உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் எ தீவிரவாத இயக்கம், சமீபத்தில் நைரோபியில் வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தி 67 பேரை கொன்றனது. இதனால் இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவமும், அமெரிக்கா ராணுவமும் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் சோமாலியாவின் தெற்குபகுதியில் சென்று கொண்டிருந்த காரை,அமெரிக்க உளவு விமானம் குண்டு வீசி தகர்த்தது. அதில் காரில் பயணம் செய்த 2 பேர் இறந்தனர். இவர்களில் ஒருவர் இப்ராகிம் அலி என்ற பெயருடையவர், தீவிரவாத இயக்கத்தின் குண்டு தயாரிக்கும் நிபுணர் ஆவார். http://www.seithy.com/breifNews.php?newsID=96061&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 483 views
-
-
சோமாலியாவில் அரச படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அமைச்சர் பலி சோமாலியாவில் அரச படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 31 வயதான Abas Abdullahi Sheikh என்ற அமைச்சரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் அரசாங்கப் படையினர் தவறுதலாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் மொகடிஸூவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவயது புகலிடக் கோரிக்கையாளரான Abas Abdullahi Sheikh கடந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அல் கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சோமாலியாவில் குழப்ப…
-
- 0 replies
- 333 views
-
-
சோமாலியாவில் ஆபிரிக்க ஒன்றிய படைகளுடன் புருண்டி படை இணைவு [25 - December - 2007] [Font Size - A - A - A] புஜும்புரா: சோமாலியாவில் சமாதானத்துக்காக போராடும் ஆபிரிக்க ஒன்றியப் படைகளுடன் இணைவதற்கு புருண்டி அரசு தனது நூறு இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. மொகாடிசுவின் அரச படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் நான்கு பொதுமக்கள் பலியானதைத் தொடர்ந்து இந்நூறு படையினரும் கடுமைான பாதுகாப்புகளுக்கு மத்தியில் மோஹாடிசு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். இங்கு ஏற்கனவே கடமையில் ஈடுபட்டுள்ள 8000 படையினரின் பலத்தை மேலும் வலுவடையச் செய்யும் நோக்குடன் மேலும் 1,600 உகண்டாவின் இராணுவத்தினரும் சேர்க்கப்படவுள்ளனர். ஆனால், இங்கு தொடர்ந்த…
-
- 0 replies
- 826 views
-
-
சோமாலியாவில் லொறி குண்டுத் தாக்குதல்; முப்பது பேர் பலி! சோமாலியா தலைநகர் மொகாதிஷுவில் சற்று முன் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் சுமார் முப்பது பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் ஒன்றின் முற்புறம், முழுவதும் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட லொறியொன்று வெடிக்கச் செய்யப்பட்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டது முதல் சிறிது நேரத்துக்கு அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கட்டடங்கள் என்பனவற்றில் தீ பரவியதாகவும், கடும் முயற்சியின் பின் அவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, மதீனாவில் நடத்தப்பட்ட மற்றொரு குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். இத்…
-
- 2 replies
- 972 views
-
-
சோமாலியாவில் இரட்டை குண்டுத் தாக்குதல் : ஐ.நா.வின் 9 பாதுகாவலர்கள் பலி : அல் ஷபாப் பொறுப்பேற்பு சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே இடம்பெற்று இரட்டை இரண்டு தற்கொலைப்படை தாக்குதலில் ஐக்கிய நாடுகளின் 9 பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அல் ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மொகடிசுவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு மேற்கொள்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு தாக்குதல் விமான நிலையத்தின் வாயில் அருகில் உள்ள சோதனைச்சாவடி பகுதியிலும் மற்றுமொரு தாக்குதல் விமான நிலையத்திற்கு சற்று அப்பால் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 220 views
-
-
சோமாலியாவில் இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; 22 பேர் பலி சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவுக்கு தென்மேற்கே உள்ள இராணுவ முகாம் மீது நேற்று அல்-சபாப் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். குறித்த தாக்குதலில் 10 இராணுவ வீரர்களும், 12 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தாங்கள் நடத்திய இந்த தாக்குதலில் 30 வீரர்கள் பலியானதாக அல்-சபாப் அமைப்பு தெரிவித்தது. எனினும் தங்கள் தரப்பில் பலியானோர் குறித்து அவர்கள் வெளியிடவில்லை. இராணுவத்திற்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரமாக சண்டை நடந்தது. இறுதியில் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றமை குறிப்பிடத்…
-
- 0 replies
- 135 views
-
-
சோமாலியாவில் கடும் சண்டை(BBCtamil) கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 ஏப்ரல், 2012 - 14:54 ஜிஎம்டி சோமாலிய படையினர் ( ஆவணப்படம்) சோமாலியாவில் சோமாலிலாந்து குடியரசை சுயமாகப் பிரகடனம் செய்த படையினருக்கும், பிரிந்துபோன பிராந்தியமான கட்டுமா மாநிலத்தின் விசுவாசப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டைகள் நடந்திருக்கின்றன. சர்ச்சைக்குரிய வடமேற்கு சோமாலிய பகுதியில் இரு முனைகளில் நடந்த இந்தச் சண்டைகளை ஆரம்பித்ததாக இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பல மக்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் மருத்துவமனைகள் கூறுகின்றன. இந்த வருட முற்பகுதியில் சோமாலிலாந்தில் இருந்து கட்டுமா மாநிலம் பிரிந்த பின்னர் நடக்கும் மிகவும் மோசமான…
-
- 0 replies
- 342 views
-
-
சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து! சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக சோமாலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இ.எம்.பி- 120 (EMB-120) என்ற விமானமே நேற்று (திங்கட்கிழமை) மாலை இவ்வாறு விபத்துக்குள்ளானது. தலைநகர் மொகடிஷூவில் இருந்து பார்தேல் நகருக்குச் சென்ற குறித்த விமானம், பார்தேல் விமான நிலையத்துக்கு சற்று தொலைவில் விபத்துக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானி, துணை விமானி, விமான பொறியாளர் மற்றும் ஒரு பயிற்சி விமானி, அதே போல் விமான நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பே…
-
- 0 replies
- 429 views
-
-
சோமாலியாவில் தீவிரவாத குழுவுடன் தொடர்புபட்ட ஊடகவியலாளருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் சோமாலியாவில் அல் – ஷபாப் தீவிரவாதிகளுக்கு சக ஊடகவியலாளர்கள் ஐவரைக் கொல்வதற்கு உதவிய ஊடகவியலாளர் ஒருவருக்கு திங்கட்கிழமை துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னர் கௌரவமிக்க ஊடகவியலாளராக விளங்கிய ஹஸன் ஹனாபிக்கு கடந்த மாதம் தலைநகர் மொகாடிஸுவிலுள்ள இராணுவ நீதிமன்றமொன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. அவர் 2007 ஆம் ஆண்டுக்கும் 2011 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் அந்த ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதற்கு தீவிரவாத குழுவிற்கு உதவியதாக கூறப்…
-
- 0 replies
- 339 views
-
-
சோமாலியாவில் அல்- ஷபாப் தீவிரவாதிகள் மீதான தாக்குதல்களில், சோமாலிய துருப்பினரோடு இணைந்து அமெரிக்க படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பில் அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவித்த சோமாலிய உளவுத் துறை அதிகாரி, சோமாலிய துருப்பினரோடு இணைந்து அமெரிக்க படையினர் நேற்று முன்னெடுத்த தாக்குதலானது, அல்-ஷபாப் தீவிரவாதக் குழுவின் உயர்நிலை அதிகாரி ஒருவரை இலக்குவைத்து நடத்தப்பட்டதாகவும், அதில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.இது தொடர்பில் முன்னர் செய்தி வெளியிட்டிருந்த அல்-ஷபாப் தீவிரவாத குழு, வெளிநாட்டு படைகள் நடத்திய தாக்குதலுக்கு தாம் பதில் தாக்குதல் மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட குறித்த தாக்…
-
- 0 replies
- 207 views
-
-
சோமாலியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் அல்-ஷபாபின் மூத்த தளபதி உயிரிழப்பு! by : Anojkiyan சோமாலியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் இஸ்லாமிய போராளிகள் இயக்கமான அல்-ஷபாபின் மூத்த தளபதி பஷீர் மொஹமட் கோர்காப் உயிரிழந்துள்ளார். கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி தெற்கு சோமாலிய நகரமான சாகோவில் சோமாலியா – அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கையில் பஷீர் மொஹமட் கோர்காப் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க தரப்பில் எவ்வி தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், கோர்காபின் மரணத்தை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் வெளியாவதற்கு ஏற்பட்ட …
-
- 0 replies
- 286 views
-
-
சோமாலியாவில் இஸ்லாமிய கடும்போக்குப் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது அமெரிக்க ஏசி 130 ரக விமானம் கடுமையான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டது. கடந்த சில வாரங்களாக சோமாலியப்படைகளும் எதியோப்பியப் படைகளும் இணைந்து சோமாலியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்திப் பல பிரதேசங்களை மீட்டும் இருந்தன. இன்னும் அவற்றின் தாக்குதல் தொடரும் தறுவாரில் அமெரிக்க இராணுவத் தலையீடு திடீர் என்று முளைத்திருக்கிறது. இந்தத் தாக்குதலில் 27 அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சிறுவர்களும் இதில் அடங்குவர் என்றும் செய்திகள் கூறுகின்றன. அமெரிக்க தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் அல் கொய்டா தீவிரவாதிகளுக்கும் தொட…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஆப்பிரிக்க யூனியன் படைகள் தளத்தைப் பாதுகாக்க தொடர்ந்து போரிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளன. சோமாலியாவில் ஆப்பிரிக்க யூனியனின் அமைதிகாக்கும் படையின் தளத்தின் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டிருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ராணுவ தளத்தை புருண்டியைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாத்துவருகின்றனர். லீகோ என்ற இடத்தில் இருக்கும் இந்தத் தளத்தின் பிரதான வாசலின் மீது, மிக வேகமாக வந்த தற்கொலைதாரியின் கார் மோதியது. தாங்கள் அந்தத் தளத்தைக் கைப்பற்றிவிட்டதாக அல் ஷபாப் கூறியிருக்கிறது. ஆனால், தாங்கள் இன்னும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் போரிட்டு வருவதாக ஆப்பிரிக்க யூனியன் படைகள் தெரிவித்திருக்கின்றன. ஆப…
-
- 0 replies
- 263 views
-
-
சோமாலியாவுக்குத் திடீர் விஜயம் மேற்கொண்டார் ஜோன் கெர்ரி இன்று செவ்வாய்க்கிழமை சோமாலியாவின் தலைநகர் மொகாடிஷுவினை அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி திடீரென வந்தடைந்துள்ளார். இதன் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றுக்கு முதலில் பயணித்த அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளராக கெர்ரி பெயர் பெற்றுள்ளார். மேலும் சோமாலியாவில் இவர் கழிக்கவுள்ள தினங்களில் அந்நாட்டு அதிபர் ஹஸ்ஸன் ஷெயிக் மொஹமுட் உட்பட பல உக்கிய சோமாலித் தலைவர்களைச் சந்திக்கவும் உள்ளார். இதற்கு முன் சோமாலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மிக நீண்ட காலமாகக் குறைந்தது 20 வருடங்களாக அதே நேரம் மிகக் குழப்பமான வரலாறே நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெப்ரவரியில் தான் அதிபர் ஒபாமா சோமாலியாவுக…
-
- 0 replies
- 283 views
-
-
சோமாலிலாந்து அரசு தன்னைப் பிரிட்டிஸ் ஆட்சிப் பாதுகாப்பின் கீழ் இருந்த முன்னைய சோமாலிலாந்தின்(Protectorate) வாரிசாகக் கருதுகிறது. அது 1960ம் ஆண்டில் சில நாட்கள் தன்னாட்சி பெற்ற நாடாக இருந்தது. அந்த சில நாட்களில் அது சோமாலிலாந்து என்ற பெயருடன் நிலவியது. அந்த சில நாட்களின் பிறகு அது இத்தாலி அரசின் பிடியில் இருந்த இத்தாலியன் சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு சோமாலியா குடியரசு (Somalia republic) என்ற நாடாக உருப்பெற்றது. வரலாற்று ரீதியாக சோமாலிலாந்து தன்னைப் பிரத்தியேகமான தரைப் பகுதியாகக் கருதி வந்துள்ளது. சோமாலியாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி சியாட் பாரே (Siad Barre) அரசு சோமாலிலாந்து மக்களை மிகவும் கொடிய விதத்தில் படுகொலை செய்தது. இது ஒரு உள்நாட்டுப் போருக்கு அடிகோலியதோடு சோமாலி…
-
- 0 replies
- 886 views
-
-
சோமாலிலாந்து சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படுமா? http://www.youtube.com/watch?v=vSgjEQQEeF4&feature=related
-
- 0 replies
- 732 views
-
-
சோமாலிலாந்த்" - புதிய நாட்டுக்கு அமெரிக்கா அங்கீகாரம்? [சனிக்கிழமை, 15 டிசெம்பர் 2007, 12:13 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] சோமாலிய நாட்டின் ஒருபகுதியில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் "சோமாலிலாந்த்" என்ற பெயரில் புதிய சுதந்திர நாடாக ஒருதலைபட்சமாக பிரகடனம் செய்யப்பட்டதை விரைவில் அமெரிக்கா அங்கீகரிக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சோமாலிலாந்து குறித்த தனது நிலைப்பாட்டை அமெரிக்க அரசாங்கம் கடந்த டிசம்பர் 5 ஆம் நாள் வெளியிட்டிருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - தேர்தல்களை நடத்துவது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள சோமாலிலாந்துக்கு அமெரிக்க அரசாங்கம் தற்போது உதவுகிறது. - சோமாலிலாந்துக்கான அங்கீகாரத்தைப் பொறுத்த வரையில் ஆப்பிரிக்க …
-
- 0 replies
- 721 views
-
-
சோமீதரனின் 'முல்லைத்தீவு சகா': கேரள திரைப்பட விழாவில் சிறப்பிப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 09:40 GMT ] [ அ.எழிலரசன் ] "கேரளாவில் மட்டுமே இது நடந்திருக்க முடியும்" என 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற படத்தினை உருவாக்கியவரான சிறிலங்காவைச் சேர்ந்த எஸ். சோமீதரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழன் அன்று கேரளாவில் இடம்பெற்ற அனைத்துலக ஆவணப்படம் மற்றும் குறும்பட நிகழ்வில் [international Documentary and Short Film Festival of Kerala] மிகப் பெரும் கடினங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இவரது 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற இவ்வாவணப்படம் நடுவர்களின் சிறப்பு பாராட்டைப் [special mention] பெற்றுள்ளது. கேரளா முதல்வர் ஓமென் சாண்டி [Chief …
-
- 4 replies
- 943 views
-
-
சோம் போர் 100 ஆண்டுகள்: ஐரோப்பா முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் முதலாவது உலகப் போரின் மிக மோசமான மோதலாகக் கருதப்படும் சோம் போரின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில், ஐரோப்பா முழுவதும் நினைவஞ்சலி நிகழ்ச்சிககள் நடைபெறுகின்றன. அஞ்சலி நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் வடக்கு பிரான்ஸில் உள்ள தீப்யல் நினைவு மண்டபத்தில், ஐரோப்பிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் படைவீரர்கள், வியாழக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினார்கள். ஜெர்மனிக்கு எதிரான தாக்குதல் துவங்கிய நேரத்தைக் குறிக்கும் வகையில், பிரிட்டன் நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த உள்ளது. லண்டனில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் ராணி எலிசபெத், பிரதமர் டேவிட் கேமரன் உள்ளிட்ட பல்வேறு…
-
- 0 replies
- 301 views
-
-
OHEA எனும் ஸ்பெயின் நிறுவனம் இந்த மின் கட்டிலை உருவாக்கியுள்ளது. நித்திரையின் பின்னர் மறுநாள் காலை இக்கட்டிலின் போர்வைகள் எப்படி கசங்கியிருந்தாலும், தானாக சரிசய்துவிடுகிறது. 50 செக்கன்களுக்குள் வேலை முடிந்துவிடுகிறது. தானாக இயங்குவதற்கும், மெனுவலாக இயங்குவதற்கும் இரண்டு பட்டன்கள் உள்ளன. Automatic ஐ அழுத்திவிட்டீர்கள் என்றால் படுக்கையை விட்டு நீங்கள் எழுந்த 3 செக்கனில் தானாக சரிசெய்ய ஆரம்பித்துவிடும். இன்னமும் இக்கட்டிலுக்கு விலை நிர்ணயிக்கபப்டவில்லை. விரைவில் சந்தைக்கு வரும் என்கிறார்கள். அங்கு கைவைத்து, இங்கு கைவைத்து, இப்போது படுக்கை வரை மின் இயந்திரங்கள் ஆக்கிரமித்துவிட்டன. நீங்கள் மகா சோம்பேறியாவதற்கு இந்த புதிய தொழில்நுட்பத்தை விட வேறென்ன தேவை? http://ww…
-
- 0 replies
- 674 views
-
-
சோலெய்மனியால் இலக்குவைக்கப்பட்ட 4 அமெரிக்கத் தூதரகங்கள்: ட்ரம்புக்கு கிடைத்த தகவல் ஈரான் புரட்சிப் படையின் தளபதி காசிம் சோலெய்மனியை அமெரிக்கா ஈராக்கில் வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றது. இதனையடுத்து ஈரான், அமெரிக்க நிலைகள் மீது ஈராக்கில் தாக்குதல் நடத்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், காசிம் சோலெய்மனியை கொலை செய்வதற்கு உத்தரவிட்டமை தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி சில காரணங்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “காசிம் சோலெய்மனி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த தாக்குதலை ஈரான்தான் நடத்திய…
-
- 0 replies
- 467 views
-
-
சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்ட மோடி பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரை நிகழ்த்தும் போது சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரை நிகழ்த்தும் போது சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். அவர் பேசுகையில் கூறியதாவது:- டிசம்பர் 4-ந்தேதி நாம் இந்திய கடற்படை தினத்தை கொண்டாட இருக்கிறோம். தேசத்துக்கும், பூமியின் பெருங்கடல்களுக்கும் இடையே பிரிக்க முடியாததொரு பெரும் தொடர்பு இருக்கிறது. நாம் வரலாற்றின் ஏடுகளை புரட்டிப் பார்த்தோம் என்றால் 800, 900 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்களின் கடற்படை மிகச் சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாக கருதப…
-
- 1 reply
- 550 views
-
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்ட்ரிச் அமெஸ் கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, 25 மே 2025, 02:43 GMT சோவியத் ஒன்றியத்துக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல்களை விற்று 100-க்கும் மேற்பட்ட ரகசிய திட்டங்களை முறியடிக்க உதவி 10 மேற்கு உளவாளிகளின் இறப்புக்கும் காரணமாக இருந்த குற்றத்திற்காக ஆல்ட்ரிச் சிறையில் உள்ளார். 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வருடம் பிப்ரவரியில் அமெஸால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு உளவாளியிடம் பிபிசி பேசியது. 1985-ம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கு வேலை பார்த்து வந்த சோவியத் ஏஜெண்ட்டுகள் ஒவ்வொருவராக காணாமல் போயினர். இந்த மேற்கத்திய உளவாளிகள் எல்லாம் சோவியத் உளவு அமைப்பான கேஜிபியால் பிடிக்கப்…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
சோவியத்தை திரும்ப அமைக்க முயற்சி செய்யவில்லை: ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் ரஷ்ய அதிபர் புதின் படம்: ராய்ட்டர்ஸ். சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டமைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஆனால், பிரச்சினை என்னவெனில் அதை யாரும் நம்பத் தயாராக இல்லை என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொலைக்காட்சியில் ‘வேர்ல்டு ஆர்டர்’ என்ற ஆவண ஒளிபரப்பில் இதுதொடர்பாக புதின் பேசியதாவது: உக்ரைன் உள்ளிட்ட பல பகுதிகள் முந்தைய சோவியத் ரஷ்யாவுக்கு உட்பட்டவை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனின் நலனுக்காக செயல்படவில்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். சோவியத் ரஷ்யா மீண்டும் உருவாகி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். …
-
- 0 replies
- 563 views
-