Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வலியற்ற கொலையின் பண்புநெறியும் சட்டமும் குறித்து இந்தியாகூட விவாதித்திருக்க, எவரிடம் நீர் கேட்கின்றீர் என்பதைப் பொறுத்து, தெற்கு மாநிலமான தமிழ் நாட்டின் மூன்று மாகாணங்கள், ஓசையில்லாது உள்@ரில் விளைந்துவந்த கருத்தொன்றை பத்து அல்லது நூறு ஆண்டாக, எடுத்துச் செல்கிறது. இன்னம்ரெட்டியார்பட்டி, இந்தியா — தெற்கு இந்தியாவின் அந்த வறிய பகுதியில், தனது மனைவி, பிள்ளைகளோடு உடல்வலுவற்ற தாயை வீட்டில் விட்டுவிட்டு, மைக்கேல் ஒரு துணி நெய்யப்படும் ஆலைக்கு வேலைக்குச் சென்றான். அவன் சில மணி நேரத்தின் பின்பு திரும்பிவந்தபோது அவனுடைய மனைவியினால் நஞ்சு போன்ற நீரம் பருக்கி நஞ்சூட்டி, ‘தாலிக்கூதல்’ என அறியப்படுகின்ற, உள்ளூர் வகையான இரக்கக் கொலை செய்யப்பட்டிருந்த அவனது தாயாருடைய உடல் ஒரு நாற்காலிய…

  2. சிங்கப்பூர்: என்னை பிரதமர் வேட்பாளர் என்று திரும்பத் திரும்பத் கூறுவது எனக்கு ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கிறது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ப.சிதம்பரம் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு சில மாதங்களாக அடிபட்டு வந்தது. இதற்கு சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று கூறியிருந்தார். இந்தநிலையில் சிஎன்பிசி டிவி 18தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், எனது அளவு, எல்லை என்ன என்பது எனக்குத் தெரியும். எனவே நான் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்வி எனக்கு ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கிறது. எனது எல்லைக்குட்பட்டு நான் செயல்பட்டு வருகிறேன். …

  3. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி மிக, மிக மோசமாக உள்ளதாக ஏபிபி நியூஸ்-நீல்சன் நிறுவனம் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பிரபல ஏபிபி நியூஸ்-நீல்சன் நிறுவனம் சார்பில் யார் சிறந்த பிரதமராகலாம் என்றும் அடுத்த பிரமதராகும் தகுதி குறித்தும் ஓர் ஆய்வு நட‌த்த‌ப்ப‌ட்டது. இந்த கருத்து கணிப்பு இந்தியாவின் 28 நகரங்களில் சுமார் 10 ஆயிரம் பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. முதல் தகவலாக பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. அந்த கூட்டணிக்கு 39 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அபரிதமாக இருப்பதாகவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்களில் பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதிய…

  4. ""பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,'' என, மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; ஆட்டோ டிரைவர். மும்பையில், மலாட் எஸ்.பி., கான்சால் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள், 45, மகள்கள் மகாலட்சுமி, 27, பிரேமா, 25, மகன் தன்ராஜ், 23. மகாலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெரிய கொள்ளியூரில் விவசாய கூலிவேலை செய்து வந்த ஜெயக்குமார், போதிய வருவாய் கிடைக்காததால், தன்…

  5. டேராடூன்: டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி இரவு, ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். "பிசியோதெரபி' படித்த இந்த மாணவி, கடைசியாக எழுதிய தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகிஉள்ளன. இதுதொடர்பாக, மாணவி படித்த, சாய் நிறுவனத்தின் டீன் ஹரீஷ் அரோரா கூறியதாவது: பாலியல் பலாத்காரத்தில் பலியான மாணவி, 2008ம் ஆண்டு, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, எச்.என்.பி.கார்வால் பல்கலையின் கீழ் செயல்படும், எங்கள் கல்வி நிறுவனத்தில், பிசியோதெரபி பாட வகுப்பில் சேர்ந்தார். நான்கு ஆண்டு பட்டப்படிப்பான அதில், அவர் கடைசியாக எழுதிய தேர்வில், அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து, 73 சத…

  6. சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) இன்று (ஜனவரி 25) வெளியாக இருந்த விஸ்வரூபம் படத்திற்கு, இஸ்லாமியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து நாளை (சனிக்கிழமை) உயர்நீதிமன்ற நீதிபதிக்கு விஸ்வரூபம் படம் போட்டு காண்பிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளனவா என்பது பற்றி நீதிபதி ஆய்வு செய்வதற்காக இந்த திரையிடல் நடைபெறுகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்திரிக்கும் ஏராளமான காட்சிகள் உள்ளதாகவும், எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இஸ்லாமி…

  7. டெல்லி: ஏர்டெல், வோடபோன் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளன. ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்பது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஐடியா நிறுவனம், ஒரு நொடிக்கு 1.2 பைசா என்று இருந்ததை 2 பைசாவாக அதிகரித்து உள்ளது. செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதுவரை கட்டணத்தை உயர்த்தாமலே இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்ட பிறகு ரூ.23,000 கோடி கட்டணம் செலுத்தும்படி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் அனுமதி கட்டணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. …

  8. சென்னை ,ஜனவரி 25 . ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,” தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள்,பிளாட்பாரங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க முன்வந்து உள்ளது. இதன் காரணமாக ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது,குளிப்பது,சிறுநீர் கழித்தல்,துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ரயில்வே சட்டபிரிவுபடி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் போஸ்டர் ஒட்டுதல் மற்றும் சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கும் இந்த சட்டம் ப…

  9. ராமேஷ்வரம்,ஜன.19 (டி.என்.எஸ்) பாம்பேன் ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதற்கு மாலுமியின் கவனக்குறைவே காரணம் என்று கடலோர படை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபு கூறியுள்ளார். பாம்பன் பாலம் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட இடத்தை இன்று நேரில் ஆய்வு செய்த சைலேந்திர பாபு செய்தியாளர்களிடன் பேசுகையில், "இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க கப்பல் மாலுமியின் கவனக் குறைவேக் காரணம். இதனால் பாம்பன் பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாலத்துக்கு சுமார் 3.8 நாடிங்கல் மைல் தூரத்தில் நிறுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு கப்பல் நிறுத்தப்படவில்லை. எனவே, கப்பல் மாலுமிகள் மீது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, கவனக்குறைவாக நடந்து கொண்டது…

  10. சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் புதிய மருத்துவமனையாகப் போகிறது. ஆம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த திமுக ஆட்சியின் போது சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டு, அதில் தமிழக சட்டசபை இயங்கி வந்தது. இதற்கிடையில் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புதிய கட்டிடத்தில் செயல்பட்ட தலைமை செயலகத்தை, மீண்டும் பழைய ஜார்ஜ் புனித கோட்டைக்கே மாற்றப்பட்டது. மேலும் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்குறிஞர் ஆர…

  11. சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) உரத் துறையில் ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள அந்தத் துறையின் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமன் மன்மோகன் சிங்கிட வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உரங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிலையாக இருக்கும் வகையில், உரத்துக்கான மானியத்தை அவ்வப்போது மாற்றி நிர்ணயிக்கும் முறையை மத்திய அரசு கடைப்பிடித்து வந்தது. இதனால் உரங்கள் விவசாயிகளுக்கு ஓரளவு நியாயமான விலையில் கிடைத்து வந்தன. 2010 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் என்ற புதிய கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. இந்தக் கொள்கையின்படி, உரங்களுக்…

  12. உலகளாவிய உணவுப் பொருள் ஊக வணிகத்தில் கோல்டமேன் சாக்ஸ் நிறுவனம் 2012ம் ஆண்டு $400 மில்லியன் (சுமார் ரூ 2,000 கோடி) லாபம் சம்பாதித்திருக்கிறது. தனது வாடிக்கையாளர்களின் பணத்தை கோதுமை, மக்காச் சோளம், காபி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களின் மீதான ஊக வணிகத்தில் ஈடுபடுத்தியதாக கோல்ட்மேன் சாக்ஸின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. “போதுமான உணவு வாங்க முடியாமல் உலகெங்கிலும் சுமார் 100 கோடி மக்கள் பட்டினியாக இருக்கும் நிலையில், உணவுப் பொருட்களின் விலை மீது சூதாடி கோல்மேன் சாக்ஸ் அலுவலர்கள் தங்களது போனசை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் உலக முன்னேற்ற இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த கிறிஸ்டீன் ஹெய்க். 1990களில் இறுதியில் தாராளமய கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு உணவுப் பொரு…

    • 0 replies
    • 389 views
  13. சீனாவில், 875 கோடி ரூபாய் அளவுக்கு, 20 வீடுகளை வாங்கி குவித்த, பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது. சீனாவில், தனி நபர், பல வீடுகளை வைத்திருக்க தடை உள்ளது. இதை மீறி பலர் ரகசியமாக வீடுகளை கட்டி, வாங்கி வருகின்றனர். சமீபத்தில் அரசு அதிகாரி ஒருவர், தன் குடும்ப உறுப்பினர் பெயர்களில், 31 வீடுகளை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, சீன வங்கி அதிகாரியான கோங் அய்அய், என்ற பெண், ஷான்சி மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், தலைநகர் பீஜிங்கிலும், 20 வீடுகள் கட்டி, வாங்கியுள்ளார். பல்வேறு பெயர்களில் வீடுகளை கட்ட, பதிவுத்துறை அதிகாரிகள், இவருக்கு உதவியுள்ளனர். இணைய தளத்தில் பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து, கோங் அய்அய், பல இடங்களில் வீடு கட்டியிருப்பது தெரிய வந்…

    • 0 replies
    • 546 views
  14. இங்கிலாந்து நாட்டின் Derbyshire என்ற இடத்தில் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு பயங்கர விபத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 42 வயது தந்தை ஒருவர் தன்னுடைய 11 வயது மகளுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் அவருடைய மனைவி, தனது 9 வயது மகனுடன் இன்னொரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். இருவரும் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். முன்னாள் சென்று கொண்டிருந்த கார், திடீரென சாலையை விட்டு விலகி, ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து, அருகிலுள்ள ஆற்றில் விழுந்து கவிழ்ந்தது. பின்னால் வந்த அவருடைய மனைவியின் காரும், அதேபோல கட்டுப்பாட்டை இழந்து, அதே ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டாவது காரில் வந்த மனைவியும், மகனும் முதல் கார…

    • 0 replies
    • 425 views
  15. சென்னை:""என் குடும்பத்தில், சம்பந்தம் எடுத்துள்ளதால், போலீஸ் அதிகாரி சண்முகராஜேஸ்வரனுக்கு, என்ன விளைவு ஏற்படுமோ...'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். கருணாநிதி கொள்ளு பேத்தியும், சினிமா நடிகராக இருந்த, மு.க.முத்து-சிவகாம சுந்தரியின் பேத்தியும், தொழில் அதிபர் ரங்கநாதன், தேன்மொழி மகளுமான அமுதவல்லிக்கும், திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் மகன் சித்தார்த்க்கும், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று திருமணம் நடந்தது. மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசியதாவது:டில்லியில், எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும், கட்சி சார்பற்று தலைவர்கள் பங்கேற்கின்றனர்; தமிழகத்தில் அந்த நிலை இல்லை.கருணாநிதி வீட்டில் அல்லது அவரது குடும்பத்தார் வீட்டில், இதுபோன்ற, சம்பந்தங்…

    • 0 replies
    • 688 views
  16. நாக்பூர்: தமது நிறுவனங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகளை மிகக் கடுமையாக மிரட்டியுள்ளார் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி. பாஜகவின் தலைவராக இருந்த கத்காரிக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் மீண்டும் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த நிலையிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதனால் அவர் தலைவர் பதவியை இழக்க நேரிட்டது. ராஜ்நாத்சிங் மீண்டும் தலைவரானார். இந்நிலையில் டெல்லியில் இருந்து நாக்பூர் திரும்பிய கத்காரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய கத்காரி, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்த அதிகாரிகள் அனைவரும் எங்கே போவார்கள்? ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அந்த அதிகாரிகளை காப்பாற்ற காங்கிரஸ் தலைவ…

    • 0 replies
    • 478 views
  17. சென்னை: கடலூர் மாவட்டத்தில் ராமதாஸ் நுழைய விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு பகுதிகளில் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். வடலூரில் கடந்தவாரம் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்.எல்.ஏ. குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமாரும் உத்தரவிட்டிருந்தார். இந்த தடை உத்தரவு 21.1.2013 முதல் 20.3.2013 வரையிலான காலத்துக்கு அமலில் இருக்கும் என்று அவர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் ராமதாசுக்கு தடை விதித்ததை எதிர்த்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட…

  18. மத்திய உரத்துறையில் மானியம் வழங்குவது தொடர்பான விவகாரத்தை பயன்படுத்தி உர நிறுவனங்களுக்கு லாபம் கிட்டுமாறு முறைகேடு நடத்தி மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தமிழக முதல்வர் ஜெ., திடுக் புகார் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி தி.மு.க.,வை சேர்ந்த மத்திய உரத்துதுறை அமைச்சர் அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ., வுக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய உரத்துறையில் பெரும் முறைகேடு நடந்திருக்கிறது. உரங்களை சந்தைக்கு அனுப்புவதில் நடந்தது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா கூட அதிருப்தி தெரிவித்துள்ளார். மானியம் குறையும் என கருதி தேவையில்லாமல…

  19. புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை அடிப்பேன் என்று நான் பேசவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நான் பேசியதை சில ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்தி வெளியிட்டுள்ளன என்று அவர் குறை கூறியுள்ளார். உர விலை உயர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமரை 10 க்கும் மேற்பட்ட முறை சந்தித்து விட்டேன். இதற்கு மேல் அவரை நான் அடிப்பேன் என்று மம்தா பேசியதாக திங்கட்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து மம்தா மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் தீபா தாஷ்முன்ஷி வலியுறுத்தினார். இந்நிலையில் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மம்தா விளக்கமளித்தார். அப்போது பிரதமரை அடிப்பது என்று நான் பேசவில்லை. ஊடகத்தின் ஒரு பிரிவினர் தங்களின்…

  20. இஸ்ரேலின் 19வது நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு 22ஆம் நாளிரவு முடிவடைந்துள்ளது. பொது மக்களின் கருத்துக் கணிப்பின்படி, நெத்தன்யாஹு தலைமையிலான லிகுட் கட்சியும், எமது தாயகக் கட்சியும் இணைந்த கட்சிக் கூட்டணி, 31 இடங்களைப் பெற்று அமைச்சரவையை உருவாக்கும் என தெரியவந்துள்ளது. இக்கூட்டணி அடங்குகின்ற இஸ்ரேல் ஐக்கிய வலது சாரி கூட்டணி 61 அல்லது 62 இடங்களை மட்டுமே பெறக் கூடும். ஆனால் விதியின்படி, கூட்டணி அரசை உருவாக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவைப்படும். எனவே, நெத்தன்யாஹு அமைச்சரவையை உருவாக்குவது மிக கடினமாக இருக்குமென மதிப்பிடப்படுகிறது. http://tamil.cri.cn/121/2013/01/23/104s124801.htm Israel elections: Benjamin Netanyahu declares victory http://www.youtube.com/watch?v…

  21. சென்னை: ஏராளமான தடைகளையும், இடைஞ்சல்களையும் சந்தித்தாலும், அவற்றை தவிடுபொடியாக்கி சாதனை படைத்து வருவதாக சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் கருணாநிதி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில்,"ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருக்கும் தாங்கள், ஏராளமான தடைகளையும், இடைஞ்சல்களையும் சந்தித்தாலும், அவற்றை தவிடுபொடியாக்கி சாதனை படைத்து வருகின்றீர்கள். தடைக் கற்களை படிக்கட்டுகளாக மாற்றியிருப்பதே மிகப்பெரிய வெற்றியாகும். இந்த அசாதாரண சூழ்நிலையில், மத்தியில், பாதுகாப்பான, நிலையான ஆட்சியை தங்களால்தான் தர ம…

  22. நோர்வே அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பகங்களில் 52 சிறுவர்கள் மீது மோசமான துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்துக்குட்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 42 பேர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு குற்றங்கள் நிருபிக்கப்பட்டு தண்டனைகளும் வழங்கப்பட்டிருப்பதாக நோர்வேயின் ஊடகமான Addresseavisen தனது இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்தே இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்று வந்திருப்பதால் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நோர்வேயில் குழந்தைகள் பராமரிப்பில் பெற்றோர்கள் தவறிழைத்திருப்பதாகக் கூறிரய நோர்வே சிறுவர் காப்பகங்களால் சிறுவர்கள் பெற்றோரிடதிலிருந்து பிரிக்கப்படுகின்றனர். …

  23. 'ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வது பற்றி மக்கள் கருத்து அறியப்படும்' - கமரன் பிரிட்டனின் ஆளும் கான்சர்வேட்டிவ் கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால், பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தப் போவதாக பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார் நெகிழ்வுத்தன்மையுடைய, பொருந்திப் போகக்கூடிய மேலும் வெளிப்படையான ஒரு உறைவை உருவாக்கும் வகையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்றும் அதன் முடிவுகள் 2018 இல் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் கமரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்தும் இருக்கும் வகையிலான உறவையே தான் விரும்ப…

  24. அண்ணனை 12 வயதான தம்பியே சுட்டுக்கொண்ட சம்பவம் கனடாவின் மாண்டரியல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மாண்ட்ரியலின் புறநகர்ப்பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் மாலைவேளையில் திடீரென்று தனது 16 வயது அண்ணனை, 12 வயதான தம்பி துப்பாக்கியால் சுட்டுகொன்றான். பொலிசார் துப்பாக்கிசூடு நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று அச்சிறுவனை கைது செய்து அவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். பின்பு அச்சிறுவனை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அவனது பெற்றோர்களும் அந்த அறையில் இருந்தனா். அவனைப் பற்றிய தகவல்களை பொலிசார் பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கவில்லை. அந்த சிறுவன் குறித்து அண்டை வீட்டார் கூறுகையில், இந்தச் சிறுவா்கள் மென்மையானவர்கள், அன்போடு பழகுவார்கள், உதவி செய்யும் மனப்பான்மை நிற…

  25. விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி இன்று (23.01.2013) மாலை 4.30 மணி அளவில் இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமலஹாசனின் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். http://tamil.allnews.in/news/state-news/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.