உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் குற்றச்செயல்களைக் கண்காணிக்கும் சமூகப் பணியாளர் ஒருவர், கறுப்பின இளைஞர் ஒருவரை கொலைசெய்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜோர்ஜ் சிம்மர்மேன் என்ற குறித்த பணியாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ட்ரேவோன் மார்ட்டின் என்ற 17 வயதான இளைஞன் உயிரிழந்தார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பை இச் சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. தற்பாதுகாப்பு கருதியே குறித்த இளைஞனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக ஜோர்ஜ் சிம்மர்மேன் தெரிவித்தார். ஜோர்ஜ் சிம்மர்மேனின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவரை விடுதலை செய்தது. இதனையடுத்த…
-
- 2 replies
- 454 views
-
-
இன்றோடு விடைபெறுகிறது தந்தி... கடைசித் தந்தி கொடுப்போரை படம் பிடிக்க ஏற்பாடு. சென்னை: கடந்த 160 ஆண்டுகளாக இந்தியாவில் அரும் சேவையாற்றி வந்த தந்தி சேவைக்கு இன்றோடு விடை கொடுக்கப்படுகிறது. கடைசித் தந்தி கொடுக்க வருவோரை வீடியோவில் படம் பிடித்து ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவில் தந்திதான் மிகப் பெரிய சேவையாக இருந்து வந்தது. அவரசத் தகவல்களைத் தெரிவிக்க அத்தனை பேருக்கும் இருந்த ஒரே சேவை தந்தி மட்டுமே. உடல் நலக்குறைவு, அவசரமாக வர வேண்டும், மரணச் செய்தி என முக்கியத் தகவல்களை ஒருவருக்குத் தெரிவிக்க தந்தியைத்தான் அனைவரும் நாடினர். ஆனால் பேஜர் வந்ததும் தந்தியின் சேவை முதலில் மெதுவாக குறைந்தது. பின்னர் இன்டர்நெட் வந்தது, இமெ…
-
- 8 replies
- 1.1k views
-
-
இந்தியாவுக்குள், ஊடுருவிய.... சீன ஹெலிகாப்டர்கள்! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுமர் பகுதியில் 2 சீன ஹெலிகாப்டர்கள் ஊடுருவி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் இருக்கும் சுமர் பகுதியில்தான் இந்தியா-சீனா ராணுவத்தினர் தொடர்பு கொள்வர். இப்பகுதியில் கடந்த 17-ந் தேதி சீனா ராணுவத்தினர் ஊடுருவினர். மேலும் அப்பகுதியில் இருப்போரையும் எச்சரித்துவிட்டுச் சென்றனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் சீனா ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் அதே சுமர் பகுதியில் காலை 8 மணியளவில் ஊடுருவியிருப்பது கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் இதை சீனா ராணுவம் மறுத்துள்ளது. இந்திய எல்லைக்குள் தமது ஹெல…
-
- 3 replies
- 640 views
-
-
பார்மர்: ராஜஸ்தானில் மிக்-21 பைசன் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி பரிதாபமாக உயிர் இழந்தார். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உத்தர்லாய் விமானதளத்தில் இருந்து மிக் 21 பைசன் ரக போர் விமானம் இன்று காலை பயிற்சிக்கு புறப்பட்டது. விமானம் காலை 9.30 மணிக்கு தரையிறங்க முயன்றபோது ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்.டி. கோஸ்வாமி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மிக் 21 ரக விமானம் இதே உத்தர்லாய் விமான தளத்தில் விபத்துக்குள்ளானது. அப்போது விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தநர். மிக் 21 ரக விமானங்கள் ச…
-
- 0 replies
- 430 views
-
-
தமிழினப் படுகொலையை முன்னின்று நடத்திய சக்திகளுள் ஒன்றான எம்.கே.நாராயணன் நாளை (15/07/2013 அன்று) திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய் சிங் ஆகிய மூவர் கூட்டணி, இலங்கையின் மூவர் கூட்டணியுடன் இனப்படுகொலை நிகழ்த்துவதை குறித்து தினந்தோறும் நிலைமைகளை ஆராய்ந்து செயல்படுத்தியது. அத்தகைய நபர் தற்பொழுது பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா என்னும் பெயரில் தமிழகத்திற்கு வருவதன் நோக்கம் என்ன? பொறியியல் கல்லூரிகளில் தேர்வுகளின் முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும்; அடுத்த பிப்ரவரி வாக்கில் பட்டமளிப்பு விழா நடைபெறும். சம்பந்தமில்லாமல் ஜூலையில் எம். கே. நாராயணன் வருவது எதற்காக? மேலும்…
-
- 3 replies
- 691 views
-
-
இந்தியாவைக் கலக்கிய மாபெரும் ஊழலான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலின் முக்கிய காரணகர்த்தாவான இத்தாலி நாட்டு புரோக்கர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி மாரடைப்பால் மரணமடைந்தார். இத்தாலியின் மிலன் நகரில் வெள்ளிக்கிழமை இவர் மரணமடைந்துள்ளார். இவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குவாத்ரோச்சியின் மரணச் செய்தியை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்தியாவை உலுக்கிய போபர்ஸ் இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல்களில் ஒன்று போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். ராஜீவ் காந்தியை நிலைகுலையச் செய்த ஊழலும் கூட. குவாத்ரோச்சிதான் புரோக்கர் 1986ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 1500 கோடிக்கு பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பெருமளவில் லஞ்சம், ராஜீவ…
-
- 4 replies
- 786 views
-
-
பூட்டானில் ஆட்சியைப் பிடித்தது எதிர்க்கட்சி! பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 47 தொகுதிகளில் அக்கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியில் அமர்கிறது. இப்போதைய ஆளுங்கட்சியான துருக் பியூன்சம் ஷோக்பாவால் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பூட்டான் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற இத்தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. பூட்டானில் மொத்தம் 3.81 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 850 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 10,000 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தியா சார்பில் 4,130 மின்னணு வாக்குப் பதிவு …
-
- 0 replies
- 373 views
-
-
பிரிட்டிஷ் படையில் தற்கொலை செய்து கொண்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மோதல்களின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகம் என்று பிபிசியின் புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது. 2012-ம் ஆண்டில் பணியிலிருந்த பிரிட்டிஷ் படைவீரர்களும் முன்னாள் வீரர்களும் அடங்கலாக 50 பேர் வரையில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பிபிசியின் பனோரமா புலனாய்வு நிகழ்ச்சியில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. இதே ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபன்களுடனான மோதல்களின் போது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.போதுமான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்காத நிலையிலேயே, படைவீரர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். இந்த ஒவ்வொரு தற்கொலையும் ஒரு பெருந்து…
-
- 0 replies
- 289 views
-
-
கடல் எல்லைப் பிரச்னையில் அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள சீன துணைப் பிரதமர் வாங் யாங், சீன மக்கள் குடியரசின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் யாங் ஜியிச் ஆகியோரிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கிழக்குச் சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தென்கொரியாவுடனும், தென் சீனக்கடல் பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பாக தைவான், பிலிப்பின்ஸ், வியத்நாம் ஆகிய நாடுகளுடன் சீனாவுக்குப் பிரச்னை உள்ளது. இதில் அந்நாடுகளை தனது ராணுவ பலத்தின் மூலம் மிரட்டும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா - சீனா இடையிலான ராஜீய, பொரு…
-
- 1 reply
- 411 views
-
-
ரஷ்யாவில், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுப் பொறிகளையே (டைப்ரைட்டர்ஸ்) பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது. தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம், மனித உரிமை, வன்முறை இஸ்வேஸ்டியா (Izvestia) என்ற ரஷ்ய அரசுக்கு மிக நெருக்கமான நாளிதழ் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் லட்சக் கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டமையும், மிக அண்மையில், அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோடன் அந்நாட்டின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியமையும் இதற்குக் காரணம் என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது. இந்த இரண…
-
- 7 replies
- 769 views
-
-
அமெரிக்காவினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில் தற்சமயம் ரஷ்ய விமான நிலையமொன்றில் அடைக்கலம் புகுந்துள்ள அமெரிக்க முன்னாள் புலனாய்வு தொழில்நுட்பவியலாளர் எட்வார்ட் ஸ்னோவ்டன் முதன்முறையாக பொதுச் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். முன்னதாக 21 நாடுகளிடம் அகதி அந்தஸ்து கோரியிருந்த நிலையில் அவருக்கு வெனிசுலா, ரஷ்யா, பிலிவியா நிகாரகுவா, எகுவடோர் ஆகிய நாடுகள் அகதி அந்தஸ்து வழங்க முன்வந்திருந்தன. இந்நிலையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பம் கொண்டிருப்பதாக கூறி ஸ்னோடன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து சர்வதேச மன்னிப்பு சபை, சர்வதேச மனித உரிமைகள் கவுன்சில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம், டிரான்ஸ்பிரன்ஸி இண்டர்நேஷனல், சர்வதேச ஊழல் கண்காணிப…
-
- 0 replies
- 567 views
-
-
கூடங்குளம் அணுமின்நிலையத்தில், மின்உற்பத்திக்கான பணிகள், நேற்று நள்ளிரவில் துவங்கின. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு முதலாவது உலையில் உற்பத்தியை துவக்க, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி நேற்று மாலை அளித்தது. இதன்படி, நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு, உற்பத்தி துவங்கியது. அணுபிளவின் வெப்பத்தால், ஏற்படுத்தப்படும் நீராவியின் மூலம், டர்பன் களை சுழலச்செய்து, மின்உற்பத்தி செய்யப்படும். பணிகள் துவங்கினாலும், முழு உற்பத்தி கிடைக்க, சில நாட்கள் ஆகும். முன்னதாக,கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவு செயல்பட, அணுசக்தி ஒழுங்கு…
-
- 0 replies
- 322 views
-
-
காட்டுத் தீ காரணமாக இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், இமயமலை பகுதியில் பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்தனர். இது குறித்து விஞ்ஞானிகள் தங்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது: இமாச்சல பிரதேசத்தில் பஸ்பா பனிப் பகுதிகளில் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். 2009ம் ஆண்டு கோடை காலத்தில் இங்குள்ள வனப்பகுதிகளில் பெருமளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் பல உயிரினங்களும், தாவரங்களும் அழிந்தன. 2001ம் முதல் 2012ம் ஆண்டு வரை பஸ்பா பகுதியில் பனிக் கட்டிகள் உருகியதை விட, காட்டுத் தீ ஏற்பட்ட 2009ம் ஆண்டு அதிகளவில் பனிக்கட்டிகள் உருகின. காட்டுத் த…
-
- 0 replies
- 328 views
-
-
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் விஷ வாயுவை பயன்படுத்தியது அம்பலம் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் சரீன் விஷ வாயுவை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது. இதற்கான ஆதாரங்களை ரஷியா அளித்துள்ளது. சிரியாவில் நடைபெற்ற கிளர்ச்சியில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டும் என்பதற்காகவே இத்தகைய தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 19-ம் தேதி சிரியாவின் அலெப்போ நகரில் கான் அல்-அஸல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 16 ராணுவ வீரர்கள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த இடத்திலிருந்து திரட்டப்பட்ட சோதனை மாதிரிகளில் இருந்து சரீன் விஷ வாயு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது புலனாகியுள்ளது. இத்தகவலை ரஷியாவின் இடார…
-
- 0 replies
- 344 views
-
-
ரொறொன்ரோ பெரும்பாகத்தில் மீண்டும் ஒரு இடி,மின்னல், புயலுடன் கடுமையான மழையும் பெய்ய வாயப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் மிரண்டு போயுள்ளனர். கனடா சுற்றுச்சூழல் பிரிவு புதன்கிழமை விசேட காலநிலை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, பலத்த இடி,மின்னல், புயலுடன் கூடிய பலத்த மழை பெய்யலாமெனவும் கூறப்பட்டுள்ளது. இக்காலநிலை Windsor area north to Sarnia, east through Parry Sound-Muskoka, Hamilton, Niagara and Toronto ஆகிய இடங்களை உள்ளடக்கியதாக இருக்குமெனவும் சொல்லப்படுகின்றது. கடந்த திங்களன்று கொட்டிய பேய்மழையின் பாதிப்பில் இருந்து மீண்டுவரும் ரொறொன்ரோ மக்களை இது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=87279&category=Tam…
-
- 6 replies
- 637 views
-
-
கலிபோர்னியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் சவுதி இளவரசி மெஷேல் அலய்பான் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. 30 வயதுடைய கென்யா நாட்டுப்பெண் ஒருவரை வீட்டு வேலைக்காக அவரது விருப்பத்திற்கு விரோதமாக பலவந்தமாக வீட்டில் வைத்திருந்தார் என்பது இவர் மீதுள்ள குற்றசாட்டாகும். 42 வயதாகும் இந்த இளவரசி தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறுவார் என்று கலிபோர்னியா போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. பேசிய சம்பளத்தையும் கொடுக்காமல் அந்தக் கென்ய பெண்ணை உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்படுத்தியுள்ளார் இளவரசி. அதாவது கூடுதல் நேரம் வேலை வாங்குவது மற்றும் விடுப்பு என்பதே கிடையாது. வெளியில் செல்ல அனுமதியும் இல்லை!! கடைசியில் வீட்டை விட்டு தப்பித்து வந்த அந்த கென்ய பெண் …
-
- 1 reply
- 422 views
-
-
மும்பை: ஏற்கனவே, திருமணம் ஆனவரை மறுமணம் செய்யக் கோரி மும்பை பெண் தொடர்ந்த வழக்கில், இந்து திருமண சட்டப்படி திருமணம் ஆன குடும்பஸ்தனை அப்பெண் மறுமணம் செய்யக் கூடாது என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர் நீதிபதிகள். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜஸ்ரீ. இவர் பிரசாந்த் மர்டே என்ற போலீஸ் உயரதிகாரியுடன் கடந்த 14 ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தான் பிரசாந்த்தை முறைப்படி கணவனாக்கிக் கொள்ளும் நோக்கத்தில், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இதில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி பிரசாந்த் சார்பில் ஆஜரான வக்கீல், 'எனது கட்சிக்காரருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. எனவே, இந்து திருமண சட்டத்தின்படி ராஜஸ்ரீயை இரண்டாவதாக திருமணம் ச…
-
- 2 replies
- 422 views
-
-
லே லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியது குறித்து சீனா மீண்டும் தனது முரண்பாடான பதிலை அளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதனை அடுத்து அங்கு இரு நாட்டு ராணுவ தளபதிகளும் கொடி அமர்வு பேச்சி ஈடுப்பட்டனர். அதைத்தொடர்ந்து சீன ராணுவத்தினரின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்தியா சார்பில் அமைக்கப்பட்டிருந்த கோபுரம் அகற்றப்பட்டு அங்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஜூன் 17-ந்தேதி மீண்டும் சீன மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் ஜுமார் பகுதியில் ஊடுருவி, அங்கு இந்திய ராணுவம் அமைத்திருந்த கண்காணிப்பு அமைப்புகளையும், பதுங்கு குழிகளையும் சேதப்படுத்தினர். மேலும் அங்கு வைத்த…
-
- 0 replies
- 402 views
-
-
ஸ்னோடன் பற்றி, இந்து ராமின்... கருத்துக்களை "புதிய தலைமுறை" தொலைக்காட்சி நிருபர் பேட்டி காண்கிறார். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=tCw4xbBD96g
-
- 0 replies
- 602 views
-
-
புதுடெல்லி: மனைவியாக இருந்தாலும் ஒப்புதலுடன் பாலுறவு வைத்துக் கொள்வதற்கான வயதை 18 ஆக நிர்ணயிக்க உத்தரவிடக் கோரும் மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற சட்டத் திருத்தம் 2013இன் படி 375ஆவது பிரிவில் சமீபத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியின் ஒப்புதலுடன் அவரது கணவன் பாலுறவு வைத்துக் கொண்டால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலுறவு வைத்துக் கொள்வதற்கான வயதை 18 ஆக நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி, "ஐ தாட்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 ஆவது (பாலியல் பலாத்காரம்) பிரிவில் திருத்தம் கொண்டு…
-
- 0 replies
- 394 views
-
-
ரொறொன்ரோ பெரும்பாக (Greater Toronto) பிரதேசத்திலும், ரொறொன்ரோ நகரத்தின் பல பாகங்களிலும் நேற்றையதினம் மாலை 5 மணிமுதல் பொழிந்த கனமழையினால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தினால், சுரங்க வழி ரயில் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்க ப்பட்டுள்ளது. மிசிசாகாவின் 80சதவீத பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோ முழுவதும் மூன்று இலட்சம் பேர் மின்சார வசதிகளை இழந்துள்ளனர். மக்களை வீடுகளில் இருக்கும்படியும் சுரங்கப் பாதைகள் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் ரொறொன்ரோ பொலிசார் கேட்டுள்ளனர். ரோறொன்ரோ நகரம் கடுமையான இடிழுழக்கம், வெள்ளம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.வாகனம் நகராமல் நின்றுவிட்டால் உதவி கிடைக்கும் வரை வாகனத்திற…
-
- 16 replies
- 1.3k views
-
-
கனடாவில் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மெயின் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் தீப்பிடித்தில் 80 பேர் வரை மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மொன்ட்றியல் நகரிலிருந்து 155 மைல் கிழக்கே கியுபெக் மாகாணத்தில் உள்ள லக் மெகன்டிக் நகரின் அருகே செல்லும்போது ரயிலில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் பெட்டிகள் தடம் புரண்டு, அருகில் உள்ள கட்டங்களுக்குள் புகுந்தன. இதனால் ஏற்பட்ட தீச்சுவாலையிலும், கரும்புகையிலும் அருகில் இருந்த ஏராளமான கட்டிடங்களும், வீடுகளும் சேதமடைந்தன. பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தீயணைப்புத்துறையினரும் இவர்களுடன் இணைந்து தீயை கட…
-
- 4 replies
- 916 views
-
-
இலங்கை தமிழ்ப் பெண் பணிநீக்கம் : வங்கிக்கு இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம் இலங்கை தமிழ்ப் பெண்ணை பணிநீக்கம் செய்து உத்தரவிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுளளது. இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஜி.திருக்கல்யாணமலர் கடந்த 1990ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதியாக வந்து, படித்து பட்டம் பெற்றார். இங்கு ஒருவரை திருமணம் செய்து கடந்த 2008ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரை இலங்கை அகதி என்று கூறி வங்கி பணிநீக்கம் செய்துள்ளது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பணி நிரந்தரம் செய்யப்பட்ட தான், மகப்பேறு விடுமுறை முடிந…
-
- 0 replies
- 847 views
-
-
அமெரிக்கா ஏவுகணை சோதனை தோல்வி: பென்டகன் அதிர்ச்சி! எதிரி ஏவுகணையை வழிமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. கடந்த 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் தோல்வி அடைந்த நிலையில் இப்போது மீண்டும் இந்த ஏவுகணை சோதனை தோல்வி அடைந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சமீபகாலமாக தென் கொரியா மீது போர் தொடுப்போம் என்று வட கொரியா மிரட்டி வருகிறது. இதையடுத்து தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்க முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா மிரட்டி வருகிறது. அப்படி தாக்குதல் நடந்தால் சமாளிக்க அமெரிக்க ராணுவம் தயார…
-
- 4 replies
- 699 views
-
-
கொழும்பு: பீகாரில் உள்ள மகாபோதி கோவிலில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து அறிந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். இது குறித்து இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் ஊடக தொடர்பாளர் விஜயந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற புனித இடத்தில் குண்டு வெடித்தது ராஜபக்சேவுக்கு வேதனை அளிக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் விசாரணை நடத்தி அவருக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு பற்றி தகவல் கிடைத்தவுடன் ராஜபக்சே மகாபோதி கோவிலின் தலைவரை அணுகி பேசினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் புத்தகயா ம…
-
- 3 replies
- 794 views
-