Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. காசா மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி 26 Aug, 2025 | 10:57 AM காசாவில் உள்ள சுமார் 40 மாணவர்கள் நிதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவுக்கு வரவழைக்கும் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. செவனிங் திட்டத்தின் கீழ் (Chevening scheme) புலமைப் பரிசில்கள் ஊடாக ஒன்பது மாணவர்களுக்கு காசாவை விட்டு வெளியேற உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவனிங் திட்டம் என்பது, சர்வதேச மாணவர்கள் ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பைப் படிப்பதற்காக, பெருமளவில் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் கல்வி திட்டம் ஆகும். ஏனைய தனியார் திட்டங்கள் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட புலமைப் பரிசில்கள் கிடைத்த சுமார் 30 மாணவர்…

  2. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி August 25, 2025 3:06 pm தெற்கு காசா பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நாசர் வைத்தியசாலையில் நடந்த தாக்குதலில் அதன் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஏனைய மூவர் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் என்பிசி ஆகியவற்றில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவமும் பிரதமர் அலுவலகமும் உடனடி கருத்துக்களை வெளியிடவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. https://oruvan.com/15-killed-including-journalists-in-i…

  3. Published By: RAJEEBAN 14 MAY, 2024 | 11:06 AM காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு பாலஸ்தீனியர்களிற்கு ஏற்பட்டுள்ள தீமைகள் காரணமாக ஏற்பட்ட தார்மீக காயம் காரணமாக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவிலிருந்து இராஜினாமா செய்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நவம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்த இராணுவ மேஜர் ஹரிசன் மான் இது குறித்து திங்கட்கிழமை தனது சகாக்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது தார்மீக காயம்குறித்து குறிப்பிட்டுள்ளார். எனது இராஜினாமாவிற்கான காரணங்களை அச்சம் காரணமாக நான் பல மாதங்களாக தெரிவிக்கவில்லை. தொழில்முறை விதிமுறைகளை மீறுவது, நான் பெரிதும் மதிக்கும் எனது சிரேஸ்ட அதிகாரி…

  4. வீடியோ இணைப்பு - இஸ்ரேல், காசா மீது நேற்று மேற்கொண்ட தாக்குதல் இடம்பெற்ற சுமார் 24 மணித்தியாலங்களில் மீண்டும் இன்று பாரிய தாக்குதல்களை தொடுத்துள்ளது. இதனால் 255 பேர் வரை பலியாகியும் 600 பேர் வரை காயமடைந்ததாகவும் CNN செய்திகள் தெரிவிக்கின்றன. 60 வருடங்களின் பின் பலஸ்தீனியர்களுக்கு ஏற்பட்ட மிகவும் இரத்தம் தோய்ந்த நாளாக இது அமைவதாக வருணிக்கப்படுகிறது.வீடியோ இணைப்பு

  5. காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்திய சமாதான கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், ஹமாஸ் இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தடுக்க நடவடிக…

  6. காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது.இன்று (16.01.2009)இஸ்ரேல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தாயும் அவர்களின் ஐந்து பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளனர் என காசா வைத்தியசாலையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் இஸ்ரேல் இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரும் கடுமையான தாக்குதல்களை பொது மக்கள் மீது நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/world/gaza-2009-01-16.html - புகழ்

  7. லெபனானுடனான போர் ஒப்பந்தத்திற்கு இடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏறக்குறைய 14 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது லெபனானுக்கு நிம்மதியை அளித்தது. இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் இரு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. காசா போருக்கு இணையாக நடைபெற்று வரும் இப்போரை முடிவுக்கு கொண்டுவர இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இரண்டு மாத போர்நிறுத்த காலத்தில், ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய தனது போராளிகளை தெற்கு லெபனானில் …

  8. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! 06 Sep, 2025 | 01:23 PM காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது நேற்று வெள்ளிக்கிழமை (05) ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சனிக்கிழமை(இன்று) அதிகாலை வரை தொடர்ந்தது. பாலஸ்தீனிய வீடுகள் மீது பாரிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. கசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் "நரகத்தின் வாயில்கள்" திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.…

  9. காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர் 21 Sep, 2025 | 11:22 AM இஸ்ரேலியப் படைகள் நேற்றையதினம் காசாவில் 91 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பிரபல வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வடக்கு காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் லொறியில் இருந்த நான்கு பேர் உள்ளிட்டோரும் அடங்குவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (நேற்று) நடந்த கொலைகள், இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தைக் கைப்பற்றவும், தெற்கில் உள்ள செறிவு மண்டலங்களுக்குள் மக்களைத் தள்ளவும் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்தும் மேற்கொண்டனர். இஸ்ரேலியப் படைகள் குடியிருப்பு வீடுகள், பாடசாலைகள் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கூடாரங்க…

  10. காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் மூத்த தளபதி உள்பட 10 பேர் பலி By T. Saranya 06 Aug, 2022 | 09:52 AM காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயது குழந்தை, 23 வயது பெண்ணும் அடங்குவதாக பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. …

  11. இடிபாடுகளுக்குள் இன்னும் சடலங்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது இஸ்ரேலிய படைநடவடிக்கை தொடங்கிய கடந்த 13 நாட்களில் நேற்றிரவு நடந்துள்ள மிக மோசமான ஷெல் தாக்குதல்களில், காசாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. கிழக்கு காசாவில் ஷெஜாய்யா பகுதியில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன. சடலங்கள் வீதியில் வைக்கப்பட்டிருப்பதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.மேலும் பலரின் சடலங்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. கடுமையதான ஷெல் தாக்குதல்கள் காரணமாக பெரும்பாலான இடங்களை ஆம்பியூலன்ஸ் வண்டிகள் செல்ல முடியாமல் இருப்பதாகவும் கூறப்…

    • 0 replies
    • 415 views
  12. காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்: ஒரே நாளில் 60 பாலஸ்தீனியர்கள் 27 Sep, 2025 | 10:06 AM காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்று வெள்ளிக்கிழமை (26) சுமார் 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 16ஆம் திகதி தரைவழி நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அல்-வேஹ்தா தெரு, ஷாதி முகாம் மற்றும் நாசர் சுற்றுப்புறம் உள்ளிட்ட இடங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வெவ்வேறு தளங்கள் மற்றும் இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் நிலைமை மோசமாகி வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகரித்த குண்ட…

  13. 03 JUN, 2024 | 10:57 AM இஸ்ரேலிய பிரஜைகள் மாலைதீவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது. காசா யுத்தம் குறித்து மாலைதீவில் மக்களின் சீற்றம் அதிகரித்துவரும் நிலையிலேயே அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை தடை செய்வதற்கு ஜனாதிபதி முகமட் முய்சு தீர்மானித்துள்ளார்என அவரது அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இஸ்ரேலிய பிரஜைகளை மாலைதீவிற்கு செல்லவேண்டாம் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது. காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இஸ்ரேலியர்களிற்கு தடைவிதிக்கவேண்டும் என எதிர்கட்சியினரும் அரசாங்கத்தின் கூட்ட…

  14. காசாப் போர் ஏற்படுத்தியத் தாக்கம் கடந்த ஆண்டு காசா யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினர் நடந்து கொண்டவிதம் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன. இஸ்ரேலிய செயற்பாட்டாளர்கள் குழுவொன்று அறுபதுக்கும் அதிகமான இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்களிடமிருந்து பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்றிலேயே இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அந்த மோதலில் பங்கேற்ற இஸ்ரேல் இராணுவத்தினரிடமிருந்து, எட்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட சான்றுகளை வைத்து breaking the silence எனும் அந்த செயல்பாட்டுக் குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. இந்த காசா யுத்தம் குறித்து முன்பு இஸ்ரேலிய அரசு தெரிவித்திருந்த அதிகாரப்பூர்வ கருத்துகளுக்கு மாறுபட்டதாக இந்த அறிக்கை இருக்கிறது. காசா போரின்போது…

    • 0 replies
    • 240 views
  15. காசா விடயத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் கனடா எச்சரிக்கை! காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால், “உறுதியான நடவடிக்கைகளை” எடுப்போம் என்று இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன. மேலும், இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு மற்றும் கனேடிய தலைவர்களுடன் சேர்ந்து இஸ்ரேலிய அரசாங்கத்தை “அதன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த” மற்றும் “உடனடியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் நுழைய அனுமதிக்கவும்” அழைப்பு விடுத்தார். கடந்த மார்ச் 2 முதல் காசாவிற்குள் உணவு, எரிபொருள் அல்லது மருந்து எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலைமை பாலஸ்தீன மக்களுக்கு “பேரழிவை” ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை முன்னர் விவரித்தது. அதேநேர…

  16. காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக …

  17. காசா பிரச்சினை: பிரிட்டிஷ் கொள்கையை விமர்சித்து பதவி விலகிய வார்சி அம்மையார் ( பிரிட்டிஷ் பிரதமர் கேமரனுடன் - ஆவணப்படம்) பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் , சயீதா வார்சி, காசா தாக்குதல் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு தொடர்பாக பதவி விலகியுள்ளார். காசா பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு " தார்மீக ரீதியில் நியாயப்படுத்த முடியாதது" என்று அவர் கூறியிருக்கிறார். தொடர்புடைய விடயங்கள் பாலஸ்தீனம், இஸ்ரேல் தான் வருத்தத்துடனே பதவி விலகுவதாகவும், ஆனால்,காசா குறித்த அரசின் தற்போதைய கொள்கை, பிரிட்டனின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாகத் தான் நம்புவதாகவும், வார்சி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனுக்கு எழுதிய கடிதத்தில் …

  18. அக்டோபர் 7 முதல், காசாவில் குறைந்தது 3,195 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா மற்றும் இஸ்ரேலில் உள்ள சுகாதார அமைச்சகங்கள் தெரிவிக்கின்றன. காசாவில் மூன்று வாரங்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒரு வருடம் முழுவதும், உலகளவில் – 20க்கும் மேற்பட்ட நாடுகளில் – ஆயுத மோதலில் கொல்லப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காசாவில் கொல்லப்பட்ட 7,703 பேரில் 40% க்கும் அதிகமானோர் குழந்தைகள். காசாவில் மேலும் 1,000 குழந்தைகள் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டதாகக் கருதப்படுவதால், இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது . ஆக்கிரமிக்கப…

  19. 06 DEC, 2024 | 08:03 PM இஸ்ரேலிய படையினர் வடகாசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது மேற்கொண்ட தாக்குதலில் நான்கு மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய படையினர் மருத்துவபணியாளர்களையும் நோயாளிகளையும் மருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட பின்னர் முக்கியமான மருத்துவ விநியோக பொருட்களை அழித்தனர் என மருத்துவமனையின் இயக்குநர் ஹ_சாம் அபு சாபியா தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை சீருடையணியாத இருவரை மருத்துவமனைக்குள் அனுப்பிய இஸ்ரேலிய …

  20. Published By: RAJEEBAN 18 MAR, 2024 | 12:07 PM காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டது என பிபிசி தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்கின்றன எனவும் தெரிவித்துள்ள பிபிசி தாங்கள் மிகவும் துல்லியமான உயர் இலக்கை மையப்படுத்திய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒன்றுசேர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாநகரில் உள்ள மருத்துவமனையில் பதற்றநிலை காணப்படுகின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். …

  21. காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி Published By: RAJEEBAN 18 JUL, 2025 | 08:02 AM முன்னாள் பாப்பரசர் பிரான்சிஸ் நாளாந்தம் தொடர்பை பேணிய காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தேவாலயத்தின் பணியாளர் ஒருவரும் தேவாலயத்தின் வளாகத்தில் உள்ள கரித்தாஸ் கூடாரத்தில் உளவியல் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரும் அவருடன் இருந்த மற்றுமொரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனல்ஸ் தெரிவித்துள்ளது. உயிர்தப்புவதை நோக்கமாக கொண்டு தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனலின் செயலாளர் நாயகம் அலிஸ்டர் டட்டன…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபு அலூஃப், கான் யூனிஸிலிருந்து பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் காசா நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும் காசா நகரத்திலிருந்து வெளியேறிய ஒரு பெரும் மனிதக் கூட்டம் தெற்கிலிருக்கும் கான் யூனிஸ் நகருக்குள் நுழைந்துள்ளது. வடக்கிலிருந்த பல லட்சம் மக்கள், தாம் சுமக்கக்கூடிய அனைத்தையும் தூக்கிக்கொண்டு கான் யூனிஸுக்கு வந்திருக்கின்றனர். எரிபொருள் வைத்திருந்தவர்கள் கார்களிலும், குதிரை வைத்திருந்தவர்கள் குதிரை வண்டிகளிலும் வந்தனர், எதுவுமே இல்லாதவர்கள் நடந்தே வந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் கண்ட கான் யூனிஸ், நிலைகுலைந்து போயிருந்தது…

  23. காசாவின் நிலை -எங்கள் கூட்டு மனச்சாட்சி மீதான கறை – நாளாந்தம் 400 சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர் – காயமடைகின்றனர் – யுனிசெவ் Published By: RAJEEBAN 25 OCT, 2023 | 07:43 AM காசாவில் கடந்த 18 நாட்களில் கொல்லப்பட்ட சிறுவர்கள் குறித்த விபரங்களை யுனிசெவ் அமைப்பின் மத்திய கிழக்கிற்கான இயக்குநர் வெளியிட்டுள்ளார். காசாவில் கடந்த 18 நாட்களில் 2346 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 5364 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அடெலே கொடர் நாளாந்தம் 400 பாலஸ்தீன சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவில் காணப்படும் நிலை எங்கள் கூட்டு மனச்சாட்சி மீதான கறையாகும் என தெரிவித்துள்ள யுனிச…

  24. காசாவின் பேரழிவுகள் தொடர்பில் ஐ.நா. அறிக்கை வெளியீடு – மீட்டெடுக்க 25 ஆண்டுகள் செல்லும் October 8, 2025 12:58 pm இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் (07) இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டொலர் கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும். போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை…

  25. எதிர்பார்த்ததை விட வேகமாக காசா பகுதிக்குள்ளான இஸ்ரேலிய படைகளின் நகர்வுகள் இருப்பதை அங்கிருந்து வரும் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. காசா நகரிற்கு வடக்கில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் அதேவேளை காசா பகுதியின் பின்புறமாக இஸ்ரேலிய படைகள் வந்திருக்கும் காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசா நகரையும் தெற்கு நாசா பகுதியையும் இடைமறித்து இஸ்ரேல் தற்போது நிலைகொண்டுள்ளார்கள். காசாவிற்கு இஸ்ரேலிய படைகளின் தரை வழியான முன்னேற்றங்கள் எதுவும் நடக்கவில்லையென ஹமாஸ் அறிவித்த சில மணிநேரங்களிலே காசா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. https://tamilwin.com/article/israeli-forces-have…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.