Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை விமர்சிக்கும் நரேந்திர மோடி அவரை எதிர்த்து சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாரா என்று அம்மாநில அமைச்சர் ராஜ்குமார் செளகான் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் செயல்பாடுகளை குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி அண்மையில் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு ஷீலா தீட்சித்தும் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் ஷீலா தீட்சித் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ராஜ்குமார் செளகான், நரேந்திர மோடி மக்களை பிரிக்கக் கூடிய சக்தி. அவருக்கு துணிச்சல் இருந்தால் ஷீலா தீட்சித்தை எதிர்த்து டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடட்டும். மோடியின் அரசியல் இந்த சமூகத்தை பிளவுபடுத்தக் கூடியது. ஆகையால் மோடியின் ம…

  2. டெல்லி: பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக சன் டிவி மற்றும் பி.எஸ்.என்.எல்.க்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது. வழக்கு என்ன? 2004-2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது அவரது சென்னை போட் கிளப் சாலையில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரில் இணைப்பகம் போல செயல்பட்டு வந்தது. இந்த இணைப்புகளை தயாநிதி மாறனின் சகோதரருக்குச் சொந்தமான சன் டிவி அலுவலகத்துடன் பூமிக்கு அடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் மூலம் சட்டவிரோதமாக இணைத்து சகோதரர் நிறுவனத்தின் வர்த்தகத் தேவைக்கு பயன்படுத்தினார் என்பது புகார். இது தொடர்பாக…

  3. பெங்களூர்: கர்நாடகாவின் கோலார் தங்க சுரங்கத்தை ஏற்று நடத்த வாய்ப்பு கிடைத்தால் தமது நிறுவனம் அதை சிறப்பாக செயல்படுத்தும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகின் மிக ஆழமான 2வது தங்க சுரங்கம் கோலார் தங்க வயலாகும். இந்த ஆழமான சுரங்கத்தில்தான் 121 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தமிழர்களின் அயராத உழைப்பால் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் 2001ஆம் ஆண்டு தங்கத்தின் இருப்பு குறைவு, பிரித்தெடுக்க ஆகும் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கோலார் தங்க சுரங்கம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. திடீரென தங்க சுரங்கம் மூடப்பட்டதால் பணியாற்றிய பல்லாயிரம் ஊழியர்களும் சார்ந்திருந்த லட்சக்கணக்கான தமிழர்களும் வேலை வாய்ப்புகளை இழந்து பெரும் துயரத்தில் வாழ…

  4. மாட்டுத் தீவன ஊழலில் பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. லாலு பிரசாத் யாதவ் இதே வழக்கில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என 44 பேர் மீது குற்றங்காணப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை வரும் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும். தீர்ப்பை அடுத்து லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி மத்திய சிறையில் சரணடைந்தார். கடந்த 17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் மருந்துகளை வாங்குவதில் ஊழல் நடைபெற்றதாக மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த தீர்ப்பால் நீண்ட சிறை தண்டனையை எதிர்கொள்ளும் சூழலில் லாலு பிரசாத் யாதவ் உள்ளார். சமீபத்தில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பி…

  5. பங்களாதேஷில் இன்னொரு மூத்த எதிர்க்கட்சித் தலைவர், சலாலுதீன் காதர் சௌத்ரி, 1971ல் நாடு பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற நடத்திய போரின் போது, போர்க்குற்றங்கள் இழைத்த குற்றம் புரிந்ததாக சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. சலாலுதீன் காதர் சௌத்ரி-- மரண தண்டனையை எதிர்நோக்கும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இனப்படுகொலை, கொலை, கடத்தல் ஆகிய குற்றங்களை அவர் செய்ததாகக் கண்டறியப்பட்டு, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது இந்த சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் முதல் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் மூத்த பிரமுகரும் இவர்தான். தனது கணவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று சௌத்ரியின் மனைவி கூறினா…

  6. வத்திக்கானை சீர்திருத்தம் செய்யும் வழிகளை ஆராய ஒரு சிறப்பு கர்தினால்கள் குழுவுடன் போப் பிரான்சிஸ் தனது முதல் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். சீர்திருத்த முயற்சிகளில் போப் பிரான்சிஸ் வத்திக்கான் ஜி-8 என்றறியப்படும் இந்த சர்வதேசக் குழு ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மத்திய அரசௌ மாற்றி வடிவமைப்பது குறித்து ஆராயும். இதில் கத்தோலிக்கத் தலைமையான போப் என்ற பதவியைப் பீடித்துள்ள குஷ்ட நோய் என்று போப் பிரான்சிஸ் சமீபத்தில் வர்ணித்த வத்திக்கான் நீதிமன்றமும் அடங்கும். இதற்கிடையே, வத்திக்கான் வங்கி, தனது முதன் முதலான, விவரமான கணக்கு வழக்குகளைப் பிரசுரித்திருக்கிறது. 2012ம் ஆண்டில் 117 மிலியன் டாலர்கள் என்ற அளவில்,தனக்கு நான்கு மடங்கு வருமான அதிகரிப்பு இருந்ததாக அது க…

  7. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களை மூட தற்காலிகமாக மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊதியம் இல்லாமல் 6 மாதங்களுக்கு விடுமுறையில் செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 17 வருடங்களில் அரசு நிறுவனங்களை மூடுவது இதுவே முதல் முறை. அரசின் நடவடிக்கையில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்ப ட்டுள்ளது. பட்ஜெட்டில் சுகாதார நடவடிக்கைகளூக்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் தரவில்லை. நிதி நிலை யை கருத்தில் கொண்டு வெள்ளை மாளிகை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ளை மாளிகையின் இந்த நடவடிக்கையால் 7.83 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=108498 அமெரிக்க அரசு முடங்கி…

  8. இந்தியப் பெண்கள் வாடகை தாய்களாகி உலகம் பூராவும் இருந்து வருபவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள். இதன் மூலம் இந்தியா கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆண்டுக்கு வரமானமாக ஈட்டிக்கிறதாம். அதேவேளை இது இந்தியாவை குழந்தை பிறப்பிக்கும் தொழிற்சாலை என்று உலகிற்கு இனங்காட்டுகிறதாம். Commercial surrogacy is estimated to be worth more than $1bn a year in India. While pregnant, some surrogate mothers live in dormitories - which critics call baby factories. உலகில் கலாசாரம்.. பண்பாடு.. புராணம்.. வேதம்.. என்று கட்டிப்புரளும் ஒரு நாட்டில் தான்.. ஊழல்.. எயிட்ஸ்.. சுகாதாரமின்மை.. கலப்படம்.. தரமின்மை.. சனத்தொகைப் பெருக்கம் என்று பல…

  9. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனீய ஆட்சிக்காலத்தில் காணப்படும் அனைத்துவித லஞ்ச லாவண்யங்களும் காணாமல் போகும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தனர். சரியாகச் சொல்லவேண்டுமானால் அரசுத்துறைகளில் ஊழலை ஒழிக்கும் வகையில் 1941லேயே The Special Police Establishment என்ற ஓர் அமைப்பு கூட ஏற்படுத்தப்பட்டது. ஆனால் சட்டங்கள், அமைப்புக்கள் எதுவும் அரசியல் ஊழலைக் கட்டுப்படுத்தவில்லை. காந்தியின் கோரிக்கைக்கும் மதிப்பில்லை ஆனால் மக்களுடன் மக்களாக ஆட்சியாளர்கள் கலந்து பணியாற்றவேண்டுமானால் ஆடம்பர பங்களாக்கள் கூடாது, எளிய இல்லங்களிலே…

  10. தமிழ் தொலைக்காட்சி ( நேரடி ஒளிப்பரப்பு ) http://www.puthiyathalaimurai.tv/ http://www.thanthitv.com/ மேலும் ஈழம் பற்றிய செய்திகளை கனடா , ஐரோப்பா நாடுகளில் ஒளிப்பரப்பும் தொலைக்காட்சிகளை இங்கே பதிவு செய்ய கோருகிறேன் !

  11. 'முட்டாள்தனமான அவசர சட்டம்'- ராகுல் விமர்சனத்தால் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா? டெல்லி: தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டத்தை முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளதால் பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தமக்கு ஏற்பட்ட அவமானம் என்று கருதுவதால் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி ஆளும் காங்கிரஸிலும் எதிர்ப்பு எழுந்தது. அதுவும் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்…

  12. மகளின் காதல் விவகாரத்திற்கு பயந்து தாய் தந்தையர் வீட்டை விட்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோட்டை சேர்ந்தவர் துரைசாமி. இவது மகள் கவிதா. இவரும் கொக்காரப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காதலைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் கவிதா தனது காதலைக் கைவிட மறுத்து விட்டார். அதோடு நீங்கள் எவ்வளவு எதிர்த்தாலும் பிரகாஷைத்தான் மணப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது என்றும் பிடிவாதமாக கூறியுள்ளார். இதனால் கடந்த 19ம் திகதி குலதெய்வம் கோவிலுக்குப் போவதாக கூறி விட்டு மனைவி விஜயாவுடன் வெள…

  13. மண்ணில் புதையுண்டவர்களை கண்டறியும் ரேடார் தொழில்நுட்பம் மண்ணில் புதையுண்டு போகும் மக்களை ரேடார் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியலாம் என நாசா மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் தூரத்தில் உள்ள பொருட்களை சிறிய ரேடார் சாதனத்தின் மூலம் நாசா விஞ்ஞானிகள் தெரிந்து கொள்கின்றனர். இந்நிலையில் இதே நுட்பத்தை பயன்படுத்தி எதிர்பாராத விதமாக மண்ணில் புதையுண்டு போகும் நபர்களை கண்டறியலாம் என தெரிவித்துள்ளனர். இந்தக் கருவியின் புதிய மாதிரியானது அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து செயல்படும் விண்வெளி மைய நிறுவனத்தின் நிபுணர்களிடம் பரிசோதித்துக் காட்டப்பட்டது. பேரழிவு மற்றும் அவசரகாலங்களில் தனி …

  14. திருச்சி: குஜராத் மற்றும் தமிழக மீனவர்களை பாகிஸ்தானும் இலங்கையும் கைது செய்ய பலவீனமான மத்திய அரசுதான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் இன்று நடைபெற்றை இளந்தாமரை மாநாட்டில் பங்கேற்ற நரேந்திர மோடி தொடக்கத்தில் சில நிமிடங்கள் தமிழில் பேசினார். தமிழ் மண்ணே வணக்கம்! பெரியோர்களே! தாய்மார்களே! வாலிப சிங்கங்களே அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாடு பெருமை உடைய நாடு. கம்பன், வள்ளுவர் பிறந்த பூமி. திருச்சி தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் மாவட்டம். மலைக்கோட்டையும் காவிரியும் கலந்து இருக்கும் மாவட்டம். சோழர்களின் தலைநகரம் உறையூர் இருக்கும் திருச்சி. இந்த நகரில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் வணக்கம் என்…

  15. போபாலில் நடைபெற்ற பாரதிய ஜனதா ஜனதாவின் பொது கூட்டத்தில் மூத்த தலைவர் அத்வானி காலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடிய அந்த கூட்டத்தில் மோடி அத்வானியின் காலில் விழுந்தார். பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அத்வானி, கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு அதிருப்தி கடிதத்தை அனுப்பினர். கடந்த 15ந் தேதி நடைபெற்ற ராம்ஜெத் மாலனி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற மோடியும், அத்வானியும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் சென்றனர். இதனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆர்.…

  16. போபால்: காங்கிரஸை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தியின் கனவை லோக்சபா தேர்தலில் நிறைவேற்றுவோம் என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிப்போம். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான அலையே வீசுகிறது. நிச்சயம் மத்தியில் ஆட்சி அமைப்போம்.அனைத்து கருத்து கணிப்புகளுமே பாஜக முதல்வர்களான ரமண்சிங், சிவ்ராஜ்சிங் செளகானைப் பாராட்டியே வெளியாகின்றன.மத்திய பிரதேசத்தில் 10 ஆண்டுகால அதிகாரப் பசியில் காங்கிரஸ் அலைகிறது.. அதனாலேயே மத்திய பிரதேச அரசின் வளர்…

  17. காஷ்மீரில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்து வரும் பதற்ற நிலையும், தாக்குதல்களும் எல்லையின் இரு புறத்திலும் கண்ணீரை அதிகரித்திருக்கிறது. எல்லைக் கோட்டால் பிரிந்திருக்கும் ஒரு குடும்பம் இரு நாடுகளின் பிரதமர்களும், ஐநா பொதுச்சபை சந்திப்பின் போது நேரடியாக சந்தித்துப் பேசவுள்ளார்கள். அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து அவர்கள் பேசக்கூடும். ஆனால், கடந்த பத்து வருடமாக இருக்கும் மோதல் நிறுத்தத்தை மீறி, இந்த வருடத்தில் அதிகரித்திருக்கும் ஷெல் தாக்குதல்களும் பதற்றமும், அங்கு எல்லையில் இருபுறமாகப் பிரிந்து கிடக்கும் உறவுகளின் சோகத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. அண்ணன் ஒரு புறம் தங்கை எல்லையின் மறுபுறம், கணவர் ஒருபுறம், மனைவி மறுபுறம் என்று பல கிராம மக்கள் எல்லைக் கோட்டால்…

  18. நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் 5 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டம் வரும் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள இன்று முற்பகல் புறப்பட்டுச் சென்றார். நாளை மறுநாள் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் சந்திக்கிறார்.ஒபாமாவும் மன்மோகன்சிங்கும் மேற்கொள்ளும் 3வது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது,இரு தலைவர்களும் ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்டவை குறித்து குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆண்டு அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்படுவது குறித்தும் இருவரும் விவாதிக்க இருப்ப…

  19. போபால்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் பணவீக்க விகிதமும் ஊழலும் அதிகரித்துவிட்டது என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் சாடியுள்ளார். போபாலில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் ராஜ்நாத் பேசுகையில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியை உருவாக்க பாரதிய ஜனதா தொண்டர்கள் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். பாரதிய ஜனதா தொண்டர்களின் கடுமையான உழைப்பு மட்டும்தான் நரேந்திர மோடியை நாட்டின் பிரதமராக்கும். மத்திய பிரதேசத்தில் நல்லாட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான். கனவில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டில…

  20. போபால்: மாநிலத்தில் நல்லாட்சி வழங்குவதைப் போல மத்தியில் நல்லாட்சியை பாரதிய ஜனதா வழங்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற பாரதிய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான், உமாபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து அவரை பிரதமர் வேட்பாளராக அத்வானி அறிமுகப்படுத்தினார். அப்போது கூட்டம் மோடியின் பெயரை உச்சரித்து ஆர்ப்பரித்தது. பின்னர் மோடி, அத்வானி காலை தொட்டு ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து பேசிய அத்வானி, இதுதான் உண்மையான மகா கும்பமேளா.. இந்த உலகி…

  21. ஹைதராபாத் இணைப்பு: அத்துமீறல்கள் குறித்து வெளிவராத அறிக்கை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 செப்டம்பர், 2013 - 16:10 ஜிஎம்டி ஹைதரபாத் கலவரங்கள் -- வெளிவராத அறிக்கை இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட போது, இடம்பெற்ற வகுப்பு கலவரங்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது பெரும்பாலும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நடந்தது. ஆனால் அதற்கு ஒராண்டுக்கு பிறகு தென் இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இதே போன்று ஏற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் வெளி உலகுக்கு தெரியாமல் இன்று வரை ரகசியமாகவே உள்ளது. இது நடந்தது 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில். படுகொலைகள் அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தென் இந்தியப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர்…

  22. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பினரைத் தனிமைப்படுத்தும் முயற்சியொன்றில் , சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் குழு ஒன்று, தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கெதிராக கருத்துத் தெரிவித்துள்ளது. 'தற்கொலைத் தாக்குதல்கள் இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்டவை அல்ல' ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த மாநாடொன்றில் பேசிய இந்த அமைப்பினர், தற்கொலைத் தாக்குதல்கள் இஸ்லாத்தால் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூறினர். ஆப்கானிய அரசு தாலிபான் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை மூலமான உடன்பாடொன்றை எட்ட முயன்று கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரசு இது போன்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கெதிராக மத ஆணை ( பாத்வா) ஒன்றைப் பிரகடனம் செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. http://www.bbc.co.uk/tamil/global/2013/09/1…

  23. உலகின் மிகப்பெரும் சதுப்புநிலக் காடுகளான சுந்தரவனக்காடுகளுக்கு அருகில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஒரு ஆலை அமைக்கப்படுவதற்கு எதிராக ஐந்து நாள் போராட்டம் ஒன்றினை நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வங்கதேசத்தில் தொடங்கியுள்ளனர். சுந்தரவனக்காடுகளில் அனல் மின் நிலையத்திட்டத்துக்கு எதிராக நெடும்பயணம் இது தொடர்பில் தலைநகர் டாக்காவில் ஒரு பேரணியை நடத்திய அவர்கள் அதன் பின்னர், நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள சுந்தரவனக்காடுகளை நோக்கிய தமது நெடிய பயணத்தை தொடங்கினர். சுந்தரவனப் பகுதி யுனெஸ்கோ அமைப்பால், உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒரு இடமாகும். அங்கு அமைக்கப்படவுள்ள அந்த அனல் மின் நிலையம், அந்தப் பகுதியில் சுற்றுச் சூழலை பாதிக்கும் என்று அவ…

  24. இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட போது, இடம்பெற்ற வகுப்பு கலவரங்களில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இது பெரும்பாலும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நடந்தது. ஹைதரபாத் கலவரங்கள் -- வெளிவராத அறிக்கை ஆனால் அதற்கு ஒராண்டுக்கு பிறகு தென் இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் இதே போன்று ஏற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் வெளி உலகுக்கு தெரியாமல் இன்று வரை ரகசியமாகவே உள்ளது. இது நடந்தது 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில். படுகொலைகள் அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தென் இந்தியப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். சிலர் இந்திய இராணுவத்தினரால் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் அப்போது அரசால் அமைக்கப்பட்ட ஒரு விசாரணை…

  25. சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையின் ஏற்பாட்டில் 22-09-2013 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை "சட்டமும் நீங்களும்" இலவச கருத்தரங்கு சிங்கப்பூர் வில்கி சாலையில் அமைந்துள்ள கப்லன் உயர்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. சிங்கப்பூர் கலைப்பித்தர்கள் கழகத்தின் தலைவரும் வழக்கறிஞருமான நாவரசர் திரு ஆர். கலாமோகன் இக்கருத்தரங்கை நடத்தினார். முதலாளி தொழிலாளி உறவு, வர்த்தக முறைகள், சாலை விபத்து, வேலையிட விபத்து, கடன் விதிமுறைகள், உத்தரவாதக் கையெழுத்து உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை விளக்கினார். கேள்வி பதில் அங்கமும் இடம் பெற்றது. சங்கத்தின் செயலாளர் அப்துல் சுபஹான், வழக்கறிஞர் திரு கலாமோகனுக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.