உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்திற்கு அருகில் இருந்த காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பும், தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த பரப்புரையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது இருமுறை துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நியூயோர்க்கில் யூனியண்டாலே என்ற இடத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், அங்கிருந்த வாக…
-
- 1 reply
- 344 views
- 1 follower
-
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, டிரம்ப் கோல்ப் விளையாடி கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். வாஷிங்டன் டி.சி. அமெரிக்கா அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். https://www.dailythanthi.com/News/World/usa-suspects-shoot-at-trumps-golf-course-1122421
-
-
- 56 replies
- 3.3k views
- 2 followers
-
-
அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டால் நேட்டோ எங்களுடன் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கருதுவோம் - புட்டின் 13 SEP, 2024 | 02:12 PM ரஸ்யா மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேற்குலக அமெரிக்க இராஜதந்திரிகள் தயாராக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புட்டின் இந்…
-
-
- 11 replies
- 815 views
- 1 follower
-
-
புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது! எக்ஸ். இ. சி. புதிய வகை கொரோனா தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல், சீனா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த 500 மாதிரிகளில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டத்தில் புதிய வகை கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2024/1399981 @Kapithan , @ரசோதரன் 😂
-
-
- 8 replies
- 824 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மிட்செல் ராபர்ட்ஸ் பதவி, டிஜிட்டல் சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கொரோனா வைரஸின் புதிய திரிபால் மேற்கத்திய நாடுகளில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கோவிட் வைரஸின் புதிய திரிபு, இதுவரை பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதாக, எக்ஸ் சமூக வலைதள பயனர்கள் தெரிவிக்கின்றனர். குளிர் காலத்தில் வேகமாக பரவத்தக்க …
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
டொலரை கைவிட்டு புதிய கட்டண முறைக்கு செல்லும் பிரிக்ஸ்! பிரிக்ஸ் அதன் வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை ஒருங்கிணைக்காமல் ஒரு புதிய கட்டண முறையை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உறுதிப்படுத்தினார். புதிய கட்டண முறையானது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படாது, இது முழுமையான நிதி அமைப்பாக செயல்படும் என்றும் அவர் மேலும் கூறினார். புதிய பிரிக்ஸ் கட்டண முறையானது உலகளாவிய நிதித்துறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு வழிவகுக்கும். அதேநேரம், டொலர் வர்த்தகம் நிறுத்தப்படுமானால் அது அமெரிக்காவில் பல துறைகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பிரிக்ஸ் முன்னணி வளர்ந்த…
-
- 0 replies
- 872 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போகன்சீ வில்லா 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஒரு அழகிய ஏரிக் கரையில் 17 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட பிரமாண்ட பாரம்பரிய மாளிகை ஒன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. இந்த மாளிகை துரதிர்ஷ்டவசமாக வரலாற்றில் மிகவும் கொடூரமான நபராக கருதப்பட்ட ஒருவருடையது. அவர் அடால்ஃப் ஹிட்லரின் நாஜி பிரசார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ். 2000ஆம் ஆண்டு முதல் இந்த வீடு கைவிடப்பட்ட சொத்தாகி விட்டது. அதை பராமரிக்க அரசுக்கு பெரும் தொகை செலவாகும், யாரும் அதை வாங்க விரும்பவில்லை. இருக்கும் ஒரே வழி, அதை யாருக்காவது கொடுப்பது மட்டும் தான்! ஜோசப் கோயபல்ஸின் கோடைகால ஓய்வு இல்லமாக இருந்த இந்த வீட…
-
- 0 replies
- 525 views
- 1 follower
-
-
வெள்ளத்தால் நைஜீரியாவில் 274 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தை அடுத்து அங்குள்ள சிறைச்சாலையில் இருந்து 270 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அனர்த்தத்தால் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் 1,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 281 கைதிகள் பாதுகாப்பான நிலையங்களுக்கு மாற்றப்பட்டபோது தப்பியோடியுள்ளனர் எனவும், அவர்களில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தப்பியோடியவர்களின் அடையாளங்கள், அவர்களின் விபரங்கள் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட…
-
- 0 replies
- 267 views
-
-
16 SEP, 2024 | 02:56 PM புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தினரால் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக தாய் நாடு திரும்பிய இந்திய இளைஞர்கள் கூறியுள்ளனர். ரஷ்யாவில் பாதுகாவலர் வேலை, உதவியாளர் வேலை என மோசடி கும்பல் இங்குள்ள 60 இளைஞர்களை ரஷ்யாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் ரஷ்யாவின் தனியார் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலர் டிரோன் தாக்குதலில் இறந்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த ஹமில் என்பவர் டிரோன் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அபாயமான சூழலில் சிக்கியுள்ளதை அறிந்த தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சுபியன் என்பவர் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தங்களை மீட்க மத்தி…
-
-
- 13 replies
- 784 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,METSUL METEOROLOG கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் அண்டோனியா அரௌஹொ பதவி, பிபிசி நியூஸ் பிரேசில் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரேசிலைச் சேர்ந்த 44 வயதான கால்நடை பண்ணை உரிமையாளர் டியாகோ க்ளூக், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றை முயற்சிக்க முடிவு செய்தார். தெற்கு பிரேசிலிய நகரமான பெலோடாஸில் உள்ள தனது வீட்டின் பின் புறத்தில் உள்ள தோட்டத்தின் மையத்தில் ஒரு சுத்தமான வெள்ளை வாளியை வைத்தார். கருப்பு மழை என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு பற்றிய எச்சரிக்கைகள் அப்போது வழங்கப்பட்டிருந்தன. "இந்த வாளியில் சேகரிக்கப்படும் நீர், கூரைகள் அல்லது சுவர்களில் இருந்து விழாமல், மேகங்களிலிருந்து நேரடியாக விழுவ…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளை அமெரிக்காவின் ஜோர்ஜியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தேர்தலில் குறுக்கீடு செய்தமை தொடர்பில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரச சட்டத்தரணிகள் மேற்படி வழக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி அறிவித்திருந்தார். 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஜோர்ஜியாவில் டொனால்ட் ட்ரம்ப்பின் தோல்வியை முறியடிப்பதற்குச் சதி செய்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் 14 இணை பிரதிவாதிகள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்…
-
-
- 3 replies
- 592 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 01:48 PM 1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் சீனாவின் ஷங்காய் நகரத்தை திங்கட்கிழமை (16) அதிகாலை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து பாரிய காற்றும் வீசியதோடு, பலத்த மழையுடன் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கிருந்து 400,000 க்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தோடு, விமானங்கள், படகுகள் மற்றும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் மூன்று நாள் இலையுதிர்கால கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஷாங்காய்க்கு தென்மேற்கே 170 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதால் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 180 க்கும் மேற்பட்ட விமானங்களை இரத…
-
- 0 replies
- 441 views
- 1 follower
-
-
ஈரான் (Iran) ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேல் (Israe) மீது பலஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), வடக்கு ஏமனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பெரும் பதிலடியை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். மத்திய இஸ்ரேலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவ்வாறான தாக்குதலை முன்னெடுத்த முதல் தடவையாக இது தெரிவிக்கப்படுகிறது. 2,040 கிலோமீற்றர் தூரம் இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு 2,040 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் ஹைபோசோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக ஹூதியின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா செரியா தெரிவித்…
-
- 0 replies
- 772 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் டிரம்ப், புஷ் இருவரும் மக்கள் வாக்குகளை குறைவாக பெற்றும் அதிபரானது எப்படி? படக்குறிப்பு, அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. 15 செப்டெம்பர் 2024, 07:02 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் அதில் மக்கள் வாக்குகளை அதிகம் பெற்ற வேட்பாளர், வெற்றியாளராக முடியாது. ஏனென்றால், வாக்காளர்கள் நேரடியாக அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களைத் தேர்ந்தெடுப்பது எலக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழுதான். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். …
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் விவாதிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று பிரிட்டன் பிரதமர் கூறினார் கட்டுரை தகவல் எழுதியவர், மாலு கர்சீனோ பதவி, பிபிசி செய்திகள் 14 செப்டெம்பர் 2024 சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவிற்குள் ஊடுருவி அதன் உள்புற இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த யுக்ரேனை அனுமதிப்பது குறித்து சர் கியர் ஸ்டார்மர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. யுக்ரேன் குறித்து ஒரு உத்தியில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமாக கல…
-
- 1 reply
- 266 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 12:19 PM ஆபிரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதன்முதலில் குரங்கம்மை தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. ஆபிரிக்க நாடான கொங்கோவில் 'எம் பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை ஆபிரிக்காவில் குரங்கம்மைக்கு 107 பேர் உயிரிழந்துள்ளனர். 3,160 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. பெரியம்மையை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கிருமி தான் குரங்கம்மை நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், உடல் வலி, உடல் சில்லிடுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள். மிகவும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கை, மார்பு மற்றும் பிறப்பு…
-
- 1 reply
- 196 views
- 1 follower
-
-
15 SEP, 2024 | 12:49 PM நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் இடம்பெற்ற படகுவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 70 விவசாயிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த மரப்படகு கவிழ்ந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாயிகள் கும்பி நகரத்தில் உள்ள தங்கள் விவசாய நிலங்களை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். உளளுர் அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் மூன்று மணிநேர தேடுதலின் பின்னர் ஆறுபேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவம் இந்த பகுதியில் இடம்பெற்றமை இது இரண்டாவது தடவை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நாளாந்தம்900 விவசாயிகள் தங்கள் நிலங்களிற்கு கடல்மார்க்கமாக செல்கின்றனர்…
-
- 0 replies
- 600 views
- 1 follower
-
-
அமெரிக்க அதிபா் தோ்தலில் விண்வெளியிலிருந்தே வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ். சா்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸும் , நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோரும் அங்கிருந்தே அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் வாக்களிக்கவுள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளா்களிடம் சுனிதா வில்லியம்ஸ் , ‘தோ்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய கடமையாகும். எனவே, நான் விண்வெளியில் இருந்தபடியே அதிபா் தோ்தலில் வாக்களிக்கவிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதேவேளை, பட்ச் வில்மோரும், அதிபா் தோ்தல் வாக்குச் சீட்டுக்காகவிண்ணப்பத்துள்ளதாகத் தெரிவித்து…
-
- 0 replies
- 178 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றிருந்தனர். குறித்த விவாதத்தின்போது இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர். கமலா ஹாரிஸ் “நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறார். மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளிதான். அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக…
-
-
- 13 replies
- 849 views
- 1 follower
-
-
உலகின் ராட்சத உடல்வாகு கொண்ட பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழப்பு. பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் இலியா யெஃபிம்சிக் என்ற 36 வயதான சிறந்த பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தனது தீவிர பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடிபில்டர் என்று அழைக்கப்பட்ட இவர் மாரடைப்பு ஏற்பட்டு 36 வயதிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் திகதி வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனமதித்த போது கோமா நிலைக்கு செல்லப்பட்டு நேற்று முன்தினம் உயிர் பிரிந்துள்ளது. ராட்சத உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் இதுவரை எந்தவொரு தொழில்முறையாக போட்டிகளில் அவர் கலந்த கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி தனது ரசிகர்களுடன் வீடியோக்களை சமூக வலைத்தள…
-
-
- 5 replies
- 579 views
- 1 follower
-
-
பூமியையே 9 நாட்கள் உலுக்கிய மெகா சுனாமி - கடந்த ஆண்டு 656 அடி உயர மெகா அலைகள் எங்கே எழுந்தன? பட மூலாதாரம்,JEFF KERBY படக்குறிப்பு, கிரீன்லாந்தில் உள்ள ஃப்யோர்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஓர் அலையை தூண்டியது. கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, பிபிசி செய்திகள் - அறிவியல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரீன்லாந்தில் டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் (Fjord) ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு, ஒன்பது நாட்களுக்கு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஒரு பேரலை உருவாக வழிவகுத்தது. இந்த நிகழ்வினால் ஏற்பட்ட நில அதிர்வு சிக்னல்கள், உலகம் முழுவதும் உள்ள சென்சார்களில், கடந…
-
-
- 1 reply
- 629 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், செப்டம்பர் 21ஆம் திகதி, ‘குவாட்’ எனப்படும் நான்கு நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான உச்சநிலை மாநாட்டை ஏற்று நடத்தவிருக்கிறார். டெலவேர் நகரில் இந்த மாநாடு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் ‘குவாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. நான்காவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு உத்யோகபூர்வ ஒருங்கிணைப்பு, தடையற்ற, வெளிப்படையான இந்தோ – பசிஃபிக் வட்டாரம் குறித்த ஒருமித்த கருத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டது. அவுஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை வரவேற்க அமெரிக்க ஜனாதிபதி ஆ…
-
- 1 reply
- 700 views
- 1 follower
-
-
09 SEP, 2024 | 10:27 AM புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார். இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகபோர் நீடிக்கிறது. இதன் காரணமாக இரு தரப்பிலும் அதிக அளவில்உயிர் சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட்டன. தற்போது ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் உக்ரைன், ரஷ்யாவுடன் போரிட்டு வருகிறது. ‘‘இது போருக்கான காலம் இல்லை. ரஷ்யா, உக்ரைன் போரைகைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று இருநாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடிபல முறை வேண்…
-
- 3 replies
- 570 views
- 1 follower
-
-
நோயுற்ற அல்லது காயமடைந்த மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி? பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,மனித குரங்குகள் என்ன சாப்பிட விரும்புகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித குரங்குகள் (chimpanzees), வலி நிவாரணி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தாவரங்களை சாப்பிடுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உகாண்டாவின் காடுகளில் தாங்கள் செய்த ஆய்வை அவர்கள் விவரித்தனர். காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்டதாக தோன்றிய விலங்க…
-
-
- 3 replies
- 770 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 06 SEP, 2024 | 10:26 AM தென் சீனாவை நோக்கி சக்தி வாய்ந்த யாகி சூறாவளி நகர்வதால் வெள்ளிக்கிழமை (06) பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாடசாலைகள் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளதோடு, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆசியாவைத் தாக்கும் வலிமையான சூறாவளிகளில் ஒன்றான யாகி ஹைனானின் வெப்பமண்டல கடற்கரையில் நிலச்சரிவை எற்படுத்ததும் என தெரிவிக்கப்படுகிறது. 245 கிலோ மீற்றர் அதிக வேகத்தில் தொடர்ந்து காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் பெரில் சூறாவளிக்கு பின்னர் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியாக யாகி பதிவுசெய்யப்பட்டுள்ளது. வடக்கு பிலிப்பைன்ஸை…
-
- 3 replies
- 276 views
- 1 follower
-