உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26687 topics in this forum
-
ஸ்காட்லாந்து மக்களை தம்மோடு தொடர்ந்தும் இணைந்தே இருக்குமாறு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட- அயர்லாந்து பிராந்தியங்களின் மக்கள் கோர வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்காட்லாந்து தனிநாடாக சுதந்திரம் பெற வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இந்த ஆண்டு செப்டெம்பெரில் நடக்கிறது. அதேபோல, நாடு ஐக்கியப் பட்டிருக்கவேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள் 'அலட்சியமாக' இருந்துவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.ஸ்காட்லாந்து பிரியவேண்டும் என்று தீர்மானித்தால், முழு ஐக்கிய இராச்சியமும் 'மோசமாக சுருங்கிவிடும்' என்று பிரதமர் கெமரன் லண்டனில் ஆற்றிய உரையில் கூறியுள்ளார். அதேநேரம், டேவிட் கெமரன் 'கோழைத் தனமாக' இந்த உரையை…
-
- 0 replies
- 710 views
-
-
ஜேர்மனியில் 380 அடி உயரமான பல்கலைக்கழக கட்டிடம் தகர்ப்பு மேற்கு ஜேர்மனியில் பிராங்பூட்டிலுள்ள 380 அடி உயரமான பழைய பல்கலைக்கழக கட்டிடமொன்று கட்டுப்பாட்டின் கீழ் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. 41 ஆண்டுகள் பழைமையான மேற்படி 50,000 தொன் நிறையுடைய அபி கோபுர கட்டிடத்தில் 32 ஆவது மாடியில் 1500 துளைகள் இடப்பட்டு அவற்றினுள் 950கிலோ கிராம் நிறையுடைய வெடிபொருட்கள் உட்செலுத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இது வெடி வைத்து தகர்க்கப்பட்ட ஜரோப்பாவிலேயே மிகவும் உயரமான கட்டிடமாக விளங்குகிறது. அந்தக் கட்டிடம் வெடி வைக்கப்பட்டு 10 செக்கன்களில் தரைமட்டமாகியது. மேற்படி கட்டிடத்தின் தகர்ப்பின்போது அருகிலுள்ள கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு அந்தக் கட்டிடத்…
-
- 0 replies
- 485 views
-
-
பாதிரியார்களின் சிறார் பாலியல் துஷ்பிரயோகங்களை கண்டுகொள்வதில்லை – வத்திக்கானுக்கு ஐ.நா கண்டனம். [Thursday, 2014-02-06 17:28:44] கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை, வத்திக்கான் தொடர்ந்து கடைப்பிடித்தது என்று ஐ.நா விமர்சித்திருக்கிறது.சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஐ.நா குழு, ( சி.ஆர்.சி), சிறார்களைத் துஷ்பிரயோகம் செய்ததாக அறியப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் பாதிரியார்களை போப் உடனடியாக அகற்றவேண்டும் என்று கூறியிருக்கிறது. மேலும், ஒரு பாலுறவு, கர்ப்பத்தடை மற்றும் கருச்சிதைவு ஆகிய விஷயங்கள் குறித்து வத்திக்கானின் அணுகுமுறைகளையும் அது கடுமையாக விமர்சித்திருக்கிற…
-
- 1 reply
- 535 views
-
-
கேரள மாநிலம் கொல்லம் கடற்பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இரண்டு பேரை அந்த வழியாக வந்த இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக இத்தாலி கடற்படையை சேர்ந்த மாசிமிலானோ ரத்தோர், சல்வதோர் ஜிரோன் ஆகிய இரண்டு வீரர்களை கேரள போலீஸார் கைது செய்தனர். இருவருக்கும் மரண தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவிலிருந்து விலக்கு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாகன்வதியுடன் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவின் கீழ் இத்தாலி வீரர்கள் மீது வழக்கு தொடர வேண்டாம் என ம…
-
- 3 replies
- 388 views
-
-
தலைவர்கள் தவறினால் - மக்கள் தலைமை ஏற்கவேண்டும்: - கோபி அன்னன் [Thursday, 2014-02-06 16:06:28] தலைவர்கள் மக்களை வழிநடத்த தவறினால், மக்கள் தலைமை பொறுப்பேற்று தலைவர்களை வழிநடத்த வேண்டும் எனவும், தலைவர்கள் மக்களின் வழியில் செயல்பட வேண்டும் எனவும் ஐ.நா.,வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் தெரிவித்துள்ளார். தட்பவெப்ப நிலை, புவி வெப்பமயமாதல், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட உலகம் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்து தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது கோபி அன்னன் இவ்வாறு தெரிவித்தார். ஆப்கானிஸ்தானிலும், ஆப்ரிக்காவிலும் அமைதி திரும்பும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக நாடுகள் குறித்தும், அவற்றின் நிலை குறித்தும் பேசிய கோபி அன…
-
- 2 replies
- 647 views
-
-
சில வகை பாம்புகளால் 100 அடி உயரம் வரை பறக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆசிய காடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பாம்புகள் தமது தட்டையாக்கிக் கொண்டும் உடலை நீட்டிக்கொண்டும் பறக்கும் தன்மையைப் பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. சில பாம்புகள் 100 அடி உயரமான மரங்களிலிருந்தும் தாவுவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வேர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஜெக் சோச்சா தலைமையிலான குழுவினர் பாம்புகளால் எவ்வாறு பறக்க முடிகிறது என்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். மும்பரிமாண (3டி) அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட பாம்புகளின் தன்மையைக்கொண்ட உருளைகளை வைத்து பல ஆய்வுகளை இவர்கள் மேற்கொண்டனர். தட்டையான உடலமைப்புடன் சில கோணங்களில் இருக்கும்போது பா…
-
- 0 replies
- 651 views
-
-
இப்போதெல்லாம் சிலர் எங்கு சென்றாலும் செல்லிடத் தொலைபேசி கெமரா மூலம் தம்மைத்தாமே படம்பிடித்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் போன்றவர்கள்கூட இதில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தன்னைத்தானே படம்பிடித்துக்கொள்வது செல்ஃபீ (Sefie) என குறிப்பிடப்படுகிறது. பொதுவாக பலரும் மகிழ்ச்சிகரமான சூழலில்தான் இப்படி செலஃ;பீ படம்பிடித்துக்கொள்வாரள். ஆனால் அமெரிக்காவைச் சேரந்த இளைஞர் காளை மாடுகள் தன்னை துரத்திவரும் நிலையில் செல்ஃபீ படம்பிடித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். உலகில் இதுவரையான மிக ஆபத்தான செல்ஃபீ படமாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஹொஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஹொஸ்டன் காளை ஓட்டப்போட்…
-
- 0 replies
- 459 views
-
-
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்யும் ஆதாரங்கள் எனக்கூறி ஒலிப்பதிவு நாடாக்களை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செவ்வாயன்று புதுடில்லியில் வெளியிட்டார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட இந்த சில தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி காலத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட் ஆகியோருக்கு இடையேயான உரையாடல்கள் என கூறப்படும் ஒலிப்பதிவு நாடாக்கள் வெளியிடப்பட்டன. தொடர்புடைய விடயங்கள் ஊழல், திமுக மேலும் கலைஞ…
-
- 4 replies
- 787 views
-
-
2ம் உலகப் போரின் இறுதியில், 1945ம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஹிட்லர் செத்துப் போனார் என்பதுதான் இதுவரை நாம் வரலாறாக படித்து வந்தது. ஆனால் ஹிட்லர் சாகவில்லை, தப்பிப் போய் விட்டார்.. 1984ம் ஆண்டு வரை அவர் உயிர் வாழ்ந்தார். தனது 95வது வயதில்தான் இயற்கையாக அவர் மரணமடைந்தார் என்று ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஒரு நூலாசிரியர். ஹிட்லர் தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தை பிரேசிலில் கழித்தார் என்று கூடுதல் பரபரப்பையும் அவர் கிளப்பி விட்டுள்ளார். அதை விட முக்கியமானது, அவர் பெர்லினை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் ஒரு கருப்பர் இனப் பெண்ணுடன் காதல் கொண்டு அவருடன் சில காலம் வாழ்ந்தார் என்பதுதான். சிமோனி ரெனீ குரேரியோ என்ற முதுகலை மாணவிதான் Hi…
-
- 0 replies
- 581 views
-
-
மூழ்கவே மூழ்காது என்ற கோஷத்துடன் 1912ஆம் ஆண்டு புறப்பட்ட டைட்டானிக் கப்பல், அதன் முதல் பயணத்திலேயே, அட்லான்டிக் கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கக் காரணமாக இருந்த ஜகோப்ஷவ்ன் பனிப்பாறை தற்போது அதிகமாக உருகி, கடலில் வேகமாக நகர்ந்து வருகிறது. உலகின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, பனிப்பாறைகள் உருகி, உலகின் நீர்மட்டம் அதிகரிக்கும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், டைட்டானிக் கப்பலுக்கு வில்லனாக இருந்த ஜகோப்ஷ்வன் பனிப்பாறையும் உருகுவதால், அது கடலில் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், அட்லாண்டிக் கடலின் நீர்மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=102978&category=WorldNews&l…
-
- 0 replies
- 543 views
-
-
லிபியாவில் இருந்த அனைத்து இரசாயன ஆயுதங்களும் அழிக்கப்பட்டு விட்டதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் அப்டெலாசிஸ், அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குண்டுகள், எறிகனைகள் உள்ளிட்ட அனைத்து இரசாயன ஆயுதங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டில் லிபியாவிடம் 25 டன் இரசாயன ஆயுதங்கள் இருந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=102981&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 405 views
-
-
பதிமூன்று மாத காலம் நடுக் கடலில் திக்குத்தெரியாமல் தத்தளித்து உயிர் தப்பியுள்ள எல் சால்வடோர்காரர் ஒருவர் சொந்த நாடு திரும்பி குடும்பத்தாரைக் காண விருப்பம் தெரிவித்துள்ளார். மெக்ஸிகோவின் மேற்குக் கரையில் பழுதான இவரது படகு கடல் காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆஸ்திரேலியாவுக்கு வடக்கேயுள்ள மார்ஷல் தீவுக் கூட்டத்தின் பவளத் தீவு ஒன்றில் அண்மையில் கரை ஒதுங்கியுள்ளது. கடல் ஆமைகள், பறவைகள், மீன்கள் போன்றவற்றை பிடித்து பச்சையாக உண்டும், தனது சிறுநீரையே குடித்தும் இவர் உயிர் வாழ்ந்துள்ளார். தனது அளவற்ற கடவுள் நம்பிக்கையும், அன்புக்குரியவர்களைக் காண வேண்டும் என்ற ஆவலும், பிடித்த உணவைச் சாப்பிட வேண்டும் என்ற கனவும்தான் கடும் கஷ்டங்களுக்கு இட…
-
- 0 replies
- 594 views
-
-
2ஜி ஊழல் சம்பந்தமாக கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சரத், கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் மற்றும் கடந்த திமுக ஆட்சியில் உளவுத்துறை டிஜிபியாக இருந்த ஜாபர் ஷெரிப்புக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் தற்போது வெளிவந்துள்ளது. முதலில் ஜாபர் ஷெரிப்பிடம் கலைஞர் டிவி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சரத், 2ஜி வழக்கிலிருந்து தயாளு அம்மாளை காப்பாற்றும் வகையில் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர்களின் சந்திப்புகள் தொடர்பாக ஆவணங்கள் முறைகேடாக திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்ததாக 200 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கனிமொழிக்கும் ஜாபர் ஷெரிப்புக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களின் மூலம் தெரியவந்துள்ளது.அதே பணப் பரிமாற்றம் தொடர…
-
- 0 replies
- 737 views
-
-
மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் மண்ணில் புதையுண்டு கிடந்த டைனோசரஸ் படிவங்கள் கடந்த 2000–ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. அவற்றுடன் சேர்த்து 27 டைனோசரஸ் முட்டைகளும் இருந்தன.அவற்றை கைப்பற்றிய ஆராய்ச்சியாளர்கள் மந்து அருகே அஷ்மேதாவில் உள்ள புதை படிவம் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். அவை விசேஷ கண்ணாடி பெட்டிகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், அங்கிருந்த 27 டைனோசரஸ் முட்டைகளும் திடீரென மாயமாயின, அவற்றை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து தார் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 498 மற்றும் 380 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக அருங்காட்சியகத்தின் பாதுகாவலர…
-
- 3 replies
- 587 views
-
-
தென் சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்சினையால் தற்போது 3.7 மில்லியன் மக்களுக்கு அவசரமாக உணவு தேவையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. தென் சூடானின் கடந்த டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டின் இராணுவ வீரர்களுக்குமிடையில் வன்முறை ஆரம்பமானது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 860,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் உள்நாட்டு வன்முறையினால் 3.7 மில்லியன் பேர் உணவின்றித் தவிக்கின்றனர். இது தென் சூடானின் 3 இல் 1 பகுதி சனத்தொலை ஆகும். இவர்களுக்கு அவசரமாக உணவு தேவைப்படுகின்றது. இந்த நெருக்கடி நிiலையை எதிர்கொள்ள 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 169 பில்லியன் ரூபா) தேவைப்படும் என ஐ.நாவ…
-
- 1 reply
- 379 views
-
-
ரஷ்யாவில், அதிக வயதாகுவற்கு முன்னரே பலர் இறப்பதற்கு அளவுக்கதிமாக மதுபானம் அருந்துவது காரணமாக உள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் பிரபல வொட்கா மதுபானத்தை அதிகமாக அருந்துவது இத்தகைய மரணங்களுக்கு காரணமாகின்றனவாம். மொஸ்கோவிலுள்ள ரஷ்ய புற்றுநோய் நிலையம் மற்றும் பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ரஷ்ய ஆண்களில் 25 சதவீதமானோர் 55 வயதுக்கு முன்னர் மரணமடைவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோரின் மரணங்களுக்கு மதுபானம் காரணமாம். ஈரல் நோய்கள், மதுபானம் நஞ்சாதல் முதலியவற்றின் காரணமாக மரணங்கள் ஏற்படுவதுடன் மதுபோதையில் சண்டையிடுவதாலும் பலர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது…
-
- 0 replies
- 722 views
-
-
திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமா தன்னை இந்திய தேசத்தின் மகனாக கருதுவதாகவும், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். கிட்டத்தட்ட இந்த தேசத்தில் 54 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நான், இங்குள்ள சாதம், சப்பாத்தி, மற்றும் டீ ஆகியவற்றை சாப்பிட்டும், அருந்தியும் வந்துள்ளதாக அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். திபெத்தின் கலை மற்றும் கலாசாரம் குறித்து 5 நாள் விழாவை துவக்கி வைக்கும் அவர், தான் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். திபெத் நாட்டை சீனா ஆக்கிரமித்துக் கொண்டபோது தலாய் லாமா அருணாசல பிரதேசத்தில் உள்ள கென்சிமானி பாதை வழியாக 80000 திபெத்தியர்களுடன் கவுகாத்தியை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=102820&cate…
-
- 2 replies
- 348 views
-
-
அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்துவிடும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி வைப்பது குறித்து என் கருத்தை நான் ஏற்கனவே பாஜக மேலிடத்திடம் தெரிவித்து விட்டேன். என் கருத்தை அவர்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்று தெரியவில்லை. அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்து போகும். ஷாஜகான் காலத்தில் அவரது மகன்கள் இப்படித் தான் சண்டை போட்டுக் கொண்டார்கள். அதன் பிறகு முகலாயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதே போன்று திமுகவும் அழிந்துவிடும் என்று தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=102629&category=IndianNews&lang…
-
- 4 replies
- 452 views
-
-
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் களம் காண உள்ளது. இந்த கூட்டணியில் ஐக்கியம் ஆவாரா அல்லது தனி அணி காண்பாரா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிலைப்பாடு மிகவும் ரகசியமாக உள்ளது. இந்த நிலையில், வரும் தேர்தலில் பாஜக-விற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சி முன்னணி தலைவர்களிடம் பேசிய போது, ஈழத்தில் தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் இலங்கை ராணுவம் அழிப்புக…
-
- 6 replies
- 850 views
-
-
இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு 26–ந்தேதி ஒன்று கூடி குரல் எழுப்புவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கடந்த 60 ஆண்டு களில் இலங்கைத்தீவில், ஈழத்தமிழ் மக்களுக்கு, சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழ் இனப்படு கொலையால் நேர்ந்த அழிவு, மனித மனங்களைத் துடிதுடிக்க வைக்கும் கொடுந்துயரம் ஆகும். உலகெங்கும், தமிழகத்திலும் நீதிக்காகத் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள், இளந்தலைமுறையினர் நடத்திய அறவழிக் கிளர்ச்சிகளால், மனித குலத்தின் மனசாட்சி மெல்ல மெல்ல விழித்துக்கொண்டது. சிங்கள அரசு நடத்திய இப்படுகொலைக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளும் ஆயுத உதவி செய்து உள்…
-
- 0 replies
- 467 views
-
-
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அடுத்தடுத்து அணு உலை அமைக்கப்படுவதைக் கண்டித்து இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: கூடங்குளத்தில் 1 மற்றும் 2வது அணு உலையில் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழல்களும், குளறுபடிகளும் நிறைந்திருக்கிறது. இதன் உண்மை நிலையை சார்பற்ற விஞ்ஞானிகள் பரிசோதித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த 15 அம்ச பரிந்துரைகளை அமுல்படு்தப்பட்டிருக்கின்றனவை என்ற தகவல்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். குற்ற சாட்டுகள் உண்மை என்று தெரிந்தால் 2 அணு உலைகளையும் இழுத்து மூட வேண்டும். கூடங்குளத்தில் மேலும் 3,4வது அணு உலைகள் அமைக்க…
-
- 0 replies
- 410 views
-
-
திமுக நாடகத்தை நம்ப மாட்டோம்: பிரேமலதா மனைவி பிரேமலதாவுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் “வீட்டுக்குள் பேசவேண்டிய விஷயத்தை ஊடகங்கள் முன் கருணாநிதியும் அழகிரியும் பேசுகின்றனர். திமுக-வின் கபட நாடகத்தை நம்பத் தயாராக இல்லை” என்று மனைவி பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சியில் வரும் 2-ம் தேதி தேமுதிக மாநில மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை மாநாட்டுக்கான அனுமதியைக் காவல்துறையினர் வழங்காத நிலையில், புதன்கிழமை மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பிரேமலதா நம்மிடம் பேசியதாவது: தேமுதிக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனு கொடுத்தோம். இதுவரை அனுமதி இல்லை. சட்டத்தையும் நீதியையும் மதித்து உரிமையைக் கேட்போம்.முறையோடு அனுமதி பெற்றுதான் …
-
- 0 replies
- 446 views
-
-
அதிக ஊழல் வாதிகள் கொண்டது இந்தியா தான் என்றும், இதில் 169 பேர் ஊழல்வாதிகள் நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் ஆம்ஆத்மி கட்சி நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்ற டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஊழலில் சிக்கிய அரசியல்வாதிகள் பட்டியலை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டார். இதன் அடிப்படையில் ஊழல்வாதிகள் மாநிலத்திற்கு ஒருவர் வீதம் இருந்தாலும், தமிழகத்தில் தான் 5 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள். இன்று முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: நாட்டில் ஊழல் இல்லாத அரசியலை உருவாக்க வேண்டும். வரவிருக்கும் தேர்தலுக்கு பின்னர் ஒரு ஊழல்வாதிகூட பார்லி.,க்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும், வரும் தேர்தல், அரசியலில…
-
- 3 replies
- 642 views
-
-
கனடாவில் எஸ்கலேட்டரை உபயோகித்த பெண் ஒருவரின் ஆடை மற்றும் தலைமுடி மின் படிக்கட்டில் சிக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மொன்ட்ரியல் மாகாணத்தில் இருக்கும் சுரங்கப்பாதை ஒன்றில் இயங்கும் எஸ்கலேட்டரில் 48 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். காலை நேரம் என்பதால் கூட்ட நெரிசல் மிக்க இடத்தில் எதிர்பாராத விதமாக அவரது ஆடை மின் படிக்கட்டில் சிக்கியது, விபரீதத்தை உணர்ந்த அவர் உடனடியாக அதனை எடுக்க முயன்ற போது அருகிலிருந்தவர்களும் அவருக்கு உதவியுள்ளனர். ஆனால், அப்போது அப்பெண்ணின் தலைமுடியும் மின்படிக்கட்டில் சிக்கியது. இதனால் அருகில் இருந்தவர்களால் அப்பெண்ணிற்கு உதவ இயலவில்லை. அவசர உதவிக்கு அழைப்பதற்குள…
-
- 3 replies
- 590 views
-
-
மரண தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைக்க வேண்டும் என்ற புல்லரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரை தூக்கிலிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தவிர புல்லர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மனு மீது மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், புல்லர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஒரு வார காலத்திற்குள் அவரது உடல் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புது டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர் பான வழக்கில் காலிஸ்தான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு மரண தண்டனை வ…
-
- 0 replies
- 341 views
-