Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அவுஸ்ரேலியாவை கண்டுபிடித்தவரின் கல்லறை லண்டனில் கண்டுபிடிப்பு! அவுஸ்ரேலிய கண்டத்தினை முதன்முதலில் கண்டுபிடித்தவரின் கல்லறை லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனின் யூஸ்டன் (Euston) ரயில் நிலையத்திற்கு அருகே இந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலிய கண்டத்தினை முதன்முதலில் கண்டுபிடித்த பிரித்தானிய கடற்படைத் தளபதியான மத்யூ ஃப்ளிண்டர்ஸ் (Matthew Flinders) இன் கல்லறையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் 1814ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டிருந்தார். இறப்பதற்கு முன்னர் அவர் அவுஸ்ரேலியாவில் 1802ஆம் ஆண்டு முதல் 1803ஆம் ஆண்டுவரை பல்வேறு ஆய்வுகளையும் முன்னெடுத்திருந்தார். பிரித்தானிய கடற்ப…

    • 3 replies
    • 764 views
  2. பிலிப்பைன்சில் தேவாலயம் – இராணுவ முகாமை குறிவைத்து குண்டு வெடிப்புகள் – 19 பேர் பலி – 48 பேர் காயம் January 27, 2019 தெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோ தீவில் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் இராணுவ முகாமை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்றையதினம் தெற்கு பிலிப்பைன்சில் உள்ள ஜோலோ தீவிலுள்ள ரோமன் கத்தோலிக் தேவாலயத்திற்கு அருகில் முதல் குண்டு வெடித்ததாகவும் சிறிது நேரம் கழித்து இராணுவத்தினர் தங்கியிருந்த முகாம் அருகில் மற்றொரு குண்டு வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என 19 பேர் உயிரிழந்துள்ளடன் 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குண்டு வெடி…

  3. பிரேசிலில் அணை உடைவு – 7 பேர் பலி – 150 பேரை காணவில்லை January 26, 2019 பிரேசிலில் அணை ஒன்று உடைந்துள்ளமையினால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் 150 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் புரு மாடின்கோ நகரத்தின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கத்தில் ஒரு அணை பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அந்த அணை உடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதில் இருந்த தண்ணீரும், சேறும் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியதனால் சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் 150 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல…

  4. வெனிசூலா நெருக்கடி ; சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு ஆபத்தான தலையீடாக இருக்கக்கூடாது வெனிசூலா மக்களுக்கு இன்று ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவும் தேவையில்லை ; தறிகெட்ட அமெரிக்கத் தலையீடும் தேவையில்லை. தீவிரமடைந்துவரும் பாரதூரமான அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் பிடியில் அந்த நாடு சிக்கித்தவிக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள். 30 இலட்சத்துக்கும் ( சனத்தொகையில் 10 வீதமானோர்) அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். எஞ்சியிருப்பவர்களில் சுமார் 90 சதவீதமானவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். பொருளாதாரம் விரைவாக சுருங்கிக்கொண்டுபோகிறது. மட்டுமீறிய பணவீக்கம் இவ்வருடம் 10,000,000 சதவீதத்தை எட்டக்கூடும் என்று சர்வதேச நாண…

  5. அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வருகிறது- தற்காலிக ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றார்… January 26, 2019 அமெரிக்க வரலாற்றில் மிகவும் நீண்டநாள் நடந்த அரசு முடக்கத்தை தற்காலிகமாக நிறுத்த அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார் 35 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு, பெடரல் பணியாளர்களுக்கு மூன்று வார பொருளாதார தேவையை நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், அவர் கோரி வந்த அமெரிக்கா- மெக்சிகோ இடையிலான சுவர் எழுப்புவதற்கான எந்த நிதியும் இந்த ஒப்பந்தத்தில் வழங்கப்படவில்லை. தனது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய விடயமாக சுட்டிக்காட்டிய இந்த சுவர் கட்டுவதற்கான நிதியை ($5.7பில்லியன்) அளிக்காத …

  6. படத்தின் காப்புரிமை Getty Images தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுத்தால், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தான் கருத்தில் கொள்ள போவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவைடோ தெரிவித்துள்ளார். புதன்கிழமையன்று தன்னை வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட குவான் குவைடோ, நாட்டில் தற்போது நிலவிவரும் குழப்பம் மற்றும் நிலையில்லா தன்மையை முடிவுக்கு கொண்டுவர ராணுவம் உள்பட நாட்டின் அனைத்து துறைகள் மற்றும் அமைப்புகளையும் தான் அணுகவுள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்தார். …

  7. அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத கடுமையான வெப்பக்காற்று : January 25, 2019 அவுஸ்திரேலியாவில் வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக இருப்பதால் மக்கள் பலவிதமான வெப்ப நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்கு கடும் வெப்பம் நிலவுகிறது எனவும் அடிலெய்ட் வடக்கு பகுதியில் நேற்று 49.5 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இது 1939-ம் ஆண்டில் பதிவான வெப்பத்தை விட அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அதேவேளை இதே நிலை தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள 13 நகரங்களில் நிலவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக உள்ளதனால் பலவிதமான வெப…

    • 1 reply
    • 1.2k views
  8. வெனிசுலாவில் சபாநாயகர் தன்னை தற்காலிக ஜனாதிபதியாக பிரகடனம் : January 24, 2019 Venezuela’s National Assembly head Juan Guaido waves to the crowd during a mass opposition rally against leader Nicolas Maduro in which he declared himself the country’s “acting president”, on the anniversary of a 1958 uprising that overthrew military dictatorship, in Caracas on January 23, 2019. – “I swear to formally assume the national executive powers as acting president of Venezuela to end the usurpation, (install) a transitional government and hold free elections,” said Guaido as thousands of supporters cheered. Moments earlier, the loyalist-dominated Supreme Court or…

  9. உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது! உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Y&R’s BAV மற்றும் Wharton ஆகியவற்றுடன் அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை இணைந்து நடத்திய இதுதொடர்பான ஆய்வின் நிறைவில், குறித்த பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா, ஆபிரிக்க உள்ளிட்ட 80 நாடுகளிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 65 விடயங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளி வழங்குமாறு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை, கலாச்சார தாக்கம், முயற்சியான்மை, மரபுரிமைகள், வர்த்தகம், மின்வலு எரிசக்தி மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்…

  10. படத்தின் காப்புரிமை AFP Image caption திடீரென பதவி விலகிய மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே முன்னெப்போதும் இல்லாத வகையில் திடீரென மலேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் பதவி விலகியதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய மன்னரை தேர்ந்தெடுக்க அரச குடும்பத்தினர் வாக்களிக்க உள்ளனர். பொதுவாக ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை யாங் டி- பெர்துவன் அகாங் என்று அழைக்கப்படும் ஒரு புதிய ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் மன்னராக பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில், மலேசிய வரலாற்றில் முதல்முறையாக மன…

  11. படத்தின் காப்புரிமை Getty Images நாடு முழுக்க இஸ்மியர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அரசியல் பிரச்சாரத்தை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்லாத்தை `சீனமயமாக்கும்' முயற்சியின் - இஸ்லாமிய நம்பிக்கையை அதிக `சீன சார்பானதாக' ஆக்கும் - புதிய ஐந்தாண்டுத் திட்டம் இறுதி செய்யப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துகளுக்கு ஒத்திசைவு கொண்டதாக அதை மாற்றுவது என்பது இதன் அர்த்தமாகும். ஐந்தாண்டுத் திட்டம் குறித்த செய்தி - விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை - வரைவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு ஜனவரி 6 மற்றும் 7 ஆம் தேதி நட…

  12. அமெரிக்க வங்கியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி January 24, 2019 அமெரிக்காவில் வங்கி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோக தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள செப்ரிங் பகுதியில், இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் 21 வயதுடைய செப்ரிங் பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கையின் படி, அமெரிக்காவில் 2017-ம் ஆண்டில் சுமார் 40…

  13. 2019 ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியல் வெளியானது! 2019ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீசா இன்றி எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் இந்த புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜப்பான் கடவுச்சீட்டு பெற்றுள்ளது. ஜப்பான் கட்வுச்சீட்டினை பயன்படுத்தி 190 நாடுகளுக்கு வீசா இன்றி சென்றுவர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் தென்கொரிய கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி 189 நாடுகளுக்குச் சென்று வர முடி…

  14. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கமலா ஹாரிஸ் 2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் குதிப்பதாக அறிவித்துள்ளார் சென்னையைப் பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ். 2016ல் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, அம் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக முன்னதாக பதவி வகித்தவர். 54 வயதாகும் கமலா, அதிபர் டொனால்டு டிரம்பை தீவிரமாக விமர்சிப்பவர். ஜனநாயகக் கட்சிக்குள் வளர்ந்துவரும் நட்சத்திரமாக கூறப்படுகிறவர். …

  15. அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி – நான்கு பேர் கைது…. January 23, 2019 அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதாக தெரிவித்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் வாழும் ஒரு சிறிய இஸ்லாமிய சமூகத்தை தாக்குவதற்காக திட்டம் தீட்டி குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்கள் மற்றும் 16 வயதுச் சிறுவன் ஒருவர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், வீட்டிலே தயாரிக்கும் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். 1980 களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மதகுரு ஒருவரால் உருவாக்கப்பட்ட இஸ்லாம்பெர்க்கை தாக்குவதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்ததாக குற்றம் சுமத்…

  16. 9000 அகதிகளை நாடு கடத்தியது ஜேர்மனி! கடந்த ஆண்டில் மாத்திரம் 9000 அகதிகளை ஜேர்மனி அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனிய பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனியில் ஜனவரிக்கும் நவம்பருக்கும் இடையில் 51,558 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றில் 35,375 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த கோடை காலத்தில் ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Horst Seehofer இத்தாலியையும் கிரீஸையும் அங்கு முதலில் பதிவு செய்த அகதிகளை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியிருந்த நிலையில…

  17. பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அமெரிக்க பாடகர் கைது அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் கிறிஸ் பிரவுண், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 29 வயதான கிறிஸ், பிரான்ஸில் பாரிஸ் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்- உடன் அவரது நண்பர் மற்றும் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டுவிட்டு, விடுதியில் தங்கியிருந்தபோது துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக 24 வயதான யுவதியொருவர் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கடந்த 2009ஆம் ஆண்டு…

  18. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்கக் கூடாது என்ற கோசங்கள் தென்பகுதியில் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ கூறியதை அடுத்து தென்பகுதிப் பேரினவாதசக்திகள் அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு எதிராக கோசம் எழுப்பத் தொடங்கியுள்ளன. இதில் பெளத்த பீடங்களும் இணைந்து கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளும் விடப்பட்டுள்ளன. மிகப்பெரியதொரு யுத்தத்தை நடத்தி தமிழ் மக்களைக் கொன்றொழித்த பின்பும் சிங்களப் பேரினவாதத்தின் இனவாதப் பசி அடங்கவில்லை என்பது தெரிகிறது. ஆக, சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து சென்று தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியுமென்று யார் நினைத்தாலும் அந்தச் சிந…

  19. வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு நேற்று முன்தினம் 20ஆம் திகதி கூடியது. புதிய கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் என்ற வகையிலும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொறுப்பு வாய்ந்த பதவிகளை அறிவிக்கப்படுகின்ற கூட்டம் என்பதாலும் அதன் மீதான பார்வை அந்தக் கட்சி தொடர்பான கணிப்பை அளவிடுவதற்கு உதவுகின்றது. இந்த வகையில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியில் ஒரு சிலர் அதிகாரம் செலுத்துகின்ற சிலர் உரிமைத்தன்மை அறவே இல்லை எனலாம். இது அந்தக் கட்சி தமிழ் மக்களுக்கு ந…

  20. அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் Tweet அ-அ+ அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய வெள்ளைக்கார வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். #Racistattack நியூயார்க்: அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் ஹர்விந்தர்சிங் டாட் என்ற சீக்கியர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அங்குள்ள ஒரு கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு ஆண்ட்ரூ ராம்சே என்ற 24 வயது வெள்ளைக்கார வாலிபர் வந்தார். அவரிடம் சிகரெட்…

    • 0 replies
    • 461 views
  21. பிரித்தானியாவிற்கு ஆலோசனை வழங்கப் போவதில்லை: ஜேர்மன் நாம் பிரித்தானியாவிற்கு ஆலோசனை வழங்க விரும்பவில்லை. ஆனால், குடிமக்கள் தொடர்பாக பொறுப்புடன் செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாக ஜேர்மன் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிற் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அனைவரும் விரும்புவார்களாயின் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்த்துக் கொள்ளலாம். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானோர் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை விரும்பவில்லை. ஆக்கபூர்வமான, முறையான பிரெக்ஸிற்றையே ஜேர்மனியும் விரும்புகிறது. இது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை பிரித்தானிய அரசாங்கமும், நா…

  22. மத்திய தரைக்கடலில் கப்பல்கள் மூழ்கியதில் 170 அகதிகள் உயிரிழப்பு! மத்திய தரைக்கடல் பகுதியில் இரு கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்களில் 170 அகதிகள் உயிரிழந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது. சுமார் 117 அகதிகள் பயணித்த கப்பலொன்று லிபிய கடற்பரப்பில் மூழ்கியதாக இத்தாலியின் கடற்படை தெரிவித்துள்ளது. அதேவேளை மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் அதிகாரிகள் மேற்கு மத்தியதரைக் கடலில் காணாமற்போன கப்பலொன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்றபோது 2200 க்கும்…

  23. தலிபான் தாக்குதலில் 126 ஆப்கான் படையினர் பலி ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலொன்றில் நூற்றிற்கும் மேற்பட்ட ஆப்கான் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மைடன் வர்டாக் பிராந்தியத்தில் உள்ள இராணுவ பயிற்சி முகாமிற்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் காரணமாக 126 பேர்கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன இராணுவசோதனை சாவடி மீது காரை மோதி தாக்குதலை ஆரம்பித்த தீவிரவாதிகள் பின்னர் இராணுவ பயிற்சி தளத்தின் முக்கிய கட்டிடம் மீது மற்றொரு காரை மோதி தாக்குதலை மேற்கொண்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டுதாக்குதல் இடம்பெற்ற பின்னர் உள்ளே நுழைந்த இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தா…

  24. படத்தின் காப்புரிமை JACK GUEZ சிரியாவில் உள்ள இரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு (IDF) கூறியுள்ளது. படத்தின் காப்புரிமை EPA மேலும், இது குறித்து எந்த தகவலையும் இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று சிரியாவில் உள்ள கோலான் மலை பகுதி உச்சியில் உள்ள இலக்குகளில் இருந்து ஏவப்பட்ட ஒரு ராக்கெட்டை தாங்கள் இடைமறித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.