Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் வெள்ளத்தில் 24 பேர் பலி: விர்ஜீனியா பேரழிவு பகுதி ஆக பிரகடனம் அமெரிக்காவில் வெள்ளத்துக்கு 24 பேர் பலியான விர்ஜீனியாவை பேரழிவு பகுதியாக அதிபர் ஒபாமா பிரகடனம் செய்துள்ளார். அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மேற்கு விர்ஜீனியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக புயல் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு ஆக காட்சி அளிக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் 24 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு…

  2. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் 2 லட்சம் கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. தவிர பவுண்ட் நாணய மதிப்பு 31 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. 1985-ம் ஆண்டுக்கு பிறகு அதிக சரிவை இப்போது பவுண்ட் சந்தித்திருக்கிறது. ஐரோப்பிய சந்தைகளில் கடும் சரிவு இருந்தது. பிரான்ஸ் பங்குச் சந்தை 8 சதவீதமும், ஜெர்மனி சந்தை 7 சதவீதமும், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் சந்தையும் கடும் சரிவை சந்தித்தன. லண்டன் எப்டிஎஸ்இ சந்தை 3.2 சதவீதம் சரிந்தது. அமெரிக்க சந்தையான டவ் ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை 3 சதவீதம் அளவுக்கு சரிந்தது. தேவையான சமயத்தில் நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாக பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கி, …

    • 0 replies
    • 293 views
  3. பிரிட்டன் வெளியேறும் காலகெடு பற்றி தொடரும் கலந்தாய்வுகள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் காலகெடு பற்றிய கலந்தாய்வுகள் தொடர்கின்றன. பிரிட்டன் வெளியேறும் காலகெடு தொடர்பாக கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன எந்தவொரு பேச்சுவார்த்தையையும் தொடங்குவதற்கு முன்னால் முறையான அறிவிப்பு அவசியம் என்று ஐரோப்பிய கவுன்சில் தெளிவுப்படுத்தியுள்ளது. விலகுவதற்கான வழிமுறைகளை தொடங்குவதற்கு முன்னால் கொஞ்சம் நேரம் எடுத்துகொள்ள விரும்புவதாக பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை காத்திருக்க அவர்கள் விரும்புகின்றனர். நீண்ட, தாமதமான முயற்சிகள் தங்களுடைய அடுத்த வேலைகளை தொடங்குவதற்கு இடைஞ்சல் கொடுக்…

  4. இரண்டாவது பெரிய அரசியல் தலையை பலிவாங்கியுள்ள பிரிட்டன் வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் நிலை பற்றிய பிரிட்டன் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவால் ஏற்பட்டுள்ள அரசியில் விளைவுகள் நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் தலையை பலிவாங்கியுள்ளது. எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையின் சக உறுப்பினர்களை பதவி விலக ஹிலாரி பென் ஊக்கமூட்டினார் என கூறப்படுகிறது எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கார்பைன், வெளிவிவகார பேச்சாளர் ஹிலாரி பென்னை பதவிலிருந்து நீக்கியுள்ளார். திங்கள்கிழமை விவாதிக்கப்பட இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோர்பையின் புறக்கணித்தால், பதவி விலகுவதற்கு எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையின் சக உ…

  5. அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க இந்திய அரசியல்வாதிகளிடம் ஹிலாரி பணம் வாங்கினார்: டிரம்ப் குற்றச்சாட்டு அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசுக்கட்சி சார்பில் பெரும் தொழிலதிபரான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். இரு தலைவர்களும் போட்டிபோட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் ஹிலாரி கிளின்டன் பணம் பெற்றதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். டிரம்பின் தேர்தல் பிரச்சார பேச்சுக்கள் அடங்கிய 35 பக்கங்கொண்ட கையேடு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மேற்கண்ட தகவல் அடங்கியுள்ளது. இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்து…

  6. பிரிட்டன் வெளியேறும் நடைமுறை: மாறுபட்ட சமிக்ஞைகளை அனுப்பும் ஜெர்மனி வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சியூட்டிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு விலகுவதற்கான வழிமுறையை பிரிட்டன் எவ்வளவு விரைவாக தொடங்க வேண்டும் என்பதற்கு விரைவாக எனவும் மெதுவாக எனவும் கலவையான செய்திகளை ஜெர்மனி அனுப்பி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற விரைவாக, மெதுவாக என கலவையான செய்திகளை ஜெர்மனி அனுப்பி வருகிறது வெளியேறுவதற்கான வழிமுறையை தூண்டுவதற்கு பிரிட்டன் அவசரப்பட வேண்டாம். ஆனால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என ஜெர்மானிய அரசத் தலைவி ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்க…

    • 2 replies
    • 586 views
  7. தேடுதல் வசதி வழங்கும் இணையதளங்கள், அவை வழங்குகின்ற தேடல் முடிவுகளில் விளம்பரத்திற்கு பணம் கொடுப்போரை இனம்காட்டுவதற்கு தேவைப்படுகின்ற விதிமுறைகளை சீனா முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.உடல்நல பராமரிப்பு பொருட்களுக்கான லாபகரமான விளம்பரங்கள் பற்றி இணைதள பயன்பாட்டாளர்கள் முக்கியமாக கருத்தில் கொண்டுள்ளதாக சீனாவின் இணையவெளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த சட்டத்திற்கு முற்றிலும் இணங்கி நடப்போம் என்று சீனாவின் மிக பெரிய தேடுதல் வசதி அளிக்கும் இணையதளமான `பெய்து' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அரிதான புற்றுநோயால் அவதியுற்ற மாணவர் ஒருவர், பெய்து, இணையதளத்தில் தேடி கிடைத்த முடிவுகள் வழியாக கண்டறிந்த சிகிச்சையை சோதித்து பார்த்து, இ…

  8. அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை பணியமர்த்துவதில் உள்ள தடையை அடுத்த மாதம் பென்டகன் நீக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளார்கள். இந்த விதிமுறை காலாவதி ஆகிவிட்டதாகவும், ராணுவத்திற்கு தீங்கு இழைப்பதாகவும் பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்டர் தெரிவித்துள்ளார்.இந்த முடிவு, திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக போராடும் பிரசாரகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ராணுவத்தின் செயலராக எரிக் ஃபேனிங் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பிறகு இந்த முடிவு வெளியாகியுள்ளது. அவரும் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=160221&category=WorldNews&language=tamil

  9. இராஜினாமா செய்கிறார் பிரித்தானியப் பிரதமர் கமெரோன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/175454/இர-ஜ-ன-ம-ச-ய-க-ற-ர-ப-ர-த-த-ன-யப-ப-ரதமர-கம-ர-ன-#sthash.85NF1G80.dpuf

  10. பெல்ஜியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சோதனையில் இருவர் கைது இரவு முழுவதும் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சோதனையின் போது, இருவரை பெல்ஜியம் போலிசார் தடுத்து வைத்திருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நபர், கிழக்கில் உள்ள வெர்வியர்ஸ் நகரிலும் மற்றொருவர் பிரெஞ்சு எல்லைக்கு அருகில் உள்ள டூர்னை என்ற நகரிலும் கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து பேசுவதற்கு ஏற்ற நேரம் இதுவல்ல என்றார் அவர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர், ஞாயிறன்று நடைபெற உள்ள பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி அணிகள் இடையேயான யூரோ 2016 கால்பந்து ஆட்டத்தின் போது, ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக உறுதி செய்ய முடியாத…

  11. லைகா மொபைல் நிறுவனத்தின் பிரான்ஸ் அலுவலகத்தில் ரெய்டு... மோசடிப் புகாரில் 19 பேர் கைது!! லண்டன்: மொபைல் சர்வீஸ் துறையில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியது பிரான்ஸ் போலீஸ். இதில் அந்த நிறுவனம் ஏராளமான பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நிறுவனத்தின் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்களில் லைகா மொபைலின் இயக்குநர்களுள் ஒருவரான் அலெய்ன் ஜோசிமெக்கும் ஒருவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட 19 பேரில், 9 பேர் வரி ஏய்ப்புக்காவும், மீதி 10 பேர் பண மோசடிக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போலீஸ் தகவல் வ…

  12. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன. இ…

  13. ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம். இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள். இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிப…

  14. பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய பிரிவினை: ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...? பெரிய சச்சரவுகள் ஏதுமின்றி, ஒரு பிரிவு நிகழ்ந்திருக்கிறது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருது வெளியேற முடிவு செய்திருக்கிறது. இது, அந்த நாடு தான்தோன்றித் தனமாக தானே எடுத்த முடிவு அல்ல. அது மக்களிடம் வாக்கெடுப்பு நிகழ்த்தி, ஜனநாயக வழியில் பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறது. வாக்கெடுப்பில் 48.11 சதவீதம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்போமென்றும், 51.89 சதவீதம் பேர் வெளியேறுவோமென்றும் வாக்களித்து இருக்கிறார்கள். உண்மையில் இது பிரிட்டனுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கடினமான காலம்தான். என்ன ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு...?: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறு…

  15. விடுதலை பெறும் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்ய போவதாக ஸ்காட்லாந்து அறிவிப்பு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு வழிகோலும் சட்டத்தை தன்னுடைய அரசு தயார் செய்ய தொடங்கும் என்று ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்யப்போவதாக ஸ்காட்லாந்து அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க மிகப் பெருமளவில் ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்திருந்தாலும், அவர்களின் விருப்பத்திற்கு எதிரான முடிவு வந்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஸ்காட்லாந்தின் விர…

    • 1 reply
    • 290 views
  16. பிரிட்டன் வெளியேற்றம்: பிரிட்டிஷ் வாக்காளர்களின் கருத்தை 'மதிக்கிறேன்'- ஒபாமா அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் மக்களின் வாக்குகளை தான் மதிப்பதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இடையே உள்ள உறவு நீடித்து நிலைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் அமெரிக்காவுக்கு தவிர்க்க முடியாத கூட்டாளிகளாக இருப்பதாக தெரிவித்துள்ளார். குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்திருப்பதாக தெரிவித்…

  17. தொழிற் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகளை தொடர்ந்து, பிரிட்டனில் எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை அக்கட்சியை சேர்ந்த இரு எம்.பிக்கள் சமர்ப்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்ற அதிகாரபூர்வ கொள்கையை தொழிலாளர் கட்சி கொண்டிருந்த போதிலும், பாரம்பரியமாக தொழிற்கட்சியின் கோட்டையாக விளங்கிய வட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக பெரிய அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தன. …

  18. ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிகிறது பிரிட்டன்.. இங்கிலாந்து மக்கள் அதிரடி தீர்ப்பு! லண்டன்: ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 54 % பேர் பிரிட்டன் வெளியேற வேண்டும் எனவும், 46 % பேர் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலே நீடிக்க வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக நீடிக்கலாமா, வேண்டாமா என்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெற்றது.28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனும் அங்கம் வகிக்கிறது. இதற்கு எதிராக பிரிட்டனில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்த மக்களின் கருத்த…

  19. இன்றைய நிகழ்ச்சியில் - ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது என்ற முக்கிய முடிவை பிரிட்டன் எடுத்துள்ளது. நாட்டின் பிரதமர் டேவிட் கமெரன் ஒக்டோபரில் பதவி விலகுகிறார். - ஐரோப்பிய தலைவர்கள் வரும் வாரங்களில் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஸ்டெர்லிங் பவுண்ட் வீழ்ச்சி கண்டது. ஆசிய ஐரோப்பிய சந்தைகளிலும் வீழ்ச்சி. - கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவு குறித்து ஐரோப்பாவிலும், உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளனர்.

  20. “ஐரோப்பிய ஒன்றியம் 27 நாடுகளை கொண்ட அமைப்பாக தொடர்ந்து செயற்படும்” ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது விலகுவதா? என்பது பற்றி தீர்மானிக்க பிரிட்டனில் நேற்று (வியாழக்கிழமை) பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (48.1 சதவீதம்)பேரும், விலக வேண்டும் என ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 பேரும் (51.9 சதவீதம்) விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்…

  21. பிரிட்டன் வாக்கெடுப்பு: ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஐரோப்பியத் தலைவர்கள் அழைப்பு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் வாக்களித்திருப்பதற்கு பிறகு, வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஐரோப்பிய தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஐரோப்பியத் தலைவர்கள் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அழைப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சீர்திருத்தங்களும், மாற்றங்களும் கொண்டு வருவதற்கான எச்சரிக்கை அழைப்பு இது என்றும் பலர் தெரிவித்திருக்கின்றனர். இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் விளைவுகளை மதிப்பிட செவ்வாய்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடைபெற இருக்கிறது. …

  22. ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் தீர்மானித்துள்ள நிலையில் பிரான்ஸ் மந்திரிசபை இன்று அவசரமாக கூடுகிறது. பாரிஸ்: ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என 51.5 ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 (48.1 சதவீதம்) பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது. இந்நிலையில், வாக்கெடுப்பு ம…

  23. பிரெக்சிஸ்ட் என்று அழைக்கப்பட்ட வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவுக்கு பிரிட்டன் வந்து விட்டது. இந்த யூனியனில் இருந்து வெளியேறும் முதல் நாடு பிரிட்டன்தான். ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில், 18 சதவீத உள்நாட்டு உற்பத்தி திறனும், மிகப் பெரிய வலுவான பொருளாதாரத்தையும் கொண்ட நாடு பிரிட்டன். தற்போது பிரிட்டனின் வெளியேற்ற முடிவு, ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு கூட கடும் நெருக்கடியை அளித்துள்ளது. இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் பொருளதார ரீதியாக மிகுந்த தொடர்பு உண்டு. இந்தியாவுக்கு அதிக அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டனுக்கு 5வது இடம். அமெரிக்கா மற்றும் பிரான்சுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் அதிக முதலீடு செய்ய…

  24. பிரிட்டன் வெளியேற்றத்தை தாங்குமா ஐரோப்பிய யூனியன்?- நிபுணர்கள் கருத்து லண்டன் | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக பிரிட்டன் வாக்களித்ததையடுத்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஐரோப்பாவின் பெருங்கனவு நொறுங்கியதாக அதிகாரிகளும், நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அகதிகள் நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலைமைகளை எதிர்கொண்டு வரும் ஐரோப்பிய யூனியனிலிருந்து மிகப்பெரிய உறுப்பினரான பிரிட்டன் வெளியேறுவதையடுத்து மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. தற்போது முக்கிய விவகாரத்தில் மக்கள் தீர்ப்பை பிரிட்டன் நாடியதையடுத்து மற்ற நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இருப்பதா வேண்டாமா என…

  25. பிரிட்டன் முடிவு: ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அதிர்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரிட்டனில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். "முடிவை மதிக்கிறேன்" - மார்ட்டின் ஷூல்ஸ் ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ,மார்ட்டின் ஷுல்ஸ், இந்த முடிவைத் தான் மதிப்பதாகவும், ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தையும் யுரோ நாணயத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இது பிரிட்டனுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு சோகமான நாள் என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் , பிராங்க் வால்டர் ஸ்டெயின்மெயர்…

    • 4 replies
    • 401 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.