Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அவ்வளவு கூறியும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருப்பது பற்றி திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, போர்க்குற்றங்களைப் புரிந்துள்ள ராஜபக்ச அரசினைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக தலைவர் பலமுறை வற்புறுத்தியுள்ளார். அதோடு அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் வற்புறுத்தியுள்ளனர். இன்று காலை நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக, அதிமுக, இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியுள்ளன…

  2. பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதை உலகிற்கு எடுத்துக் காட்டிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஷெர்வுட் ரோலண்ட், 84, நேற்று காலமானார்.சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள், பூமியில் நேரடியாகப் பட்டுவிடாமல் ஒரு வலையைப் போல் பாதுகாத்து வருவதுதான் ஓசோன் மண்டலம். இந்த மண்டலத்தின் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானி பால் கிரட்ஸனின் ஆய்வின் அடிப்படையில், ரோலண்டும், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் மரியோ மொலினாவும் மேலும் சில ஆய்வுகளை நடத்தினர். வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஸ்பிரே பொருட்கள் மூலம் வெளியேறும் குளேரோபுளோரோகார்பன் என்ற வேதிப் பொருள், இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து வெளியேறினால், அது ஓசோன் மண்டலத்தைச் சீர் குலைத்து பூமியின் அழிவு…

  3. சிரியாவில் 26 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு சிரிய பாதுகாப்பு படையினர் தான் காரணம் என்று எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 11 மாதங்களாக நடந்து வரும் போராட்டங்களுக்கு 8,500 பேர் பலியாகியுள்ளனர். இந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகளின் கூட்டமைப்பு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. தூதர் கோஃபி அன்னன் ஆகியோர் டமாஸ்கஸ் சென்று அரசு மற்றும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே கடும் போராட்டம் நடந்து வரும் …

  4. உலகத்தின் அதிசிறந்த 150 பெண்கள் நியூஸ் வீக் கணிப்பீடு வெளியானது சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய குளோவினும் இடம் பெறுகிறார். அமெரிக்க நியூஸ் வீக் சஞ்சிகை வருடம் தோறும் வெளியிடும் உலகின் சிறந்த 150 பெண்களுக்கான பட்டியல் இன்று வெளியானது. இந்தியாவில் இருந்து ஜெயலலிதாவோ, சோனியாவோ, மாயாவதியோ இதில் காணப்படவில்லை. ஆனால் சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய குளோவின் இடம் பெறுகிறார். இன்று அவருடைய இறுதிக்கிரியைகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது. அமெரிக்க கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கின்றன. உலகப் புகழ் பெற்ற 150 பெண்களும் அவர்கள் புகைப்படங்களும் கீழே தரப்படுகிறது. ஆனால் இம்முறை ஒன்று இரண்டு என்று இலக்கமிடாமலே 150 பேருடைய புகைப…

  5. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்துக்களை வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக மதமாற்றம் செய்வது அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் மனிதஉரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு மாதமும் 20 முதல் 25 பேர் வரையிலான இந்து சிறுமிகள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த விஷயத்தில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதஉரிமை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டத்தில் உள்ள சில சாதக அம்சங்களைப் பயன்படுத்தி அவர்கள் கட்டாய மதமாற்றம் செய்வதாக செய்தியாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிச் சிறுமிகள் மட்டுமின்றி திருமணமான பெண்கள், சிறுவர்களும் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதாக அவர்கள் சுட்டிக் காட்டினர். இப்பகுதியைச் சேர்ந்த 18 வயது ரி…

  6. சுனாமி கொடூரத்தின் ஓராண்டு நினைவு நாள் ஜப்பானில், 16 ஆயிரம் பேரைப் பலி கொண்ட பெரும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி கொடூரத்தின் ஓராண்டு நினைவு நாள், இன்று அந்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது. ஜப்பானில், கடந்தாண்டு மார்ச் 11ம் தேதி கடற்பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தையடுத்து, ஜப்பானை சுனாமி தாக்கியது. இதில், ஐவேட், மியாகி, புக்குஷிமா ஆகிய மூன்று மாகாணங்கள் இதில் பேரிழப்பைச் சந்தித்தன. இச்சோக சம்பவத்தில், 15 ஆயிரத்து 800 பேர் பலியாயினர். 3,200 பேர் காணாமல் போயினர். புக்குஷிமா மாகாணத்தில் உள்ள அணுமின் நிலையங்கள் பெரும் அபாயத்திற்குள்ளாயின. அவற்றில் இருந்து ஏற்பட்ட கதிர்வீச்சு, இன்றளவும் அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. மூன்று லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் அழிந்தன. ஒரு ல…

    • 0 replies
    • 410 views
  7. ஆப்கானிஸ்தான் : அமெரிக்க வீரர்களின் கொலைவெறி அமெரிக்க போர் வீரர் ஒருவர் தனது முகாமில் இருந்து வெளியே வந்து குழந்தைகள் உட்பட பதினாறு பேர்வரையில் கொன்றுள்ளார்.

    • 5 replies
    • 1.1k views
  8. டெல்லி: வருடா வருடம் இந்தியாவில் உள்ள என்ஜிஓக்கள் எனப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து ரூ. 10,000 கோடி அளவுக்கு நிதியுதவி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத் தகவல் தெரிவிக்கிறது. கடந்த 2009-10ம் ஆண்டு இந்திய தொண்டு நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதியுதவியை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22,000 தொண்டு நிறுவனங்கள் இந்த வெளிநாட்டு உதவியைப் பெற்றுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவை 3218 ஆகும் என்று அத்தகவல் தெரிவிக்கிறது. தமிழக நிறுவனங்கள் மட்டும் கடந்த 2009-10ல் ரூ. 1663.31 கோடி நிதியைப் பெற்றுள்ளன. இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளது. …

    • 1 reply
    • 486 views
  9. சீனாவில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் மனித உரிமை மசோதா கொண்டு வரப்படவுள்ளது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடப்பதாக விமர்சனம் எழுந்தது. குற்ற‌ச்செயல்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில் போலீசாரின் அத்துமீறல்கள் உள்ளன. இந்நிலையில், சீனா தற்போது மனித உரிமை சட்டம் கொண்டுவர தீர்மானித்துள்ளது. சீனாவின்‌ தேசிய மக்கள் காங்கிரஸ் கமிட்டியின் நிலைக்குழு துணைத்தலைவர் வாங்க் ஜிகாவோ, இந்த வரைவு மசோதாவை கொண்டுவந்தார். இம்மசோதாவின்படி , குற்றவழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், அவர்களுக்கு சட்டபூர்வ உதவ வழிவகை செய்யப்பட்டுள்ளது. …

  10. அமெரிக்காவுக்கு எதிராக ஐ.நா. பேரவையில் பிரேரணை கறுப்பின மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு அமெரிக்காவின் NAACP புதனன்று சமர்ப்பிக்கிறது அமெரிக்க அரசாங்கம் அமுலாக்கியுள்ள புதிய தேர்தல் சட்டத்தினால் அந்நாட்டின் 21மில்லியன் கறுப்பின மக்கள் வாக்குரிமையை இழக்கிறார்கள். இந்த சட்டம் கறுப்பின மக்கள் அதிகமாக உள்ள மாநிலங்களையே பாதிக்கின்றது. இதனால் 25சதவீதமான அமெரிக்க பிரஜைகளுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறது. கறுப்பின மக்களின் மனித உரிமைக்காக போராடும் NAACP அமைப்பு இதுபற்றிய முறைப்பாடொன்றை எதிர்வரும் புதன்கிழமை ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க உள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் மாநில தேர்தல…

  11. டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு விழாவில் ஒபாமா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கர்களுக்கு 2,27,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதனால் அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்து கொண்டு வருகிறது. இதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அமெரிக்கா மீண்டு வருகிறது. எனது அரசு அமெரிக்காவை முன்னோக்கி கொண்டு செல்ல பாடுபடுகிறது. இன்னும் பாடுபடுவோம் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் குடியரசு முன்னணி கட்சியின் தலைவர் மிட் ராம்னி, "அமெரிக்கர்களில் 8 சதவீதம் பேர் இன்னும் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஒபாமா ஆட்சி தோல்வியடைந்துள்ளது. அதனால் 2012 தேர்தலில் ஒபாமா தோல்வி அடைய…

  12. சர்வதேச அளவில் முதல் இடத்தில் இருக்கும் ஒரு குற்றவாளியைக் கைது செய்து நீதி மன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் இளம் சமுதாயம் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை தெளிவாக இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் முன்னெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பல ஆயிரக் கணக்கான சிறுவர்கள் பாதுகாக்கப் படவேண்டும்!

    • 8 replies
    • 1.2k views
  13. இலங்கையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், பிரபலங்களும் தனிப்பட்ட பயணமாக தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து தமிழக அரசுக்கு தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படுவது இல்லை. இலங்கை அதிபரின் மைத்துனர் திருக்குமரன் நடேசன், ஜனவரி மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் ராமேஸ்வரத்துக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவரை சிலர் தாக்க முயற்சி செய்தனர். அவர் வருகை பற்றி இலங்கை அரசாங்கத்திடம் இருந்தோ, அல்லது இந்திய அரசிடம் இருந்தோ தமிழக அரசுக்கு தகவல் எதுவும் வராததால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியவில்லை. நடேசனுக்கு எதிராக நடந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக, தென் இந்தியாவுக்கான இலங்கை துணை தூதரிடம் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடித…

  14. கூடங்குளம் விஷயத்தில் கிறிஸ்தவர்களை இழிவு படுத்துகிறது மத்திய அரசு கூடங்குளம் விவகாரத்தில் மத்திய அரசு கிறிஸ்தவர்களை இழிவு படுத்துகிறது என்று தமிழக பிஷப் கவுன்சில் அதிரடிக் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இவ்விவகாரத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட சங்கத்தின் கணக்குகளும் முடக்கப்பட்டன. சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களை இப்படி இழிவு படுத்துவதை மத்திய அரசு நிறுத்திவிட்டு, தூத்துக்குடி மறைமாவட்ட சங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழக கிறிஸ்தவ தலைவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக இன்று நிருபர்களிடம் பேசிய தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் யுவான் அம்புரோஸ், ‘தனிப்பட்ட முறையில் எங்கள் மறைமாவட்டம் மீது மத்திய அரசு பழி சுமத்தியுள்ளது ஏன் என எங்க…

  15. அவுஸ்ரேலியாவில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர மழை பெய்துள்ளது. இதனால் சிட்னி நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அவுஸ்ரேலியாவில் கடந்த 2007ம் ஆண்டு கன மழை பெய்தது. சூறாவளி காற்றில் மரங்கள் சாய்ந்தன. தகவல் தொடர்பு ஒயர்கள் அறுந்தன. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பின், நேற்று பயங்கர சூறாவளி காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதில் நியூ சவுத் வேல்ஸ் பகுதி முழுவதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. சிட்னி நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. பெரிய பெரிய டிராக்டர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சிட்னியில் மட்டும் 4.7 அங்குலம் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். கன மழை காரணமாக பஸ், ரயில் ப…

  16. தமிழர்கள் ஆவேசம் : பாதுகாப்புடன் வெளியேறினார் இலங்கை பேராசிரியை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கருத்தரங்கு நடந்தது. ’போதை பழக்கமும், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியை ஜீவா நீரல்லா, இங்கிலாந்தின் லங்காஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஹெலன்காட் உள்ளிட்ட பெண் பேராசிரியைகள் பங்கேற்றனர். கொழும்பு பல்கலை பேராசிரியை ஜீவா நீரல்லா, இலங்கையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கவில்லை என்றும் அவ்வாறு நடப்பதாக சித்தரிப்பது சரியல்ல என்றும் பேசியதாக கூறப்படுகிறது. இலங்கை பேராசிரியை பங்கேற்பது குறித்து ஏ…

  17. பாகிஸ்தானிடம் 90 முதல் 110 விதமான அணு ஆயுதங்கள் உள்ளதாக அணு ஆயுதங்களை ஒழிக்கும் பிரசாரத்திற்கான சர்வதேச தொண்டு நிறுவனம் (ஐசிஏஎன்) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. இந்த அறிக்கையில்,"பாகிஸ்தானிடம் 90 முதல் 110 விதமான அணு ஆயுதங்கள் உள்ளன. கடந்த 2008ம் ஆண்டுக்கு பின்புதான் சுமார் 60 முதல் 80 வகையான அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரித்துள்ளது. கடந்த 2010ல் அணு ஆயுத தயாரிப்புக்காக பாகிஸ்தான் அரசு 180 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி ஒதுக்கியது. இதுவே கடந்த ஆண்டில் 220 கோடி அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டது. அணு ஆயுதங்களை பராமரிக்கவும், புதிய தயாரிப்புகளுக்காகவும் பாகிஸ்தான் இந்த அளவுக்கு நிதியை ஒதுக்கியுள்ளது. 10 ஆண்டுகளில் அணு ஆயுதங்கள் எண்ணிக்கையை 350 ஆக உயர்த்தி…

  18. இது தான் ஒரு விழிப்புணர்வுக்கான சரியான செயல்பாடு.. கோனி தண்டிக்கப்பட வேண்டியவர்.. இதை பார்த்ததும் நம் இனப்பிரச்சனைகளை நாம் இப்படி கொண்டு செல்ல திறமில்லாமல் இருக்கிறோம் என்ற வேதனை அழுத்தியது.. இதில் கொடுமை என்னவென்றால் நாம் இணையத்தில் கொலைவெறியை பகிர்ந்து கொண்டு இருக்கிறோம் நம் இனத்தின் மேல் நடத்தப்பட்ட கொலைவெறியை மறந்துவிட்டு via fb The KONY 2012 documentary has become an Internet sensation. Less than two days after its initial release, the video on YouTube and Vimeo had garnered almost 20 Million views. Most viewers have been referred from Facebook and are between 13 and 24 years of age. The KONY 2012 documentary was created by Invisible Children and ”aims…

    • 1 reply
    • 2.2k views
  19. முன்னாள் ஜனாதிபதி வீட்டுக் கதவில் பிடியாணை ஒட்டப்பட்டுள்ளது உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகக் கோரி பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி வீட்டுக் கதவில் பிடியாணை ஒட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007 ஆம் ஆண்டு, பிரசாரமொன்றின் போது படுகொலை செய்யப்பட்டார். அந்நாட்டின் அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த முஷாரப் அரசின் கவனக்குறைவே இச்சம்பவத்திற்குக் காரணம் என்று கூறி இது தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்க அவருக்கு பிடியாணை அனுப்பியது நீதிமன்றம். ஆனால், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் தோல்விக்குப்பின் லண்டன், டுபாய் என மாறிமாறி வசிக்கும் முஷாரப் இதைப் பொருட்படுத்தவில்லை. பிடியாணை பிறப்பித்தும் முஷாரப்பைக் கொண்டுவர பாகிஸ்தான் அதிகாரிகள் எடுத்த முயற்…

    • 0 replies
    • 525 views
  20. தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2012 பிப்ரவரி 16-29 இதழ் வரலாற்று ஓட்டத்தில் ஓர் உயர்ந்த அரசு வடிவமாக முகிழ்த்தது தான் சனநாயகம். ஆட்சிக்கும் நிர்வாகத்திற்கும் தேர்தல் முறையில் தேர்வு நடைபெறுவது சனநாயகத்தின் இன்றியமையாத கூறாகும். ஆனால், இப்போது தேர்தல் சனநாயகம் என்பது இந்தியாவில் மக்களை மூச்சுமுட்ட அழுத்தி வருகிறது. கட்சிகளும், முதலாளிய நிறுவனங்களும் ஒன்று கலந்து விட்ட ஒட்டுண்ணி வலைப்பின்னல் வளர்ந்து விட்ட இக்காலத்தில் தேர்தல் சனநாயகம் மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கு உற்ற வழியாக சீரழிந்துவிட்டது. ஆயினும், இந்தக் கொள்ளைக் கூட்டாளிகளுக்குள் ஏதோ ஒரு நிலையில் குத்துவெட்டு நடக்கும் போது அதில் சிக்கிக் கொண்ட ஒரு பிரிவினர் மட்டுமே கொள்ளையர் போலவும் அதனுடன் மோதும் மற்…

  21. பிரம்மாண்டம் என்பதை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்திய இந்தி(ய)ப் படம் ‘ஷோலே’. அதில் முக்கிய கதாபாத்திரமாக படம் முழுக்க வந்துகொண்டே இருப்பார் தர்மேந்திரா. ஆனாலும், அவருடைய நண்பராக நடித்த அமிதாப்பச்சன்தான் கடைசி காட்சியின் மூலம் ரசிகர்களின் மனங்களை வென்றார். அதன் காரணமாக, இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக நின்றார். எதற்காக 35 ஆண்டுகளுக்கு முன் வெளியான அந்த பழைய இந்திப் படத்தை இப்போது நினைவுபடுத்தவேண்டும் என கேட்கத் தோன்றும். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் பழைய ஷோலே படத்தின் கதாபாத்திரங்களைத்தான் நினைவுபடுத்துகிறது. அங்கே முதல்முறையாக ஐந்தாண்டு காலம் முழுமையாக ஆட்சி செய்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரசை வீழ்த்த…

  22. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி, பெரும் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத கொள்கைகளை நடை முறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முற்றிலுமாக நிராகரித்து விட்டதையே 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்குக் காரணமாகும். 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிற்கான முன்னோட்டம் என்று கருதப்பட்ட இத் தேர்தலில், உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியைச் சந்தித்துள்ளது. உத்தரகாண்டில் இழுபறியான ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள சிறிய ம…

  23. அமெரிக்காவில் பின்லேடனின் உடல்.. கடலில் புதைக்கப்படவில்லை: விக்கிலீக்ஸ் தகவல். லண்டன்: பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும், வெள்ளை மாளிகையில் உள்ள வெளியுறவுத்துறை தலைமை அலுவலகத்துக்கும் இடையே நிகழ்ந்த லட்சக்கணக்கான ரகசிய கேபிள் செய்தி பரிமாற்றங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ். இதையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன் இணைத்து அதை முடக்கியது அமெரிக்க அரசு. இதையடுத்து அனானிமஸ்-விக்கிலீக்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தன்னிடம் உள்ள ரகசிய தக…

  24. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலி்ல் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, உத்தரப் பிரதேசத்தில் நான் தான் முன் நின்று பிரச்சாரம் செய்தேன். அதனால் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். தோல்வியும் எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் கட்சியின் அடிப்படையே பலவீனமாக உள்ளது. நாங்கள் தோல்வியடைந்தாலும் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார். செ…

    • 7 replies
    • 948 views
  25. லிபியாவின் எண்ணெய் வளம் மிக்க சைறேனைகா சுயாட்சி பிரகடனம் லிபியாவின் எண்ணெய் வளம் மிக்க கிழக்குப் பிராந்தியமான சைறேனைகா பிராந்தியத்தில் பழங்குடி மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து சுயாட்சி பிரகடனம் செய்துள்ளதுடன் சமஷ்டி ஆட்சிமுறையை வலியுறுத்தியுள்ளனர். பெங்காஸி நகரில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் இப்பிரகடனம் செய்யப்பட்டது. 'சமஷ்டி ஆட்சியே சைறேனைகா பிராந்தியத்தின் தெரிவு' என அங்குள்ள தலைவர்கள் கூட்டறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர். சைறேனைகா பிராந்தியமானது லிபியாவின் மத்திய கரையோர நகரான சேர்ட்டேவிலிருந்து லிபிய – எகிப்து எல்லைவரை பரந்துள்ளது. பல தசாப்தங்களாக அப்பிராந்தியம் புறக்கணிக்கப்பட்டிருந்ததாக லிபியாவின் ஆளும் தேசிய இட…

    • 1 reply
    • 643 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.