உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
புதினின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவர முயன்ற, ரஷ்யாவுக்கு நல்லதை செய்ய முயன்ற நவல்னி தளது இலட்சியங்களுக்காக தன்னை தியாகம் செய்துள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள்.
-
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது. லுப்தான்சா விமான நிறுவன கிளைகளில் சுமார் 25 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். ஜேர்மனி நாட்டில் பிராங்க்பர்ட், முனிச் பகுதிகளில் லுப்தான்சா விமான நிறுவனங்களின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன. அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் லுப்தான்சா கிளைகள் செயற்பட்டு வருகின்றன. பல நாடுகளுக்கும் விமான சேவைகள் நடந்து வருகிறது இந்நிலையில் ஜேர்மனியில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் 1000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து…
-
- 1 reply
- 349 views
- 1 follower
-
-
Published By: SETHU 06 MAR, 2024 | 05:08 PM சந்திரனில் அணு உலையொன்றை அமைப்பது குறித்து சீனாவும் ரஷ்யாவும் ஆராய்கின்றன. 2033 -2035 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சந்திரனில் அணுஉலை அமைப்பதற்கு இவ்விரு நாடுகளும் விரும்புவதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரொஸ்கொஸ்மோஸின் தலைவர் யூரி பொரிசோவ் தெரிவித்துள்ளார். 'இப்போது நாம் இத்திட்டத்தை தீவிரமாக ஆராய்கிறோம் என அவர் கூறினார். சந்திரனில் அணுசக்தி ஆனது. எதிர்க்கால சந்திரமண்டல குடியிருப்புகளுக்கான மின்சக்தியை அளிக்கும். சூரியத் தகடுகள் போதுமான அளவு மின்சாரத்தை வழங்க மாட்டாது என அவர் கூறினார். இத்திட்டம் மிக சவாலானது. மனிதர்களின் பிரசன்னமின்றி, த…
-
- 0 replies
- 452 views
- 1 follower
-
-
Published By: SETHU 05 MAR, 2024 | 12:23 PM அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது என என அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது. 2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்கப் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக, கொலராடோ மாநில குடியரசுக் கட்சி உட்கட்சித் தேர்தல் வாக்குச்சீட்டுகளில் ட்ரம்பின் பெயர் இடம்பெற முடியாது என கொலராடோ மாநில நீதிமன்றம் கடந்த டிசெம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக மேன்முறையீட்டு வழக்கு அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், கொலராடோ உயர் நீதிமன்றத்த…
-
-
- 11 replies
- 1k views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதியை நேரலை விவாதத்திற்கு வருமாறு ட்ரம்ப் அழைப்பு! அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரலை விவாதம் ஒன்றிற்கு வருமாறு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவருடன் எந்தவொரு நேரத்திலும் நேரடி விவாதத்தில் பங்கேற்க தாம் தயாராக உள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக நேரடி விவாதங்களில் பங்கேற்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதுவித கருத்தினையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க குடியரசுக…
-
- 0 replies
- 173 views
-
-
பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை! பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரானஸ் மாறியுள்ளது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 72 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தமையைத் தொடர்ந்து குறித்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372228
-
-
- 13 replies
- 857 views
- 1 follower
-
-
இலங்கை பெரும் ஆபத்தில் இருப்பதாக அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர்கள் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடனை திருப்பிச்செலுத்தவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் நிபுணர்கள் எச்சரித்ததாகவும் கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து இலங்கை திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையின் தலைவிதி மேலும், அவுஸ்திரேலியாவிலுள்ள கன்பரா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்கள் இலங்கையின் தலைவிதி குறித்து ஆச்சரியம் தெரிவித்ததாகவும், ஒரு நாடு எப்படி இத்தகைய நிலையை அடைந்திருக்க முடியும் என்றும் தம்மிடம…
-
- 2 replies
- 629 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 MAR, 2024 | 02:55 PM செங்கடலில் கடலுக்கடியில் உள்ள பல தகவல் தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே இணைய சேவை 25 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் அமெரிக்க அதிகாரியொருவரும் தெரிவித்துள்ளார். ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய வழங்குனர்களின் கடலுக்கடியில் கேபிள்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து இணையச் சேவை தடைபட்டுள்ளது. 15 கேபிள்களில் நான்கு சமீபத்தில் துண்டிக்கப்பட்டதையடுத்து, போக்குவரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட எச்.ஜி.சி குளோபல் கம்யூனிகேஷன்ஸ் தொலை தொடர்பு ந…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவு என்பதை காண்பிப்பதற்கு போலி செயற்கை நுண்ணறிவு படங்கள் – டிரம்பின் ஆதரவாளர்கள் சர்ச்சை நடவடிக்கை போலியான செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கி டிரம்பின் ஆதரவாளர்கள் கறுப்பின வாக்காளர்களை இலக்குவைத்துவருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவளிக்கின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் டிரம்புடன் கறுப்பினத்தவர்கள் காணப்படும் போலிவீடியோக்கள் படங்களை டிரம்பின் ஆதரவாளர்கள் உருவாக்குவது தெரியவந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. 2020 தேர்தலில் பைடன் வெற்றிபெறுவதற்கு கறுப்பினத்தவர்களின் ஆதரவு முக்கியமானதாக காணப்பட்ட நிலையில் டிரம்ப் தற்போது அவர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளில் வெளிப்படையா…
-
- 0 replies
- 200 views
-
-
பட மூலாதாரம்,COLOMBIAN GOVERNMENT படக்குறிப்பு, கொலம்பிய ஆட்சித்தலைவர் குஸ்டாவோ பெட்ரோ, இக்கப்பலை மீட்டெடுப்பது தனது நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், சாண்டியாகோ வனேகஸ் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் 300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய `சான் ஜோஸ்`என்ற கப்பலில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. அக்கப்பலில் உள்ள பொக்கிஷத்தைக் கைப்பற்ற ஆழ்கடலில் உயர் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இக்…
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
ரோத்ஸ்சைல்ட்ஸ்: பிரிட்டன் போன்ற வல்லரசுகளுக்கே கடன் கொடுத்த இந்த யூத குடும்பம் 'இஸ்ரேல்' உருவாக என்ன செய்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லார்ட் ஜேக்கப் ரோத்ஸ்சைல்ட், இந்த வாரம் தனது 87ஆம் வயதில் இறந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ஏஞ்சல் பெர்முடெஸ் பதவி, பிபிசி நியூஸ் வேர்ல்டு 4 மணி நேரங்களுக்கு முன்னர் திட்டமிட்டபடி அனைத்து விஷயங்களும் நடந்திருந்தால், மேயர் ஆம்ஷெல் ஒரு ரப்பியாக (யூத மதகுரு) இருந்திருப்பார். ஆனால் விதி அவரது திட்டங்களை மாற்றியது. ஒரு ஜெப ஆலயத்தை நடத்துவதற்கு பதிலாக, உலகின் மிகவும் பிரபலமான ரோத்ஸ்சைல்ட் & கோ எனும் தனியார் வங்கி சாம்ராஜ்யத்தை அவர் நிற…
-
- 0 replies
- 740 views
- 1 follower
-
-
ஆபத்தான குளிர்கால புயல் கலிபோர்னியாவை வந்தடைந்துள்ளது மற்றும் வார இறுதியில் மலைகளில் பனி, சக்திவாய்ந்த காற்று மற்றும் அரிதான பனிப்புயல் நிலைகளை இறக்கும். இந்த புயல் கலிபோர்னியாவை இந்த ஆண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவின் கீழ் புதைக்கும், பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் - ஆனால் மாநிலத்தின் நீர் வழங்கல் மற்றும் சுற்றுலாவிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. சியாரா நெவாடாவின் மிக உயர்ந்த சிகரங்களில் வியாழன் அன்று கடும் பனியுடன் 140 மைல் வேகத்தில் காற்று வீசியது. சக்திவாய்ந்த புயல் இந்த தீவிர காற்றையும், வார இறுதியில் கடுமையான பனியையும் இறக்கி, நீண்ட கால பனிப்புயல் நிலைமைகளை உருவாக்கும். "சியரா பாஸ்களில் பயணம் செய்வது ஏற்கனவே துரோகமாகிவிட்…
-
-
- 9 replies
- 857 views
- 1 follower
-
-
ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் - உங்களை நாங்கள் மறக்கமாட்டோம் - புட்டின் இல்லாத ரஸ்யா என கோசம் Published By: RAJEEBAN 02 MAR, 2024 | 12:43 PM கடும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ஆயிரக்கணக்கான ரஸ்ய மக்கள் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர் ரஸ்ய ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த அலெக்ஸி நவால்னி 16 ம் திகதி சிறையில் உயிரிழந்தார். இது தொடர்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது குற்றம் என அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நவால்னியின் பெயரை குறிப்பிட்…
-
-
- 2 replies
- 540 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்படும் எடைதூக்கும் கருவிகளான கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா சமீபத்தில் எடுத்த முடிவை சீனா விமர்சித்துள்ளது. தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று (பிப்ரவரி 23) செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற அமெரிக்காவின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது,” என்றார். இதற்கு இரண்டு நாட…
-
- 3 replies
- 727 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 29 FEB, 2024 | 04:26 PM ஹெஸ்புல்லா அமைப்பை இஸ்ரேலுடனான வடபகுதி எல்லையிலிருந்து அகற்றுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் வெற்றியளிக்காவிட்டால் இஸ்ரேல் வசந்தகாலத்தின் பிற்பகுதியில் அல்லது கோடைகால ஆரம்பத்தில் லெபனானிற்குள் தரைவழியாக நுழைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டு வருகின்றது என வெளியான தகவல்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் புலனாய்வாளர்கள் மத்தியில் கவலை நிலவுகின்றது. சிஎன்என் இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு புலனாய்வு பிரிவினர் இஸ்ரேல் லெபனானிற்குள் தரைவழியாக நுழையலாம் என்பது குறித்து தகவல்களை வழங்கியுள்ளனர். கோடைகாலத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை ஆரம்பிக்கும் என…
-
-
- 4 replies
- 696 views
- 1 follower
-
-
ரஷ்யாவுக்கு எதிராகப் போருக்குத் தயாராகிறதா பிரான்ஸ்? நேட்டோ ராணுவக் கூட்டணி என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இமானுவேல் மக்ரோங் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனை ஆதரிக்க மேற்கு நாடுகள் தங்கள் துருப்புக்களை அனுப்பும் யோசனையை தவிர்க்கக் கூடாது என பேசியிருந்தார். அவருடைய இக்கருத்து ஐரோப்பா முழுவதும் அதனைக் கடந்தும் எதிர்வினைகளை பெற்று வருகிறது. பிரான்ஸ் அதிபரின் இந்த கருத்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள், நேட்டோ உறுப்பினர்கள் ஆகியோர், இதுகுறித்து தங்கள் கருத்து வேறுபாடுகளை பரவலாக வெளிப்படுத்த வழிவகுத்தது. யுக்ர…
-
- 1 reply
- 413 views
- 1 follower
-
-
Published By: SETHU 29 FEB, 2024 | 03:43 PM இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐக கடந்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் இயக்கம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதல்களையடுத்து, பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இத்தாக்குதல்கள் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துள்ளது என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இதுவரை 30,035 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 70457 பேர் காயமடைந்துள்ளனர் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கா…
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய அரசியல்வாதி நாட்டை காட்டிக்கொடுத்தார் - அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவின் தலைவர் திடுக்கிடும் தகவல் Published By: RAJEEBAN 29 FEB, 2024 | 12:15 PM அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியொருவர் நாட்டை வெளிநாட்டின் புலனாய்வு அமைப்பிற்கு காட்டிக்கொடுத்தார் என அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடீம் என்ற வெளிநாட்டு புலனாய்வு குழுவினருடன் இணைந்து செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டு புலனாய்வாளர்களை பிரதமரின் அலுவலகம் வரை அழைத்துச்சென்றார் என தேசிய புலனாய்வுபிரிவின் தலைவர் மைக…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - பைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விருப்பம் Published By: RAJEEBAN 28 FEB, 2024 | 11:29 AM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோபைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயககட்சியை சேர்ந்த அதிகளவான வாக்காளர்கள் விரும்புவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் போட்டியிடகூடாது என பெரும்பான்மையான ஜனநாயக கட்சியினர் கருதுவதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. மிசெல் ஒபாமா டொனால்ட் டிரம்பிற்கு எதிராக போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விரும்புகின்ற…
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் இறைமைக்கு சீனாவால் ஆபத்து - நாடாளுமன்றத்திற்கான தனது இறுதி உரையில் அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்கொட்மொறிசன் Published By: RAJEEBAN 27 FEB, 2024 | 12:39 PM அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொறிசன் நாடாளுமன்றத்திற்கான தனது பிரியாவிடை உரையில் சீனாவால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலியாவை கட்டாயப்படுத்த அல்லது ஆதாயம்தேட சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து ஸ்கொட் மொறிசன் தனது நாடாளுமன்ற உரையில் எச்சரித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் இறைமைக்கு சீனா ஆபத்தானதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். சீனா 'மோதல் இராஜதந்திரத்தை மூலோபாய அடி…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 26 FEB, 2024 | 11:15 AM காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த ஒருவர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குதானனே தீமூட்டிக்கொண்டார் என சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. உடனடியாக தீயை அணைத்த அமெரிக்க இரகசிய சேவையை சேர்ந்தவர்கள் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீக்குளிக்க முயற்சித்த நபர் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் அவர் விமானப்படையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவசீருடையில் காணப்படும் அந்த நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை என தெரிவிக்கும் இணையவீடியோவொன்ற…
-
- 4 replies
- 518 views
- 1 follower
-
-
பிபிசியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனும், ஊடகவியலாளருமான டாக்டர் சமீர் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, பிரித்தானிய கலாச்சாரத்துறை செயலர் லூசி பிரேசர் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எம்.பி.க்கள் அடங்கிய தேர்வுக் குழு அவரது பெயரை இறுதி செய்யும், இது பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸால் அங்கீகரிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது. தொலைக்காட்சி தயாரிப்பு மற்றும் பத்திரிகையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள சமீர் ஷா, முன்பு பிபிசியின் நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் தலைவராகப் பணியாற்றினார். அவர் மார்ச் 2028 வரை (நான்கு ஆண்டுகள்) பிபிசி தலைவர…
-
- 2 replies
- 400 views
-
-
சீக்கிய பிரிவினைவாதி படுகொலையை அடுத்து, கனடாவுடன் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டிருந்தாலும் பருப்பு இறக்குமதி அளவை இந்தியா இருமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. பருப்பு இறக்குமதி உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இந்தியாவை வெளிநாட்டு கொள்முதல்களை அதிகரிக்க தூண்டியதாக கூறுகின்றனர். சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் சஜ்ஜர் படுகொலையில் இந்தியாவின் பங்கு தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார். @reuters தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் பாதிப்புக்குள்ளானது. …
-
-
- 1 reply
- 471 views
-
-
24 FEB, 2024 | 06:08 PM சீனாவில் சுமார் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த அமைப்பு 2003 ம் ஆண்டு முதன்முதலில் தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் . ட்ரேகன் போன்ற விலங்கின் அமைப்பு 16 அடி நீளம் கொண்டதாகவும் கடந்த காலத்தில் வாழ்ந்ததாக நீர்வாழ் உயிரினத்தின் அமைப்பு எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்து விலங்கினுடைய கழுத்து பகுதியைப் பார்க்கும் போது ட்ரேகன் விலங்காக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது . இந்த விலங்கு அறிவியல் ரீதியாக "டைனோசெபலோசரஸ் ஓரியண்டலிஸ்" என்று அழைக்கப்படுகிறது. https://www.virak…
-
- 0 replies
- 441 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல மேற்கத்திய நாடுகள் தங்கள் விசா கொள்கைகளை மாற்றியுள்ளன. கனடா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் புலம்பெயர்ந்தோர் பல்வேறு வகையான விசாக்களைப் பெறுவதற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் கடுமையாக்கியுள்ளன. கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வாழ்க்கைத் துணைக்கான விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்குவதாக அறிவித்துள்ளன. இதனால், அந்நாடுகளில் பணிபுரிவோர் தங்களது வாழ்க்கைத் துணையை உடன் அழைத்துச் செல்வது இனி கடினமாகலாம். இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கனடாவில் குடியேற இந்தியர்கள் பலரும் முயற்சிக்கின்றனர். அவ்வாறு, தங்கள் மனைவி மற்ற…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-