உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
விமானம் மாயமாவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் மனைவியுடன் Zaharie Ahmad Shah, என்ன பேசினார் ? மாயமான மலேசிய விமானம் காணாமல் போவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அந்த விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்த பைலட் தன்னுடைய மனைவிக்கு ஒரு நிமிட போன் கால் ஒன்றை பேசியுள்ளார் என்பதை தற்போது மலேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மலேசிய விமானத்தை ஓட்டிய பைலட் Zaharie Ahmad Shah, விமானம் மறைவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு தன்னுடைய மனைவியுடன் ஒரே ஒரு நிமிடம் மட்டும் செல்போனில் பேசியுள்ளார். மலேசிய புலனாய்வு அதிகாரிகள், அந்த அழைப்பு வந்த செல்போன் குறித்த தகவல்களை ஆராய்ந்த போது, அந்த அழைப்பு Pay-as-you-go என்ற சிம் நிறுவனத்தின் சிம்கார்டு போலியான பெயர் மற்றும் முகவரி கொடுத்து வா…
-
- 3 replies
- 1.6k views
-
-
வெறும் கையை வீசிக்கொண்டு வந்த சோனியா உலகின் 6வது பணக்காரர் ஆனது எப்படி? - மேனகா காந்தி கேள்வி. [saturday, 2014-03-22 17:45:53] பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான மேனகாகாந்தி கடந்த தடவை அனோலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.இந்த தடவை அவருக்கு பா.ஜ.க. மேலிடம், பிலிபிட் தொகுதியை ஒதுக்கியுள்ளது. நேற்று அவர் பிலிபிட் சென்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிறகு அவர் புரன்பூர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவரும், தனது அக்காள் முறையானவருமான சோனியாவை கடுமையாக தாக்கினார். அவர் கூறியதாவது:– சோனியாகாந்தி இந்த நாட்டின் மருமகளாக இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது எதையும் கொண்டு வரவில்லை. வெறும் கையை வீசிக் கொண்ட…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை! – வெங்கையா நாயுடு கூறுகிறார். [sunday, 2014-03-23 19:43:04] இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கையை தாம் ஆதரிக்கவில்லை என்று, பா.ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது- இலங்கை பிரச்சினை அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினை. தமிழர்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் ராஜீவ்காந்தி – ஜெயவர்த்தனா ஒப்பந்தப்படி 13–வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தி தமிழர்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார். http://www.seithy.com/breifNews.php?newsID=1063…
-
- 0 replies
- 373 views
-
-
விமான கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசாங்கம் இரகசியப் பேச்சு? - உறவினர்கள் சந்தேகம். [Friday, 2014-03-21 19:27:44] மாயமாகியுள்ள மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளை மீட்க, கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசு இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று பயணிகளின் உறவினர்கள் உட்பட பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ஆம் திகதி பீஜிங் சென்ற விமானம் மாயமான பிறகு பலரும் பலவித சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விமான கணினி தொடர்பில் நன்கு தொழில்நுட்பம் தெரிந்த யாரோ, விமான பாதையை மாற்றி பதிவு செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கேற்ப விமானி அகமது ஜகாரியின் வீட்டில் சோதனை செய்த போது, விமானம் ஓட்ட பயிற்சி…
-
- 4 replies
- 602 views
-
-
அவுஸ்ரேலியாவில் விமான விபத்து! – 5 பேர் பலி. [saturday, 2014-03-22 17:55:42] அவுஸ்ரேலியாவின் குயின்லாந்து மகாணத்தில் உள்ள பிரிஸ்பேன் அருகே செஸன்னா 206 என்ற விமானம் ஸ்கைடிரைவ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது., பின்னர் கபூல்சர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த 5 பேர் பலியாயினர். இந்த விபத்து காரணமாக கபூல்சர் விமானநிலையம் உடனடியாக மூடப்பட்டது. விமானத்தில் இருந்து தீயை அணைத்த அதிகாரிகள் உயிரிந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=106242&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 485 views
-
-
பாகிஸ்தானில் பெட்ரோல் டேங்கருடன் பஸ்கள் மோதிய கோர விபத்து! – 35 பேர் தீயில் கருகிப்பலி. [saturday, 2014-03-22 17:53:24] பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹ¨ப் என்ற இடத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று பெட்ரோல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லொறி சென்றது. அப்போது எதிர்திசையில் வேகமாக சென்ற 2 பஸ்கள் திடீரென்று டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதின. அதில் லாரியும், பஸ்சும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் பஸ்களில் பயணம் செய்த 35 பேர் உடல் கருகி பரிதாபமாக செத்தனர். பலர் தீக்காயங்களுடன் தப்பினர். இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=106241&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 514 views
-
-
துருக்கியில் டுவிட்டருக்குத் தடை! [saturday, 2014-03-22 17:48:19] துருக்கியில் தேர்தல் நடைபெற இன்னும் 9 நாட்களே எஞ்சி இருக்கும் நிலையில், அந்நாட்டு அரசு டிவிட்டர் இணையத் தளத்துக்கு தடை விதித்துள்ளது.துருக்கி பிரதமர் மீதும், அவர் அரசின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் விசாரணை நிலவரங்கள் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோர்ட் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துருக்கி அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. துருக்கி பிரதமர் எர்டோகனின் இந்த நடவடிக்கை முற்றிலும் அடிப்படையில்லாதது, காட்டுமிராண்டித்தனமானது என்று ஐரோப்பியன் கமிஷன் துணை தலைவர் நீலீ கிரோஸ் தெரிவித்து…
-
- 0 replies
- 326 views
-
-
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடியதில் 2.5 மில்லியன் டாலர் செலவு. - பெண்டகன் தரப்பில் அறிக்கை [saturday, 2014-03-22 11:43:01] சமீபத்தில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் உலகநாடுகள் பலவும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இதுவரை காணாமல் போன விமானத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமை அலுவலகம் பெண்டகன் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் அமெரிக்கா சார்பில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் விமானங்களும் இந்தியா மற்றும் சீனக்கடற்பகுதிகளில் தேடுவதற்கு கப்பல்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை விமானத்தை தேடும் பணிக்காக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 268 views
-
-
காணாமல் போன மலேசிய வானூர்தியை தேடும் பணிக்காக சீன கடற்படைக்கு இந்திய கடற்பிராந்தியத்தில் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் சீன கடற்படையின் 4 கப்பல்களும் விடுத்த கோரிக்கையயை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, காணாமல் போன மலேசியா விமனத்தின் பாகங்கள் என்று கருதப்படும் பொருட்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து இராணுவ விமானங்களிலும் ஒரு சிவில் விமானமும் இந்த தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 239 பேருடன் கடந்த 8ம் திகதி இந்த விமானம் காணாமல் போனது. இதனை இந்து சமுத்திரத்…
-
- 5 replies
- 722 views
-
-
ரஷியாவுக்கு எதிரான தடைக்கு ஆதரவு இல்லை: இந்தியா [Friday, 2014-03-21 12:32:57] ரஷியாவுக்கு எதிராக மேலைநாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை ஆதரிக்க மாட்டோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. உக்ரைனில் தன்னாட்சி பகுதியான கிரீமியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு ரஷியாவுடன் அப்பகுதியை இணைப்பதற்கு 97 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்தனர். ரஷியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த அதிகாரிக்களுக்கு எதிராக அந்நாடுகள் பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. ஆனால் இந்த தடைகளை ஆதரிக்க போவத்தில்லை என்று இந்தியா அறிவித்துள்ளத…
-
- 2 replies
- 289 views
-
-
உக்ரைனின் 3 போர்க்கப்பல்கள் கிரிமியா வசம் - வீரர்கள் கைது! [Friday, 2014-03-21 11:39:01] வாக்கெடுப்பின் மூலம் தனி நாடாக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்ட கிரிமியாவில் உக்ரைனுக்கு சொந்தமான ஏராளமான ராணுவ நிலைகள் மற்றும் கடற்படை தளம் உள்ளது. இவற்றை உக்ரைன் ராணுவ வீரர்கள் காவல் காத்து வருகின்றனர். சேவஸ்டோபோல் பகுதியில் கருங்கடலில் உள்ள உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கடற்படை தளத்தை கடந்த 19-ம் தேதி சுற்றி வளைத்த கிரிமியா படையினர், அந்த தளத்தை கைப்பற்றி அதில் ரஷிய நாட்டின் கொடியை ஏற்றி வைத்தனர். அந்த தளத்தின் கடற்படை தளபதி உள்ளிட்ட வீரர்களையும் வெளியேற்றி அவர்களை கைது செய்தனர். இந்த தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரத்தில் தலைநகர் சிம்பெரோபோலில் இருந்த…
-
- 0 replies
- 315 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வியாழக்கிழமை பிரசல்ஸ் நகரில் ஒன்றுகூடி கிறிமியா பிராந்தியத்தை மீளவும் இணைக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டிற்கு எதிராக கடும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மொஸ்கோவிலுள்ள ரஷ்யத் தலைவர்களைச் சந்தித்து தற்போது நிலவும் நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வொன்றை எட்ட வலியுறுத்தியதையொட்டியே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ரஷ்ய ஆதரவுப் படையினர் கிறிமியாவின் செவஸ்டோபோலிலுள்ள உக்ரேனிய கடற்படைத் தலைமையகம் உள்ளடங்கலான இரு தளங்களை புதன்கிழமை ஆக்கிரமித்ததையடுத்து பிராந்தியத்தில் பதற்…
-
- 0 replies
- 422 views
-
-
பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான குஷ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 99. குஷ்வந்த் சிங்கின் இல்லத்தில் இன்று அவரது உயிர் பிரிந்ததாக, அவருடைய மகனும், பத்திரிகையாளருமான ராகுல் சிங் தெரிவித்தார். முழுமையான வாழ்க்கையை வாழ்ந்த தனது தந்தை இயற்கை மரணம் எய்ததாக அவர் குறிப்பிட்டார். கடைசி காலத்தில் குஷ்வந்த் சிங்குக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாகவும் ராகுல் சிங் தெரிவித்தார். உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்களுள் ஒருவரான குஷ்வந்த் சிங்கின் எழுத்தில் நையாண்டித்தனமும் அழுத்தமான கருத்துகளும் பொதிந்திருக்கும். தற்போதுள்ள பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள ஹதாலியில் 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ல் பிறந்தார். யோஜனா என்ற பத்திரிகையை நிறுவியவர். தி இல்லுஸ்ட்…
-
- 5 replies
- 840 views
-
-
இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில், காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கருதப்பட்ட பொருட்களைத் தேடும் முயற்சியில் இது வரை வெற்றி கிடைக்கவில்லை. இந்த துகள்களைத் தேடும் பணியில் விமானங்களும் கப்பல்களும் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால் கடுமையான காற்றும், மழையும் இன்று இந்த முயற்சியைப் பாதித்தன. நாளை வெள்ளிக்கிழமையும் இந்த தேடுதல் முயற்சி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா வெளியிட்ட செய்கோள் மூலம் கிடைத்த இரண்டு படங்களில் உடைந்த பாகங்கள் போன்ற இரண்டு பொருட்கள் காணக்கூடியதாக இருந்தது. அதில் ஒன்று 24 மீட்டர் நீளமானதாக இருந்தது.இது ஒரு புதிய, நம்பத்தகுந்த தகவல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் நாடாளுமன்றத்தில் கூறியி…
-
- 0 replies
- 430 views
-
-
இலங்கைத் தமிழர் விவகாரம் இந்தியத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்! – கருத்துக்கணிப்புகளில் தகவல். [Thursday, 2014-03-20 09:59:55] இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்தமுறை இலங்கை தமிழர் பிரச்சினை முக்கிய பங்கு வகிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்தும் நிறுவனம் ஒன்றின் அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இந்திய பொதுத்தேர்தலின் போது இலங்கை தமிழர்களின் பிரச்சினை மிகுந்த செல்வாக்கு செலுத்தும் என்றும் நம்பப்பட்டது. இந்தியாவின் தேர்தல் பெறுபேறுகளையே விடுதலைப் புலிகளும் நம்பி இருந்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இலங்கை தம…
-
- 0 replies
- 396 views
-
-
ஆட்சியமைத்ததும் இலங்கை தமிழர்,தமிழக மீனவர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை! – ராஜ்நாத்சிங் உறுதி. [Thursday, 2014-03-20 19:42:31] நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், இலங்கை தமிழர் பிரச்சினைக்கும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை, கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் இன்று சென்னையில் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: தென்னிந்தியாவில் பல கட்சிகள் தேசிய ஜனநாயக முன்னணியில் சேர ஆர்வம் காட்டின. தமிழகத்தை பொறுத்த வரையில், கூட்டணி உருவாவதில் தமிழருவி மணியன் முக்கிய பங்காற்றினார். தற்போது பல்வேறு கட்சிகள் பா.ஜ.,வுடன் இணைந்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி…
-
- 0 replies
- 262 views
-
-
காணாமல் போன மலேசிய விமானத்தினுடையது என சந்தேகிக்கப்படும் உடைந்த விமானத்தின் பாகங்களை போன்ற பொருட்கள் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் மிதப்பது, செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார். மலேசியன் ஏர்லைன்ஸிற்கு செந்தமான MH 370 விமானம் கடந்த 8ஆம் திகதி 239 பயணிகளுடன் மாயமானது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பல்வேறு நாடுகள் மாயமான விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் குறித்த விமானத்தினுடையது என சந்தேகப்படும் உடைந்த பாகங்களை போன்ற பொருட்கள் மிதப்பதை, செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி ஆர்பட் தெரிவித்துள்ளார். இதையடுத்து,…
-
- 1 reply
- 624 views
-
-
தனது நாட்டில் உள்ள சிரியத் தூதரகங்களை உடனடியாக மூடுமாறு அமெரிக்கா உத்தரவு! [Wednesday, 2014-03-19 18:17:39] அமெரிக்காவுக்கான தங்களது தூதரக நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுவதாக கடந்த 10 ஆம் தேதி சிரியா அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, தங்களது நாட்டில் செயல்பட்டு வரும் சிரியாவின் தூதரகங்களை மூடுமாறு நேற்று அறிவித்துள்ளது. அங்கு பணியாற்றிவரும் அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களைத் தவிர மற்ற ஊழியர்களை இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அரசு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் தூதரக செயல்பாடுகளையும் வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியுடன் முழுமையாக நிறுத்துமாறு அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது. …
-
- 1 reply
- 430 views
-
-
கடந்த 8-ஆம் தேதி மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானத்தின் இருப்பிடம் பற்றி இன்றுவரை எந்தவித உருப்படியான தகவல்களும் இல்லை. இந்த சம்பவம் விமானப் பயணங்களின் பாதுகாப்புக்கும், இன்று இருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கும் ஒரு பெரும் சவால். மேலும், இந்த விஷயத்தை மலேசிய அரசும், இந்திய அரசும், இணையமும் கையாண்ட விதம் மிகுந்த கவனத்துக்க்குரியது. இந்தக் கட்டுரை 'விமானம் இப்படிப் பறந்திருக்கும், அங்கு விழுந்திருக்கும், இவர்கள்தான் கடத்தியிருப்பார்கள்' என்ற கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட இன்னொரு வதந்தியைப் பரப்பும் கட்டுரை அல்ல. மாறாக இந்த விஷயத்தை உலகம் எப்படிக் கையாண்டது என்பதைப் பற்றியும், இதன் மூலம் நாம் என்ன கற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதைப் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரை. MH37…
-
- 0 replies
- 883 views
-
-
கிரிமியா ரஷ்யாவுடன் இணையவதற்கு பொதுமக்களிடம் பெரும்பான்மை ஆதரவு பெறப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது FILE உக்ரைனில் ஒரு பகுதியான கிரிமியா ரஷ்யாவுடன் இணைய அமெரிக்கா உள்ளிட்டமேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையேயான விசா விதிமுறைகளைத் தளர்த்துவது, பொருளாதார முதலீடு, விண்வெளி ஆய்வு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் போன்றவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவித்த ஜப்பானின் வெளியுறவு துறை அமைச்சர் புமியோ கிஷிடா, உக்ரைனிலிருந்து கிரிமியா பிரிவது அந்ந…
-
- 1 reply
- 1k views
-
-
பிரான்சில் விதவை பெண் ஒருவர் தனது கணவரின் நினைவு தினத்தை, கல்லறைக்கு அருகிலேயே மது குடித்து உற்சாகமாக கொண்டாடியுள்ளார். பிரான்சின் லெஸ்வேகஸ் என்ற பகுதியில் நேற்று ஜோசைன் கெளட்சன் என்ற விதவை பெண், தன் கணவரின் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பர்களை அழைத்து கல்லறையிற்கு அருகில் மது விருந்தளித்துள்ளார். அப்போது ஷாப்பைன் என்ற ஒருவித மதுவினை கண்ணாடி குவளைகளில் ஏந்தியவாறு ஜோசைன், தனது கணவரது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அக்கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் கூட்டத்தை கலைந்து செல்ல கூறியதுடன், ஜோசனைக்கு 38 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் …
-
- 0 replies
- 384 views
-
-
கிரிமியா கருத்து வாக்கெடுப்பை ஒபாமா நிராகரிப்பு! – முரண்டு பிடித்தால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடையாம். [Monday, 2014-03-17 17:47:48] உக்ரைனின் தன்னாட்சி பகுதி கிரிமியா. இங்கு ரஷிய மொழி பேசுகிற மக்களே அதிகமாக வாழ்கின்றனர். உள்நாட்டில் தனக்கு எதிராக கிளர்ச்சிகள் வலுத்ததைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச், நாட்டை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து உக்ரைனின் தன்னாட்சிப் பகுதியான கிரிமியாவிற்குள் ரஷிய படைகள் நுழைந்தன. இந்த நிலையில், உக்ரைனிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக கிரிமியா பாராளுமன்றம் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ரஷியா ஏற்றது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் நிராகரித்தன. இதற்கிடையே ரஷியாவுடன் சேருவதா அல்லது…
-
- 0 replies
- 312 views
-
-
ஆப்கானிஸ்தானில் ராணுவத் தளங்களை மூடுகிறது பிரிட்டன்! [Monday, 2014-03-17 17:55:40] ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் வசம் இருந்த ராணுவத்தளங்களை அவர்கள் வசம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று ஹெல்மான்ட் மாகாணத்தில் பிரிட்டிஷ் துருப்புகள் வசம் இருந்த ராணுவத்தளங்களில் இரண்டைத் தவிர மற்றவை அந்நாட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தத் தகவலை இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த இந்த ராணுவ நடவடிக்கைகளில் லஷ்கர்கா தளமும், லஷ்கர்காதுரை ரோந்து தளமும் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளன. எம்ஓபி என்ற மற்றொரு தளமும் மூடப்பட்டுள்ளதாக அமைச்சகம் தனது தகவலில் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் போர் உச்சகட்டத…
-
- 0 replies
- 319 views
-
-
கடலுக்கு மேலாக அடுத்தடுத்து 10 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா! - மீண்டும் தொற்றுகிறது பதற்றம். [Monday, 2014-03-17 17:52:01] வடகொரியா குறுந்தூர ஏவுகணைகளை கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏவி சோதனை நடத்தியுள்ளதாக யோன் காப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த ஏவுகணைகள் 45 மைல் தூரம் சென்று கடலில் இறங்கியது. நாங்கள் இந்த ரொக்கட்டுகள் சுமார் 70 கிலோமீட்டர் தூரம் தண்ணீருக்கு மேல் செல்லும் என கணக்கிட்டு உள்ளோம் என தென் கொரியா அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். இத்தகைய தீவிர நடவடிக்கை தென்கொரியாவை சீண்டும்வகையில் உள்ளது என சிஎன்என் தெரிவித்து உள்ளது. இத்தகைய ஏவுகணை சோதனை மற்றும் பயிற்சிகள் வடகொரியா தாக்குதலுக்கு தயாராவதையே காட்டுகிறது. …
-
- 0 replies
- 310 views
-
-
நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையான கிரிமிய நாட்டு மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்ததைத் தொடர்ந்து இனி அந்தப் பிரதேசம் ரஷியாவின் ஒரு பகுதியாக மாறும் சாத்தியம் அதிகரித்துள்ளது. அளிக்கப்பட்ட வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை எண்ணப்பட்ட நிலையில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் ரஷ்யாவுடன் கிரிமியா இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்களிப்பில் கிரிமியா தனி சுதந்திர நாடாக மாறுவது அல்லது ரஷ்யாவின் ஒரு பிரதேசமாக இணைவது என இரு தேர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தன. கிரிமியா வாக்கெடுப்புக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் தோல்வி இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை (15) ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு மன்றத்தில் கிரிமியா வாக்கெடுப…
-
- 2 replies
- 964 views
-