Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி முண்டோ பதவி, பிபிசி நியூஸ் 12 ஆகஸ்ட் 2024 1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் முன்னணி பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான அலெக்சாண்டர் சாக்ஸ் (Alexander Sachs), அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார். ஓவல் அலுவலகத்திற்கோ, அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கோ சாக்ஸ் புதியவர் அல்ல. ஆனால் அன்று அவர் பேச வந்த தலைப்பு புதிது. பொதுவாக பொருளாதாரத்தைப் பற்றி அதிபரிடம் பேசும் அவர், அன்றைய தினம், அவர் அதிபரிடம் பேச இன்னொரு விஷயமும் இருந்தது. …

  2. வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஆகஸ்ட் 2024, 09:24 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். ஹசீனாவுடன் அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது. அவர் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹசீனா எங்கே? வங்கதேச பிரதமர் ராஜினாமா - எங்கே சென்றார்? வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நி…

  3. மோசமான வெப்ப அலையால் கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக காலநிலையில் பெரிதளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஒருபுறம் வெயில் அதிகரித்துக் காணப்படுகிற அதேவேளை காலநிலை தப்பிப் போவதால் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு உலகம் முழுக்க மக்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. 2024ம் ஆண்டும் மற்றும் அடுத்தடுத்த வருடங்களில் பருவநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் உலகத்தின் பல பகுதிகளில் கோடை காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விடுகிறது. அதேபோல மழைகாலமும் தப்பிப் போய்…

  4. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2024 | 05:11 PM கனடாவின் வடக்கு நுனாவட் பகுதியிலுள்ள ஆர்க்டிக் ரேடார் தளத்தில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர் இரண்டு பனிக் கரடிகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் பாஃபின் தீவின் தென்கிழக்கே உள்ள ப்ரெவூர்ட் தீவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கனேடிய அரசாங்கத்தின் சார்பாக ரேடார் பாதுகாப்பு தளங்களை இயக்கும் நிறுவனமான நாசிட்டுக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்தவராவார். தாக்குதல் நடத்திய கரடிகளில் ஒன்றை மற்றைய ஊழியர்கள் கொன்றுள்ளனர். இந்த பகுதிகளில் மனிதர்கள் மீது பனிக் கரடி தாக்கும் சம்பவம் மிகவும் அரிதாகவே நிகழும். இந்த சம்பவம் குறித்த…

  5. சமீபத்தில் ஈரானின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜாவித் ஜாஃப்ரி திடீரென ராஜினாமா செய்துள்ளதால் ஈரான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜானிலிருந்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி மலைப்பகுதியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூன் 28 இல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி மசூத் பிசிஷ்கியானுக்கு 1.04 கோடி வாக்குகள் கிடைத்த நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஈரானின் துணை ஜனாதிபதியாக ஜாவித் ஜாஃப்ரி பதவியேற்றார். ஈரானின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக, 86 நாடுகளைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், ர…

  6. கனடாவில் இந்துக்களுக்கு ஆதரவாக ஒன்று கூடிய ஏனைய மதத்தவர்கள்! பங்களாதேசில் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி கனடாவில் நடைபெற்ற போராட்டத்தில் இந்து, யூதர்,கிறிஸ்தவர், புத்த மதத்தினர் இணைந்து பங்கேற்றுள்ளனர். கடந்த வாரத்தில் பங்களாதேசில் மாணவர்கள் போராட்டத்தால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் குறித்த மாணவர்கள் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்துக்களின் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. பங்களாதேசில் சிறுபான்மை மக்களாக வாழும் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலகில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று க…

  7. லாஸ் ஏஞ்சல்ஸில் திங்கள்கிழமை காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் 4.7 ஆக இருந்தது, ஆனால் பின்னர் அது 4.4 ஆக குறைக்கப்பட்டது. ஆழமற்ற நிலநடுக்கம் 7.5 மைல் ஆழம் மற்றும் நேரடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடியில் இருந்தது, எனவே ஒப்பீட்டளவில் மிதமான தீவிரம் இருந்தபோதிலும் பரவலாக உணரப்பட்டது. 4 முதல் 5 அளவுள்ள நிலநடுக்கங்கள் பொதுவாக லேசான அதிர்வை ஏற்படுத்துகின்றன மற்றும் எந்த சேதமும் ஏற்படாது. https://www.cnn.com/2024/08/12/us/earthquake-los-angeles-california-pasadena-la/index.html @ரசோதரன் @நீர்வேலியான் கதிரை ஏதாவது ஆடிச்சுதா?

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனிதர்களைப் போல யானைகளும் குறிப்பிட்ட யானையைப் பெயர் சொல்லி அழைத்து செய்தியைக் கூறுகின்றன என பகுப்பாய்வு முடிவுகள் உணர்த்தின கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் (இன்று உலக யானைகள் தினம். 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.) சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க ‘உலக யான…

  9. தொடர் நிலநடுக்கங்களால் ஜப்பான் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். இதனால், பொதுமக்கள் பேரழிவு ஏற்பட்டால் தேவைப்படக்கூடிய பொருள்களையும் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களையும் வாங்கிக் குவிப்பதில் மும்முரம் காட்டிவருகிறார்கள். தெற்கு ஜப்பானில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி ரிக்டர் அளவில் 7.1ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 14 பேர் காயமடைந்தனர். இதனால், வரும் நாட்களில் பெரிய அளவிலான நிலநடுக்கம் வரக்கூடும் என அந்நாட்டு பருவநிலை முகவை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், டோக்கியோ பேரங்காடி ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் சில குறைவாக இருப்பதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. அதற்குக் காரணம் நிலநடுக்கம் தொடர்பாக ஊடகங்களில் வரும் தகவல்களே எ…

  10. பிரேசில் விமான விபத்தில் 62 பேர் பலி.எப்படி இந்த விமானம் விழுந்து நொரொங்கியது என்று இன்னும் தெரியவில்லை. https://www.cnn.com/world/live-news/plane-crash-brazil-08-09-24/index.html

  11. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,உயிரிழந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (இடது), புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட யஹ்யா சின்வார் (வலது) கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுலாஃப் பதவி, பிபிசி செய்திகள், காஸா 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலின் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலைத் திட்டமிட முக்கியப் பங்காற்றியவர் யஹ்யா சின்வார். தற்போது, ஹமாஸ் குழுவின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டப் பிறகு, அவரது இடத்துக்கு சின்வார் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இது இஸ்ரேலுக்கு ஹமாஸ் அனுப்பும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், சின்வார் தலைவராகத் தேர்ந்தெடுக்க…

  12. பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம் வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். 13 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான குழப்ப நிலை இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும், சொத்துகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிவர்பூல் மற்றும் சவுத்போர்ட் பகுதிகளில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு கலவரங்களும் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக…

  13. பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் பின்லி, டான் ஜான்சன் பதவி, பிபிசி செய்தி நிருபர் 4 ஆகஸ்ட் 2024 பிரிட்டன் முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜூலை 29-ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற ‘டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில்’ கலந்து கொண்ட மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 3) பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறியதையடுத்து 90-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பிளாக்பூல், மற்றும் பெல்ஃபாஸ்ட் …

  14. Published By: VISHNU 09 AUG, 2024 | 01:36 AM வினோத் மூனசிங்க பெப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனின் "இராணுவமயப்படுத்தலின் நீக்கத்தை" இலக்காகக் கொண்டு ரஷ்யா தனது "விசேட இராணுவ நடவடிக்கையை" (Spetsialnaya Voennaya Operatsiya - SVO) ஆரம்பித்தது. ரஷ்யப் படைகள் 2014 இல் கிறிமியாவில் மேற்கொண்டதைப் போலவே தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்தன. உக்ரேனியப் படைகள் எதிர்க்கவில்லை. ரஷ்யர்கள் தாங்கள் எதிர்கொண்ட எதிர்ப்பின் அளவை எதிர்பார்க்கவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. வடக்கில், ரஷ்யர்கள் உக்ரேனிய தலைநகரான கியிவ் அருகே அடையும் வரை நல்ல முன்னேற்றத்தை அடைந்தனர், அங்கு வான்படைத் துருப்புக்கள் அன்டோனோவ் விமான நிலையத்தை கைப்பற்ற முயன்றனர். இங்கே, வலுவான…

  15. டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையேயான முதல் விவாதம்! முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையேயான முதல் விவாதம் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தனது X கணக்கில் பதிவிட்டு, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பாளரைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். இதற்குப் பதிலளித்துள்ள ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்புடன் விவாதம் செய்யத் தயார் என்றும், செப்டம்பர் 10ஆம் தேதியை அதற்குப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். http…

  16. ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை! ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 அளவிலான நிலநடுக்கங்கள் என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1395117

  17. Published By: RAJEEBAN 07 AUG, 2024 | 06:32 AM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ்; பாக்கிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அமெரிக்க அரசியல்வாதிகளை கொலை செய்ய திட்டமிட்டார் என ஈரானுடன் தொடர்புகளை கொண்டுள்ள பாக்கிஸ்தானை சேர்ந்த நபருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளை கொலைசெய்வதற்காக நபர் ஒருவரை அமர்த்துவதற்கு 46 வயது அசிவ் மேர்ச்சன்ட் முயன்றார் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுஅதிகாரி, அல்லது அமெரிக்க பிரஜையை கொல்வதற்கான வெளிநாட்டு சதி எங்களின் தேசிய பா…

  18. ஹமாஸின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹமாஸ் இயக்கம், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. காசாவின் எல்லையோரத்தில் உள்ள இஸ்ரேலின் நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இரு தரப்புக்கும் இடையேயான இந்தப் போர் தொடர்ந்து வருகிறது. இதனிடையே ஈரானில் கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த அமைப்பின் இராணுவப் பிரிவுத் தலைவர் முகமது டேயிஃபும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்நிலையில் ஹமாஸின் அரசியல் பிரிவின் புதிய …

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்களன்று இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. காலை 9.15 மணிக்கு பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 2,400 புள்ளிகள் சரிந்தது. பின்னர் இந்தச் சரிவு 2,600 புள்ளிகள் வரைச் சென்றது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியும் தொடக்கத்திலிருந்தே சரிவைச் சந்தித்து, நாளின் இறுதியில் 24,055 என்ற அளவில் முடிவடைந்தது. கடந்த வியாழன் அன்று 25,000 என்ற அளவில் வர்த்தகம் ஆகிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, ஜப்பான…

  20. ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை! ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராகச் செயல்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து இஸ்மாயில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன் அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறதுடன் இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39…

  21. சுமார் 5000 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து நுரையீரல் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையை சீனாவைச் (China) சேர்ந்த வைத்தியர் ஒருவர் ரோபோ இயந்திரம் மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். சீன வைத்தியசாலை ஒன்றின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான லூவோ கிங்குவேன் (Luo Qingquan) என்ற வைத்தியரே தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அலுவலகத்தில் இருந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 13ஆம் திகதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5ஜி (5G) அறுவை சிகிச்சை ரோபோ இயந்திரத்தை பயன்படுத்தி ரிமோட் மூலம் சிகிச்சை செய்து நுரையீரல் கட்டியை வைத்தியர் அகற்றியுள்ளார். அறுவை சிகிச்சை நோயாளி சீனாவில் உள்ள காஷ்கரில் சிக…

  22. 03 AUG, 2024 | 08:27 PM (நா.தனுஜா) நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த 2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்தபோது அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என அவுஸ்திரேலிய செனெட்டர் டேவிட் ஷுபிரிட்ஜ் அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். இனப்படுகொலை தொடர்பில் வழக்குத்தொடர்வதற்கு சட்டமா அதிபரின் அனுமதி அவசியம் என்ற தேவைப்பாட்டை நீக்கும் சட்டமூலம் தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற பொது அபிப்பிராயம் கோரலில் கருத்து வெளியிடுகையிலேயே அவுஸ்திரேலியாவின் கிரீன்ஸ் நியூ சௌத் வேல்ஸ் செனெட்டர் டேவிட் ஷுபிரிட்ஜ் மேற…

  23. Published By: RAJEEBAN 02 AUG, 2024 | 04:05 PM அமெரிக்க ரஸ்ய கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலையான அமெரிக்கர்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைந்துள்ளனர். வோல்ஸ்ரீட் பத்திரிகையாளர் கேர்ஸ்க்கோவிச் உட்பட 3 அமெரிக்கர்கள் ரஸ்ய சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலாக 8 ரஸ்யர்களை அமெரிக்கா விடுதலை செய்துள்ளது. பனிப்போர் காலத்தின் பின்னர் இரு நாடுகளிற்கும் இடையில் இடம்பெற்ற மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியின் விமானதளமொன்றில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றது. விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்களுடன் விமானம் மேரிலாண்டில் உள்ள கூட்டு தளத்தில் இறங்கியவேளை அங்…

  24. கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பினத்தவரா? ட்ரம்ப் சர்ச்சை பேச்சு. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கவுள்ள, கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எழுப்பியுள்ள கேள்வி உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் சிகாகோவில் அண்மையில் இடம்பெற்ற குடியரசு கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் ” கமலா ஹாரிஸ் ஆரம்பத்தில் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்ததாகவும், தற்போது தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தி வருவதாகவும் விமர்ச…

    • 1 reply
    • 367 views
  25. 29 JUL, 2024 | 08:13 PM பிரிட்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 9 பேர் காயமடைந்துள்ளனர் சௌத்போட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது என அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. லிவர்பூலில் உள்ள ஆல்டெர் சிறுவர் வைத்தியசாலை உட்பட மூன்று வைத்தியசாலையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது என சிறுவர் மருத்துவமனை அறிவித்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் ஆரம்ப பாடசாலை மாணவர்களிற்கான யோகா நடன நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்திக்குத்து தாக்குதலில் சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.