உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
சென்னை: மதிப்பு கூட்டு வரி ஏய்ப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த நோக்கியா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனம் இங்கு தயாரிக்கும் செல்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறி, வரிச்சலுகை பெற்ற நிலையில், அந்த செல்போன்களை இங்கேயே விற்று ரூ.2,400 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக தமிழக அரசு புகார் கூறியது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி வாய்ப்பு செய்த வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த நோக்கியா நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, 8 வாரத்திற்குள் பணத்தை…
-
- 0 replies
- 362 views
-
-
இந்தியாவின் புதுடெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென்று பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கணினியில் ஏற்பட்ட மின்கசிவு இந்தத் தீ விபத்துக்கு காரணமென்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்து ஏற்பட்ட வேளையில் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில் இருக்கவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி அலுவலகத்தின் கீழ்தளத்தில் புகை எழுந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது, அலுவலகத்திலிருந்த ஆவணங்களுக்குச் சேதம் ஏற்படவில்லை என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/108568-2014-04-29-06-29-14.html
-
- 2 replies
- 260 views
-
-
அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்து எரிந்தது. விமானி சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 10.45 மணிக்கு 93 பயணிகளுடன் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவை நோக்கிப் பயணித்தது. இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் எஞ்சின் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. எரிபொருள் தீப்பிடித்து எஞ்சினில் பற்றி தீ பரவியதாகத் தெரிகிறது. எனினும், விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால், விமானம் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் 93 பயணிகள் உயிர்பிழைத்தனர். http://www.akkinikkunchu.com/2014/04/29…
-
- 0 replies
- 181 views
-
-
எகிப்தில் இஸ்லாமிய இயக்க தலைவர் உட்பட 683 பேருக்கு மரண தண்டனை! [Tuesday, 2014-04-29 09:50:25] போலீசாரை கொன்ற வழக்கில் எகிப்து நாட்டின் இஸ்லாமிய இயக்க தலைவர் உள்பட 683 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.எகிப்தை நீண்ட காலம் ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹோன்சி முபாரக்கிற்கு எதிராக மக்களின் புரட்சி வெடித்ததால் 2011�ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் முகமது மோர்சி என்பவரின் தலைமையிலான இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. எனினும் மோர்சியின் ஆட்சியின் போதும் நாட்டில் ஆங்காங்கே கலவரமும், வன்முறையும் தொடர்ந்ததால் அரசியல் …
-
- 0 replies
- 382 views
-
-
எழுவர் விடுதலை தாமதம் அரசியல் தலையீடு காரணமா???
-
- 2 replies
- 537 views
-
-
மக்களவைத் தேர்தலில் வெற்றி பாஜக தலைமையிலான அரசு அமைந்தால், மத பேதமின்றி அனைவரின் பாதுகாப்புக்கும் உறுதிபூண்டுள்ளதாக, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி தெரிவித்தார். மதவாதம், அதிகாரம் மற்றும் பணம் ஆகியவற்றின் ஆபத்தான கலவையே பாஜகவின் கொள்கைகள் என்றும், இந்தியாவை சொர்க்கமாக்கப் போவதாக மோடி கூறிவருவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். என்னிடம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை... பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மோடி அளித்த பேட்டியில், சோனியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தவர், "மக்களவைத் தேர்தலில் 100 இடங்களிலாவது கைப்பற்ற மாட்டோமா என்ற விரக்தியில் அவர் இப்படி பேசி வருகிறார். இந்தியாவை சொர்க்கமாக்குவேன் என்றும், எல்லா பிரச்சினைகளுக்கும் என்னிடம்…
-
- 3 replies
- 761 views
-
-
இடைமறித்து தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா: [Monday, 2014-04-28 08:18:31] குறித்த ஏவுகணை பரிசோதனையை இந்தியா தனது ஒடிஷாவின் பாலசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் நேற்று காலை 9.10 மணியளவில் வான் நோக்கி செலுத்தி சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. குறித்த ஏவுகணைக்கு பிரித்திவி எயார் டிபென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கடற்படை விமானத்தில் இருந்து நேற்று காலை 9.06 மணிக்கு எதிரி நாட்டு இலக்காக கருதப்படும் ஏவுகணை ஏவப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரேடார் மூலம் கிடைத்த சிக்னல்களைக் கொண்டு ஏவப்பட்ட வீலர் தீவில் இருந்து சென்ற நவீன ரக இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அ…
-
- 2 replies
- 371 views
-
-
கடவுள்தான் தயவு செய்து இந்த நாட்டை மோடி மாடலில் இருந்து காப்பாற்ற வேண்டும்: - சோனியா பிரசாரம் [sunday, 2014-04-27 13:16:05] பஞ்சாப் மாநிலம், மால்வா பகுதியில் அமைந்துள்ள பர்னாலா என்ற இடத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாரதீய ஜனதா தலைமை பிரசாரகர், குஜராத்தின் பெயரால் நரேந்திர மோடி மாடலை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இந்த மாடலில் குஜராத்தில் என்ன நடக்கிறது? கடந்த 50 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகிற சீக்கியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற வைக்கிறார்கள். கடவுள்தான் தயவு செய்து இந்த நாட்டை மோடி மாடலில் இருந்து காப்பாற்ற வேண்டும். குஜராத்தில் சீக்கியர்களுக்கு …
-
- 1 reply
- 327 views
-
-
உக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் இன்று ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், வரும திங்கள்கிழமைக்குள் அமெரிக்கா இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா ஆசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜி-7 நாடுகளின் தலைவர்கள் அளித்துள்ள ஒப்புதல் அறிக்கையை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. அதில், 'ஜெனிவா உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள எந்த முழுமையான நடவடிக்கையையும் ரஷ்யா எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உக்ரைன் எல்லையில் தனது ராணுவத்தை குவித்து வருகிறது. உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்காக கொண்டு வர…
-
- 4 replies
- 680 views
-
-
பூச்சி பயம்... 1.6 கோடி இந்திய மாங்கனிகளுக்கு தடை விதித்த ஐரோப்பிய யூனியன். லண்டன்: பூச்சி தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுவை மிகுந்த இந்திய மாம்பழங்களை இங்கிலாந்தில் விற்பனை செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடைகளுக்கு வந்து சேர்ந்துள்ள கி்ட்டத்தடட 1.6 கோடி மாம்பழங்களுக்கு யூனியன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்திய மாம்பழங்களை சுவைக்கும் வாய்ப்பை இங்கிலாந்தைச் சேர்நதவர்கள் தற்காலிகமாக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பூச்சி பயம். இந்தியாவிலிருந்து இறக்குமதி செயய்ப்பட்ட மாம்பழங்களில் பூச்சி தாக்கியிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாம். இங்கிலாந்து வெள்ளரிக்கு (Cucumber / Gurken) ஆபத்து. இந்தி பூச்சிகளால் இங்கி…
-
- 4 replies
- 787 views
-
-
நடுவானில் விமானங்கள் மோதிக் கொண்டன - ஒன்று கடலில் விழுந்தது! [Monday, 2014-04-28 10:51:21] வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத விதமாக நடு வானில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில், ஒரு விமானம் கடலில் மூழ்கியது. மற்றொரு விமானத்தின் விமானி, சாதுர்யமாக விமானத்தை விமான நிலையத்தில் தரையிறக்கினார். சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவை ஒட்டிய சிறிய விமான நிலையத்தில் தரையிறங்க வந்த போது இந்த விபத்து நேரிட்டது. கடலில் விழுந்த விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது. இரண்டு விமானங்களிலும் விமானிகள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=108251&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 208 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, நரேந்திர மோடி முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அம்மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் பங்கேற்றனர். பிரசார மேடையில் அவர்கள் முன்னிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, பாரதிய ஜனதாவில் தம்மை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து கருத்து தெரிவித்த நரேந்திர மோடி அவரது வருகை, பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்தும் என்றார். தல்ஜீத் சிங் கோலியின் முடிவு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்பம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. எனினும், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இந்…
-
- 2 replies
- 517 views
-
-
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை பிப்ரவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த 3 பேர் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட 4 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து இந்த 7 பேரையும் விடுக்க முடிவு செய்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த …
-
- 13 replies
- 1.2k views
-
-
உக்ரேன் கிளர்ச்சியால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம்! [saturday, 2014-04-26 11:29:20] ரஷ்ய - உக்ரேன் நாடுகளுக்கிடையிலான நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் சுமார் 10 நகரங்களில் அரசு கட்டிடங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர். உக்ரேனின் எச்சரிக்கையையும் மீறி அங்கிருந்து அவர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர். அவர்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி ரஷ்யா வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் ரஷ்யா உடன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில், ரஷ்யப்படையினர் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான தீவிர இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரஷ்ய துருப்பினர்…
-
- 1 reply
- 567 views
-
-
தற்போதைய காலங்களில் இங்கிலாந்து மக்கள் சகல தளங்களிலும் ஆபத்திருப்பது போன்ற பிரம்மையிற் பயந்து வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகையிரதத்திற்காகக் காத்திருக்கும் சந்தர்ப்பங்களிலும், பயணங்களின் போதும், தான் இயங்கிப் படிக்கட்டுகளில் செல்லும் சமயங்களிலும், இனம் தெரியாத பய உணர்வு மக்கள் மத்தியிற் காணப்படுவதாக அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புச் சந்தை நடைமுறைகளிலும், வேலை இடங்களுக்கான உத்தரவாதத்திலும் தேவையற்றுக் காணப்படும் சந்தேகம், பய உணர்வைத் தோற்றி நிற்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து மக்கள், உணராத வகையில் பய உணர்வு அவர்கள் மனங்களில் ரகசியமாக குடியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் வாதிகள் ம…
-
- 1 reply
- 446 views
-
-
மலையடிவாரத்து முகாமில் போராடும் ஷெர்பாக்கள் மலையேறுவோர்க்கு வழிகாட்டிகளாக இருந்துவரும் ஷெர்பா இனத்தார் 16 பேர் சென்ற வாரம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த பின்னணியில், தற்போதைய மலையேற்ற பருவத்தில் ஏனையோரின் பயணங்கள் தொடருமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. மலையேறச் சென்றிருந்த மற்றவர்களும் எவரெஸ்ட் சிகர அடிவராத்து முகாமிலிருந்து தற்போது கீழே இறங்கிவர ஆரம்பித்துள்ளனர். ஷெர்பாக்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையும், இமலயலையில் தற்போது காணப்படும் ஆபத்தான சூழலும் இந்நிலைக்கு காரணம். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற ஆர்வலர்கள் ஏறுவதற்குரிய காலம் என்பது ஒரு மூன்று மாத காலகட்டம்தான். ஷெர்பாக்களின் ஊதிய…
-
- 0 replies
- 424 views
-
-
ராஜிவ் மரணமும் அரசியலும் - காங்கிரஸ் http://kumarikantam.blogspot.in/2014/04/blog-post_25.html
-
- 0 replies
- 517 views
-
-
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலிருந்து சென்ற விமானத்தில் 'பாதுகாப்பு உசார்நிலை' ஏற்படக் காரணமான பயணி ஒருவரை இந்தோனேசியாவின் பாலித் தீவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். முன்னதாக, விமானம் கடத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசிய இராணுவத்தினர் தகவல் வெளியிடவும் இந்தப் பயணியே காரணமாகியுள்ளார். குறித்த பயணி மதுபோதையில் இருந்ததாகவும் விமானிகளின் காக்பிட்- கட்டுப்பாட்டு அறையின் கதவை ஓங்கித் தட்டியதாகவும் அதன்பின்னர் அந்தப் பயணி மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் வர்ஜின் விமானசேவையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்தத் தகவல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டமையே விமானம் கடத்தப்பட்டதாக முன்னதாக செய்திகள் வரக்காரணம் என்றும் அவர் தெரிவித்தார். விமானம் பாலியில் தரையிறங்கியபோது, விமானத்தை தமது கட்டுப…
-
- 1 reply
- 262 views
-
-
கனடாவின் வான்கோவர் தீவில் நேற்றிரவு 6.7 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியில் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ள பகுதியில் சுனாமி ஆபத்துகள் எதுவுமில்லை என அலஸ்காவிலுள்ள அமெரிக்காவின் சுனாமி எச்சரிக்கை அலுவலகம் கூறியுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=5239#sthash.HEHhPI5J.dpuf
-
- 2 replies
- 471 views
-
-
ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை விவகாரம்: இன்று தீர்ப்பு வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014 07:32 0 COMMENTS இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான முதன்மை அமர்வு இந்த மனு மீது தீர்ப்பு அளிக்கவுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன, சாந்தன், பேரறிவாளன் ஆகியோர…
-
- 0 replies
- 499 views
-
-
இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே நாளில் நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 7-ம் நாள் தொடங்கி மே 12-ம் நாள் வரை 9 கட்டங்களாக 543 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரையில் 5 கட்டங்களாக மொத்தம் 311 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆறாவது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி,மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 60,817 வாக்களிப்பு நிலையங்களில், இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்…
-
- 0 replies
- 469 views
-
-
பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் இணைந்து இடைக்கால அரசொன்றை அமைக்க முடிவெடுத்துள்ளன ஒன்றோடொன்று போட்டியிட்டுப் போராடிய பாலஸ்தீன விடுதலை இயக்கங்களான "கமாசும்"(Hamas) வ(f)ற்ராவும்(Fatah) இணைந்து இடைக்கால அரசொன்றை அமைக்க முடிவெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பரஸ்பரம் பகைமை பாராட்டிய இரு அமைப்புகளும் இணைந்து வருகின்ற ஐந்து கிழமைகளுக்குள், முகமட் அபாஸ் தலைமையில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எடுத்த முடிவானது இஸ்ரேல் பிரதமர் பென்ஜாமின் நெற்ரன்ஜாகுவைக் குழப்பமடையச் செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு பாலஸ்தீன விடுதலை அமைப்புகளும் இணைவதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே 2011 இல் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், நடை முறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் …
-
- 0 replies
- 393 views
-
-
சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு: பிரசார பொறுப்பை ஏற்றார் பிரியங்கா.. [Tuesday, 2014-04-22 10:49:22] பாராளுமன்றத்துக்கு இதுவரை 5 கட்டங்களாக 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 311 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசார பணிகளில் எல்லா கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரசில் தேர்தல் பிரசார பொறுப்பை சோனியாவும், ராகுலும் ஏற்றிருந்தனர். இந்த நிலையில் சோனியாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.ஆஸ்துமாவால் அவர் கடுமையாக அவதிப்படுகிறார். இதனால் அவரது தேர்தல் பணிகளை அவரது மகள் பிரியங்கா காந்தி ஏற்றுள்ளார். பிரிங்கா காந்தி தற்போது அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சோன…
-
- 4 replies
- 411 views
-
-
வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். இந்நிலையில், வாரணாசி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தனது பெற்றோர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ பேரணியாக சென்றார். பின்னர் வாரணாசியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கெஜ்ரிவால் முகாமி…
-
- 1 reply
- 484 views
-
-
உலகில் முதல்முறையாக செயற்கை ஆணுறுப்பு மூலம் குழந்தை பெற்றுகொண்ட அமெரிக்கர்! [Wednesday, 2014-04-23 12:40:33] உலகில் முதன்முறையாக செயற்கை ஆணுறுப்பு பொருத்தி ஒருவர் தந்தையாகி உள்ளார். அமெரிக்கா மிசிசிபி நகரை சேர்ந்தவர் மைக் மோர் (வயது30) . இவர் 7 வயதாக இருக்கும் போது ஒரு தவறான அறுவை சிகிச்சையால் இவரது ஆணுறுப்பு பாதிப்பு அடைந்தது. இதனால் அவர் தந்தையாக முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இருந்தாலும் மைக் மோர் தனது 25 வது வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரது இயலாமையை காரணம் காட்டி அந்த பெண் அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னார் அவர் 2007 ஆம் ஆண்டு சீன டாகடர் கோர்டான் லீயை சந்தித்தார். டாக்டர் லீ அவரது குறையை போக்க முன்வந்தார். செயற்கையான ஆ…
-
- 1 reply
- 616 views
-