Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. குடும்ப ஆட்சியில் இருந்து நாட்டு மக்கள் விடுபடும் நேரம் வந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதியான அமேதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ், அமேதி தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. முட்டை, கற்களை வீசுவதால் நான் திரும்பிச் சென்று விடுவேன் என்று அவர்கள் நினைத்தால், அது தவறு. இது ஆம் ஆத்மிக்கும், ராஜகுமாரருக்கும் …

  2. மோடியால் இந்தியாவின் பிரதமராகவும் முடியாது, நாட்டின் நிலையை மாற்றிவிடவும் முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி ஜெயந்தி நடராஜன் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் அரசுக்கு மக்கள் ஓட்டளித்து விடக் கூடாது என்பதே வகுப்புவாத அரசியல் நடத்தும் மோடியின் விருப்பம்; அதை நிறைவேற்ற அவர் தொடர்ந்து முயற்சி செய்கிறார்; ஆனால் நல்லதொரு இந்தியாவை உருவாக்குவது காங்கிரசின் கலாச்சாரம்; மோடியால் இந்தியாவின் பிரதமராகவும் முடியாது; நாட்டின் நிலையை மாற்றி விடவும் முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார். http://www.dinamani.com/latest_news/2014…

  3. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகளில் மறியல் செய்து பேரணி நடத்தினர். இதனால் போக்குவரத்து முடங்கியது. சமரச பேச்சுவார்த்தைக்கு வரும்படி பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா மீண்டும் அழைப்பு விடுத்தார். தலைநகரை மூடும் போராட்டம் தாய்லாந்து நாட்டு பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவை பதவி விலகக்கோரி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி போராட்டங்கள் நடக்கின்றன. எனவே பிப்ரவரி 2–ந்தேதி தேர்தல் நடத்த பிரதமர் முடிவு செய்தார். ஆனால் அரசு எதிர்ப்பு போராட்டக்குழு அதை ஏற்கவில்லை.மேலும் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி 13–ந்தேதி தலைநகர் பாங்காக்கை மூடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இதனால் அரசாங்க அலுவலகங்கள், முக்கிய சாலைகளில் 10 ஆயிரம் போலீசாரும், 8 ஆயிரம் ராணுவ…

  4. பிலிப்பனிஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரனமாக் அங்கு கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். கம்போஸ்ட்லா பள்ளதாக்கு மாகாணத்தில் வெள்ளத்திற்கு 6 பேர் பலியானார்கள். இதுபோல் டவா ஓரிண்டல் மாகாணத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 10 மாகானங்களில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.என பேரிடர் மீட்பு குழு தெரிவித்து உள்ளது. கடந்த 212 ஆம் ஆண்டு டிசமபர் மாதம் இதேபகுதியில் ஏற்பட்ட தய்பூன் புயலுக்கு 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். http://www.dailythanthi.com/2014-01-13-13-dead%252C-7-missing-in-Philippine-floods

  5. தீவிரவாத அமைப்பு என தடைசெய்யப்பட்ட ஜமாத் உத் தாவாவின் தலைவர் ஹபீஸ் முகமத் சயீத் காஷ்மீரில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வருட இறுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வெளியேறுகிறது. இந்நிலையில், இந்தியாவும் காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஹபீஸ் அடவாடியாக பேசியுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹபீஸ் இதனை தெரிவித்துள்ளார். ஹபீஸுக்கு லஷ்கர்-இ-தொய்பா இயகத்திற்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டின்படி இந்தியா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.dailythanthi.com/2014-01-13-India-will-be-forced-to-Kashmir-just-like-US-in-Afghanistan-Hafiz-S…

  6. சிரியாவில் 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் அங்கு தொடர்ந்து நடைபெறும் மோதல்களில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. அதிபர் ஆசாத்தின் அரசுப் படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் போராளிக் குழுக்கள், அரசுக்கு ஆதரவான நகரங்கள் மீது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், மத்திய சிரியாவில் அரசுப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாம்ஸ் பிராந்தியத்தில் உள்ள கோடா மற்றும் காம்-அல்-ஷமி பகுதிகளில் மோர்ட்டார் குண்டுகளை வீசி புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். இது தீவிரவாத தாக்குதல் என்று அரசு ஊடக…

  7. டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். தனக்கு எந்த வித பாதுகாப்பும் வேண்டாம் என்று மறுத்து வந்தாலும், கெஜ்ரிவாலுக்கு தெரியாமலேயே அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக, மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே சமீபத்தில் அறிவித்து இருந்தார்.இந்த நிலையில் உ.பி. மாநில எல்லையில் உள்ள காசியாபாத்திலும் கெஜ்ரிவாலுக்கு 30 போலீசாரைக் கொண்ட இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பை 24 மணி நேரமும் வழங்குவது என்று போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பாதுகாப்பு எனக்கு வேண்டாம். சாதாரண மக்களுக்கு முதலில் பாதுகாப்பு அளி…

  8. கவுசாம்பியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியாக ஹிந்து ரக்‌ஷா தள் தலைவர் பின்கி சவுத்ரி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஹிந்து ரக்‌ஷா தள் அமைப்பின் மற்றொரு தலைவர் குப்தா, புகுந்து பிரசாந்த் பூஷன் சிஐஏ ஏஜெண்ட் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக விஷ்னு குப்தா கூறும் போது, பிரசாந்த் பூஷன் ஒரு துரோகி ,காஷ்மீரில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்று பூஷன் கூறியது தேசிய நலனுக்கு எதிரானது. தேசிய நலனுக்கு எதிரான கருத்துகளை சொல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டால் நமது நாடு உடைந்துவிடும். காஷ்மீரில் இருந்து ராணுவம் விலக்கப்படுவது காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுகொடுப்பது போல் ஆகும் என்று அவர் …

  9. குஜராத் முதல் மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நேற்று கோவாவில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு தனது டிவிட்டர் இணையதளத்தில் ஆம் ஆத்மி கட்சி பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார். அதில் நாட்டில் நல்ல திட்டங்களை தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் தோன்றுவதால் செய்ய முடியுமா அல்லது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் செய்ய முடியுமா என்று அதில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நரேந்திர மோடியின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஷகில் அகமது, ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி நரேந்திர மோடியை கலக்கமடைய செய்துள்ளது. மோடி காங்கிரசை குற்றம் சாட்டுவது புரிகிறது. ஆனால் தற்போது ஆம் ஆத்மி …

  10. அரியானா மாநிலம் பெதேகாபாத் மாவட்டம் கோர்க்பூர் கிராமத்தில் ரூ.23 ஆயிரத்து 800 கோடி செலவில் தலா 700 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 4 அணு உலைகளுடன் கூடிய புதிய அணு மின் உலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த அணுமின் நிலையத்துக்காக 1503 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.450 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இதில் கோர்க்பூர் கிராமத்தில் மட்டும் 1313 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கிருந்த 847 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு உள்ளன.இந்த புதிய அணு மின் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு அணுமின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில் ஹரியானா கவர்னர் ஜகன்னாத் பகாடியா,ம…

  11. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான மத்திய மந்திரி சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய தலைவர் சோனியா காந்தி வெளியிட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். அஜ்மீர் தொகுதியின் எம்.பி.யான பைலட் (வயது 36), கம்பெனி விவகாரங்கள் துறை மந்திரியாக உள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததையடுத்து கட்சியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள மேலும் சில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.maalaimalar.com/2014/01/1315…

  12. பல்பொருள் சில்லரை வர்த்தக வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. டெல்லியிலும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் டெல்லி மாநில அரசு சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை திரும்ப பெற்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.dailythanthi.com/2014-01-13-Delhi-withdraws-permission-for-FDI-funded-retail-stores

  13. குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாரதீய ஜனதாவிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி, தங்களது தொண்டர்களுக்கு தொல்லை கொடுக்க முதல் மந்திரி நரேந்திர மோடி உளவுதுறையை பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் இது தொடர்பான தகவல் அறிக்கையை மாலை 3 மணிக்கு அகமதாபாத் போலீஸ் கமிஷ்னரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.dailythanthi.com/2014-01-13-Modi-using-intelligence-to-harass-party-workers-alleges-AAP

  14. மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை பிரபல் இந்தி நடிகர் சல்மான் கான் பாராட்டியுள்ளார். மத்தி பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்த சல்மான் கான் செய்தியாளர்களிடம் பேசுகையில் “நாட்டில் நல்ல பணிகளை யார் செய்கிறார்களோ அவர்களுடன் நான் உள்ளேன். உதரணமாக மத்திய பிரதேச மாநில முதல் மந்திரி நல்ல வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார். எனவே அவரது கட்சிக்கு மக்கள் வாக்களித்து மூன்றாவது முறையாக வெற்றி பெற செய்துள்ளனர். அவர் மிகவும் நல்ல மற்றும் தகுதியான நபர்” என்று கூறினார். http://www.dailythanthi.com/2014-01-13-Salman-Khan-praises-Shivraj-Singh-Chouhan-for-good-work-in-state

  15. சிமோகா வருகை மத்திய நெடுஞ்சாலைத் துறை மந்திரி ஆஸ்கர் பெர்னாண்டஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சிமோகா வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ராகுல், கர்நாடகத்தில் போட்டியா? அவரிடம், ‘‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி கர்நாடகத்தில் போட்டியிடுவாரா?’’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதில் அளித்து ஆஸ்கர் பெர்னாண்டஸ் கூறியதாவது:– ‘‘பாராளுமன்ற தேர்தலில் மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போட்டியிடுமாறு தொண்டர்கள் ராகுல் காந்தியை வற்புறுத்தி வருகிறார்கள். அவர் (ராகுல் காந்தி) கர்நாடகத்தில் போட்டியிட விரும்பினால் நாங்கள் முழுமூச்சுடன் வரவேற்போம்’’. இவ்வாறு ஆஸ்கர் பெர்னாண்டஸ் பதில் அளித்தார். http://www.dail…

  16. சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது என்று நரேந்திர மோடி கூறினார். உள்துறை மந்திரியின் கடிதம் கோவா மாநிலம் பனாஜியில் நடந்த பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யும்போது முஸ்லிம்களை கைது செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எழுதுகிறார். ஏன் அப்படி செய்ய வேண்டும்? சட்டத்தை மீறுபவர்களுக்கு என்று ஏதாவது மதம் இருக்கிறதா? வாக்கு வங்கி அரசியல் அவர்களது வெட்கமில்லாத துணிவை பாருங்கள். அவர்கள் மதவாத அரசியல் நடத்துகிறார்கள். சட்டத்தை …

  17. கேரள மாநில முதல் மந்திரி உம்மன் சாண்டி இரத்த அழுத்தம் காரணமாக இன்று காலை 8.30மணி அளவில் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.அவரது உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து கோட்டயம் இருதய சிகிச்சை நிபுணர் டாகடர் .வி.எல்ஜெயபிராகாஷ் கூறும் போது:-குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக இன்றுகாலை முதல்-மந்திரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது என தெரிவித்தார். உடனடியாக மருத்த்துவமனைக்கு சென்ற சுகாதாரதுறை மந்திரி வி.எஸ் சிவகுமார் அங்கு டாக்டடர்களிடம் உம்மன் சாண்டி உடல் நிலைகுறித்து விசாரித்தார் பின்னர் அவர் கூறும் போது முதல்-மந்திரி உடல் நிலை தற்போது சீராக உள்ளது அவரது நிக்ழச்சிகள் 2 நாளைக்கு ரத…

  18. டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை தோறும் தலைமைச்செயலகத்துக்கு வெளியே பொதுமக்களை நேரில் சந்தித்து குறை கேட்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அனைத்து மந்திரிகளும் கலந்து கொள்ளும் இந்த ‘மக்கள் மன்ற’த்தில் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆம் ஆத்மி கட்சி அரசு சார்பில் நடத்தப்பட்ட முதல் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேர் திரண்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு, முதல்–மந்திரி கெஜ்ரிவால் வெளியேறினார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்நிலையில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் குறைகேட்பு மன்றத்தை தற்போது நா…

  19. பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஊழல் எதிர்ப்பு கோஷம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஊழலை ஒழிப்போம் என்று கூறி டெல்லியில் ஆட்சிக்கு வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, அதே கோஷத்தை முன் வைத்து பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க திட்டமிட்டுள்ளது. அந்த கட்சி ஊழல் குற்றச் சாட்டுகளில் சிக்காத, நல்ல இமேஜ் உள்ளவர்களை நாடெங்கும் சுமார் 300 தொகுதிகளில் நிறுத்த ஆலோசித்து வருகிறது. இது காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் வெற்றியை கணிசமாக பாதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் தங்களது தேர்தல் வியூகத்தை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.…

  20. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான 'ஆம் ஆத்மி' ஆட்சி பற்றி பா.ஜனதா மூத்த தலைவரும், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். 'ஆட்சிமுறை-ஒரு முக்கியமான வேலை' என்ற அந்த கட்டுரையில் அருண் ஜெட்லி எழுதி இருப்பதாவது:- காங்கிரசின் வெளி ஆதரவுடன் 'ஆம் ஆத்மி' டெல்லியில் அமைத்துள்ள அரசு, வாக்காளர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பெற்றுள்ளது. டெல்லிக்கு நிறைய சவால்கள் உள்ளன. எந்த அதிகாரமும் இல்லாத டெல்லி, குளோபல் நகர் ஆக விரும்பும் டெல்லி என்பதுதான் 2 மிகப்பெரிய சவால்கள். அவற்றை 'ஆம் ஆத்மி' அரசு பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளர்கள், தங்கள் விருப்ப கட்சியை மாற்றுவதில் பொல்லாதவர்கள். தாங்கள் ஓட்டுப்…

  21. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான தொகுதியாக உள்ளது. இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, சோனியாவை தொடர்ந்து அந்த தொகுதியில் ராகுல்காந்தியும் வெற்றி பெற்றார். வரும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அந்த தொகுதியின் பிரசார பொறுப்பை பிரியங்கா ஏற்றுள்ளார். இந்த நிலையில் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்து காட்டுவேன் என்று சபதமிட்டப்படி இவர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். நேற்று குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். சுமார் 100 கார்கள் பின் தொடர சென்ற அ…

  22. ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்வைத்து டெல்லி அரசை பிடித்துள்ளது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலிலும் 100 தொகுதிகளை கைப்பற்ற அது திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் போட்டி வேட்பாளராக குமார் விஷ்வாசை களமிறக்குவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதையொட்டி அங்கு நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய குமார் விஷ்வாஸ் ராகுல் காந்தியின் குடும்பத்தை கடுமையாகத் தாக்கி பேசினார். செய்தியாளர்களை சந்தித்த குமார் விஷ்வாஸ், ராகுல்காந்தி குறித்து கூறியதாவது:- நாட்டில் குடும்ப அரசியல் ஊழலை வளர்த்துவிட்டு இருக்கிறது. அமேதி தொகுதியின் மேம்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்டுள்ளது என்று ராகுல் கா…

  23. ஈரான் அணு ஆயுதங்களை குவித்து வருவதாக கூறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. இதையடுத்து ஈரானுக்கு வழங்கப்பட்டு வந்த அமெரிக்க நிதியானது முடக்கப்பட்டது. மேலும் ஈரான் மீது பொருளாதரத் தடையையும் அமெரிக்கா கொண்டு வந்தது. இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும், ஈரானுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதில் ஈரானின் ஆக்கப்பூர்வ குடியுரிமை திட்டங்களுக்காக மட்டும் 5 சதவிகித அணுசக்தியை உற்பத்தி செய்துகொள்ளவும், அதற்கு மாற்றாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க நிதியை தொடர்ந்து வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த வரலாற்று மு…

  24. உலகில் தற்போது உயிருடன் இருப்போரில் மைக்ரசொஃப்ட் நிறுவனரும் பெரும் கொடையாளியுமான பில் கேட்ஸ் தான் அனேகமானோரால் விரும்பப்படும் மனிதர் என்று சர்வதேச ஆய்வொன்று கூறுகிறது. இரண்டாவது நபராக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மூன்றாவது இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீனும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தை தான் பாப்பரசர் பிரான்சிஸ் பிடித்திருக்கிறார். அமெரிக்காவிலோ ஒபாமாவை விட இரண்டு மடங்கு ஆதரவுபெற்று, பாப்பரசர் பிரான்சிஸ் தான் முதலிடம் பெற்றார். சீனாவில் அதிபர் க்ஷி ஜின்பிங்-ஐவிட இரண்டு மடங்கு விருப்பு வாக்கு பில் கேட்ஸுக்கு கிடைத்திருக்கிறது. டைம்ஸ் செய்திப் பத்திரிகைக்காக ஆய்வு நிறுவனமொன்றினால் 13 நாடுகளில் சுமார் 14 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. …

  25. இராக்கின் தலைநகர் பாக்தாதின் மையப்பகுதியில் ஒரு கார் குண்டு வெடித்ததில் குறைந்தபட்சம் 9 பேராவதுகொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் 16 பேர் அதில் காயமடைந்திருக்கிறார்கள். இதேபகுதியில் கடந்த வாரம் இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டவர்கள் மத்தியில் ஒரு தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்ததில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். கடந்த வருடத்தில் இராக்கில் அரசியல் பதற்றமும், வன்செயல்களும் கடுமையாக அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் சுமார் 9000 பேர் அங்கு வன்செயல்களில் கொல்லப்பட்டதாக ஐநா கூறியுள்ளது. கடந்த 5 வருடங்களில் இதுதான் மிகவும் அதிகமான தொகையாகும். http://www.bbc.co.uk/tamil/global/2014/01/140112_iraqblast.shtml

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.