உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
தமிழ்நாட்டின் போடிநாயக்கனூர் பகுதியில் இருக்கும் வங்கிக் கிளை ஒன்று அந்தக் கிளை மூலம் கல்விக்கடன் பெற்று, கடனைத் திரும்பத்தராத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்தியதாக , மாணவர்கள் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நட்த்தியதாக செய்திகள் வந்தன. இந்த நடவடிக்கை “முற்றிலும் தவறான ஒன்று, மனித நேயமற்ற ஒரு செயல்” என்று கூறும் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வறுமை காரணமாக மாணவர்கள் மேல் படிப்பு படிக்க முடியாமல் போவதற்கு அரசின் கொள்கைகளே காரணம் என்ற வகையில் , அவர்களுக்கு கடன் வழங்குவது சரியல்ல, மாறாக அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என்றார். வங்கி மூலம் கடன் வழங்குவது என்ற முடிவெடுத்தாலும், அதற்கு உத்தரவாதம் தரும் பொ…
-
- 0 replies
- 344 views
-
-
டெல்லி: இந்திய விமானப் படைக்கு இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்யதில் எந்த ஒரு விதியையுமே பின்பற்றவில்லை என்று அதிரடியாக மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம்சாட்டியுள்ளது. இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான கணக்காய்வு அறிக்கை இன்று நாடாளுனன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாதுகாப்பு தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கென வகுக்கப்பட்ட விதிகள் இந்த கொள்முதலில் பின்பற்றப்படவில்லை. 2006ஆம் ஆண்டு பாதுகாப்பு தளவடா கொள்முதல் விதி, 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட கொள்முதலுக்கு முந்தைய பரிசீலனை வேண்டுகோள் என அனைத்துமே இந்த கொள்முதலில் மீறப்பட்டுள்ளன என…
-
- 2 replies
- 324 views
-
-
இம்பால்: மணிப்பூரில் மாநிலப் பிரிவினை கோரி நாகா இன மக்கள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருவதால் அம்மாநிலத்தின் பெரும்பகுதி முடங்கிப் போயுள்ளது. மணிப்பூரில் வாழும் நாகா இனத்தவர் பகுதிகளை நாகாலாந்துடன் சேர்க்க வேண்டும் என்பது ஐக்கிய நாகா கவுன்சிலின் கோரிக்கை. இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் சேனாபதி, உக்ருல், சண்டல், டமங்லாங் மாவட்டங்கள் ஸ்தம்பித்து போயுள்ளன. வணிக வளாகங்கள், சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனிடையே குக்கி இன மக்கள் குக்கிலாந்து தனி மாநிலம் கோரி இன்று இரவு முதல் 48 மணிநேர முழு…
-
- 2 replies
- 366 views
-
-
நியூயார்க்: தமிழ் வழியில் படித்து தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ. 60,000 ரொக்கப் பரிசு வழங்க உள்ளதாக அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தின் தலைவர் அரசு செல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் இரண்டாம் மொழிப் பாடமாக தமிழ் பாடத்தைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கத் தமிழ் கல்விக் கழகம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் தற்போது 47 தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 35 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் தமிழ் வழியில் படிக்காமல் அனைவரும் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கின்றனர். மேலும், தம…
-
- 2 replies
- 404 views
-
-
வைகோ பொதுநலவாய நாடுகளிலிருந்து இலங்கையை நீக்க முயற்சிக்கும் போது ராஜபக்ஷவுக்கு மகுடம் சூட்ட இந்தியா துணை நிற்கிறது பொதுநலவாய நாடுகளிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று நாம் குரல் கொடுக்கும் வேளையில், ராஜபக்ஷவுக்கு மகுடம் சூட்ட இந்தியா துணை நிற்கிறது என்று வைகோ குற்றம் சுமத்தியுள்ளார். திருச்செங்கோட்டில் நேற்று திங்கள்கிழமை மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசும் போதே மதிமுக பொதுச் செயலர் வைகோ இதனை தெரிவித்துள்ளார். லட்சியத்திற்கு குரல் கொடுத்துவிட்டு தண்டனை என்று வரும்போது மாற்றிப் பேசுவது கிடையாது. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு இந்தியா துணை போனது. ரேடார் மற்றும் ஆயுதங்களை இலங்கைக்கு அளித்து, ராணுவ அதிகாரிக…
-
- 1 reply
- 356 views
-
-
டெல்லி: காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் அனைத்திலுமே நில மோசடியில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா கைவரிசை காட்டியிருக்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, சோனியா மருமகன் வதேராவின் நில மோசடி தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும். ராபர்ட் வதேராவை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. அவர் ஹரியானாவில் மட்டும் நில மோசடியில் ஈடுபடவில்லை. காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற அனைத்து மாநிலங்களிலுமே தமது கைவரிசையை காட்டியிருக்கிறார். இது பற்றி நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் ராபர்ட் வதேராவின் பெயரை உச்சரித்தாலே போதும்.. அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் எழுந்து ந…
-
- 1 reply
- 262 views
-
-
வாஷிங்டன்: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அந்நாட்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியே ஹர்ப் கூறுகையில், இந்திய தேர்தலில் எந்த ஒரு பக்கமும் நாம் நிற்கப் போவதில்லை. இவர்தான் வெற்றி பெற வேண்டும் என்றும் கருதவும் இல்லை. தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்றார். http://tamil.oneindia.in/news/2013/08/13/world-will-work-with-winner-next-years-indian-elections-us-181137.html
-
- 3 replies
- 691 views
-
-
திருவனந்தபுரம்: சூரிய மின்சக்தி ஊழல் விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ராஜினாமா செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சோலார் ஊழல் விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக முடியாது என்று மறுத்து வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான இடது ஜனநாயக முன்னணி வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதலே இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் …
-
- 3 replies
- 445 views
-
-
லண்டன்: வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத் தம்பதிகள். லண்டனில் வசித்து வரும் இந்தியரான சைரஸ் வண்ட்ரேவலா, பங்கு பரிமாற்ற தொழிலதிபர். இவரது மனைவியான பிரியா இந்தியாவின் பிரபல நியல் எஸ்டேட் நிறுவனமான ஹிர்கோ குழுமத்தின் தலைவர். இந்த தம்பதிகளில் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள். அறக்கட்டளைகள் மூலம் பல சமூக சேவைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 14ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு பிரமாண…
-
- 0 replies
- 591 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், ரம்ஜான் பண்டிகை நாளன்று கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 18 எனத் தெரிய வந்துள்ளது. ரம்ஜான் பண்டிகையொட்டி பாகிஸ்தானில் சாராய விற்பனை அதிகமாக இருந்தது. கடந்த சனிக்கிழமையன்று கராச்சி நகரில் உள்ள மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள குறிப்பிட்ட கடையில் விற்கப்பட்ட சாராயத்தை குடித்த பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. விசாரணையில் கடையில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட ‘குடிமகன்கள்' பலர் கராச்சி ஜின்னா ஆஸ்பத்திரியிலும், மேலும் சிலர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டனர். அதில், ஜின்னா ஆஸ்பத்திரியில் 16 பேரும், இரு தனியார் ஆஸ்பத்திரிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 18 பேர் சிகிச்சை …
-
- 0 replies
- 352 views
-
-
டெல்லி: இந்திய விமானப் படைக்கு இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்யதில் எந்த ஒரு விதியையுமே பின்பற்றவில்லை என்று அதிரடியாக மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம்சாட்டியுள்ளது. இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான கணக்காய்வு அறிக்கை இன்று நாடாளுனன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாதுகாப்பு தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கென வகுக்கப்பட்ட விதிகள் இந்த கொள்முதலில் பின்பற்றப்படவில்லை. 2006ஆம் ஆண்டு பாதுகாப்பு தளவடா கொள்முதல் விதி, 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட கொள்முதலுக்கு முந்தைய பரிசீலனை வேண்டுகோள் என அனைத்துமே இந்த கொள்முதலில் மீறப்பட்டுள்ளன எ…
-
- 0 replies
- 334 views
-
-
சிட்னி: ஏ.ஆர். ரஹ்மான் வரும் 24-ந் தேதி ஆஸ்திரேலியாவில் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை இணையம் மூலம் அறிவித்துள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதற்காக www.ticketek.com.au/contactus என்ற இணையதளம் மூலமாகவும் பணத்தை திரும்பக் கொடுக்கக் கோரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் டிக்கெட் வாங்கியோர் டிக்கெட் வாங்கிய இடத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். http://tamil.oneindia.in/movies/news/2013/08/sydney-rahmanishq-cancelled-181159.html
-
- 0 replies
- 409 views
-
-
ராக்கெட் ஏவ தயாராக இருந்த அல்-காய்தா தளபதி மீது உளவு விமான ஏவுகணை தாக்குதல் தற்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கும் எகிப்து சினாய் பகுதியில், மற்றொரு ஆட்டக்காரர் ஓசைப்படாமல் மைதானத்துக்குள் இறங்கியுள்ளார். இந்த ஆட்டக்காரர் வேறு யாருமல்ல, இஸ்ரேல்! சினாய் பகுதியில் எகிப்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தும் அல்-காய்தா ஆதரவு இயக்கத்தின் ராக்கெட் ஏவும் தளத்தின்மீது எதிர்பாராத உளவு விமானத் தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. உளவு விமான தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பதில் எகிப்து அரசு மௌனம் சாதித்தாலும், அது இஸ்ரேலின் கைங்கார்யம் என்றே ராணுவ வட்டாரங்களில் கூறப்படுகிறது. இங்குள்ள அல்-காய்தா ஆதரவு இயக்கமான அன்சார் பெய்ட் அல்-மக்திஸ், ஜிகாதி இணையதளம் ஒன்றில் வெளியிட்ட அறிக…
-
- 4 replies
- 726 views
-
-
மன்மோகன் சிங் தலைமையிலான தேசிய முற்போக்கு முன்னணியின் இரண்டாம் ஆட்சிகாலத்தில், பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் காலியான நிதி அமைச்சர் நாற்காலியை ப.சிதம்பரம் அலங்கரித்து ஓராண்டு நிறைவு பெரும் இவ்வேளையில், நிதி அமைச்சராக அவர் செய்தது, செய்யத்தவறியது என அவர் பணியை எடை போடுவோம். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருந்த இருந்த வேளையில் ப.சிதம்பரம் பதவி நாற்காலியை அலங்கரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒராண்டு காலத்தில் இவர் கோட்டைவிட்டதையும், கோட்டைப் பிடித்ததையும் இங்கு பார்போம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் அடையாத வீழ்ச்சியை 2013 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் போது 4.7% விழுக்காட்டில் போய் நிற்கிறத…
-
- 1 reply
- 565 views
-
-
வத்திக்கான்: மத நம்பிக்கையுடயவர்களின் பிள்ளைகளுக்கான கற்பித்தலின் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வினை அபிவிருத்தி செய்ய முடியுமென புனித பாப்பரசர் கூறியுள்ளார். அத்துடன் புனித ரமழானின் நிறைவில் உலகளாவிய முஸ்லிம்களுக்கு வாழ்த்துகள் கூறியதை பாப்பரசர் நல்லிணக்கத்துக்காக உலகளாவிய நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இணைந்து பரஸ்பர நல்லிணக்க முற்றுகைகளில் ஈடுபடவேண்டுமெனவும் கூறியுள்ளார். ரோமின் புனித சென்.பீற்றர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே பாப்பரசர் இக் கருத்துகளை கூறியிருந்தார், எமது சகோதரர்களான முஸ்லிம்கள் தமது புனித ரமழான் மாதத்தினை நிறைவு செய்துள்ளன. நோன்புப் பிரார்த்தனை தானம் வழங்குதல் என இம்மாதம் அவர்களுக்கு நிறைந்ததெனவும் அவர் கூறியிரு…
-
- 2 replies
- 587 views
-
-
இந்தியாவுக்கு அதிநவீனமான 145 ஹோவிட்சர் பீரங்கிகளை விற்பனை செய்வது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கை அளித்துள்ளது. எம்777 ரகத்தைச் சேர்ந்த 145 ஹோவிட்சர் பீரங்கிகளையும் அவற்றின் உதிரிபாகங்கள், பராமரிப்பு மற்றும் பயிற்சி உபகரணங்களை தங்களுக்கு விற்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக் கொண்டது. இதன் மதிப்பு 888 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.5.3 ஆயிரம் கோடி) என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்த விற்பனையானது அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு உதவக்கூடியதாகும். ஏனெனில் இதன் மூலம் அமெரிக்க-இந்திய ராணுவ உறவுகளும், அமெரிக்காவின் மிக முக்கி…
-
- 6 replies
- 607 views
-
-
பாஜகவில் சுப்ரமணியசுவாமி: கட்சித் தலைவர்கள் வரவேற்பு. டெல்லி: சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் ஞாயிற்றுக்கிழமை இணைந்தது. டெல்லியில் ராஜ்நாத் சிங் வீட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுடன் சுப்ரமணியசுவாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கட்சியில் சுப்பிரமணியசுவாமி இணைவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்ரமணியசுவாமி வெளியிட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ஜனதா கட்சியின் தேசியத…
-
- 13 replies
- 2.6k views
-
-
அமெரிக்காவில் 'மெஸ்ஸையா' (மீட்பர்) என்று ஒரு குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயரை மாற்ற வேண்டும் என்று ஒரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 'மீட்பர் என்று பெயர் வைக்கக் கூடாது' உண்மையான ''மீட்பர்'' இயேசுக் கிறிஸ்து மாத்திரமே என்று கூறியுள்ள அந்த நீதிபதி, அந்தக் குழந்தைக்கு மார்ட்டின் என்று பெயரை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். டென்னிஸ்லாண்டில் உள்ள மெஸ்ஸையா டெஸ்வான் மார்ட்டின் என்னும் 9 மாதக் குழந்தையின் பெயரை ஏற்க விரும்பாத அதனது பெற்றோர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். ஆனால், அந்த பெயரை மாற்ற உத்தரவிட்ட நீதிபதி, மீட்பர் என்ற பொருள்படும் மெஸ்ஸையா என்ற பெயரை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்தில் வைத்திருப்பது சங்கடத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார். கடந்த …
-
- 1 reply
- 340 views
-
-
இந்தியா முதன்முறையாக உள்நாட்டில் உருவாக்கிய, விமான- தாங்கி கப்பல் தனது கன்னிப் பயணத்தை இன்று தொடங்கியுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த்- இந்தியா உள்நாட்டில் உருவாக்கிய முதலாவது விமானம்- தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற இந்தக் கப்பல் இந்தியாவின் தொழிநுட்ப முன்னேற்றத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மைல் கல் என்று அந்நாட்டு அதிகாரிகள் வர்ணித்துள்ளனர். தென்னிந்தியாவில், கேரள மாநிலத்தின் கொச்சின் துறைமுகத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் கடலில் இறக்கப்பட்டது. 2018-ம் ஆண்டில் இந்திய கடற்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட முன்னதாக இந்தக் கப்பல், கடலில் தொடர்ச்சியான பரீட்சார்த்த பயணங்களை மேற்கொள்ளும். சீனா உலக சக்தியாக வளர்ந்துவரும் சூழ்நிலையில், இந்தியாவும் இராணுவ வல்லமையில் பின்னடைந்து…
-
- 1 reply
- 632 views
-
-
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பலமுறை சுட்டது. சுமார் 7 மணி நேரம் இந்தத் தாக்குதல் நடந்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் திருப்பிச் சுட்டது. கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் பலியாயினர். அந்த பதற்றம் தணிவதற்குள் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.என். ஆச்சார்யா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் உள்ள …
-
- 3 replies
- 350 views
-
-
சென்னை: பெல்ஜியம் கெளரவ தூதர் பதவியில் இருந்து தொழிலதிபர் ஏ.சி. முத்தையாவை மத்திய அரசு உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு நீக்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கடிதம் அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் சென்னையில் உள்ள சர்வதேச தொழில்சார் அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏ.சி. முத்தையா திடீரென நீக்கப்பட்டிப்பதன் காரணம் என்ன என்று தெரியவில்லை. தமிழக திட்டக் குழுவில் தொழில்துறை பிரதிநிதியாக ஏ.சி. முத்தையாவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.oneindia.in/news/2013/08/12/tamilnadu-government-fires-belgiu…
-
- 0 replies
- 263 views
-
-
இந்தோனேசியா: இந்தோனேசியாவில் தனிம்பார் தீவில் உள்ள சாம்லேகியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திபெத்திலும் நிலநடுக்கம் இதேபோல் திபெத்தின் எல்லைப்பகுதியான ஜேகாங் மற்றும் மர்காம் பகுதியிலும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டெர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின பொதுமக்கள் வீடுகளை விட்டு அச்சத்துடன் வெளியேறியதாக தகவல்கள…
-
- 0 replies
- 365 views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதன் பின்னரும் தொடர்ந்தும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று காலை 11.30 மணியளவில் பூஞ்ச் பகுதியில் நூர்கோட், நகர்கோட், மும்தாஜ் உள்ளிட்ட 13 இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய…
-
- 0 replies
- 373 views
-
-
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று நடந்த பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசார தொடக்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எங்களைப் பார்த்து திருந்தவோ அல்லது குஜராத்தைப் பார்த்து திருந்தவோ மத்திய அரசுக்கு மனம் இல்லை என்றால், பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டைப் பாருங்கள். அங்கு முதல்வர் ஜெயலலிதா திறன் வளர்ச்சிக்காக செய்துள்ள முதலீடுகளைப் பாருங்கள்.அதைப் பார்த்தாவது திருந்துங்கள் என்றார். மாலை 5.08 மணிக்குத் தனது பேச்சைத் தொடங்கினார் மோடி. முன்னதாக தன்னை சந்திக்க மேடையேறி வந்த சுதந்திரப் போராட்ட தியாகி மற்றஉம் மூதாட்டி ஆகியோரை வரவேற்ற மோடி, அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டார். பின்னர் தனது பேச்சைத் தொடங்கினார். தனது பேச்சின் தொடக்கத்தில், ஆந்திர மாநில மக்கள் வளமும…
-
- 6 replies
- 487 views
-
-
குடித்துவிட்டு வீதியில் செல்லும் ரொறான்ரொ மேயர் ரொறான்ரோ நகரின் மேயர் Rob Ford குடித்து விட்டு நிதானமின்றி வீதியில் செல்வது பாதசாரி ஒருவரால் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு Taste of Danforth என்கின்ற வீதி நிகழ்வுக்கு சென்றிருந்த மேயர் அங்கே நன்கு குடித்துவிட்டு வீதியால் செல்லுவோருடன் புகைப்படங்கள் எடுத்தும், தான் வண்டி ஓட்டவில்லை என்றும் சொல்லுவது, வேறு பல விடயங்களை முணுமுணுப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இன்னுமொரு வீடீயோவில் மேயர் கோப்பியினை குடித்தவண்ணம் (பெரும்பாலும் குடிபோதையை குறைக்க) பாதசாரிகளுடன் படமெடுப்பது படமாக்கப்பட்டுள்ளது. http://www.ampalam.com/2013/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%…
-
- 3 replies
- 412 views
-