Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அவுஸ்ரேலியாவில் பற்றியெரியும் நிலக்கரிச் சுரங்கம்! – நகர மக்களை வெளியேற உத்தரவு. [saturday, 2014-03-01 20:45:59] அவுஸ்ரேலியாவின் மோர்வெல் நகர மக்களை ஊரை விட்டு வெளியேறி விடுமாறு அந்நாட்டு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. அந்நகரம் அருகே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள தீயால், அப்பகுதி முழுவதுமே புகை சூழ்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நகரில் உள்ள சுமார் 14 ஆயிரம் பேரும் அங்கிருந்து வெளியேற அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. மெல்போர்ன் நகரின் கிழக்கே லாட்ரோபி வேலி பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது. இது தொடர்பாக அவுஸ்ரேலிய அரசு மேலும் கூறியிருப்பதாவது: சுரங்கத்தில் பற்றியுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடு…

  2. ராகுல்காந்தியை முத்தமிட்ட பெண்ணை எரித்துக் கொன்றார் கணவன்! – அசாமில் பரபரப்பு சம்பவம். [saturday, 2014-03-01 20:03:17] காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம் சென்றார். ஜோர்கட் என்ற இடத்தில் அவர் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை செய்தார். இதில் 600 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ராகுல்காந்தி கருத்துக்களை கேட்டார். அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை அனைவரது முன்னிலையிலும் கன்னத்தில் முத்தமிட்டார். முத்த மிட்ட இந்த படம் மறுநாள் அனைத்து பத்திரிகையிலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண் கவுன்சிலர் போன்டி தீக…

  3. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டால் தேவையற்ற விபரீதங்கள் ஏற்படும்: ஒபாமா எச்சரிக்கை [saturday, 2014-03-01 14:21:01] உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டால் தேவையற்ற விபரீதங்கள் ஏறபடும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டின் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் ரஷியாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தலைநகர் கீவ்வில் பல மாதங்களாக போராட்டம் நடந்து இறுதியில் கடந்த சனிக்கிழமை புரட்சி வெடித்தது. அதிபர் விக்டரின் பதவி பறிக்கப்பட்டது. அதேநேரத்தில் பதவி இழந்த விக்டர் தப்பி தலைமறைவாகி விட்டார். இவர் ரஷியாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். ஆகவே ரஷியா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுக…

  4. யுக்ரெய்ன் விமான தளத்தை ரஷ்யப் படையினர் கைப்பற்றினர்! [Friday, 2014-02-28 19:35:09] யுக்ரெய்னின் தென்பிராந்தியமான கிரைமீயாவில் செவாஸ்டபோல் என்ற ஊரின் இராணுவ விமான தளத்தை ரஷ்ய கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சர் கூறுகிறார். இது ஒரு ஆயுதப் படையெடுப்பு என்றும் ஆக்கிரமிப்பு என்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறும் செயல் என்றும் கூறி உள்துறை அமைச்சர் ஆர்சென் அவகொவ் கண்டித்துள்ளார். கிரைமீயாவில் நடந்துவருபவற்றை ஐநா பாதுகாப்பு சபை கண்காணிக்க வேண்டும் என யுக்ரெய்ன் நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த விமான தளத்துக்குள் யுக்ரெய்னிய படையினரும் எல்லைக் காவல் படையினரும் இருக்கிறார்கள் என்றும், மோதல் எதுவும் நடக்கவில்லை என்றும் அவகொவ் தெரிவித்த…

  5. ராஜீவ் கொலையில் சதி செய்த குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, 23 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடந்த 7 பேரை உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு விடுதலை செய்ய முன் வந்ததும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பது நியாயம்தானா? FILE நாட்டின் பிரதமரைக் கொன்றவர்களையே விடுதலை செய்தால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்புக் கிடைக்கும் என்கிறார், ராகுல் காந்தி. தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார் சுப்ரமணியசாமி. மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகளை முன் வைக்க வேண்டியது நியாயத்தின் பக்கம் நிற்பவர்களின் கடமையாகிறது. - ராஜீவ் காந்தி கொலையில் சி.பி.ஐ. 41 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் கண்டது. இதில் நேரடி தொடர்புடையவர்களான தணு, சிவராசன், சுபா உள்ளிட்…

  6. FILE ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவராக ஜெயின் கமிஷனால் அடையாளம் காட்டப்பட்டவரான சுப்பிரமணியன் சுவாமி நீதிபதி ஜெயின் முன்பு பிதற்றியவைகளை தற்போது உள்ள சூழலில் மக்கள் முன் கொண்டுவருவது காலத்தின் கட்டாயமாகிறது. நீதிபதி கேள்விகளை கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது. “எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை (திருச்சி வேலுச்சாமி) தெரியுமா?” [ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.” “தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?” என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.” ச…

  7. செங்கன் விசாவை மேலும் 16 தீவுக்கு விஸ்தரிக்கிறது ஐரோப்பிய யூனியன்! [Friday, 2014-02-28 14:09:32] ஐரோப்பிய யூனியனின் உறுப்பினர்களான 28 நாடுகளும் செங்கன் விசா திட்டத்தின்கீழ் பிற உறுப்பினர் நாடுகளுக்கு எந்த தனி விசா விதிமுறைகளும் இல்லாமல் சென்றுவர இயலும். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த இலவச விசா வருகையை 5 கரிபியன் தீவு நாடுகளுக்கும், 10 பசிபிக் தீவு நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் விஸ்தரித்தது. தற்போது மேலும் கரிபியன் மற்றும் பசிபிக் தீவுகளின் 16 சிறிய நாடுகள் உட்பட ஐக்கிய அரபுக் குடியரசு, பெரு, கொலம்பியா போன்ற நாடுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் வரக்கூடும் என்று ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் உள்நாட்டு அலுவல்கள் ஆணையாளர் சிசிலியா மால்ஸ்ட்ரோம் தெரிவித்தார். …

  8. மெக்ஸிகோ நாட்டின் மசாட்லான் ஒரு கடலோரச் சிற்றூர். சுகவாசஸ்தலம். கடல் உணவுகளுக்கும் அலைச்சறுக்கு விளையாட்டுக்கும் பேர் போன ஊர். சுற்றுலாப் பயணிகள் தேடி வரும் மசாட்லானில் சில நாட்களுக்கு முன் திடீரென நூற்றுக் கணக்கில் ஆயுதப் படைகள் குவிகின்றன. கண்டோமினம் கோபுரம் அவர்கள் கட்டுப்பாட்டில் வருகிறது. உள்ளூர்க்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும்கூட இப்படித்தான், நம்மைப் போலவே விழிக்கின்றனர், ‘இங்கே என்னப்பா இவர்களுக்கு வேலை’ என்று. ஆயுதப் படைகளோ அல்வா சாப்பிடப்போகும் உற்சாகத்தில் இருக்கின்றனர். சும்மாவா, ஜோகின் குஸ்மான் லோராவுக்கு வலை விரிப்பது என்பது எவ்வளவு பெரிய வேட்டை? யார் இந்த ஜோகின் குஸ்மான் லோரா? உலகத்துக்கு ஜோகின் குஸ்மான் லோரா என்று சொல்வதை விடவும் இன்னொரு பெயர் சொன்னா…

  9. புலிகள் ஆதரவு இயக்கங்களை தடை செய்ய வேண்டும்! - ஞானதேசிகன் கோரிக்கை. [Thursday, 2014-02-27 19:40:52] தமிழகத்தில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு கரம் நீட்டும் இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது குறித்து தமிழக கவர்னரை நாளை நேரில் சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.ராஜீவ் கொலையாளிகள் 4 பேர் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களை விடுவிக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ஒரு தடைப்பட்ட இயக்கத்திற்கு ஏன் இங்குள்ளவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் விடு…

  10. சக படையினர் ஐவரைச் சுட்டுக்கொன்ற இந்தியச் சிப்பாய் தானும் தற்கொலை! – காஷ்மீரில் பரபரப்பு! [Thursday, 2014-02-27 18:49:23] இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், இந்திய சிப்பாய் ஒருவர் சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து படையினர் பலியானார்கள். தலைநகர் ஸ்ரீநகருக்கு சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு ராணுவ முகாமில் நேற்றிரவு இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கியால் சுட்ட சிப்பாயும் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக ராணுவம் தெரிவிக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஒன்றுக்கு ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடும் காஷ்மீர் பகுதி, இந்திய மற்றும் பாகிஸ்தான் பகுதிகளாகப் பிளவுண…

  11. புதுடெல்லி: நடிகையும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி. விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிரபல நடிகையும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகியுமான விஜயகாந்தி, ஆந்திராவின் மெதக் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவுடன், விஜயசாந்திக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி இணைந்தார். http://news.vikatan.com/article.php?module=news&aid=25119

  12. சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு! – கண்டித்து சிவகங்கையில் முற்றுகைப் போராட்டம். [Thursday, 2014-02-27 18:59:39] தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 29 பேரை போலீஸார்ர் கைது செய்தனர். நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்யக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 29 பேர் சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் மாறன், வேங்கை உள்பட 29 பேரை போலீஸார் கைது செய்தனர். அதேவேளை, …

  13. நரேந்திர மோடிக்கு 78 வீதமானோர் ஆதரவு! – அமெரிக்க நிறுவன கருத்துக்கணிப்பில் தகவல். [Thursday, 2014-02-27 19:36:08] காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியைவிட பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கே வாக்காளர்கள் அதிக ஆதரவு அளிக்கின்றனர் என்று அமெரிக்காவை மையமாக கொண்ட பியூ ரிசர்ச் சென்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் 2,464 பேரிடம் கடந்த டிசம்பர் 7-ந் தேதி முதல் ஜனவரி 12-ந் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தியது .இதில் நரேந்திர மோடிக்குத் ஆதரவு பெருகி உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் பிரபலமானவர்கள் யார்? உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு 78 சதவீதம் பேர் நரேந்திரம…

  14. சென்னையில் 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலைகள் உடைப்பு! – காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். [Thursday, 2014-02-27 18:40:45] சென்னையில் இன்று காலை 3 இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதேபோல், அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்த தமிழக அரசை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுசெல்வன் தலைமையில் நேற்று காலை சத்தியமூர்த்தி பவ…

  15. காங்கிரஸ்சாரின் தாக்குதலில் காயமடைந்த தமிழர் முன்னேற்றப் படை தலைவி கி.வீரலட்சுமி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற சத்தியமூர்த்திபவன் முற்றுகைப்பொரட்டத்தின போது காங்கிரசாரின் தாக்குதலில் காயமடைந்த தமிழர் முன்னேற்ற படை தலைவி கி.வீரலட்சுமி மற்றும் தொண்டர்கள் 7 பேர் பலத்த காயங்கள் அடைந்த நிலையில் தற்போது சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். http://www.sankathi24.com/news/38898/64//d,fullart.aspx

  16. நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!! 27 பெப்ரவரி 2014 நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!! ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது. ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கை ரத்துச்செய்து ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து இந்த மூவர் உட்பட ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரது விடுதலைக்கு எதிராகவே அம்மனுத்தாக்கல் செய்யப்பட்டது…

  17. பெண்களின், முத்த மழையில் நனைந்த.... ராகுல் காந்தி. அஸ்ஸாம் மாநிலத்துக்குப் போயிருந்த ராகுல் காந்திக்கு, பெண்கள் திடீரென முத்தமிட்டதால்... அவர் நெளிந்து விட்டார். இதனை அவர் எதிர்பார்க்காததால்... அவரால் தடுக்க முடியவில்லை. ஒரு பெண் கன்னத்தில் கொடுக்க, இன்னொருவர் தலையில் முத்தமிட்டார். எல்லாம் சில நிமிடங்களில் திடீரென நடந்து விட்டது. ஜோர்ஹாட் நகருக்கு வந்திருந்த ராகுல் காந்தி அங்கு கிட்டத்தட்ட 600 பெண்கள் அடங்கிய சுய உதவிக் குழுவினரிடையே உரையாற்றினார். அப்போது பெண்கள் பலர் ராகுலுக்கு கை கொடுத்தனர். வணக்கம் வைத்தனர். சிலர் உற்சாகம் மேலிட முத்தத்திற்குள் புகுந்து விட்டனர். முன்னதாக அவர்களிடையே ராகுல் பேசுகையில், பெண்களால் இந்த நாட்டின் பிரமதராக முடியும், …

  18. பதவி விலகியிருக்கும் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜோஷி இந்தியக் கடற்படை சமீப காலத்தில் சந்தித்த விபத்துக்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்தியக் கடற்படைத் தளபதி டி.கே.ஜோஷி பதவி விலகியிருக்கிறார். இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் இன்று ஏற்பட்ட விபத்தை அடுத்து இந்த பதவி விலகல் வருகிறது. அவரது இந்த ராஜிநாமாவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதாக, கடற்படையின் பத்திரிக்கைக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. கடற்படையின் துணைத் தளபதி ஆர்.கே.தோவான் தற்காலிகமாக கடற்படைத் தளபதியின் பொறுப்புக்களை கவனிப்பார் என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. http://www.bbc.co.uk/tamil/india/2014/02/140226_indianavychief.shtml

  19. மும்பை: மும்பையில் மீண்டும் நீர்மூழ்கி கப்பல் விபத்தில் சிக்கிக் கொண்டது. இரண்டு கடற்படை அதிகாரிகளை காணவில்லை என்றும், 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் சிந்துரத்னா என்ற நீர்மூழ்கி கப்பல், கடற்கரையிலிருந்து 40 முதல் 50 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த நீர்மூழ்கி கப்பல் மும்பை கடற்கரை நோக்கி இன்று வந்துகொண்டிருந்தபோது, அதிலிருந்து திடீரென புகை வெளியானது. இதனையடுத்து அந்த கப்பல் உடனடியாக மேலே கொண்டு வரப்பட்டு, அதிலிருந்த வீரர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் அதில் இருந்த இரண்டு கடற்படை அதிகாரிகளை காணவில்லை என்பதும், 5 பேர் காயமடைந்தனர் என்பதும் தெரியவந்தது. காயம் அடைந்தவர்கள்…

  20. புதுடெல்லி: டெல்லியில் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியான தேவிந்தர் பால் சிங் புல்லரை தூக்கிலிட மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த புல்லரின் தூக்குத்தண்டனையை எதிர்த்து அவரது மனைவி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரியும், அவரது மருத்துவ அறிக்கையை வழங்கக் கோரியும் கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புல்லருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தடைவிதித்து கடந்த ஜனவரி 31 ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இம்மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, புல்லரின் மனைவி அளித்துள்ள கருணை மனு பரிசீலனையில் உள்ளதாகவும், டெ…

  21. புதுடெல்லி: முஸ்லீம்களிடம் மன்னிப்பு கேட்போம் என்ற ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு சிவசேனா வலியுறுத்தி உள்ளது. டெல்லியில் பா.ஜ.க. சார்பில் முஸ்லீம் மக்களின் பங்கு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் அவர் கூறும்போது, ''பா.ஜ.க., முஸ்லீம்களுக்கு விரோதமான கட்சி அல்ல. நரேந்திர மோடியின் நற்பெயரையும், பா.ஜ.க.வின் நற்பெயரையும் கெடுப்பதற்காக காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது. முஸ்லீம்கள், பா.ஜ.க.வை விட்டு சென்று விட வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். எப்போதாவது, எங்காவது, தவறு நடந்திருந்தால், அதில் எங்கள் தரப்பில் குறை இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் அதற்காகக் கைகளைக் கட்டி கொண்டு மன…

  22. கலவரத்தை தடுக்காத மோடி ஆண்மையற்றவர் - போட்டுத்தாக்கினார் சல்மான் குர்ஷித் ! [Wednesday, 2014-02-26 13:23:54] உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு பேரணியில் பேசிய காங்கிரஸ் அமைச்சர் சல்மான் குர்ஷித் குஜராத் கலவரத்தின்போது மக்களை பாதுகாக்க முடியாத மோடி ஆண்மையற்றவர் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய சல்மான் குர்ஷித், நீங்கள் உங்களை ஒரு சக்தி மிகுந்த நபராக காண்பித்து கொள்கிறீர்கள், உங்களுக்கு நாட்டின் பிரதமராக வேண்டுமெனவும் விருப்பம் உள்ளது. ஆனால், உங்களால் கோத்ராவில் மக்களை பாதுகாக்க முடியவில்லை. சிலர் வந்தார்கள், மக்களை தாக்கிவிட்டு சென்றார்கள். ஆனால், உங்களால் மக்களின் பாதுகாபிற்காக ஏதும் செய்யமுடியவில்லை, நீங்கள் வலிமையான மன…

  23. தலிபான்களின் மூத்த கமாண்டர் சுட்டுக் கொலை [Tuesday, 2014-02-25 23:48:06] பாகிஸ்தானில் தெஹ்ரிக்- இ- தலிபான் இயக்கத்தை சேர்ந்த மூத்த கமாண்டர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து இராணுவ அதிகாரிகள் கூறுகையில், தெஹ்ரிக்- இ- தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான அஸ்மதுல்லா ஷாஹீன் பிட்டானி மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் ஒரு வாகனத்தில் வஜிரிஸ்தானின் தர்கா மாண்டி பகுதியில் திங்கள்கிழமை(நேற்று) சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அவர்களின் வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு, தப்பி ஓடி விட்டனர். இந்தத் தாக்குதலில் அஸ்மதுல்லா ஷாஹீன் பிட்டானி உள்பட 4 பேரும் ச…

  24. அதிமுக பிரசாரகராக மாறிய அற்புதம் அம்மாள்! – வைகோ, நெடுமாறனுக்கு நன்றி தெரிவிக்காததால், மதிமுகவினர் அதிர்ச்சி. [Tuesday, 2014-02-25 18:37:09] மரண தண்டனை ஒழிப்பு கருத்தரங்கில் பங்கேற்க வந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்களுக்கு தனது பேச்சில் நன்றி கூட தெரிவிக்காமல், ஆளுங்கட்சியின் பிரச்சாரகர் போல் பேசியதால் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர். ஈரோட்டில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று ஆரம்பம் மு…

    • 2 replies
    • 1.1k views
  25. இந்தியா இரு தேசத்து மக்களையும் ஏமாற்றுகின்றது – கல்லம் மக்ரே XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX callum-macrae 22 பிப்ரவரி அன்று தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யமும் இணைந்து நடத்திய “சேனல் 4 ஆகச்சமீப காணொளி” திரையிடல் நிகழ்வை தொடர்ந்து அதன் இயக்குனர் கல்லம் மக்ரே உடனான இணையவழி காணொளி கலந்துரையாடலின் கேள்வி பதில்கள் இங்கே: கேள்வி: காணொளி ஆதாரங்கள் அனைத்தும் இனப்படுகொலையை நிரூபிக்கின்றன ஆனால் இன்னும் ஏன் நாம் போர் குற்றம் என்றே சொல்ல வேண்டும்? நடந்தது இனப்படுகொலை என்று நீங்கள் ஏற்கிறீர்களா? கல்லம் மக்ரே: இருக்கும் ஆதாரங்களை கொண்டு பார்க்கையில் இவை இனப்படுகொலைக்கான சாத்தியங்களை காட்டுகின்றன. Ethnic Re-enginee…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.