Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகல்: அடுத்தது என்ன? ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமென பிரிட்டன் வாக்களித்திருக்கிறது. சரி இனி என்ன நடக்கும்? உடனடியாக ஒன்றும் மாறாது. அடுத்து என்ன செய்வது என அரசியல்வாதிகள் முடிவெடுக்கும்வரை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கும். ஐரோப்பிய ஒன்றிய முக்கிய தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து பிரஸ்ஸல்ஸில் நெருக்கடிகால கூட்டங்கள் கூட்டப்படும். அப்படியானால் அதிகாரப்பூர்வ வெளியேற்றம் எப்போது ஆரம்பிக்கும் என்பதே பலரின் கேள்வி? லிஸ்பன் ஒப்பந்தம் 50 ஆவது பிரிவு அதற்கான நடைமுறையை விளக்குகிறது. அதன்படி, வெளியேறுவதற்கான ம…

  2. இன்றைய நிகழ்ச்சியில் - ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது என்ற முக்கிய முடிவை பிரிட்டன் எடுத்துள்ளது. நாட்டின் பிரதமர் டேவிட் கமெரன் ஒக்டோபரில் பதவி விலகுகிறார். - ஐரோப்பிய தலைவர்கள் வரும் வாரங்களில் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஸ்டெர்லிங் பவுண்ட் வீழ்ச்சி கண்டது. ஆசிய ஐரோப்பிய சந்தைகளிலும் வீழ்ச்சி. - கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவு குறித்து ஐரோப்பாவிலும், உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளனர்.

  3. தொழிற் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகளை தொடர்ந்து, பிரிட்டனில் எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை அக்கட்சியை சேர்ந்த இரு எம்.பிக்கள் சமர்ப்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்ற அதிகாரபூர்வ கொள்கையை தொழிலாளர் கட்சி கொண்டிருந்த போதிலும், பாரம்பரியமாக தொழிற்கட்சியின் கோட்டையாக விளங்கிய வட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக பெரிய அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தன. …

  4. பிரிட்டன் வெளியேற்றம்: பிரிட்டிஷ் வாக்காளர்களின் கருத்தை 'மதிக்கிறேன்'- ஒபாமா அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் மக்களின் வாக்குகளை தான் மதிப்பதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இடையே உள்ள உறவு நீடித்து நிலைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் அமெரிக்காவுக்கு தவிர்க்க முடியாத கூட்டாளிகளாக இருப்பதாக தெரிவித்துள்ளார். குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்திருப்பதாக தெரிவித்…

  5. “ஐரோப்பிய ஒன்றியம் 27 நாடுகளை கொண்ட அமைப்பாக தொடர்ந்து செயற்படும்” ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது விலகுவதா? என்பது பற்றி தீர்மானிக்க பிரிட்டனில் நேற்று (வியாழக்கிழமை) பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (48.1 சதவீதம்)பேரும், விலக வேண்டும் என ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 பேரும் (51.9 சதவீதம்) விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்…

  6. பிரிட்டன் வாக்கெடுப்பு: ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஐரோப்பியத் தலைவர்கள் அழைப்பு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் வாக்களித்திருப்பதற்கு பிறகு, வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஐரோப்பிய தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஐரோப்பியத் தலைவர்கள் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அழைப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சீர்திருத்தங்களும், மாற்றங்களும் கொண்டு வருவதற்கான எச்சரிக்கை அழைப்பு இது என்றும் பலர் தெரிவித்திருக்கின்றனர். இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் விளைவுகளை மதிப்பிட செவ்வாய்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடைபெற இருக்கிறது. …

  7. விடுதலை பெறும் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்ய போவதாக ஸ்காட்லாந்து அறிவிப்பு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு வழிகோலும் சட்டத்தை தன்னுடைய அரசு தயார் செய்ய தொடங்கும் என்று ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்யப்போவதாக ஸ்காட்லாந்து அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க மிகப் பெருமளவில் ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்திருந்தாலும், அவர்களின் விருப்பத்திற்கு எதிரான முடிவு வந்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஸ்காட்லாந்தின் விர…

    • 1 reply
    • 290 views
  8. ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் தீர்மானித்துள்ள நிலையில் பிரான்ஸ் மந்திரிசபை இன்று அவசரமாக கூடுகிறது. பாரிஸ்: ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என 51.5 ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 (48.1 சதவீதம்) பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது. இந்நிலையில், வாக்கெடுப்பு ம…

  9. பிரெக்சிஸ்ட் என்று அழைக்கப்பட்ட வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவுக்கு பிரிட்டன் வந்து விட்டது. இந்த யூனியனில் இருந்து வெளியேறும் முதல் நாடு பிரிட்டன்தான். ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில், 18 சதவீத உள்நாட்டு உற்பத்தி திறனும், மிகப் பெரிய வலுவான பொருளாதாரத்தையும் கொண்ட நாடு பிரிட்டன். தற்போது பிரிட்டனின் வெளியேற்ற முடிவு, ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு கூட கடும் நெருக்கடியை அளித்துள்ளது. இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் பொருளதார ரீதியாக மிகுந்த தொடர்பு உண்டு. இந்தியாவுக்கு அதிக அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டனுக்கு 5வது இடம். அமெரிக்கா மற்றும் பிரான்சுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் அதிக முதலீடு செய்ய…

  10. பிரிட்டன் வெளியேற்றத்தை தாங்குமா ஐரோப்பிய யூனியன்?- நிபுணர்கள் கருத்து லண்டன் | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக பிரிட்டன் வாக்களித்ததையடுத்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஐரோப்பாவின் பெருங்கனவு நொறுங்கியதாக அதிகாரிகளும், நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அகதிகள் நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலைமைகளை எதிர்கொண்டு வரும் ஐரோப்பிய யூனியனிலிருந்து மிகப்பெரிய உறுப்பினரான பிரிட்டன் வெளியேறுவதையடுத்து மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. தற்போது முக்கிய விவகாரத்தில் மக்கள் தீர்ப்பை பிரிட்டன் நாடியதையடுத்து மற்ற நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இருப்பதா வேண்டாமா என…

  11. போபால்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்றிருக்கும் நாடு பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பா.ஜ.க. பிரமுகர் விஜேந்திர சிங் சிசோடியா அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில், மத்தியப் பிரதேச பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விஜேந்திர சிங் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ராகுல் காந்தி எந்த நாட்டுக்குச் சென்றிருக்கிறார் என்பது குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு எனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் பரிசு தரக் காத்திருக்கிறேன். எந்த நாட்டுக்குச் செல்கிறார் என்பதைத் தெரிவிக்காமல், ராகுல் காந்தி வெளிநாடு செல்வது ஏன்? எனத் தெரியவில்லை. இ…

  12. மத்திய கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ நூற்றுக்கணக்கான மக்களை தங்களது வீடுகளில் இருந்து வெளியேறச் செய்தது. லேக் இசபெல்லா என்ற மலை நகரத்தில் இருந்த 50 முதல் 60 கட்டிடங்கள் அழிந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நெருப்பு பெரிய அளவில் வளர்ந்ததால், ஆயிரக்கணக்காண வீடுகள் ஆபத்தின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது தீயணைப்பு வீரர்கள் தாங்கள் தீயை கட்டுப்படுத்துவதில் முன்னேறிச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.சமீபத்தில் மேற்கு அமெரிக்காவில் சூடான மற்றும் வறண்ட வானிலை தான் இது போன்ற தீ பரவிய பல சம்பவங்களைத் தூண்டியது என்று கூறப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=160148&category=WorldNews&language=tamil

  13. இராஜினாமா செய்கிறார் பிரித்தானியப் பிரதமர் கமெரோன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/175454/இர-ஜ-ன-ம-ச-ய-க-ற-ர-ப-ர-த-த-ன-யப-ப-ரதமர-கம-ர-ன-#sthash.85NF1G80.dpuf

  14. சீனாவில் ஆலங்கட்டி மழை - 98 பேர் பலி : 5 இலட்சம் பேர் வெளியேற்றம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி 98 பேர் பலியாகியுள்ளதுடன் 5 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மணிக்கு 100 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பெய்த கனமழையினால் ஜியாங்சு மாகாணத்தின் யான்செங் நகரில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமடைந்தன. வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இடிபாடுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 98 பேர் உயிரிழந்தனர். 1000 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூறைக்காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்…

  15.  31 வருடங்களில் இல்லாத வகையில் பவுண் சரிந்தது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என பிரித்தானியா வாக்களித்தமை, சந்தையில் பிரதிபலித்துள்ள நிலையில், 1985ஆம் ஆண்டுக்கு பின்னர், ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிரான மிகக் குறைந்த மட்டத்தை பிரித்தானியாவின் ஸ்டேர்லிங் பவுண் அடைந்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/175452/-வர-டங-கள-ல-இல-ல-த-வக-ய-ல-பவ-ண-சர-ந-தத-#sthash.5ifirHmz.dpuf

  16. ஸ்காட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறது' ஸ்காட்லாந்தின் எதிர்காலம் ஐரோப்பிய ஒன்றியத்தில்தான் - நிக்கோலா ஸ்டர்ஜன் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் , ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு முடிவுகள் , ஸ்காட்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதையே தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன என்று கூறியிருக்கிறார். ஸ்காட்லாந்து ஐக்கிய ராஜ்ஜியத்துடன் இணைந்திருக்க வேண்டுமா என்று மக்களின் கருத்துக்களை அறிய மற்றுமொரு கருத்துக்கணிப்பு நடப்பதற்கான சாத்தியக்கூறு வெகுவாக அதிகரித்துவிட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஷின் ஃப்யின் (ஐரிஷ் குடியரசுக் கட்சியின்) தலைவர் , டெக்லான் கேர்னி , பிரிட்டிஷ் வா…

  17. பிரிட்டன் முடிவு: ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அதிர்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரிட்டனில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். "முடிவை மதிக்கிறேன்" - மார்ட்டின் ஷூல்ஸ் ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ,மார்ட்டின் ஷுல்ஸ், இந்த முடிவைத் தான் மதிப்பதாகவும், ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தையும் யுரோ நாணயத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இது பிரிட்டனுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு சோகமான நாள் என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் , பிராங்க் வால்டர் ஸ்டெயின்மெயர்…

    • 4 replies
    • 399 views
  18. ஜூன் 23 இங்கிலாந்திற்கு சுதந்திரம் கிடைத்த நாளாகும் - நிகல் பேரஜ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் வாக்களித்துள்ளனர். அதிகமான மக்கள் விலக வேண்டும் என வாக்களித்திருப்பதால் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரான நிகல் பேரஜ் , ஒரு போரில் வெற்றியடைந்து போன்று உள்ளதாக உணர்கிறேன், இந்த வெற்றியானது உண்மையான மக்கள், சாதாரண மக்கள் மற்றும் ஒழுக்கம் நிறைந்த மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். ஊழல், பொருளாதாரம், அரசியல் பிரச்சனைகள் போன்ற…

    • 3 replies
    • 375 views
  19. ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிகிறது பிரிட்டன்.. இங்கிலாந்து மக்கள் அதிரடி தீர்ப்பு! லண்டன்: ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 54 % பேர் பிரிட்டன் வெளியேற வேண்டும் எனவும், 46 % பேர் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலே நீடிக்க வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக நீடிக்கலாமா, வேண்டாமா என்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெற்றது.28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனும் அங்கம் வகிக்கிறது. இதற்கு எதிராக பிரிட்டனில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்த மக்களின் கருத்த…

  20. அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா சேர பிரேசில், நியூசிலாந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து, துருக்கி ஆகிய 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி.) உறுப்பினர் ஆவதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்த குழுவில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அண்டை நாடான சீனா, இந்தியாவை இந்த குழுவில் இணைப்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு முட்டுக்கட்டுகளை போட்டு வருகிறது. அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை உறுப்பினராக சேர்ப்பது என்றால் இந்தியாவுடன் பாகிஸ்தானையும் சேர்க்கவேண்டும் என்று பிடிவாதமாக உள்ளது. …

    • 4 replies
    • 514 views
  21. இன்றைய நிகழ்ச்சியில் - ஒர்லாண்டோ தாக்குதலை அடுத்து துப்பாக்கிகளை கட்டுப்படுத்துவதற்கான வாக்களிப்பு கோரி அமெரிக்க காங்கிரஸில் போராட்டம். - லிபியாவில் ஐ எஸ்ஸிடம் இருந்து நகரை மீட்க அரசாங்க படைகள் கடுமையாக போராடுகின்றன. ஆனாலும், படையினருக்கு கடும் இழப்பும் ஏற்படுகின்றது. - அருகிவரும் ஒரு தவளை இனத்தை பாதுகாப்பதற்கான முயற்சி. பாதுகாப்பான இடத்தில் வைத்து அவற்றை காப்பாற்ற முயலும் ஆய்வாளர்கள்.

  22. ஆள் கடத்தலில் ஈடுபடும் முக்கிய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் இன்டர்போல் பெரிய சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என சர்வதேச போலிஸ் அமைப்பான இன்டர்போல் தெரிவித்துள்ளது. அவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்களை எல்லைகளுக்கு அப்பால் கடத்தி பெரும் லாபம் ஈட்டியதாக சொல்லப்படும் 26 முக்கிய சந்தேக நபர்களை இன்டர்போல் கைது செய்துள்ளது. இதில், பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு சின்ன படகுகள் மூலம் மக்களை கடத்திய அல்பேனிய கூட்டத்தினரும் அடங்குவார்கள். கடந்தாண்டு பத்து லட…

  23. ஜேர்மனிய திரையரங்கில் சுட்ட துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை மேற்கு ஜேர்மனியில் ஒரு சினிமா திரையரங்கில் துப்பாக்கி பிரயோகம் செய்த நபரை தாம் சுட்டுக் கொன்றுவிட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். ஜேர்மனிய திரையரங்கில் துப்பாக்கிதாரியை சுற்றிவளைத்த போலிஸார் பிராங்பர்ட்டுக்கு அருகே கினோபோலிஸ் வளாகத்தில் அந்த நபர் ஒரு வேட்டையாவது சுட்டதாக ஜேர்மனிய ஊடகங்கள் கூறின. 20 பேராவது காயமடைந்ததாக முன்னர் கூறப்பட்டதை போலிஸார் மறுத்துள்ளனர். அந்த நபர் ஆட்களை பணயமாக பிடித்து வைத்திருந்ததாக நம்பிய போலிஸார் அங்கு வேகமாக நுழைந்ததாக உள்துறை அமைச்சின் பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/06/160623_germantattack

  24. கருத்தறியும் வாக்கெடுப்புகள் - ஒரு சுருக்கமான வரலாறு பாலியல் தொழில், மாஃபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பிரிட்டனின் உறுப்புரிமை ஆகியவற்றுக்கு இடையே பொதுவான அம்சம் என்ன? இவையனைத்துமே மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளன. கோப்பு படம் (பிபிசி) பிரிட்டனின் அரசை பிளவுபடுத்தி, உலகெங்கும் தலைப்புச் செய்தியாக உருவாக்கிய ஒரு பரப்புரைக்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பிரிட்டன் உறுப்பினராக இருக்க வேண்டுமா என்ற வினா பிரிட்டிஷ் குடிமக்களிடம் இன்று கேட்கப்படவுள்ளது. பிரிட்டனில் இன்று நடக்கவுள்ள வாக்கெடுப்புக்கு தயார் ஏற்பாடுகள் ஆனால், பல வகையான வாக்கெடுப்புகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. ஒரு புதிய புரட்சிகர அரசி…

  25. பிரிட்டனில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு துவங்கியது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வாக்கெடுப்பில், ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லை வெளியேற வேண்டுமா என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கப்பட்டுள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தில், அதிகபட்சமாக, 46 மில்லியன் வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதி படைத்தவர்கள். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் தொடர்பாக, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பிரிட்டனில் நடைபெற்றது. அப்போது அந்த அமைப்பு, ஐரோப்பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.