உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர் பங்குபற்றிய கொரோனா வைரஸ் தொடர்பான வெகுஜன பிரார்த்தனை நிகழ்வானது நேற்றைய தினம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது. பங்களாதேஷின் ராய்பூரில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வின்போது சுமார் 10,000 முஸ்லிம்கள் வரை கலந்து கொண்டதாக உள்ளூர் காவல்துறை தலைவர் டோட்டா மியா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இந்த பிரார்த்தனை நிகழ்வில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரை கலந்து கொண்டிருக்கலாம் என பி.பி.சி. செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக உலக நாடுகள் வெகுஜன கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. அதேபோன்று பங்களாதேஷில் பாடசாலைகள் என்பவை ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையி…
-
- 0 replies
- 464 views
-
-
கொரோனா பரவல் அச்சத்துக்கு மத்தியில் ஈரானிய பாராளுமன்றம் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சட்டமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஈரானிய சட்டமன்றத் செய்தித் தொடர்பாளரான அசாதுல்லா அப்பாஸி கூறுகையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை பாராளுமன்றம் எந்த அமர்வுகளையும் நடத்தாது என்றார். கொரோனா வைரஸின் பரவலால் சீனாவுக்கு வெளியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். தொற்றுநோயை சமாளிக்க முயற்சிக்கும் பணிக்குழுவிற்கு தலைமை தாங்கிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி உட்பட நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவளை ஈரானில் கொரோனா தொடர்பான…
-
- 1 reply
- 333 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து அவரசர நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்தார். உலக நாடுகளில் பரவி வரும் கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 40 பேர் பலியாகி உள்ளனர். 20 மாகாணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை அவரசர நிலையாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கி உள்ளார். அனைத்து மாகாணங்களிலும் கொரோனா அவசர சிகிச்சை மையங்களை நிறுவ டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2501058
-
- 0 replies
- 410 views
-
-
p>ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு ஈரானியர் கொரோனா வைரஸினால் உயிரிழப்பதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 50 ஈரானியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவளை ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 149 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள்தாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகி 1,284 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Photo Credit : CNN https://www.virakesari.lk/article/78252
-
- 1 reply
- 530 views
-
-
பாரிஸில் 60 வயதான ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தமது நாட்டைச் சேர்ந்த பிரஜை எனவும், தனது நாட்டுப் பிரஜையொருவர் கொரோனாவினால் உயிரிழக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவென பிரான்ஸ் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளார். குறித்த நபர் பிரான்ஸ் தலைநகரில் உள்ள பிட்டி சால்பெட்ரியர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார ஆணைய இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதேவளை கொரோனா தொற்று தொடர்பில் இன்றை தினம் இரண்டு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/76576
-
- 1 reply
- 731 views
-
-
கொலை முயற்சியிலிருந்து தப்பினார் ஈராக் பிரதமர் ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, தலைநகர் பாக்தாத்தில் உள்ள தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார். தலைநகரின் பாதுகாப்பு வலயத்தில் உள்ள அவரது இல்லம், ஒரு கொலை முயற்சியில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் மூலம் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் காதிமி காயமின்றி தப்பினார். எனினும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் பிரதம அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குறைந்தது ஆறு உறுப்பினர்கள் காயமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன. ஒரு டுவிட்டர் பதிவில் நலமாக இருப்…
-
- 0 replies
- 292 views
-
-
பொன் விழா கண்ட தி.மு.க, எத்தனையோ முறை ஊழலை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கியது உண்டு. ஆனால், அதே தி.மு.க., இப்போது ஊழலில் கைதாகியிருக்கும் தங்களது கட்சியின் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஆதரவாகப் போர்க் கொடி தூக்கியதற்குப் பின்னணி ஏதும் உண்டா என்பதே டெல்லி வட்டாரங்களை இப்போது குடையும் கேள்வி! ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைதான முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஐந்து நாள் கஸ்டடியில் இருக்கிறார்! முறைகேட்டில் கைமாறிய பணம் எங்கெல்லாம் போனது என்பதைப் பல்வேறு கேள்விகளாக்கி, ஆ.ராசா மற்றும் அவரோடு கைதான இருவரையும் துளைத்துக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ. வெளிநாடுகளில் உள்ள பல நிறுவனங்கள், தூரத்து நாடுகளின் ரகசி…
-
- 0 replies
- 1k views
-
-
கொவிட்-19 தொற்றால் மனிதர்களது ஆயுட்காலம் பாரிய அளவில் குறைந்தது - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொவிட்-19 தொற்றுநோய் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் மனிதர்களது ஆயுட்காலத்தை மிகப்பெரிய அளவில் குறைத்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்ட 29 நாடுகளின் பெரும்பாலான - ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சிலி ஆகிய நாடுகளின் தரவு கடந்த ஆண்டு ஆயுட்காலம் குறைவடைந்ததை வெளிக்காட்டுகின்றது. ஆயுட்காலத்தின் மிகப்பெரிய சரிவு அமெரிக்காவில் உள்ள ஆண்களிடையே இருந்தது, 2019 ஆம் ஆண்டு நிலைகளுடன் ஒப்பிடும்போது 2020 இல் ஆயுட்கால் 2.2 ஆண்டுகளாகவும், லிதுவேனியன் ஆண்கள் ஆயுட்காலம் 1.7 ஆண்டுகளாகவும் குறை…
-
- 0 replies
- 404 views
-
-
கொவிட்-19 முடக்கல் உத்தரவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் வெடித்த போராட்டம் ஆஸ்திரிய அரசாங்கம் திங்கள் முதல் தழுவிய முடக்கல் நிலையை அறிவித்ததை அடுத்து, தீவிர வலதுசாரி குழுக்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சனிக்கிழமையன்று தலைநகர் வியன்னா வழியாக அணிவகுத்துச் சென்றனர். ஆஸ்திரியா மட்டுமல்லாது வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சுவிட்சர்லாந்து, குரோஷியா, இத்தாலி, வடக்கு அயர்லாந்து மற்றும் நெதர்லாந்திலும் சனிக்கிழமை நடந்தன. மேற்கண்ட நாடுகளில் கட்டாய தடுப்பூசி அமுல், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய கொவிட்-19 அனுமதி அட்டை என்பவற்றுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் அணி திரண்டனர். ஆஸ்திரியாவில் திங்கள் முதல் அமுலுக்கு வரு…
-
- 0 replies
- 272 views
-
-
கே எஃப் சி உணவில் ஈகோலி கிருமி! அதிர்ச்சி தகவல். Jan 15 2013 09:42:23 நோவா ஸகாட்டியா, நியு பரன்ஸ்விக், ஒண்டோரியோ பகுதிகளில் வயிற்றுக் கோளாறு நோய் தீவிரமாக பரவி வருகிறது. அதற்கு அடிப்படை காரணமாக கேஎஃப்சி மற்றும் டாகோ பெல் உணவகங்களில் பறிமாறப்பட்ட லெட்யுஸ் கீரையில் இருந்த ஈகோலி கிருமிதான் என்று சொல்லப்படுகிறது. ‘இந்த மூன்றுப் பகுதிகளிலும் பரவியுள்ள ஈகோலி கிருமிகளுக்கு இதுதான் மூலம் என்று கருதப்படுகிறது’ என்று நோவா ஸாக்ட்டியாவின் துணை மருத்துவ அதிகாரி ஃப்ரான்க் அதார்டன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தன்னிடமுள்ள கிருமி பாதிக்கப்பட்ட லெட்யுஸ் கீரையை அகற்றிவிட்டதாக கேஃப்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது தங்களது உணவகங்களில் பறிமாறப்படும் உணவு வகைகள் பாதுகாப்பானது எ…
-
- 0 replies
- 728 views
-
-
கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பலி Published by Rasmila on 2016-03-14 12:06:56 இந்தோனேசியாவில் கே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில், நேற்று சிக்கன் சாப்பிடும் போட்டி ஒன்றை சிக்கன் உணவகமான கே.எப்.சி என்று அழைக்கப்படும் கெண்டகி பிரைட் சிக்கன் நடத்தியது. இந்த போட்டியில் பங்கேற்று கே.எப்.சி சிக்கனை அதிகமாக சாப்பிட்ட 3 நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நபர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது, இதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 45 வயதான…
-
- 0 replies
- 467 views
-
-
கர்கான்: கர்கானில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் மதிய உணவு இடைவேளையின்போது, ஊழியர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கேக் சாப்பிடும் போட்டியின்போது ஏராளமான கேக்குகளை சாப்பிட்டு மூச்சுத் திணறி, தொண்டை அடைத்து ஒரு என்ஜீனியர் பலியானார். கர்கானில் உள்ள நோக்கியா சீமன்ஸ் நெட்ஒர்க்கிங் நிறுவனத்தில் சொல்யூஷன்ஸ் என்ஜீனியராக பணியாற்றஇ வந்தவர் 22 வயதாகும் செளரவ் சபர்வால். கிழக்கு டெல்லியின், பத்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர். இவர், தனது அலுவலகத்தின் காபி கிளப்பில், மதிய உணவு இடைவேளையின்போது நடத்தப்பட்ட கேக் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது ஏராளமான கேக்குகள் போட்டிக்கு வைக்கப்பட்டன. அவற்றை போட்டியில் கலந்து கொண்ட ஊழியர்கள் வேகம் வேகமாக சாப்பிட்டனர். சபர்வால் ஜெயி…
-
- 3 replies
- 1.4k views
-
-
கேடலோனியர்கள்; குர்திஷ்களின் விடுதலைப் போராட்டம்! சமீபத்தில் இராக்கில் உள்ள குர்திஷ் பிராந்திய அரசாங்கத்துக்குட்பட்ட பகுதியிலும் ஸ்பெயினில் உள்ள கேடலோனியா சுயாட்சி சமூகத்துக்குட்பட்ட பகுதியிலும் நடந்த கருத்துக்கேட்பு வாக்கெடுப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குர்திஸ்தான் தனி நாடு உருவாக வேண்டும் என்று குர்திஷ் மக்களும்; கேடலோனியா தனி நாடு உருவாக வேண்டும் என்று கேடலோனியா பிரதேச மக்களும் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே, இந்த வாக்கெடுப்புகளை ஏற்க இராக்கும் ஸ்பெயினும் மறுத்துவிட்டன. …
-
- 0 replies
- 374 views
-
-
கேடலோனியா மக்களின் சுதந்திர தாகம்! ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான கேடலோனியாவைச் சேர்ந்த மக்கள் தனி நாடாகப் பிரிந்து செல்ல கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பங்கேற்றனர். கேடலோனியா பிரிவதை விரும்பாத ஸ்பானிய அரசு, அந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பையே தேசிய காவல் துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியதுடன் கேடலோனியா பகுதிகளில் மக்கள் மீது தடியடி நடத்தியும் வாக்குப் பெட்டிகளைப் பறித்தும் அடக்குமுறையைக் கையாண்டது. எதிர்ப்பேதும் தெரிவிக்காத மக்களைக் காவல் படையினர் குண்டாந்தடிகளால் சகட்டு மேனிக்குத் தாக்கினர். பெண்களைக் கைகளைப் பிடித்தும் தலைமுடியைப் பிடித்தும் இழுத்து அப்ப…
-
- 3 replies
- 591 views
-
-
கேடலோனியா: சுதந்திரமா, பின்னடைவா? ஸ் பெயினின் கேடலோனியா மாகாணத்தவர் தனிநாடு பிரகடனத்தை வெளியிட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று புரியாமல் திகைத்து நிற்கிறது ஐரோப்பிய ஒன்றியம். கடந்த அக்டோபர் 27 அன்று கேடலோனியா நாடாளுமன்றம் தன்னுடைய பிரதேசம் தனி நாடாக ஆகிவிட்டதாகவும் தாங்கள் இனி கேடலோனியக் குடியரசு என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் ஸ்பெயினின் தளைகளை முறித்துக்கொண்டு சுதந்திரம் பெற்றுவிட்டதாக முழங்கியது. தொழில் வளம் மிக்க தங்களுடைய பகுதியின் கனிம வளத்தையும் நிதி வளத…
-
- 1 reply
- 588 views
-
-
கேட்டலன் தேர்தல்: பெரும்பான்மையை தக்கவைத்த பிரிவினைவாதிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS கேட்டலன் பிராந்தியத்துக்கான நாடாளுமன்ற தேர்தலில் பிரிவினைவாத கட்சிகள் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் நிலையை நோக்கி செல்வதால், ஸ்பெயின் அரசாங்கத்துடன் கூடுதல் மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கேட்டலோனியா ஸ்பெயினின் ப…
-
- 0 replies
- 438 views
-
-
கேட்டலான் தலைவருக்கு எதிரான ஐரோப்பிய பிடி ஆணை ரத்து படத்தின் காப்புரிமைGETTY IMAGES பதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலோனியா அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு முன்னாள் அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்ட ஐரோப்பிய பிடி ஆணையை ஒரு ஸ்பெயின் நீதிபதி திரும்பப்பெற்றுள்ளார். ஒரு தலைபட்சமாக கேட்டலோனியா சுதந்திரத்தை அறிவித்த பிறகு இவர்கள் பெல்ஜியம் நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். ஐரோப்பியப் பிடியாணை ரத்து செய்யப்பட்டாலும், தேசவிரோதம் மற்றும் கிளர்ச்சிக்கான குற்றச்சாட்டுகளை அவர்கள் இன்னும் எதிர்கொண்டுள்ளதாக நீதிபதி கூறினார். ஸ்பெயினில் மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகக் கிளர்ச்சி கருதப்படுகிறது. இதற்கு 30 வருடங்கள் வரை சிறை தண…
-
- 0 replies
- 204 views
-
-
கேட்டலோனிய தலைவர்களை சிறை வைத்தது ஸ்பெயின் நீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் ஸ்பெயினில் உள்ள கேட்டலோனிய தன்னாட்சிப் பிராந்தியத்தை தனி நாடாக அறிவிப்பதற்காக, கடந்த அக்டோபரில் கேட்டலோனியாவின் பிராந்திய அரசு நடத்திய பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்காற்றியதற்காக, கலைக்கப்பட்ட பிராந்திய அரசில் அங்கம் வகித்த எட்டு தலைவர்களை ஸ்பெயின் உயர் நீதிமன்றம் சிறை வைத்துள்ள…
-
- 1 reply
- 664 views
-
-
கேட்டலோனிய பிரச்சனை: ஏன்...எதற்கு? அடிப்படை விவரங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபார்சிலோனாவில் கேட்டலோனிய சுதந்திர ஆதரவாளர்கள் சுதந்திரத்துக்கான கேட்டலோனியாவின் முன்னெடுப்பு கடந்த நாற்பது வருடங்களில் ஸ்பெயின் நாட்டை மிகப்பெரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. இது சிக்கலான பிரச்னை. ஆகவே அதன் அடிப்படைகளைப் பார்ப்…
-
- 0 replies
- 485 views
-
-
கேட்டலோனியா தனி நாடு பிரகடனம் இடை நிறுத்தம்: கேட்டலன் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கேட்டலோனியா ஸ்பெனிலிருந்து வெளியேறி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்துவதை இடைநிறுத்தம் செய்வதாக கேட்டலோனிய அரசின் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் அந்தப் பிராந்தியத்தின் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். ஸ்பெயின் அரசுடன் நியாயமான பேச்சு வார்த்தை நடத்தும் நோக்கில், சில வாரங்…
-
- 2 replies
- 360 views
-
-
கேட்டலோனியா தலைவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஸ்பெயின் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅரசு தலைமை வழக்கறிஞர் ஜோஸ் மானுவல் மஸா கேட்டலோனியா கடந்த வாரம் ஒருதலைபட்சமாக சுதந்திரத்தை அறிவித்ததையடுத்து, கேட்டலோனியா தலைவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை ஸ்பெயினின் அரசு தலைமை வழக்கறி…
-
- 0 replies
- 266 views
-
-
கேட்டலோனியா விவகாரம்: `பிரிவினைவாத அழிவிற்கு` முடிவுகட்டுவேன் என்று ஸ்பெயின் பிரதமர் உறுதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS டிசம்பர் மாதம், கேட்டலோனியாவில் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தல், அங்கு நடக்கும் `பிரிவினைவாத அழிவிற்கு` ஒரு முடிவை கொண்டுவரும் என்று ஸ்பெயினின் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார். விளம்பரம் ஸ்பெயினின் நேர…
-
- 0 replies
- 338 views
-
-
கேட்டலோனியாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஸ்பெயின் திட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA ஸ்பெயின் பிரதமர் பிரிவினைவாத பிராந்தியத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அப்பிராந்தியத்தின் தலைவர்களை நீக்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். சனிக்கிழமையன்று நடத்த ஒரு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்…
-
- 1 reply
- 644 views
-
-
கேட்டலோன் சுதந்திரம்: வாக்கெடுப்பால் எந்தப் பலனும் இருக்காது என்கிறார் ஸ்பெயின் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionகேட்டலோனியாவின் சுதந்திர அறிவிப்பால் எந்த விளைவும் இருக்காது. கேட்டலோனியா தனது சுதந்திரம் குறித்து விடுக்கும் எந்த ஒரு பிரகடனத்துக்கும் எந்த ஒரு பலனும் இருக்காது என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் எச்சரித்துள்…
-
- 0 replies
- 402 views
-
-
டெல்லி: ரூ 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரிடம் ரூ.1,800 கோடி ரொக்க பணம், 1500 கிலோ தங்க நகைகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கேதான் தேசாய், கோடி கோடியாக லஞ்சப்பணம் குவித்த விவகாரம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மருத்துவ கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, ரூ.2 கோடி லஞ்சம் பெற்றபோது டாக்டர் கேதான் தேசாய் கையும், களவுமாக பிடிபட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவ கவுன்சில் செயலாளர் மற்றும் மருத்துவ கல்லூரி நிர்வாகிகள் இருவரும் கைதானார்கள். கேதான் தேசாய் கைதானவுடன், குஜராத் [^] மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் நடைபெற்ற …
-
- 0 replies
- 639 views
-