உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
டெல்லி: பாரதீய ஜனதா கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு ரூ.50 லட்சம் கேட்டு டெல்லி ஹைகோர்ட்டில் ராம் ஜெத்மலானி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்தார். நிதின் கட்காரி தலைவராக இருந்தபோது அவரது நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது கட்காரி பதவி விலக வேண்டும் என்று ஜெத்மலானி வலியுறுத்தினார். இதேபோல சி.பி.ஐ. இயக்குனர் நியமனத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தபோது அவர்களை ஜெத்மலானி கண்டித்தார். இதன் காரணமாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் பின்னர் நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. கட்சிக்கு எதிராக நடந்து கொண்டதாக ராம் ஜெத்மலானி கடந்த மே மாதம் 28-ந்தேதி அக…
-
- 0 replies
- 379 views
-
-
ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியாவுக்கு ஐ.நா. கெடு விதித்துள்ள நிலையில், அந்த ஆயுதங்களை கொண்டு வந்து நோர்வேயில் அழிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் வேண்டுகோளை நோர்வே அரசு ஏற்க மறுத்துள்ளது. இதுகுறித்து நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் போர்கே பிராண்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் அமெரிக்காவின் எண்ணத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதுதொடர்பாக, மிகத் தீவிரமாக ஆராய்ந்தோம். இதில் பல தொழில்நுட்ப மற்றும் சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதற்கு ஏற்ப வல்லுநர்கள் குழுவை அமைக்காதது மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாத நிலையில் ரசாயன ஆயுதங்களை அழிப்பது என்பது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று தெரிவித்தார். …
-
- 0 replies
- 297 views
-
-
டெல்லி: அமெரிக்கா உலக நாடுகளின் தலைவர்களின் செல்போன் மற்றும் இமெயிலை ஹேக் செய்த போதிலும் அதனால் பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்போன் மற்றும் இமெயிலை மட்டும் ஹேக் செய்ய முடியவில்லை. வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் மாநில அரசு துறை அதிகாரிகள் அளித்த தொலைபேசி மற்றும் செல்போன் எண்களை வைத்து அமெரிக்க உளவாளிகள் உலகின் 35 நாடுகளின் தலைவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்டுள்ளனர் என்று தி கார்டியன் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரசின் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடன் அளித்த தகவல்களின் மூலம் தான் அமெரிக்கா ஒட்டுக் கேட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து அறிந்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கடும் கோபத்தில் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இது க…
-
- 3 replies
- 619 views
-
-
ஆர்க்டிக்: ஆர்க்டிக் பகுதியின் வெப்பநிலை கடந்த 44,000 ஆண்டுகளில் இல்லாததவை விட தற்போது அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதுகுறித்து லைப்சயின்ஸ் இதழில் டக்ளஸ் மெய்ன் விரிவாக எழுதியுள்ளார். ஆர்க்டிக் பகுதியில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் அங்குள்ள பல ஐஸ் மலைகள் உருகி வருகின்றன. இது நிச்சயம் கவலைக்குரியது என்று அத்தனை ஆய்வுகளும் ஒரு சேர கூறுகின்றன. இந்த நிலையில் கனடிய பகுதியில் உள்ள ஆர்க்டிக்கின் கோடைகால வெப்பநிலை கடந்த 44,000 ஆண்டுகளில் இருந்ததை விட அதிக அளவில் உயர்ந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதை விட முக்கியமாக கடந்த 1,20,000 ஆண்டுகளிலும் இது மிகவும் அதிகமான வெப்பநிலை என்றும் இந்த ஆய்வு பயமுறுத்துகிற…
-
- 0 replies
- 467 views
-
-
சென்னை: கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று இலங்கை தூதர் கரியவாசம் தெரிவித்த கருத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்பட கூடாது. மீறி நடத்தப்பட்டால் இலங்கையின் தலைமை ஏற்று 2 ஆண்டுகள் செயல்பட வேண்டி வரும். எனவே இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது. தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தீர்மானம் நிறைவ…
-
- 0 replies
- 315 views
-
-
சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வின், செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது, வாக்காளர்களை உஷ்ணப்படுத்தியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, மத்திய பிரதேசத்தில், நவம்பர், 25ல் தேர்தல் நடக்கிறது. சவுகானை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றி விட துடிக்கும் காங்கிரஸ், அதற்காக விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், காங்கிரசின் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்கும் வகையில், காங். எம்.எல்.ஏ., சத்யநாராயண் படேலின், செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. பெண் ஒருவருடன், எம்.எல்.ஏ., சத்யநாராயண் உல்லாசமாக இருக்கும் வீடியோ, இணைய தளங்களில், கடந்த இரண்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது ஏன்? : சர்ச்சையை ஏற்படுத்திய பஞ்சாப் முதல்வரின் கருத்து ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, “என் பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலால் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல் நானும் கொல்லப்படலாம். அதற்காக கவலைப்பட மாட்டேன்” என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார். இந்நிலையில், இந்திரா காந்தி படுகொலையை மீண்டும் நினைவுபடுத்தி வரும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அகாலி தளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடுமையாக விமர்சித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பாதலின் மருமகளான ஹர்சம்ரத் இது குறித்து, …
-
- 1 reply
- 1.2k views
-
-
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ராஜா ராவ் ராம் பக்ஷ் சிங் கோட்டைக்குள் தங்கப் புதையல் இருப்பதாக நினைத்து தோண்டவில்லை; அங்கு முதல் இந்திய சுதந்திரப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கண்டெடுக்கவே தோண்டுகிறோம் என்று மத்திய கலாசார துறை அமைச்சர் சந்திரேஷ் குமாரி கடோச் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டம், தாண்டியா கேரா கிராமத்தில் உள்ள கோட்டைக்குள் 1000 தொன் தங்கம் பூமியில் புதைந்திருப்பதாக ஷோபன் சர்க்கார் என்ற சாமியார் சொன்னதை அடுத்து, அங்கு அகழ்வுப் பணியைத் தொல்லியல் துறை மேற்கொண்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், டில்லியில் வியாழக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் சந்திரே…
-
- 0 replies
- 455 views
-
-
கூடங்குளம் அணு உலை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தனது மின் உற்பத்திப் பயணத்தை தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்வுக்கும் அண்மையில் தூத்துக்குடி கடல் பகுதியில் வளைக்கப்பட்ட அமெரிக்க கப்பலுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பதுதான் ஐ.பி. வட்டாரத்தில் இப்போது ஆழமாக விசாரிக்கப்படும் அபாயச் செய்தி. அமெரிக்காவின் அட்வன் போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ கப்பலை கடந்த 11-ம் தேதி சிறைபிடித்து தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதிலிருந்த 12 இந்தியர்கள் உள்பட 35 பேரையும் பாளை சிறையில் அடைத்தது போலீஸ். கப்பல் எதற்காக இந்திய எல்லைக்குள் வந்தது என்பது குறித்து இதுவரை முழுமையான பதில் இல்லை. அதேநேரம், கப்பல் வந்ததன் நோக்கம் குறித்து க்யூ மற்…
-
- 4 replies
- 661 views
-
-
உலக அளவில் ஆண்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வழுக்கைத்தலை. ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை பார்க்கப்படுகிறது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம். தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை என்றே பார்க்கப்படுகிறது. ஆனால் வழுக்கைக்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக கூறுக…
-
- 13 replies
- 3.7k views
-
-
அவுஸ்திரேலியாவின், நியூ சவுத்வேல்ஸ் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் காட்டுத்தீ, தற்போது தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அரசு அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை, 200 வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகி உள்ளன. கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. உயிர்பலியை தவிர்க்க, பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தீவீரம் அடைந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் இருந்து 3000 தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். கடும் காற்றும், அதிக வெப்பநிலையும் புதிய இடங்களில் காட்டுத் தீயை ஏற்படுத்தி வருவதால், தீயணைப்பு அவுஸ்ரேலிய அரச…
-
- 1 reply
- 485 views
-
-
அணுமின் நிலைய கதிர்வீச்சு குறித்து மக்களின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக புகுஷிமா அணுஉலை அருகே பிடிக்கப்பட்ட மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை பொதுமக்கள் முன்னிலையில் சாப்பிட்டார் ஜப்பான் பிரதமர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் அணு உலைகள் வெடித்து, கதிர்வீச்சு ஏற்பட்டது.பின்னர் உடனடியாக நிபுணர்களை கொண்டு அந்த கதிர்வீச்சு வெளியாகாமல் சீரமைக்கப்பட்டது. ஆனபோதும், இன்னும் கதிர்வீச்சு பயத்தால் அணுஉலைப் பகுதியில் பிடிக்கப்படும் மீன் வகைகளை சாப்பிட மக்களும், பிற உலக நாடுகளும் அஞ்சுகின்றன. எனவே, அவர்களின் அச்சத்தைப் போக்கிடும் வகையில் ஜப்பான் பிரதமர் ஜின்ஜோஅபே, புகுஷிமா அருகே பிடிக்கப்பட்ட கணவாய் உள்ளிட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்காவில் இருந்து போதைப் பொருள் கடத்திய 2 விமானங்களை வெனிசுலா ராணுவம் சுட்டு வீழ்த்தியது மத்திய அமெரிக்காவில் இருந்து தங்கள் நாட்டின் வான் எல்லை வழியாக போதைப் பொருட்களை கடத்தி சென்ற 2 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக வெனிசுலா அறிவித்துள்ளது. வெனிசுலா வழியாக போதைப்பொருட்களை கடத்தி செல்லும் விமானங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ கடந்த 2ம் தேதி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். இன்றிலிருந்து எங்கள் நாட்டின் வான் எல்லையின் மீது பறக்கும் மர்ம விமானங்களுக்கு முதலில் அமைதியான முறையில் தரையிறங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த உத்தரவை மதிக்காத விமானங்கள் உடனடியாக சுட்டு வீழ்த்தப்படும் என போதைப்பொருள் கும்பல்க…
-
- 0 replies
- 720 views
-
-
மத்திய பிரதேச மாநில பழங்குடியின பெண்களிடம் இழிவாக பேசிய ராகுல்காந்தி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு தொடரப் போவதாக பாரதிய ஜனதா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 17ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் சஸ்டோலில் ராகுல்காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் பிரபாத் ஜா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பழங்குடியின பெண்களை பார்த்து பாரதிய ஜனதா ஆட்சியில் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள் யாரும் கிடையாதா என கேட்டதாக பிரபாத் ஜா குற்றம்சாட்டியுள்ளார். பெண்களிடம் பொதுக் கூட்டத்தில் இவ்வாறு பேசிய ராகுல் காந்திக்கு எதிராக வன்கொடுமை சட்டத்தின் கீழ் போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக அவர் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 460 views
-
-
இந்தியாவின் ராணுவ தேவைகளில் ரஷ்யா முக்கிய பங்குதாரராக தொடர்ந்து இருக்கும் என மாஸ்கோவில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். நமது ராணுவத்துக்கு தேவையான போர்க் கருவிகள் மற்றும் போர் விமானங்கள் எல்லாம் முன்பு ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் வாங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது ராணுவ கொள்முதலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விமான படையில் இருந்த ரஷ்ய தயாரிப்பின் ஐ.எல் -76 ரக சரக்கு விமானங்களுக்கு மாற்றாக அமெரிக்காவின் சி-130ஜே ஹெர்குலஸ் மற்றும் போயிங் சி17-குளோப் மாஸ்டர் 3 ரக விமானங்களை இந்தியா சமீபத்தில் வாங்கியது. சில போர் தளவாடங்கள் இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்டன. இது ரஷ்யாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஷ்ய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங…
-
- 2 replies
- 736 views
-
-
மன்மோகன் சிங்கின் ஆட்சி பிடிக்காதவர்கள் உடனடியாக அமெரிக்காவில் குடியேற விசாவுடன் பாஸ்போர்ட்டும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிக்கிறது. என்ன ஆச்சர்யம்! மறுநாள் காலை அனைத்து இந்தியர்களும் பாஸ்போர்ட் வழங்கும் அலுவலக வாசலில் பெரும் வரிசையில் வந்து காத்திருந்தனர். அதில் பெரும் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் என்னவென்றால் வரிசையில் கடைசியாக வந்து நின்றவர் சாட்சாத் மன்மோகன் சிங் அவர்களேதான்! 'என்ன இருந்தாலும் இந்தியநாட்டின் பிரதமராயிற்றே' என்ற மரியாதையில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் வந்து, "பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே தாங்கள் வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லை. முதல் ஆளாக உங்களுக்கு பாஸ்போர்ட் வழங்குகிறோம், உள்ளே வாருங்கள்" என்று மரியாதையோடு கையைப்பிடித்து அழைத்துச் சென்று விசா…
-
- 3 replies
- 722 views
-
-
Scarborough பகுதியில் சைக்கிளில் சென்ற 60 வயது நபர் விபத்தில் சிக்கி உயிர் ஊசல். கனடாவின் Scarborough பகுதியை சேர்ந்த ஆண் ஒருஅர் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. கனடாவின் eastbound on Finch Avenue East near Neilson Road என்ற சாலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி எதிரே வந்த வாகனத்தில் மோதி பலத்த காயமடைந்தார். அவர் தலையில் ஹெல்மட் அணியாத காரணத்தினால் தலையில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 658 views
-
-
$300 மில்லியன் மதிப்புள்ள போதைபொருள் கடத்திய மூன்று கனடியர்கள் மெல்போர்னின் அதிரடி கைது. $300 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய கனடா நாட்டை சேர்ந்த மூன்று நபர்களை நேற்று ஆஸ்திரேலியா போலீஸ் அதிரடியாக கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 650 கிலோ எடையுடையது என்றும் தெரியவந்துள்ளது. கனடாவை சேர்ந்த Catherine McNaughton, 30, Edmond Proko, 46, and James Kelsey, 27 ஆகிய மூன்று நபர்கள் நேற்று மெல்போர்ன் நகரில் ஒரு மர்ம காரில் சந்தேகத்துக்கு இடமாக சென்று கொண்டிருந்தபோது, அவர்களை ஆஸ்திரேலிய போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் 650 கிலோகிராம் எடையுள்ள சுமார் $300 மில்லியன் மதிப்புள்ள போதைப்ப…
-
- 0 replies
- 320 views
-
-
கனடாவில் 17 வயது மனநிலை சரியில்லாத இளம்பெண் மாயமான சிலமணிநேரங்களில் மீட்பு. கனடாவின் Peel என்ற பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் திடீரென மாயமானதால் அவரை தேடும் பணியில் அப்பகுதியின் போலீஸார் நேற்று தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இறுதியில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு அந்த பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டார். கனடாவின் Owens Road in Brampton என்ற பகுதியை சேர்ந்த Fernandez Moonias-Sainnawap என்ற 17 வயது இளம்பெண் திடீரென காணாமல் போனதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்றும், அவருக்கு ஏழு வயதிற்கே உண்டான மனநிலைதான் உள்ளது என்றும் அவரது பெற்றோர்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸார் அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடினர். பின்னர் பொதுமக்…
-
- 0 replies
- 334 views
-
-
இந்திய பிரதமர்களில், அதிகம் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர், முந்தைய பிரதமர்கள் காட்டிலும் வெளிநாட்டு பயணத்திற்காக அதிக பணம் செலவு செய்தவர் என்ற பெருமைகளை மன்மோகன்சிங் பெற்று, மற்ற பிரதமர்களை காட்டிலும் விஞ்சி நிற்கிறார். இன்னும் சொல்லப்போனால், நாடாளுமன்றம் நடக்கும் போதுதான் மன்மோகன்சிங் அதிகமான அளவில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து இந்தியா டூ டே வெளியிட்டுள்ள சிறப்பு செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமர்ந்த காலம் ( 2004 ) முதல் பிரதமர் மன்மோகன் மொத்தம் 70 பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதற்கென மொத்தம் ரூ. 650 கோடி செலவாகியிருக்கிறது. அதிக பட்சம் இரவு பயணத்தை தவிர்த்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பயணத்தின்ப…
-
- 0 replies
- 398 views
-
-
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பிடிபட்ட அமெரிக்க ஆயுத கப்பலில் இருந்து கைதான திண்டுக்கல் வாலிபர் குறித்து கியூ பிரிவு பொலிசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே கடந்த 11ம் தேதி இரவு இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீமேன் கார்டு ஓகியா என்ற அமெரிக்க கப்பல் மடக்கிப் பிடிக்கப்பட்டது. இதில் 10 மாலுமிகள், 25 பாதுகாவலர்கள் இருந்தனர். அவர்களிடம் 35 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கில் தோட்டாக்கள் இருந்தன. இதுதொடர்பாக கியூ பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து கப்பல் கேப்டன் உள்பட 35 பேரை கைது செய்தனர். இவர்களில் 12 பேர் இந்தியர்கள். இதில் ஒருவர் திண்டுக்கல் என்.எஸ்.நகர் தெய்வசிகாமணிபுரத்தை சேர்ந்த தண்டபாணி என தெரியவந்துள்ளது. இ…
-
- 3 replies
- 640 views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 25 வெவ்வேறு இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அண்மைக்காலமாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் உச்சமாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 25 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்தத் தாக்குதல் இரவு முழுவதும் நீடித்தது. இதற்கு இந்தியத் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இம்மோதலில் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த மோதலை பயன்படுத்தி ஊடுருவ முயன்ற தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். http:/…
-
- 4 replies
- 495 views
-
-
அமெரிக்க கப்பலில் பராமரிப்புப் பணியைக் கவனிப்பதற்காக இருந்த தலைமைப் பொறியாளர் நேற்று திடீரென தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரையும், கப்பல் கேப்டனையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக இந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள், பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 35 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கப்பல் பராமரிப்புப் பணிக்காக தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரி என்பவரும், கப்பலின் கப்டன் டட்னிக் வாலன்டைனும் கப்பலிலேயே இருந்தனர். பராமரிப்புப் பணிக்கு கப்பல் நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்ததும் இவர்களும் கைது செய்யப்படுவார்கள் என க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்திருந்தனர். …
-
- 4 replies
- 732 views
-
-
மாலத்தீவில் ஒரு மாத காலத்துக்குள் இரண்டாவது தடவையாக ஜனநாயக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாலத்தீவுவாசிகள் ஒரு சிறிய சுற்றுலாத்தீவுக்குள் இருக்கும் தேர்தல் ஆணையத்துக்குள் நுழைந்த பொலிஸார், நடக்கவிருந்த அதிபர் தேர்தலை தடுத்துள்ளார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடந்த தேர்தலை கடந்த மாதம், வேட்பாளர் பட்டியலில் மோசடி இருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றம் செல்லுபடியற்றதாக அறிவித்தது. இத்தனைக்கும், அந்தத் தேர்தலை வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் அங்கீகரித்திருந்தனர். முன்னாள் அதிபர் நஷீட் அதிபர் தேர்தலுக்கான இரண்டு வாக்காளர்கள் ''வாக்காளர் பதிவை'' அங்கீகரிக்கத் தவறிவிட்டதாகக் கூறி பொலிஸார் இப்போது இந்தத் தேர்தலை நிறுத்தி…
-
- 3 replies
- 468 views
-
-
ஆப்பிரிக்க யானைகள் அடுத்த பத்து வருடங்களுக்குள் 30 நாடுகளில் அழிந்துபோய்விடும் என்பதுதான் விலங்கு பாதுகாப்புக் குழுக்களின் தற்போதைய மிகவும் முக்கியமான எச்சரிக்கை . யானைத்தந்தத்துக்காக பலாயிரக்கணக்கான யானைகள் வருடாந்தம் அழிக்கப்படுவதாகவும், கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு இது அதிகமாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சீனாவில் யானைத்தந்தத்துக்கான தேவை அதிகமாகக் காணப்படுகிறது. இவை குறித்த பிபிசியின் செய்திப் பெட்டகம். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/10/131019_africanelephant.shtml
-
- 0 replies
- 388 views
-