உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26591 topics in this forum
-
உக்ரேனில் பேருந்து மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்! உக்ரேனில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்கு மத்திய நகரமான மர்ஹானெட்ஸில் புதன்கிழமை (23) காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அதேநேரம், இந்த தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் Dnipropetrovsk பிராந்தியத்தின் தலைவர் செர்ஹி லைசாக் உறுதிபடுத்தியுள்ளார். போர் நிறுத்தத்தை உறுதி செய்யும் நோக்கில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் லண்…
-
- 0 replies
- 268 views
-
-
அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதிக்கு சீன அரசு தடை! அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கு சீன அரசு தடைவிதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் உணவகங்களில் மிக பிரபல உணவாக இருந்த அமெரிக்க மாட்டிறைச்சி இனி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அத்துடன் இதற்குப் பதிலாக அவுஸ்திரேலியாவில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யவுள்ளதாக சீன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது என்…
-
-
- 2 replies
- 351 views
-
-
ட்ரம்பின் கடும் வரிகள்; உலகளாவிய பொருளாதார உற்பத்தி தொடர்பில் IMF எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அனைத்து வர்த்தக பங்காளிகள் மீதும் விதிக்கப்பட்ட கடுமையான வரிகளால், வரவிருக்கும் மாதங்களில் உலகளாவிய பொருளாதார உற்பத்தி மெதுவாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF)செவ்வாயன்று (22) கூறியது. உலகளாவிய நிதித் தலைவர்கள் ட்ரம்பின் குழுவுடன் வரிகளைக் குறைக்க ஒப்பந்தங்களைக் கோரி செவ்வாயன்று வொஷிங்டனை முற்றுகையிட்டனர். உண்மையில், பேச்சுவார்த்தைகளின் வேகம் விறுவிறுப்பாக இருந்தது என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறினார். இதுவரை 18 வெவ்வேறு நாடுகள் திட்டங்களை வழங்கியுள்ளன. மேலும் ட்ரம்பின் வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு இந்த வாரம் 34 நாடு…
-
- 0 replies
- 326 views
-
-
அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை! அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் பரஸ்பரம் என்ற பெயரில் அனைத்து வர்த்தக கூட்டாளிகள் மீதும் தான்தோன்றித்தனமாக வரிகளை விதித்து, ‘பரஸ்பர வரி’ பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், எளியோரை வலிமையானவர்கள் வேட்டையாடினால், அனைத்து நாடுகளுமே பாதிக்கப்படும் எனவும், அமெரிக்கா உடனான வர்த்தக மோதலை தீர்க்க முயற்சிக்கும் அனைத்து தரப்பினரையும் சீனா மதிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன்…
-
- 0 replies
- 270 views
-
-
ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தலைச் சமாளிக்க வாக்காளர்கள் தனக்கு வலுவான ஆணையை வழங்க வேண்டும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி திங்களன்று (21)மீண்டும் அழைப்பு விடுத்தார். ட்ரம்பின் வரிகளும், இணைப்பு பற்றிய பேச்சும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், கனடா அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைத்து அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னதாக நடந்த கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருக்கும் கார்னி கூறியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிபரல் தலைவராக போட்டியிடுவதற்கு முன்பு எந்த அரசியல் அனுபவமும் இல்லாத 60 வயதான முன்னாள் மத்திய வங்கியாளர் ஆவார். அட…
-
- 0 replies
- 262 views
-
-
புளோரிடா விமான நிலையத்தில் தீப்பிடித்த டெல்டா விமானம்! மத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு திங்கட்கிழமை (21) டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனல், விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று டெல்டா ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது. திங்கள்கிழமை காலை டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் 1213 இல், ஆர்லாண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு புறப்படுவதற்கு முன்பு விமானத்தின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர். இதையடுத்து விமா…
-
- 0 replies
- 312 views
-
-
Published By: RAJEEBAN 06 APR, 2025 | 11:48 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் சனிக்கிழமை பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். டிரம்ப் நாட்டை நிர்வகிக்கும் முறை குறித்து சீற்றமடைந்துள்ள மக்களே இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் இவை என கார்டியன் தெரிவித்துள்ளது. தலையிடவேண்டாம் என்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள கார்டியன் 1200 இடங்களில் டிரம்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட குழுக்கள் இதில் கலந்துகொண்ட…
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
ஈஸ்டர் பண்டிகை; ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் போர் நிறுத்த அறிவிப்பு! ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் ஒரு நாள் திடீர் போர் நிறுத்தத்தை நேற்றைய தினம் அறிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு படி, 30 மணி நேர போர் நிறுத்தம் மொஸ்கோ நேரப்படி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணி வரை அமுலில் இருக்கும். எனினும், போர் நிறுத்தத்தின் போது, “எந்தவொரு சாத்தியமான மீறல்களுக்கும்” பதிலளிக்க ரஷ்யப் படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் புட்டின் கூறியுள்ளார். ரஷ்யாவும், உக்ரேனும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு இருப்பதைக் காட்டாவிட்டால், சில நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகளை கைவிடலாம் என்ற அமெரிக்காவின் அறிவிப்பைத் த…
-
- 0 replies
- 207 views
-
-
18 APR, 2025 | 04:52 PM ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில் இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விலகிவிடுவார் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய உக்ரேனிய தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய மார்கோ ரூபியோ “இந்த முயற்சியை வாரக்கணக்கிலோ மாதக்கணக்கிலோ தொடர நாங்கள் விரும்பவில்லை. நாம் இப்போது மிக விரைவாக தீர்மானிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்குள் இது சாத்தியமாகுமா இல்லையா என்பது குறித்து சில நாட்களில் நான் பேசுகிறேன். ட்ரம்ப் இவ்விஷயத்தில் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளார். ஏனெனில் இதற்காக அவர் நிறைய நேர…
-
-
- 3 replies
- 473 views
- 1 follower
-
-
ஏமன் எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு! ஹவுத்தி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 126 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் வழங்கும் இந்த மூலத்தை அகற்றவும், அவர்களின் சட்டவிரோத வருவாயை இழக்கச் செய்யவும் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. எனினும், வடமேற்கு ஏமனை ஆளும் ஹவுத்தி தலைமையிலான அரசாங்கம், அந்த முனையம் ஒரு பொதுமக்களை கொண்ட பகுதி என்றும், அந்தத் தாக்குதல் “முழும…
-
- 1 reply
- 266 views
- 1 follower
-
-
அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட உக்ரேனின் கனிம ஒப்பந்தம்! உக்ரேனில் கனிம வளங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஆரம்ப படியாக, கெய்வ் மற்றும் வொஷிங்டன் வியாழக்கிழமை (17) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். இயற்கை வளங்கள் தொடர்பான ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாடுகளும் கடந்த பெப்ரவரியில் தயாராக இருந்தபோதிலும், ட்ரம்பிற்கும் உக்ரேனிய தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான ஓவல் அலுவலக சந்திப்பு குழப்பமாக மாறியதால் அது தாமதமானது. இந்த நிலையில் குறித்த ஒப்பந்தம் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள உக்ரேனின் முதல் துணைப் பிரதமரும் …
-
- 0 replies
- 233 views
-
-
இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை நிராகரித்தது ஹமாஸ் இஸ்ரேல் முன்மொழிந்த இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் உத்தியோகப்பூர்வமாக நிராகரித்துள்ளது. பாலஸ்தீனத்துடன் 45 நாட்களுக்கான போர் நிறுத்த திட்டத்தை முன்மொழிந்த இஸ்ரேல், 10 பணயக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இணங்கியது. எனினும் இவ்வாறான பகுதியளவான போர்நிறுத்த ஒப்பந்தங்களை தாங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும், அவை பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கானவை என்றும் ஹமாஸின் பிரதானப் பேச்சாளர் காலில் அல் ஹய்யா தெரிவித்துள்ளார். தாங்கள் நிறைவானதும், முழுமையானதுமான போர் நிறுத்த ஏற்பாட்டையே எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.hirunews.lk/tamil/403155/இடைக்கால-போர்-நிறுத்தத்-திட…
-
- 0 replies
- 275 views
-
-
தாலிபான் மீதான தடையை நீக்கிய ரஷ்யா! இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்பட்ட ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் மீதான தடையை ரஷ்யாவின் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (17) நீக்கியது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து 2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ரஷ்யாவில் ஒரு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. நாட்டின் மீது அதன் கட்டுப்பாடு இருந்தபோதிலும், மனித உரிமைகள், நிர்வாகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சர்வதேச உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதால், தாலிபான் தலைமையிலான நிர்வாகம் எந்த நாடும் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில், ரஷ்ய நீதிமன்றத்தின் மே…
-
- 0 replies
- 290 views
-
-
புளோரிடா பல்கலையில் பொலிஸ் அதிகாரியின் மகன் மேற்கொண்ட துப்பாக்கிச் துப்பாக்கி சூடு. புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் (FSU) ஒரு பொலிஸ் அதிகாரியின் மகன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஆறு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிதாரி என்று கூறப்படும் 20 வயதுடைய FSU மாணவர் பீனிக்ஸ் இக்னர், மாநிலத் தலைநகரான டல்லாஹஸ்ஸியில் உள்ள மாணவர் சங்கக் கட்டிடத்திற்கு அருகில் மதிய உணவு நேரத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளார். பின்னர், சந்தேக நபர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கிச…
-
- 0 replies
- 283 views
-
-
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை! பணமோசடி வழக்கில் பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா ஹுமாலாவுக்கு (Ollanta Humala) 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 62 வயதான ஒல்லாண்டா ஹுமாலா, கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது ஹுமாலாவின் தேசிய ஜனநாயக கட்சியானது தேர்தல் பிரசாரத்துக்காக அப்போதைய வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேசிடம் இருந்து இலங்கை மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் வரை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் பெருவின் ஓடெபிரெக்டிட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்தும் நன்கொடை பெற்றதாக கூறப்ப…
-
- 0 replies
- 178 views
-
-
சீனா மீது மீண்டும் 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா! அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் சீனாவின் இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது. நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீன இறக்குமதிக்கான வரியை 145 சதவீதத்தில் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அறிவித்துள்ளது. பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான ‘உலகின் அரிய மண் தாதுக்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. தனது உற்…
-
-
- 6 replies
- 388 views
-
-
17 APR, 2025 | 10:38 AM அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் உணரப்படும் என சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வொங் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது புதியவரிகளை இடைநிறுத்திவைத்துள்ளமை குறித்து சிறிதும் நிம்மதிபெருமூச்சு விடமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவின் அறிவிப்புகள் ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக போரினால் இரண்டு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் முற்றாக நின்றுபோகும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இதனால் ஏற்படும் மிக மோசமான பாதிப்பினை அந்த இரு நாடுகளும் மாத்திரம் அனுபவிக்கப்போவதில்லை முழு உலகமும்…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்காவை சீரழித்துவிட்டார் ட்ரம்ப் – பைடன் குற்றச்சாட்டு. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். குறிப்பாக ட்ரம்ப் அண்மையில் விதித்த புதிய வரிக்கொள்கை உலகநாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தமது ஆட்சிக்காலம் நிறைவடைந்த பின்னர் முதல் முறையாக முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போது ” ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தை டொனால்ட் ட்ரம்ப் சீரழித்து விட்டார்” என ஜோ பைடன் விமர்சித்துள்ளார். அத்துடன் அவசர அவசரமாக ட்ரம்ப் கொண்டுவந்த மாற்றங்களால், அமெரிக்கர்களுக்கு கிடைக்கப்…
-
- 0 replies
- 358 views
-
-
ஈரானின் அணு ஆயுதம் குறித்து ஐ.நா. எச்சரிக்கை! ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் க்ரோஸி (Rafael Grossi) எச்சரித்துள்ளார். நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் குறித்து ஈரானிய அதிகாரிகளுடன் முக்கியமான விவாதங்களுக்காக அவர் தெஹ்ரானுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த அறிக்கை வந்துள்ளது. பிரான்ஸ் செய்திச் சேவையான லு மொண்டேவிடம் பேசும் போது க்ரோஸி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து, ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்துடன் அதன் இணக்கத்தை கண்காணிக்கும் பணியை…
-
- 0 replies
- 191 views
-
-
படக்குறிப்பு,நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும், தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டியில் சிப்கள் ஒரு முக்கியப் போர்க்களமாகவே உள்ளன. கட்டுரை தகவல் எழுதியவர், சுரஞ்சனா திவாரி பதவி, 16 ஏப்ரல் 2025 பல ஆண்டுகளாக அமெரிக்கா சிப் உற்பத்தியை "தவற விட்டுவிட்டது" . இதன் காரணமாக சீனா மற்றும் பிற ஆசிய நாடுகள் வேகமாக முன்னேறத் தொடங்கின. அப்போது அமெரிக்க வர்த்தகச் செயலாளராக இருந்த ஜினா ரைமண்டோ, 2021 இல் எனக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும், தொழில்நுட்ப மேலாதிக்கத்துக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டியில் சிப்கள் ஒரு முக்கிய போர்க்களமாகவே உள்ளன. இந்நிலையில், பிற நாடுகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து, …
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,AP கட்டுரை தகவல் எழுதியவர், ரஃபி பெர்க் பதவி, பிபிசி செய்திகள் 15 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 16 ஏப்ரல் 2025 இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்காவும் இரானும் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 19) முதல் பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளன. 2018 ஆம் ஆண்டு இரான் மற்றும் உலக வல்லரசு நாடுகள் இடையிலான முந்தைய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் டொனால்ட் டிரம்ப். மேலும் அந்நாடுகள் மீது பொருளாதார தடைகளை அமல்படுத்தினார். இது இரானை கோபப்படுத்தியது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை என்றால் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க ஏன் அனுமதியில்ல…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
G "பெண் என்பவர் யார்!" திருநங்கை தொடர்பான வழக்கில் பிரிட்டன் சுப்ரீம் கோர்ட் வழங்கிய முக்கிய தீர்ப்பு VigneshkumarUpdated: Wednesday, April 16, 2025, 17:16 [IST] லண்டன்: சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கு பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதாவது பாலின அறுவை சிகிச்சை மேற்கொண்ட திருநங்கைகளைப் பெண்களாகக் கருத முடியுமா என்பதே வழக்காகும். இந்த வழக்கில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் எனத் தீர்ப்பளித்த பிரிட்டன் நீதிமன்றம், அதேநேரம் பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் எனத் தீர்ப்பளித்துள்ளது. பிரிட்டன் நீதிமன்றம் அதாவது பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர் மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் என்று …
-
- 0 replies
- 236 views
-
-
வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது April 16, 2025 12:27 pm சீனா மீது கடும் வரிகளை விதித்து வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்காவிற்கு எதிராக சீனா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க நிறுவனமான போயிங் தயாரித்துள்ள விமானங்களை சீன விமான நிறுவனங்கள் வாங்கக்கூடாது என்று சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. விமானங்களைத் தவிர, விமான பாகங்கள் மற்றும் கூறுகளும் விலை அதிகமாகியுள்ளது. முன்னதாக சீனாவின் ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகியவை 2025 மற்றும் 2027 க்கு இடையில் 179 போயிங் விமானங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த விமானங்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையை தடையைத் தொடர்ந்து, சீன நிறுவனங்கள் ஐ…
-
- 0 replies
- 316 views
-
-
பட மூலாதாரம்,X.COM/DRDO_INDIA/STATUS படக்குறிப்பு,இந்தியா லேசரால் இயக்கப்படும் ஆயுதத்தை சோதித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யார்லகடா பதவி, பிபிசி நிருபர் 15 ஏப்ரல் 2025, 08:16 GMT பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்று சந்தேகிக்கப்படும் டிரோன்கள் மற்றும் எதிரி நாட்டு ஏவுகணைகளை அழிக்க லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தச் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஏப்ரல் 13-ஆம் தேதி ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே உள்ள தேசிய திறந்தவெளி சோதனைத் தளத்தில் நடத்தியது. எதிர்காலத்தின் "மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்"(ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்பம்) என்று அழைக்கப்படும் ல…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ரெபெக்கா மொரெல்லே & அலிசன் ஃபிரான்சிஸ் பதவி, 9 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டானிக் கப்பல் குறித்து முழுமையான டிஜிட்டல் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான பகுப்பாய்வு, அழிந்த அக்கப்பலின் இறுதி மணித்துளிகள் பற்றி புதிய விவரங்களை அளித்துள்ளது. 1912 ஆம் ஆண்டில் பனிப்பாறையில் மோதிய பின்னர் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது, அந்த கப்பல் எவ்வாறு இரண்டாகக் உடைந்தது என்பதைக் காட்டும் முப்பரிமாண படம், அந்த பேரழிவில் 1,500 பயணிகள் உயிரிழந்ததை வெளிப்படுத்துகின்றது. டைட்டானிக் கப்பலில் இருந்த கொதிகலன் அறையின் புதிய காட்சி ஒன்றையும் இந்த ஸ்கேன் வெளிப்படுத்துகிறது. கப்பலின் விளக்குகளை தொடர்ந்த…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-