Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சவுதிஅரேபியாவில் வெளிநாட்டினர் பணிபுரிய திடீர் தடை சவுதி அரேபியாவில் வெளிநாட்டில் பலர் வேலை பார்த்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்களில் அதிக அளவில் வெளிநாட்டினர் சமையல் பரிமாறுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். மேலும் மானேஜர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் சவுதி அரேபியர்களிடம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க சவுதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கடந்த ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 13 சதவீதமாக இருந்தது. இதையடுத்து சவுதி அரேபியாவில் நட்சத்திர ஓட்டல்கள் மற்…

    • 0 replies
    • 603 views
  2. அமெரிக்க புலனாய்வுத்துறைத் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் ! அமெரிக்க புலனாய்வுத்துறை அமைப்பின் பணிப்பாளரான டேன் கோட்ஸ் தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க புலனாய்வுத்துறை அமைப்பின் பணிப்பாளராக டேன் கோட்ஸ் பதவி வகித்து வந்தார். இவர் அதிபர் ட்ரம்பை நேரில் சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. கடிதத்தில் எனது பதவிகாலத்தில் அமெரிக்க உளவுத்துறை அமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்து இருக்கிறது.எனவே எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது என நம்புகிறேன்” என அவரது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்,…

    • 1 reply
    • 958 views
  3. இந்தியாவில் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அதுபோல் பல மாநிலங்களில் எந்த மாநிலக் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், அந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் ஒரே குற்றச்சாட்டு ஊழல் என்பதுதான். அப்படிப்பட்ட ஊழல், இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடிய ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசுசாரா அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை, அந்த நாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகின…

    • 2 replies
    • 991 views
  4. பாகிஸ்தான், இந்தியருக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் அதிமுக்கிய பதவிகள் லண்டன், ( நியூஸ் இன் ஏசியா ) உண்மையான ஒரு பல்லின நாடாகுவதை நோக்கிய பிரிட்டனின் பயணத்திற்கு சான்றாாக இரு தெற்காசிய நாட்டவர்களுக்கு ( இந்தியா, பாகிஸ்தான் ) புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் அதிமுக்கியமான பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீதி பட்டேல் உள்துறை அமைச்சராகவும் பாகிஸ்தானிய வம்சாவளியினரான சாஜித் ஜாவித் நிதியமைச்சராவும் பதவியேற்றிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறவேண்டும் என்று உறுதியாக வலியுறுத்தி வந்திருக்கும் பட்டேல், தெரேசா மேயின் பிரெக்சிட் தந்திரோபாயத்தை மிகவுமம் கடுமையாக எதிர்…

  5. ராவல்பிண்டியில் குடியிருப்பு பகுதியில் வீழுந்த ராணுவ விமானம் – 15 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தான் – ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதியொன்றில் சிறிய ரக ராணுவ விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழ்ந்துள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தில் பயணித்த ஐந்து பேரும், பொதுமக்கள் 10 பேரும் உயிரிழந்ததாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியதாகவும், விமானம் கீழே விழுந்ததும் தீப்பற்றி எரிந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியுள்ளது. பாகிஸ்தான் தலை…

  6. பிரித்தானிய அமைச்சரை விமர்சித்தவருக்கு சிறைதண்டனை! பிரித்தானிய உள்துறை அமைச்சர் ப்ரீதி படேலை இனவெறி ரீதியில் விமர்சித்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ப்ரீதி படேலின் முகநூல் பக்கத்துக்கு, அவரை இனவெறியுடன் விமர்சித்து கடந்த 2018-ஆம் ஆண்டு சில குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை செய்த பொலிஸார் ஜெரார்ட் ட்ரெய்னர் (55) என்ற சந்தேக நபரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மீதான விசாரணை, மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, நீதிபதி சைமன் பிரையன் தீர்ப்பளித்தார். குறித்த தீர்ப்பில், ஜெரார்ட் ட்ரெய்னருக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.…

    • 1 reply
    • 857 views
  7. ஏவுகணை சோதனை நடத்தப்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை! தேவை ஏற்பட்டால் ஏவுகணை சோதனை நடத்தப்படும் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இவ்வாறு சோதனை நடத்துவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என அமெரிக்காவுக்கு ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், “ஈரானின் ஏவுகணை என்பது முற்றிலும் தற்காப்புக்கானது. வேறு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. எனவே தேவை ஏற்படுமாயின் ஈரான் நிச்சயமாக ஏவுகணையை சோதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏவுகணை சோதனையின் நோக்கம் ஈரானின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு பதிலளிப்பதே ஆகும். அத்தோடு ஈரான் தன்னை தற்காத்துக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும். அதற்கு உலகி…

    • 1 reply
    • 545 views
  8. கனடா ரெரன்றோ வரசித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவில் தங்க நகை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் தமிழ் பெண்மணியொருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பெண்ணொருவரின் தாலியை இவர் அபகரித்ததாகவும், அவரது பைக்குள் தாலி மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த இந்த பெண்மணி, அடிக்கடி கனடா வந்து செல்பவர் என்றும், சோதடரான இவருக்கு கனடாவில் ஏராளம் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.pagetamil.com/67266/?fbclid=IwAR3175TPY7oi31mYY9GT_Swt4gpZjREx5mYs6kKfNIk7RJ3ixmPqPHNIONE

    • 5 replies
    • 891 views
  9. கலிபோர்னியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி அமெரிக்காவின், வடக்கு கலிபோர்னியாவில் வருடாந்தம் இடம்பெறும் உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு இலட்சம் பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் திடீரென புகுந்த மர்ம நபர், அனைத்து பகுதிகளையும் நோக்கி தனது துப்பாக்கியால் சரமாரியகச் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான மூவர் சம்பவ இடத்திலேய உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபரும் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்துள்ளார். மேலும் இதில் காயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https…

  10. ரஷ்யாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது ரஷ்யாவில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை நகர சபை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,400 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 1,400 பேரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாவர்கள். எதிர்வரும், செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 45 இடங்களைக் கொண்ட மாஸ்கோ நகர சபைக்கான தேர்தலில் பங்கேற்க முடியாத வகையில், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்…

  11. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பொய் சொன்னாரா பிரிட்டிஷ் பெண்? 36 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சைப்ரஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, அங்கு சுற்றுலா வந்திருந்த 12 இஸ்ரேலிய நாட்டு இளைஞர்களால் தாம் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக புகார் தெரிவித்த பிரிட்டன் பெண், போலியான புகார் தெரி…

  12. அமெரிக்காவில் தேன்நிலவுக்கு சென்ற இடத்தில் எரிமலைக்குள் விழுந்த புதுமாப்பிள்ளை 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGOFUNDME தேன்நிலவுக்கு சென்ற இடத்தில் எரிமலை ஒன்றுக்குள் விழுந்த, அமெரிக்காவைச் சேர்ந்த புதுமாப்பிள்ளையை அவரது மனைவி மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மவுண்ட் லியாமுய்கா எனும…

  13. அனுமதி கிடைத்தது ; எல்லை சுவர் எழுப்ப தயராகும் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருவதை தடுக்கும் வகையில் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு இராணுவ நிதியை பயன்படுத்திக் கொள்ள அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மெக்சிகோவையொட்டிய எல்லை வழியாக ஏராளமானோர் அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைவதைத் தடுப்பதற்கு எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவதற்கு நிதியை ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ட்ரம்ப் கோரிக்கை வைத்தார். இதற்கு ஜனநாயக கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் டிரம்ப், அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதன் மூலம் இராணுவ …

  14. யூதர்களினால் பொதுத் தேர்தல் திகதியில் மாற்றம்? கனேடிய பொதுத் தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கனேடிய பொதுத் தேர்தல் இடம்பெறுவதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், அந்தக் காலப்பகுதியில் யூதர்களுடைய விடுமுறை வருவதனால், தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து கனேடிய தேர்தல் தலைமை அதிகாரி பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது. கனேடிய மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும். ஆனால், ஒக்டோபர் 21ஆம் திகதி யூதர்களுடைய முக்கிய விடுமுறை நாளும் வருகிறது. குறித்த நாளில் யூதர்கள் வேலைசெய்வதோ, வ…

  15. ஆப்ரிக்க அமெரிக்க வழக்கறிஞர் குறித்து டிரம்ப் பதிவிட்ட ட்வீட் ஒன்று ஒருவர் இன ரீதியிலாக தாக்குவது என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் பிரதிநிதியான எலிஜா க்யூமிங்க்ஸ் மற்றும் அவரின் மேரிலாண்ட் மாவட்டம் குறித்து டிரம்ப் டிவிட்டரில் மோசமாக பதிவிட்டுள்ளார். கருப்பின மக்களை அதிகமாக கொண்ட க்யூமிங்க்ஸின் பால்டிமோர் மாவட்டத்தை எலிகள் கொண்ட அழுக்கான ஒரு பகுதி என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் குடியேறிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சித்திருந்திருந்த க்யூமிங்க்ஸ் பிறரை `கொடுமைப்படுத்துபவர்` என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார். தடுப்பு மையங்களில் குடியேறிக…

    • 0 replies
    • 498 views
  16. லிபிய அகதிகளின் படகு கவிழ்ந்ததில்150 பேர் பரிதாபமாக பலி ! லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக சென்ற அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 150 பேர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த கடாபியின் ஆட்சி முற்றாக ஒழித்த பின்னர் அங்கு அதிகார போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதுடன் அங்கு குழுமோதல்களும் இடம்பெற்று வருவதுடன் இதில் சிக்கி பல்லாயிரக்காணக்கான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு ஏற்படும் மோதல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள அந்நாட்டு மக்கள் வேறு இடங்களை நோக்கி கடல் மார்க்கமாக செல்ல முயற்சிக்கையில் இவ்வாறான உயிரிழப்புகள் பெருமளவில் ஏற்படுகின்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …

    • 2 replies
    • 676 views
  17. சர்வதேச தடைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை! சர்வதேச தடைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்களது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளமைக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்குவதற்காக அமெரிக்காவிற்கும், வட கொரியாவிற்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிக்கு, இந்த ஏவுகணை சோதனை பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள தென் கொரிய இராணுவ கூட்டுத் தலைமையக ச…

  18. பொரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக எவ்வாறு தெரிவானார்: யார் இவர்? 10 முக்கியத் தகவல்கள் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கொன்சர்வேற்றிவ் கட்சியை சேர்ந்த பொரிஸ் ஜோன்சன் குறித்த பத்து சுவாரஸ்ய தகவல்கள் வௌியாகியுள்ளன. அவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். பொரிஸ் ஜொன்சன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பிறந்தவர். பின்னர் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். அரசியலில் நுழைந்தபின், நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர் மற்றும் வெளியுறவு அமைச்சர் என பயணத்தை தொடர்ந்த அவர் தற்போது பிரதமராகி இருக்கிறார். ஆனால், இவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் சர்ச்சைகளும் கூடவே பயணித்துள்ளன. தி ஸ்பெக்ரேற்றர் (The Spectator) …

  19. இறப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்ட தொழிலாளர்கள்: மியன்மாரிலிருந்து மலேசியாவுக்கு கடத்தும் முயற்சி மலேசியாவுக்கு கடத்தி செல்வதற்காக தெற்கு தாய்லாந்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 மியன்மார் நாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தரகர்கள் மூலம் மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட இவர்கள் மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த நிலையில் தாய்லாந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இறப்பர் தோட்டம் ஒன்றில் 54 ஆண்களும் 3 பெண்களும் இருந்த பொழுது சுற்றிவளைத்ததாக தாய்லாந்து கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற ஒரு கைது நடவடிக்கையில் மலேசியாவுக்கு மக்…

  20. பிரதமர் தெரசா மே, பதவிவிலகல் கடிதத்தை மகாராணியிடம் கையளித்தார் பிரதமர் தெரசா மே இன்று பிற்பகல் 2.30 அளவில் டவுனிங் ஸ்ட்ரீட்ரில் உரையாற்றிய பின்னர் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். மூன்று வருடங்களும் பதினோரு நாட்களும் பிரதமராகப் பதவி வகித்த தெரேசா மே நிறைவாகத் தெரிவிக்கையில் பிரித்தானியாவை முன்னோக்கிக் கொண்டுசெல்வதே எனது நோக்கமாக இருந்தது என்று தெரிவித்தார். பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்த தெரேசா மே, பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதேவேளை தொடர்ந்துவரும் நாட்களில் அவர் பாராளுமன்றில் பின்வரிசை உறுப்பினராக அமரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athav…

  21. நான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை ஆப்கானிஸ்தானை அமெரிக்க நினைத்தால் உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் என்ற அர்த்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் என்னால் ஒரு வாரத்திற்குள் வெற்றிபெற முடியும் ஆனால் நான் 10 மில்லியன் மக்களை கொலை செய்ய விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை வெள்ளைமாளிகையி;ல் வரவேற்றவேளை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். தலிபானுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்…

    • 3 replies
    • 740 views
  22. புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை வடகொரியத் தலைவர் கிம் யொங் உன் தனது நாட்டால் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப ட்ட நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்றை பார்­வை­யிட்டு அதன் தந்­தி­ரோ­பாய ஆற்­றல்கள் மற் றும் ஆயுத முறை­மை­களை பரி­சோ­தனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.அந்த நீர்­மூழ்கிக் கப்­பலை கிம் யொங் உன் பரி­சோ­தனை செய்யும்போது அவ­ரது உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ர­ருகே நடந்து சென்று அவரால் வழங்­க­ப்­பட்ட குறிப்­பு­களை எழு­து­வதில் ஈடு­பட்­டனர். கிம் யொங் உன்னின் விசேட மேற்­பார்­வையின் கீழ் நிர்­மா­ணிக்­கப்­பட்ட அந்த நீர்­மூழ்கிக் கப்பல் ஜப்­பா­னிய கடல் என அழைக்­கப்­படும் …

  23. குடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தைச் சேர்ந்த 8 நாடுகள் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் மீட்­கப்­படும் குடி­யேற்­ற­வா­சி­களின் மீள்­கு­டி­ய­மர்த்­தலை தம்­மி­டையே பகிர்ந்துகொள்ள இணங்­கி­யுள்­ள­தாக பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன் தெரி­வித்தார். ஆனால் மேற்­படி நாடு­களில் இத்­தாலி உள்­ள­டங்­க­வில்லை என அவர் கூறினார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஐரோப்­பிய ஒன்­றிய உள்த்துறை மற்றும் வெளிநாட்டு அமைச்­சர்­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட கொள்­கைக்கு ஏனைய 6 நாடுகள் ஒப்­பு­தலை அளித்­துள்­ள­தாக மக்ரோன் கூறினார். ஐரோப்­பிய …

  24. மாற்றுப் பாலினத்தவர் பேரணியில் ஆர்வலர்கள் மீது தாக்குதல் : 25 பேர் பொலிஸாரால் கைது! போலந்தில் பேரணி நடத்திய மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ஆதரவான ஆர்வலர்கள் மீது பிறிதொரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரை போலந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் சமஉரிமை கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பியாலைஸ்டொக் நகரில் நடத்தப்படட பேரணியில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாற்றுப் பாலின ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கடந்த சனிக்கிழமை தொடக்கம் போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நூற்றுக்கணக்கான எதிரணி …

  25. சீன – ரஷ்ய கூட்டு வான்படை கண்காணிப்பு : பதிலடியாக விமானங்களை அனுப்பிய ஜப்பானும், தென்கொரியாவும்! சீனாவுடன் கூட்டாக இணைந்து முதன் முறையாக விமான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடி வழங்கும் வகையில் தமது ஜெட் விமானங்களை ஜப்பானும், தென்கொரியாவும் அனுப்பியுள்ளன. ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதியில் முன் திட்டமிட்ட பாதையில் போர் விமானங்களின் துணையோடு, நான்கு குண்டு வீசும் விமானங்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. ரஷ்ய விமானங்கள் எல்லை மீறிப் பறந்தபோது தங்கள் போர் விமானங்கள் இயந்திரத் துப்பாக்கியாலும், சுடரொளித் துப்பாக்கியாலும் (flare gun) எச்சரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.