உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
கத்தாரைத் தனிமைப்படுத்துவது மேற்கு ஆசியாவுக்கு நல்லதல்ல! நாட்டுடனான தூதரக உறவுகளை நிறுத்திவைப்பதாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் எடுத்திருக்கும் முடிவு பொருளாதார ரீதியாகவும், புவி அரசியல்ரீதியாகவும் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இஸ்லாமிய அரசியல் இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவம் எகிப்து அமைப்புக்கு கத்தார் தீவிர ஆதரவு தரத் தொடங்கியதிலிருந்தே, கடந்த ஆறு ஆண்டுகளாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்குள் பதற்றம் நிலவிவருகிறது. அந்த இயக்கம் மேற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஓர் அச்சுறுத்தல் என்றே சவுதி அரசும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளும் கருதுகின்றன. சவுதி அரேபியாவும், கத்தாரும் மேற்கு ஆசியா முழுவதும் ப…
-
- 0 replies
- 247 views
-
-
கத்தார் - அமெரிக்கா ஒப்பந்தத்தால் திருப்தியடையாத அரபு நாடுகள் கூட்டணி தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான நிதி தொடர்பான ஒப்பந்தத்தில் வாஷிங்டன், கத்தாருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், கத்தாரை புறக்கணிக்கும் முடிவை நான்கு அரபு நாடுகளும் தொடரவிருக்கின்றன. படத்தின் காப்புரிமைEPA அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் "போதாது" என்று செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கூறுகின்றன. "கத்தாரை நம்பமுடியாது" என்று கூறும் இந்த நாடுகள், அதற்கு உதாரணமாக முந்தைய ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டுகின்றன. வளைகுடா பிராந்தியத்தில் தீவிரவாதக் குழ…
-
- 0 replies
- 386 views
-
-
கத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள் கத்தாருடன், அண்டை நாடுகள் தங்களது ராஜிய உறவுகளை துண்டித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP ஆனால் பெரும்பாலும் கத்தார் பொதுவாக செய்திகளில் இடம்பெறுவதில்லை. எனவே 2022 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது என்பதை தவிர அந்நாட்டை பற்றி உங்களுக்கு வேறென்ன தகவல்கள் தெரியும்? எனவே இதோ கத்தாரை பற்றிய ஐந்து சுவாரஸ்ய தகவல்கள் மக்கள் தொகையில் அதிகப்படியாக ஆண்கள்: 2.5 மில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில் வெறும் 7 லட்சம் பெண்கள் தான் உள்ளனர். இந்த அதிகபட்ச சமச்சீரின்மைக்கு காரணம், கத்தார் மக்கள் தொகையில் எ…
-
- 1 reply
- 992 views
-
-
கத்தார் அதன் அண்டை நாடுகளுடன் முரண்பட 4 காரணங்கள் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள், கத்தாருடன் ராஜீய உறவுகளை முறித்துக் கொள்வது என்று முடிவெடுத்த பின்னர், அந்த நாடுகளுடன் கத்தாருக்கு ஏற்பட்ட பதற்றங்கள் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS Image captionசௌதி அரசர் சல்மான் பின் அப்தலஸிஸ் , கத்தார் எமிர் தமிம் பின் ஹமத் அல்-தானியுடன் கத்தார் அரசு மீது அழுத்தம் தரும் நோக்கிலான ஒரு நடவடிக்கையில், கத்தாரின் வளைகுடா பகுதி அண்டை நாடுகள் , அதனுடன் தத்தம் நாடுகளின் எல்லைகளையும் மூடிவிட்டன. எகிப்து ஒரு படி மேலே சென்று தனது வான்பரப்பையும் துறைமுகங்களையும் கத்தார் போக…
-
- 5 replies
- 621 views
-
-
லஞ்சம் தந்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் முன்னாள் கத்தாரி கால்பந்து துணைத் தலைவர் , மொஹமத் பின் ஹம்மாம் கத்தாரில் 2022ம் ஆண்டு உலகக் கோப்பை கால் பந்துப் போட்டியை நடத்த முடிவு செய்யப்படுவதற்காக, உலகக் கால்பந்து நிறுவனமான, பிபாவின் அதிகாரிகளுக்கு 5 மிலியன் டாலர்கள் வரை லஞ்சம் தரப்பட்டதாகக் காட்டும் ஆவணங்களை லண்டன் பத்திரிகை, சண்டே டைம்ஸ், வெளியிட்டிருக்கிறது. உலகக் கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் துணைத் தலைவரான, கத்தார் பிரஜை, மொஹமத் பின் ஹம்மாம், உலகக்கால்பந்து சம்மேளன அதிகாரிகளுக்கு வெவ்வேறு தவணைகளில் இந்தப் பணத்தை வழங்கினார் என்பதைக் காட்டும் லட்சக்கணக்கான ஆவணங்களை இந்தப் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. இந்த வாக்கெடுப்புக்கும் ஒராண்டு முன்னதான காலத்திலிருந்தே…
-
- 3 replies
- 547 views
-
-
கத்தார் செய்தி முகமை மீது ஹேக்கிங்கா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுப்பு கத்தார் அரசின் செய்தி முகமை மீது கடந்த மே மாதம் நடைபெற்ற கணினி வலையமைப்பு ஊடுருவலின் (ஹேக்கிங்) பின்னணியில் இருந்ததாக கூறப்படுவதை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்துள்ளது. Image captionகத்தார் செய்தி நிறுவனத்தை ஹேக் செய்யவில்லை என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சர் அன்வார் கார்காஷ் மறுத்திருக்கிறார் கத்தார் மன்னர் வலியுறுத்தியதாகக் கூறி, அவரது பெயரில் தீங்கு விளைவிக்கும் வாசகங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டது என அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாக "தி வாஷிங்டன் போஸ்ட்" நாளிதழில் செய்தி வெளியானது. கத்தாருக்கும் நட்பு நாடுகளு…
-
- 0 replies
- 365 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேக் ஹார்டன் , டாம் எட்கிங்டன், ஜோஷுவா சீதம் பதவி, பிபிசி வெரிஃபை 15 மே 2025, 09:55 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தாரிடம் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானத்தை, தனது நிர்வாகம் பரிசாக ஏற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது "ஒரு சிறப்பான செயல்" என்று பாராட்டியுள்ள டிரம்ப், இப்படிப்பட்ட பரிசை நிராகரிப்பது "முட்டாள்தனமாக" இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் சில உறுப்பினர்கள், டிரம்பின் இந்த முடிவை "முழுமையாக சட்டவிரோதமானது" என்று விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை இதை முற்றிலும் மறுக்கிறது. மேலும், டிரம்பை ஆதரிக்கும் சிலரும் …
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரி ஜேனட் ஜாக்சன் (வயது 46). இவருக்கும் கத்தார் நாட்டு கோடீசுவரர் விஸ்சாம் (வயது 37) என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், 2011ம் ஆண்டின் இறுதியில் இது உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களது திருமணம் கத்தாரில் நடைபெறும் என்றும் அதில் ஜேனட்டின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்காக தனியார் விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும். விருந்தினர்களை உபசரிக்க சிறந்த சமையல் நிபுணரை வரவழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜேனட்டிற்கு இதற்கு முன்பு இரு முறை திருமணம் நடைபெற்றுள்ளது. கட…
-
- 5 replies
- 577 views
-
-
கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா? இறையாண்மை மிக்க அரபு நாடான கத்தார், செளதி அரேபியா தலைமையில் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகளால் முன்னுதாரணமற்ற பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES தொடர்ச்சியாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்து வருவது , பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கத்தார் மீது பொருளாதார மற்றும் இராசதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கத்தார் இந்த இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறது. இதனால் தற்போது, வான்பரப்பு அதற்கு மூடப்பட்டுள்ளது, இறக்குமதிகள் எல்லைப் பகுதியில் நிற…
-
- 0 replies
- 447 views
-
-
கத்தார் பணக்கார நாடாக மாறுவதற்குக் காரணமான 3 நிகழ்வுகள் இவைதான்! கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோஸ் கார்லோஸ் கியூட்டோ பதவி,பிபிசி முண்டோ சேவை, சிறப்பு செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அண்மைகாலம் வரை கத்தார் தலைநகர் தோஹா, நவீன தொழில்நுட்பம், வடிவமைப்பு ஆகியவற்றுக்கு நீண்ட தொலைவில் இருந்தது. உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தத் தொடங்கி சில நாட்கள் கழிந்த நிலையில், ஏறக்குறைய சமூக அநீதி பிம்பத்தைத்தான் இப்போதைய 2022ஆம் ஆண்டு வரை கத்தார் கொண்டிருந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அதாவது 1922ஆம் ஆண்டில், இது ஒரு சிறிய வளைகுடா நாடாக 30 லட்சம்…
-
- 0 replies
- 645 views
- 1 follower
-
-
கத்தார் பால் தேவைக்கு ஜெர்மனியில் இருந்து பறந்து வந்த மாடுகள் சௌதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் கத்தாரை தனிமைப்படுத்தியுள்ள நிலையில், கத்தாரில் பால் விநியோகத்தை அதிகரிக்க மாடுகள் விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS இறக்குமதி செய்யப்பட்ட உள்ள 4000 மாடுகளில், முதல்கட்டமாக 165 ஹால்ஸ்டீன் பால் மாடுகள் ஜெர்மனியில் இருந்து கத்தார் வந்து சேர்ந்துள்ளன. கத்தாரில் வாழும் 2.7 மில்லியன் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நாடு இறக்குமதி பொருட்களை நம்பியிருக்கும் நிலையில், பிற நாடுகள் விதித்திருக்கும் வான், கடல் மற்றும் நில வழி தடையின் காரணமாக கத்தாரில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 485 views
-
-
கத்தார் பிரச்சனை: பயணிகளுக்கு என்ன பாதிப்பு? கத்தார் தலைநகர் தோஹாவுக்கான விமானசேவைகளை பல விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. படத்தின் காப்புரிமைAFP ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், லிபியா, ஏமன் ஆகிய நாடுகள், கத்தாருடனான அனைத்து ராஜீய தொடர்புகளையும் நிறுத்திக் கொண்டன. இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக இந்த நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை அந்த நாடு மறுத்துள்ளது. இந்த நாடுகள், தங்கள் வான்பரப்பையும் கத்தாரின் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் பயன்படுத்த தடை விதித்துள்ளன. இனி பயணிகள் என்ன செய்யலாம்? இதில் யாருக்கு நேரடி பாதிப்பு? இந்த திடீர் தடையால…
-
- 0 replies
- 439 views
-
-
கத்தார் மீதான நிபந்தனைகளை கைவிட்டது செளதி கூட்டணி; 6 புதிய கொள்கைகளை ஏற்க கோரிக்கை படத்தின் காப்புரிமைREUTERS Image captionதனது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான எந்த நடவடிக்கையினையும் ஏற்றுக்கொள்ள கத்தார் மறுக்கிறது கத்தார் மீதான தடையை முன்னெடுத்துள்ள நான்கு அரபு நாடுகள், கடந்த மாதம் தாங்கள் வைத்த 13 குறிப்பிட்ட நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என மேற்கொண்டு வலியுறுத்தப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகல், கத்தார் தற்போது ஆறு முக்கிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதம் மற…
-
- 1 reply
- 325 views
-
-
கத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் ? டாம் கீட்டிங்நிதி, குற்றம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் மையம் கத்தாரை , சௌதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகள் தனிமைப்படுத்திய சர்ச்சை, அந்த எரிவாயு வளமிக்க நாடு , மத்தியக்கிழக்கு பகுதியின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக வரும் குற்றச்சாட்டுகளிலிருந்து வருகிறது. படத்தின் காப்புரிமைREUTERS கத்தாரின் `தன்வழி சார்ந்த` வெளியுறவுக் கொள்கை பற்றி கத்தாரின் அண்டை நாடுகள் அதிருப்தி தெரிவித்திருப்பது இது முதல் முறை அல்ல - கத்தாருடன் அந்த நாடுகள் தங்கள் ராஜீய உறவுகளை 2014ல்கூட ஒன்பது மாதங்களுக்குத் துண்டித்திருந்தன. இஸ்லாமியவாத …
-
- 0 replies
- 410 views
-
-
கத்தார் விவகாரம்... ட்ரம்ப்பின் அதிர வைத்த ட்வீட்! 'கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்' என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது. மேலும் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கத்தாருக்க…
-
- 1 reply
- 574 views
-
-
கத்தார்: சமரச தூதுவரா, சர்ச்சையின் நாயகனா? பல விடயங்களில், மத்தியஸ்தராக தன்னைக் காட்டிக் கொள்ளும் கத்தார் நாடு, அந்தத் தகுதியைப் பெற்றிருக்கிறதா?, கத்தார் ஏன் குறிவைக்கப்படுகிறது? அதன் இலக்கு என்ன? படத்தின் காப்புரிமைREUTERS பிபிசி உலக சேவைக்காக, கத்தார் குறித்து அலசும் ஜேம்ஸ் ஃப்ளெட்சரின் விரிவான ஆய்வின் அடுத்த பாகம்: இதில், முதலாவதாக, கத்தார் விவகாரங்கள் பற்றி நிபுணத்துவம் பெற்ற லீனா காதிப் பார்வையில் என்னென்ன விவரங்கள் கிடைக்கின்றன என்பதைத் தருகிறார். (பிரிட்டனுக்குச் செல்வதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் லெபனானில் வளர்ந்த லீனா காதிப், இப்போது சத்தம் சிந்தனைக் குழுவின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக…
-
- 3 replies
- 900 views
-
-
கத்தார்: வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான கடுமையான சட்டத்தை மாற்ற அரசு முடிவு கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறவும்,வேறு பணிகளுக்கு செல்லவும் அவர்கள் பணி புரியும் நிறுவனத்தின் அனுமதியை வாங்க வற்புறுத்தும் தொழிலாளர் ஆளெடுப்பு குறித்த சட்ட அமைப்பினை அந்நாடு நிறுத்த முடிவு செய்துள்ளது. 2022 கால்பந்து உலகக்கோப்பைக்காக கத்தாரில் உள்கட்டமைப்பை உருவாக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தற்போது அமலில் உள்ள ''கஃபாலா'' அமைப்புக்கு பதிலாக அதிக நெகிழ்வுத்தன்மையுள்ள மற்றும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் புதிய ஒப்பந்த அடிப்படையிலான சட்டம் கொண்டுவரப்படும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, வர…
-
- 0 replies
- 275 views
-
-
கத்திக்குத்தின் எதிரொலி – விற்பனையை நிறுத்தியது அஸ்டா! சமையலறையில் பயன்படுத்தப்படும் சிறிய கத்திகளின் விற்பனையை இடைநிறுத்துவதாக அஸ்டா நிறுவனம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தாக்குதலில் 17 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்திருந்தார். குறித்த கத்திக்குத்து தாக்குதல் பிரித்தானியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையிலேயே சமையலறையில் பயன்படுத்தப்படும் சிறிய கத்திகளின் விற்பனையை இடைநிறுத்துவதாக அஸ்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பிரித்தானியாவில் …
-
- 0 replies
- 689 views
-
-
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டைலர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் லீ மெக்கின் (வயது25). இவரது காதலி ஜனா சீரர். கடந்த சில நாட்களுக்கு முன் கிறிஸ்டோபருக்கும், அவரது காதலி ஜனாவுக்கும் தகராறு ஏற்பட்டது. வேறு ஒரு வாலிபருடன் தனது காதலி பேசிப்பழகுவது கிறிஸ் டோபருக்கு பிடிக்கவில்லை. இதை தொடர்ந்து ஜனாவை அவளது வீட்டில் இருந்து கிறிஸ்டோபர் கடத்திச் சென்றார். தனது தாயின் வீட்டுக்கு காதலியை அழைத்து வந்தார். அந்த வீட்டின் பின் பகுதியில் ஜனாவை கிறிஸ்டோபர் குத்தி கொலை செய்தார். கொல்லப்பட்ட காதலியின் உடலை கிறிஸ்டோபர் துண்டு துண்டாக வெட்டினார். பிறகு அந்த துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டார். தண்ணீர் ஊற்றி அதை அடுப்பி வைத்து வேக வைத் தார். காதலியின் உடலை வெட்டி சமைய…
-
- 0 replies
- 870 views
-
-
ஒரு பீப்பாய் 20 டாலராகக் குறையுமா? ச.ஸ்ரீராம் முன்பெல்லாம் ஒரு நாட்டை அழிக்க ஆயுதங்களையும், குண்டுகளையும் வீசித் தாக்கினர். அதற்குப் பதிலாக தற்போது புதிதாகக் கண்டுபிடித்திருக்கும் வழிதான், பொருளாதாரப் போர். ஒரு நாட்டுக்கு வருமானத்தைத் தரக்கூடிய பொருளை அதிகமாக உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் எதிரிநாட்டை கத்தியின்றி, ரத்தமின்றி ஒழித்துக்கட்டுவதுதான் இந்தப் பொருளாதாரப் போரின் நோக்கம். அப்படியொரு பொருளாதாரப் போர்தான் தற்போது சர்வதேச அளவில் நடந்து வருகிறது. இந்தப் போரின் முக்கிய ஆயுதமாக மாறியிருக்கிறது கச்சா எண்ணெய். இதனை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்வதன் மூலம் வல்லரசாக விளங்கும் ரஷ்யாவையும், ஈரானையும் ஆட்டுவிக்க, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் திட்டமிட்டு…
-
- 0 replies
- 1.6k views
-
-
கத்தியுடன் வந்தவர் காவல் நிலையத்தில் சுட்டுக்கொலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல்நிலையத்துக்குள் கத்தியோடு நுழைய முயன்ற ஒருவரை, அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஷார்லி எப்தோ சஞ்சிகை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் நினைவு நாளின்போது இந்த தாக்குதல் நடந்திருக்கிறது வடக்குப் புறநகரான Guth Dhor இல் நடந்த இந்த சம்பவத்தின்போது, இரண்டு அல்லது மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடந்ததாக நேரில் கண்டவர் ஒருவர் கூறினார். போலி தற்கொலை அங்கியொன்றை அணிந்து வந்த அந்த நபர் அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஷார்லி எப்தோ சஞ்சிகை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்ட ஓராண்டு நிறைவில் இந்த சம்பவமும்…
-
- 0 replies
- 628 views
-
-
17 MAR, 2025 | 03:27 PM கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள பரிசுத்த பாப்பரசர் இதன் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தனது பதவியில் தொடர்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரான்சின் ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அங்கிருந்தவாறே சீர்திருத்த தி;ட்டங்களிற்கு அனுமதி வழங்கும் ஆவணத்தில் கைச்சாத்திட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 14 முதல் பாப்பரசர் மருத்துவமனையில் உள்ளார். கடந்த 12 வருடகாலப்பகுதியில் அவர் நீண்டநாட்கள் மருத்துவமனையில் உள்ளமை இதுவே முதல் தடவை. கத்தோலிக்க திருச்சபையில் பெண்களிற்கு அதிகளவு பங்களிப்பினை வழங்குவது,ஆட்சி மற்றும் தீர்மானம் எடுப்பதில் பாமர மக்களை அதிகளவில் ச…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவின் தலைமையகமான வாட்டிகனில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்த முதல் விசாரணையில் இரண்டு கத்தோலிக்க மதகுருக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் திருச்சபை உதவியாளராக பணியாற்றிய சிறுவன் ஒருவனை 2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கு இடையே பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கேப்ரியல் மார்டினெல்லி எனும் 28 வயதாகும் பாதிரியார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாலியல் அத்துமீறல் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் வாட்டிகனில் உள்ள சமயப் பள்ளிக்கு தலைமை தாங்கிய என்ரிகோ ரேடைஸ் எனும் 72 வயதாகும் பாதிரியார் அந்தப் பாலியல் குற்றத்தை மூடி மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்ப…
-
- 9 replies
- 1.1k views
-
-
[ சனிக்கிழமை, 12 யூன் 2010, 05:33.30 பி.ப GMT ] கத்தோலிக்க மதகுருமார்களின் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களுக்காக அவர்களை மன்னிக்குமாறு கடவுளிடமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும் கெஞ்சுவதாக கத்தோலிக்க மதத் தலைவர் போப் 16வது பெனடிக்ட் கூறியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் கத்தோலிக்க திருச்சபை பார்த்துக் கொள்ளும் என்றும் போப் உறுதி அளித்துள்ளார். வாடிகன் நகரில் சுமார் 15 ஆயிரம் பாதிரியார்கள் பங்கேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போப் 16வது பெனடிக்ட், பாதிரியார்களுக்கான ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், இந்த விழா, சில பாதிரியார்களின் பாவங்கள், இளம் சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்…
-
- 1 reply
- 639 views
-
-
Verona deaf school ex-pupils tell Italian TV of sex abuse by priests The sex abuse scandal in the Roman Catholic Church came to the Pope’s doorstep last night as a group of victims appeared on Italian television to claim that two dozen priests had for decades abused children at a school for the deaf in Verona. Three former pupils of the Antonio Provolo school who spoke on RAI, the state broadcaster, confirmed allegations made in a signed statement last year by 67 ex-pupils who described a regime of sexual abuse, paedophilia and corporal punishment from the 1950s to the 1980s. They said that 24 priests and lay brothers from the Company of Mary order were involved…
-
- 17 replies
- 1.8k views
-