Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸ் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு, 3 பொலிஸார் காயம்! பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள மல்ஹவுஸ் (Mulhouse) நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். 37 வயதான அல்ஜீரிய சந்தேக நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். அத்துடன், தாக்குதல்தாரி கத்திக் குத்தினை மேற்கொள்ளும் போது, “அல்லாஹு அக்பர்” (பெரியவர்) என்று கூச்சலிட்டதாகவும் நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. சந்தேக நபர் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்ததால் நாடு கடத்தும் உத்தரவுக்கு உட்பட்டார் என்று அந் நாட்டு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, “இது இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேக…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஜித் காத்வி பதவி, பிபிசி செய்தியாளர் 22 பிப்ரவரி 2025, 09:44 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தங்கத்தின் விலை தினமும் புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், தங்கம் பெரிய அளவில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதையும் பார்க்க முடிகிறது. லண்டனில் உள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் பெட்டகங்களிலிருந்து பல ஆயிரம் கிலோ தங்கம் தற்போது அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சர்வதேச செய்திகளின்படி, அமெரிக்க தங்க வியாபாரிகள் விமானங்களில் தங்கத்தை நியூயார்க் நகருக்கு எடுத்துச் செல்கின்றனர். இது ஒரு வகையில் லண்டனில் தங்கப் பற்றாக்குறையையும், அமெரிக்காவில் தங்கப் பதுக்கலையும் ஏற்ப…

  3. பிரான்ஸ் ஜனாதிபதியும் பிரித்தானிய பிரதமரும் யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எதுவும் செய்யவில்லை - அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்! பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 'எதனையும் செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அடுத்த வாரம் இரு நாட்டுத் தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்துரைத்த அவர், யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை எனத் தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.…

  4. படக்குறிப்பு, மும்பையில் செயல்படும் ஏவியோ ஃபார்மா எனும் மருந்து உற்பத்தி நிறுவனம், பல்வேறு வணிக பெயர்களில் மாத்திரைகளை தயாரித்து, சட்டபூர்வமான மருந்துகள் போல் தோற்றமளிக்கும் வகையில் அவற்றை உற்பத்தி செய்கின்றன கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி ஐ விசாரணைகள் பதவி, பிபிசி உலக சேவை 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மருந்து நிறுவனம் ஒன்று, உரிமம் பெறாத, தீவிர போதை பழக்கத்துக்கு உள்ளாக்கும் ஓபியாய்டுகளை (ஓபியம் செடியிலிருந்து தயாரிக்கப்படும் வலி நிவாரண மற்றும் சட்ட விரோத மருந்துகள்) தயாரித்து, அவற்றை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து, அங்கு பெரும் பொது சுகாதார நெருக்கடியை உண்டாக்குகிறது என்று பிபிசி ஐ (BBC Eye) நடத்திய புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது. மும…

  5. இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு 21 Feb, 2025 | 12:00 PM இஸ்ரேலில் மூன்று பேருந்துகள் வெடித்துசிதறிய சம்பவத்தின் பின்னர் மேற்குகரையில் இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார். இந்த பேருந்து வெடிப்புகள் காரணமாக எவரும் காயமடையாத அதேவேளை இது பயங்கரவாத தாக்குதலாகயிருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு பாலஸ்தீன எழுச்சியின் போது இவ்வாறான பேருந்து குண்டுவெடிப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. வேறு இரண்டு பேருந்துகளில் காணப்பட்ட வெடிபொருட்கள் வெடிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐந்து குண்டுகளும் ஒரே மாதிரி…

      • Like
      • Haha
    • 6 replies
    • 451 views
  6. உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்க விசேட பிரதிநிதி இணைந்து நடத்தவிருந்த செய்தியாளர் மாநாடு இறுதிநிமிடத்தில் இரத்து 21 Feb, 2025 | 12:54 PM மூன்று வருடகால ரஸ்ய உக்ரைன் யுத்தத்தை எவ்வாறு முடிவிற்கொண்டுவருவது என்பது குறித்த அரசியல் பதற்றம் தீவிரமடைகின்ற அதேவேளை அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் உக்ரைன்ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இடம்பெறவிருந்த செய்தியாளர் மாநாடு இரத்துச்செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசேட பிரதிநிதி கெய்தகெலொக்கும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியும் இணைந்து நடத்தவிருந்த செய்தியாளர் மாநாடே இரத்துசெய்யப்பட்டுள்ளது. இறுதியில் இருவரும் இணைந்து புகைப்படம் மாத்திரம் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அறிக்கைகளை வெளியிடவில…

  7. அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீக்கம்! அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வியாழனன்று (20)உள்நாட்டு வருவாய் சேவையில் சுமார் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது. வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வன ஊழியர்கள், ராக்கெட் விஞ்ஞானிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பிற அரசாங்க ஊழியர்களை குறிவைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெருமளவிலான ஆட்குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியே இந்த பணிநீக்கம் ஆகும். ட்ரம்பின் மிகப்பெரிய பிரச்சார நன்கொடையாளரான தொழில்நுட்ப பில்லியனர் எலோன் மஸ்க் இந்த முயற்சியை வழிநடத்துகிறார். அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவையில் நாடு முழுவதும் சுமார் 100,000 கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிகி…

  8. 200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்! மியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங்கில் வியாழக்கிழமை பிற்பகல் தரையிறங்கியது. சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, தொலைத்தொடர்பு-இணைய மோசடிகளைத் தடுக்க சீனா, தாய்லாந்து மற்றும் மியன்மார் இடையேயான பன்னாட்டு சட்ட அமலாக்க முயற்சிகளில் இது ஒரு மைல்கல் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். தாய்லாந்து-மியன்மார் எல்லைப் பகுதியில் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட சீன சந்தேக நபர்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் வாடகை விமானங்களில் ஜியா…

  9. பணயக்கைதி விடுவிப்பில் இஸ்ரேலின் கோபத்தை மீண்டும் தூண்டிய ஹமாஸ்! காசாவில் இருந்து வியாழக்கிழமை (20) இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு சடலங்களில் ஒன்று ஹமாஸ் முன்னதாக கூறியது போல் பெண் பணயக்கைதியான ஷிரி பிபாஸ் (Shiri Bibas) அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 33 வயதான ஷிரி பிபாஸ் மற்றும் கைக்குழந்தை உட்பட அவரது மகன்களான ஏரியல் மற்றும் கஃபிர் காசாவில் பணயக்கைதிகளான சிறைபிடிக்கப்பட்டிருந்த போது இறந்து விட்டனர் என்று செய்தி இஸ்ரேலில் சோகத்தில் ஆழ்த்தியது. தடயவியல் சான்றுகள், உளவுத்துறை தகவலின்படி, இரண்டு குழந்தைகளும் நவம்பர் 2023 இல் பயங்கரவாதிகளால் “கொடூரமாக கொல்லப்பட்டனர்” இஸ்ரேலிய இராணுவம் மதிப்பிட்டுள்ளது. அவர்கள் கொல்லப்படும் போது ஏரியலு 4 வயது, கஃபி…

  10. Published By: RAJEEBAN 19 FEB, 2025 | 03:07 PM அமெரிக்காவின் கோடீஸ்வரர் எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றார் என குற்றம்சாட்டியுள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஸ்டி அவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார். வெளிப்படையாக கருத்துதெரிவிப்பவரும் கொலைமுயற்சியிலிருந்து உயிர் தப்பியவருமான சல்மான் ருஸ்டி கருத்து சுதந்திரம் தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். மஸ்க்கின் எக்ஸ் தளம் உண்மையாகவே கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றதா என்ற கேள்விக்கு எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு பதில் அதற்கு ஊறு விளைவிக்கின்றார் என சல்மான் ருஸ்டி கருத்து வெளியிட்டுள்ளார். தீவிர வலதுசாரிகளிற்கு…

  11. டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு! இந்த வாரம் டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக அமெரிக்க விமான நிறுவனம் புதன்கிழமை (19) அறிவித்துள்ளது. எனினும், பயணிகள் தங்களுக்கான இழப்பீடுகளை எவ்வாறு கோரலாம் என்பது உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை. விமானத்தில் பயணித்த 76 பயணிகளும் டெல்டாவிடம் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள சலுகையைப் பெற்றால், அது விமான நிறுவனத்துக்கு மொத்தம் $2.3 மில்லியனுக்கும் மேலான செலவாக அமையும். கடந்த திங்களன்று (19) அமெரிக்காவின் மினியாபோலிஸ், மினசோட்டாவில் இருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், டொராண்டோவின் பிரதான விமான நிலையத்தில் தரையிரங்கும் போது, ஓடுபா…

  12. அமெரிக்காவின் நாடு கடத்தல்; பனாமாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் உட்பட சுமார் 300 பேர்! அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சுமார் 300 சட்டவிரோத குடியேறிகள் தற்போது பனாமா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆவணமற்ற வெளிநாட்டினருக்கு எதிரான பாரிய அடக்குமுறையின் ஒரு பகுதியாக இவர்கள் பனாமாவின் தலைநகரில் அமைந்துள்ள Decápolis என்ற சொகுசு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளுக்காகக் காத்திருக்கும் போது, இந்த நபர்கள் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் ச…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய-யுக்ரேன் போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியமாவதற்கான சமிக்ஞைகள் எதுவும் இல்லை. கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யர்களும் அமெரிக்கர்களும் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளனர். (யுக்ரேன்- ரஷ்யா போர் நிறுத்தம் குறித்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சௌதி அரேபியாவில் நடைபெற்றன). யுக்ரேனுக்கும், அமெரிக்காவின் மேற்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை, அட்லாண்டிக் பிராந்திய கூட்டணியில் சரி செய்ய முடியாத விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. யுக்ரேன்: அமெரிக்கா - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைய…

  14. அவுஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கிய 150க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்! அவுஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவில் உள்ள ஒரு கடற்கரை பகுதியில் 150 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரையொதுங்கிய நிலையில் சிக்கித் தவிக்கின்றன. கடந்த 48 மணி நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் டஜன் கணக்கான டொல்பின்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், புதன்கிழமை (19) காலை நிலவரப்படி சுமார் 90 டொல்பின்கள் மாத்திரமே தற்சமயம் உயிருடன் உள்ள நிலையில், அவற்றை காப்பாற்றும் பணிகளில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சிக்கித் தவிக்கும் டொல்பின்கள் பொய் கொலைத் திமிங்கலம் (false killer whales) என்று நம்பப்படுகிறது, டாஸ்மேனியாவின் இந்தப் பகுதியில் 50 ஆண்டுகளில் இது போன்ற திம…

  15. Published By: RAJEEBAN 19 FEB, 2025 | 10:36 AM ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதியை தான் சந்திக்ககூடும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். சவுதிஅரேபியாவில் அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் ரஸ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனிற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான திறமையும் அதிகாரமும் என்னிடம் இருப…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரேச்சல் லூக்கர், லில்லி ஜமாலி பதவி, 17 பிப்ரவரி 2025 ஈலோன் மஸ்கின் பிள்ளைகள் சென்றுள்ள இடங்களை பலரும் பார்க்கவே போவதில்லை. வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பு முதல் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவும் கட்டுப்பாட்டு அறை வரை, மஸ்கின் குழந்தைகள் – தொழில்நுட்பம், தொழில், இப்போது அரசியலிலும் - தங்கள் தந்தையின் முன்னெடுப்புகளில் எப்போதும் உடன் இருந்திருக்கின்றனர். அமெரிக்க அரசில் புதிதாக உருவாக்கப்பட்ட துறைக்கு தலைமையேற்க தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரரும் டெஸ்லா இணை நிறுவனருமான மஸ்கை அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்த பின்னர், மஸ்கின் குழந்தைகள் தலைநகரில் அடிக்கடி தோன்றியிருக்கின்றனர். மஸ்கின் 4 வயது மகன் "லில் எக்ஸ்", கோட் மற்றும் காலர்…

  17. உக்ரேன் போர்; ரியாத்தில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த ரஷ்ய – அமெரிக்க அதிகாரிகள்! ரஷ்யா – அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் செவ்வாயன்று (18) சவுதி அரேபியாவில் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள திரியா அரண்மனையில் கூடிய தூதுக்குழுக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரும் தலைமை தாங்கினர். ரூபியோவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோரும் உடனிருந்தனர். அதேநேரத்தில், லாவ்ரோவ் கிரெம்ளினின் ரஷ்யாவின் வெளியுறவு ஆலோசகர் யூரி…

  18. அணு ஆயுத திட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு! பணியில் இருந்து நீக்கிய நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுதத் திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாகக் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் அரசின் செலவினத்தை குறைக்கும் வகையில் அண்மையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை திடீரென கடந்த வாரம் பணியில் இருந்து நீக்கி ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு பணியிலிருந்து நிறுத்தப்பட்டோரில், 30 சதவீதத்திற்கும் அதிகமானோர், டெக்சாஸ் மாகாணத்தின் அமரில்லோ நகருக்கு அருகில் உள்ள,…

  19. டெல்டா சிஆர்ஜே900 என்ற விமானம் மினியாபோலிஸிலிருந்து வந்து கொண்டிருந்தபோது, தரையிறங்கியவுடன் தலைகீழாக கவிழ்ந்து, அதன் கூரையில் வந்து நின்றது. பனிமூட்டம் நிறைந்த ஓடுபாதையில் இந்த விபத்து நிகழ்ந்தது, சம்பவத்தை அடுத்து விமானம் புகை மண்டலத்தில் மூழ்கியது. படுகாயமடைந்த ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் டொராண்டோவில் உள்ள SickKids மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விமான ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் உட்பட அவசர குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் கணக்கிடப்பட்டனர், மேலும் உயிரிழப்பு எதுவும் இல்லை. விபத்தைத் தொடர்ந்து, டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது, இதனா…

  20. Published By: RAJEEBAN 17 FEB, 2025 | 10:38 AM உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ் படையினரை போர்களத்திற்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார். சமாதான உடன்படிக்கையின் படி உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ்படையினரை பயன்படுத்துவதற்கு நான் தயாராகவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதி எதிர்காலத்தில் மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது அவசியம் என பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் எமது படையினரை அனுப்புவதன் மூலம் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நான் தயார், நான் இதனை சாதாரணமாக தெரிவிக்கவில்லை என ஒப்சேவரில் எழுதியுள்…

  21. உக்ரேன் போர்; ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்காக சவுதி அரேபியா சென்றடைந்த அமெரிக்க அதிகாரி! உக்ரேனில் மொஸ்கோவின் ஏறக்குறைய மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்ய அதிகாரிகளுடன் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திங்களன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் பேசி, போர் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பலமுறை சபதம் செய்ததை அடுத்து இந்த பேச்சுவார்த்தைகள் வந்துள்ளன. காசா பகுதியின் …

  22. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சிங்கப்பூர் அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில் ப்ரீதம் சிங் வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங், நாடாளுமன்றக் குழுவின் முன் சத்தியப்பிராமணம் செய்த போது பொய் கூறியுள்ளார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரீதம் சிங் மீதான குற்றச்சாட்டுகள், அவர் தனது கட்சியின் முன்னாள் உறுப்பினரான ரயீசா கானை எப்படி எதிர்கொண்டார் என்பதுடன் தொடர்புடையது. முன்னதாக, வேறு ஒரு விவகாரத்தில் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் கூறியிருந்தார். சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரிதம் சிங் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, சிங்கப்பூர் அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரு…

  23. அமெரிக்காவில் பெய்த கன மழையால் 9 பேர் உயிரிழப்பு! தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியதால், வார இறுதியில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர். கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தனது மாநிலத்தில் எட்டு பேர் இறந்துவிட்டதாகக் ஞாயிற்றுக்கிழமை கூறியதுடன், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்தார். வெள்ள நீரில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்கள், பலர் தங்கள் வாகனங்களில் சிக்கிக் கொண்டனர். கென்டக்கி, ஜார்ஜியா, அலபாமா, மிசிசிப்பி, டென்னசி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா மற்றும் வட கரோலினா ஆகியவை இந்த வார இறுதியில் புயல் தொடர்பான எச்சரிக்கையில் உள்ளன. ஏறக்குறைய அந்த மாநிலங்கள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் ஹெலீன் …

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் 16 பிப்ரவரி 2025, 14:32 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். மறுபுறம், ஐரோப்பிய தலைவர்கள் நாளை பாரிஸில் அவசர உச்சி மாநாட்டில் ஒன்றுகூடி இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கத் திட்டமிட்டுள்ளனர். யுக்ரேன் மீதான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் உலகளாவிய ராஜ தந்திரத்தில் அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என்ற அச்சம் ஐரோப்பாவில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பின்றி அமை…

  25. 11 நாடுகளிலிருந்து 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்!சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஓமன் மற்றும் பல நாடுகளில் இருந்து கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தலை அடுத்து கராச்சியை வந்தடைந்த அவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குடியேற்ற ஆதாரங்களின்படி, சவுதி அதிகாரிகள் 94 பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்திற்குள் நாடுகடத்தியுள்ளனர். கறுப்பு பட்டியலில் உள்ளவர்கள், யாசகம் பெறுபவர்கள், போதைப்பொருள் வியாபாரம், சட்டவிரோதமாக தங்கியிருப்பது, சட்டவிரோதமாக வேலை செய்தல், பணியிடத்தில் இருந்து தலைமறைவு, ஒப்பந்தங்களை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக இவர்கள் நாட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.