உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
அமெரிக்காவில் ஒக்லஹோமா என்ற இடத்தில் உள்ள ஒரு உயர்தர பாடசாலைக்கு ஆசிரியர் ஒருவர் போதையில் காற்சட்டை அணியாது தனது முதல் நாள் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் பாடசாலைக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு ஆசிரியை கைது செய்யப்பட்டார். இவர் மீது மதுபானம் மணந்ததாகவும் ஆடைகள் குறைந்தும் காணப்பட்டார் என கூறப்பட்டுள்ளது. 49-வயதுடைய Lorie Ann Hill என்ற இந்த ஆசிரயை முதலில் பாடசாலையின் சக ஆசிரியர்கள் இருவர் கண்டுள்ளனர். Hill புதிதாக தெரிவு செய்யப்பட்டவர். மதுபானம் அருந்தியிருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பொலிசார் பாடசாலைக்குள் வரும் போது தனது காற்சட்டையை அணிந்து கொண்டிருந்தார் என கூறப்பட்டுள்ளது. போதையில் இருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். http:…
-
- 5 replies
- 647 views
-
-
இபோலா - பெருநெருக்கடியில் லைபீரியா இபோலா பரவல் காரணமாக லைபீரிய சுகாதார அமைச்சு முற்றாக நெருக்கடி நிலையை எதிர்கொள்வதாக மருத்துவ தொண்டு அமைப்பான எம் எஸ் எஃப் அமைப்பு கூறியுள்ளது. அந்த நோயின் பரவல் தீவிரத்தை அந்த அமைச்சு குறைத்து மதிப்பிட்டு விட்டது என்று அந்த அமைப்பின் அவசரகால இணைப்பாளர் கூறியுள்ளார். இந்த நெருக்கடியை அரசாங்கம் கையாளும் விதத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தைக் கலைக்க சனிக்கிழமையன்று கலவரம் அடக்கும் போலிஸார் பயன்படுத்தப்பட்டனர். லைபீரியாவில் இந்த வைரஸால் பீடிக்கப்பட்ட றோமன் கத்தோலிக்க மதகுருவுக்கு மட்ரிட்டில் உள்ள மருத்துவ மனையில் ''சோதனையில் உள்ள மருந்து'' மூலம் சிகிச்சை வழங்கப்படும் என்று ஸ்பானிஸ் அரசாங்கம் கூறியுள்ளது. அமெரிக்காவில் இந்த மருந்து…
-
- 0 replies
- 341 views
-
-
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா, சியோரா லோன் உள்ளிட்ட நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் மூலம் கொடிய உயிர்கொல்லி நோய் உருவாகியுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 1000–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனவே இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் அவசர கால பிரகடனம் செய்துள்ளது. இதனால் அந்த நோயை நுழைய விடாமல் அனைத்து நாடுகளும் உஷார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். அதுபோல், நைஜீரியாவில் தங்கி பணிபுரிந்த கனடாவை சேர்ந்த ஒருவர் தலைநகர் டொரண்டோ திரும்பினார். அவருக்கு காய்ச்சல் மற்றும் ஜலதோசம் இருந்தது. அதை தொடர்ந்து விமான நிலையத்தில் அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவரை ‘எப…
-
- 2 replies
- 338 views
-
-
நேரடி ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா - ஈராக்கில் வான் தாக்குதல் தீவிரம்! உணவுப் பொருள்களும் விமானம் மூலம் வீச்சு!! [sunday 2014-08-10 09:00] வடக்கு ஈராக்கில் சின்ஜார் பகுதியில் இடம்பெயர்ந்து வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இரண்டாவது முறையாக தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை விமானம் மூலம் வீசியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வான் தாக்குதல் தீவிரம்; உணவுப் பொருள்களும் விமானம் மூலம் வீச்சு ஒரு சி - 17 ரக சரக்கு விமானம், இரண்டு சி - 130 ரக சரக்கு விமானம் ஆகியவை 72 பொதிகள் அடங்கிய உணவுப் பொருட்களை வீசியிருப்பதாக அமெரிக்க ராணுவத் தலமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. இந்தப் பொருட்கள் சின்ஜார் நகருக்கு அருகில் இருக்கும் மலைப்பகுதியில் வீசப…
-
- 0 replies
- 398 views
-
-
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது எங்கு நிகழ்ந்தாலும், அதில் அமெரிக்கா தலையிடும் என்று அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். இஸ்லாமிய தேசத்தை அமைக்கும் நோக்கத்தில், தற்போது ஈராக் தலைநகர் பாக்தாதை நோக்கி இந்த அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனை முறியடிக்க ஈராக் இராணூவம் முயன்று வருகிறது. அமெரிக்கப் படைகளும் ஈராக்கில், வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளதாவது, " நாம் யார் என்பது அவசியமான கேள்வி …
-
- 2 replies
- 234 views
-
-
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 48 பயணிகள் பலியாகியுள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்த 40 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பலியாகியுள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது. செபாஹன் விமான போக்குவரத்து நிறுவனத்தின் இந்த விமானம் கிழக்கு ஈரானில் உள்ள டாபஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. இந்திய நேரம் 10.20 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியது. டெஹ்ரானுக்குத் தெற்கே மெஹ்ராபாத் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கியது. கடைசியாக ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய விமான விபத்து 2011ஆம் ஆண்டு நிகழ்ந்தது. வடமேற்கு ஈரானில் பனிப்புயல் காரணமாக தரையிறங்…
-
- 0 replies
- 421 views
-
-
ஈரான்,தெஹ்ரானின் மேற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையமான மேஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. டபான் எயார்லைன்சுக்கு சொந்தமான #HH5915 என்ற விமானம் காலை 9.45 மணியளவில் தலைநகர் தெஹ்ரானிலிருந்து அந்நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான டபாசுக்கு புறப்பட்டுச் சென்று சிறிது நேரத்தில் அதன் இயந்திரம் பழுதானதால் அசாதி குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/08/10/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E…
-
- 0 replies
- 321 views
-
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வைகோ சென்னையில் இருந்து கடலூருக்கு இன்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். மதியம் 12 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் அருகே சென்றபோது வைகோவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் லேசான மயக்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கேளம்பாக் கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்கள் பிரதீப் நாயர், ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், ‘‘வைகோவின் உடலை பரிசோதித்ததில் குறைந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. மேலும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறத…
-
- 21 replies
- 830 views
-
-
அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது கொடூர தாக்குதால் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு மீண்டும் சீக்கியர் அமைப்புகள் நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வசிப்பவர் சந்தீப்சிங் (வயது 29). இவர் கடந்த ஜூலை 29-ஆம் தேதி, சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது உரசியது. அப்போது கோபமடைந்த சந்தீப், லாரி டிரைவரை கீழே இறங்கும்படி கேட்டுள்ளார். அதற்கு கோபமடைந்த லாரி டிரைவர், 'தீவிரவாதி, உன் நாட்டிற்கே செல்' என்று இனவெறியுடன் பேசியதோடு, லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து கிளப்ப முயன்றார். லாரியை சம்பவ இடத்திலிருந்து செல்லவிடாமல், சந்தீப்புக்கு நெருங்கியவர்கள் முற்றுகையிட்டனர். ஆனால் அந்த டிரைவர் லாரி…
-
- 4 replies
- 550 views
-
-
அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்தால் அமெரிக்கா நிச்சயம் தலையிடும்: ஒபாமா – அப்போ முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள்??? இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது எங்கு நிகழ்ந்தாலும், அதில் அமெரிக்கா தலையிடும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்தார். இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். இஸ்லாமிய தேசத்தை அமைக்கும் நோக்கத்தில், தற்போது இராக் தலைநகர் பாக்தாதை நோக்கி இந்த அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனை முறியடிக்க இராக் ராணூவம் முயன்று வருகிறது. அமெரிக்கப் படைகளும் இராக்கில், வான…
-
- 0 replies
- 568 views
-
-
சென்னை வந்த இலங்கை சிறார் கிரிக்கெட் அணியை திருப்பி அனுப்பிய விழையாட்டு அதிகாரிகள்! [saturday 2014-08-09 20:00] தமிழ்நாட்டில் தனியார் கிரிக்கெட் சம்மேளனம் ஒன்று ஏற்பாடு செய்த 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட வந்த இலங்கை இளம் கிரிக்கெட் வீர்ர்கள் குழு ஒன்று, பாதுகாப்பு கவலைகளால், மீண்டும் இலங்கைக்கே திரும்ப அனுப்பப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழக அரசு விடுத்த கோரிக்கை ஏற்றுத்தான், அவர்களை நாட்டுக்கு திரும்ப அனுப்பியுள்ளதாக இந்த விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து எழுதி வந்த கடிதங்களை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்ப…
-
- 0 replies
- 287 views
-
-
.காலத்தின் தேவை கருதி. சில தசாப்தங்களுக்கு முன்னர், பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜோர்ஜ் ஒர்வேல் எழுதிய 1984 எனும் நூல் வெளியானது. பனிப்போர் உச்ச கட்டத்தில் இருந்த காலத்தில், கம்யூனிச அரசாங்கங்களை பற்றிய எதிர்மறையான கருத்துகளை பரப்புவதற்காக அந்த நூல் எழுதப் பட்டது. "பெரியண்ணன் உங்களை கண்காணிக்கிறான்" என்ற பெயரில், தனது நாட்டு பிரஜைகளின் நடமாட்டங்களை, அரசு கண்காணிப்பது கதைக்கரு. 1984 நாவல் ஒரு கற்பனைக் கதை. இருப்பினும், அன்றைய ரொமானியாவில் அவ்வாறான அரசாங்கம் இயங்கியதாக, மேற்குலக மக்கள் நம்ப வைக்கப் பட்டனர். இன்றைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சியில் பல வருடங்கள் பின்தங்கியுள்ள, வறிய நாடான ரொமானியாவில் அதெல்லாம் சாத்தியமாகியிருக்க முடியாது. இருப்பினும், "தனி நபர் சுதந்திரத்தை, மனித…
-
- 0 replies
- 566 views
-
-
எபோலா வைரஸ் தொற்று தொடர்பில் உலகளாவிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது புதுடில்லி வந்துள்ள பயணி ஒருவர் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் இந்திய மத்திய சுகாதாரத்துறையை உஷார் படுத்தியுள்ளது. இந்தியாவில் முன்னெடுக்கப்படவுள்ள எபோலா வைரஸ் தோற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா நோய் தொடர்பான சிகிச்சைகளை வழங்க டில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.புதுடில்லியில் உள்ள துவாரகா பகுதியை சேர்ந்த இவர் இதுவரை ஆரோக்கியமாக உள்ளதாகவும், இந்த நோய் தொடர்பாக அவரே தன்னை கண்காணித்துக் கொள்ள வழி…
-
- 4 replies
- 607 views
-
-
அமெரிக்க ராணுவ வீரர்களை காப்பாற்ற ஈராக் பேராளிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்த ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் �ஐ.எஸ்.ஐ.எஸ்� போராளிகள் குர்தீஷ்தான் பகுதியில் 4 கிறிஸ்தவ நகரங்களை கைப்பற்றினர். அங்கிருந்த 1 லட்சம் கிறிஸ்தவர்களை வெளியேற்றினர். குர்தீஷ்தானில் �யாஷிடி� என்ற படிங்குடியினர் உள்ளனர். அவர்களை சிஞ்சர் மலையில் சிறைபிடித்து அடைத்து வைத்துள்ளனர். அங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி சிக்கி தவிக்கின்றனர். சிஞ்சர் மலை பகுதி கடுமையான வெப்பம் மிகுந்தது. எனவே, அங்கு சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கும் யாஷிடி இனமக்கள் வெப்பம் மற்றும் தாகத்தால் செத்து மடிகின்றனர். இதுவரை 40-க்கும் மேற்பட்ட குழந்த…
-
- 1 reply
- 403 views
-
-
இஸ்ரேல், பலஸ்தீனத்தின் சுயாட்சிப் பகுதியான காஸா மீது மனிதாபிமானமற்ற முறையில் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 430 குழந்தைகள் உட்பட ஆயிரத்து 800இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து மருத்துவமனைகள், ஐ.நா நடத்தி வரும் பள்ளிகள் உள்ளிட்ட மையங்களில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த இடங்களையும் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசி அழித்தது. இதற்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இஸ்ரேல் தனது கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக ஹமாஸ் இயக்க குழந்தைகளை கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது என கூறியிருந்தது. இது குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிடும் முயற்சியில் லண்டன் பி.பி.சி நிறுவனத்தின் மத்திய கிழ…
-
- 1 reply
- 360 views
-
-
கம்போடியாவில் இனப்படுகொலை நடத்திய மூத்த கெமர்ரூச் ஆட்சியாளர்கள் இருவருக்கு ஆயுள் வரை சிறை தண்டனை விதித்து ஐ.நா. சர்வதேச விசாரணை தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 1975-களில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கெமர்ரூச் கொடுங்கோலன் பூல்பாட் தலைமையில், இயங்சரே,நௌவான்சியா, கெஹியூ சம்பான் ஆகிய கொடுங்கோலர்கள் 1975- 79-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். அப்போது 17லட்சம் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். வியட்நாமில் இருந்து கம்போடியாவிற்கு பிழைப்பும், இருப்பிடமும் தேடி வந்த அவர்கள். கெமர்ரூச் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடினர். அப்பாவி மக்களான இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அவர்களை பட்டினிபோட்டும், கடும் சித்ரவதை செய்தும் கெமர்ரூச் ஆட்சியாளர்கள…
-
- 0 replies
- 248 views
-
-
AFP ImageForumலைபீரியாவில் எபோலா வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக மருத்துவர்கள் உபயோகப்படுத்தும் கை மற்றும் கால் உரைகள்.|கோப்புப் படம்: ஏ.எப்.பி. லைபீரியாவில் எபோலா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கிருக்கு தனது நாட்டு தூதரக அதிகாரிகளை நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் லைபீரியாவில் 282 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவில் கடந்த சில மாதங்களில், எபோலா வைரஸால் 932 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்து 1,711 பேருக்கு எபோலா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் லைபீரியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா உத்…
-
- 0 replies
- 302 views
-
-
பிரிட்டனில் உள்ள ஒரு மலையை, இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டல், 18 கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறார். லண்டனில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டல், அந்நாட்டில் பெரும் பணக்காரர்களில் ஒருவர். 'செடல்பேக்' என்று அழைக்கப்படும் பிளன்காத்ரா மலை, பிரிட்டனின் கும்பிரியா பகுதியில், லேக் மாவட்டத்தில் உள்ளது. ஷிருங்கலா மலையின் ஒரு பகுதியான இந்த மலை, அரச குடும்பத்தை சேர்ந்த லேண்ட்ச்லேக்கு சொந்தமானது. அவரது மரணத்திற்குப் பின், அவரது வாரிசுகள், அரசுக்கு செலுத்த வேண்டிய, ரூ.90 கோடி வரி பாக்கிக்காக, இந்த மலையை விற்பதாக கூறியுள்ளனர். மலையை விற்பதற்கு, உள்ளூர் மக்களும், பிளன்காத்ரா நண்பர்கள் அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பிளன்காத்ரா நண்பர்கள் அமைப்பும், ஏல வி…
-
- 0 replies
- 573 views
-
-
இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் பகலவனுக்கும் மற்றும் பகுத்தறிவாளனுக்கும் இது ஒரு செய்தியே அல்ல. நகரத்தின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் விவேக்கிற்கும், ஹரிக்கும் இது மற்றும் ஒரு செய்தியே. ஆனால் பொருளாதார வல்லுநர்களுக்கும், அரசிற்கும் இது மிகவும் தீர்கமாக கவனிக்கபட வேண்டிய செய்தி. எது அந்த செய்தி? சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தினசரிகளில் மிகச் சிறிய இடத்தை பிடித்துக் கொண்டிருந்த வணிக மற்றும் பொருளாதார செய்திகள் தற்போது ஒரு குறிப்பிடத்தக்க அளவில் தன் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. ஆனாலும் அதை நுகரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மக்கள் தொகை வகிதாசாரப்படி மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை. ஏன் இந்த செய்திகள் தனி மனித அளவில் அத…
-
- 0 replies
- 584 views
-
-
பாக்தாத்தில் அடுத்தடுத்து கார் குண்டு தாக்குதல்: 42 பேர் பலி பாக்தாத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களில் நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் 42 பேர் பலியானதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு வெவ்வேறு தாக்குதல்களால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. முதல் தாக்குதல் புதன்கிழமை மாலை சத்ர் நகரின் கடை வீதியில் இரண்டு கார் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. அதில் 31 பேர் பலியானதுடன் 34 பேர் காயமடைந்தனர். பின்னர் இரவு நேரத்தில் உர் அருகே நடைபெற்ற மற்றொரு கார் குண்டு தாக்குதலில் 11 பேர் பலியானார்கள். அந்நாட்டில் சன்னி போராளிகள் எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் மொசூல் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கைப்பற்றியதால் தலைநகர் ப…
-
- 0 replies
- 459 views
-
-
கர்நாடக மாநிலத்தில் கிராமம் ஒன்றில் மருத்துவ வசதி இல்லாததால், ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவமனையை அடைய, கிருஷ்ணா நதியை நீந்தி கடந்திருக்கிறார். எல்லாவா என்ற இந்த 22 வயதுப் பெண், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் வடக்கே சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள யாட்கிர் மாவட்ட்த்தில் அமைந்திருக்கும், நீலகந்தராயன்கடே என்ற தீவுக் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர். ஆறு சூழ்ந்த தீவாக இருக்கும் இந்த கிராமத்தில் இருந்து ஆற்றைக்கடந்து செல்ல ஒரு மர மிதவைதான் இருக்கிறது.இந்தப் பெண்ணுக்கு நீச்சல் தெரியாது; ஊரில் மருத்துவ வசதி இல்லை. அருகில் மருத்துவமனை இருக்கும் இடம் ஆற்றுக்கு அப்பால் இருக்கிறது. அது ஆறு பெருக்கெடுத்து சீற்றத்துடன் ஓடும் காலங்களில் இயங்குவதில்லை. இந்…
-
- 1 reply
- 513 views
-
-
கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நகரங்கள் பட்டியலில் லண்டன் முதலிடம் லண்டன் மிக அதிக எண்ணிக்கையிலான கோடிஸ்வரர்களைக் கொண்ட நகராக உருவாகியிருக்கிறது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. இந்த ஆய்வு தென் ஆப்ரிக்காவில் இருந்து இயங்கும் ஆலோசனை நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்டிருக்கிறது. தொடர்புடைய விடயங்கள் பொருளாதாரம் லண்டன் மக்கள் தொகையில் மூன்று சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மிலியன் டாலர்களுக்கும் மேலான நிகர சொத்துக்களை வைத்திருப்பதாக அந்த ஆய்வு காட்டுகிறது. லண்டன் ஒரு சர்வதேச நகரம் என்ற வகையிலும்,ஐரோப்பாவின் முக்கிய நிதித்துறை மையம் என்ற வகையிலும், உலகெங்கிலிருந்தும் உள்ள பணக்காரர்களை ஈர்த்திருப்பதாக இந்த ஆலோசனை நிறுவனம் கூறுகிறது. ஆனால் கோடீசுவரர்கள் அதிகம் உள்ள நகர…
-
- 0 replies
- 405 views
-
-
திருவனந்தபுரம்: பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி தவே கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், அதனை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி தவே அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், "ஒவ்வொருவரிடமும் நல்ல குணங்களை வெளிகொண்டு வரும்போது, வன்முறையை தடுக்க முடியும். இதற்காக பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பிலேயே மாணவர்களுக்கு பகவத் கீதை, மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த நூல்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை போதிக்கிறது. நான் மட்டும் இந்த நாட்டின் சர்வ…
-
- 0 replies
- 345 views
-
-
எங்கெங்கும் இசைவில்லாத சூழல். தலைசுற்றுகிறது. டெக்குவாவில் உள்ள பிரதான சாலை ஒன்றிலிருந்து, தள்ளி அமைந்திருக்கும் ஃபெலாஃபெல் கடை அது (ஃபெலாஃபெல்: உருண்டையாக இருக்கும் ஒரு வகை தின்பண்டம்). கடையிலுள்ள சுவரின் ஒரு மூலையில் மாட்டப்பட்டிருக்கும் தொலைக்காட்சியில் செய்திகள் அரபி மொழியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் காஸாவைப் பற்றிய செய்திகள். மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கும் பெண் ஒருத்தியைக் காட்டுகிறார்கள்; அவள் முகமெல்லாம் சின்னச் சின்னதாக ஏராளமான காயங்கள்; சில காயங்கள் மிகவும் மோசம்; அநேகமாக வெடிகுண்டுச் சிதறலால் ஏற்பட்டிருக்கலாம். அவளால் பேச முடியவில்லை; தூங்கித் தூங்கி விழுவதுபோல் தெரிகிறது (அது தூக்கம்தான் என்றும், மரணம் இல்லை என்றும் நம்புவோம்). அவளுக்கு அருகே, இ…
-
- 0 replies
- 532 views
-
-
அமெரிக்க தளபதியை சுட்டுக்கொன்ற ஆப்கன் ராணுவ வீரர் ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள பிரிட்டன் நாட்டு ராணுவச்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் ராணுவத்தினருக்கான உடையில் வந்த வீரர் ஒருவர் அவரை கொன்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஜெர்மன் நாட்டு தளபதி ஒருவர் உள்பட 15 படையினரும் அந்த வீரரின் தாக்குதலால் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இரு-நட்சத்திரங்களை அணிந்துள்ள அந்த அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை. 13 வருட போரில் தற்போது தான் அமெரிக்காவின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கன் பாதுகாப்பு துற…
-
- 0 replies
- 483 views
-