, வேறு சில யானைகள் வறட்சி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. 2…

  23. டென்மார்க்கில் ஆச்சரியம்: நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம் டென்மார்க்கில் கலங்கரை விளக்கம் ஒன்று நகர்த்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பதிவு: அக்டோபர் 24, 2019 03:45 AM கோபன்ஹேகன், டென்மார்க் நாட்டின் வடக்கு ஜட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரில் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் உள்ளது. ‘ரப்ஜெர்க் நியூடு’ என்று அழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டு தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் ‘ரப்ஜெர்க் நியூடு’ கலங்கரை விளக்கத்தை பார்த்து செல்கின்றனர். இந்த நிலை…

  24. கனடா பிரதமர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. நிலப்பரப்பில் உலகின் 2வது பெரிய நாடாக, 338 மக்களவை தொகுதிகளுடன் இருக்கும் கனடாவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் செல்வாக்கும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு பெற்றவருமான ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ஜஸ்டின் பெரும்பான்மை இழப்பார் என அண்மையில் வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. குயூபெக் என்ற நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கை விசாரிக்க ஜஸ்டின் தடை விதித்தை முன்வைத்து, எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் பார்ட்டி தீவிர பிரச்சாரம் செய்து வருவதால் இந்த பின்னடைவு எனவு…

    • 17 replies
    • 2k views
  25. நாடாளுமன்றத் தேர்தல் : லிபரல் கட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது! கனேடிய பொதுத்தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, இரண்டாவது தடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ சிறுபான்மை ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்க்கப்படுகிறார். இருப்பினும், ஆளும் லிபரல் கட்சிக்கு எதிராக அரசியல் செய்துவரும், வலதுசாரி சிந்தனையுடைய பழமைவாத கட்சிக்கு, முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்கள் கிடைத்திருக்கின்றன. மொத்தமுள்ள 338 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.