Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லி: பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது இருப்பிடத்தை ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் மாற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது பேட்டி அளித்த நரேந்திர மோடி, நான் ஆட்சி வந்தால் பாகிஸ்தானில் உள்ள நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம்பை இந்தியா கொண்டு வருவேன் என்று கூறினார். தற்போது மோடி பதவிக்கு வந்துவிட்டார். தாவூத் மீதான திருக்குகளை இறுக்க வேண்டும் என்பது புலனாய்வு துறையின் பொது எதிர்பார்ப்பு. கமாண்டோ வகை தாக்குதல் அச்சத்தில் தாவூத் தனது இடத்தை மாற்றம் செய்திருப்பார் என்று நம்பப்படுகிறது. தனது பாதுகாப்பை ப…

  2. இந்தியாவின் புதிய பிரதமராக பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தியோகபூர்வமாக நியமித்து மே 26-ந் திகதியன்று புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் நரேந்திர மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டத்திலும் மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் ராஜ்நாத்சிங் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் 15 பேர் அடங்கிய குழு முதலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதியிடம் ராஜ்ந…

  3. ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் போல செயல்பட வேண்டாம்: மோடியிடம் வைகோ வலியுறுத்தல். "ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயல்பட வேண்டாம்' என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள குஜராத் பவனில் அம் மாநில முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை வைகோ திங்கள்கிழமை நேரில் சந்தித்தார். இச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: மரண அடி கொடுக்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சில மாநிலங்களில் ஓர் இடம்கூட கிடைக்கவில்…

  4. நாடாளுமன்றத்தில் கமல்நாத், குலாம் நபி எதிர்க்கட்சி தலைவர்களாகிறார்கள்: சோனியா- ராகுல் இல்லை. டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக கமல்நாத்தையும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக குலாம்நபி ஆசாத்தையும் நியமிக்க சோனியாகாந்தி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன. வாஜ்பாய் ஆட்சியில் சோனியாகாந்திதான் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். இம்முறையும் அவரையே மக்களவையின் காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்க கட்சியி எம்பிக்கள் விரும்புகிறார்கள். ஆனால் பிரச்சாரத்தின்போது தனது குடும்பத்தை கடுமையாக விமர்சனம் செய்த மோடியை எதிர்கொண்டு பணியாற்ற சோனியா தயங்குவதாக கூறப்படுகிறது. அதேநேரம் அனைத்து கட்சி உறுப்பினர்களுடனும் நல்ல தொடர்பிலுள்ள 9 முறை நாடாளுமன்றத்துக்…

  5. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறியிருந்தனர். நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாடளவில் வெறும் 44தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் திங்களன்று மாலை புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக முன்வந்ததாகவும், ஆனால் காங்கிரஸ் செயற்குழு அதை ஏற்றுகொள்ளவில்லை என்றும் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ஆஸ்கர் ஃபெர்னாண்டெஸ் தெரிவித்தார். செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீ…

  6. இனப்படுகொலையில் ஈடுபட்ட சேர்பிய இராணுவத் தளபதி மிலாடிக் மீதான விசாரணைகள் ஆரம்பம் மே 20, 2014 இனப்படுகொலை மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக முன்னாள் பொஸ்னிய சேர்பிய இராணுவத் தளபதி ரத்கோ மிலாடிக் மீதான வழக்கில் பிரதிவாதி தரப்பு விசாரணை ஹேக் நகரில் நேற்று ஆரம்பமானது. முன்னாள் யுகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்னால் ஆஜராகவுள்ள மிகவும் அதிகளவுக்கு சந்தேகநபராக கருதப்படுபவர்களில் 72 வயதுடைய மிலாடிக்கும் ஒருவராவார். 1992 - 1995 காலப்பகுதியில் பொஸ்னிய யுத்தத்தின் போதான 11 குற்றச்சாட்டுகளை மிலாடிக் மறுத்து வருகிறார். சிறிபெரினிக்காவில் 7 ஆயிரத்துக்கு அதிகமான பொஸ்னிய ஆண்களையும் சிறுவர்களையும் படுகொலை செய்ததில் இவருக்கு பங்களிப்பு இரு…

  7. கடல் உணவில் காண்டம்: நஷ்ட ஈடு கேட்டு 3 பெண்கள் வழக்கு. பீஜிங்: சீனா ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்த கடல் உணவில் ஆணுறை இருந்த காரணத்தால் அதிர்ச்சியடைந்த பெண்கள் நஷ்ட ஈடு கேட்டு வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள கடல் உணவகம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மே லியாங் என்ற பெண், தனது தோழிகள் இருவருடன் சாப்பிட சென்றார். அவர்கள் வறுத்த மீன் வகை உணவு ஒன்றை ஆர்டர் செய்தனர். அவர்கள் கேட்ட உணவு சிறிது நேரத்தில் பரிமாறப்பட்டது. அந்த உணவை பெண்கள் மூவரும் மிக ஆவலுடன் சாப்பிட்டனர். அந்த உணவில் ஒரு ஆணுறை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை பார்த்ததும் சப்பிட வந்த மூன்று பெண்களில் ஒருவர் வாந்தி எடுத்தார். இன்னொரு பெண்ணுக்கு வயிற்று வலி…

  8. டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி முயற்சி! காங்கிரஸ் எதிர்ப்பு!! டெல்லி: டெல்லி மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை ஆம் ஆத்மி மேற்கொண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஆதரவளிக்கப்போவதில்லை என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 28 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி சாதனை படைத்தது. பின்னர் பல்வேறு இழுபறிக்குப்பின், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் நிலைக்கவில்லை. ஜன்லோக்பால் மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற முடியாததை தொடர்ந்து, அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அக்கட்சியின் 49 நாள் ஆட்…

  9. குஜராத்தில் நரேந்திர மோடி | படம்: விவேக் பேந்த்ரா குஜராத்தில் நரேந்திர மோடி | படம்: விவேக் பேந்த்ரா இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன் என்றும், நாட்டை மறுகட்டமைப்பு செய்வேன் என்றும் மோடி தனது வெற்றி உரையில் கூறினார். பாஜகவின் வெற்றிக்குப் பின்னர் குஜராத் மாநிலம் வதோதராவில் முதல் உரை ஆற்றிய நரேந்திர மோடி, தேர்தலில் தனிப் பெரும்பான்மை வழங்கிய இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: "பாஜக முன்னிலை நிலவரங்கள் வெளியான உடனேயே பல்வேறு ஊடகவியலாளார்கள் என்னிடம் தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர். ஆனால், வதோதராவில்தான் முதலில் பேச வேண்டும் என விரும்பினேன். அதனாலேயே இங்கே உங்கள் முன் பேசுகிறேன். வதோ…

    • 7 replies
    • 1.1k views
  10. இயக்குநர் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரத்தை எதிர்கொள்ளப் பயந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, "அண்ணே தயவு செய்து என்னுடைய தொகுதிக்கு மட்டும் பிரச்சாரத்துக்கு வந்துடாதீங்க" என்று வேண்டி கடிதம் எழுதியுள்ளார். நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான். தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டும் அவர் அக்கட்சியைத் தோற்கடிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகிறார்கள். அவரது பிரச்சாரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல ஊர்களில் சீமான் அடுத்து …

  11. அனைவருக்கும் வணக்கம், கடந்த கால நிகழ்வுகளை நினைத்து நினைத்தே வெம்புவது, காலம் கடத்துவது, ஆராய்ச்சி பண்ணுவது, மேலும் நடந்து போன பின்னர் இதனால் தான் இப்படி நடந்தது என பெரிய மேதாவி போல கட்டுரை எழுதுவது, இப்படியிருந்திருந்தால் அப்படி ஆகியிருக்கும் மற்றும் அப்படி இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்கும் என கதை கட்டுவது எல்லாம் தமிழருக்கு கை வந்த கலை . நானும் ஒரு தமிழன் என்பதால் அது போன்ற ஒரு கட்டுரை இங்கே உங்களின் பார்வைக்காக எழுதியிருக்கிறேன் முதலில் வைகோ இவர் 2006 ல் ஆறு எழு சீட்டுக்காக கூட்டணி மாறினார் . யாரோடு தெரியுமா ??? சட்ட சபையில் விடுதலை புலிகளை தடை செய்ய வேண்டும் மற்றும் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய அம்மையாரோடு. பின் விளைவுக…

  12. இந்தியா வல்லரசு ஆகுமா? -- சீமான் சொல்கிறார் காணொளி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  13. இந்திய தேர்தல் முடிவுகள் ஹிமாசல் பிரதேசத்தில் பாரதீய ஜனதாக் கட்சி முன்னணியில் (மொத்தமுள்ள நான்கு ஆசனங்களில் மூன்றில் முன்னணியில்) முதல் சுற்று முடிவில் சிதம்பரம் முன்னணியில்

  14. சீமானுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசியதாக இயக்குநர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சிறைகாவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவரை இன்று புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் போலீசார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 30ஆம் தேதி வரை அவருக்கு சிறைக்காவலை நீடித்து உத்தரவிட்டார். இந்த வெட்ககேடான நீதிக்கு கருத்துரைத்தோர் கூற்று: ஜனநாயகம் என்ற பெயரில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் இந்தியாவில்? ஆளுபவர்களிடம் ஜனநாயகமோ மனித நேயமோ இல்லை . மலேய்சியா இ சிறிலங்காவை அடுத்து உலகில் தமி…

  15. ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்தில் தனது பொறுப்பு மிகுந்த பங்களிப்பை அளிக்க தவறக்கூடாது: கருணாநிதிக்கு சென்னை மாநாடு வேண்டுகோள் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்தில் தனது பொறுப்பு மிகுந்த பங்களிப்பை அளிக்க தமிழக அரசு குறிப்பாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தவறக்கூடாது என்று சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் திராவிடர் கழகத் திடலில் நேற்று வியாழக்கிழமை ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க. மணி, கவிஞர் அறிவுமதி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் ச…

  16. ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து 1980 ஆம் ஆண்டு பாஜக உதயமானது. 1984 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தனிப் பெரும்பான்மை என்ற வளர்ச்சி கண்டுள்ளது. 1977 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, எதிர்கட்சி ஒன்று தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. சுதந்திர இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் எதிர்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது, இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது. 1989-ற்குப் பிறகே மத்தியில் கூட்டணி ஆட்சியே நடைபெற்று வந்தது. 1996 ஆம் ஆண்டு பாஜக தலைமையில் முதன் முதலில் ஆட்சி அமைந்தது. ஆனால் அது 13 ந…

  17. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகாலம் தடை நீடிப்பு. டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியிடப்பட்டு வந்தன. 2009ஆம் ஆண்டுக்கு இலங்கை இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகாலமாக இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவும் இல்லை. ஆனால் இலங்கை அரசு அண்மைய…

  18. புதுடெல்லி: நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு 289 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும், தமிழகத்தில் அதிமுகவுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ( Exit poll ) தெரியவந்துள்ளது. C Voter என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவை பொறுத்தவரை அக்கட்சிக்கு தனியாக 249 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 78 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் 153 இடங்களை கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நகர்புறத்து வாக்காளர்களின் கவனத்தை பெற்ற அரவிந்…

  19. காத்மா காந்தி தனது மூத்த மகன் ஹரிலால் அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி எழுதிய கடிதம் லண்டனில் ஏலத்திற்கு வருகிறது. இங்கிலாந்தில் உள்ள ஏல நிறுவனமான முல்லக்ஸ் ஆக்ஷனீர்ஸ் மகாத்மா காந்தி குஜராத்தியில் எழுதிய மூன்று கடிதங்களை ஏலத்தில் விடுகிறது. இந்த கடிதங்கள் 1935ம் ஆண்டு ஜுன் மாதம் எழுதப்பட்டவை. இந்த கடிதங்கள் ரூ. 99 லட்சத்து 90 ஆயிரத்து 81க்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீ தான் காந்தி தனது மூத்த மகனான ஹரிலாலுக்கு எழுதிய கடிதத்தில், நம் நாட்டு விடுதலையை விட உன் பிரச்சனை தான் எனக்கு மிகவும் கடினமாக உள்ளது என்பது உனக்கு தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பலாத்காரம் மனு உன்னை பற்றி பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை என்னிடம் தெரிவி…

  20. சுடானில் இஸ்லாமிய மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று, ''மதத்தை கைவிடல்'' குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதித்துள்ளது. நீ திரும்பி இஸ்லாத்துக்கு வருவதற்கு உனக்கு மூன்று நாள் அவகாசம் தந்தோம், ஆனால், நீ மாறவில்லை, ஆகவே உன்னை சாகும்வரை தூக்கிலிட உத்தரவிடுகிறோம் என்று நீதிபதி அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இருக்கும் ''தான் விரும்பும் மதத்தை தழுவிக்கொள்ளும் உரிமையை'' மதிக்குமாறு மனித உரிமை அமைப்புக்களும், மேலை நாட்டுத் தூதரகங்களும் சுடானிய அரசாங்கத்தை கோரியுள்ளன. அந்தப் பெண், குழந்தையைப் பிரசவித்து இருவருடங்கள் ஆகும் வரை, அந்தத் தண்டனை நிறைவேற்றப்படாது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்ற…

  21. கும்பகோணம்: 3வது முறையாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். கும்பகோணம் சக்கரபாணிசாமி கோவிலில், மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3வது முறையாக ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே, கடந்த 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமையும் என்றனர். அதேபோல 2009ல் அத்வானி தலைமையில் ஆட்சி அமையும் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்த 2 கணிப்புகளும் பொய்யானது. அதேபோல், 3வது முறையாக தற்போதுள்ள கருத்து கணிப்புகள் பொய்யாகும். மேலும், ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நர…

    • 4 replies
    • 431 views
  22. டேராடூன்: மரபணு சோதனைக்காக முன்னாள் ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி இன்று தனது ரத்த மாதிரியைக் கொடுத்தார். முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஆந்திர ஆளுநருமான என்.டி.திவாரியை(86) தமது தந்தை என்று உரிமை கோரி, ரோகித் சேகர் (32) என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரியை என்.டி. திவாரி கொடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 29ம் தேதிக்குள் என்.டி. திவாரி ரத்த மாதிரியை கொடுத்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இதற்காக திவாரி டெல்லிக்கு வராமல் டேராடூனில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தாலே போதும் என்றும் கூறப்பட்டது. …

  23. வியட்நாமில் நடக்கும் சீனா எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறை வடிவம் எடுத்திருக்கின்றன. தெற்கு வியட்நாமில் ஆர்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருக்கும் வெளிநாட்டு தொழிற்சாலைகளை அடித்து நொறுக்கியதோடு அவற்றில் சிலவற்றுக்கு தீவைத்தும் எரித்தனர். சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில், யாருக்கு சொந்தமானது என்கிற தாவாவில் இருக்கும் தென்சீனக்கடற்பகுதியில், சீனா தனது எண்ணெய் துரப்பண கப்பல்களை கொண்டுவந்து நிறுத்திய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வியட்நாமிய ஆர்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இவர்களால் இன்று குறிவைக்கப்பட்ட தொழிற்சாலைகள் சில தாய்வான் நாட்டைச் சேர்ந்தவை. அவற்றை சீனாவுக்கு சொந்தமானவை என்று இந்த ஆர்பாட்டக்காரர்கள் தவ…

    • 0 replies
    • 495 views
  24. நெல்லை: கூடங்குளம் அணு உலையில் ஏற்பட்ட விபத்தில் 6 ஊழியர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கூடங்குளம் அணு உலையில் வெப்ப நீர் செல்லும் குழாய் இன்று திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அணு உலையில் பணியில் இருந்த 6 ஊழியர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களில் 3 பேர் அணு உலை பணியாளர்கள் மற்ற 3 பேரும் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து 6 ஊழியர்களும் உடனடியாக அணு உலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் அவர்களை நாகர்கோவில் ஆசாரிப்பாள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.