உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
ஜப்பானின் கிழக்குக் கரையோரப் பகுதியை சக்திவாய்ந்த விஃபா சூறாவளி தாக்கியதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் 50 பேரைக் காணவில்லை. ஜப்பானின் இஸு ஒஷிமா தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது டோக்யோவுக்கு தெற்கே உள்ள இஸு ஒஷிமா தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவுகளும் வெள்ளப் பெருக்கும் அங்கு ஏற்பட்டுள்ளன. முன்னர் சுனாமியால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த ஃபுக்குஷிமா அணுஉலையை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையிலும், இந்த சூறாவளியால் அதற்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பல வீடுகளின்மேல் மண்மேடுகள் சரிந்துவிழுந்து மூடியுள்ளன. டோக்யோவில் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ரயில் சேவைகளும் தடைப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் டோக…
-
- 0 replies
- 292 views
-
-
”சீரழிந்த அரசியல் சூழலில் ராகுல் காந்தி எந்த வகையிலும் வேறுபட்டவராகவோ, நம்பிக்கை அளிப்பவராகவோ இல்லை” தோழர் கி.வெங்கட்ராமன் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் பேட்டி! ”சீரழிந்த அரசியல் சூழலில் ராகுல் காந்தி எந்த வகையிலும் வேறுபட்டவராகவோ, நம்பிக்கை அளிப்பவராகவோ இல்லை” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், ‘ஆனந்த விகடன்’ வார இதழில் வெளியான பேட்டியில் தெரிவித்துள்ளார்.. அதன் முழு விவரம்: ராகுல் காந்தியை புதிய நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதமுடியுமா?, 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான மக்களின் அதிருப்திகளை அவரால் எதிர்கொள்ள முடியுமா? பதில் சொல்கிறார், தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன். ”ராகுல்… நச்ச…
-
- 0 replies
- 444 views
-
-
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை தூத்துக்குடி அருகே சிறைப் பிடிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் 35 பேர் மீது நான்கு வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன . அக்கப்பலில் மாலுமிகள் பத்து பேரும் கடற்கொள்ளையரை எதிர்கொள்ளும் வீரர்கள் 25 பேரும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம் பல்வேறு ஆயுதங்களுடன் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த சீ மேன் கார்ட் எனும் அக்கப்பல் மேற்காப்பிரிக்க நாடான சியாரா லியோனில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானதெனத் தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு இந்தக் கப்பல் சொந்தமானது என்று கூறப்படுகிறது சரக்குக் கப்பல்களுக்…
-
- 1 reply
- 461 views
-
-
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஹிந்து மத விழாவொன்றில் ஏற்பட்ட நெரிசலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ரத்தன்கார் நெரிசல் : இறந்தோர் எண்ணிக்கை உயர்வு இம்மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்லும் பாதையில் இருந்த குறுகிய பாலம் ஒன்றை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடக்க முயன்றபோது பலர் நெரிசலில் சிக்கி இறந்தனர். வேறு சிலர் பாலத்துக்குக் கீழே இருக்கும் நதியில் குதித்து நெரிசலில் இருந்து தப்ப முயல்கையில், நதியில் மூழ்கி இறந்தனர். நதியில் மேலும் உடல்கள் இருக்கின்றனவா என்று மீட்புப் பணியாளர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பாலம் இடியப்போகிறது என்ற வதந்திகள் பரவியதால் இந்த நெரிசல் ஏற்பட்டது என்று போலிசார் கூறினர்.…
-
- 0 replies
- 486 views
-
-
'பாய்லின்' புயல் இந்தியாவின் கிழக்கு பிரதேசத்தைத் தாக்கியதை அடுத்து ஏற்பட்ட அழிவில், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் இருக்கின்றனர். அவர்களில் பலர் வீடிழந்தும், வாழ்வாதாரங்களை இழந்துமிருக்கின்றனர். சனிக்கிழமை ஏற்பட்ட கடும் புயல் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பில் 18 பேர் இறந்தனர். பெரிய நிவாரண நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வங்கக் கடலில் வர்த்தகக் கப்பல் ஒன்று மூழ்கியதை அடுத்து அந்தக் கப்பலில் பயணித்த 28 மாலுமிகள் உயிர்காக்கும் படகுகளில் இறங்கி தப்பினர். அவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர். புயல் தாக்கிய ஒதிஷா மாநிலத்தில் மின்சார மற்றும் தொலை தொடர்புக் கம்பிகளை அதிகாரிகள் மீண்டும் நிலை நாட்டி வருவதாக அங்கிருக்கும் பிபிசி செ…
-
- 0 replies
- 459 views
-
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து அளவுக்கு அதிகமான குடியேறிகளை ஏற்றிவந்த நிலையில் கப்பல் மூழ்கி நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவத்தை அடுத்து, மத்திய தரைக்கடலின் தென்பகுதியில் இத்தாலி தனது கடல் ரோந்தை மும்மடங்காக்கியுள்ளது. அப்பகுதியில் விமான ரோந்தும் அதிகரிக்கப்படும். சிசிலி, மால்டா மற்றும் லிபியா ஆகியவற்றின் கடற்கரைகளுக்கு இடைப்பட்ட பகுதில், இந்த மாதம் கப்பல் மூழ்கி பல நூற்றுக்கணக்கானோர் இறந்த இடத்திலேயே இந்த ரோந்துகள் நடைபெறும். அதேவேளை லம்பெதுசா தீவுகளுக்கு 137 குடியேறிகள் இரவு பாதுகாப்பாக படகில் வந்து சேர்ந்துள்ளனர். அடுத்த மாதம் இது குறித்து நடக்கவிருக்கும் மாநாடு ஒன்றில், ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் உதவுமாறு கேட்கப் போவதாக இத்தாலியும் மால்டாவும் கேட்கவுள்ளன. அகதிகள…
-
- 0 replies
- 416 views
-
-
கொல்கத்தா: பாய்லின் புயலில் சிக்கி பனாமா நாட்டு சரக்குக் கப்பலொன்று மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்ற வேளையில், இன்று காலை அக்கப்பலில் பயணம் செய்த ஊழியர்கள் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பாய்லின் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே கரையைக் கடந்தது. கிட்டத்தட்ட 23 பேரை பலிவாங்கிய இந்தப் புயலினால் ஏற்பட்ட சேதாரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்தப் புயலில் சிக்கிய பனாமா நாட்டு சரக்குக் கப்பலொன்று கடலில் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த 11ம் தேதி மேற்கு வங்கத் துறைமுகமான சாகரிலிருந்து சீனாவிற்கு புறப்பட்ட எம்.வி பிங்கோ என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கப்பலில் 8,000 டன் இரும்புத்தாதுவுடன், 19 சீன நாட்டவரும், ஒரு இந்தோனேசிய நாட்…
-
- 0 replies
- 441 views
-
-
ஜெருசலேம்: காசாவிலிருந்து இஸ்ரேல் வரைத் தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்றினை இஸ்ரேல் ராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டில்,இதேபோல் தோண்டப்பட்ட சுரங்கப்பாதை வழியே இஸ்ரேலிய ராணுவ வீரரான கிலா ஸ்காலிட் என்பவரைக் ஹமாஸ் ராணுவத்தினர் கடத்திச் சென்று ஐந்து வருடம் காவலில் வைத்திருந்தனர். இந்நிலையில் ஹமாஸ் பிரிவினர் ஆட்சி செய்யும் பகுதியான காசாவிலிருந்து இஸ்ரேல் வரை தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்றின் நுழைவு வாயிலை இஸ்ரேல்-காசா எல்லையை ஒட்டியுள்ள கிபுட்சு என்ற இடத்தில் இஸ்ரேலிய ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்தச் சுரங்கப்பாதையானது இஸ்ரேல் ராணுவத்தினர் கண்டுபிடிக்கும் வரை…
-
- 0 replies
- 436 views
-
-
'அல்லா' என்ற வார்த்தையை முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மலேசிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. ' அல்லா' சர்ச்சை கீழ் நீதிமன்றம் ஒன்று இந்த வார்த்தையை கிறித்தவர்கள் பயன்படுத்தலாம் என்ற தீர்ப்பை இது தள்ளுபடி செய்கிறது. இந்த வார்த்தை கிறித்தவ மதத்தில் இல்லை என்று கூறிய நீதிமன்றம், முஸ்லீம்கள் அல்லாதோர் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதிப்பது சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்கும் என்று கூறியது. மலேசிய கிறித்தவர்கள் இந்த 'அல்லா' என்ற அரபு வார்த்தை இஸ்லாத்துக்கு முந்தையது என்றும் இதை தாங்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்றும் , இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாங்கள் மேல் முறையீடு செய்யப்போவதாகவும் கூறியிருக்கின்றனர். பழமைவாத முஸ்ல…
-
- 0 replies
- 507 views
-
-
தூத்துக்குடி அருகே சுற்றிவளைக்கப்பட்டது அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவன கப்பல் என்றும் கடல் கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை பாதுகாப்பதற்காகவே ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனா மொழியிலான ‘சீ மேன் கார்டு ஓஹியோ' என்ற பெயர் பொறித்த மர்ம கப்பல் ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டது. சீனா கப்பல் என்பதால் பல்வேறு துறை அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர விசாரணையையை நடத்தினர். கடைசியில் அமெரிக்காவின் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவன கப்பல் அது என்றும் கடல்கொள்ளையர்களிடம் இருந…
-
- 2 replies
- 592 views
-
-
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக வெளியான தகவலால் தொல்லியல்துறை அங்கு ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் கேடா என்ற கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற மன்னர் வசித்த கோட்டை இருக்கிறது. அவர் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர். தற்போது அந்த மன்னரின் கோட்டை சிதிலமடைந்துள்ளது. ஆனாலும் மன்னரை மக்கள் இன்னமும் மறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளூர் சாது ஒருவர் தமது கனவில் மன்னர் தோன்றி கோட்டையில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக கூறினார் என்று தெரிவித்தார். ஆனால் இதை யாரும் நம்பத் தயாரில்லை. இருப்பினும் மத்திய இணை அமைச்சர் சரண் தாஸ் மகத்தி…
-
- 0 replies
- 639 views
-
-
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் நடந்த பொதுத் தேர்தலில் பெருந்தோல்வியைச் சந்தித்த தொழிற்கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் தெரிவாகியுள்ளார். கட்சியின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் நடந்த வாக்குப் பதிவிலும் பில் ஷோர்ட்டன் வெற்றிபெற்றுள்ளார் முன்னாள் கல்வியமைச்சர் பில் ஷோர்ட்டன் தொழிற்கட்சியின் புதிய தலைவராகியுள்ளார். வழமையில் தொழிற்கட்சியின் செனட்டர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே கட்சித் தலைமையை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவில் கலந்துகொள்வார்கள். ஆனால் முதற்தடவையாக, இம்முறை புதிய தலைவர் கட்சியின் அனைத்து உறுப்பினர்களாலும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தொழிற்கட்சியின் அரசியல்வாதிகள் மத்தியில் ஷோர்ட்டனுக்கே அதிக ஆதரவு இருந்துள்ளது. மற்றைய வேட்பாளரான அந்தனி அல்பனேஸுக்கு கட்…
-
- 0 replies
- 424 views
-
-
உள்நாட்டினருக்கு வேலை இல்லை. இந்நிலையில், வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதற்கு சிங்கப்பூர் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி வேலைவாய்ப்புக்கான விளம்பரம் அரசு வேலை வங்கியின் ஊடாக மட்டுமே வெளியிடப்பட வேண்டும். இந்த விளம்பரமானது ஒரு நிறுவனம் வெளிநாட்டு நபரை வேலைக்கு அமர்த்துவதற்காக பெறும் வேலைவாய்ப்பு அனுமதிக்கு (எம்ப்ளொய்மெண்ட் பாஸ்) விண்ணப்பிப்பதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட வேண்டும். அத்துடன், இதுவரை வெளிநாட்டினருக்கு 3,300 டொலராக இருந்த ஆரம்பச் சம்பளம், ஜனவரி 2014 முதல் 3,000 டொலராக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மனிதவளத்துறை அமைச்சர் டண் சுவான் ஜின், அரசு விதித்துள்ள இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மூலமாக சிங்கப்பூர் மக்களுக்கு வே…
-
- 0 replies
- 624 views
-
-
பேஸ்புக் பாஸ் மார்க் ஸூக்கர்பர்க்கை வீட்டில் நிம்மதியாக இருக்க விடுகிறார்கள் இல்லை. அதனால், தமது 7 மில்லியன் டாலர் வீட்டைச் சுற்றியுள்ள 4 வீடுகளை 30 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியிருக்கிறார். புதிதாக வாங்கியுள்ள வீடுகளை இடித்துவிட்டு, மார்க் தற்போது வசிக்கும் 5 பெட்ரூம் வீட்டை பெரிதுபடுத்தி... அதில்தான் மார்க்கின் திடீர் திருமணம் நடந்தது. ஒரு மாளிகையாக அமைக்கும் நோக்கம் ஏதுமில்லை அவருக்கு. அப்புறம் ஏன் மற்ற வீடுகளை வாங்கியிருக்கிறார்? எல்லாம் ஒரு ரியல் எஸ்டேட்காரர் செய்த விளையாட்டுதான்! மார்க் வசிக்கும் வீட்டை சுற்றியுள்ள வீட்டு உரிமையாளர்களை தொடர்புகொண்ட ரியல் எஸ்டேட்காரர், அந்த வீடுகளின் மார்க்கெட் விலையைவிட அதிகம் கொடுத்து வாங்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். அவர…
-
- 0 replies
- 621 views
-
-
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சுற்றிவளைக்கப்பட்டது சீனாவின் போர்க் கப்பல் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனா பெயர் பொறித்த மர்ம கப்பல் ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டு தற்போது தூத்துக்குடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. சீனா கப்பல் என்பதால் பல்வேறு துறை அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர விசாரணையையை நடத்தி வருகின்றனர். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பதால் அங்கிருந்து இந்திய கடற்பரப்புக்குள் அந்த கப்பல் ஊடுருவியதா? அல்லது சீனா வர்த்தக கப்பலுக்கு பாதுகாப்பாக வந்ததா? என்றும் அந்த கப்பலில் ஆயுதங்கள் ஏதேனும…
-
- 11 replies
- 1.5k views
-
-
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவ, பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐயும் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் ராணுவமும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது இருபுறமும் கூறாக ஆயுதத்தை போன்றது. அது பாகிஸ்தானையே பதம் பார்த்துவிடும். எல்லையில் அமைதி ஏற்பட இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் ராணுவம் அடியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 165 முறை சண்டை நிறுத்தத்தை மீறியுள்ளது. எப்போதெல்லாம் சண்டை நிறுத்தம் மீறப்படுகிறதோ,…
-
- 8 replies
- 745 views
-
-
கனடாவில் கௌரவம் பெறும் விபத்தில் இறந்து போன தமிழ் பெண்! ஒன்ராரியோ மாகாண சபையில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவரை கௌரவிக்கின்ற வகையில் சட்ட திருத்தம் ஒன்று நிறைவேற்றப்படுகின்றது. மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை என்கிற பெண் கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி வாகன விபத்தில் இங்கு அண்மையில் துரதிஷ்டமாக இறந்து உள்ளார். இவர் பயணித்த பஸ் வண்டி மீது ட்ரக் வண்டி மோதியது. பொறுப்பற்ற வாகன ஓட்டமே மரணத்துக்கு காரணம் ஆனது. இந்நிலையில் இம்மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவரான பாஸ் பால்கிசூன் தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமாக இதை சபைக்கு சமர்ப்பித்து உள்ளார். இது நிறைவேற்றப்படுகின்ற பட்சத்தில் மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை சட்டம் என்று அழைக்கப்படும். இது நெடுஞ்சாலைகள் போக்குவரத்து சட்டத்தில் கொண்டு வரப்படுகின்ற…
-
- 2 replies
- 734 views
-
-
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பெரிய புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகிவருகிறார்கள். ஒதிஷா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை பைலின் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவருகிறார்கள். இந்தப் புயலின்போது, மணிக்கு 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும், கடலுக்கு அருகே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ராணுவப்படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1999ல் ஒதிஷாவைத் தாக்கிய பெரிய புயல் ஒன்…
-
- 1 reply
- 575 views
-
-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வருகிற 2016ம் ஆண்டில் தனக்கு 70 வயது ஆகும் போது அரசியலில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாகவும், இதனால்தான் ராகுல் காந்திக்கு கட்சியில் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் ஒரு புத்தகத்தில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த கருத்தை காங்கிரஸ் மறுத்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறுகையில்; நான் அந்த செய்தியை படிக்கவில்லை. செயல்திறன்மிக்க சோனியா காந்தி தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். எனவே யாரும் அப்படி எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=94625&category=IndianNews&language=tamil
-
- 4 replies
- 567 views
-
-
சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பல நகரங்களில் இன்றைய வெயில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்தது. சிட்னி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. சிட்னியில் 43.3 டிகிரி, விமான நிலையத்தில் 42.6 என பல நகரங்களில் வெப்ப அளவு 40 டிகிரியை தாண்டிதான் இருந்தது. வெயிலின் காரணமாக சிட்னி நகரில் மோனோ ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டது. சிக்னல் இணைப்பிற்கான கேபிள்கள் வெயிலின் வெப்பம் தாகாமல் இளகின. இதனால் பல இடங்களில் சிக்னல் வேலை செய்யவில்லை. மற்றொரு இடத்தில மின்சார ரயிலில் உள்ள சாதனம் வெயிலின் வெப்பம் தாங்காமல் பழுதானதால் ரயில் பாதியிலேயே நின்றது. இதனால் சுமார் 250க்கும் மேற்ப்பட்ட பயணிகள் ரயிலில் பல மணி நேரம் ச…
-
- 0 replies
- 477 views
-
-
லிபியாவின் பிரதமர் அலி ஸைடான் ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் திரிபோலியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதுடன், அவர் முன்னாள் போராளிகளினால் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அந்த நாட்டு அரசாங்க இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%…
-
- 1 reply
- 438 views
-
-
இந்திய அரசு, இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் , பயணிகளுக்கு விசா வழங்குவதில் சில விதிகளை தளர்த்தியிருக்கிறது. அமெரிக்கா உட்பட 40 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய விசா விதிகள் தளர்வ அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே, இணையத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு, இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் , விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பில் தெற்காசிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. ஆனால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள 60வயதுக்கு மேற்பட்…
-
- 1 reply
- 717 views
-
-
அமெரிக்க-ஜப்பான் அமைச்சர்கள் கூட்டம் சீனாவிற்கு எதிரான இராணுவ நிலைப்பாட்டை வலுப்படுத்துகின்றன US-Japan ministerial meeting strengthens military stance against China நேற்று டோக்கியோவில் “2+2” என அழைக்கப்பட்ட கூட்டம் —அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் மற்றும் ஜப்பானிய வெளியுறவு மந்திரி ப்யூமியோ கிஷிடா மற்றும் பாதுகாப்பு மந்திரி இட்சுநோரி ஓனொடெரா—சீனாவுடனான அமெரிக்க ஜப்பானிய இராணுவ அழுத்தங்களை அதிகரிக்கும் என்ற உடன்பாடுகளுடன் முடிவுற்றன. அமெரிக்க அரசாங்க பணிநிறுத்தம் காரணமாக, ஜனாதிபதி பாரக் ஒபாமா அடுத்த வாரம் தென் கிழக்கு ஆசியாவிற்கு வரவிருந்த வருகையை குறைத்து, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவிற்கு திட்டமிட்டிருந்த பயணங்களையும் வ…
-
- 0 replies
- 384 views
-
-
ஹிக்ஸ் போசன் கொள்கை பற்றிய ஆராய்ச்சிக்காக இரு விஞ்ஞானிகளுக்கு இந்த வருடத்துக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த பிரான்ஸுவா எங்கிலர் ஆகிய இருவருக்கும் இந்தப் பரிசு வழங்கப்படுகின்றது. பிரபஞ்சத்தின் அடிப்படை மூலக்கூறுகளுக்கும் ஏன் எடை உள்ளது என்பது குறித்து விளக்குவதற்கான ஒரு பொறிமுறையை 1960களில் பிரேரித்த பல பௌதீக விஞ்ஞானிகளில் இவர்களும் அடங்குவார்கள். இறுதியாக, சுவிட்சர்லாந்தில், செர்ன் என்னும் இடத்தில் அணுமோதலுக்கான பெரிய பரிசோதனைக் கூடத்தில் 2012 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் போசன் (கடவுள் ) துகள்களை, அந்த பொறிமுறைதான் முதன் முதலில் எதிர்வு கூறியிருந்தது. http://www.bbc.co.uk/tami…
-
- 0 replies
- 454 views
-
-
அந்தமான்- நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2011ம் டிசம்பரில் தானே புயலின் கோரத்தாண்டத்தில் கடலூர் மாவட்டம் சிக்கி முற்றிலும் சேதமடைந்தது கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் உருவான‘நிலம்' புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. தற்போது உருவாகி வரும் புதிய புயல் மேற்கு வடமேற்காக நகர்ந்து ஆந்திராவில் கரை கடக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில தினங்களில் புயல் ஆந்திராவை தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புதிய புயல், கடந்த ஆண்டு உருவான நீலம் புயலை விட வலிம…
-
- 1 reply
- 543 views
-