உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26710 topics in this forum
-
சிரியாவின் ரக்கா நகர் மீது கடும் வான் தாக்குதல்கள் சிரியாவில் ஐ எஸ் அமைப்பு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதிகளின் கோட்டை எனக் கருதப்படும் ரக்கா நகர் மீது கடுமையான வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ரக்கா மீது கடும் வான் தாக்குதல்கள் இந்தத் தாக்குதல்களுக்கு ரஷ்ய விமானங்களே பொறுப்பு என ரக்காவிலிருக்கும் செயல்பாட்டாளர்களின் வலையமைப்பு கூறுகிறது. இத்தாக்குதலில் கணிசமான அளவுக்கு பெண்களும், சிறார்களும் கொல்லப்பட்டுள்ளனர். ரக்கா நகரில் ஐ எஸ் அமைப்பினர் பலமாக உள்ளனர் எனக் கூறப்படுகிறது ஆனால், பிரிட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் சிரியன் அப்சர்வேட்டரி குரூப் எனும் மனித உரிமைகள் அமைப்போ, ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த 30க்கும் அதிகம…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிரியாவின் வடக்கிலிருந்து 48 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் இடம்பெயர்வு வடக்கு சிரியாவில் மோதல் நடந்துவரும் பகுதிகளிலிருந்து 48 மணி நேரத்திற்குள் குறைந்தது 30 ஆயிரம் பொதுமக்கள் தப்பிச் சென்றுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மோதல் பகுதிகளிலிருந்து தப்பிக்கும் மக்களுக்காக எல்லையை திறந்துவிடும்படி துருக்கியை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மற்றைய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறி வருகின்றனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர் அல்லது அதனை நெருங்கிவிட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்பிச்செல்லும் பொதுமக்கள் துருக்கி…
-
- 0 replies
- 469 views
-
-
சிரியாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் – 637 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு! சிரியாவின் வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 637 குர்திஷ் போராளிகள் உயிரிழந்துள்ளனர். துருக்கி இராணுவத்தினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளன. சிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த போராளிகள் குழு தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி எ…
-
- 0 replies
- 433 views
-
-
சிரியாவின் வடக்கு பகுதியிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அப்பகுதியில் ஹெலிகாப்டர் தளத்தை அமைக்கும் பணியில் ரஷியா ஈடுபட்டுள்ளது. சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பை ஒடுக்கிய பிறகு, அங்கிருந்து அமெரிக்க ராணுவத்தினரை அதிபர் டிரம்ப் திரும்ப அழைத்தார். இதையடுத்து அங்குள்ள குவாமிஸ்லி (Qamishli) பகுதியில் ரஷியா ஹெலிகாப்டர் தளத்தை அமைத்து வருகிறது. ரஷியா பாதுகாப்பு அமைச்சக தொலைக்காட்சியான வேஸ்தா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் ரஷிய ஹெலிகாப்டர்கள் வருகை தொடர்பான வீடியோ காட்சியையும் அத்தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. https://www.polimernews.com/dnews/88793/சிரியாவின்-வடபகுதியில்ஹெலிகாப்டர்-தளம்அமைக்கிறது-ரஷியா
-
- 1 reply
- 428 views
-
-
சிரியாவிற்கான ஐநாவின் திட்டம் ஒரு மைல்கல்' பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளுமாறு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் மோதலை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சிகளில், சிரியாவிற்கான ஐநாவின் திட்டம் `ஒரு மைல்கல்' என, அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம், யுத்தம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கிடையே ஒரு உண்மையான தெரிவை சிரியர்களுக்கு கொடுத்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுள், முறையான பேச்சுக்களை நடத்துவது மற்றும் ஒற்றுமை அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்கு ஒரு நேர அட்டவணையை முன்மொழிந்த குறித்த திட்டத்தை, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 509 views
-
-
சிரியாவிற்கு ரஸ்யா ஆதரவளிக்கக் கூடாது – ஜீ7 நாடுகள் சிரியாவிற்கு ரஸ்யா ஆதரவளித்து வருவதனை எதிர்ப்பதாக ஜீ7 நாடுகள் தெரிவித்துள்ளன. அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலியின் லுக்கா நகரில் ஜீ7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்த நிலையில் சிரியாவிற்கு வழங்கி வரும் ஆதரவினை ரஸ்யா வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாறாக சமாதான முனைப்புக்களில் ரஸ்யா பங்களிப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/23849
-
- 0 replies
- 234 views
-
-
சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் விலக ஆரம்பம்… January 12, 2019 சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் விலகுவதற்கு ஆரம்பித்து விட்டதாக அமெரிக்க கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் சீன் ரியான் தெரிவித்துள்ளார். சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல இடம்பெற்றுவரும் உள்நாட்டுப்போரினையடுத்து அங்கு பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் ஏற்பட்டுள்ளதனையடுத்து அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு முதன்முறையாக அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில் சிரியா சென்ற அமெரிக்க படையினர் அங்கு ஐ.எஸ். தீவீரவாதிகள் நிலைகள் மீது வான்தாக்குதல்களை மேற்கொண்டு பல நகரங்களை அவர்களிடமிருந்து மீட்டிருந்தனர். இந்தநி…
-
- 1 reply
- 918 views
-
-
சிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை விலக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்- டிரம்ப் Share சிரியாவில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படையினர் ஐஎஸ் அமைப்பினை தோற்கடிக்கும் தங்கள் நடவடிக்கையில் வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை விலக்கும் நடவடிக்;கையை ஆரம்பித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர். நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம் அவர்கள் அனைவரும் திரும்பி வருகின்றனர் என டிரம்ப் அறிவித்துள்ளார் இதேவேளை சிரியாவிலிருந்து அமெரிக்காவின் 2000 படையினரை விலககிக்கொள்ளும் டிரம்பின் அறிவிப்பிற்கு அவரது குடியரசுக்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அமெரிக்க…
-
- 0 replies
- 711 views
-
-
Image copyrightRIA Novosti சிரியாவிலிருந்து வெளியேறும் ரஷ்ய போர் விமானங்களின் முதல் தொடரணி ரஷ்யாவை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ரஷ்ய தலையீட்டின் முக்கிய நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா தமது படைகளை வெளியேற்றத்தொடங்கியுள்ளது என்றும் அதிபர் புட்டின் நேற்று திடீரென அறிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இன்று விடியற்காலை இராணுவ உபகரணங்கள் சரக்கு விமானங்களில் ஏற்றப்படுவதை ரஷ்ய அரச ஊடகம் ஒளிப்பரப்பியுள்ளது. அதிபர் அஸ்ஸத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மோதலின் அலையை திசை திருப்பியுள்ளன என்று தெரிவித்த அதிபர் புட்ட்டின், தற்போது அமைதி பேச்சுக்கள் ஆரம்பிக்க ஏ…
-
- 0 replies
- 371 views
-
-
சிரியாவிலும் போராட்டம் வெடித்தது! கடந்த மாதம் பெப்ரவரி துனிசியாவிலும் அதைத் தொடர்ந்து எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. அவை முடிவுக்கு வந்த நிலையில் லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதன் பக்கத்து நாடான சிரியாவிலும் போராட்டம் வெடித்துள்ளது. அங்கு பாத் கட்சியைச் சேர்ந்த பஷார் அல்-ஆசாத் கடந்த 50 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வருகிறார். மேலும் அங்கு 48 ஆண்டுகளாக அவரச சட்டம் அமலில் இருந்து வருகிறது. அதனால் அதிபர் ஆசாத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் கலவர மாக மாறியுள்ளது. அங்குள்ள தேரா நகர வீதிகளில் போராட…
-
- 1 reply
- 611 views
-
-
சிரியாவில் 1,000 க்கும் அதிகமானோர் பலி! - ரஷ்ய விமானங்களே பொறுப்பு! [Thursday 2016-01-21 22:00] சிரியாவில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா தாக்குதல்களை நடத்துவதற்கு ஆரம்பித்தது முதற்கொண்டு இதுவரை 1,000 க்கும் அதிகமான பொதுமக்கள் உயிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் புதன்கிழமை தெரிவித்தது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் ரஷ்யாவால் சிரியாவில் நடத்தப்பட்ட மேற்படி வான் தாக்குதல்களில் 200 சிறுவர்கள் உட்பட 1,015 பேர் பலியாகியுள்ளதாக அந்த நிலையம் கூறுகிறது. அதேசமயம் இந்தத் தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த 893 பேரும் எதிர்க் குழுவைச் சேர்ந்த 1,141 பேரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவில் நான்கு மாதங்களுக்கு முன்னர் …
-
- 0 replies
- 371 views
-
-
சிரியாவில் 2 ஆண்டுகளில் 4,000 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஐஎஸ் கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 4,000 பேரை ஐ.எஸ். தீவிரவாத அமைப்ப மரண தண்டனை மூலம் கொன்று குவித்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. அதாவது ஜூன் 2014-ல் ஐஎஸ்ஐஎஸ். அறிவிப்பு தினம் முதல் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வேண்டாதவர்களை, இயக்கத்தை எதிர்ப்பவர்களை, அயல்நாட்டினரை என்று பல்வேறு தரப்பினரையும், சுட்டுக் கொல்லுதல், தலையை துண்டித்தல், கல்லெறிந்து கொல்லுதல் மற்றும் கட்டிடங்களிலிருந்து தூக்கி வீசுதல் என்று பல்வேறு கொடூரமான விதங்களில் மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது ஐ.எஸ். ஓர்பாலினச் சேர்க…
-
- 0 replies
- 436 views
-
-
[size=3] [/size] சிரியாவில் 220 அப்பாவிகள் கொல்லப்பட்டமைக்கு ஐநா விசாரணை குழு! [size=3] சிரியாவில் கிராமம் ஒன்றில் நேற்று நடந்த இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக கண்காணிப்புக்குழுவை அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. [/size][size=4] சிரியாவின் மத்திய ஹோம்ஸ் மாகாணத்தின் டிரிம்ஷே கிராமத்தில் ஜனாதிபதி பஷர் -அல் அசாத்தின் ஆதரவு இராணுவப்படையினர், கடந்த வியாழக்கிழை துவங்கி சனிக்கிழமை இரவு வரை அதிரடியாக தொடர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 220 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. செய்தி தொடர்பாளர் சூசா…
-
- 0 replies
- 516 views
-
-
சிரியாவில் 26 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு சிரிய பாதுகாப்பு படையினர் தான் காரணம் என்று எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 11 மாதங்களாக நடந்து வரும் போராட்டங்களுக்கு 8,500 பேர் பலியாகியுள்ளனர். இந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகளின் கூட்டமைப்பு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. தூதர் கோஃபி அன்னன் ஆகியோர் டமாஸ்கஸ் சென்று அரசு மற்றும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே கடும் போராட்டம் நடந்து வரும் …
-
- 0 replies
- 499 views
-
-
சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தம் கொண்டுவரும் ஐநாவின் தீர்மானத்துக்கு ரஸ்யா மறுப்பு சிரியாவில் 30 நாட்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் உடன்பாடில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய – ரஸ்ய கூட்டுப் படைகள் மேற்கொண்ட வான்தாக்குதலில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். nhகால்லப்பட்டவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வான்; தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மருத்துவ உதவி குழுக்களை அங்கு அனு…
-
- 0 replies
- 166 views
-
-
சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் கொண்டுவர தடுமாறும் ஐ.நா. சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபை தடுமாறி வருகிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மருத்துவ உதவிக் குழுக்களை அங்கு அனுமதிக்கக் கூறியும் குவைத்தும், சுவீடனும் ஐக்கிய நாட…
-
- 0 replies
- 536 views
-
-
சிரியா நாட்டில் ராணுவத்தினரின் உச்சக்கட்ட வெறியாட்டத்திற்கு கடந்த 11 மாதங்களில் 400 குழந்தைகள் வரை கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதனை யுனிசெப் அறிவித்துள்ளது. சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலக கோரி 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கிளர்ச்சியாளர்கள் போராடிவருகின்றனர். அவர்களுடன் பொது மக்களும் இணைந்து போராடிவருவதால் அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். பொது மக்களுக்கு ஆதவாக போராட புரட்சி படையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படையினர் சில பகுதிகளில் வலுவாக உள்ளனர். அந்த பகுதிகளில் ராணுவம் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது. ஹாம்ஸ் நகரில் ராணுத்தினர் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டு…
-
- 1 reply
- 781 views
-
-
சிரியாவில் 46 பேர் உயிரிழப்பு! 2016-02-21 21:55:46 சிரியாவின் வர்த்தக நகரமான ஹோம்ஸ் நகரில் இன்று நடந்த தொடர்ச்சியான இரு கார் குண்டு தாக்குதலில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதலில் 28 பொதுமக்கள் உள்ளடங்கலாக 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த அலெப்போ நகரை அண்மையில் இராணுவப் படையினர் மீட்டனர். இராணுவத்தினரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் மும்முரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை …
-
- 0 replies
- 347 views
-
-
சிரியாவில் 5-வது நாளாக வான்வழித் தாக்குதல்: இதுவரை 400 பேர் பலி வான்வழித் தாக்குதலில் காயமடைந்த சிறுமி சிரியாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வான்வழித் தாக்குதல் நடந்து வருகிறது. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து சிரிய கண்காணிப்பு குழு கூறும்போது, "சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். வியாழக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் 48 பேர் பலியாகினர்" என்று கூ…
-
- 0 replies
- 210 views
-
-
சிரியாவில் 65 இளைஞர்கள் தலையில் சுட்டு படுகொலை சிரியாவில் கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் பல்வேறு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சிரியாவின் வர்த்தக நகரமான அலெப்போவில் 65 இளைஞர்கள் நெற்றி மற்றும் தோள்பட்டையில் சுடப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட கிடந்தனர். கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள அந்த இளைஞர்களின் உடல்கள் அங்குள்ள குவெய்க் ஆற்றுப்பகுதியில் கிடந்துள்ளன. இந்த ஆற்றில் மேலும் சடலங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன என்று போராளிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். பஸ்தான் அல் காசர் மாவட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இளைஞர்களை, போராளிகள் கடத்தி வந்து சுட்டுக்கொன்றுள்ளனர் என்று அதிபர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அப்பகுதிகளில் இது ப…
-
- 2 replies
- 404 views
-
-
சிரியாவில் 65,00 பேர் காணாமல் போயினர் 2011ஆம் ஆண்டில் சிரிய சிவில் யுத்தம் ஆரம்பித்திருந்து, 65,000க்கும் மேற்பட்டோர் , அரசாங்கத்தினால் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்ப்புக் குரலைக் கொண்டுள்ளோரையே அரசாங்கம், இவ்வாறு கட்டமைக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில், காணாமல் போகச் செய்வதாக அச்சபை மேலும் தெரிவிக்கிறது. சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள 'சிறைக்கும் கல்லறைக்கும் நடுவில்" என்ற தலைப்பில், சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே, இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கப் பாதுகாப்புப் படைகளின் நான்கு பிரிவுகளான இராணுவப் புலனாய்வுப் பிரிவு, விமானப்படை புலனாய்வுப் பிர…
-
- 0 replies
- 686 views
-
-
சிரியாவில் அதிபருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 7,500 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அதேநேரம், எதிர்த் தரப்பினர் அதிகம் உள்ள ஹோம்ஸ் நகர் மற்றும் ஹமா மாவட்டத்தின் பிற பகுதிகள், நாட்டின் வட பகுதி உள்ளிட்ட பல இடங்களில் சிரிய ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் மனிதாபிமான உதவிகளை அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வர, அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இத்தீர்மானத்திற்கு சீனா ஆதர வளிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், ஐ.நா.,வின் மத்திய கிழக்குக்கான அரசியல் விவகாரங்களின் சார்புச்…
-
- 2 replies
- 592 views
-
-
ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். ஈராக்கை தொடர்ந்து சிரியாவிலும் பல நகரங்களை தன் வசப்படுத்த தீவிரமாக போரிட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சிரியாவில் கிழக்கு பகுதிகளில் பெரிய நகரங்களில் ஒன்றான ரக்ஹாவை கைப்பற்றினர். தற்போது அடுத்த படியாக இட்னிட் நகரை கைப்பற்ற அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அது அலெக்போ மற்றும் கடற்கரை நகரமான லடாகியா இடையே உள்ளது. இவை அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியின் கீழ் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் ஜப்கத்ர ஆல் நு ஸ்ரா தீவிரவாதிகள் இட்லிப் நகருக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கு சமீபத்தில…
-
- 0 replies
- 558 views
-
-
சிரியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 16 பேர் பலி கமாஷிலி உணவகத்தில் குண்டுவெடிப்பு. | படம்: ராய்ட்டர்ஸ். சிரியாவின் வடகிழக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தகவலை சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பிரிட்டன் மனிதநேய அமைப்பு வெளியிட்டுள்ளது. சிரியாவில் கிறிஸ்தவ மக்களின் குடியிருப்பு இருக்கும் பகுதி அருகே உள்ள உணவு விடுதியில் இருந்த நபர் அங்கு தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதனை அடுத்து சில நிமிடங்களில் 2 குண்டுகள் அதே பகுதியில் வெடித்தன. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத…
-
- 0 replies
- 460 views
-
-
சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை வான்தாக்குதல் ; பொது மக்கள் 56 பேர் பலி சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் பிடியில் உள்ள கிராமத்தில் அமெரிக்க கூட்டுப்படை வான் தாக்குதலை நடத்தியது. அப்போது போர் விமானங்கள் ஐ.எஸ். இயக்கத்தினரின் நிலைகள் மீது குண்டுகளை வீசியவேளையில் தவறுதலாக மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் குண்டுகளை வீசி விட்டன. இந்த தாக்குதலில் சிறுவர்கள் 11 பேர் உள்பட பொது மக்கள் 56 பேர் பலியாகினர். மக்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேற முற்பட்டபோது குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்து விட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. http://www.virakesari.lk/article/9184
-
- 0 replies
- 496 views
-