Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மே 7ம் தேதி இங்கிலாந்து பொதுத் தேர்தல்: - யாருக்கு வெற்றி ! [Tuesday 2015-05-05 20:00] நாளைய மறுநாள், மே 7ம் தேதி, இங்கிலாந்து பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தான் வரும் ஐந்தாண்டுக்கு இங்கிலாந்தை எந்தக் கட்சி ஆட்சி செய்யப்போகிறது என்று தீர்மானிக்கும். இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்திருக்கும் புதிய இளவரசியால் இங்கிலாந்தில் அரசியல் பரபரப்பு கொஞ்சம் தனிந்திருக்கிறது. இருந்தாலும், இந்த முறை எந்தக் கட்சி வெற்றிப் பெறும், என்று இணையங்களில் மக்களிடம் கருத்து கேட்டி கணிக்கப்பட்டு வருகின்றன. அப்படி YouGov என்ற பிரபல இணையம் மேற்கொண்ட கருத்து கணிப்பின் முடிவில் ஒரு அதிர்ச்சி கரமான முடிவு கிடைத்துள்ளது. இங்கிலாந்து தேர்தலில் மொத…

  2. இலங்கை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை, கனடியப் பராளுமன்றத்தில் பற்றிக் பிரவுண். முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவம் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இன்று பற்றிக் பிரவுண். (Patrick Brown) கனடியப் பாராளுமன்றத்தில் பதிவு செய்தார். மே 2009ல் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான அவர்களின் உறவுகளுடன் கைகோர்த்து நின்றவன் என்ற வகையில் இதனைக் குறிப்பிடுகின்றேன் எனவும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள் என்றும், இலங்கை அரசு இன்னமும் படுபாதகமான மனிதவுரிமை மீறல்கள் குறித்த எந்நதவொரு முன்னேற்த்தையும் அடையவில்லையெனவும், கனடியத் தமிழர்கள் கனடாவின் கலாச்சா…

  3. குடி வெறியில் கார் ஓடி, பாதையோரம் படுத்திருந்த ஒருவரை கொன்று, இருவரை காயப்படுத்தி அங்கிருந்து ஓடிவிட்ட சல்மான் கான், இன்று, 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் பம்பாய் நீதிமன்றில் உடனடியாகவே கைதானார். இது வக்கீலீன் மன்றாட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

  4. சிங்கப்பூரில் இன்று திறப்பு விழா காணும் இந்திய பண்பாட்டு மையம். இந்திய கலாச்சாரம், வரலாற்றினைச் சிறப்பிக்கும் வகையில் அரிய காட்சிப் பொருட்களைக் கொண்டு சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய பாரம்பரிய மையத்தினை, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் இன்று திறந்து வைக்கிறார். சிங்கப்பூர் அரசால் அமைக்கப்பட்டுள்ள இந்திய பாரம்பரிய மையத்தினை, அந்நாட்டின் தேசிய பாரம்பரிய வாரியம் நிர்வகிக்கும். இம்மையமானது, இந்திய சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், இந்தியர்களின் பரந்துபட்ட பன்முக வரலாற்றைப் பார்வையாளர்கள் அறிந்துகொள்ளவும் பெரிதும் உதவிகரமாக இருக்கும். சிங்கப்பூரில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் வசிக்கக் கூடிய லிட்டில் இந்தியாவின் இதயப்பகுதியில், புதிதாகக் கட்டப்பட்ட நான்க…

    • 0 replies
    • 188 views
  5. தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு 2014-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலைய விருது கிடைத்துள்ளது. ஜோர்டானில் ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் ஆசிய/பசிபிக்/ உலக ஆண்டுக் கூட்டத்தில் விமான நிலைய சேவைத் தரம் விருதை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வென்றது. விமான நிலைய சேவை தர அமைப்பின் 300 உறுப்பினர்களின் தர நிலைகளின் படி 5 புள்ளிகளுக்கு டெல்லி விமான நிலையம் 4.90 புள்ளிகள் பெற்றதையடுத்து இந்த விருதை வென்றது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். அதாவது, ஆண்டு ஒன்றிற்கு 2 கோடியே 50 லட்சம் முதல் 4 கோடி பயணிகளை நிர்வகித்த விதம் என்ற வகைமையின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் தர…

    • 18 replies
    • 1k views
  6. டுபாயில் தண்ணீர் உலகத்துக்குக் கீழே கட்டப் படவுள்ள டென்னிஸ் மைதானம்! டுபாய் நகரம் உலகில் மிக அதிகளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் நகரம் என்பதுடன் அங்குள்ள உலகின் மிக உயரமான பூர்ஜ் கலிஃபா கட்டடம் மற்றும் பால்ம் தீவுகள் என்பவை உலகப் புகழ் பெற்றவை என்பது நீங்கள் அறிந்திருக்கக் கூடும்! அறியாத புதிய தகவல் ஒன்று! அதாவது உலகிலேயே முதன் முறையாக தண்ணீர் உலகத்தின் (water world) கீழ் மீன்களும் கடல் வாழ் உயிரினங்களும் சூழ அதன் கீழே டென்னிஸ் மைதானம் டுபாயில் அமைக்கப் படவுள்ளது. போலிஷ் கட்டடக் கலைஞரான 30 வயதாகும் கொட்டாலா என்பவரது கனவுத் திட்டமாக இது அமையவுள்ளது. எனினும் இதை நிறைவேற்ற பலத்த சவால்கள் உள்ளதாக சில பொறியியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மிக நீண்ட…

    • 13 replies
    • 845 views
  7. கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர் ஒருவர் பதவி வகித்து வருகின்றார். இவர் அப்பிராந்தியத்திற்கான துணை பொலிஸ் மா அதிபராக வருவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன. ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்து தனது திறமைகளில் சார்ஜன்ட் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பொறுப்பதிகாரி பதவிகளிற்குத் தரமுயர்த்தப்பட்ட நிசாந்தன் துரையப்பா தற்போது பொலிஸ் அத்தியட்சராக பணிபுரிந்து வருவதோடு, அப் பிரதேசத்திலுள்ள தொண்டார்வ நிறுவனங்களிலும் தன்னை இணைத்துச் செயற்பட்டு உதவி வருகின்றார். கனடாவின் பல பிரதேசங்களிலிரும் பணிபுரியும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கனடிய மனிதவுரிம…

    • 7 replies
    • 546 views
  8. இலங்கை வம்சாவளி வேட்பாளரை சுடுவேன் என அச்சுறுத்திய பிரித்தானிய சுதந்திர கட்சி வேட்பாளர்! [Wednesday 2015-05-06 08:00] பிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இலங்கை வம்சாவளி வேட்பாளரை சுடுவேன் என்று அச்சுறுத்திய, வேட்பாளர், ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியில் இருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளரான இலங்கை வம்சாவளி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ரொபட் பிலே என்ற இந்த வேட்பாளர் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. வடகிழக்கு ஹம்செயார் பகுதியின் கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளரான ரணில் ஜெயவர்த்தனவுக்கே இவர் அச்சுறுத்தல் விடுத்துள்…

  9. தங்க நகைகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ள வெள்ளை உலோகங்களைக் கண்டுபிடிக்க உதவும் எக்ஸ்.ஆர்.எப். கருவி உலக அளவில் இந்தியாவில் தான் தங்கம் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 880 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. உலக அளவில் ஒப்பிடும்போது இது 14 சதவீதம். இந்தியாவில் 2018-ம் ஆண்டுக்குள் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் கோடி அளவுக்கு தங்க நகைகளின் வர்த்தகம் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டுக் கூறுகின்றனர். தங்கம் மீதான ஆசை, தங்கம் இறக்குமதி, தங்கத்தின் புழக்கம் அதிகம் இருப்பதுபோல, தங்கத்தில் கலப்படமும் இங்கு அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக தங்கத்தில் செம்பு, வெள்ளி உலோகங்கள் கலந்தால் தான், விரும்பிய வடிவத்தில் அதை நகையாக செய்யமுடியும். இன…

    • 0 replies
    • 313 views
  10. சோமாலியாவுக்குத் திடீர் விஜயம் மேற்கொண்டார் ஜோன் கெர்ரி இன்று செவ்வாய்க்கிழமை சோமாலியாவின் தலைநகர் மொகாடிஷுவினை அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி திடீரென வந்தடைந்துள்ளார். இதன் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றுக்கு முதலில் பயணித்த அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளராக கெர்ரி பெயர் பெற்றுள்ளார். மேலும் சோமாலியாவில் இவர் கழிக்கவுள்ள தினங்களில் அந்நாட்டு அதிபர் ஹஸ்ஸன் ஷெயிக் மொஹமுட் உட்பட பல உக்கிய சோமாலித் தலைவர்களைச் சந்திக்கவும் உள்ளார். இதற்கு முன் சோமாலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மிக நீண்ட காலமாகக் குறைந்தது 20 வருடங்களாக அதே நேரம் மிகக் குழப்பமான வரலாறே நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெப்ரவரியில் தான் அதிபர் ஒபாமா சோமாலியாவுக…

  11. 24 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்சுடன் கத்தார் ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் தங்களது ராணுவ பலத்தை கணிசமாகப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. கத்தாரும் கூடத்தான். அதே போல சௌதி அரேபியா புதிய வகை ராணுவ தளவாடங்களில் முதலீடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. தற்போது கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி பிரான்ஸ்,கத்தாருக்கு 2018ல் 24 ரஃபேல் போர் விமானங்களை விற்கிறது. வளைகுடா நாடுகள் ஒரு ஆயுதப் போட்டியில் ஈடுபட்டிருக்கின்றன, ஆனால் அது ஒரு “ ஒருவழிப்பாதை” என்று கூறுகிறார், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சிக் கழகம் என்ற ஆய்வு நிறுவனத்தில் ஆயுத மற்றும் ராணுவ செலவின்ங்களைப் பற்றி ஆய்வு செய்யும், பீட்டர் வெஸிமான். வளைகுடா நாடுகளில் அரபுத் தரப்பு ஏராளமான அளவு பணத்தை ஆயுதங்கள் வாங்குவதில…

    • 0 replies
    • 249 views
  12. மிஸ்டர், மிஸஸ்-க்கு அடுத்து திருநங்கைகளுக்கு எம்.எக்ஸ் லண்டன், மே 5- ஆண்களை மிஸ்டர் என்றும், மிஸஸ் என பெண்களையும் குறிப்பிடுவது போல திருநங்கைகளை குறிக்க இனி எல்லா ஆவணங்களிலும் எம்.எக்ஸ் என எழுத இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கக் கட்டமாக எம்.எக்ஸ் என்ற சொல்லை ஆக்ஸ்போர்டு அதன் அனைத்து புத்தகங்களிலும் சேர்க்க உள்ளது. ஆண்கள், பெண்கள் தவிர திருநங்கைகளை அடைமொழியாக எவ்வாறு குறிப்பது என்ற குழப்பம் நீண்டகாலமாக இருந்து வந்தது. தற்போது இங்கிலாந்து அதற்கான தீர்வைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, ராயல் மின்னஞ்சல், ஹை ஸ்டீரிட் பேங்க் மற்றும் அரசு அலுவலகங்கள் தங்கள் ஆவணங்களில் திருநங்கைகளை எம்.எக்ஸ் என குறிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. அப்படியே கொஞ்சம் கொ…

  13. மீண்டும் பிறந்தார் இளவரசி டயானா இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்பிற்குரிய இளவரசி சார்லட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தகவலை அறிவித்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் (வயது 32). ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கேட் மிடில்டனை சந்தித்தார். இருவரும் காதலித்து, 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி முதலில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தை இளவரசர் ஜார்ஜ் என்ற பெயரில் வளர்ந்த…

    • 2 replies
    • 359 views
  14. 6 பேக்? நோ, நோ........ DadBod தான் இப்ப ஹாட்டு! 6 பேக்தான் ஹிட் பேக்னு பல பசங்க ஜிம்மே கதியா இருக்காங்க. சில பசங்க ஜிம்முக்கு போகணும்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. ஆனா, போகாம இருக் கிறதுக்கு மட்டும் ஆயிரம் காரணம் சொல்லுவாங்க. இன்னொரு டைப் பசங்க, எப்பயாவது ஜிம்முக்கு போயிட்டு அப்படியே விட் ருவாங்க. சில பசங்களுக்கு ஏரியாவுல ஜிம் இருக்கிறதையே யாராவது சொன்னாதான் தெரியும். ஆனா, சில பசங்க கொடுத்துவைச்சவங்க. ஜிம்முக்குப் போறது கிடையாது. சாப்பாடும் அப்பப்போ நிறைய சாப்பிடுவாங்க. ஆனா, உடம்பு குண்டாவும் இல்லாம, ஒல்லியாவும் இல்லாம எப்படியோ பார்க்க நார்மலா இருக்கும். இவங்களுக்கு இருக்க உடம்புக்கு பேர்தான் 'DadBod'. அட... நம்ம ஊர் கல்யாணத் தொப்பை மாதிரி உடம்பைத்தான் இப்ப இப்பட…

  15. பப்புவா நியூகினி தீவில் இன்று செவ்வாய்க்கிழமை 7.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தோனேசியா மற்றும் சுலைமான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூகினியா தீவில் ராபாலுவுல நகரத்திலிருந்து தெற்காக 15 கிலோமீற்றர் தூரத்திலேயே ஜி.எம்.டி நேரப்படி 1.40க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த சுனாமி எச்சரிக்கையினால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது http://www.tamilmirror.lk/145375#sthash.nJ4g3RjZ.dpuf

    • 0 replies
    • 271 views
  16. காசாப் போர் ஏற்படுத்தியத் தாக்கம் கடந்த ஆண்டு காசா யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினர் நடந்து கொண்டவிதம் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன. இஸ்ரேலிய செயற்பாட்டாளர்கள் குழுவொன்று அறுபதுக்கும் அதிகமான இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்களிடமிருந்து பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்றிலேயே இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அந்த மோதலில் பங்கேற்ற இஸ்ரேல் இராணுவத்தினரிடமிருந்து, எட்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட சான்றுகளை வைத்து breaking the silence எனும் அந்த செயல்பாட்டுக் குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. இந்த காசா யுத்தம் குறித்து முன்பு இஸ்ரேலிய அரசு தெரிவித்திருந்த அதிகாரப்பூர்வ கருத்துகளுக்கு மாறுபட்டதாக இந்த அறிக்கை இருக்கிறது. காசா போரின்போது…

    • 0 replies
    • 240 views
  17. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இறைதூதர் முகமதுவின் கார்ட்டூன் படங்களை வரைவதற்கான போட்டி ஒன்று நடந்த இடத்திற்கு வெளியே துப்பாக்கியால் சுட்ட ஆயுததாரிகள் இருவரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் அங்கே கிட்டத்தட்ட இருபது முறை துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் சொன்னார்கள். பாதுகாப்பு ஊழியர் ஒருவர் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். பொலிசார் இந்த இடத்தை பாதுகாப்பாக சூழ்ந்துகொண்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்களை அருகிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர். இஸ்லாத்தை கடுமையாக விமர்சிக்கும் வலதுசாரி அமைப்பான அமெரிக்க சுதந்திர பாதுகாப்பு முன்முயற்சி என்ற அமைப்பு, டல்லாஸ் நகர புறநகர்ப் பகுதி …

    • 1 reply
    • 407 views
  18. கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்படுவதை பல நாடுகள் தடைசெய்துள்ளன யேமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்களில் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் பரவலாக தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை (cluster bomb) பயன்படுத்துவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. வடக்கு யேமனில் ஹௌதி கிளர்ச்சிக்குழுவினர் வலுவாக நிலைகொண்டுள்ள சாடா மாகாணத்திலுள்ள கிராமங்களுக்கு அருகே கொத்துக்குண்டுகள் போடப்பட்டமைக்கு நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக அந்த அமைப்பு கூறுகின்றது. இந்த குண்டுகள் அமெரிக்காவால் சவுதி ஆரேபியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் விநியோகிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தும் படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது. ஆனால…

    • 2 replies
    • 327 views
  19. நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் 22 நிமிடங்களுக்கு முன்னர் பகிர்க 'பாதிக்கப்பட்டவர்களின் மன உணர்வை புரிந்துகொள்ளாத ஊடகங்கள்'நிலநடுக்கத்தில் நிலைகுலைந்துபோயுள்ள நேபாளத்தில் செய்தி சேகரிக்கும் இந்திய ஊடகங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது. நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இந்தியா தான் முதல்நாடாக தங்களின் மீட்பு அணிகளை அங்கு அனுப்பியிருந்தது. இந்…

    • 2 replies
    • 374 views
  20. இந்திய ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து நிவாரணப் பொருட்களை இறக்கும் நேபாள கிராமத்தினர். | படம்: ஏ.எஃப்.பி. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய ராணுவத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று நேபாள கம்யூனிஸ்ட்டுகள் சிலர் கூறி வருகின்றனர். நிலநடுக்கத்துக்குப் பிறகு நேபாளத்தில் பல நாடுகளும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் அந்நாட்டுப் பிரதமர் சுஷில் கொய்ராலா அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அதில் கலந்து கொண்ட யூ.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல், சி.பி.என்.(மாவோயிஸ்ட்) மோகன் பைதியா மற்றும் மஜ்தூர் கிஸான் கட்சியின் தலைவர் நாராயண் மன் பிஜுக்சே ஆகிய ம…

    • 0 replies
    • 323 views
  21. பிரித்தானியாவிற்கு ஒரு இளவரசி பிரித்தானிய இளவரசி கேத் ஈ மிடில்டன் பெண் குழந்தையொன்றை இன்றையதினம் பிரசவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத் ஈ மிடில்டன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தையாகும். அந்தநாட்டு நேரப்படி காலை 08.34 மணிக்கு லண்டனிலுள்ள சென்ட் மேரிஸ் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் இடம்பெற்றுள்ளது. பிறந்துள்ள பெண் குழந்தை சுமார் நான்கு கிலோ நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக வைத்தியசாலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண் குழந்தை நான்காவது இடத்தில் உள்ளது. வில்லியம்- கேத்; ஈ மிடில்டன் தம்பதியனரின் முதல் குழ…

    • 5 replies
    • 518 views
  22. கான்பெராவிலுள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஆஸ்திரேலியாவில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சட்டத்தை மீறினால் கடுமையான புதிய தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படவுள்ள புதிய தண்டனைகளில் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்கள் அபராதம் ஆகியவை அடங்கும். வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் புதிய குடியிருப்புகளை மட்டுமே வாங்க முடியும். பழைய குடியிருப்புகளை அவர்கள் வாங்கத் தடையுள்ளது. நாட்டில் சட்டம் தெளிவாக இருந்தாலும், அதை நடைமுறைபடுத்துவது சிறிய அளவிலேயே உள்ளது என அரசு வாதிடுகிறது. ஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலை உயர்வதற்கு முதலீட்டாளர்கள், குறிப்பாக சீனாவிலிருந்து வருபவர்களே க…

    • 0 replies
    • 271 views
  23. பண்டைய கால ஏரிப்படுகையின் மீது அமைந்துள்ளது காத்மாண்டு. | படம்: ராய்ட்டர்ஸ். உலகின் பிரதான பூகம்ப பகுதியாகியுள்ள இமயமலைப் பகுதியில் அடுத்த பூகம்பம் தற்போது நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப மையத்திலிருந்து மேற்காக ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த நிலநடுக்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தேசிய புவி-பௌதிக ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர். ஆர்.கே.சத்தா இது பற்றி கூறும் போது, “எதிர்காலத்தில் இமாலயத்தில் பூகம்பம் ஏற்பட்ட்கால் அது ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப மையத்துக்கு மேற்காக ஏற்பட வாய்ப்புள்ளது.” என்று கூறுகிறார். எப்படி கூற முடிகிறது? ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவு பூகம்பம் ஒரே திசை பிளவினால் ஏற்பட்டது. நிலநடுக்க மைய…

    • 0 replies
    • 260 views
  24. ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் வெள்ளியன்று நடப்பதாக இருந்த சர்வதேச சைக்கிள் பந்தயம் ஒன்றை பயங்கரவாதத் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக ரத்து செய்துவிட்டதாக அந்நாட்டின் பொலிசார் கூறுகின்றனர். அடுக்கு மாடிக்குடியிருப்பு வீடொன்றிலிருந்து வெடிகுண்டும், வெடிகுண்டு செய்வதற்கான இரசாயனமும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவ்வீட்டில் வாழ்ந்த தம்பதி வியாழனன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். உலகெங்கிலுமிருந்து சைக்கிளோட்ட முன்னணி வீரர்களை ஈர்க்கின்ற வருடாந்த பந்தயத்தில் தாக்குதல் நடத்த இக்கணவன்-மனைவி திட்டமிட்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். இஸ்லாமியவாதக் கடும்போக்காளர்களுடன் தொடர்புகொண்டிருந்த கணவன், இந்த சைக்கிள் பந்தயத்தின் பாதையில் பல முறை தென்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.…

    • 2 replies
    • 303 views
  25. மைத்திரி மற்றும் ரணிலுக்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து [ வெள்ளிக்கிழமை, 01 மே 2015, 11:35.44 AM GMT ] 19ஆம் திருத்தச் சட்டத்தை வெற்றி கொண்டமைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உலக தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்து செய்திகளை தெரிவித்துள்ளது. மேலும் அவ்வறிக்கையில், 19ம் திருத்தச்சட்டத்தை வெற்றிக்கொண்டதனால் மக்களாட்சி மற்றும் அதன் நிறுவனங்களை இன்னும் ஒரு படி கொண்டு முன்னோக்கிச் செல்லப்பட்டுள்ளது. எனினும் கடந்த காலங்களில் இலங்கையின் துரதிஷ்டவசமான அரசியல் கலாச்சாரங்கள் மற்றும் பழக்கங்கள் ஏற்றுக்கொள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.