Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொரிய தீபகற்ப பதட்ட நிலைமை அண்மையில் தீவிரமாகுவது தொடர்கிறது. எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் வடகொரியா தாக்குதல் நடத்தக்கூடும் என தென் கொரியா தெரிவித்துள்ளது. எனினும், வடகொரியாவின் தாக்குதல் எவ்விதமாக இருக்கும் என்பதைக் கணிப்பிட முடியாமல் இருப்பதாகவும், இருந்தபோதிலும், வடகொரியாவின் எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்க தென் கொரியா தயாராகவே இருக்கிறது எனவும் தென் கொரியா அறிவித்துள்ளது. இந்த நிலையில், வடகொரியா தனது தாக்குதல் தளங்களை நகர்த்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் இருந்துதான் வடகொரியா தாக்குதல் நடத்தும் என்பதை தென்கொரியாவும், அமெரிக்காவும் ஊகிக்க முடியாத வகையில் வடகொரியா தனது தாக்குதல் தளங்கள் தொடர்ந்து நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, வடகொர…

  2. தென் கொரியா மற்றும் அமெரிக்க அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த, எரிபொருள் நிரப்பி ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது வடகொரிய ராணுவம். இதனால் போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் வடகொரிய அரசு 3வது ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால் ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில், மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த வடகொரிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் யுன் பியுங் சி எச்சரித்துள்ளார். சீனா மற்றும் ரஷ்ய நாடுகள் இந்த பிரச்னையில் தலையிட்டு வடகொரியாவின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், தென்…

    • 1 reply
    • 761 views
  3. குடியுரிமைச் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனக் கோரி ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர். அமெரிக்காவில் மில்லியன் கணக்கானவர்கள் குடியுரிமை இன்றி வாழ்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு குடியுரிமையின்றி வாழ்ந்து வரும் மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர். வொஷிங்டன், அட்லாண்டா உள்ளிட்ட நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் 11 மில்லியன் மக்கள் குடியுரிமையின்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு, பராக் ஒபாமா நிர்வாகம் விரைவில் சலுகைகளை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com…

    • 0 replies
    • 496 views
  4. டெஸ்ட் டியூப் கருத்தரிப்பு முறையை உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம். லண்டன்: உலகம் முழுவதும் உள்ள இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ள பெண்களின் கண் கண்ட கடவுளாக போற்றப்படும் சர் ராபர்ட் எட்வர்ட்ஸ் தனது 87வது வயதில் மரணமடைந்தார். இவர்தான் சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கும் முறையை உருவாக்கியவர் ஆவார். எட்வர்ட்ஸ் அன்று ஆரம்பித்து வைத்த இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை உலகம் முழுவதும் இன்று வெகு பிரபலமாக உள்ளது. உலகில் இன்று கிட்டத்தட்ட 50 லட்சம் சோதனைக் குழாய் முறையில் பிறந்த குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் டாக்டர…

  5. ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம், ஈரானின் தென் பகுதியில் பஷெர் அணு உலைக்கு அருகே நிகழ்ந்தது. அணு உலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனினும், அந்த பகுதியில் இருந்து 37 பேர் உயிரிழந்தனர், சுமார் 850 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் வீடுகள்,கடைகள் மற்றும் வணிகத் தலங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு உலை 8 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கத்தை தாங்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளதாகவும், அணு உலைக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை எனவும் அரசு தரப்பில்…

  6. புதுடெல்லி: தனக்கு எதிரான முற்றுகை போராட்டத்தால் பிரதமருடனான சந்திப்பை மட்டுமல்லாது, நிதியமைச்சர் ப.சிதம்பரத்துடனான சந்திப்பையும் ரத்து செய்துவிட்டு மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தா திரும்பினார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், மாணவர் சங்க தேர்தலை நடத்த வலியுறுத்தி இந்திய மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது கைது செய்யப்பட்ட அச்சங்கத்தின் தலைவர் குப்தா போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தார். ஆனால் போலீஸ் தாக்குதலில் குப்தா உயிரிழக்கவில்லை என்றும், மின்கம்பத்தில் மோதியதால் அவர் உயிரிழந்தார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் தரப்பில் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.மேலும் குப்தா உயிரிழந்தது பெரிய வி…

  7. தென்கொரியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேறுமாறு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் யுத்த சூழ்நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் வெளிநாட்டவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியே வடகொரியா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. 1953 ஆம் ஆண்டு கொரிய தீபகற்பத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் இரண்டு நாடுகளுக்கிடையேயான இயல்பற்ற சூழ்நிலை தற்சமயம் வலுப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாகவும் அங்கு பணியாற்றும் இலங்கையர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கையர்களும் தூதரகத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. வடக்கு மற்ற…

  8. இந்திரா காந்தி பிரதமராக இருந்த 1975 மற்றும் 1977 ல் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது இந்திரா வீட்டில் அமெரிக்க உளவாளி பதுங்கி இருந்ததாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 1975 மற்றும் 1977 இடைபட்ட அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட இரண்டு வருடங்களில், இந்திரா காந்தியின் வீட்டுக்குள் அமெரிக்க உளவாளி இருந்தார் என்று விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட 'மிசா' அவசரநிலை பிரகடனத்தின் பின்னணியில் அமெரிக்க உளவாளி இருந்ததாகவும், அவருக்கு உதவியாக இந்திராவின் மகன் சஞ்சய்யும், அவரது செயலாளர் ஆர்.கே.தவான் ஆகியோரும் இருந்ததாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1…

  9. உலக வரைபடத்தில் பாகிஸ்தான் பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளதை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வரைபடம் 1975 ஆண்டினுடையது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு, இரண்டு நாடுகளுக்கு பொதுவானதாக இல்லமால் எல்லைக் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் நாட்டில் இருப்பதுபடியாக அமைந்துள்ள உலக வரைப்படத்தை விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய துதரகம் பதிலளிக்க மறுத்துள்ளது. மேலும் சர்வதேச எல்லை பிரதிநிதித்துவம் பற்றி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் பேச மறுத்துள்ளது. http://tamil.webdun…

  10. கொல்கத்தா: பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சியினரே ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளாதபோது, இந்த நாடு எப்படி அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற தொழிலதிபர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையில் இதனைக் கூறிய மோடி, மத்தியில் தற்போது அரசோ அல்லது நிர்வாகமோ இல்லை என்றும், தற்போதுள்ள ஐ.மு. கூட்டணி அரசு மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை போன்று, 1947 ஆம் ஆண்டிலிருந்து மத்தியில் இருந்த வேறு எந்த ஆட்சி மீதும்வெறுப்பு ஏற்பட்டதில்லை என்றும் சாடினார். கஷ்டப்பட்டு வேலை செய்து வரி செலுத்தும் மக்களின் வரிப்பணத்தை தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வீணடிப்பதாகவும், என்ன வில…

    • 1 reply
    • 577 views
  11. டெல்லி: தென் சூடானில் போராளிகளின் தாக்குதலில் 5 இந்திய ராணுவத்தினர் பலியாகி இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு தென்சூடான் சுதந்திர நாடாக உருவெடுத்தது. அதன் பின்னரும் தொடர்ந்தும் அங்கு இன மோதல் நீடித்து வருகிறது. தென் சூடான் அரசுக்கு எதிராக டேவிட் யாயு யாயு தலைமையில் ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது தென் சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அமைதிப் படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைதிப் படையில் 2000 இந்திய ராணுவத்தினரும் அமைதிப் படையினராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகன தொடரணிக்கு பாதுகாப்பாக சென்று கொண்டிருந்த போது போராளிகள் நடத்திய தாக்குதலில் 5 இ…

  12. சவுதி அரேபியாவில் புதிய தொழிலாளர் சட்டத்தால், பாதிக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேறு வேலை தேடிக் கொள்ளவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ 3 மாத கால அவகாசம் அளிக்க அந்நாட்டு மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். சவுதி அரேபியாவில் இந்தியா, ஏமன், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 90 இலட்சம் வெளிநாட்டவர் பணியாற்றி வருகின்றனர். சவுதி அரேபியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அந்நாட்டு அரசு புதிய தொழிலாளர் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, தனியார் நிறுவனங்களில் 10 தொழிலாளிகளில் ஒருவர் அந்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் துறையில் தங்கள் நாட்டவர்களை அதிகமாக பணியில் சேர்க்க அந்நாட்டு …

  13. டெல்லி: இந்திய கடல் பகுதிக்குள், இந்தியப் பெருங்கடலுக்குள் அடிக்கடி சீனாவின் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் ஊடுருவுவதாக செய்திகள் கூறுகின்றன. இதை இந்தியக் கடற்படையும் உறுதி செய்துள்ளது. இதுவரை 22 முறை சீனாவின் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் ஊடுருவியதாக இந்திய கடற்படைத் தரப்பில் கூறப்படுகிறது. கடைசியாக பிப்ரவரி மாதம் சீனா ஊடுருவியுள்ளது. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவியது பதிவாகியுள்ளது. இந்த அணு நீர்மூழ்கிக்கப்பல்களின் ஊடுருவல் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இந்திய கடற்படை அறிக்கை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் சோனார் கருவியின் உதவியுடன் இந்திய கடற்படை இந்த ஊடுருவல்களைக் கண்டுபிடித்துள்ளது. …

    • 1 reply
    • 612 views
  14. அணைகளில் நீர் வற்றிப்போனால் சிறுநீர் கழித்து பாசனத்திற்கு நீர் வழங்க முடியுமா என்னும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அஜித் பவாரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டுமென எதிர்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த ஒரு விவசாயி, தனது நிலத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 55 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், புனேயில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார், 'அணையில் தண்ணீர் இல்லாத நிலையில் அவருக்கு மட்டும் எப்படி தண்ணீர் வழங்க முடியும்? அணையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிறாரா? குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் நாம் இருக்கும் நி…

  15. பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் சூனியக்காரிகள் என்று சந்தேகப்பட்டு 2 பெண்களை சித்தரவதை செய்து தலையை துண்டித்து கொலை செய்தனர் கிராமத்தினர். பப்புவா நியூகுனியா நாட்டில் மூடநம்பிக்கை பழக்கவழக்கங்கள் அதிகமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த பழக்கவழக்கங்களால் பலர் பலியாகியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்த ஓய்வு பெற்ற ஆசிரியையை சூனியம் வைத்து கொன்று விட்டதாகக் கூறி 2 பெண்களை கிராம வாசிகள் பிடித்துச் சென்றனர். கொண்டு செல்லப்பட்ட அந்த பெண்களை மூன்று நாட்கள் சித்தரவதை செய்து, பின் அவர்கள் இருவரின் தலையையும் துண்டித்து கொலை செய்தனர் கிராம மக்கள். காவல்துறையினரின் முன்னிலையிலேயே நடந்த இந்த கோர சம்பவத்திற்கு, மனித…

  16. இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் திங்கட்கிழமை காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும். பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக அவரது சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவியாகவும் இவர் இருந்தார். பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமர் இவராவார். இவர் காலத்தில்தான் ஃபோக்லாண்ட் தீவுகள் தொடர்பில் ஆர்ஜண்டீனாவுடன் பிரிட்டன் போரில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது. 1979 ஆம் ஆண்டு தான் பதவி ஏற்றதை அடுத்து பிரிட்டனின் அரசியல் அரங்கில் பல மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார். சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரிட்…

    • 20 replies
    • 1.6k views
  17. இலங்கை வாழ் ஈழ தமிழர்களின் வாழ்வுரிமையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் மத்திய அரசின் இரட்டை வேடத்தை கண்டித்தும் பாரத மனித உரிமை பாதுகாப்பு கழகம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இலங்கைவாழ் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை காக்கவும், அவர்கள் சுதந்திரமாக செய்லபடவும், கால் நூற்றாண்டு காலமாக அவர்கள் உரிமைக்காக போராடிவரும் ஈழத் தமிழர்கள் மீது அத்துமீறி, மனிதநேயமற்ற, ஈவுஇரக்கமன்றி அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவை போர் குற்றவாளி என அறிவிக்கக் கோரியும், தமிழ்இன துரோகி ராஜபக்சவுக்கு துணைபோன இந்திய அரசை வன்மையாக கண்டிக்கும் வகையிலும், இலங்கைவாழ் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த மனிதநேயமற்ற அரக்கன் ராஜபக்சவை …

  18. திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா வரவேற்றார். விழாவில் அமைச்கர் கே.வி. ராமலிங்கம் கலந்து கொண்டு 58 பேருக்கு ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். இதன்பிறகு அமைச்சர் கே.வி. ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி ஆணையத்தின் இறுதி தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணைய வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். இதன்பிறகு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய …

    • 0 replies
    • 300 views
  19. பிரதமராவதற்கு முன்பு ஸ்வீடன் நிறுவனங்களுக்கு 'தரகராக' செயல்பட்டார் ராஜிவ் காந்தி? Posted by: Mathi Published: Monday, April 8, 2013, 10:11 [iST] டெல்லி: நாட்டின் பிரதமராவதற்கு முன்பு விமானியாக பணிபுரிந்த போது ஸ்வீடன் நிறுவனங்களுக்கான தரகராக ராஜிவ்காந்தி செயல்பட்டிருக்கிறார் என்று விக்கிலீக்ஸ் அதிரடி தகவல்களை வெளியிட்டிருக்கிறது. தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களின்படி 1970களில் ஸ்வீடன் நிறுவனமான சாப்-ஸ்கானியா இந்தியாவுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய முன்வந்தது. இதில் ராஜிவ் காந்தி இடைத்தரகாக செயல்பட்டிருக்கிறார். இந்தியாவின் போர் விமான கொள்முதலில் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் …

  20. வடகொரியாவில் போர் மேகம் சூழந்துள்ளதால், அந்நாடு போருக்கான ஆயத்தப் பணிகளில் உள்ளது. மேலும், தென்கொரியாவுக்கு ஆதரவான அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அணு ஆயுதங்கள் கொண்டு தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ள நிலையில், ஜப்பான் நாடும் பதில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து தங்கள் பகுதிக்கு எந்த ஏவுகணைகள் வந்தாலும் உடனே அதை சுட்டு வீழ்த்துமாறு அது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ராணுவ அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இதுகுறித்து ஞாயிற்றுக் கிழமை ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஓரிரு நாளில் அனைத்தும் தயாராகிவிடும். கடலில் இருந்தும், நிலப் பகுதியில் இருந்தும் எதிர்ப்பு ஏவுகணைகள் தயாராக நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார். http://…

    • 2 replies
    • 887 views
  21. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸை ஒபாமாவர்ணித்து பேசியதாக எழுந்த பிரச்சனையில் நேற்று ஒபாமா தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்தார். இதற்கு இன்று பதில் கூறிய கமலா ஹாரிஸ் தரப்பு, அதிபர் ஒபாமாவின் வருத்தத்தை தான் ஏற்றுக்கொண்டதாகவும் இதை ஒரு பெரிய விஷயமாக தாம் நினைக்கவில்லை என்றும் அறிவித்திருக்கின்றார். இத்துடன் ஊடகங்கள் இந்த பிரச்சனையை முடித்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கமலா ஹாரிஸ் பல வருடங்களாக நெருங்கிய நண்பராக இருந்து வந்திருக்கின்றார் என்றும் அன்றைய நிகழ்ச்சியில் ஒபாமா தன்னுடைய அழகை வர்ணித்து கூறியதை தாம் தவறாக ஒருபோதும் நினைக்கவில்லை என்றும், ஊடகங்கள…

    • 0 replies
    • 608 views
  22. ஹீலியம்நிரம்பிய பலூன்கள் மூலம் Robben Island முதல் Cape Town வரை சாதனை புரிந்திருக்கின்றார் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒரு மெடிக்கல்மார்க்கெடிங்க் மேனேஜர். தென்னாப்பிரிக்காவில்வாழும் Matt Silver-Vallance என்ற 37 வயது நபர் ஹீலியம் என்ற வாயு நிரப்பிய 60 பலூன்களின் உதவியால் Robben Island முதல் Cape Town வரை உள்ள 3.7 மைல் தூரத்தை கடந்து புதிய உலக சாதனை புரிந்து உள்ளார். இதுவரை ஹீலியம் பலூனில் யாரும் இந்த இடத்தை கடந்ததில்லை. தென்னாப்பிரிககாவில்உள்ள நெல்சன் மண்டேலா குழந்தைகள் மருத்துவமனைக்கு நிதி திரட்டவே தான் இந்த சாதனையை செய்ததாக கூறும் இவர், தொலைக்காட்சிகளில் வானில் பறக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தே தனக்கு இந்த ஐடியா வந்ததாக பேட்டியில் கூறினார். இவரது சாதன…

    • 0 replies
    • 492 views
  23. டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ள நான்கு இளைஞர்களை டொரண்டோ காவல்துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புள்ள ஐந்தாவது நபரை வலைவீசி தேடிவருகின்றனர். கடந்த மார்ச் 19 ஆம் தேதி டொரண்டோவில் உள்ள Glenlake Avenue என்ற பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் இரவு 10.30 மணியளவில் கதவை உடைத்து ஐந்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து வீட்டின் உரிமையாளரை கடுமையாக தாக்கி அவருடைய வீட்டில் உள்ள பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றனர். காவல்துறையினர் தீவிர விசாரணை காரணமாக நேற்று படத்தில் காணப்பட்டுள்ள குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணை மூலம் டொர…

    • 2 replies
    • 699 views
  24. கனடாவில் Gatineau, பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு மர்ம நபர்கள் மரணம் அடைந்த சம்பவம் நேற்று நடந்தது. அதில் இறந்தவர்கள் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில், ஒருவர் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. Gatineau, குழந்தைகள் காப்பகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர்களில் ஒருவர் 38 வயதை சேர்ந்த பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர் என்றும் அவருடை பெற்றோர் பிரெஞ்சில் தற்போது வசித்து வருகிறார்கள் என்பது காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த மற்றொருவரின் பெயர் மற்றும் விபரங்கள் தெரியவில்லை. மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தின் காரணமும் இன்னும் அறியப்படவில்ல…

    • 0 replies
    • 394 views
  25. Arizona மலைப்பகுதியில் காணாமல் போன டொரண்டோ பெண் டாக்டர் மிட்புக்குழுவினரின் தீவிர முயற்சியால் உயிருடன் மீட்கப்பட்டார். Arizona பகுதியில் மலைப்பகுதிக்கு சென்ற டொரண்டோ பெண் டாக்டர் Elise Héon என்பவர் மலைப்பகுதியில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வந்ததை அடுத்து, மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று அவரை தேடிவந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் அவரை மலைப்பகுதியில் கண்டுபிடித்த அவர்கள் பெரிய கயிறு ஒன்றின் மூலம் அவரை காப்பாற்றினார்கள். அவரைக் காப்பாற்றிய சம்பவதம் இண்டர்நெட்டில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவருடைய் குடும்பத்தின் அவர் மீட்கப்பட்டதை நேரடியாக இண்டர்நெட்டில் பார்த்தனர். தற்போது Elise Héon சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டதாகவு…

    • 0 replies
    • 465 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.