உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
பக்ராய்ச் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உத்திரபிரதேச மந்திரி ஆசம்கான்,கடந்த நவமபர் மாதம் 13-ந்தேதி பேசும் போது தாஜ் மகாலை உ.பி.மாநில வக்பு வாரியத்தின் சொத்தாக அறிவிக்க வேண்டும். தாஜ்மகாலின் நிர்வாகி யாக என்னை நியமிக்க வேண்டும் என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உத்திரப் பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது தாஜ்மகால் இருக்கும் இடத்தில் முன்பு தேஜோ மகாலய கோவில் இருந்தது. அந்த கோவில் நிலத்தை ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகாலய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கினார். இதற்கான ஆவணங்கள் உள்ளன. இந்த இடத்தில் தான் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது. அதில் கோவிலின் ஒரு பகுதியும் அடங்கும். சமாஜ்வாடி க…
-
- 1 reply
- 400 views
-
-
இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலத் தீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வேகமாகக் குறைந்துவரும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. தலைநகர் மாலேயிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குடிநீர் வழங்கும் குழாய்கள் மூடப்பட்டுள்ளன. அந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்பட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகம் தொடங்க ஐந்து நாட்கள் ஆகும் என்று மாலத்தீவின் அரசும் கூறுகிறது. இந்நிலையில் இந்தியா, இலங்கை மற்றும் அமெரிக்காவிலிருந்து விமானம் மற்றும் கப்பல்கள்…
-
- 26 replies
- 3.6k views
-
-
சீன நாட்டில் உள்ள ஒரு மாலில் சுமார் $32 மில்லியன் மதிப்புள்ள தங்கத்தினால் ஆன நடைபாதையை அமைத்து சாதனை செய்துள்ளனர். இந்த பாதையின் மீது நடந்து செல்வதற்காக இந்த மாலிற்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். சீன நாட்டில் உள்ள Yichang என்ற பகுதியில் உள்ள மால் ஒன்றில் $32 மில்லியன் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கொண்டு நடைபாதை அமைத்து அதன்மீது கடினவகை கண்ணாடியை போட்டு வைத்துள்ளனர். இந்த கண்ணாடியின் மீது நடந்து சென்றால் தங்கத்தின் மீது நடந்து செல்வது போன்ற உணர்வு இருக்குமாம். மேலும் இந்த பாதையில் நடந்து சென்றால் நல்ல யோகம் வரும் என சீன மக்கள் நம்புகின்றனர். Yichang மால் ஆரம்பித்து 18வருடங்கள் ஆனதையொட்டி இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மால் அதிகாரிகள் தெரிவித்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
திருச்சி: கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது சரியான நடவடிக்கையே என பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார் ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயணா. காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது கர்நாடகா. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், டெல்டா மாவட்ட விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் விவசாயிகள் பந்த் நடத்தியுள்ளனர். தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு கர்நாடகா அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காது, விவசாயம் பாதிக்கப்படும் என அவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி வந்த நடிகர் ரஜினிகாந…
-
- 1 reply
- 665 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வருகை தர உள்ளார். அவரின் வருகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, புது டில்லி நகரம் முழுவதும் சோதனை, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/articles/2014/12/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-…
-
- 0 replies
- 361 views
-
-
ஆஸ்திரேலியாவில் குடியேறும் வெளிநாட்டவர்களில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இது தொடர்பாக மெல்போர்ன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2012-13-ம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேற 1 லட்சத்து 23 ஆயிரத்து 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 40,100 விண்ணப்பங்கள் இந்தியர்களிடம் இருந்து பெறப்பட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 46.6 சதவீதம் அதிகமாகும். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் இருந்து 27,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பிரிட்டனில் இருந்து 21 ஆயிரத்து 700 பேர் ஆஸ்திரேலியாவில் குடியேற விண்ணப்பித்துள்ளனர். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்களின் எண்ணிக்கை நாள…
-
- 0 replies
- 497 views
-
-
இஸ்ரேல் - பாலஸ்தீன வரைபடம் யூதர்கள் என்றவுடனே உங்கள் நினைவுக்கு வருவது என்ன? அந்த இனத்தைக் கூண்டோடு (குறைந்தபட்சம் ஜெர்மனி யிலிருந்து) ஒழிப்பதற்கு ஹிட்லர் எடுத்துக் கொண்ட முயற்சிகளா? பல நாடுகளுக்குச் சிதறினார்கள் அவர்கள். உலகின் பல பகுதிகளிலும் யூதர்கள் பரவிக் கிடந்தாலும் அவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பைப் பல விதங்களிலும் உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. (விஞ்ஞானி ஐன்ஸ்டீன், கம்யூனிஸத் தந்தை கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்கள் சால் பெல்லோ மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், மதியூகி கிஸிங்கர் ஆகியோர் மறக்கக் கூடியவர்களா?) அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் மிகவும் செல்வாக்கான பதவிகளில் யூத இனத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் நெஞ்சு நிறைய ஏக்கம் - ‘’நாம் …
-
- 11 replies
- 1.9k views
-
-
பெஷாவர், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது தொடர்பாக அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தவர். சவூதி அரேபியாவில் பிறந்து வளர்ந்தவர் அட்னன் சுக்ரிஜுமா. அல்-கொய்தா தலைவர்களில் ஒருவராக இருந்த இவர் அந்த இயக்கத்தின் உலகம் முழுவதுமான நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகித்து வந்தார். பாகிஸ்தானில் வசித்து வரும் அல்-கொய்தா தலைவர்கள் உத்தரவின்படி கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதை மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துடன் தொடர்புடைய 5 பேரில் சுக்ரிஜுமாவும் ஒருவர். இவர் மான்ஹேட்டன்…
-
- 0 replies
- 647 views
-
-
வாஷிங்டன், அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில், ரஷ்யாவுடன் வியாபாரம் செய்வதற்கு இது சரியான நேரமல்ல என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை இது எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் செய்தித்துறை செயலாளர் மேரி ஹார்ப் கூறுகையில், 'எங்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் இருந்தாலும் பல நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. எனக்கு தெரிந்த வரையில் ஒரு நாட்டின் அதிபரின் பயணம் மற்றொரு நாட்டு அதிபரின் வருகையை எந்த விதத்திலும் பாதிக்காது. முதலில் அதிபர் புதினின் வருகையால் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வர்த்தக, பொருளாதா…
-
- 0 replies
- 384 views
-
-
புதுடெல்லி, ஜனவரி மாதம் 26 ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் மோடியும் ஒபாமா வுடன் போனில் பேசியும், நேரில் சந்தித்தபோதும் அழைப்பு விடுத்தார். இதை அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டார். அவரது இந்தியப் பயணத்தை அமெரிக்க அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின்பு நடைபெறும் குடியரசு தின விழாக்களில் அமெரிக்க நாட்டு அதிபர் ஒருவர் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து கவுரவிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒபாமா வருகையை யொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிபர் ஒபாமா தீவிர வாதி…
-
- 0 replies
- 261 views
-
-
காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட காயம். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். வரும் 9ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் 3 வது கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு இன்று பிரசாரம் செய்த பிரதமர் மோடி பேசுகையில்; பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்கள் தியாகம் போற்றுதலுக்குரியது. இவர்களது தியாகம் எப்போதும் மறக்க முடியாது. இது எதிர்கால சந்ததியினர் வரை நினைவில் கொள்ளப்படும். இந்த தாக்குதலில் ஜார்கண்ட் புதல்வன் இறந்துள்ளார். இவரது வீர தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன். மாநிலத்தின் வளர்ச்சியே எனது நோக்கம் : நான் கடந்த லோக்சபா தேர்தலில் இங்கு வந்து ஓட்டு கேட்டேன். நீங்கள் அள்ளி வழங்கினீர்கள். பா.ஜ…
-
- 0 replies
- 404 views
-
-
முஸ்லீம்களின் தனிச் சட்டத்தின் படி பெண்கள் பருவம் அடைந்து இருந்தாலோ அல்லது 15 வயது பூர்த்தி அடைந்து இருந்தாலோ பெற்றோரின் சம்மதம் இன்றியும் திருமணம் செய்து கொள்ளலாம் என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு சூரத் பகுதி முஸ்லீம் இளைஞர் யூசுப் லோகத் மீது குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் படி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பருவம் அடைந்த அல்லது 15 வயது முஸ்லீம் பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இஸ்லாமிய தனிச் சட்டம் கூறுவதாக குறிப்பிட்டு, யூசுப் லோகத் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டார். http://seithy.com/breifNews.php?newsID=122137&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 397 views
-
-
அகதிகளுக்கு தாற்காலிக நுழைவு இசைவு (விசா) வழங்கும் சர்ச்சைக்குரிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், தனது குடியேற்றச் சட்டத்தை ஆவுஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது. குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதா ஆவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்ககல் செய்யப்பட்டது. மசோதா மீது இரவு முழுவதும் நடைபெற்ற விவாதத்துக்குப் பின், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அது வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தையடுத்து, தஞ்சம் தேடி ஆவுஸ்திரேலியா வரும் அதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கான தாற்காலிக நுழைவு இசைவு வழங்கப்படும். அந்த நுழைவு இசைவு வைப் பெறுவதன் மூலம், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்கும் உரிமையை அகதிகள் பெற முடியாது. நுழைவ…
-
- 0 replies
- 259 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி திருப்பதி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்ச டிசம்பர் 9 ஆம் திகதி திருப்பதிக்கு சென்று 10 ஆம் திகதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறாராம். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசி நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகள…
-
- 1 reply
- 429 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் இந்திய மீனவர்கள் பிரச்சினையை அரசியலாக்காமல் நிரந்தர தீர்வு காணுவதற்கான மாநாடு, சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் நடக்கிறது. இதில் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன. இலங்கையை சேர்ந்த சில வல்லுனர்களும், இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்ட அமைப்பை சேர்ந்த தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். அன்றைய தினம் மாலையில், 'இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வை நோக்கி', 'இந்திய மீனவர்கள் பிரச்சினையில்…
-
- 0 replies
- 1k views
-
-
பீஜிங், கொடிய குற்றங்கள் செய்து மரண தண்டனை விதிக்கப்படுகிற கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றிய பின்னர், அவர்களின் உடல் உறுப்புகளை அகற்றி விடுவதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது. உலகிலேயே சீனாவில் மட்டும்தான் இந்த வழக்கம் உள்ளது. இந்த உறுப்புகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்கிறவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இப்படி மரண தண்டனை கைதிகளின் உடல் உறுப்புகளை எடுத்து, பிற நோயாளிகளுக்கு வழங்குவது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.இந்த நிலையில், இந்த வழக்கத்தை அடுத்த மாதம் 1–ந் தேதி முதல் விட்டொழிக்க சீனா திடீரென முடிவு செய்துள்ளது. இதை சீன அரசின் செய்தித்தாள் தெரிவித்தது. இது தொடர்பாக சீன மனித உறுப்பு நன்கொடை கமிட்டியின் தலைவர் ஹூவாங் ஜீபு கூறுகையில், ‘‘உறுப்பு மாற்று அறுவை…
-
- 2 replies
- 346 views
-
-
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை அடுத்து ஸ்ரீநகர் சுற்று வட்டாரத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். | படம்:ஏ.எப்.பி. ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள், 3 போலீஸார் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகள் அதிகாலை முதல் அடுத்தடுத்து தொடர் தாக்குதலை நடத்தினர். மதியம் பாராமுல்லா பகுதி போலீஸ் ஸ்டேஷன் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மூன்றாவது முறையாக மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் 3 போலீஸார் பலியாகினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்த…
-
- 0 replies
- 411 views
-
-
வாஷிங்டன், ‘டைம்ஸ்’ பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில், உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் இடம் கிடைத்து உள்ளது. பிரபலமானவர்கள் பட்டியல் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமானவர்களை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்து பட்டியல் வெளியிடுகிறது. 2014–ம் ஆண்டில் மிகவும் பிரபலமானவர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள பெர்கூசன் நகரில் மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பின வாலிபர் போலீஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து அந்த நகரில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் வாக்கெடுப்பில், சில தினங்களுக்கு பிரதமர் மோடி …
-
- 0 replies
- 314 views
-
-
புதுடெல்லி, ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு தலைவரின் படத்தையும் வைக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி குழு தெரிவித்துள்ளது. வருங்காலங்களில் அச்சடிக்கப்பட வேண்டிய ரூபாய் நோட்டுகளின் மாதிரியை உருவாக்க, மத்திய அரசின் அறிவுரைப்படி குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்தது. கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்ட இந்த குழு, ரூபாய் நோட்டில் உள்ள மகாத்மா காந்தி படம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி எழுத்து மூலம் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு எந்த ஒரு தலைவரின் படத்தையும் ரூபாய் நோட்டுகளில் வைக்கக்கூடாது என ரிச…
-
- 0 replies
- 442 views
-
-
தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முதலாவது ஆண்ட நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது இன ஒடுக்கு முறைக்காக பாடுபட்ட நெல்சன் மண்டேலாவை நினைவு கூரும் முகமாக பிரார்த்தனை நிகழ்வுகளும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியொன்றும் நடைபெற்றன. பிரெட்டோரியா நகரில் தேசிய விடுதலை வீரர்களுக்கான சுதந்திர பூங்கா கட்டடத்தில் நெல்சன் மண்டேலாவை நினைவு கூரும் முகமாக விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அங்கு உரையாற்றிய இனத்துவ தலைவர் ரொன் மார்ட்டின் மண்டேலாவாலேயே 25 வருட ஜனநாயகம் சாத்தியமாகியுள்ளது என்று கூறினார். மேலும் 5 மீற்றர் உயமான நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலைக்கு மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. மடிபா (நெல்சன் மண்…
-
- 0 replies
- 261 views
-
-
ஃபிலிப்பைன்ஸ் நாட்டை நெருங்கிவரும் ஹகுபிட் புயலை எதிர்கொள்ள அந்நாட்டு மக்கள் தயாராகிவருகின்றனர். ஞாயிற்றுக் கிழமையன்று இந்தப் புயல் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் கடலில் தற்போது நிலை கொண்டிருக்கும் ஹகுபிட், கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று ஃபிலிப்பைன்ஸை நெருங்கிவருகிறது. கடந்த ஆண்டுதான் இந்தப் பிரதேசம் ஹையான் புயலால் சூறையாடப்பட்டது. இது நான்காம் நிலை புயலாக கடந்த சனிக்கிழமை வகைப்படுத்தப்பட்டது. தற்போதும் தற்காலிக வீடுகளில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான மக்கள், உடனடியாக முகாம்களுக்குச் செல்லும்படி கூறப்பட்டுள்ளனர். ஃபிலிப்பைன்ஸில் யோலண்டா என்று அழைக்கப்பட்ட ஹையான் புயல்தான் நிலத்தைத் தாக்கிய புயல்களிலேயே மிகச் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2013ஆம் ஆண…
-
- 0 replies
- 485 views
-
-
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்ட நிலையில், பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தன. வி.ஆர். கிருஷ்ணய்யர்: கடைக்கோடி இந்தியருக்கும் நீதி | உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் 99-வது பிறந்த நாளையொட்டி, எழுத்தாளரும், மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ச.பாலமுருகன் எழுதி, 'தி இந்து' நாளிதழில் நவம்பர் 15,2013-ல் எழுதிய கட்டுரை இது. | நாட்ட…
-
- 0 replies
- 557 views
-
-
வண்ண ஒளியில் 'புர்ஜ் அல் அராப்' நேற்று (02-12-2014) நடைபெற்ற ஐக்கிய அமீரகத்தின் 43 வது தேசிய நாளன்று துபை ஜுமெய்ரா(Jumeirah Beach) கடற்கரையின் கரையிலிருந்து 300 மீட்டர்கள் கடலுக்குள்ளே அமைந்துள்ள உலகின் முதல் 7 நட்சத்திர ஹோட்டலான 'புர்ஜ் அல் அராப்' தனது 15 வருடத்தை எப்படி கொண்டாடியுள்ளது என்பதை இக்காணொளியில் காணலாம். யூ ட்யூப் செட்டிங்கில் ஃபுல் கெச்.டி-யில்(1080p) மாற்றி காணொளியை பாருங்கள் இன்னும் ரசிக்கலாம்.. A spectacular show - must watch..! http://youtu.be/7uLT7TZ6OCk
-
- 7 replies
- 760 views
-
-
தற்காலிக பாதுகாப்பு வீசாவை (Temporary Protection Visa) மீண்டும் அறிமுகம் செய்யும் சட்டத்தை செனட்டில் வெற்றிபெறச் செய்யும் நோக்கில், ஏற்கனவே முன்வைத்த சட்டமூலத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். அத்துடன், செனட் இந்த புதிய மாற்றத்தை ஏற்றால் வேலைசெய்ய உரிமை மறுக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க தயார் எனவும் அவர் தெரிவித்தார். நேற்று பாராளுமன்றத்தில் நடந்த சூடான விவாதத்தினை அடுத்து இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் வருகின்ற நத்தார் பெருநாளுக்கு முன்பதாக இந்த பிரேரணை வெற்றி பெற்றால் தற்போது அடிமை விசாவில் உள்ள அனைவருக்க…
-
- 0 replies
- 411 views
-
-
உலகம் முழுவதும் உள்ள 68 நாடுகளில் உள்ள சிறைகளில் 6500 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தகவலை வெளியிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “68 நாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் 6483 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அதிகபட்சமாக சவுதி அரேபிய சிறைகளில் 1469 பேர் உள்ளனர். இந்த ஆண்டு நிலவரப்படி பாகிஸ்தான் சிறைகளில் 572 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 151 பேர் விடுவிக்கப்பட்டதுபோக, தற்போது 421 பேர் உள்ளனர். 322 இந்தியர்கள் தண்டனைக் காலம் முடிந்தும் சிறைகளில் அடைப்பட்டுள்ளனர். இதில், 276 பேர் பாகிஸ்தானிலும், 43 பேர் வங்கதேசத்திலும் உள்ளனர். இந…
-
- 1 reply
- 265 views
-