Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா நதியில் தனியாருக்கு சொந்தமான பயணிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை மாலை இவ்விபத்து நடைபெற்றுள்ளது. இப்படகில் சுமார் 350 க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். கடும் காற்று மற்றும் மழை போன்ற மோசமான காலநிலையில் சிக்கி இப்படகு விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துப்ரி மாவட்ட படகு துறை முகத்திலிருந்து நதியின் எதிர்ப்புறமுள்ள மெடார்டாரி எனும் இடத்துக்கு புறப்பட்டுச்சென்ற குறித்த இரண்டு அடுக்கு படகு, நதியின் மத்தியில் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. …

  2. உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் பகட்டுகளை கைவிட்டு, எளிமையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தன்னுடைய நத்தார் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தையொட்டி வத்திக்கானிலுள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் புனித பாப்பரசர் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புனித பாப்பரசர் தெரிவித்துள்ளதாவது, “நவீன சமூகத்தின் ஆடம்பர வாழ்க்கையால், பொருள்களை வாங்கிக் குவிக்கும் மோகம் அதிகரிக்கிறது. சொத்து சேகரிப்பதிலும், பொருளாதாயத்திலும் மட்டுமே சுகம் கிடைக்கும் நிலை ஏற்படுகிறது. தன்னலம் பெருகுகிறது. எளிமையான, சமநிலை கொண்ட, தேவைக்கு மிகாத வாழ்க்கை முறையையை கிற…

  3. சென்னை, ஏப். 8: கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன் முறையை எதிர்த்து தமிழ்த் திரையுல கினர் நடத்திய கண்டன உண்ணாவி ரதப் போராட்டத்தில் கலந்துகொள் ளாதது குறித்து இயக்குநர் பாரதி ராஜா விளக்கமளித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சிக்காக தான் தயாரித்து இயக்கியுள்ள "தெக் கித்திப் பொண்ணு' நெடுந்தொடர் குறித்து செவ்வாய்க்கிழமை செய்தி யாளர்களைச் சந்தித்தார் பாரதி ராஜா. உண்ணாவிரதத்தில் பங்கேற் காதது குறித்த கேள்விகளுக்கு அப் போது அவர் அளித்த பதில் விவ ரம்: இதற்கு முன்பு காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்துக்கு எதிராக கடந்த 2002-ம் ஆண்டு நெய்வேலியில் நடை பெற்ற போராட்டத்துக்கு தலைமையேற்ற தாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை…

    • 1 reply
    • 1k views
  4. அமெரிக்காவின் நாடு கடத்தல்; பனாமாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் உட்பட சுமார் 300 பேர்! அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சுமார் 300 சட்டவிரோத குடியேறிகள் தற்போது பனாமா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆவணமற்ற வெளிநாட்டினருக்கு எதிரான பாரிய அடக்குமுறையின் ஒரு பகுதியாக இவர்கள் பனாமாவின் தலைநகரில் அமைந்துள்ள Decápolis என்ற சொகுசு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளுக்காகக் காத்திருக்கும் போது, இந்த நபர்கள் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் ச…

  5. ட்ரம்ப் நிர்வாக வெளிநாட்டு உதவி; கூட்டாட்சி நீதிவானின் உத்தரவை இடைநிறுத்தும் உயர் நீதிமன்றின் தீர்ப்பு! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், வெளிநாட்டு உதவி நிதியை ஒப்பந்ததாரர்களுக்கும் மானியம் பெறுபவர்களுக்கும் செலுத்த வேண்டும் என்ற கூட்டாட்சி நீதிபதியின் உத்தரவை இடைநிறுத்தும் அறிவிப்பை அமெரிக்க உயர் நீதிமன்றின் தலைமை நீதிபதி ஜோன் ராபர்ட்ஸ் புதன்கிழமை (26) வெளியிட்டார். புதன்கிழமை இரவு 11:59 வரை காலக்கெடு விதித்த வொஷிங்டனை தளமாகக் கொண்ட அமெரிக்க மாவட்ட நீதிபதி அமீர் அலியின் உத்தரவை நிறுத்தி வைத்து ராபர்ட்ஸ் இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். நிர்வாகத் தடை என அழைக்கப்படும் இந்த உத்தரவுக்கு ராபர்ட்ஸ் எந்த காரணத்தையும் வழங்கவில்லை. இது அமீர் அலியின் தீர்ப்பைத் தடுக்க நிர்வ…

  6. சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்கள் வெளியீடு இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று வெளியிட்டார். சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்கள் வெளியீடு சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான இன்று தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்தக் கோப்புகள் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டன. சுபாஷ் சந்திர போஸின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வின்போது உடனிருந்தனர். இனி ஒவ்வொரு மாதமும் 25 ரகசியக் கோப்புகளை வெளியிடுவதற்கு தேசிய ஆவணக் காப்பகம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுபாஷ் சந்திரபோஸின் குடும்ப உறுப்பினர்களை நரேந்திர மோதி சந்தித்துப் பேசினார். அதற…

  7. கூகிள் சுந்தர் பிச்சை அதிக ஊதியம் பெறும் அமெரிக்க நிர்வாகியானார் கூகிள் நிறுவனத்தின் தலைவரான, சுந்தர் பிச்சை, அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரியாகியிருக்கிறார். இந்தியாவில் பிறந்தவரான43 வயதான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபரில், கூகிள் அதன் தாய் நிறுவனமான, ஆல்ஃபபெட், நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார். அவருக்கு சுமார் 230 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள கூகிள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன. இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மிலியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்களான, லாரி பேஜ் மற்றும…

  8. ஹூண்டாய் காருக்காக கைவிரல்களை வெட்டுக் கொடுத்த கலைவாணன்! முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கோர் இரத்த சாட்சியமாய், நோக்கியா நிறுவனத்தின் இயந்திரத்தால் கழுத்தறுக்கப்பட்டு, ஈராண்டுகளுக்கு முன்பு படுகொலையான இளந்தொழிலாளி அம்பிகாவை அவ்வளவு சீக்கிரம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இதோ அதன் நீட்சியாய் தனது இடது கை விரல்களைப் பறிகொடுத்து கூடவே தனது எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு தெருவில் நிற்கிறார், கலைவாணன் என்ற 22 வயது இளம் தொழிலாளி. செயல்துடிப்புமிக்க அந்த இளைஞனின் இணையில்லா கடும் உழைப்பையும் குருதியையும் சேர்த்தே சுவைத்து விட்டு, இன்று எஞ்சிய சக்கையாய் வெளியேற்றியிருக்கிறது, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள்…

  9. அமெரிக்கா, மெக்ஸிகோ மீது போப் விமர்சனம் மெக்ஸிகோவின் சியூடேட் ஜுராஸ் பகுதியில் மக்களுக்கு ஆசி வழங்கிய போப்பாண்டவர் பிரான்சிஸ். படம்: ஏஎப்பி அகதிகள் விவகாரத்தில் இனி மேலும் உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது, இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் மெக்ஸிகோவும் பல்வேறு விளக்கங்களை கூறுவதை ஏற்க முடியாது என்று போப் பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மெக்ஸோவில் 6 நாட்கள் பயணம் மேற்கொண்ட போப்பாண்டவர் நேற்று தனது பயணத்தை நிறைவு செய்து வாடிகன் திரும்பினார். கடைசி நாளான நேற்று மெக்ஸிகோ எல்லைப் பகுதியான சியூடேட் ஜுராஸ் பகுதியில் மக்களுக்கு அவர் ஆசி வழங்கினார். இப்பகுதி அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ளது. மெக்ஸிகோவில் இருந்து ஏராள …

  10. வள்ளியூர்: மனைவி சமையல் செய்யாததால் அவரைக் கொன்ற கணவரை போலீஸார் கைதுசெய்தனர். ஏர்வாடி அருகேயுள்ள கோதைசேரியை சேர்ந்தவர் சந்தானம் மகன் சுடலைமுத்து. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுடலி. சுடலைமுத்து வெளியூர் சென்றதால் சுடலி மதிய உணவு சமைக்கவில்லை. இந்த நிலையில் மாலையில் வீட்டுக்கு வந்த சுடலைமுத்து தனது மனைவியிடம் சாப்பாடு வைக்குமாறு கூறினார். அதற்கு சுடலி சமைக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுடலைமுத்து கம்பியால் சுடலியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சுடலி இறந்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து சுடலைமுத்துவை கைது செய்தார். thatstamil.com

  11. வேண்டாப் பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பது போல சிரிய அதிபர் இப்போது எதனைச் செய்ய முயன்றாலும் அது குற்றமாகவே பார்க்கப்படும் நிலைமைக்குள் அவர் வந்துள்ளார். 42 ஆண்டுகள் லிபியாவை ஆண்ட கேணல் முவம்மர் கடாஃபியை ஒரு சில மாதப் போரின் மூலம் அகற்றிய மேற்குலக நாடுகளால், சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை அகற்றுவதென்பது அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை என்பது தெரிகின்றது. எனினும், அகற்றியே ஆகவேண்டும் என்பதில் மேற்குலகம் உறுதியாக இருப்பதால் அவரின் ஆட்சி அதிகார நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்றே நம்பலாம். இலங்கையில் போர் தொடங்கியவுடன் அங்கிருந்து தனது பணியாளர்களை வெளியேற்றிய ஐ.நா, இனப்படு கொலையான தமிழர்களை கணக்கெடுத்துச் சொல்ல மாதங்கள் பலவற்றை எடு…

  12. டுபாயிலும் கொரோனா வைரஸ் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் இனங்காணப்பட்டுள்ளார். சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் கொரோனா வைரசினால் இதுவரை சீனாவில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, தாய்வான் மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இந்த வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்ச…

    • 0 replies
    • 287 views
  13. ஒபாமாவை ரால் கேஸ்ட்ரோ அவமதித்துவிட்டார்: டொனால்டு டிரம்ப் ட்வீட்! வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவை கியூபா அதிபர் ரால் கேஸ்ட்ரோ விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்காதது அவமதிப்பு என்று டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். அமெரிக்காவின் அருகில் அமைந்துள்ள தீவு நாடான கியூபாவில், 1959–ம் ஆண்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. சர்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சிக்கு கம்யூனிஸ்டுகள் முடிவு கட்டினர். அந்நாட்டின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ பதவி ஏற்றார். கியூபாவுக்கு முன்னாள் சோவியத் ரஷ்யா, தனது முழுமையான ஆதரவை அளித்தது. இதற்கிடையே, கியூபாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. மேலும் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது. இத…

  14. பட மூலாதாரம்,INSTAGRAM/REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரென் சான்செஷின் ஆடம்பரத் திருமணம் வெள்ளிக்கிழமையன்று வெனிஸில் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்துக்கொள்ள திரைப் பிரபலங்கள், நடிகர்கள், அரசு விருந்துனர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் வெனிஸிற்குப் பயணப்பட்டுள்ளனர். ஓப்ரா வின்ஃப்ரே, ஒர்லாண்டோ ப்ளூம், கைலி ஜென்னர் மற்றும் இவான்கோ டிரம்ப் ஆகியோர் வியாழன் மற்றும் வெள்ளியன்று வெனிஸின் தெருக்களிலும் படகுகளிலும் காணப்பட்ட பிரபலங்களில் ஒரு சிலர் ஆவர். இந்த நிகழ்வுக்கு எதிராக சுற்றுலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் மக்கள் தொடங்கி காலநிலை மாற்ற செயற்பாட்டாளர்கள் வரை பல தரப்பிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது. திர…

  15. 150 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று இந்தோனேசியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியது 29 ஆகஸ்ட் 2012 150 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று இந்தோனேசியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனை அடுத்து அதில் பயனம் செய்தவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82203/language/ta-IN/article.aspx

  16. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு! அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பை ஞாயிற்றுக்கிழமை (27) எட்டியுள்ளன. இது, உலகின் மிகப்பெரிய பொருளாதார பங்காளிகளில் இருவருக்கு இடையே பல மாதங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து. மேலும், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட இரு நட்பு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய வர்த்தகப் போரை தவிர்த்தது. ஸ்கொட்லாந்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இடையேயான சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அனைத்து ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கும் 15% அமெரிக்க வரியை விதிக்க கூட்டாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இது ஆகஸ…

  17. ஈரானில் 85 ஆயிரம் கைதிகள் விடுதலை – காரணம் வெளியானது! கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ரானில் 85 ஆயிரம் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளவர்களில் 50 சத வீதமானோர் கண்காணிக்கப்பட வேண்டிய கைதிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையினை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகவே குறித்த தீர்மானத்தினை அரசாங்கம் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை, ஈரானில் இதுவரை 14,991 பேர் கொரோனாவினால்பாதிக்கப்பட்டுள்ளதுடன் 853 பேர் உயிரிழந்துள்ளனர். http://athavannews.com/ஈரானில்-85-ஆயிரம்-கைதிகள்-வ/

  18. Started by SUNDHAL,

    US judge lifts Samsung tablet ban AAP October 02, 2012 3:49PM A JUDGE has lifted a ban on US sales of Samsung Galaxy Tab 10.1 tablet computers as legal brawling continues between the South Korean electronics titan and Apple. US District Court Judge Lucy Koh issued an order on Monday clearing the way for Samsung to renew sales of Galaxy Tab 10.1 tablets which were halted while it duelled with Apple in a high-stakes patent trial. A jury declared on August 24 that Samsung should pay Apple $1.049 billion in damages for illegally copying iPhone and iPad features, in one of the biggest patent cases in decades - a verdict that could have huge market repercussions…

    • 0 replies
    • 573 views
  19. காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இஸ்ரேல் - காசா இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது. எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் பட்டா எல் சிசி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் எகிப்து வந்து சேர்ந்தார். இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதி…

  20. ஐடோமெனி முகாமில் தஞ்சமடைந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கை: கிரீஸ் துவக்கம் மாசிடோனியாவுடனான தனது வடக்கு எல்லையில் அமைந்துள்ள தற்காலிக ஐடோமெனி முகாமில் தஞ்சம் அடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கிரீஸ் துவங்கியுள்ளது. ஐடோமெனி முகாமில் கூடாரங்களில் தங்கியிருந்த மக்கள் அதிகாலை பொழுதில் ஆரம்பித்த இந்த நடவடிக்கையைக் கண்ட சாட்சிகள், முகாமில் குடியமர்ந்தவர்களை வேறு சிறந்த வசதியிடங்களுக்கு மாற்றிட போலீஸ் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்தனர். கலகத்தை கட்டுப்படுத்தும் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டாலும், பலம் பிரயோகிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாசிடோன…

  21. கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்! உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நுழைந்த எட்டு கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் தகர்த்துள்ளது எனவும் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி எனவும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வர…

  22. சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்வது குறித்து, புதிய ஆலோசனைக் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நளினி உள்ளிட்ட 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து விட்டது. கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் பலியானார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மகளிர் சிறையில் நளினி சிறை வாசம் அனுபவித்…

  23. ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்! ஹொங்கொங்கில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தானது புதன்கிழமை (26) இரவு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 44 பேர் உயிரிழந்ததுடன், 279 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் இன்னும் தீப்பரவிய உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து குடியிருப்பாளர்களை மீட்டு வருகின்றனர். நியூ டெரிட்டரிஸின் புறநகர்ப் பகுதியான தாய் போ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு கட்டிடங்களில் புதன்கிழமை பிற்பகல் இந்த தீ விபத்து தொடங்கியது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (27) காலை வரை, தீ இன்னும் அணைக்கப்படவில்லை, மீட்புப் பணிகள் தொடர்ந்தன. அதேநேரம்…

  24. கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கடமைகளுக்கு திரும்பும் பொரிஸ் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாளை முதல் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளுக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பிரித்தானியா பல உயிரிழப்புகளை சந்தித்து வரும் அதேவேளை லட்சக்கணக்கானவர்கள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகினார். ஆரம்பத்தில் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டமையினை தொடர்ந்து சுய தனிமைப்படுத்தலுக்கு தன்னை உட்படுத்திய அவர், பின்னர் நோய்த்தாக்கம் அதிகரித்த காரணத…

    • 2 replies
    • 465 views
  25. தென் அமெரிக்க நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒத்திவைப்பு 19 Dec, 2025 | 10:47 AM தென் அமெரிக்க நாடுகளுடன் மேற்கொள்ளப்படவிருந்த மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (EU–Mercosur) ஐரோப்பிய ஒன்றியம் (ஈயூ) ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈயூ விவசாயிகளின் கடும் எதிர்ப்பும், பிரான்ஸ் மற்றும் இத்தாலி முன்வைத்த கடைசி நேர எதிர்ப்பும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பிரஸல்ஸில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உழவு இயந்திரத்துடன் வீதிகளை மறித்து பட்டாசுகள் மற்றும் டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈயூ–மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வருடம் ஜனவரி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.