உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27029 topics in this forum
-
பாதுகாப்பு படைப்பிரிவின் பிரதி தலைவியை மணந்தார் தாய்லாந்து மன்னர்! தாய்லாந்து மன்னர் மகா வஜிரலொன்கோர்ன், தனது தனிப்பட்ட பாதுகாப்பு படைப்பிரிவின் பிரதி தலைவியாக செயற்பட்டு வந்த சுதிடாவை திருமணம் செய்து அந்நாட்டின் ராணியாக அறிவித்துள்ளார். தாய்லாந்து மன்னர் குடும்பம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து மன்னர் முடிசூட்டு விழாவுக்கான பணிகள் அந்நாட்டில் கடந்த ஒருமாத காலமாக இடம்பெற்று வருகின்றன. நாளை மறுதினம் முடிசூட்டு விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்த செய்தியை மன்னர் குடும்பம் அறிவித்துள்ளது. 66 வயதான தாய்லாந்து மன்னர் இதற்கு முன்னர் மூன்று முறை திருமணம் செய்…
-
- 0 replies
- 451 views
-
-
அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு அசாஞ் எதிர்ப்பு! அமெரிக்க அரசாங்கத்தின் இராஜாங்க இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு விக்கிலீக்ஸ் இணைநிறுவனர் ஜூலியன் அசாஞ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கடந்த மாதம் ஈக்குவடோர் தூதரகத்தில் கைதுசெய்யப்பட்ட அசாஞ்சுக்கு குறித்த குற்றத்துக்காக நேற்றையதினம் 50 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவது தொடர்பான வழக்கு வெஸ்ட்மின்ஸ்ரர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அசாஞ் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வழக்கு மே மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பலவிருதுகளை வென்…
-
- 0 replies
- 515 views
-
-
ஜூலியன் அசாஞ்சுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈக்குவடோர் தூதரகத்தினுள் நுழைவதற்காக பிணை நிபந்தனைகளை முறியடித்த குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்-இன் வழக்கு இன்று லண்டன் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி பிணை நிபந்தனைகளை முறியடித்த குற்றத்துக்காக ஜூலியன் அசாஞ் லண்டனில் அமைந்துள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் வைத்து மெற்றோபொலிற்ரன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். ஏழு வருடங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுக்காக சுவீடனுக்கு நாடு கடத்தப்படவிருந்த அசாஞ் அரசியல் தஞ்சம் கோரி ஈக்குவடோர் தூதரகத்தினுள் நுழைந்தார். இந்நிலையில் அசாஞ்சின் அரசி…
-
- 1 reply
- 949 views
-
-
முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிட அமெரிக்கா நடவடிக்கை உலகின் மிகவும் செல்வாக்குடைய இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றான முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பணியாற்றி வருகிறது. இதனை வெள்ளை மாளிகை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இச்செயற்பாட்டினால் மத்திய கிழக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட எகிப்தின் பழைமையான இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக பொருளாதார மற்றும் பயண தடைகள் விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபட்டாஹ் அல்-சிசி கடந்த ஏப்ரல் மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிரு…
-
- 0 replies
- 597 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption மௌலானா மசூத் அஸார். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா - மசூத் - அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் இதனை தமது டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். பெரிய நாடுகள், சிறிய நாடுகள் அனைத்தும் இதில் இணைந்…
-
- 0 replies
- 849 views
-
-
நாட்டைவிட்டு வெளியேறும் முடிவிலிருந்து மதுரோ பின்வாங்கல் May 1, 2019 வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ நாட்டைவிட்டு வெளியேறுவதாக எதிர்கட்சிகளிடம் ஒப்பு கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்ததாகவும் எனினும் அவர் பின்னர் பின்வாங்கிவிட்டார் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெனிசுவேலாவில் காணப்படும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ பல மாதங்களாக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்தநிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ மதுரோவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ராணுவ உதவிகளை நாடிய போதும் ராணுவம் மறுத்துவிட்டது.மதுரோ நாட்டைவிட்டு வெளியேறி கியூபா செல்ல முடிவு செய்திருந்தார் …
-
- 0 replies
- 700 views
-
-
ஜப்பானில் 200 ஆண்டுகளில் பதவி விலகும் முதலாவது பேரரசர் ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி அவர் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) பதவி விலகுவார் என தெரிவிக்கப்படுகிறது. 85 வயதான பேரரசர் தனது வயது மற்றும் உடல்நலக் குறைவு என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது வயது மூப்பின் காரணமாக தினசரி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் உடல்நிலை நலிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் கடந்த இருநூறு ஆண்டுகளில் பதவி விலகும் முதலாவது பேரரசர் இவர் ஆவார். அதற்கமைய அவரது புல்வர் முடிக்குரிய இளவரசர் நறுஹிட்டோ அரியணையை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானில் அரசருக்கு எந்த அரசியல் அதிகாரமும்…
-
- 1 reply
- 549 views
-
-
ஸ்பெயின் தேர்தலில் சோசலிச கட்சி வெற்றி – பெரும்பான்மையை இழந்தது! ஸ்பெயின் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் சோசலிச கட்சி வெற்றியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. எனினும், இத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அக்கட்சி தவறியுள்ளது. பிரதமர் பெட்ரோ சன்செஸின் சோசலிச கட்சி 29 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து ஆட்சியமைக்க வலதுசாரி கட்சி, பிராந்திய கட்சிகள் உள்ளிட்டவற்றின் ஆதரவை பெறவேண்டும். அத்தோடு, கடந்த 1970ஆம் ஆண்டு இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், முதற்தடவையாக இம்முறை வலதுசாரி கட்சியொன்று நாடாளுமன்றத்திற்கு செல்கின்றது. வலதுசாரி கட்சியான வொக்ஸ் கட்சி 10.3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. பன்முக கலாசார வாதம், பெண்ணியம், கட்ட…
-
- 0 replies
- 485 views
-
-
இந்தோனேசியாவில் தேர்தல் பணிச்சுமையால் 272 அரசு பணியாளர்கள் உயிரிழப்பு இந்தோனேசியா நாட்டில் செலவினங்களை குறைப்பதற்காக ஜனாதிபதி பதவி மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு முதல்முறையாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திய பணிச்சுமையால் 272 அரசு பணியாளர்கள் உயிரிழந்தனர். இந்தோனேசியா நாட்டில் தேர்தலுக்காக செய்யப்படும் செலவினங்களை குறைக்கும் நோக்கத்தில் அந்நாட்டின் ஜனாதிபதி பதவி, பாராளுமன்றம் மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த 17 ஆம் திகதியன்று ஒரேநாளில் தேர்தல் நடத்தப்பட்டது சுமார் 26 கோடி மக்கள்தொகை கொண்ட இந்நாட்டில் முதல்முறையாக 3 தேர்தல்களும் ஒருசேர நடத்தப்பட்டன. வாக்களிக்கும் உரிமை கொண்ட 19.3 கோடி மக்களில் 80 சதவீதம் பேர் இந்த தேர்தல்களில் வாக்களித்தனர். ஆன…
-
- 0 replies
- 433 views
-
-
சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! சவுதி அரேபியாவில் பயங்கரவாத வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்தவகையில் குறித்த 37 பேருக்கும் தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபியா நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயங்கரவாத சித்தாந்தத்தை பரப்பியும், பயங்கரவாதிகளாக செயற்பட்டும் வந்த உள்நாட்டினர் 37 பேருக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று தலைகளை வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ht…
-
- 18 replies
- 2.6k views
-
-
வடகொரியாவுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுகிறது April 26, 2019 அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சர்வதேச கட்டமைப்புக்குள் இந்த உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கிம் ஜாங்-உன்னுடன் நிகழ்ந்த முதல் உச்சிமாநாட்டில் புட்டின் இதனைத் தெரிவித்துள்ளார். அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறையை விமர்சித்துள்ள புட்டின் அச்சுறுத்தல்களுக்கு பதிலாக நம்பிக்கையும் மரியாதையையுமே தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை விளாடிமிர் புட்டினுடன் நடைபெற்ற உ…
-
- 0 replies
- 417 views
-
-
இலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை! அத்தியாவசியமான பயணத்தைத் தவிர்த்து இலங்கைக்கு பயணம் செய்வதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு தன்னாட்டு மக்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஞாயிறு ஈஸ்டர் தினமன்று இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின்போது உயிரிழந்தவர்களில் 8 பேர் பிரித்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டவர்கள் விஜயம் செய்யும் இடங்கள் உட்பட மேலும் பல இடங்களில் கூடுதல் தாக்குதல்களை தீவிரவாதிகள் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் இன…
-
- 0 replies
- 521 views
-
-
சமூக வலைத்தளங்கள் மூலமான தீவிரவாதத்தை முறியடிக்கும் திட்டம் நியூஸிலாந்தின் கிறைஸட்சேர்ச் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதல்களின் எழுச்சியாக தீவிரவாதத்தை முன்னெடுப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு நியூஸிலாந்தும் அமெரிக்காவும் தலைமை தாங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிறைஸ்ட்சேர்ச் பிராந்தியத்தில் இரு பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கிதாரியொருவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை தடுப்பது…
-
- 0 replies
- 480 views
-
-
ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் கிம்யொங் உன் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் -உன் தலைமையிலான குழு இந்த வாரம் ரஷ்யாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டக் நகருக்கு செல்லும் மேற்படி குழு அங்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த சந்திப்பு புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு வட கொரிய ஜனாதிபதியாக இருந்த கிம் ஜோங் இல், அப்போது ரஷ்ய ஜனாதிபதியாக இருந்த திமித்ரி மெட்வதேவ் ஆகியோர் முதன் முதலாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதன் பிறகு இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித…
-
- 0 replies
- 540 views
-
-
பெய்ஜிங் , ( சின்ஹுவா) நாடுகள் மத்தியில் அதிகரிக்கின்ற வர்த்தக தற்காப்புவாதம் மற்றும் ஒருதலைப்பட்ச போக்கின் விளைவான குளறுபடிகளுக்கு மத்தியிலும், சீனாவின் மண்டலமும் பாதையும் செயற்திட்டம் ( China's Belt and Road Initiative -- BRI ) வளர்முக நாடுகளினதும் வளர்ச்சியடைந்த நாடுகளினதும் பலமான ஒரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இதுவரையில், 124 நாடுகளும் 29 சர்வதேச அமைப்புக்களும் சீனாவுடன் மண்டலமும் பாதையும் செயற்திட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருக்கின்றன. மண்டலமும் பாதையும் செயற்திட்டத்துடன் தொடர்புபட்ட மூன்றாவது தரப்பு சந்தை ஒத்துழைப்பை சீனாவுடன் சேர்ந்து மேம்படுத்துவதற்கு பிரான்ஸ் இணங்கிக்கொண்டிருக்கும் அதேவேளை, அந்த செயற்திட்டத்தை கூட்டாக முன்னெடுப்பதற்…
-
- 0 replies
- 483 views
-
-
படத்தின் காப்புரிமை Reuters ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்களில் இதுவரை 290 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஈஸ்டர் பண்டிகையின் போது நடக்கும் முதல் தாக்குதல் இதுவல்ல. இதற்கு முன்பே, ஈஸ்டர் பண்டிகையை குறி வைத்து பல்வேறு நாடுகளில், அதாவது பாகிஸ்தான் முதல் யேமன் வரை தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். லாகூர் படத்தின் காப்புரிமை Getty Images …
-
- 0 replies
- 598 views
-
-
உக்ரேன் வரலாற்றில் திருப்பம்: வொலொடிமிர் ஸெலென்ஸ்கி அமோக வெற்றி உக்ரேன் ஜனாதிபதி தேர்தலில் பிரபல நகைச்சுவை நடிகர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி (வயது-41) வெற்றிபெற்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 73 சதவீத பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோ 25 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார். பிரபல தொழிலதிபரான ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோவிற்கு உக்ரேனில் அமோக செல்வாக்கு உள்ளது. எனினும், அரசியலில் எவ்வித அனுபவமும் இல்லாத வொலொடிமிர் ஸெலென்ஸ்கி தேர்தல் களத்தில் பொரொஷென்கோவுக்கு சவாலாக காணப்பட்டார். கடந்த மாதம் 31ஆம்…
-
- 0 replies
- 479 views
-
-
பாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது பிரித்தானியாவில் பாலியல் தளங்கள், ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது. ஜூலை 15 ஆம் திகதி முதல் இத்தகைய காணொளிகளைப் பார்ப்பவர்களின் வயது எல்லை பரிசீலிக்கப்படும் திட்டமானது கடுமையானமுறையில் நடைமுறைக்குவரும் என்று டிஜிட்டல் கலாசாரத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறுவர்களைப் பாதுகாக்கும் சமூகத்திட்டத்தின் அங்கமாக இத்திட்டம் கொண்டுவரப்படுகின்றது. பொருத்தமற்ற உள்ளடக்கத்திலிருந்து சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இலக்காக உள்ளது. ஆபாசத் தளங்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் வயது எல்லையைச் செயற்படுத்த மறுக்கும் தளங்கள் …
-
- 7 replies
- 1.6k views
-
-
டிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு.. April 19, 2019 டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஸ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ரொபர்ட் முல்லரின் 400 பக்க அறிக்கை அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகை வழக்குரைஞரிடம், தலையீடு குறித்து விசாரித்த ரொபர்ட் முல்லரை நீக்கச் சொன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை தம் பதவியை சிறுமைப்படுத்தும் முயற்சி என ஜனாதிபதி டிரம்ப் கருதினாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப…
-
- 0 replies
- 723 views
-
-
பரிஸில் 850 வருடங்கள் பழைமையான கட்டிடத்தில் தீ பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 850 வருடங்கள் பழைமையான குறித்த கட்டிடம் ஐரோப்பிய கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வானுயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், சற்றுமுன்னர் இந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்துவிட்டு எரிந்துவரும் நிலையில், தீயை அணைக்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். தீ ஏற்பட்ட சில நிமிடங்களில் கூரை சரிந்து விழுந்துள்ளது. பின்னர் ஏனைய பகுதிகள் கட்டிம் கட்டிமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. தீ விபத்தினால் பரிஸின் பெரும்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 1…
-
- 14 replies
- 1.7k views
-
-
பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா... தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத் தானே சுட்டுக்கொண்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் குண்டு பாய்ந்துள்ள நிலையில் தலைநகர் லீமாவிலுள்ள காசிமிரோ உல்லோவா மருத்துவமனையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரேசிலியக் கட்டுமான நிறுவனமான Odebrecht இடமிருந்து கையூட்டுப்பெற்றதாக அலன் கார்சியா குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பாக அவரைக் கைதுசெய்ய பொலிஸார் சென்றவேளையிலேயே அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா குறித்த இந்தக…
-
- 1 reply
- 594 views
-
-
புதிய வகையான ஆயுதம் சோதனை, வட கொரியா அறிவித்தது.. April 18, 2019 புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் யில் இது குறித்த தெளிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை எனினும், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாகவும் இந்த சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பின்னர் வட கொரியா மேற்கொண்டுள்ள முதல் ஆயுத பரிசோதனை இதுவென்பது குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 597 views
-
-
போர்த்துக்கல்லில் கோர விபத்து – 28 ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகள் பரிதாப உயிரிழப்பு! போர்த்துக்கல் தீவான மடெய்ரா (Madeira) என்ற தீவில், ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து இன்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடியிருப்புக்கள் உள்ள தாழ்ந்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து அப்பகுதி மேயர் பிலிப் சௌஷா தெரிவிக்கையில், “இந்த கோர விபத்தை என்னால் விபரிக்க முடியவில்லை. இந்த மக்களுடைய துன்பங்களை என்…
-
- 0 replies
- 686 views
-
-
எகிப்தில் ஜனாதிபதியின் பதவி நீடிப்பு சட்ட திருத்தங்களுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் April 17, 2019 எகிப்து ஜனாதிபதி அப்துல் பதா அல்-சீசீ, 2030 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க வழிவகுக்கும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அப்துல் பதா அல்-சீசீயின் இரண்டாவது, நான்காண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டில் முடிவடையவுள்ள நிலையில் இவ்வாறு பதவியில் நீடிக்க வழிவகுக்கும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சட்டத்திருத்தம் அவரின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டு காலமாகவும், அவர் மூன்றாவது முறை போட்டியிடவும் வழிவகை செய்யும் அதேவேளை சட்டத்திருத்தம் குறித்து கருத்து கேட்கும் வாக்கெடு…
-
- 0 replies
- 405 views
-
-
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அதிரடி கைது! ஈக்குவெடார் தூதரகத்திற்குள் புகுந்த லண்டன் போலீஸ் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விக்கிலீக்ஸ் இணையதளத்தில், அமெரிக்காவின் ராணுவம் மற்றும் ராஜாங்க ரகசிய தகவல்கள் பலவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் வெளியிட்ட ஆயிரக்கணக்கான ரகசிய தகவல்கள், அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகள் பலவற்றை அம்பலமாக்கியது. சர்வதேச நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் முகத்திரையை கிழிக்க உதவியது. 2012 முதல் தஞ்சம் இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டில் ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் துன்புறுத்தல் புகார் பதிவு செய்யப்பட்டது. இவரை க…
-
- 11 replies
- 2.3k views
- 1 follower
-