Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடியர்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின் பின்னர் மாற்றம் ஒன்றை நோக்கி புதிய தலைவர் ஒருவரை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையுடன் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர். தற்போதைய பழமைவாத கட்சியின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் நான்காவது தடவையாகவும் பிரதமராக போராடிய அதேவேளை லிபரல் கட்சி யானது ஜஸ்டின்ஐ பிரதமராக‌ கொண்டு தனித்து ஆட்சியமைப்பதற்கு மொத்தம் 338 ஆசனங்களில் 170 ஆசனங்கள் தேவையிருப்ப‌தால் தற்போதய நிலவரங்களின்படி 175 ஆசனங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது . இதில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் லிபரல் கட்சியில் கனேடிய குடியுரிமை பெற்ற இலங்கையரரான‌ கரி ஆனந்தசங்கரி தெரிவாகியுள்ளாரெனவும், ஈழத்தமிழர்களின் வாக்கு இவரது வெற்றியில் கணிசமான பங்கு ஆற்றியி…

  2. லண்டன் மாநகரக் காவல்துறையில் சற்று வித்தியாசமான திறன் படைத்தவர்கள் இருக்கின்றனர். தாங்கள் பார்க்கின்ற கிட்டத்தட்ட எல்லா முகங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும் அசாத்திய திறமை இந்த சூப்பர் ரெக்கக்னைசர்களுக்கு (Super Recogniser) உள்ளது. மக்கள் கூட்டங்களுக்குள்ளே குற்றவாளிகளையும் சந்தேகநபர்களையும் தங்களின் கழுகுக் கண்களைக் கொண்டு கண்டுபிடிப்பது தான் அவர்களின் வேலை. http://www.bbc.com/tamil/global/2015/10/151021_super_recognisers

  3. மக்களின் வாழ்க்கைமுறையில் எத்தனையோ வேறுபாடுகளும் வினோதங்களும் உலகின் பல பகுதிகளிலும் இருப்பதை வலைதள வசதிகள் வந்த பிறகு, மிக எளிதாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியான போர்னியோவில் பஜாவு என்ற ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கடலிலேயே வாழ்கின்றனர். ’கடல் நாடோடிகள்’ என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பசிபிக் கடல் போர்னியோவில் ஒரு பெரிய நில வளைவுக்குள் இப்பகுதி அமைந்துள்ளது. அதனால், அங்கு பெரிய அலைகள், ஆரவாரம் ஏதுமின்றி, அமைதியான கடல் பகுதியாக காணப்படுகிறது. இந்த கடல்பகுதியில் பஜாவு என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் கடல்மீது மரங்களாலும் பலகைகளாலும் ஆன சிறிய குடில்களை கடல் மட்டத்துக்கு உயரத்தில் அமைத்து அதில் வச…

    • 2 replies
    • 1.7k views
  4. 400 ஆண்டுகளாக நீரில் மூழ்கிய தேவாலயம்: மீண்டும் தெரிவதால் மக்கள் பரவசம்! மெக்சிகோ: மெக்சிக்கோ நாட்டில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய தேவாலயம் ஒன்று ஆற்றுக்குள் இருந்து மீண்டும் வெளியே தெரிவதால் மெக்சிகோ மக்கள் பரவசத்தில் திளைத்துள்ளனர். மெக்சிகோவின் நெசஹுவால்கோயோட்ல் நீர்த்தேக்கத்தில், வறட்சியால் 82 அடிக்கு நீர் குறைந்து போனது. அதனால் 16 ம் நூற்றாண்டின் மத்தியில், ப்ரெய்ர் பார்ட்டோலோம் டி லா கஸாஸ் என்கிற பாதிரியாரின் தலைமையில், இப்பகுதியைச் சேர்ந்த மக்களால் நிறுவப்பட்ட 183 அடி உயரமுள்ள இந்த தேவாலயம் தற்போது வெளியில் தெரிகிறது. கடந்த 1773 மற்றும் 1776 ம் ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட பிளேக் நோயால் இந்த தேவாலயம் கைவிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தேவா…

  5. விமானத்தில் பயணியை கடித்துக் கொன்றதாக போர்ச்சுகல் பெண் கைது போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனிலிருந்து டப்ளினுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் சக பயணியை பெண் கடித்துக் கொன்றதாக அவரை போலீஸார் கைது செய்தனர். லிஸ்பனில் இருந்து டப்ளினுக்கு ஏர் லிங்கஸ் என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 165 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த பிரேசிலைச் சேர்ந்த இளைஞருக்கும், அவரது அருகே அமர்ந்திருந்த பெண் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி தகறாரில் கோபமடைந்த அந்தப் பெண், இளைஞரைக் கடித்துக் குதறியதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து காயமடைந்த அந்த இளைஞர் மயங்கி விழுந்தார். உடனடியாக விரைந்த விமானத்திலிருந்த…

  6. ஐரோப்பிய எல்லைகளில் புதிய கட்டுப்பாடுகளால் குடியேறிகள் தவிப்பு ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயற்சித்த ஆயிரக்கணக்கான குடியேறிகள் எல்லைகளைக் கடக்கும் இடங்களிலேயே சிக்கியுள்ளனர். ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயற்சித்த ஆயிரக்கணக்கான குடியேறிகள் எல்லைகளைக் கடக்கும் இடங்களிலேயே சிக்கியுள்ளனர். ஸ்லோவேனியா மற்றும் க்ரோயேஷியாவுக்கு இடையிலான, எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பகுதியில், மழை மற்றும் கடுங்குளிரில், தங்க இடமில்லாமல், குழந்தைகள் உட்பட பல குடும்பங்கள் சிக்கியுள்ளன. எண்ணிக்கையே இல்லாமல் குடியேறிகளை ஏற்றுக்கொண்டே இரு…

  7. காதலி கொலை வழக்கில் பிஸ்டோரியஸுக்கு பரோல் பிஸ்டோரியஸ். காதலி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் ஓராண்டுக்கு பின்னர் பரோலில் விடுவிக்கப்பட்டார். பாரா ஒலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் பரோலில் விடுதலை ஆன நிலையில், அவர் சிறையிலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 5 ஆண்டு கால தண்டனையை சீர்திருத்த கண்காணிப்பில் வீட்டு சிறையில் அனுபவிக்கும்படியாக தென் ஆப்பிரிக்காவின் பரோல் சபை தெரிவித்துள்ளது. பிஸ்டோரியஸ் அவரது காதலியான ரீவா ஸ்டீன்காம்பை கொன்றதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. வீட்டுக்குள் யாரோ புகுந்துள்ளார்கள் என்று நினைத்து குளியலறை வழியாக தான் மேற்கொண்ட துப்பாக்கி…

  8. 'குடியேறிகளுக்கு ஆதரவான மேயர் வேட்பாளருக்கு கத்திக்குத்து' bbc ஹன்ரியட் ரெக்கர் ஜெர்மனியில் குடியேறிகளுக்கு ஆதரவான பெண் அரசியல்வாதி ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளானதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. ஜெர்மனியில் குடியேறிகளுக்கு ஆதரவான பெண் அரசியல்வாதி ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளானதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. ஜெர்மனிய நகரமான கொலோனில், உள்ளூர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக மேயர் வேட்பாளரை கத்தியால் குத்தியவர் இனவெறி நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதாக ஜெர்மன் போலீஸார் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான குடியேறிகளை அனுமதிக்கும் ஜெர்மன் அரசின் கொள்கைக்கு தாக்குதலாளி எதிரானவர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கொலோனுக்கு வரும் குடியேறிகளுக்கு தங்க இடம் அளிக்கும…

  9. அமெரிக்காவின் பிரபல சங்கிலித் தொடர் நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் பல லட்சம் டாலர் களை லஞ்சமாக அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வால்ஸ்டிரீட் பத்திரிகையில் வெளியான செய்தியில் சந்தேகப்படும்படி யான லஞ்சம் என்ற தலைப்பில் இந்தியாவில் பல லட்சம் டாலர் தொகையை வால்மார்ட் நிறுவனம் வழங்கியதாக தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. சுங்கத் துறை வழியாக பொருள்களை எடுத்து வருவதற் கும், இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் அனுமதி பெறுவதற்கும் இத்தகைய லஞ்சம் வழங்கப்பட்டிருப்பதாக அந்த செய்தி யில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது 200 டாலருக்கும் குறைவாக அதாவது இந்திய மதிப்பில் அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரையிலும் குறைந்தபட்சம் 5 டாலர் அதாவது ரூ. 500-க்கு…

  10. ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த முக்கியப் பகுதிகளை கைப்பற்றியுள்ளோம்: சிரிய படைகள் அறிவிப்பு செவ்வாய், 20 அக்டோபர் 2015 (10:13 IST) சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த முக்கியப் பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக அரசு படைகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவின் அலெப்போவின் பகுதியில் உள்ள பல முக்கிய நகரங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் உள்ளது. இதனைக் கைப்பற்ற சிரிய அரசு படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சிரிய அரசு படைகளுடன் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இணைந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அலெப்போ பகுதியில் உள்ள பல முக்கிய நகரங்களை அரசு படை கைப்பற்றியுள்ளதாக சிரிய அரசு தொல…

  11. இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1,400 கோடி அபராதம் வாஷிங்டன் : இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில் நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனம், ரூ.1,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் குரிந்தர் சோஹி, இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் மின்னணுதுறை பேராசிரியர் டெரனி விஜயகுமார். இந்த இருவரும் ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானி பல்கலையில் பி.டெக்., மின்னணு தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள். இவர்களை உள்ளடக்கிய 4 பேர் கொண்ட குழு, அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலையின் கீழ் ச…

  12. தாய்லாந்தில் வருடாந்த மத வைபவம் தாய்லாந்தில் புகெத் நகரிலுள்ள சீன சம்கொங் புனிதஸ்தலம் மற்றும் சீன பான் தா ரூ புனித ஸ்தலம் என்ப வற்றில் இடம்பெற்ற வருடாந்த வைபவத்தில் கலந்து கொண்ட நூற்றுக்க ணக்கான ஆண்கள் தமது உடலிலும் கன்னங்களிலும் துளையிட்டு அதனூடாக உலோகக் கோல்களையும் கத்திகளையும் துப்பாக்கிகளையும் உட்செலுத்தி வீதியில் ஊர்வலமாக சென்ற போது எடுக்கப்பட்ட படங்களை காணலாம். http://www.virakesari.lk/articles/2015/10/19/தாய்லாந்தில்-வருடாந்த-மத-வைபவம்

  13. லண்டன் பிக் பென் கடிகார மணியோசை நிறுத்தப்படுகிறது உலக அளவில் நன்கு அறியப்பட்ட லண்டன் Big Ben என்று அழைக்கப்படும் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வானுயர் மணிக்கூண்டு கோபுர கடிகாரத்தின் மணியோசை நிறுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறது. உலக அளவில் நன்கு அறியப்பட்ட லண்டன் Big Ben என்று அழைக்கப்படும் மணிக்கூண்டு கோபுர கடிகாரத்தின் மணியோசை நிறுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறது. தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வானுயர் மணிக்கூண்டு கோபுரம் மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதாகவும், உடனடியாக அதற்கு பராமரிப்புப் பணிகள் செய்யவேண்டிய அவசரம் ஏற்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று பரிந்துரை செய்திருக்…

  14. யூதர்களின் புனிதத் தலம் எரிப்பு: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் முற்றுகிறது படம்: ராய்ட்டர்ஸ். இஸ்ரேல் நாட்டில் யூதர்களின் புனித தலத்தை பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதமாக யூதர்கள் மீது பாலஸ்தீன போராட்டக்காரர்கள் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதன்படி ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் யூதர்களுக்கு எதிராக கத்திக் குத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இதுவரை 7 யூதர்கள் உயிரிழந்துள்ளனர். நுற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம், போலீஸாரின் பதிலடி தாக்குதல்களில் 30 ப…

    • 12 replies
    • 2.2k views
  15. 4 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை, 3 யூதர்களுக்கு கத்திக் குத்து: இஸ்ரேலில் தொடரும் பதற்றம் ஜெருசலேம் நகரில் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இஸ்ரேல் போலீஸார். இஸ்ரேலின் ஜெருசலேம், ஹீப்ரான் நகரங்களில் 3 யூதர்கள் மீது நேற்று கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தகைய தாக்குதலில் ஈடுபட்ட 4 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் யூதர்களை குறிவைத்து பாலஸ்தீன போராட்டக்காரர்கள் கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 8 யூதர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் போலீஸார், ராணுவ வீரர்கள் மேற்கொண்ட பதிலடியில் 39 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹீப்ரானில் நேற்றுமுன்தினம் செய்தியாளர் வேட…

  16. சவுதியில் ஐஎஸ் தீவிரவாதி தாக்குதல்: 5 பேர் பலி சவுதி அரேபியாவில் ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். கிழக்கு மாகாணத்தின், காட்டிஃப் நகரம், சயிஹத் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை ஷியா முஸ்லிம்களின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அரங்கில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் ஒருவர் கூட்டத்தினரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 1 பெண் உட்பட 5 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த நபரை போலீஸார் சுட்டுக்கொன்றனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப் புடன் தொடர்புள்ளதாகசவுதி உள்துறை அமைச்சகம் தெரி வித்தது. இதனிடையே ஐ.எஸ். அமைப்பின் பஹ்ரைன் பிரிவு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற் றுள்ளது. ஷியா ம…

  17. குடி­யேற்­ற­வா­சி­களை அதிர்ச்­சி­ய­டைய வைத்த கரடி பிரித்­தா­னி­யா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக பிர­வே­சிக்கும் முக­மாக லொறி­யொன்றின் பின் பக்­கத்தில் அத்­து­மீறி ஏற முயன்ற குடி­யேற்­ற­வா­சிகள், அங்கு கூண்டில் அடைக்­கப்­பட்ட நிலையில் அபா­ய­க­ர மான கர­டி­யொன்று இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் பிரான்ஸின் காலெயிஸ் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ ளது. செவ்வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் வியா ­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. மேற்­படி கர­டி­யா­னது அந்த லொறியில் ரஷ்­யா­வி­லி­ருந்து பிரித்­தா­னிய யோர்க் ஷிய­ரி­லுள்ள மிரு­கக்­காட்­சி­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட போதே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. காலெ­யிஸில் …

  18. 48 வருடமாக பிரிட்டனில் வாழ்ந்த பெண்ணுக்கு வெளியேறும் அச்சுறுத்தல் bbc 48 வருடமாக பிரிட்டனில் வாழ்ந்த பெண்ணுக்கு வெளியேறும் அச்சுறுத்தல் பிரிட்டனில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் ஒரு பெண்ணை நாட்டைவிட்டு வெளியேற வேண்டிவரும் என்று உள்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் பெண் ஒருவரை தொடர்பு கொண்ட பிரித்தானிய உள்துறை அலுவலகம், குறித்த பெண் தற்போது சட்டவிரோத குடியேறியாக கருதப்படுவதாகவும், ஆதலால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்படலாம் எனவும் அறிவித்துள்ளது. லன்காஷயரில் - பேர்ன்லி என்ற இடத்தை சேர்ந்த வின்னி பேர்க்கின்ஹெட், 1967 இல் மலேஷியாவிலிருந்து தனது தாயுடன், தாயின் கடவுச்சீட்டில் பதியப்பட்டு, அவருடன் வந்துள்ளார். அண்மையி…

  19. அகதிகளை வரவேற்றுப் புகலிடமளிக்கும் யேர்மனிபற்றி பரபரப்பான செய்திகள் வெளிவரும் இவ்வேளையில், அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள்பற்றிய செய்திகள் மிகக்குறைந்தளவிலேயே வெளிவருகிறது, இந்நிலையில் லூட்விக்போர்க் நகரச் செய்திப் பத்திரிகையொன்று யேர்மனியிவிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள்பற்றிய கணக்கு ஒன்றைத் தற்போது வெளியிட்டுள்ளது. ஆண்டு: திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் தொகை: 2000 35444 2002 29036 2004 23334 2006 13894 2010 7558 2014 10884 2015 8178 தை - ஆனிமாதம்வரை. 2000ம் ஆண்டிற்கு முதலும், மற்றும் பின்வரும் ஆண்டுகள்பற்றிய கணக்குகளையும் அப்பத்திரிகை வெளியிடவில்ல…

    • 0 replies
    • 501 views
  20. இரட்டை கோபுர தாக்குதலில் புஷ்ஷுக்கு தொடர்பு: டோனால்ட் ட்ரம்ப் டோனால்ட் ட்ரம்ப். | கோப்புப் படம். அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதலில் அப்போதைய அதிபர் ஜார்ஜ் டபள்யூ புஷ்ஷுக்கு தொடர்பு இருப்பதாக அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் கூறினார். 2016ல் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறினார். அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். அதனை விவரிக்குமாறு செய்தியாளர் கேட்டபோது, அப்போதைய அதிபர் அவர் தான். அதில் நிச்சயம் அவர் சம்மந்தப்பட்டுள்ளார் என்றார். அமெரிக்க அதிபர் த…

  21. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்குகிறது ரஷ்ய கடற்படை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக விரைவில் ரஷ்ட கடற்படை தாக்குதல் நடத்தும் என்று மூத்த கடற்படை அதிகாரி ஆண்ட்ரே கர்டாபோலவ் தெரிவித்துள்ளார். சிரியா, இராக்கில் பெரும் பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி அரசை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போரிட் டாலும் சிரியாவின் தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. இந்நிலையில் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படை சிரியாவில் முகாமிட்டுள்ளது. சில வாரங்களாக ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய விமானப் படை தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது…

    • 3 replies
    • 1.8k views
  22. ஐரோப்பாவுக்குள் வரும் குடியேறிகளைத் தடுக்க துருக்கி இணக்கம் bbc ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கிப் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது ஐரோப்பாவுக்குள் பெருந்தொகையான குடியேறிகள் வந்துகுவிவதை தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு துருக்கி இணங்கியுள்ளது. ஐரோப்பாவுக்குள் பெருந்தொகையான குடியேறிகள் வந்துகுவிவதை தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு துருக்கி இணங்கியுள்ளது. பெரும் நிதியுதவிகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கியின் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரசல்ஸில் …

  23. ஆஸ்திரேலியாவில் உள்ள காட்டுப்பூனைகளில் சுமார் 20 லட்சம் பூனைகளைக் கொல்ல அரசு எடுத்திருக்கும் முடிவை ஆஸ்திரேலிய அரசு நியாயப்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 2 கோடி காட்டுப்பூனைகள் இருக்கின்றன. இவைகள் நாட்டிற்கு சொந்தமான, அழிவின் அபாயத்திலிருக்கும் சுமார் 120க்கும் மேற்பட்ட விலங்கினங்களை அச்சுறுத்துவதாகவும் அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு கூறுகிறது. பிரெஞ்சு நடிகை பிரிஜிட் பார்தோவும் பிரிட்டிஷ் பாடகர் மோரிசியும் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு ஒரு "விலங்கினப் படுகொலை" என்று பிரிஜிட் பார்தோ வர்ணித்திருந்தார். இந்த பூனைகளைக் கொல்லும் முடிவு ஒரு "முட்டாள்தனமானது" என்று கூறிய மோரிசி, இந்த பூனைகள் ஜிம்பாப்வேயி…

    • 7 replies
    • 903 views
  24. புக்கர் பரிசை வென்ற முதல் ஜமைக்கன்! ஆங்கில இலக்கிய உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'மேன் புக்கர்' பரிசை இந்த ஆண்டு ஜமைக்காவை சேர்ந்த மர்லான் ஜேம்ஸ் என்பவர் வென்றுள்ளார். 5000 பவுண்ட் பரிசு தொகையைக் கொண்ட இந்த விருதைப் பெரும் முதல் ஜமைக்கன், மர்லான் ஜேம்ஸ் ஆவார். A Brief History of Seven Killings என்கிற இவரது புத்தகத்திற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. தனது முதல் நாவலை 70 பதிப்பாளர்கள் நிராகரித்தப் பின்னர், எழுதுவதையே கொஞ்ச காலம் விட்டு விட்ட ஜேம்ஸ், இன்று உலகின் மிகச் சிறந்த எழுத்தாளருக்கான புக்கர் பரிசை தட்டி சென்றுள்ளது விடாமுயற்சிக்கு கிடைத்திருக்கும் விஸ்வரூப வெற்றி. 1969 லிருந்து வழங்கப்பட்டு வரும் இந்த புக்கர் பரிசு இங்கிலாந்து, ஸ்காட்லான்ட், அயர…

  25. ரஷ்யா, அமெரிக்க நாடுகள் மீது புனிதப்போர்: ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடி! டமாஸ்கஸ்: சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய, அமெரிக்க நாடுகள் மீது நம் இனத்தினர் புனிதப்போர் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அழைப்பு விடுத்து உள்ளது. மேற்கு ஆசிய நாடான சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் கிளர்ச்சி தொடங்கியது. அதிபர் ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான சண்டையில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் ஆதரவு படைகளுக்கு எதிராக சண்டையிட்டு முக்கிய நகரங்களை தங்கள் கட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.