உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26925 topics in this forum
-
ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப் படுவதாக அதிபர் மகமூத் அகமதி னேஜத் தெரிவித்தார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மேலை நாடுகளுடன் அதற்கு இணையாக போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனி இக்கருத்தை ஏற்றுக் கொண்டார். அதன்படி தற்போது 7 கோடியே 50 லட்சம் ஆக உள்ள ஈரானின் மக்கள் தொகையை 15 கோடியாக உயர்த்த வேண்டும். அதற்காக ஈரானில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ரத்து செய்யும் படி உத்தரவிட்டார். ஈரானில் மக்கள் தொகை பெருக்கத்துக்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன. அதற்…
-
- 7 replies
- 602 views
-
-
துருக்கியைச் சேர்ந்த பயணிகள் ஹெலிகாப்டரில் இருந்த 11 பேரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். துருக்கியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் நகரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்பார்வையிட அதன் அதிகாரிகள் குழு கோஸ்ட் நகருக்குச் சென்றுவிட்டு காபூலுக்கு ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது அஸ்ரா மாவட்டத்தில், கடும் சூறைகாற்றும், பலத்த மழையும் பெய்ததால், ஹெலிகாப்டர், ஒரு கிராமத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரைச் சூழ்ந்த தலிபான்கள் அதில் இருந்த 11 பேரையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=81063&category=WorldNews&language=tamil
-
- 3 replies
- 467 views
-
-
புதுடெல்லி: லடாக் ஊடுருவலைத் தொடர்ந்து இந்திய வான்வெளியில் சீன ஹெலிகாப்டர்களும் பறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 15 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள தொலத் பெக் ஒல்டி என்ற இடத்தில், சீன ராணுவத்தின் பிளாடூன் படைப் பிரிவினர், இந்திய எல்லைக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அத்து மீறி ஊடுருவி, கூடாரம் அமைத்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து,நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, "நாட்டின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் நடவடிக்கை எடுக்கும்'' என்று கூறியிருந்தார். அதன்படி எல்லைப் பகுதியில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, இந்திய …
-
- 0 replies
- 315 views
-
-
புதுடெல்லி:தொடர்ந்து வெளியாகும் ஊழல் புகார்களுக்கு பொறுப்பேற்றும், ஊழல்களை மூடி மறைப்பதற்காகவும் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். டெல்லியில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானி தலைமையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், பிரதமர் பதவி விலக கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊழல்களுக்கு பொறுப்பு ஏற்கும் வரை மத்திய அரசுக்கு ஒத்தழைப்பு தரப் போவதில்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற பா.ஜனதாவின் கோரிக்கைக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதமர் தமது கடமையை செய்ய பலமுறை தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா கருத்து தெரிவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
துப்பாக்கி ஏந்தும் பிஞ்சுகள்: அதிர்ச்சியளிக்கும் படங்கள்! அல் கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் படங்கள் சில வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப் படங்கள் அல் கொய்தாவுக்குச் சொந்தமான, பலரால் அறியப்படாத இணையத்தளமொன்றில் வெளியாகியுள்ளது. இவற்றை டேர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சியே குறித்த இணையத்தளத்துக்கு வழங்கியுள்ளதாகவும், அக்கட்சியே ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் இணைந்து போராடும் பொருட்டு போராளிகளுக்கு பயிற்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படங்களில் சிறுவர்கள் AK 47 துப்பாக்கிகள், பிஸ்டல்கள் போன்ற ஆயுதங்களுடன் பயிற்சி பெறுவது போல காட்டப்படுகின்றது. இச் சிறுவர்கள் உயிரிழந்த போராளிகளின் பிள்ளைகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது…
-
- 1 reply
- 457 views
-
-
அமெரிக்காவின் புளோரிடா மாநிலமானது இராட்சத நத்தைகளின் படையெடுப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் அங்கு தாவரங்கள் உட்பட பொதுசொத்துக்கள் பலவும் பாரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இராட்சத ஆப்பிரிக்க நத்தைகளே புளோரிடாவில் பெருகி வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவை சாதாரண எலியின் அளவுக்கு வளரக்கூடியது. மேலும் அவற்றின் வழியில் காணப்படும் எதனையும் உண்ணக்கூடியன. தென் புளோரிடாவின், மியாமி டெட் சீ பகுதியில் ஒவ்வொரு வாரமும் சுமார் 1000 இராட்சத நத்தைகள் பிடிக்கப்படுவதாக புளோரிடா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அங்கு மட்டும் கடந்த 2011 செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 117,000 நத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மேலும்…
-
- 0 replies
- 650 views
-
-
அண்மையில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மரதன் ஓட்டப்போட்டியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் பலியாகியிருந்ததுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து போலிஸ் புலனாய்வுத் துறையினரின் அதிரடித் தேடுதலிலும் வீடியோ ஆதாரங்கள் மூலமாகவும் இதில் சம்பந்தப்பட்ட ஒரு சந்தேக நபராகக் கைது செய்யப்பட்ட Dzhokhar Tsarnaev மீது தண்டனை விதிப்பதற்கு வழக்கறிஞர்கள் முயன்று வருகின்றனர். இந்நபர் மீது பொதுமக்களைக் கொல்வதற்கு ஆயுதங்களைப் பாவித்த குற்றத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப் படும் சாத்தியம் அதிகம் எனக் கூறப்படுகின்றது. மேலும் இவரும் இக்குண்டுவெடிப்பில் சிக்கியிருந்ததால் தற்போது தொண்டையில் காயம் ஏற்பட்டு பேச முடியாத சூழ்நிலையில் வைத்திய சாலையில் உள்ளார். இதனால் பத்திரத்தில…
-
- 0 replies
- 355 views
-
-
22 ஏப்ரல், 2013 நைஜீரியாவின் வடக்கில் இஸ்லாமியவாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நடந்த உக்கிர சண்டையில் குறைந்தபட்சம் 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சாட் நாட்டுடனான எல்லைக்கு அருகில் உள்ள பாகா என்ற ஊரில் ராக்கெட் எறிகுண்டு வீச்சுகள் மற்றும் பெருமளவான துப்பாக்கிச் சூட்டுடன் கடந்த வெள்ளியன்று கடும் சண்டைகள் மூண்டிருந்தன என்று அரசாங்கமும் இராணுவ அதிகாரிகளும் கூறுகின்றனர். போக்கோ ஹராம் இயக்கத்தைச் சேர்ந்த ஆயுததாரிகளை விரட்டுவதற்கு இராணுவத்தினர் முயன்றபோது இந்த மோதல்கள் வெடித்தன. மோதல்களில் இருந்து தப்பிப்பதற்காக வெள்ளியன்று வாழ்விடங்களை விட்டு வெளியேறி அக்கம்பக்கத்தில் இருந்த காடுகளுக்குள் அவ்வூர…
-
- 0 replies
- 289 views
-
-
5 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் பெண்கள் அமைப்பினர் நடத்தி வரும் போராட்டம் வலுத்து வருகிறது. அவர்கள், டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், ராஜினாமா செய்ய அவர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் நீரஜ்குமார் கூறுகையில், ‘‘எனது ராஜினாமா சமுதாயத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த உதவுமானால், நான் ஆயிரம் முறை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால், இதனால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை’’ என்று தெரிவித்தார். மேலும், சிறுமி பாலியல் வல்லுறவு சம்பவம் உளவியல் சம்பந்தப்பட்டது என்றும், யாரும் ராஜினாமா செய்வதால் இதற்கு தீர்வு ஏற்படப்போவதில்லை என்றும் கமிஷனர்…
-
- 0 replies
- 391 views
-
-
மனிதக் கணினி சகுந்தலா தேவி காலமானார் உலகின் வேகமான மனிதக் கணினி என்று புகழ்பெற்ற கணிதப் புலமையாளர் சகுந்தலா தேவி காலமானார். அவருக்கு வயது 83. ஆரம்பத்தில் சுவாச நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் இதய மற்றும் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் இலக்கங்களைக் கொண்ட மிகச் சிக்கலான கணக்குகளுக்கு கூட மிகக்குறுகிய நேரத்தில் மனக்கண்ணிலேயே தீர்வுகாண்பதில் வல்லவர் என்று சகுந்தலா தேவி புகழ்பெற்றவர். அவர் சிறுவயதில் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆனால் தானாக வந்த அறிவைக் கொண்டே அவர் இந்தக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக்கொண்டுள்ளார். பழைய நூற்றாண்டொன்றின் திகதியைக் கூறினால் மறுநொடியிலேயே அதன் நாளை (கிழமையை) சொல்லுமளவுக்கு அவர் திறமைகொண்டவர். …
-
- 13 replies
- 885 views
-
-
CANADA says it has thwarted an al-Qaeda-supported plot to attack a passenger train in the greater Toronto area. Two men have been arrested and charged but police said there was no imminent threat. The Royal Canadian Mounted Police said Monday that Chiheb Esseghaier and Raed Jaser were conspiring to carry out an attack against Via Rail. "It was definitely in the planning stage but not imminent," RCMP chief superintendent Jennifer Strachan told reporters. The duo received "direction and guidance" from al-Qaeda, officials said. Charges against the two men include conspiring to carry out an attack and murder people in association with a terrorist group. Police…
-
- 17 replies
- 953 views
-
-
இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கத் 'தக்க நடவடிக்கை' எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி சீனாவை எச்சரித்துள்ளார். இந்திய நிலப்பரப்புக்குள் சீனப் படையினர் முகாம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்தோனி கூறினார். ஹிமாலயா மலைப் பிராந்தியத்தில் உள்ள கிழக்கு லடாக் பிரதேசத்துக்குள் கடந்த வாரம் நுழைந்துள்ள சீனப்படையினர் அங்கு கூடாரங்களை அமைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப் பிராந்தியம் எப்போதுமே இராணுவ கொதிநிலையை உண்டாக்கக் கூடியதாக இருந்துவருகின்றது. இந்த எல்லை சர்ச்சைகள…
-
- 33 replies
- 1.8k views
-
-
சென்னை: 19 ஈழத் தமிழர்களை துபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பாமல், வேறு நாடுகளுக்கு அனுப்ப, இந்திய வெளிவிவகாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். துபையில் உள்ள 19 ஈழத் தமிழர்களை, இலங்கைக்கு அனுப்ப துபாய் அரசு திட்டமிட்டு உள்ளது. அவர்களை இலங்கைக்கு அனுப்பினால், கொடூரமான சித்ரவதைக்கும் உயிர்க்கொலைக்கும் ஆளாவார்கள்; எனவே, அவர்களை இலங்கைக்கு அனுப்ப விடாமல் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2 ஆம் தேதி கடிதம் எழுதினார். இது தொடர்பாக, ஏப்ரல் 6 ஆம் தேதி, பிரதமரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வைகோ பேசினார். அப…
-
- 0 replies
- 362 views
-
-
புதுடெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் அமளியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, " பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமல்ல...நாடு முழுவதும்தான் நடைபெறுகிறது” என்று கூறினார். அவர் மேலும் பேசுகையில், "டெல்லி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், அவள் காணாமல் போனது தொடர்பான புகாரை விசாரிப்பதில் காவல்துறையினர் மெத்தனம் காட்டினார்களா என்பது குறித்தும், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை மூடிமறைக்க முயன்றதாக கூறப்படுவது குறித்தும் அறிந்துகொள்ள டெல்லி காவல்துறையின் கண்காணிப்பு பிரிவு இணை போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிடப…
-
- 0 replies
- 335 views
-
-
இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை-நிதின் குப்தா,அய்.அய்.டி-மும்பை. மிகவும் சுவாரசியமானதும், நமது விழிகளை விரியச் செய்வதுமான ஒரு கட்டுரை இங்கே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. ரசிக்கத் தயாராகுங்கள். இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை என்று மும்பை அய்.அய்.டி-யில் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் நிதின் குப்தா ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ளார். எல்லோருக்கும் இந்த பதில் சற்று வியப்பாகவும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். உத்தரப்பிரதேசத்தில் நடப்பதைப் பார்த்தப் பிறகு, நான் இந்தியனாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் என்ற ராகுல் காந்தியின் அங்கலாய்ப்புக்கு நிதின் குப்தா கொடுத்துள்ள பதில் தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இதோ நிதின் குப்தாவின் கட்டுரை:- உத்திரப்பிரதேசத்…
-
- 1 reply
- 905 views
-
-
அமெரிக்க சிறையில் சித்திரவதைபடும் முஸ்லிம் விஞ்ஞானி ஆபியா சித்தீக். ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார்.டாக்டர் ஆபியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம்(Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்திரவதைப்படுத்தப்படுவதாக செய்திகள் கசியத்துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சுயாதீன ஊடகங்களின் பார்வை அந்தப் பக்கம் திரும்பியது மீடியக்களின் அழுத்தம் தாங்க முடியாமல் பிரிட்டிஷ் மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி ஆதாரங்களை முன்வைத…
-
- 1 reply
- 1.2k views
-
-
மதுரை புதூரில் கட்சி பிளக்ஸ் போர்டுகள் அகற்றம் தொடர்பாக, காங்., மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்குள், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதூரில் நாம் தமிழர் கட்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தலைவர் சீமான் பேசினார். இதற்காக, நேற்று முன் தினம் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்தனர்.அவற்றில், தங்கள் கட்சி தலைவர்களை இழிவுப்படுத்தி இருப்பதாக, காங். கட்சியினர் புதூர் போலீசில் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, காலையில் நாம் தமிழர் கட்சி பிளக்ஸ் போர்டுகளை போலீசார் அப்புறப்படுத்தினர். ஆனால், நாம் தமிழர் கட்சியினர் பிளக்ஸ் போர்டுகளை கொடுக்கும்படி, புதூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள காங்., கட்சி அலுவலகத்தில் இருந்தவர்களிடம் கேட்டன…
-
- 0 replies
- 498 views
-
-
பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் இருவருடைய தாயார் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். “எனது மகன்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டது உளவுத்துறை எஃப்.பி.ஐ.யின் செட்டப். அவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக உளவுத்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார்கள்” என்கிறார் இவர். பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் இருவரும் செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து சிறு வயதில் கஸகஸ்தான் நாட்டுக்கு குடிபெயர்ந்து, பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்கள். இருவரும் சகோதரர்கள். இருவரில் மூத்தவர் போலீஸ் சூற்றிவளைப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றையவர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும்தான் குண்டு வைத்தவர்கள் என்பதை ஏறக்கு…
-
- 3 replies
- 739 views
-
-
Moulin-Fournier குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கடந்த 19 பெப்ரவரி 2013 இல் கமெரூனில் வைத்துக் கடத்தப்பட்டனர். இவர்கள் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான 'பாக்கோ ஹரம்' இனால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டு நைஜீரியாவிலும் கமெரூனிலும் வைக்கப்பட்டுள்ள தமது உறுப்பினர்களை விடுவித்தால் மட்டுமே பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் 'பாக்கோ ஹரம்' அமைப்பினர் தெரிலித்திருந்தனர். இந்தச் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்கள் அறிந்ததே. இப்பணயக்கைதிகள் நைஜீரியா, கமெரூன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களின் பெரும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இவர்கள் விடுவிக்கப்பட்ட விதம் பற்றி பிரெஞ்சு அரசாங்கம…
-
- 0 replies
- 404 views
-
-
24 வயதுடைய ரப் இசைப் பாடகன் ஒருவர் நேற்று புதன்கிழமை இரவு Pierrelaye (Val-d'Oise), இலுள்ள நீர்ச்சாடிக்குள் புகைத்தல் பொருள்விட்டுப் புகைக்கும் chicha அருந்தகம் (Bar) ஒன்றில் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அருந்தகம் கடந்த பெப்ரவரிமாத இறுதியிலேயே திறந்து வைக்கப்பட்டது. Saint-Ouen-l'Aumône ஐப் பிறப்பிடமாககப் கொண்ட யனிஸ் (YANIS) எனப்படும் இந்தப் பாடகர் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உயிர் போகும் மிகவும் மோசமான நிலையில் முதலுதவிச் சிகிச்சசைப் படையினர் Pontoise இலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை. ஒரே ஒரு சூடு மட்டுமே சுடப்பட்டுள்ளது. இதற்குச் சற்று முன்னதாக…
-
- 0 replies
- 434 views
-
-
டெல்லி: கிழக்கு டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு அதே பகுதியில் 13 வயது சிறுமியை 8 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிழக்கு டெல்லி பர்ஷ் பஜார் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் அவரது 12 வயது தம்பி ஆகியோர் கடந்த மாதம் 15ம் தேதி வீட்டுக்கு முன்பு நின்று கொண்டிருக்கையில் அவர்களுக்கு தெரிந்த 2 பேரால் கடத்தப்பட்டனர். அந்த நபர்கள் அவர்களை நகருக்கு வெளியே இருக்கும் லோனி என்ற இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அந்த 2 பேரும், மேலும் அவர்களுடன் 6 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கிடையே பிள்ளைகளை காணவில்லை என்று அவர்களின் தந்தை போலீசில் புகார் கொடு…
-
- 15 replies
- 973 views
-
-
இந்திய எல்லைக்குள் 10 கி.மீ., தூரம் ஊடுருவியுள்ள சீன ராணுவத்தினர்இன்று கடந்த வாரம் கடந்த மாதம் ஆல்பம் புதுடில்லி : இந்திய எல்லைக்குள், சீன ராணுவத்தினர், 10 கி.மீ., தூரம் ஊடுருவி, சோதனைச் சாவடியை அமைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், இந்திய - சீன எல்லையில், லடாக்கை ஒட்டியுள்ள, தவுலத் பெக் ஒல்டி என்ற பகுதிக்குள், சீன ராணுவத்தை சேர்ந்த, 50 வீரர்கள் ஊடுருவியுள்ளனர். இந்திய எல்லைக்குள், 10 கி.மீ., தூரம் வரை, ஊடுருவியுள்ள அவர்கள், சோதனைச் சாவடியையும் அமைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால், எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகையில்," சீன …
-
- 6 replies
- 615 views
-
-
அமெரிக்காவில் பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களில் உடல் முழுக்க ரத்தம் தோய்ந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். ஒருவரது வீட்டின் பின்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றுக்குள் மறைந்திருந்த நிலையில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்குமுன் இவரது மறைவிடத்தை சூழ்ந்துகொண்ட போலீஸ் சுமார் 30 தடவைகள் சுட்டபோது, இவருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அந்தக் காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட தப்பியோடி, வீடு ஒன்றின் பேக்-யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுக்குள் மறைந்த 19 வயது சந்தேக நபர் ஷோக்கர் சர்னயேவ் கைது செய்யப்பட்டார் என்பதை பாஸ்டன் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும்…
-
- 8 replies
- 846 views
-
-
நேற்று (வெள்ளிக்கிழமை) டில்லி உயரதிகாரி ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சில விஷயங்கள் பேசியதாக தெரிகிறது. முதல்வரை மட்டுமின்றி, நிர்வாக விஷயங்களில் முதல்வருக்கு ஆலோசனை கூறும் தமிழக அரசு உயரதிகாரி ஒருவரையும், காவல்துறையில் ‘ரகசிய’ இலாகா துணை தலைவரையும், டில்லி அதிகாரி சந்தித்திருக்கிறார். டில்லியில் இருந்து நேற்று காலை சென்னை வந்த அந்த அதிகாரி, நேற்று மாலை பிளைட் பிடித்து டில்லி திரும்பிவிட்டார். தமிழக அரசு இலங்கை விவகாரத்தை டீல் பண்ணும் விதம் தொடர்பாக, ‘சற்று காரமாக’ டில்லியில் இருந்து ஒரு மெசேஜை இந்த அதிகாரி கொண்டுவந்தார் என்கிறார்கள். “ஒரு மாநில சட்டமன்றத்தில் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாதிப்பதாக அமையக் கூடாத…
-
- 0 replies
- 637 views
-
-
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இன்று தேர்தல் நடைபெறும் சமயத்தில் நள்ளிரவு கழித்து பில்லியார்ட்ஸ் கஃபே ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 27 பேர் பலியாகியுள்ளனர். இதில் 3 குழந்தைகளும் 2 பெண்களும் அடங்குவர். இன்று ஈராக்கில் நடைபெறும் தேர்தல் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதிலிருந்து இடம்பெறும் முதலாவது தேர்தல் ஆகும். இத்தாக்குதல் மூலம் நாளை நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலிலும் பாதுகாப்புக் குறித்த நம்பகத் தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. ஈராக்கில் ஏற்கனவே 14 வேட்பாளர்கள் கொல்லப் பட்ட நிலையில் 3 மாகாணங்களில் அரசியற் பிரச்சினை காரணமாகத் தேர்தல் இடைநிறுத்தப் பட்டிருந்தன. ஈராக்கில் நடைபெற்று வரும் இத்தேர்தல்களின் மூலம் அதன் அரசியல் ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும் அதிகரிக்கும் என எதி…
-
- 0 replies
- 469 views
-