உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
கனடா- ஒரு பெண் அணிந்திருந்த பர்தாவை அகற்றாவிட்டால் அவரது வழக்கை கேட்கப்போவதில்லை என கியுபெக் நீதிபதி ஒருவர் மறுத்ததன் எதிர்விளைவாக சிவில் உரிமைக் குழுக்கள், அரசியல் வாதிகள் மற்றும் ஏனையவர்களிடமிருந்தும் பரந்த சீற்றமும் கண்டனங்களும் வெளிப்பட்டுள்ளன. கியுபெக் முதல்வர் பிலிப்பே கொயிலாட் இந்த முடிவு அமைதியை குலைக்கின்றதென தெரிவித்துள்ள வேளையில் கனடிய சிவில் உரிமைகள் சங்கம் இது தொந்தரவு, பாரபட்சமானது என்று தெரிவித்ததோடு சமய சுதந்திரத்தின் கனடிய சாசன உரிமையை மீறுதல் எனவும் தெரிவித்துள்ளது. ஜஸ்ரின் ட்றூடோ “இது வெறும் தவறு” என அறிவித்துள்ளார். செவ்வாய்கிழமை றானியா எல்-அலோல் என்ற தாய் ஒருவர் பறிக்கப்பட்ட தனது காரை மீள பெறுவதற்காக நிதிமன்றம் போனார். கார் பறிக்கப் பட்ட போது இவர…
-
- 0 replies
- 260 views
-
-
ரஷ்யாவில் எதிர்கட்சி தலைவர் போரிஸ் நெம்ஸ்சோ மர்மநபரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய தலைநகரான மாஸ்கோவின் கெர்மலின் பகுதியில், நெம்ஸ்சோ நடைபயணம் மேற்கொண்டபோது துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் 4 முறை துப்பாகியால் சுட்டுள்ளார். இதில் நெம்ஸ்சோ உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து அந்த பகுதி பாதுகாப்பு வளைத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த துப்பாகி சூடு சம்பவத்தின் போது நெம்ஸ்சோ உடன் இருந்த பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 55வயதான போரிஸ் நெம்ஸ்சோ அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமராக இருந்துள்ளார். http://www.ns7.tv/ta http://www.bild.de/
-
- 4 replies
- 1.1k views
-
-
வங்கதேசம் – அவ்ஜித் ராயைக் கொன்றதா மதவெறி!? 27 பெப்ரவரி 2015 வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், நாத்திகருமான அவ்ஜித் ராய், நேற்று வியாழன் – 26.02.2015 அன்று இரவு சிலரால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். இவரது மனைவி ரஃபிதா அகமதுவும் தாக்கப்பட்டு, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். டாக்கா பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர் அஜய் ராயின் மகனான அவ்ஜித் ராய் பிரபலமான முக்தோ மோனா எனும் வங்க மொழி இணைய தளத்தின் நிறுவனராவார். நாத்திக சிந்தனைகளையும், மதவெறி – மத அடிப்படைவாதத்தை எதிர்த்தும் இந்த இணைய தளம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் தஸ்லிமா நசுரீன் நாடு கடத்தப்பட்டு அதை வங்க நீதித்துறை அனுமதித்த போதெல்லாம் …
-
- 0 replies
- 440 views
-
-
கனடா பிறம்ரன் மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட பிரஷாந் திவாரி என்பவரின் குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் 12.5 மில்லியன் டொலர் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தார்கள். மனநோய் பிரிவில் வைக்கப்பட்டிருந்த தமது மகன், 15 நிமிடங்களுக்கு ஒரு முறை அவதானிக்கப்படவேண்டுமெனவும். ஆனால் இரண்டரை மணி நேரம் அவர் அவதானிக்கப்படவில்லையெனவும் வழக்கில் குற்றம் சுமத்தப்படுகின்றது. அவர் தற்கொலை செய்து கொண்ட பின்னர், அவரது தனிப்பட்ட தகவல்கள் மருத்துவமனையில் தவறான முறையில் பார்வையிடப்பட்டதாக பெற்றோர் குற்றம் சுமத்தினார்கள். வழக்குக் குறித்த அறிவிப்புக் கிடைத்ததாகவும், ஏற்ற வகையில் பதில் நடவடிக்கை எடுக்ப்படுமெனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. - See more at: http:…
-
- 0 replies
- 344 views
-
-
கழிப்பறை வசதியற்ற அரசாங்க மகளிர் கல்வி நிலையங்கள் - சதீஸ் கார்க்கி மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 2014ஆம் ஆண்டு இந்திய முழுவதும் உள்ள அரசாங்கங்கப் பள்ளிகளின் கழிப்பிட வசதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வின் படி தேசத்தில் உள்ள 1,01,443 பெண்கள் பள்ளிகள் கழிப்பறை வசதியாற்றவையாகவும், கழிப்பறைகள் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் 87,984 மகளிர் பள்ளிகள் உள்ளன. இந்த ஆய்வின் அறிக்கை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகார்பபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரம் அடைந்த பின் கடந்த 67 ஆண்டுகளில் கல்வித்துறையில் முன்னேற்றம் அடைந்தாலும் கழிப்பறை வசதி இல்லாமல்,பயன்படுத்த முடியாத நிலையில் 1,89,427 அரசாங்க பள்ளிகள் இயங்கிகொண்டிருகின்றன. இதில் தொ…
-
- 3 replies
- 3k views
-
-
பிணைக் கைதிகளை தலையை வெட்டி கொலை செய்தது, பிரிட்டனை சேர்ந்த "ஜிகாதி ஜான்" என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகளின் படை தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கிடையே தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை தலையை வெட்டியும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் வெறியாட்டம் ஆடி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த பிணைக் கைதிகளை தலையை வெட்டி கொலை செய்த தீவிரவாதி பிரிட்டனை சேர்ந்த ஜான் என்று தெரியவந்துள்ளது. பிரிட்டன் உளவுத்துறை இதனை கண்டுபிடித்துள்ளது. ஆனால் பிரிட்டன் உளவுத்துறை எந்தஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. பிணைக்…
-
- 0 replies
- 262 views
-
-
லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் எழுந்துள்ளன. 6 பெண்கள் வழக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா கல்லூரி நடத்தி வருபவர், யோகா குரு பிக்ரம் சவுத்ரி (வயது 69). இந்திய அமெரிக்கர். இவர் கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்டவர். 3 வயதில் யோகா கற்கத் தொடங்கி அதில் வல்லுனர் ஆனார். திருமணமாகி ராஜஸ்ரீ என்ற மனைவி உள்ளார். குழந்தைகளும் உள்ளனர். இவர் சுயமாக 26 யோகா நிலைகளை உருவாக்கி உள்ளார். இந்த யோகா பயிற்சியை 105 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் உள்ள அறையில், உடலோடு ஒட்டி உறவாடும் இறுக்கமான உடை அணிந்துதான் செய்ய வேண்டும். இவர் தன…
-
- 16 replies
- 1.4k views
-
-
வாஷிங்டன், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூலம் மறைமுக தாக்குதல்கள் நடத்திவருகிறது. எல்லையில் நடத்தப்படும் பெரிய தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மிகப்பெரிய ராணுவ தாக்குதல் எடுக்கப்பட்டால் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் ஆணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு வல்லூநர்கள் அந்நாட்டு செனட் சபைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்லியில் வலிமையான அரசு மற்றும் 26/11 போன்று மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற இந்திய மக்களின் அழுத்தம், இரு நாடுகள் இடையிலான உறவுகள் ஓரு அணுஆயுத போருக்கான ஆபத்தை அதிகரிக்கலாம், குறிப்பாக பாகிஸ்தானிடம் இருந்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகையை பெரிய பேரழிவு அமெரிக்கா, இஸ…
-
- 0 replies
- 170 views
-
-
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் மனைவிமார்கள் அல்லது கணவன்மார்களுக்காக புதிய விசாவை அறிமுகம் செய்கிறது அமெரிக்க அரசு. எச் 1 பி விசா வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று குறிப்பிட்ட துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ’எச் 1 பி’ விசா வாங்குகிறது அமெரிக்க அரசு. இந்த விசா வைத்திருப்பவர்கள் குடியேறிகளாகக் கருதப்படுவதில்லை. அதோடு, இந்த எச் 1 பி விசா, வைத்திருப்பவர்களது மனைவி அல்லது கணவனை அமெரிக்காவில் தங்க வைத்து பணியாற்றவும் அனுமதி கிடையாது. இந்த எச் 1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கோரிக்கை இந்த ’எச் 1 பி’ விசாவால், திருமணமான பணியாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால், வ…
-
- 2 replies
- 406 views
-
-
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உள்ள வெளிநாட்டுப் போராளிகளில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் பெண்கள் என்று ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறுயுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுமார் 40 பெண்கள் பயங்கரவாதத்தில் பங்கேற்றுள்ளனர் அல்லது பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கூடுதலான யுவதிகள் இஸ்லாமிய அரசு இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர் என்று வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறுகிறார். அவ்வகையில் கூடுதலானப் பெண்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ள தமது கணவருடன் இணைந்துகொள்வதற்காகவோ அல்லது போராளி ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதற்காகவோ சிரியா மற்றும் ஈராக்குக்கு பயணமாகிறார்கள் என்று ஜுலி பிஷப் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர்கள…
-
- 0 replies
- 319 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு ஈராக், சிரியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், தங்களை எதிர்த்து போரிடும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்று படுகொலை செய்து வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், ஐ.நா. சபை அட்டவணைப்படி இந்தியாவிலும் தடை செய்யப்பட்டு உள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்தார். தற்போது இந்த அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்லாமிக் ஸ்டேட் …
-
- 4 replies
- 481 views
-
-
" ஜிகாதி ஜான்” யாரென்று தெரிந்தது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க "ஜிகாதி ஜான்" அடையாளம் தெரிந்திருக்கிறது இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பிடம் பிடிபட்ட மேற்குலக பணயக்கைதிகளை சிரமறுத்துக்கொல்லும் காணொளிகளில் அவற்றை செய்தவராக அடையாளப்படுத்தப்பட்ட “ஜிகாதி ஜான்” யார் என்கிற அடையாளம் தெரியவந்திருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த இவரது பெயர் மொஹம்மத் எம்வாசி என்று பிபிசிக்கு தெரியவந்திருக்கிறது. மேற்கு லண்டனைச் சேர்ந்த இவர் குறித்து பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சிலகாலமாகவே தெரிந்திருந்தது. இவரது அடையாளம் மற்றும் பெயர் குறித்து கடந்த சிலகாலமாக தமக்குத் தெரிந்த தகவல்களை பாதுகாப்புப்பணிகளின் தேவைகருதி பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனங்கள் வெளியிடாமல் வைத்திருந்தன. …
-
- 1 reply
- 395 views
-
-
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி வளாகம் நேற்று திருவிழா கோலம் பூண்டிருந்தது. பலவித ரகங்களில் பல்வேறு வண்ணத்தில் கைத்தறி சேலை கட்டியபடி மாணவிகள் கல்லூரிக்குள் வலம் வந்தனர். கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் சேலை உடுத்தி வந்திருந்தனர். கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சேலை அணிந்து வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். இவர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமை தமிழக அரசின் கோஆப்டெக்ஸ் நிறுவனத்தையே சேரும். நெசவுத் தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளோடு கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று, கைத்தறி சேலைகளை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வர…
-
- 2 replies
- 2k views
-
-
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள பன்ச்ஸிர் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற பனிச்சரிவு காரணமாக பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் அச்சம் வௌியிட்டுள்ளனர். பனிச்சரிவில் சுமார் 60 வீடுகள் வரை புதையுண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறைந்தது 30 பேர் வரையில் கொல்லப்பட்டிருப்பதாகவும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஆப்கானின் பதில் ஆளுநர் அப்துல் ரஹ்மான் கபிரி தெரிவித்துள்ளார். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் நாட்டின் பல பகுதிகள் பனியினால் மூடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. http://newsfirst.lk/tamil/2015/02/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-…
-
- 0 replies
- 235 views
-
-
கனடா- அல்பேர்ட்டாவில் வோட் மக்முரெ என்ற இடத்தில் 8-மாத குழந்தை ஒன்று இறந்ததுடன் மற்றும் நான்கு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் தாயார் மூட்டுபூச்சிகளை அகற்றுவதற்கு ஒரு வகை இரசாயன புகையூட்டியை உபயோகித்தமை இந்நிலைக்கு காரணமென கூறப்பட்டுள்ளது. இவர் மூட்டு பூச்சிகளை கொல்வதற்கென அண்மையில் விடுமுறைக்கு பாகிஸ்தான் சென்று திரும்பியபோது ஒரு வகை இரசாயனப் பொருளை கொண்டு வந்தார் என அவரது சகோதரி ஷாசியா யார்க்கான் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். தொடர்மாடிக்கட்டிடத்தில் இவர்கள் குடியிருந்த யுனிட்டில் மூட்டு பூச்சிகள் இருந்ததாகவும் அது குறித்து பராமரிப்பாளரிடம் தெரிவித்தபோது அவர்கள் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையாதலால் அவற்றை கொல்லும் முயற்சியை தன் கையில்…
-
- 5 replies
- 456 views
-
-
ஐ.எஸ். போராளி, குழு தனது குழுவில் இணைந்து கொண்டுள்ள வெளிநாட்டு போராளிகளின் பிள்ளைகளுக்கான முதல் இரு ஆங்கிலப் பாடசாலைகளை தனது பிராந்திய தலைநகரில் திறந்து வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ். போராளி குழுவில் இணைந்து கொள்ளும் முகமாக 3 பிரித்தானிய மாணவிகள் சிரியாவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. போராளிகளால் சிரிய ரக்கா நகரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. http://www.virakesari.lk/articles/2015/02/25/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%A…
-
- 0 replies
- 187 views
-
-
அமைதிப்படைகளில் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் ஐநா சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை சார்பில் செயல்பட்டு வரும் அமைதிப்படை, உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை, தீவிரவாத செயல்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் அடங்கிய இந்த அமைதிப்படையை மேம்படுத்த ஐநா திட்டமிட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஆய்வு செய்து 119 பரிந்துரைகளை அளித்துள்ளனர். முக்கியமாக ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்; இந்த விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்வதால் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என சி…
-
- 1 reply
- 227 views
-
-
ஆஸி,யில் அகதியாக வந்து அரசியலில் குதித்துள்ள ஈழத்தமிழர் நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தலில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய சுஜன் செல்வன் பசுமைக் கட்சியின் வேட்பாளராக் களமிறங்குகிறார். மேற்கு அவுஸ்திரேலிய பிராந்தியத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் Prospect தொகுதியில் தாம் போட்டியிடுவதாக திரு.செல்வன் அறிவித்துள்ளார். இந்த வேட்பாளர், 15 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்து, தற்போது Wentworthville பிரதேசத்தில் சிறிய அளவிலான வர்த்தக முயற்சியின் உரிமையாளராக செயற்படுகிறார். தாம் பசுமைக் கட்சியைத் தெரிவு செய்வதற்குரிய காரணங்களை விபரித்த திரு.செல்வன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை உள்ளடங்கலாக மனித உரிமை ம…
-
- 6 replies
- 579 views
-
-
உத்தரகாண்ட்டில் ராகுல்... "டென்ட்"டில் தங்கி ஓய்வெடுக்கிறார்.. நைனிடால்: தாய்லாந்து போவதற்காக ராகுல் காந்தி டிக்கெட் எடுத்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் அங்கு போகவில்லை. மாறாக இந்தியாவில்தான் ஓய்வெடுத்து வருகிறார். அதுவும் உத்தரகாண்ட் மாநிலத்தில்தான் அவர் தங்கியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. கட்சிப் பணிகளிலிருந்து எனக்கு விடுப்பு தேவை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விண்ணப்பித்து அதற்கு அவரும் அனுமதி வழங்கியது பெரும் சர்ச்சையாக சில கட்சிகளால் கிளப்பப்பட்டு வருகிறது. ராகுல் காந்தியின் சீரியஸ்னஸ் என்ன என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் ஓய்வு சர்ச்சையாகியுள்ள நிலையில் அவர் தனது ஓய்வைத் தொடங்கியுள்ளார். முதலில் அவர் பாங்காங் ச…
-
- 0 replies
- 295 views
-
-
சீனாவுக்கு ‘செக்’ வைப்பதே மோடியின் பயணத் திட்டம் – இந்திய ஊடகம் FEB 25, 2015 | 4:30by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்தியப் பெருங்கடல் நாடுகளுடன் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம், சிறிலங்கா உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியாவின் டெக்கான் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாத நடுப்பகுதியில், சிறிலங்கா, மாலைதீவு, செஷெல்ஸ், மொரிசியஸ் ஆகிய நான்கு நாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பெருங்கடல் நாடுகளான, சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் கொண்டுள்ள கடல்சார் ஒத்துழைப்பை, மொரிசியஸ், செஷெல்ஸ் ஆகிய நா…
-
- 3 replies
- 404 views
-
-
கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் பனிப்பிரதேசமான அண்டார்டிகாவுக்கு கடத்தப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மாயமான விமானம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை. ஓயாத சர்ச்சை மாயமான விமானம் விபத்து…
-
- 0 replies
- 532 views
-
-
ஈராக்கிய இராணுவத்தை 2001ல் அமெரிக்கா கலைத்தபோது அதன் உயரதிகாரிகளாக இருந்த பலரே இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் வழிநடத்துனர்களாக, தலைமைகளாக இருக்கின்றார்கள். இது அமெரிக்காவே எதிர்ப்பார்க்காத ஒரு விடயம் இன்று எங்களின் வீட்டுத் தொலைக்காட்சிகளில் கணனித் திரைகளில் காணும் மனிதர்களை கழுத்தறுத்துக் கொலை செய்யும் காட்சிகளும், உயிரோடு எரியூட்டிக் கொல்லும் காட்சிகளும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவினைப் பற்றிய ஒரு கேள்வியை உலகம் எங்கும் எழுப்பியுள்ளது. இவ்வாறு கடந்த சனிக்கிழமை லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார். நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில், அமெரிக்காவின் இந்த இஸ்லாமிய அமைப்பிற…
-
- 0 replies
- 267 views
-
-
கனடா- ஒன்ராறியோவின் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவரும் நீண்ட காலம் மேயராக பணிபுரிந்தவருமான ஹேசல் மக்கெலியன் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் பணி ஒன்றை ஏற்றுள்ளார். 94-வயதுடைய இவர் 36-வருடங்கள் மிசிசாகா மேயராக பதவி வகித்து கடந்த நவம்பர் மாதம் இளைப்பாறினார். கல்லூரியின் மூலோபாய வளர்ச்சி தொடர்பான விடயங்களில் பல்கலைக்கழகத்தின் மிசிசாகா பிரிவு அதிபரின் விசேட ஆலொசகராக பணி ஏற்றுள்ளார். இவரது நியமனம் இந்த மாத முற்பகுதியில் ஆரம்பித்து ஒரு வருடங்களிற்கு நீடிக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இவர் புதிய பாடநெறிகளை உருவாக்க உதவுவதோடு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்புக்கள் நிறுவனத்தோடு சேர்ந்து நகர்ப்புற கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டில் முதுகலை பட்டம் உருவாக…
-
- 0 replies
- 198 views
-
-
ஏனைய செய்தி முஸ்லிம்கள் என்றாலே பயம் தான்...சாலையில் வலம் வந்த நபருக்கு நேர்ந்த கொடுமை (வீடியோ இணைப்பு) இத்தாலியில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்றபோது அவரை மக்கள் ஏசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இத்தாலியின் மிலன்(Millan) நகரில் எகிப்து நாட்டை சேர்ந்த ஹம்டி மஹிசென்(Hamdy Mahisen) என்ற முஸ்லிம் மாணவன் தனது கையில் தங்களது மதத்தின் புனித நூலான குரானை வைத்தபடி, அந்நகரின் சாலைகளில் சுமார் 5 மணிநேரம் நடந்துள்ளார். இந்த 5 மணிநேரத்தில் இவரை பார்த்த மக்கள் அனைவரும் இதயத்தை நோகடிக்கும் வகையில் பேசியுள்ளனர். இவரை கடந்து சென்ற பெண் ஒருவர், இவன் ஐ.எஸ் தீவிரவாதி என கூறியுள்ளார், வேறொரு…
-
- 6 replies
- 746 views
-
-
5 வயதுடைய சிறுவர்கள் உள்ளடங்கலான சிறார்கள் இராணுவ பயிற்சி முகாமொன்றில் பயிற்சி பெறுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். சிரிய ரக்கா நகரிலுள்ள அல் -பாரூக் சிங்கக் குட்டிகளுக்கான நிறுவனம் என பெயர் சூட்டப்பட்ட தீவிரவாத பயிற்சி முகாமிலேயே மேற்படி சிறுவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த 9 நிமிட வீடியோ காட்சியில் சின்னஞ்சிறார்கள் தீவிரவாத குழுவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் கட்டளைகளுக்கு அடி பணிந்து பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வீடியோ காட்சியின் பின்னணியில் அரேபிய இசை ஒலிக்கிறது.சிறுவர்கள் நீரைப் பயன்படுத்தி மத ரீதியான சுத்திகரிப்பை மேற்…
-
- 0 replies
- 488 views
-