உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26727 topics in this forum
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் இந்திய மண்ணில் நிலக் கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. தொடரும் பதிலடியும் பலியும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஜனவரி 6-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தந்த பதிலடியில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பின்னர் ஜனவரி 8-ந் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவி இரு இந்திய ராணுவ வீரர்களை மிகக் கோரமான முறையில் படுகொலை செய்தனர். மேலும் ஹேம்ராஜ் என்ற ராணுவ வ…
-
- 0 replies
- 336 views
-
-
புற்றுநோயை குணப்படுத்தும் மூலக்கூறை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயிர்கொல்லி நோயான புற்றுநோயால், இந்தியாவில் ஆண்டுதோறும் ஏராளமானோர் இறக்கின்றனர். இந்த நோய்க்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சைகள் பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. இந்நோயை குணப்படுத்துவதற்கான மாற்று மருந்தை கண்டுபிடிக்க பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் டாக்டர் சதீஷ் சி ராகவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில், புற்றுநோயை குணப்படுத்துவதற்கான புதிய மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்நோயை குணப்படுத்துவற்கான புதிய மருந்துகளை தயாரிப்பதில் இந்த மூலக்கூறு புரட்சியை ஏற்படுத்தும் என்று இக்குழு தெரிவித்துள்ளது. இந்த ம…
-
- 0 replies
- 331 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக புரட்சி வெடிக்கும் நிலையில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அந்நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் மதகுரு காத்ரி தலைமையில் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் அரசுக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றமும் இன்னொருமுனையில் களமிறங்கியிருக்கிறது. இந்த சூழலில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிபர் ஆசிப் அலி சர்தாரி, கராச்சி விமான நிலையம் வழியே துபாய்க்கு குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு மாறுபாடாக கராச்சி விமான நிலையம் வழியாக சர்தாரியின் குடும்பத்தினர் மட்டும் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சர்தாரியின் குடு…
-
- 0 replies
- 328 views
-
-
வாடகை தாய்மார்கள் குறித்த புதிய சட்ட திருத்தத்தை இந்தியா அமல்படுத்தி உள்ளதால் இனி ஆஸ்திரேலியர்களின் வரத்து மிக வெகுவாக குறையும் என தெரிய வந்துள்ளது.வெளிநாட்டில் வாழும் பலர் தங்களால் குழந்தை பெற்று கொள்ள இயலாத பட்சத்தில், விந்து அணுக்களை கொண்டு வந்து வாடகை தாய்மார்கள் உதவியுடன் இந்தியாவில் குழந்தை பெற்று எடுத்து செல்கின்றனர். ஆரம்பத்தில் மிக சிறிய அளவில்நடந்த இந்த தொழில் பின்பு மிக அதிக வருமானம் தரும் தொழிலாக மாறியது. வட இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுத்தர பல மருத்துவ மனைகள் முளைத்தன. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ மனைகளுக்கு இது கல்லா கட்டும் தொழிலாக மாறியது. வெளி நாட்டில் வசிப்பவர்கள் இதுபோன்ற மருத்துவ மனைகளை தொடர்பு கொண்டு தங்கள் தேவைகளை கூறினால் போதும், அவர்க…
-
- 0 replies
- 407 views
-
-
மத்திய லண்டன் பகுதியில் கட்டட பணியில் இருந்த கிரேன் மீது ஹெலிகாப்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே இங்கிலாந்தின் உளவு நிறுவனமான எம். 16 அலுவலகம் இருப்பதால் இது பயங்கரவாதிகளின் செயலாக இருக்குமோ என்ற ரீதியில் தற்போது விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் மத்திய லண்டன் பகுதியில் தேம்ஸ் நதிக்கரையின் தெற்கு பகுதியில், கட்டடத்தின் மீது இருந்த கிரேன் மீது ஹெலிகாப்டர் ஒன்று மோதியது. இதில் தீப்பிடித்த அந்த ஹெலிகாப்டர் சாலையில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் இருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து லண்டனின் முக்கிய பகுதியான வாக்ஸ்ஹால் பகுதியில் …
-
- 1 reply
- 420 views
-
-
கனடாவில் ஒரு கருத்தெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அதில் கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் இருபதில் ஒருவர் தன்னால் கடனை அடைக்க இயலாது என்று புலம்புகிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பை ஹாரிஸ்ஃடெசிமா நிறுவனத்தினர் நடத்தியிருகிறார்கள். கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் பலர் தங்கள் முழு கடனை அடைப்பதில்லை. கடன் பாக்கி வைத்திருக்கிறார்கள். அதற்காக அவரகள் கட்டும் வட்டித் தொகையைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படவில்லை. கடன் அட்டை கடன் பாக்கிக்கு வட்டி இருபது சதவீதம் போல் இருக்கிறது. ‘ஒருவன் கடணாளியாவதற்கும், பண-சொத்து முடக்கம் அடைவதற்கும் கடன் அட்டைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால்தான் அது குறித்து கருத்துக் கணீப்பு நடத்தினோம் ‘ என்கிறார் டாவ…
-
- 18 replies
- 765 views
-
-
பாகிஸ்தானில் வெடிக்கும் புரட்சி- அதிபர் சர்தாரி குடும்பத்துடன் வெளிநாடு தப்பியோட்டம்? இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக புரட்சி வெடிக்கும் நிலையில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அந்நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் மதகுரு காத்ரி தலைமையில் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் அரசுக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றமும் இன்னொருமுனையில் களமிறங்கியிருக்கிறது. இந்த சூழலில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிபர் ஆசிப் அலி சர்தாரி, கராச்சி விமான நிலையம் வழியே துபாய்க்கு குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு மாறுபாடாக கராச்சி விமான நிலையம் வழியாக சர்தாரியின் குட…
-
- 5 replies
- 950 views
-
-
போராட்டத்தில் பெரும் வன்முறை!! பாகிஸ்தான் அரசாங்கம் பதவி விலகக் கோரி மதகுரு தாகீர் உல் காத்ரி ஆதரவாளர்கள் நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. பாகிஸ்தானின் மதகுருவான தாகீர் உல் காத்ரி கனடாவில் வசித்து வந்தார். தற்போது பாகிஸ்தான் திரும்பியிருக்கும் அவர் புரட்சி எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். தாகீர் உல் காத்ரி தலைமையிலான தெக்ரீக் இ மின்ஹாஜுல் குரான் கட்சி, ஆளும் அரசு பதவி விலக வலியுறுத்தி லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் வரை மிக பிரமாண்டமான 2 நாள் பேரணியை நடத்தியது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் பேசிய காத்ரி, தற்போது பேரணி முடிந்து விட்டது. ஆனால் புரட்சி தொடங்கி விட்டது, பாகிஸ்தானில் நி…
-
- 1 reply
- 586 views
-
-
ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் உள்ள புகழ் பெற்ற வங்கி ஒன்றில், சுரங்கம் அமைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்து நேற்றிரவு புகை வருவதை கவனித்த காவலாளி, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அதிகாரிகள் வந்து பார்த்தபோது, பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டு, உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் வந்து சம்பவ இடத்தை சோதனையிட்டதில், வங்கிக்கு அருகில் இருக்கும் கார் ஷெட்டில் இருந்து 100 அடி நீளத்திற்கு சுரங்கம் வெட்டி, வங்கியின் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பெர்லின் நகர போலீஸ் செய்த…
-
- 0 replies
- 451 views
-
-
தேனி: சோதனைகளை சமாளிப்பதற்கு மன உறுதி அவசியம் அதைத்தான் முல்லைப் பெரியாறு அணை பறைசாற்றுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா குட்டிக்கதை ஒன்றின் மூலம் விளக்கியுள்ளார். கூடலூர் லோயர் கேம் பகுதியில் பென்னிகுவிக் மணிமண்டபத்தை திறந்து வைத்து அவர் குட்டிக்கதை ஒன்றை கூறினார். திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தாயார் தன் மகளைப் பார்த்து, 'என்ன விஷயம்?' என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள். இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அ…
-
- 1 reply
- 762 views
-
-
தேனி: கல்லணை கட்டிய கரிகாலனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் கர்னல் ஜான் பென்னி குயிக் நினைவு மணிமண்டபம் திறப்பு விழா, திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,"முல்லைப் பெரியாறு அணையைவிட மிகவும் பழமை வாய்ந்த அணை கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழனால் கட்டப்பட்டு இன்றளவும் கோடானு கோடி மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கும் இந்த அணை ஒரு பொறியியல் அற்புதம் ஆகும். இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் கல்லணையே மிகவும் பழமை வா…
-
- 0 replies
- 369 views
-
-
டெல்லி: எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பதற்றமான நிலைமை நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தானுடன் வழக்கமான சுமூக உறவுக்கு இடமில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தமன்மோகன்சிங், இந்திய ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்தது கொடூரமான குற்றம். இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இதற்கான எதிர்வினையை பாகிஸ்தான் புரிந்து கொள்ளும். எல்லையில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றார் அவர் http://tamil.oneindia.in/news/2013/01/15/india-cannot-be-business-as-usual-with-pakistan-manmohan-sing-1679…
-
- 2 replies
- 302 views
-
-
பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டத்தில் நடந்துள்ள ஊழலில் ராஜா பர்வேஸ் அஷ்ரப்புக்கு தொடர்பு இருப்பதாக வந்த புகாரினை அடுத்து, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://dinamani.com/latest_news/article1421689.ece
-
- 1 reply
- 321 views
-
-
ஹேம்ராஜ் தலை வராவிட்டால் 10 பாக். வீரர் தலையை வெட்டி கொண்டுவரனும்: சுஷ்மா ஆவேசம். டெல்லி: இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையை தராவிட்டால் பாகிஸ்தானின் 10 வீரர்களின் தலையையாவது துண்டித்து எடுத்துவர வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினரால் கோரமாக கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களில் ஹேம்ராஜ் என்பவரது தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துச் சென்றுவிட்டனர். எடுத்துச் செல்லப்பட்ட தலையை பாகிஸ்தான் ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தி வருகிறது இந்நிலையில் ஹேம்ராஜூக்கு உரிய மரியாதை செலுத்தப்படவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள ஹேம்ராஜின் வீட்டுக…
-
- 13 replies
- 1k views
-
-
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிய கடற்படைக் கப்பல் விசைப்படகுகள் உதவியுடன் மீட்கப்பட்டது. இருப்பினும் ரயில் பாலம் சேதமடைந்திருப்பதால் ஒரு வார காலத்துக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கப்பல் படைக்குச் சொந்தமான கப்பல் பாம்பன் அருகே தரை தட்டியது. கடந்த சில நாட்களாக கடற்பரப்பில் தத்தளித்த இந்த கப்பலை இழுக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அலைகளில் கப்பல் இழுக்கப்பட்டு நேற்று பாம்பன் ரயில் பாலம் அருகே நின்றது. பாம்பன் ரயில் பாலம் அருகே தத்தளித்துக் கொண்டிருந்த இந்த கப்பல் இன்று நூற்றாண்டு பழமை வாய்ந்த பாலத்தின் 24-வது தூணின் மீது மோதியது. இதில் தூண் சற்று திரும்பியுள்ளது. இதனால் அந்த பாலம் வழியேயான ரயில்…
-
- 0 replies
- 417 views
-
-
மதுரா:பாக். ராணுவத்தினரால் இந்திய வீரர் தலை துண்டித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் தலையை ஒப்படைக்குமாறு வீரரின் மனைவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதால். அவரது தலையை தேடும் முயற்சி நடந்து வருகிறது.காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 8-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி புகுந்து ஹேம்ராஜ், சுதாக்ரசிங் ஆகிய இரு வீரர்களை கொலை செய்தனர். அவர்களில் ஹேம்ராஜ் (32) என்ற வீரரின் தலையை துண்டித்து சென்றனர். இதனால் இந்தியா-பாக். இடையே எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.இந்நிலையில் ஹேம்ராஜ் மனைவி தர்மாவதி, தாயார் மீனாதேவி ஆகியோர், உயிரிழந்த ஹேம்ராஜ் தலையை கண்டுபிடித்து தங்களிடம் காண்பிக்க வேண்டும்எனவும் அவரது முகத்தினை பார்க்க வேண்டும்எனவ…
-
- 6 replies
- 901 views
-
-
இஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்? இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) 100-வது திட்டமான பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் இஸ்ரோ-வின் இந்த ’சாதனை’ நிகழ்த்தப்பட உள்ளது. இஸ்ரோவின் நூறாவது திட்டமான இந்த ராக்கெட் உள்பட அனைத்து திட்டங்களுக்கும் இந்திய மக்ககளின்னின் வரிப்பணம் பல்லாயிரக்கணக்கான கோடி கொட்டப்பட்டு உள்ளது. ஆனால் இத்திட்டங்களால் இந்திய மக்ககளின் கிடைத்த பலன் என்று பார்த்தால் ஏதும் இல்லை. மக்களுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை என ஏதும் கிடைக்காத நாட்டில் இப்படிப்பட்ட திட்டங்களை வக்கிரம் என்று தான் சொல்ல வேண்டும்.இதனுடன் தொடர்புடைய புதிய கலாச்சார கட்டுரையினை அவசியம் கருதி மறுபிர…
-
- 1 reply
- 603 views
-
-
இது வரை தமிழகத்தில் இல்லாத ஒரு புதிய திட்டமாக சிற்றுண்டி அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது, சுகாதாரமான குறைந்த விலையில் உணவு கிடைக்க வழி செய்யும் நோக்கில் சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி துவங்கப்படுகிறது. இந்த உணவகத்தில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் விற்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான முதல்வர் அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வயிற்றுக்கு சோறிட வேண்டும்: நோயற்ற சமுதாயம் அமைத்திட வேண்டும் என்ற நோக்கில் சத்தான உணவு வழங்கும் பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியாரின் நோக்கத்தின் அடிப்பட…
-
- 18 replies
- 1.5k views
-
-
பேருந்தில் சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வேறொரு சம்பவம் தொடர்பாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஆண்கள் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழாவது நபரைப் பொலிசார் தேடிவருகின்றனர். பேருந்தில் தனியொரு பயணியாக இந்தப் பெண் இருந்த சந்தர்ப்பத்தை அப்பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் பயன்படுத்திக்கொண்டு, அப்பெண்ணின் கிராமத்தில் வண்டியை நிறுத்தாமல் ஒதுக்குறமான வீடொன்றுக்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று மேலும் ஐந்து பேரை அவ்விடத்துக்கு வரவழைத்து மாற்றி மாற்றி அப்பெண்ணை வன்புணர்ச்சி செய்துள்ளனர் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். தில்லியில் சென்ற மாதம் இதேபோல இளம் மாணவி ஒருவர் பேருந்தில் வைத்து பலரால் பாலியல் …
-
- 2 replies
- 456 views
-
-
வீதியோர குண்டு வெடித்ததில் 14 பாகிஸ்தான் வீரர்கள் பலி A ROADSIDE bomb has killed at least 14 Pakistani soldiers and injured 25 others in a lawless tribal area bordering Afghanistan, officials say. The improvised explosive device hit a military convoy in Dosali village in the troubled North Waziristan tribal district, a stronghold of Taliban militants, a senior military official said on Sunday. News.com பாகிஸ்தான் வீரர்கள் மீது Waziristan பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கு
-
- 2 replies
- 566 views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடையே நேற்று கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையைக் கடந்து ஊடுருவ முயன்றனர். இதனால் அவர்களைத் தடுக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அப்போது ராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பாகிஸ்தானின் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டது. நேற்று இரவு நிகழ்ந்த இந்த மோதலால் எல்லையில் தொடர்ந்தும் பதற்றமான நிலை நிலவி வருகிறது ஏற்கெனவே இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் மிகக் கொடூரமாக கொலை செய்திரு…
-
- 7 replies
- 621 views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளான முருகனும் அவரது மனைவியான நளினியும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துகொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. முருகனுக்கு விதிக்கப்பட்டிருந்த 48 நாட்கள் தடை நிறைவடைந்ததை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முருகன் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேலூர் சிறையில் பொலிஸ் மேல் அதிகார் ஈஸ்வரன் தலைமையில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதன்போது அவரிடமிருந்து ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசிகள், சிம்கார்டுகள் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது சிறைதுறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத…
-
- 1 reply
- 710 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே யுத்தம் தொடங்கியதா ? இந்திய எல்லைப் பகுதியில் 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. எல்.ஓ.சி. என்றழைக்கப்படும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணா காடி மற்றும் சோனகலி பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நோக்கத்துடன், ஆலோசனை நடத்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. எனினும், அதுதொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில்,…
-
- 5 replies
- 809 views
-
-
சேலத்தில், 1994ல் தத்துக் கொடுக்கப்பட்ட பெண் குழந்தை, 18 ஆண்டுகளுக்கு பிறகு, டென்மார்க்கில் இருந்து வந்து, பெற்றோரை சந்தித்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சேலம், கன்னந்தேரியை சேர்ந்த, கூலித் தொழிலாளி பச்சமுத்து; இவரது மனைவி தைலம்மாள். இவர்களுக்கு, 1994ல், பெண் குழந்தை பிறந்தது. சாந்தி என, பெயரிடப்பட்டனர். இரு மாதங்களே ஆன அக்குழந்தையை வளர்க்க முடியாது என, நினைத்த அத்தம்பதியர், சேலம் மாவட்ட தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர். டென்மார்க்கை சேர்ந்த, ஸ்வரன் - சுதானா தம்பதியர், "கில்ட் ஹார்ட் சர்வீஸ்' என்ற நிறுவனம் மூலம், சேலம் மாவட்ட சமூக நலத்துறையில் இருந்த, பெண் குழந்தை சாந்தியை தத்தெடுத்து, "டிரீனா' என, பெயரிட்டு வளர்த்தனர். டென்மார்க்கில் உள்ள சட…
-
- 0 replies
- 695 views
-
-
மூணாறு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுவதை, உறுதி செய்கிறார், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட். அவர் கூறுகையில் பிரான்ஸ் நாட்டினர் தமிழ் பேச ஆர்வமாக இருப்பதாகவும், அங்கு 2.50 லட்சம் பேருக்கு நன்றாக தமிழில் பேசவும், எழுதவும் தெரியும், எனக்கூறியது, வியப்பை ஏற்படுத்தியது. பிரான்சில்"மசாஜ்' சென்டர் நடத்தி வரும் டேவிட்,32,இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். கடந்த வாரம் மூணாறுக்கு வந்தார். தோற்றத்தில் ஆங்கிலேயரான இவர் தமிழை, தெளிவாகவும், சரளமாகவும், இலக்கணத்துடனும் பேசிய விதம் அனைவரையும் வியப்படையச் செய்ததுடன், பெருமையாகவும் இருந்தது. டேவிட் கூறியதாவது:பிரான்சில் தமிழ் மொழியை கற்க, பள்ளிக் கூடங்கள் உள்ளன. இவற்றின் மூல…
-
- 1 reply
- 524 views
-