Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை (கோப்புப்படம்) சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன. …

  2. ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும். இன்று ரம்பின் புளோரிடா மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கிறீன்லாந்தையும் பனாமா கால்வாயையும் கைப்பற்றுவதைப் பற்றி விபரமாக கூறினார். கனடாவையும் அமெரிக்காவுடன் இணைக்கும் திட்டத்தையும் வரவேற்றுக் கூறினார். நான் பதவி ஏற்பதற்கிடையில் கமாசால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படவில்லை என்றாமல் மிகப் பெரிய அழிவு மத்திய கிழக்கில் நடக்கும் என்று பயமுறுத்தியுள்ளார். 1959 ம் ஆண்டிற்குப் பின் அமெரிக்க வரைபடத்தில் மாற்றங்களைக் காணலாம். குறுகிய நேரத்தில் மிகப் பெரிய குண்டுகளைப் போட்டுள்ளார். பூட்டினுக்கு போட்டியாக ரம்பும் தொடங்கப் போகிறாரோ? President-elect Donald Trump on Tue…

  3. 2019இல் சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரசின் பரவல், உலகெங்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது சீனாவில் புதிய HMPV வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதன் காரணமாக உலக நாடுகள் பல அச்சத்தில் உள்ளன. எச். எம். பி. வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் முதன்முறையாக மனித மெட்டா நியூமோ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இந்த குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்ப…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது அமெரிக்கா, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நிலைமைகள் ஏற்கனவே மோசமடைந்துள்ளன, பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சில விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன. …

  5. 20 ஆம் திகதி பதவியேற்பு; 10 ஆம் திகதி ட்ரம்புக்கு தண்டனை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ்,கடந்த 2006 ஆம் ஆண்டு ட்ரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகவும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை வெளியில் கூறாமல் இருக்க தனக்கு பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்துக்காக திரட்டப்பட்ட நிதியிலிருந்து போலியான வணிகப் பதிவுகளை உருவாக்கி சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அந் நடிகைக்கு ட்ரம்ப…

  6. ட்ரம்பின் ஹோட்டலுக்கு வெளியே வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் லாஸ் வேகாஸில் (Las Vegas) அமைந்துள்ள ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியது. புத்தாண்டு தினமான புதன்கிழமையன்று (01) இடம்பெற்ற இந்த வெடிப்பில் வாகனத்திற்குள் இருந்த அதன் சாரதி உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தற்சமயம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வெடித்துச் சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமானது. அவர் டொனால்ட்…

  7. கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 10 பேர் பலி! ADDED : ஜன 01, 2025 06:30 PM வாஷிங்டன்: அமெரிக்காவின் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அதிவேகமாக வந்த டிரக் , கூட்டத்தில் புகுந்ததில் 10 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் டிரக்கை ஒட்டி வந்த டிரைவர் வெளியேறி கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சாலை பரபரப்பான மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கில புத்தாண்ட…

  8. HMPV வைரஸ் தாக்கத்துக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. சீன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக சுவாச மண்டலம் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த வைரஸ் தொற்றுறுதியானவர்களுக்கு இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு திணறல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவல் காரணமாக சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களே அதிகளவில் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது. எச்.எம்.வி.பி என அறியப்படுகின்ற குறித்த வைரஸ் பரவலை அடுத்து சீனாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சில சர்வதேச…

  9. தப்பான தீர்மானத்தால் தலைகீழாக மாறிய தென்கொரியா! தென் கொரியாவின் ஒரு மாத கால அரசியல் நெருக்கடி, ஆறு மணி நேர மோதலுக்குப் பின்னர், இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்யத் தவறியதால் மற்றொரு திருப்பத்தை வெள்ளிக்கிழமை (03) கண்டது. கடந்த டிசம்பர் தொடக்கத்தில் யூனின் குறுகிய கால இராணுவ சட்ட அறிவிப்பு தொடர்பாக அவரை கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர் – ஆனால் அவர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவுடன் மோதலில் பாதி நாள் செலவிட்டனர். இது முன்னோடியில்லாத சில வாரங்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்தும் நாடாளுமன்றம் யூனை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தது, பின்னர் அவருக்குப் பிறகு செயல் ஜனாதிபதியாக பதவியேற்க வழிவகுத்தது. கைது…

  10. துனிசியாவில் இரு புலம்பெயர்ந்த படகுகள் மூழ்கியதில் 27 பேர் உயிரிழப்பு! மத்திய தரைக்கடலை கடக்க முயற்சித்த இரு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 ஆப்பிரிக்க குடியேறியவர்களின் உடல்களை துனிசியாவின் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (02) தெரிவித்தனர். ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடிக்கடி பயன்படுத்தும் புறப்படும் இடமான துனிஷியாவின் ஸ்ஃபாக்ஸ் (Sfax) நகருக்கு அப்பால் படகுகள் நீரில் மூழ்கியுள்ளன. எனினும், இரண்டு படகுகளில் பயணித்த 87 பேரை கடலோர காவல்படையினர் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத இடப்பெயர்வு நெருக்கடியால் துனிசியா பாதிக்கப்பட்டுள்ளது. துனிசியர்கள் மற்றும் ஐரோப்பாவில் வாழ விரும்பும் மக்களுக்…

  11. தெற்கு கலிபோர்னியாவில் விமான விபத்து; இருவர் உயிரிழப்பு, 18 பேர் காயம்! தெற்கு கலிபோர்னியாவில் வியாழன் (02) அன்று வணிக கட்டிடத்தின் மேற்கூரையில் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்ததாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவின் புல்லர்டன் நகரில் நடந்த விபத்து குறித்து அந்நாட்டு நேரப்படி வியாழன் பிற்பகல் 2.09 மணிக்கு பொலிஸாருக்கு அறிக்கை கிடைத்ததாக நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டி வெல்ஸ் கூறினார். விபத்தினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் தீயை கட்டுப்படும் முயற்சிகளை முன்னெடுத்தனர். விபத்தினை அடுத்து காயமடைந்த 10 பேர் வைத்தியசாலைக்கு கொண்…

  12. முடிவுக்கு வந்த ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம்! உக்ரேனின் எரிவாயு போக்குவரத்து நிறுவனமான Naftogaz மற்றும் ரஷ்யாவின் Gazprom ஆகியவற்றுக்கு இடையேயான 05 ஆண்டு ஒப்பந்தம் காலாவதியான பின்னர், உக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கான ரஷ்ய எரிவாயு விநியோகம் 2025 புத்தாண்டு தினத்துடன் முடிவுக்கு வந்தது. இது ஐரோப்பிய எரிவாயு சந்தையில் மொஸ்கோவின் நீண்ட கால ஆதிக்கத்துக்கான முற்றுப்புள்ளியாக அமைந்தது. அதேநேரம், மாற்று வழியை தேடுவதன் மூலம் ரஷ்ய ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் அதன் முயற்சியையும் இரட்டிப்பாக்கியது. மேற்கண்ட ஒப்பந்தமானது போரிடும் இரு நாடுகளுக்கிடையே 2019 ஆம் ஆண்டில் எட்டப்பட்டது. இது ரஷ்யாவின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிய…

  13. சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல் 02 Jan, 2025 | 01:01 PM சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது விமானதாக்குதலை மேற்கொண்டதாக பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெபெர்கொனு தெரிவித்துள்ளார். பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னர் பிரான்ஸ் ஐஎஸ் இலக்குகள் மீது மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கைகளில் எங்கள் படையினர் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர் என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்சி…

  14. 2024 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்தாண்டில் மட்டும் உலகின் மக்கள் தொகை 7 கோடியே 10 லட்சம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க கணக்கெடுப்புத்துறை கணித்துள்ளது. முந்தைய 2023ஆம் ஆண்டை விட மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளதாகவும் அமெரிக்க அரசுத் துறை தெரிவித்தள்ளது. ஜனவரி மாதம் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் நாளில் உலக மக்கள் தொகை 809 கோடியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் இதனால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள்…

  15. பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை ஆப்கானிஸ்தானில் பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள ஜன்னல்களுக்கு தடை விதித்துள்ளது தலிபான் அரசு. அதன்படி புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்கள் கட்டக்கூடாது. மேலும், தற்போது உள்ள ஜன்னல்களை அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது அவர்களே சொல்லி இருந்தனர். பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால்,…

  16. Published By: RAJEEBAN 29 DEC, 2024 | 12:22 PM காசாவில் இறுதியாக செயற்பட்டுக்கொண்டிருந்த மருத்துவமனையும் செயல் இழந்துள்ளது அதன் இயக்குநர் இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் இதனை தெரிவித்துள்ளது. காசாவின் சுகாதார அதிகாரிகளும் இதனை உறுதி செய்துள்ளனர். காசாவின் கமால் அத்வான் மருத்துவமனையே செயல் இழந்துள்ளது. அதற்கு அருகில் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இஸ்ரேலிய படையினர் இந்த மருத்துமவனையை இலக்குவைத்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது மருத்துவமனையின் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, தீக்கிரையாகியுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. காசாவில் கடந்த வருடம் இஸ்ர…

  17. தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 28 பேர் பலி ! 29 Dec, 2024 தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமான விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தமாக 181 பேர் இருந்துள்ளனர். குறித்த விமானம் தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவுக்கு திரும்பியுள்ளத…

  18. அமெரிக்காவுக்கு எதிராக போர் கொடி தூக்கிய கியூபா!

  19. அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி 100வது வயதில் காலமானார்.

  20. அஜர்பைஜான் விமான விபத்திற்கு மன்னிப்பு கோரினார் புட்டின் - ரஸ்யாவின் தவறு என குறிப்பிடவில்லை. 28 Dec, 2024 | 07:36 PM கிறிஸ்மஸ் தினத்தன்று அஜர்பைஜானின் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கிய சம்பவத்திற்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும் அவர் இதற்கு ரஸ்யாவின் தவறே இந்த விமான விபத்திற்கு என நேரடியாக குறிப்பிட தவறியுள்ளார். உக்ரைனின் ஆளில்லா விமானங்களிற்கு எதிராக ரஸ்யாவின் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தவேளை துன்பியல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியெவினை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட…

  21. காலநிலை மாற்றத்தின் தாக்கமாக 2024ஆம் ஆண்டில் வழக்கத்தை விட கூடுதலாக 41 நாட்கள் மோசமான வெப்பநிலை நிலவியதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். World Weather Attribution மற்றும் Climate Central அமைப்பு இணைந்து நடப்பு ஆண்டில் நிகழ்ந்த காலநிலை மாற்றப் பாதிப்புகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் இவ்வாண்டு 219 மோசமான பருவநிலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் 26 நிகழ்வுகளில் 3,700 பேர் உயிரிழந்ததோடு லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இதுவரையில் இல்லாத அளவில் 2024 ஆம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வழக்கத்தை விட கூடுதலாக 41 நாட்கள் மோசமான வெப்பநிலை நிலவியுள்ளது. தற்போது நிகழும் அதீத வெப்பம், பஞ்சம், புயல்…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டஹிடி தீவில் அலைகளில் சவாரி செய்யும் சர்ஃபர் கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி குரோவர் பதவி, பிபிசி நியூஸ் டஹிடி தீவில், அலைகளில் சவாரி செய்யும் சர்ஃபர் ஒருவரின் வியத்தகு புகைப்படத்தில் இருந்து, புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர், தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த படுகொலை முயற்சியில் உயிர் பிழைத்த சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்ட புகைப்படம் வரை கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க 12 படங்களின் தொகுப்பு இது. மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு: நினைவிடம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை என்ன? கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடு…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னாள் அதிபர் போரிஸ் யெல்ட்சன், தான் ராஜினாமா செய்வதாக அறிவித்து, 1999 டிசம்பர் 31 அன்று புதினிடம் அதிபர் அதிகாரங்களை ஒப்படைப்பதார். கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க் பதவி, ஆசிரியர், பிபிசி ரஷ்ய சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் என்னால் 1999-ஆம் ஆண்டு புத்தாண்டை மறக்கவே முடியாது. பிபிசியின் மாஸ்கோ அலுவலகத்தில் தயாரிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத ஒரு அவசர செய்தி வந்தது. 'ரஷ்ய அதிபர் போரிஸ்யெல்ட்சன் பதவி விலகினார்' என்னும் செய்திதான் அது. அவரது ராஜினாமா முடிவு மாஸ்கோவில் இயங்கி வந்த பிரிட…

  24. 29 DEC, 2024 | 06:56 PM கனடாவின் ஏர் கனடா (Air Canada) விமானம் ஒன்று தீ பிடித்த நிலையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஏர் கனடா விமானத்தின் லாண்டிங் கியர் செயலிழந்ததால் விமானத்தின் இறக்கை ஓடுதளத்தில் உரசி திடீரென தீப்பிடித்துள்ளது. இந்நிலையில், ஹாலிஃபாக்ஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/202494

  25. Published By: RAJEEBAN 17 SEP, 2024 | 08:29 PM தொலைத்தொடர்பு சாதனங்கள் திடீரென வெடித்துச்சிதறியதில் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பின் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள புறநகர் பகுதிகளிலும் லெபானின் ஏனைய பகுதிகளிலும் இந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பல பேஜர்கள் வெடித்துச் சிதறின என ஹெஸ்புல்லா அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் தரையில் அமர்ந்திருப்பதையும் ஏனையவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. கடைகளில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை சிசிடிவிகள் காண்பித்துள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.