உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
இன்றைய உலகம் பலதைக் கூறினாலும் விடுதலைப் புலிகள் உரிமைப் போராட்ட வீரர்கள். அவர்கள் இருந்த நாட்களில் இன்றைய காலம் போல் தமிழர்கள் அழிக்கப்படவில்லை. அவர்கள் தமிழருக்கு அரண். எமது ஆட்சியில் ஈழத்தின் விடிவு நிச்சயம் என பா.ஜ.க அகில இந்திய தேசியச் செயலாளர் டொக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். தமிழ் மக்கள் முழு உரிமையுடனும் கூடிய அதிகாரத்தை அனுபவித்து சுதந்திரமாக வாழ வேண்டும். அவ்வாறான சூழ்நிலை தாமதமானால் எமது ஆட்சியில் நிச்சயம் என பாரதிய ஜனதாக் கட்சியின் அகில இந்திய தேசியச் செயலாளர் டொக்டர். திருமதி. தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=97119&category=TamilNews&language=tamil
-
- 4 replies
- 556 views
-
-
900 வருடங்கள் பழைமையான ப்ரீஹ் விஹேர் இந்துக் கோயில் கம்போடியா நாட்டுக்குச் சொந்தமானது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை ஐ.நா உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வழங்கியுள்ளது. கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் எல்லையில் இக் கோயில் அமைந்துள்ளது. இதனால் இக்கோயிலுக்காக இவ்விரு நாடுகளும் நீண்ட காலமாக சண்டையிட்டுக்கொண்டிருந்தன.. தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர் கோயிலைச் சுற்றியிருந்த பகுதியில் தாய்லாந்து மற்றும் கம்போடிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. இந்நிலையில், இக்கோயிலும் அதனைச் சுற்றியுள்ள குறித்தவொரு பகுதியும் …
-
- 2 replies
- 619 views
-
-
"நெல்சன் மண்டேலாவால் பேச இயலவில்லை' தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவினால் பேச இயலவில்லை என்று அவருடைய முன்னாள் மனைவி வின்னி மண்டேலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா, சிகிச்சைக்குப்பின் குணமடைந்துள்ளார். எனினும், மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், வீட்டிலேயே அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை, 22 மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரால் இப்போது பேச இயலவில்லை. நுரையீரலை சுத்திகரிக்க, அவருடைய வாயில் டியூப்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவருக்கு ஏதேனும் தேவையெனில், சைகை…
-
- 0 replies
- 397 views
-
-
ரஷ்யாவில் போயிங் விமானமொன்று விழுந்து நொறுங்கியதில் இதுவரைக்கும் 52 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் மத்தியில் கஸான் விமான நிலையத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை தரை இறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் 50 பயணிகளும் ஆறு சேவையாளர்களும் இருந்ததாக ஒரு தகவலும் மொத்தமாகவே 52 பேர் மட்டுமே இருந்ததாக இன்னுமொரு தகவலும் தெரிவிக்கின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/89846--52-.html
-
- 0 replies
- 457 views
-
-
க்ஹர்கோனே(ம.பி.): ஆட்சிக்கு வந்துவிடுவோம் என பா.ஜனதாவினர் பகல் கனவு காண்பதாகவும், இந்த பேராசை காரணமாக அக்கட்சியின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிடுவதில் தீவிரமாக உள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் க்ஹர்கோனேவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, மோடியையும். பா.ஜனதாவையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசுகையில்,"பாஜகவினர் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற பேராசையில் ஒருவருக்கொருவர் கீழே தள்ளிவிடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். மேலும் மக்களை கவர்ச்சிகரமான பேச்சால் கவர்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள் …
-
- 11 replies
- 1.2k views
-
-
ஐதராபாத்:ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீ அணைப்பு வீரர்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு சொந்தமான சதீஷ் தவான் விண்வெளி மையம் உள்ளது. இங்கிருந்துதான் விண்வெளிக்கு ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்களும், விண்வெளி ஆய்வு கலங்களும் அனுப்பப்பட்டு வருகிறது. கடைசியாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கல்யான் விண்கலம் அனுப்பப்பட்டது. அது தற்போது பூமியை சுமார் 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சு…
-
- 0 replies
- 744 views
-
-
இன்று காலை 6h30 முதல் 7h00 மணியளவில் BFMTV யின் பாதுகாப்புப் பிரிவினர் தமது கடமையை ஆரம்பித்தனர். அச்சமயம் திடீரென பெரிய துப்பாக்கியுடன் 12 rue Oradour-sur-Glane à Issy-les-Moulineaux (Hauts-de-Seine) இலுள்ள BFMTVயின் நடு மண்டபத்திற்குள் நுழைந்துள்ளார். அந்தச் சமயம் அங்கு தனக்கான கடிதத்தை எடுக்க பிரதான மண்டபத்திற்குள் வந்த பிரதான செய்தித் தொகுப்பாளர் ஒருவர் துப்பாக்கி முனையில் ஏச்சரிக்ப்பட்டுள்ளார். ஆயுதத்துடன் நின்ற 30 வயது மதிக்கக் கூடிய அந்த மர்ம நபர் தொகுப்பாளரை எச்சரித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். காவற்துறையினர் இன்னமும் BFMTV யின் தலைமையகத்திலேயே நிற்கின்றனர். அங்கு துப்பாக்கிக் குண்டின் வெற்றுக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அங்கு சுட்ப்பட்டனவா என…
-
- 0 replies
- 576 views
-
-
சென்னை: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுற்றுப்பாதை அதிகரிக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, மங்கள்யான் விண்கலம் கடந்த 5ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் முதலில் பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அந்த சுற்றுப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தப்பட்டது. முதல் மூன்று சுற்றுப்பாதையில் அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நடந்தது. இந்நிலையில், நேற்று இரவு மங்கள்யானின் சுற்றுப் பாதையை 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணி நடந்தது. இதற்காக எரிபொருள் செயல்படுவது இயக்கப்பட்டது. ஆனால் மங்கள்யானில் உள்ள அந்த கருவி இயங்கவில்லை. இதன…
-
- 12 replies
- 1.3k views
-
-
பீமெட்டரா(சத்தீஸ்கர்) "மேடம் (சோனியா) நீங்கள் நோயாளியாக உள்ளீர்கள்...எனவே இளவரசர் (ராகுல்) கட்சி பொறுப்புக்கு வரட்டும். அவர் காங்கிரஸ் தலைவராக வந்தாலாவது சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குகிறாரா? என பார்க்கலாம்" என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கிண்டலாக அறிவுறுத்தி உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பீமெட்டரா என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, சோனியாவை 'மேடம்' என்றும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை 'இளவரசர்' என்றும் கிண்டலாக குறிப்பிட்டார். "மேடம் நீங்கள் நோயாளியாகி விட்டீர்கள். இளவரசர் பொறுப்பைஎடுத்துக்கொள்ளட்டும். அதன்பின்னர் அவர் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 24 மணி நேரமும் மின்சாரம் கொட…
-
- 0 replies
- 412 views
-
-
பாலத்தீனத்தின் முன்னாள் தலைவர் யசீர் அரபாத் விஷமூட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சுவிட்சர்லாந்து அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. மருத்துவ, தடயவில் நிபுணர்களினால் நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. யசீர் அரபாத் பிரான்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விஷமூட்டி கொல்லப்பட்டிருந்தார் என இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. இதில் ஈவிரக்கமற்ற வகையில் இஸ்ரேல் செயல்பட்டுள்ளதாக பலஸ்தீனர்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர். எனினும், இதனை நிராகரித்துள்ள இஸ்ரேல் அரசாங்கம், வெளியாகியுள்ள சுவிர்லாந்தின் மருத்து அறிக்கை குறித்தும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்…
-
- 3 replies
- 876 views
- 1 follower
-
-
Home உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்கமான கதை இது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதையும் தான்!. ஹெரால்டு ஜெல்லிகோ பெர்சிவல் எனும் அந்த முன்னாள் ராணுவ வீரர் சமீபத்தில் மரணமடைந்தார். 99 வய்தான அவருக்கு குடும்ப உறுப்பினர்களோ ,உறவினர்களோ நன்பர்களோ யாரும் கிடையாது. பெர்சிவல் இரண்டாம் உலக போரில் பங்கேற்றவர். நாட்டுக்காக சேவை செய்த அந்த மனிதரின் கடைசி பயணத்தில் யாரும் பங்கேற்க இல்லாத நிலை. உள்ளூர் நாளிதழில் இந்த செய்தியை பார்த்த சக ராணுவ வீரரான ரிக் கிளமண்ட் இந்த நிலை கண்டு வேதனை அடைந்தார். கிளமண்ட் ஆப்கன் போரில் பங்கேற்று இரு கால்களையும் இழந்தவர். பெரியவர் பெர்சிவலில் இறுதிசடங்…
-
- 0 replies
- 606 views
-
-
சென்னை: செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பபட்ட மங்கள்யான் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு சீரமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் கடந்த 5ஆம் தேதி ஏவப்பட்டது. அந்த ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்ற மங்கள்யான் விண்கலம் சரியான முறையில் பூமியின் சுற்று வட்டப் பாதையின் முதல் சுற்றில் சுற்றிக் கொண்டிருக்கிறது. விண்கலத்தை பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து 5 முறை அதிகரிக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக பூமியின் சுற்று வட்டப்பாதையினை அதிகரிப்பதற்கான பணிகள் கடந்த 7ஆம் தேதி அதிகாலை 1 மணி 17 நிமிடத்திற்கு நடந்தது. 2வது கட்டமாக, கடந்த 8 ஆம் தேதி அதிகாலை 2.18 மணிக்கு அதிகரிக்கும் பணி நடந்தது. அப்போது அந்த விண்கலம…
-
- 5 replies
- 678 views
-
-
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இரண்டு பேர் தங்களை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், தாங்கள் 21 ஆண்டாக சிறையில் இருப்பதாகவும், தங்களை சிறையிலிருந்து விடுவிக்குமாறும் மனுவில் கூறியுள்ளனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனு தொடர்பாக மத்திய மற்றும் மாநில உள்துறை அமைச்சகங்கள் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் த…
-
- 0 replies
- 519 views
-
-
மூன்று வெவ்வேறு நேரங்களில் – மூன்று வெவ்வேறு இடங்களில் – இரண்டு வெவ்வேறு நாடுகளில் – பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!! மூன்று வெவ்வேறு நேரங்களில் - மூன்று வெவ்வேறு இடங்களில் - இரண்டு வெவ்வேறு நாடுகளில் - பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!! ————- பத்து நாட்களுக்கு முன்னர், இந்திய அரசியலையே புரட்டிப்போடக்கூடிய தனது புகழ்பெற்ற உரையை ராஜஸ்தானில்- பாரு மாவட்ட பேரணியில் - நிகழ்த்தினார் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், கட்சியின் ஆதர்ஷ எதிர்கால பிரதமருமான ராகுல் காந்தி. அந்த கூட்டத்தில் அவர் வெளிப்படுத்திய கருத்து முத்துக்களில் குறிப்பிடத்தக்கவை - இந்தியாவில் அரசியலும், அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட குழுவிடமே இருக்கிறது. …
-
- 4 replies
- 741 views
-
-
பாரிஸ் RER B யின் தொடருந்து ஒன்று தீப்பிடித்துக் கொண்டதால் இன்று திங்கட்கிழமை மாலை தொடருந்துப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ROBINSON தொடருந்து நிலையத்தில் தரித்து நின்ற Sceaux (Hauts-deSeine) இன் இறுதித் தரிப்பிடமாகக் கொண்ட தொடருந்து அனைவரும் இறங்கிய பின்னரே தீப்பிடித்துக் கொண்டது. இத்தீயானது 17h00 மணியளவில் பற்றிக் கொண்டது. தீப்பிடித்து ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் தீயணைப்புப் படையினர் பெரும் போராட்டத்தின் இறுதியில் தீயை அணைத்தனர். அரை மணி நேரத்தின் பின்னர் தீ முற்றாக அணைக்கப்பட்ட பின்னர் 18h10 அளவில் இருந்து மெதுவாகப் போக்குவரத்து சகஜநிலைக்குத் திரும்பியது. இத் தீக்கான காரணம் குற்றச் செயல்கள் எனக் காவற்துறையினர் தெரிவித்தனர். ஒரு இளைஞர்…
-
- 2 replies
- 484 views
-
-
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது , மீறி நடந்தால் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் , இந்தியா வெளியேற மறுக்கும் பட்சத்தில் அனைத்து தமிழக எம்பிக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ஈழ மக்களுக்கு ஒரே தீர்வான தமிழீழத்தை பொது வாக்கெடுப்பின் மூலம் சர்வதேச சமுகம் பெற்று தர வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் முக்கடலும் சந்திக்கும் இடமான கன்னியாகுமரியில் முப்பட்டான் திருவள்ளுவரை தலைமையாக கொண்டு விவேகானந்தர் மண்டபத்தினை மதியம் 1 அளவில் திட்டமிட்டபடி இரகசியமாக கைப்பற்றி மாணவர்களாகிய நாங்கள் போராட்டத்தை துவங்கினோம் இதை சற்றும் எதிர்பார்க்காத விவேகனந்தர் நினைவு மண்டபத்தை சேர்ந்த காவலாளிகள் காவல்துறைக்கு தெரிவித்தனர் , …
-
- 4 replies
- 1.3k views
-
-
சிரிலங்கா அரசின் இனவெறியும் சட்டமும்:- =================================== இன்றைய சிரிலங்காவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம், 1956ஆம் ஆண்டு [The Sinhala Only Act (formally the Official Language Act No. 33 of 1956] - சிங்களம் மட்டுமே என்னும் சட்டம். இலங்கை அதன் அரசியல்மைப்புச் சட்டத்தின் மூலம் இனப்பிரச்சினையை 1956 முதல் வலுவாகத் திணித்து வருகிறது. அதன் பலன்கள்:- 1) 2009ஆம் ஆண்டில் மட்டும் கொல்லப்பட்டோர் / காணாமல்போனோர் 1,47,679 (ஐ.நா அறிக்கைப்படி) 2) ஈழ மற்றும் இந்திய வம்ச தமிழர்கள் 2ஆம் நிலை மக்களாகவே இன்று வரை நடத்தப்படுகின்றனர். 3)கடந்த 50 ஆண்டுகளில் சிரிலங்காவில் உயிரிழந்தோர் சுமார் 3 முதல் 5 இலட்சம் தமிழர்கள் மட்டும் இருக்கலாம். 4) கடந்த 30 ஆண்…
-
- 0 replies
- 511 views
-
-
ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த மது பாட்டிலில் இந்து கடவுள்கள் படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த மது பாட்டில்களை அமெரிக்காவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் பாட்டில்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் வலியுறுத்தியுள்ளனர். FILE ஆஸ்திரேலியாவில் உள்ள மது ஆலை ஒன்றில் இருந்து தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுப்பப்பட்ட மது பாட்டில்களில், பிள்ளையார், லட்சுமி படங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது அந்த மது பாட்டிலில் இருக்கும் படத்தில், லட்சுமியின் உடலோடு பிள்ளையாரின் தலை இணைக்கப்பட்டுள்ளது. நெவாடா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த மது பாட்டில்களை உடனடியாக திருப்பி அனு…
-
- 5 replies
- 813 views
-
-
http://sivasinnapodi.wordpress.com/2013/11/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0-2/
-
- 0 replies
- 413 views
-
-
தென் கொரிய டிவி நிகழ்ச்சிகளை பார்த்ததற்காக 80 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை விதித்துள்ளது வட கொரிய அரசு என்று பரபரப்பு செய்தி ஒன்றை தென் கொரிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதனை வதந்தி என்று வடகொரியா மறுத்தாலும் இந்தச் செய்தியை வெளியிட்ட தென் கொரிய பத்திரிக்கை வடகொரியாவின் அரசியல், நிகழ்வுகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால் இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையும் சந்தேகிப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது. வடகொரியாவிலிருந்து தற்போது திரும்பியுள்ள ஒருவர் இந்த செய்திப் பத்திரிக்கைக்குக் கூறும்போது நவம்பர் 3ஆம் தேதி 7 நகரங்களில் இந்த 80 பேரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார். வடகொரியாவின் கிழக்கு துறைமுக நகரான வோன்ஸானில் 10,000 பேரைக் கூட்டி ஒரு விள…
-
- 0 replies
- 458 views
-
-
சவூதியில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் சவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பாரியளவில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் அந்நாட்டு காவல்துறையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இந்தப் போரட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக சவூதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டுப் பணியாளர்கள் போராட்டங்களை நடாத்த அனுமதிக்கப்படுவதில்லை. பெருமளவிலான ஆபிரிக்கப் பணியாளர்களே இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்திருந்தது. இந்த காலப்பகுதியில் நாடு திரும்பாத பெரும் எண்ணி…
-
- 0 replies
- 338 views
-
-
பிரபல மேடை நாடக இசை நிகழ்வான பிரெஞ்சுப் புரட்சியைத் தழுவிய கதையான "1789 Les Amants de la Bastille" நிகழ்ச்சிக்கான இன்றைய ஒத்திகையும் அதனைத் தொரடர்ந்து நிகழும் வானவேடிக்கைக்கான ஒத்திகையும் ஆயத்தங்களும் பரிசிலுள்ள Palais des Sports இல் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 20h30 இற்கு ஆரம்பமாகும் நிகழ்விற்கான ஒத்திகையை 18h00 மணியளவில் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த வானவேடிக்கைக்கான குண்டு ஒன்று வெடித்ததில் அருகிலிருந்த சீமெந்துச் சுவரும் மேற்கூரையின் ஒரு பகுதியும் இடிந்து வீழ்ந்தது. மேடையில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த கலைஞர்களும் தொழில்நுட்பவியலாளர்களுமாகப் பதினைந்து பேர் படுகாயமுற்றனர். இதில் ஜந்து பேர் மிகவும் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் வைத்திய…
-
- 1 reply
- 651 views
-
-
இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ? தேசிய வாத பம்மாத்தில் மிக்கவையாக வலிந்து வலியுறுத்தப்படுவது இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற சொல்லாடல். அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை. இனியும் கூட அவ்வாறு இடம் பெற முடியாது. வடஇந்தியாவில் பரவலாகப் பேசப்படுகிறது என்பதைத் தவிர்த்து, அனைந்திந்திய மொழி என்று சொல்லும் தகுதி இந்தி உட்பட இந்திய மொழிகள் எதற்குமே கிடையாது. பிறகு எப்படி இந்தி தமிழ்நாட்டின் தலை வரை நுழைந்தது ? வரலாறுகளைப் பார்க்க வேண்டும், முகலாயர்கள் காலத்திற்கு முன்பு 'இந்தி' என்ற மொழி இந்தியாவில் இருந்ததற்கான அடையாளமே (ஆதாரம்) இல்லை. முகலாயர்கள் ஆட்சியில், அவர்கள் பேசிய இரானிய பிரிவைச் சேர்ந்த உருதே, வடமொழிகளான சமஸ்கிரதம் மற்றும் பாலி ஆகியவற்று…
-
- 1 reply
- 1.8k views
-
-
அணு ஆயுத ஆபத்து இல்லாத உலகைப் படைப்போம்! அணிசேரா இயக்கத்தை வலுப்படுத்துவோம்! பிடல் காஸ்ட்ரோ அறைகூவல் ஹவானா, நவ. 1- அணு ஆயுத ஆபத்து இல் லாத உலகம் உருவாக வேண் டும் என்ற தனது இதயப்பூர்வ மான விருப்பத்தினைஇந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியுடனான சந் திப்பின் வாயிலாக உலக நாடு களுக்கு வெளிப்படுத்தியுள் ளார் கியூபப்புரட்சியின் மகத் தான தலைவர் பிடல் காஸ்ட்ரோ. மேலும் அணிசேரா இயக் கம் இன்றும் முக்கியத்துவத்து டன் விளங்குகிறது என்றும், பூவுலகின் தெற்கு நாடுகள் அனைத்தும் இன்னும் நெருக் கமாக ஒத்துழைப்புடன் செயல் பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசுத் துணைத் தலை வர் டாக்டர் ஹமீது அன்சாரி பெரு மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப்பய ணம் மே…
-
- 4 replies
- 772 views
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று தாக்கிய ஹையான் சூறாவளியினால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் பாரிய சேதமும் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள சமர் தீவு அருகே ஹையான் சூறாவளி உருவாகி மத்தி பகுதியைக் கடந்து சென்றது. மணிக்கு 235 முதல் 275 கிலோ மீற்றர் வேகத்தில் நேற்று கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். ஆனால் எதிர்பார்க்கப்பட்டதனை விட வேகமாக மணிக்கு 315 கி.மீற்றர் வேகத்தில் ஹையான் சூறாவளி நேற்று காலை தாக்கியுள்ளது. இவ்வாண்டின் சக்திவாய்ந்த ஹையான…
-
- 1 reply
- 378 views
-