உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26929 topics in this forum
-
பாகிஸ்தானில் குரானை அவமானப் படுத்தியதாக சிறுமி கைது! [size=3] பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதின் ஏழைகள் வசிக்கும் புறநகர் பகுதியிலிருந்து குரானை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு சிறுமி கைது செய்யப்பட்டிருக்கிறாள். கிருத்தவ மதத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி குரானின் பக்கங்களை எரித்ததாக சொல்லி பக்கத்து வீட்டுக் காரர்கள் அவளது வீட்டை சூழ்ந்து கொண்டதை தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 14 நாட்கள் காவலில் வைத்திருக்கிறார்கள்.[/size][size=3] அந்த சிறுமியை பாதுகாக்கத்தான் காவலில் வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தார்கள். ‘சுமார் 500, 600 பேர் கொண்ட கும்பல் அவளது வீட்டை சூழ்ந்திருந்தது. நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கா விட்டால் அ…
-
- 4 replies
- 760 views
-
-
இந்திய இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு தமிழ் வீரனது போராட்டம்! போராட்டத்தில் இராணுவ வீரர் முத்து புது தில்லி - இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த 35 வயது கே. முத்து வேலை பார்த்து வருபவர். அவரைக் கொடுமைப்படுத்திய உயர் அதிகாரிகளைக் கண்டித்தும், 5 ஆண்டுகளில் 5 முறை இடமாற்றம் செய்துள்ள அநீதிக்கு எதிராகவும், டெல்லி அஜ்மீரி கேட் பகுதியில் உள்ள 200 அடி செல்பேசி கோபுரத்தில் ஏறி தனது போராட்டத்தை கடந்த 17.8.12 அன்று துவக்கினார் முத்து. அவரை கீழே இறக்க இராணுவம், போலீசு, தீயணைப்பு படையினர் முயற்சி செய்தாலும் அதை நிராகரித்து கடந்த ஐந்து நாட்களாக சாப்பிடாமலும் போராட்டம் நடத்தினார். இதனால் அவரது உடல்நிலை பாதிப…
-
- 0 replies
- 494 views
-
-
இன்று, தனது 373 வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை மாநகருக்கு இப்பதிவு சமர்ப்பணம்... [size=5]நினைவு கூரல்...[/size] http://youtu.be/vQuK4A7tZIc மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்...மெட்ராஸ்..நல்ல மெட்ராஸ்... மெதுவாப் போறவுக யாருமில்லே... இங்கே சரியா தமிழ் பேச ஆளுமில்லே..! ஆம்பிள்ளைக்கும், பொம்பிள்ளைக்கும் வித்தியாசம் தோணலே..!! இந்தப் பாடல், 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த 'அனுபவி ராஜா அனுபவி' படத்தில், நாகேஷ் 'சென்னை'யின் புகழை பாடுவதாக இருக்கும். "கெட்டும் பட்டணம் சேர்" என்னும் சொலவடை கேள்விபட்டிருப்பீர்கள். கிராமங்களில் படித்துவிட்டு சீக்கிரம் பணம் சேர்கும் ஆசையில் வேலை வாய்ப்பு தேடி சென்னை வருவோரும், தொழிற்கல்வி முடித்த பண்டிதர்களும், சினிம…
-
- 65 replies
- 15.7k views
-
-
இந்தியாவின் அணு ஆயுதம்: சிவசங்கர் மேனனின் கெத்துக்கு ஒரு குத்து! புதுதில்லியில் 21.8.12 அன்று நடந்த அணு ஆயுத ஒழிப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசும் போது, “1998-ம் ஆண்டுக்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில நாடுகள் மிரட்டி, அரசியல் ரீதியாக அவர்களுக்கு உடன்படச் செய்ய முயற்சித்தன. ஆனால் இந்திய அரசியல் தலைமை உறுதியுடன் இருந்ததால், அந்த நாடுகளின் நோக்கம் நிறைவேறவில்லை. 1998-ம் ஆண்டு நாம் அணு ஆயுதம் வைத்துள்ள நாடாக பகிரங்கமாக அறிவித்ததும் நமக்கெதிராக வந்து கொண்டிருந்த மறைமுக மிரட்டல்கள் நின்றுவிட்டன. நிச்சயத்தன்மையற்ற, குழப்பம் நிறைந்த உலக அர…
-
- 3 replies
- 2.3k views
-
-
இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே! “நான் இந்துமத வெறியைக் கிளப்பவில்லை, மராட்டிய மக்களின், காவல்துறையினரின் மற்றும் பத்திரிகையாளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறேன்” என்று செவ்வாயன்று (21.8.12) மும்பையில் ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் மற்றும் இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட்டான ராஜ் தாக்கரே கூறியுள்ளார். ஆகஸ்டு 11 ஆம் தேதி மும்பையில் ராஸா அகாதெமி என்ற முசுலீம் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த அனுமதி தந்தது தவறு என்றும், (அந்த ஊர்வலத்தில் 2 பேர் கொல்லப்பட்டும் மற்றும் 44 பேர் படுகாயம் அடைந்தனர்) கலவரத்திற்கு காரணமான கலவரக்காரர்களை அடக்கத் தவறியதற்கு பொறுப்பேற்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.…
-
- 1 reply
- 489 views
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் ரைஸ் இந்தியா அவசர பயணம் 22 ஆகஸ்ட் 2012 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான ஆலோசகரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவருமாகிய சூசன் ரைஸ் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று இந்தியா செல்ல உள்ளார். பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்துப் பேசுவதற்காக இந்தியா செல்லும் சூசன் ரைஸ் புது டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரஞ்சன் மாத்தாய் உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். முக்கியமானதாகக் கடந்த வருடம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டு வந்தபோது…
-
- 5 replies
- 734 views
-
-
[size=3] [size=4]பிரணாப் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரி, அவரை எதிர்த்து போட்டயிட்ட பி.ஏ.,சங்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். [/size][/size] [size=3] [size=4]ஆதாயம் பெற்றார் : கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் காங்., வேட்பாளராக போட்டியிட்டு அமோக வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து பா.ஜ., மற்றும் அ.தி.மு.க, ஆதரவுடன் போட்டியிட்டவர் பி.ஏ., சங்மா. தேர்தல் நடந்த போது அவர் அரசு பதவியில் ( புள்ளிஇயல் நிறுவன தலைவர் ) இருந்து சில ஆதாயங்கள் பெற்றுள்ளார். எனவே இது சட்ட மீறல் ஆகும் என்று தேர்தல் கமிஷனிடம் மனு அளித்தார். ஆனால் இது ஏற்கப்படவில்லை. இந்நிலையில் சங்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். [/s…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையின் புகழ் பூத்த பேராசிரியர் கைலாசபதியின் புதல்வி சுமங்களா கைலாசபதி அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள ஆன்ஆபர் நகர சபை உறுப்பினராக தெரிவாகி உள்ளார். ஜனநாயக கட்சியின் வேட் பாளராக போட்டியிட்ட இவர் கடந்த 7 ஆம் திகதி சக வேட்பாளரை வாக்கெடுப்பில் தோற்கடித்தார். சுமிக்கு வயது 45. இவர் கடந்த 19 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார். ஆன்ஆபரில் கடந்த 19 வருங்களாக வாழ்கின்றார். இவர் பொருளியலிலும், அரசியல் விஞ்ஞானத்திலும் தனித் தனியாக இளமாணி பட்டங்கள் பெற்றவர். அரசியல் விஞ்ஞானத்தில் பட்டப் பின் படிப்புக்கள் படித்தவர். கிழக்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராக 10 வருடங்கள் கடமை ஆற்றி உள்ளார். அங்கீகாரம் பெற்ற கணக்காளராக நிறுவனம் ஒன்றில் கடமை ஆற்றி வருகின்ற…
-
- 0 replies
- 641 views
-
-
சிரிய அரசுப் படைகள் சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அது இரசாயன ஆயுதங்களை கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக பாவித்த ஆதாரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா... சிரியா மீது அமெரிக்கா இராணுவ ரீதியில் தலையீடு செய்ய இது வழிவகுக்கும் என்று நேற்று எச்சரித்திருந்தார். இன்று இது தொடர்பில்.. சிரிய அரசிற்கு ஆயுதமும் இராணுவ ஆலோசனையும் வழங்கும் ரஷ்சியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒருதலைப்பட்சமான அமெரிக்க இராணுவத் தலையீட்டை நிராகரித்துள்ள அதேவேளை குண்டுகள் மூலம் சனநாயகத்தை நிறவுவதாகச் சொல்லிக் கொண்டு அமெரிக்காவும் அதன் சார்பு மேற்கு நாடுகளும் ஒரு தலைப்பட்சமாக மற்றைய நாடுகளை தாக்குவதை ஏற்றுக் கொள்ள முடிய…
-
- 6 replies
- 609 views
-
-
[size=4]எதியோப்பியாவின் பிரதமர் மெலஸ் ஸெனவி தனது 57ஆவது வயதில் காலமாகியுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் கடந்த ஒருவார காலமாக கடும் சுகவீனமடைந்திருந்த நிலையிலேயே காலமானார். கடந்த ஜுலை மாதம் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது தேக ஆரோக்கியம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. கடந்த மாதம் அடிஸ் அபாபாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றியத்தின் உச்சி மாநாட்டிற்கு சமுகமளிக்கத் தவறியபோது இவரது தேக ஆரோக்கியம் குறித்து பல ஊகங்கள் எழுந்திருந்தன. 1991ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைவர் மெங்ஸ்ட்டு ஹெய்லி மரியம் என்பவரை பதவி விலக்கிய பின்னர் மெலஸ் ஸெனவி பதவிக்கு வந்தார்.[/size] [size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-0…
-
- 0 replies
- 490 views
-
-
இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால், மற்ற நாடுகளில் இருந்து, நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தல்கள் வருவது, தடுக்கப்பட்டுள்ளது, என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறினார். டில்லியில் நடந்த தேசிய அணு ஆயுத குறைப்பு தொடர்பான மாநாட்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசியதாவது: முன்பெல்லாம், உலகில் வல்லரசாக உள்ள சில நாடுகள், நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், அச்சுறுத்தல்களை விடுத்தன. நம்மை மிரட்ட முயற்சித்தன. தைரியமான தலைவர்கள் இருந்ததால், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. கடந்த 1998ல், இந்தியா, அணு ஆயுத நாடாக அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, வல்லரசுகளிடம் இருந்து, நமக்கு மிரட்டல் வருவது நின்று போனது. அணு ஆயுதங்கள், நாட்டின் பாதுகாப…
-
- 9 replies
- 799 views
-
-
மாருதி சிறைச்சா(ஆ)லை திறப்பு! புது டில்லி - ஒரு மாதமாக மூடியிருந்த மாருதி நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலை இன்று (ஆகஸ்டு 21, 2012) திறக்கப்பட உள்ளது. “2,500 தொழிலாளர்கள் பணி புரிந்த தொழிற்சாலையில் இப்போது 300 தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு வருவார்கள் என்றும் ஒரு ஷிப்ட் மட்டும் உற்பத்தி நடக்கும்” என்றும் நிறுவனம் சொல்லியுள்ளது. ஏற்கனவே 500 தொழிலாளிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். தொழிற்சாலைக்கு பாதுகாப்பாக போலீஸ் படையினரையும் தனியார் குண்டர் படையினரையும் ஏற்பாடு செய்துள்ளது நிர்வாகம். முன்னாள் தேசிய பாதுகாப்பு படையினரையும், டில்லியை சேர்ந்த பெரிய மனிதர்களுக்கான பாதுகாப்பு அளிப்பதில் புகழ் பெற்ற ஹோலிஸ்டிக் செக்யூரிட்டி நிறுவனத்தின் 50 ஆயுதம் தாங்கிய காவலர்…
-
- 0 replies
- 863 views
-
-
[size=3][/size] [size=3][size=4]சிரியாவின் யுத்த களத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஜப்பானிய பெண் ஊடகவியலாளர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா,[/size][/size] [size=3][size=4]சிரிய அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை ஊக்குவித்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சுலைமான் அல் ஹலாபி மாவட்டத்தின் அலிப்போ எனும் நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும், சிரிய இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அகப்பட்டுக்கொண்ட ஜப்பானிய நிருபர் கொல்லப்பட்டார். அவருடன் சென்றிருந்த மூன்று நிருபர்கள் காணாமல் போனார்கள். கொல்லப்பட்டவர் 45 வயதான மிகா யமமொடோ என…
-
- 3 replies
- 716 views
-
-
“விலைவாசி உயர்வு மகிழ்ச்சி” – மத்திய அமைச்சர் அறிவும் எதிர்ப்பவர்களின் அறமும்! இன்றைய நாளிதழ்கள் அனைத்திலும் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது. மத்திய அரசில் உருக்குத் துறை அமைச்சராக இருக்கும் பெனிபிரசாத் வர்மா விழா ஒன்றில் பேசும் போது, ” பருப்பு, ஆட்டா, அரிசி மற்றும் காய்கறி விலைகள் அதிகரித்து வருகின்றன. விலையேற்றத்தால் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைத்து வருகிறது. எனவே இந்த விலை உயர்வால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். ‘பொருளாதார மேதை’ மன்மோகன் சிங்கின் அமைச்சர் ஒருவரது பொது அறிவு உண்மையில் யாரையும் மெய்சிலிர்க்க வைக்கும். டீசல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, உரங்கள் – பூச்சி கொல்லிகள் விலை உயர்வு, கொள்முதல் விலையை உயர்த்தாத அரசு என்று எல்லா …
-
- 1 reply
- 478 views
-
-
[size=1][/size] [size=1][size=4]அரசியல் வட்டாரத்தில் இப்போது அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தை அவதூறு! பொது வாழ்க்கையில் இருக்கும் நபர்கள் குறித்தோ அல்லது உங்கள் நண்பர்கள், உறவினர்கள் குறித்தோ டீக்கடைகளில் உட்கார்ந்து கொண்டு ’வல்கர்’ வார்த்தைகளில் பேசினால், அது காற்றோடு கலந்து கலைந்துவிடும்! ஆனால், அதையே பொதுக்கூட்டத்திலோ அல்லது பத்திரிகைகளிலோ வெளிப்படுத்தினால் அதற்கு உமக்குப் பரிசு அவதூறு வழக்கு! அவர் இவர் மேல் அவதூறு சொல்வதும், இவர் அவர் மேல் அவதூறு சொல்வதும்.... இருவர் மேலும் எதுவுமே சொல்லமுடியாமல் இருப்பதும்தான் இன்றைய அரசியல். செய்தித் தாளைத் திறந்தால் இன்று யார் மேல் அவதூறு வழக்கு என்று கண்கள் துருதுருவென தேடுகின்றன. விஜயகாந்த், ஸ்டாலின், …
-
- 0 replies
- 454 views
-
-
காலில் விழும்போது மார்பை ஏன் பிளக்க வேண்டும்? ஜெயா காலடியில் செங்க்ஸ் ஜெயாவின் 91-96ஆம் ஆண்டு ஆட்சியின்போது போக்குவரத்துத் துறையில் பெரும் கோடிகளைச் சுருட்டிய செங்கோட்டையன் தற்போதைய மூன்றாவது ஆட்சியில் அமைச்சராக இருந்து சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ’அம்மா’ யாரை நீக்குவார், சேர்ப்பார் என்பது அவரது அடிமைகளுக்கே இன்னும், இனியும் பிடிபடாத விசயம். செங்கோட்டையன் விசயத்தில் அவரது சின்ன வீடும், அந்தச் சின்ன வீட்டின் சொத்துச் சேர்ப்பும் ஜெ வை ஆத்திரமூட்டி நீக்கச் செய்திருப்பதாக எல்லா ஊடகங்களும் பகிரங்கமாகவே எழுதுகின்றன. பதவி நீக்கத்திற்குப் பின் கோபிச்செட்டிபாளையம் கம்பன் விழாவில் செங்கோட்டையன் பேசும்போது சீதையிடம் தான்…
-
- 0 replies
- 700 views
-
-
ஈழத்தமிழ் ரத்தம் – புத்தரின் எலும்பு – ராஜபக்சேவின் பக்தி! நேபாளத்தில் இருக்கும் லும்பினியில்தான் புத்தர் பிறந்தார் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் அவர் மறைந்த கபிலவஸ்து எங்கே இருக்கிறது என்பது இன்னும் சர்ச்சையில் இருக்கிறது. இந்திய நேபாள எல்லைக்கு அருகில் உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பிப்ரவா எனும் இடத்தில் 19ஆம் நூற்றாண்டில் நடந்த தொல்லியல் ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட சந்தன பேழைகள் புத்தரின் மறைவு காலத்தோடு பொருந்தி வந்ததால் இவ்விடமே கபிலவஸ்து என்று பிரிட்டீஷ் ஆய்வாளர்களால் கூறப்பட்டது. ஆனால் இதே காலத்தில் நேபாளத்தின் டெராய் பகுதியில் இருக்கும் திலுராகோட் எனும் இடம்தான் கபிலவஸ்து என்று வேறு ஆய்வாள…
-
- 0 replies
- 536 views
-
-
வடகிழக்கு – வதந்தி – தொழில் நுட்பம் – அரசு? மும்பை, பூனா, ஹைதராபாத், பெங்களூர், சென்னை என தென்னிந்தியாவின் மெட்ரோ நகரங்கள் அனைத்திலிருந்தும் வடகிழக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் தாயகத்திற்கு திரும்புகிறார்கள். அசாமில் போடோ இன மக்களுக்கும், இசுலாமிய மக்களுக்கும் இடையே நடைபெற்ற கலவரம் இதன் துவக்கப் புள்ளி என்றாலும் தற்போதைய கோலத்திற்கும் அலங்கோலத்திற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் கலவரம் குறித்து வினவில் தனிச்சிறப்பான கட்டுரை வருமென்பதால் தற்போது நடைபெறும் இடப்பெயர்ச்சி குறித்து மட்டும் இங்கு பார்க்கலாம். வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறியிருக்கும் இசுலாமிய மக்கள்தான் கலவரத்திற்கு காரணமென்றும், அந்தக் கலவரத்தை வைத்து ஏனைய இந்தியாவில் இரு…
-
- 0 replies
- 454 views
-
-
லண்டனில் சப்பாத்தி கட்டையால் அடித்து மாமியாரை கொன்ற மருமகள் Published on Saturday, 21 July 2012 12:59 லண்டனில் மாமியாரை சப்பாத்திக் கட்டையால் 20 முறை அடித்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து 121 கி.மீ. தூரத்தில் உள்ளது சவுத்தாம்டன். இங்கு வசிப்பவர் இக்பால் சிங். இவருடைய தாய் பல்ஜித் கவுர் பட்டார் (56), மனைவி ராஜ்வீந்தர் சிங் (36). 2010 ஆகஸ்ட் மாதம் சவுத்தாம்டன் வந்தார் பல்ஜித். மகன், மகளுடன் 6 மாதம் தங்கி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், வீட்டுக்கு வந்ததில் இருந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் தினமும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. 2011 பிப்ரவரி 27 அன்று இந்தியா திரும்ப இருந்தார் பல்ஜி…
-
- 5 replies
- 907 views
-
-
[size=4]கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் இந்த கோரிக்கை ஏற்கப்படுமானால், மின் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழகத்திற்கு, ஓரளவு விடிவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.[/size] [size=4]இந்திய - ரஷ்ய கூட்டு ஒப்பந்தத்தில், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு மின் உலைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், முதலாவது அணு உலையில் மின் உற்பத்திக்கான அனைத்து முதற்கட்டப் பணிகளும் முடிந்து விட்டன.எரிபொருளான யுரேனியம் நிரப்புவதற்கு முன்,டம்மி பியூல் எனப்படும் மாதிர…
-
- 5 replies
- 556 views
-
-
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, அண்ணமையில் இலங்கை கடல்ப்படையால் கொல்லப்பட்ட மீனவர் சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங்கிக்கு அனுப்பிவைத்த கடிதமொன்றில், மத்தியின் அசமந்த போக்கால்த்தான் தமிழ் நாட்டு மீனவர்களின் கொலை தொடர்வதாக குற்றம் சட்டியிருக்கிறார். Centre 'Soft Handling' Attacks on TN Fishermen: Jaya PTI | Chennai | Aug 20, 2012 Charging the government at the Centre with "soft handling" the issue of Sri Lankan Navy's alleged attacks on Tamil Nadu fishermen, Chief Minister Jayalalithaa today asked it to ensure that the island nation's Navy strictly refrains from harassing them with impunity. "The Sri Lankan Navy, emboldened by the soft handling of the iss…
-
- 2 replies
- 531 views
-
-
ஜப்பானில் பயங்கரம்... ஊறுகாய் சாப்பிட்ட 6 பேர் பலி! டோக்கியோ: ஜப்பானில் சாதாரண ஊறுகாயை சாப்பிட்ட 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. ஈ கோலை பாக்டீரியாவால் கெட்டுப் போன ஊறுகாய் அது என்று கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு ஜப்பானில் உள்ள ஹொக்கைடோவில்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளில் பேக் செய்யப்பட்ட சீன நாட்டு முட்டைகோஸ் ஊறுகாய் பேக் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. இதை வாங்கிச் சாப்பிட்டவர்கள்தான் தற்போது பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். 10 நாட்களுக்கு முன்பே பிரச்சினை உருவாகி விட்டது. இந்த கெட்டுப் போன ஊறுகாயை சாப்பிட்டு இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் …
-
- 0 replies
- 645 views
-
-
தமிழகத்தில் தீயாக பரவிய மெகந்தி பீதியால் விடிய விடிய மக்கள் அவதி!! சென்னை: மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக் கொண்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைவார்கள், தோல்வியாதி ஏற்படும், கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவற்றைத் துண்டிக்கும் நிலை ஏற்படும் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கும் பெண்களும், குழந்தைகளும் படையெடுத்து வந்தனர். இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று பெண்களும், குழந்தைகளும் கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்து அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்து கொண்டனர். இந…
-
- 0 replies
- 938 views
-
-
14 வயது சிறுமி Annaleise Carr 52 கிலோ மீற்றர் இடைத் தூரமுள்ள நயாகரா ஏரியை இன்று பின்னேரம் வெற்றிகரமாகக் கடந்து இளம் வயதில் இந்த ஏரியைக் கடந்தவர்களில் முதலாவது சிறுமி என்ற சாதனையை நிலை நாட்டியுள்ளார். இவர் புற்றுநோயிற்குள்ளான சிறுவர்களின் camping இற்கு நிதி சேகரிக்கவே இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்கள்: http://www.thestar.com/news/canada/article/1243772--lake-ontario-swimmer-reaches-50-000-donation-goal-keeps-swimming
-
- 2 replies
- 523 views
-
-
கடந்த ஞாயிறு அதிகாலையில், ஐந்து கருப்பு அங்கி அணிந்த நபர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களில் ஏறி மத்திய ஏதென்ஸில் ஓமோனிய சதுக்கத்திற்கு அருகே சவாரி செய்து குடியேறிவய்ரகளை வேட்டையாடத் தொடங்கினர். 19 வயது ஈராக்கியர் ஒருவரைக் கண்டபோது, அவர்கள் ஈராக்கியரை தங்கள் முஷ்டிகளாலும் கற்களாலும் தாக்கி, அவரை கத்தியால் பல முறை குத்தினர். ஒரு மருத்துவமனையில் அந்த இளைஞர் அன்றே இறந்து போனார். மோட்டார் சைக்கிள் கும்பல் ஏற்கனவே ஒரு ருமேனியரையும் மோரோக்கோக்காரரையும் இதே பகுதியில், பொலிசாரின் தலையீடு இல்லாமல், தாக்கியுள்ளது. 2012ன் முதல் பாதியில் இனவெறித் தாக்குதல்களினால் 500 குடியேறுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்தித்தாள் Ta Nea கொடுத்துள்ள தகவல்கள்படி, பல்வேறு அரசு சாரா …
-
- 0 replies
- 441 views
-