உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
ஃபேஸ்புக் நிறுவனரின் குழந்தைக்குப் பெயர் சூட்ட மறுத்த சீன அதிபர்! நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பெயரிட சீன அதிபர் ஸி ஜிங்பிங் மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க் ஸகர்பெர்க் காதல் திருமணம் புரிந்துகொண்ட ப்ரஸில்லா சான், சீன வம்சாவளிப் பெண் ஆவார். அகதியாக அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரஸில்லா தன்னுடன் படித்த காலம் முதலே மார்க், அவரை காதலித்து வந்தார். மருத்துவ படிப்பு முடித்த ப்ரஸில்லாவை கடந்த 2013 ஆம் ஆண்டு மார்க் திருமணம் செய்துகொண்டார். மூன்று முறை ப்ரஸில்லாவுக்கு கர்ப்பம் கலைந்துவிட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் கருத்தரித்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அமெர…
-
- 1 reply
- 726 views
-
-
ஆந்திராவில் காங்கிரஸ் கட்திக் தலைவரை வரவேற்கும் விதமாக தீபாவளி ராக்கெட் பட்டாசில் புறாக்களை கட்டி விண்ணில் செலுத்தப்பட்டதில் ஏராளமான புறாக்கள் கொல்லப்பட்டன. ஆந்திர மாநி்ல காங்கிரஸ் கட்சித் தலைவர் ரகுவீரா ரெட்டி மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொவ்வூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாநில கட்சித் தலைவரின் வருகையை முன்னிட்டு புத்திசாலித்தனமாக அவரை வரவேற்கலாம் என்ற எண்ணம் காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் உதித்தது. சமாதனத்துக்கு அடையாளமாக விளங்கும் புறாக்களை தனி பெட்டிகளில் அடைத்து அதை ராக்கெட் பட்டாசுகளில் கட்டி விண்ணில் செலுத்துவோம். ராக்கெட் பட்டாசு வெடிக்கும் போது பெட்டிகளும் வெடிக்கும் அப்போது அதில் இருக்கும் புறாக்கள் வானில் சிறகடித்து பறக்கும். இதனைப் பார்த்து…
-
- 2 replies
- 510 views
-
-
இந்தியா வந்துள்ள சான்சலர் மெர்கெலுக்கு சிறப்பான வரவேற்பு புதுடில்லி: டில்லி வந்த ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலோ மெர்கெலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி,உள்ளிட்ட தலைவர்களை மெர்கெல் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேசுகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மெர்கெல் இன்று (அக்டோபர் 05ம் தேதி) காலையில் டில்லி வந்தார் .இவரை ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து மெர்கெலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி மெர்கெலுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா மற்றும் உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார் . நமஸ்தே மெர்க்கல்: ஏஞ்சலோ மெர்கெல் வருகை குறித்து பிரதமர் மோடி தனது …
-
- 1 reply
- 484 views
-
-
'சிரியாவின் பாரம்பரிய சின்னமான பல்மிரா வளைவை தகர்த்தது ஐ.எஸ். 'தி ஆர்க் ஆஃப் ட்ரைம்ஃப்' | படம்:ஏஎப்பி. சிரியாவில் தொன்மையான பல்மைரா நகரத்தின் வளைவை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்ததாக அந்நாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் உள்ள பல்மைராவின் பாரம்பரிய மையத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து வருகின்றனர். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அடையாளம் காணப்பட்ட சிரிய நகரத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பகுதியின் பால் சாமின் கோயிலை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கெனவே தகர்த்து அதன் வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பல்மைரா நகரத்தை கடந்த மே மாதமே ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர…
-
- 0 replies
- 1.4k views
-
-
தற்பொழுது உலகில் அதிகமானவர்களால் பாவிக்கப்பட்டு வரும் சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் மீது மோசடி மேற்கொண்டமைக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கலிபோர்னியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் மிர்சியா வோஸ்கெரிகானுடன் ஜூகர் பெர்க் செய்து கொண்ட ஒப்பந்தத்திலே அவர் மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இவர் ரியல் எஸ்டேட் நிறுவனர் மிர்சியா வோஸ்கெரிகானுடன் 17 லட்சம் டொலர்களுக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். எனினும் அதனை பெர்க் நிறைவேற்ற வில்லை என்ற காரணத்திற்காகவே குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=141660&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 474 views
-
-
மலேசியா மற்றும் சிங்கப்பூரில், ஏற்பட்டுள்ள கடும் புகைமண்டலம் காரணமாக குறித்த நாடுகளில் உள்ள அனேகமான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு உத்தவரவு விடுக்கப்பட்டுள்ளது.தற்பொழுது இந்தோனேசியாவில் காய்ந்த சருகுகளால் ஏற்பட்டுள்ள பாரிய தீயின் காணமாகவே இந்த பெரும்புகை மண்டலம் உருவாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் அங்கு இவ்வாறு ஏற்படுவதால் அண்டைய நாடுகளுக்கும் இது ஒரு பாரிய சவாலாக மாறியுள்ளது. இதனால் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தற்பொழுது மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு புகைமண்டலம் பரவியுள்ளது. இதனால் சுகாதார ஆரோக்கியத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சிங்கப்பூரில் உள்ள பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்பொழுத…
-
- 0 replies
- 630 views
-
-
பிரான்ஸின் தெற்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய தரைக்கடலை ஒட்டிய பிரான்ஸின் தென்கிழக்கு கரையோரப் பகுதியில் கடும் இடியுடன் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கில் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். முதியோர் இல்லம் ஒன்று வெள்ளத்தால் சூழப்பட்டதில் வயோதிகர்கள் மூவர் உயிரிழந்தனர். இன்னொரு பெண் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்துள்ளார். அங்கு போக்குவரத்து வசதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார துண்டிப்பினாலும் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=141623&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 192 views
-
-
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பில் உள்ள குண்டூஸ் நகரில் உள்ள ஓர் பொதுமக்கள் மருத்துவமனை மீது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நேற்று சனிக்கிழமை நடத்திய குண்டுத் தாக்குதலில் அம்மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் உள்ளிட்ட 19 பேர் கொல்லப்பட்டனர். உலகெங்கும் இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளதுடன் விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். எனினும் இது ஒரு கொலைக் குற்றம் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141638&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 194 views
-
-
ஜெர்மனியின் சர்வதேசியத்துக்கு வாழ்த்துகள் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தை பிரிட்டனில் கழித்தேன். சிரியா நாட்டு அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துவருவதுதான் அப்போது முக்கியச் செய்தி. துருக்கி கடற்கரையில் அகதிகளின் சடலங்கள் ஒதுங்குவது அதிகரித்தன. தங்கள் நாட்டு எல்லை வரை வந்த அகதிகளை ஹங்கேரிய போலீஸார் குண்டாந்தடி கொண்டு அடித்து விரட்டினர். இவையெல்லாம் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகின. இச்சூழலில் அகதிகளுக்கு உதவ பிரிட்டன் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் விவாதங்களும் எங்கும் எழுந்தன. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், "நம்மால் இனி அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அறிவித்தது நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வந்தது. அதற்கான காரணங்களும் அதில் தரப்பட்டிர…
-
- 0 replies
- 231 views
-
-
படம்: ஏபி அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யாமல் தடுப்பதன் மூலம் சீனாவிடம் தங்களை உதவி கேட்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் என்று இந்தியாவை நேபாளம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து நேபாள தூதர் தீப்குமார் உபாத்யாயா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் சீனா உட்பட வேறு நாடுகளின் உதவிகளை நாடும் நிலைக்கு நேபாளத்தை இந்தியா தள்ளிவிடக் கூடாது. மற்ற நாடுகளிடம் இருந்து அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் நடைமுறை சிக்கல் இருந்தாலும், எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக இந்தி…
-
- 0 replies
- 402 views
-
-
மலேசியாவில், மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பரவியுள்ள கடும் புகைமண்டலம் காரணமாக அனேகமாக எல்லா பள்ளிக்கூடங்களையும் இரண்டு நாட்களுக்கு மூடிவிடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தப் புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகள் காரணமாக சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கூடங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. இந்தோனேசியாவில் தணலாக எரிந்துகொண்டிருக்கும் காய்ந்த சருகுகளால் பரவும் தீ தான் இந்த பெரும்புகை மண்டலம் உருவாகக் காரணம். ஒவ்வொரு ஆண்டும் அண்டை நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தக்கூடிய விடயமாகவும் இது மாறியுள்ளது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இந்த புகைமாசு தான் முன்னெப்போதையும் விட மிக மோசமானதாக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அனேமான இடங்களில…
-
- 0 replies
- 301 views
-
-
சிரிய பிரச்சினையை அமெரிக்க - ரஷ்ய போராக மாற்ற வேண்டாம்: ஒபாமா அமெரிக்க அதிபர் ஒபாமா. | கோப்புப் படம். சிரியா விவகாரத்தில் அமெரிக்கா மீதான ரஷ்யாவின் தொடர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க, இதனை இரு நாடுகளின் மறைமுக போராக மாற்ற வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், சிரியாவில் நடுநிலையான கிளர்ச்சியாளர்களுக்கு தங்களது ஆதரவு நீடிக்கும் என்பதையும், சிரிய அதிபர் பஷர் அல் அசாதுக்கு எதிராக அமெரிக்கா நிலைப்பாடு கொண்டிருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் விதத்தில் பேசினார். இது குறித்து மேலும் அவர் கூறும்போது, "ரஷ்யா மீதான புத்திசாலித்தனமான முடிவாக சிரியா விவகாரத்தை அமெரிக்கா எடுத்துக்கொள்ளவ…
-
- 0 replies
- 409 views
-
-
பீகார் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தின் பாகல்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல் தடவையாக சோனியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதை பிரதமர் ஒரு வாடிக்கையாகவே மாற்றிக்கொண்டார். மோடி நாட்டில் இருப்பதை விட விமானத்தில் வெளிநாடுகளுக்கு பறப்பதுதான் அதிகம். தேர்தலுக்காக மட்டுமே அவர் பீகாருக்கு லட்சக்கணக்கான மதிப்பில் சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி பொய்யான தகவல்களை கூறி பீகார் மக்களை திசை திருப்பி வருகிறார். பீகாருக்கு அவர் அறிவித்திருக்கும் சிறப்பு நிதிஉதவி நடைமுறையில் சாத்தியமில்லாதது. பழைய திட்டங்களை புதியவைகளாக அறிவிப்பதில் மோடி கெட்டிக்கார…
-
- 0 replies
- 269 views
-
-
ஜெர்மனி இணைப்பு தின கொண்டாட்டம் இரண்டு ஜெர்மனிகளும் இணைந்ததன் 25ஆம் ஆண்டு தின கொண்டாட்டங்கள் ஜெர்மனியில் துவங்கியுள்ளன. இரண்டு ஜெர்மனிகளும் இணைந்ததன் 25ஆம் ஆண்டு தின கொண்டாட்டங்கள் ஜெர்மனியில் துவங்கியுள்ளன. கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்த கிழக்கு ஜெர்மனியும் முதலாளித்துவ ஆட்சியின் கீழ் இருந்த மேற்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த தினம் அக்டோபர் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டுவருகிறது. ஃப்ராங்ஃபர்ட் நகரில் நடந்த கொண்டாட்டங்களில் ஜெர்மன் ஆட்சித் தலைவர் ஏங்கலா மெர்க்கலும் அதிபர் ஜோவாச்சிம் காக்கும் கலந்துகொண்டனர். பெரும் எண்ணிக்கையில் குடியேறிகள் நுழைவதால், ஜெர்மனி திணறிவரும் நிலையில் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்துவருகின்றன. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி, இந…
-
- 0 replies
- 362 views
-
-
ஆப்கனில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 11 பேர் பலி: சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் அறிவிப்பு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். விமானம் தானாக கீழே விழவில்லை என்றும், தாங்கள் தான் சுட்டு வீழ்த்தியதாகவும் தலிபான் தீவிரவாதிகள் அறிவித் துள்ளனர். இது தொடர்பாக பென்டகன் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் ஏர் போர்ஸ் சி-130 ஜே ரக ராணுவ விமானம் ஜலாலாபாத் விமான தளத்துக்கு அருகே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 11 பேரும் இறந்துவிட்டனர். இதில் 6 பேர் ராணுவ வீரர்கள், 5 பேர் பொதுமக்கள். விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிற…
-
- 1 reply
- 393 views
-
-
ஜெர்மன் சான்சிலருக்கு அமைதி நோபல் பரிசா? பெர்லின் : அகதிகள் விவகாரத்தை மிக திறமையாக கையாண்ட, ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்கெல்லுக்கு, இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசை பெற அதிக வாய்ப்புள்ளது என, ஜெர்மனியின் பிரபல நாளிதழான, 'பில்டு' தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் ஐரோப்பாவுக்கு பலர் அகதிகளாக வருவது அதிகரித்துள்ளது. உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட, உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட பலர், அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தனர்.அதேபோல, மேற்காசிய நாடுகளுள் ஒன்றான சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரால், பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தனர். இந்த விவகாரத்தில் ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சல…
-
- 0 replies
- 426 views
-
-
அமெரிக்காவின், நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பாலஸ்தீன கொடி முதல் முறையாக நேற்று (புதன்கிழமை) ஏற்றப்பட்டது.குறித்த கொடியேற்றும் நிகழ்வு, ஐக்கிய நாடுகளின் ரோஸ் கார்டனில் இடம்பெற்றது. குறித்த வரலாற்று நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐ.நா பொதுச் சபையின் தலைவர் மெஜான்ஸ் லீக்கன்டொப்ட் மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமூத் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த கொடி ஏற்றப்பட்டுள்ளதன் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பாலஸ்தீன கொடியை ஏற்றுவதற்கு உறுதுணையாக விளங…
-
- 0 replies
- 1.6k views
-
-
CNN)Ten people were killed when a gunman opened fire at Oregon's Umpqua Community College on Thursday, forcing the nation to face yet another mass shooting. Seven other people were injured, and the shooter is dead, Douglas County Sheriff John Hanlin told reporters. Earlier estimates had put the number of people hurt much higher. Multiple law enforcement officials familiar with the investigation identified the gunman as 26-year-old Chris Harper Mercer. Investigators have interviewed members of his family and friends, they said. "I will not name the shooter," Hanlin said. "I will not give him the credit he probably sought." Authorities credited a quick response by law e…
-
- 2 replies
- 721 views
-
-
ஃபோக்ஸ்வாகனின் ஊழலை அம்பலப்படுத்தி உலகையே அதிர வைத்த தமிழர்! அமெரிக்காவிலுள்ள மேற்கு விர்ஜினியாப் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றுபவர் அரவிந்த் திருவேங்கடம். அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த தமிழரான அரவிந்துக்கு தற்போது வயது 32. தானியங்கித் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான அரவிந்துக்கு, அடிக்கடி நீண்ட மகிழுந்துப் பயணம் மேற்கொள்ளுவது பிடித்தப் பொழுதுபோக்கு. குறிப்பாக, சோதனை ஓட்டத்திற்கென்று கொடுக்கப்படும் வாகனங்களைச் சோதிப்பதற்காக நெடுந்தூரம் ஓட்டிச் செல்வது இவரது வாடிக்கை. அப்படித்தான் அண்மையில், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ’பஸாட்’ காரை ஓட்டிச் சென்ற அரவிந்திற்கு, அது ஒரு வரலாற்று நிகழ்வாக அமையப்போகிறது என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். தற…
-
- 8 replies
- 1.7k views
-
-
சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா வான் வழி தாக்குதல்: அதிபர் புதினுக்கு நாடாளுமன்றம் அதிகாரம் உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவில் அரசுக்கு ஆதரவாக வான் வழி தாக்குதல் நடத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அந்நாட்டு நாடாளு மன்றம் நேற்று அதிகாரம் வழங்கியது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக ஐ.எஸ்.தீவிரவாதிகளும் அமெரிக்க ஆதரவு பெற்ற புரட்சிப் படையினரும் கடந்த 4 ஆண்டு களுக்கும் மேலாக போரிட்டு வருகின்றனர். இதில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், சிரியாவில் அரசுக்கு ஆதரவாக வான்வழி தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா தனது ராணுவத்தை அனுப்ப முடிவு செய்துள்ளது.…
-
- 0 replies
- 657 views
-
-
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை; 7 பேருக்கு ஆயுள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் | கோப்புப் படம்: பிடிஐ கடந்த 2006-ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐவரும் இந்த முக்கியக் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவர்கள். மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிண்டே இத்தீர்ப்பை வழங்கினார். வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மற்ற 7 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி, மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மரண தண்டனை பெறும் ஐவர்: கமல் …
-
- 2 replies
- 688 views
-
-
இந்தியா மீது கோபம்: நேபாளத்தில் டிவி சேனல்கள் 'முடக்கம்' இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு செல்லும் சரக்கு லாரிகள் நிறுத்தம். | படம்: ஏஎப்பி. Nepal is angry with India, so it turns off the TV நேபாள விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுகளை கண்டிப்பதாக கூறி, அந்நாட்டில் இந்திய ஊடகங்களை கேபிள் ஆப்பிரேட்டர்கள் முடக்கியுள்ளனர். மொத்தம் 42 செய்தி மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற வகையில் தடைசெய்து நிறுத்தி இருப்பதே இதற்கு காரணமாகவும், தங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை கண்டிக்கும் விதமான இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாகவும் அந்நாட்டுத் தரப்பில்…
-
- 1 reply
- 651 views
-
-
மத்திய அரசு மாட்டிறைச்சியை தடை செய்தது முற்றிலும் தவறு என்று உலகநாயகன் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். பிறப்பால் பிரமணரானாலும், தன்னை ஒரு நாத்திகராகவே வெளிக்காட்டியுள்ளார் கமலஹாசன். எனினும், கடவுளை மதிக்கின்றேன் என்றும் கூறுவார். தனது கருத்துக்களை தைரியமாக வெளியே கூறக்கூடியவர்களில் இவரும் ஒருவர். சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிக்கு இவர் அளித்த பேட்டியில் மத்திய அரசு மாட்டிறைச்சியை மகாராஷ்ட்ராவில் தடை செய்தது குறித்து கேட்ட போது, ‘ஒருவர் என்ன சாப்பிடவேண்டும் சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்யும் உரிமை அவருக்கானது. அதை அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது. மாடுகளைக் கொல்லுவதைத் தடுக்கவேண்டும் என்றால், மீன்கள் உள்பட மற்ற மிருகங்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
மோடியும் மார்க் ஸ்கர்பெர்க் சமீபத்தில் சந்தித்ததிலிருந்து, தேசியக் கொடியின் மூவர்ண சாயலில் பலரும் தங்கள் ப்ரொஃபைலில் உள்ள படங்களை மாற்றி வருகின்றனர். மோடி தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்தை மாற்றி டிஜிட்டல் இந்தியா ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து பலரும் http://fb.com/supportdigitalindia என்ற இணையதளத்தில் தங்கள் புகைப்படங்களை இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தில் மாற்றி வந்தனர். கொடுக்கப்பட்ட லிங்கில் நம் புகைப்படத்தை மூவர்ண சாயலில் மாற்றியப் பிறகு டிஜிட்டல் இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி என வரும். இதற்கிடையில் பல இணையதளங்களில் இவ்வாறு புகைப்படங்களை மூவர்ண சாயலில் மாற்றுவது டிஜிட்டல் இந்தியாவை திட்டதிற்கு ஆதரவு அளிப்பதோடு ஃபேஸ்புக்கின் “எல்லோருக்கு…
-
- 0 replies
- 219 views
-
-
வங்கதேசத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் முதல் தாக்குதல் வங்கதேசத்தில் இத்தாலியர் ஒருவரை ஐஎஸ் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் முதல் தாக்குதலை அந்த தீவிரவாத அமைப்பினர் நடத்தியுள்ளனர். சிசார் டவிலா (50) என்ற இத்தாலியர் நெதர்லாந்தை சேர்ந்த ஐசிசிஓ சர்வதேச அமைப் பின் மேலாளராக டாக்காவில் பணியாற்றி வந்தார். கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவது உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை சிசார் டவிலா நடைப் பயிற்சியில் இருந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 3 குண்டுகள் அவர் மீது பாய்ந்தன. அவரை சுட்டுவிட்டு தீவிரவாதிகள் தப்பியோடினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன…
-
- 0 replies
- 646 views
-