உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26633 topics in this forum
-
இராஜீவ் கொலை - அமெரிக்காவின் ஜோன். எப். கெனடியின் கொலைபோல் சதிகள் நிறைந்ததா? இராஜீவ் கொலை துரதிஸ்டவசமானது. ஆனால் அதைவிட பல உண்மைகள் மறைக்கப்பட்டு வருவது அதைவிட துரதிஸ்டவசமானது!
-
- 1 reply
- 857 views
-
-
வீரகேசரி இணையம் 11/3/2011 5:43:05 PM செங்கடல் பகுதியில் பயணிக்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்த எகிப்து நாட்டு கப்பலில் இருந்து 1200 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஜோர்தானின் அகபா துறைமுகத்திலிருந்து எகிப்திய நுவெயிபா துறை முகத்தை நோக்கிச் சென்ற வேளையிலேயே மேற்படி கப்பலில் தீப்பற்றி எரிந்துள்ளது. அப் படகில் பயணம் செய்தவர்கள் பலர் உயிர்காப்பு படகுகள் மற்றும் மீட்புப் படகுகள் மூலம் காப்பாற்றப்பட்டனர். இந்த அனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும்…
-
- 0 replies
- 606 views
-
-
// ஓமனில் கடும் மழை - தாய், குழந்தை 6 பேர் பலி! பலி எண்ணிக்கை கூடும் என அச்சம்! வியாழன், 03 நவம்பர் 2011 17:30 அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் இரு நாட்களாக ஆங்காங்கே கடும் மழை பெய்து வருகிறது. கடுமையான மழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இது வரை தாய் மற்றும் குழந்தை உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் சிலர் பலியாகி இருக்கக் கூடும் என்று நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் ஹம்ரியாவில் உள்ள அல் நதா மருத்துவமனை வளாகத்தில் புகுந்ததால் காவல்துறை முடுக்கி விடப் பட்டு அல் நதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்த நோயாளிகள் அங்கிருந்…
-
- 0 replies
- 602 views
-
-
அசான்சை நாடு கடத்த உத்தரவு விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்சை ஸ்வீடனுக்கு நாடு கடத்தலாம் என்று பிரிட்டிஷ் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. அசான்ச்சுக்கு எதிராக பாலியல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகிய குற்றச்சாட்டுக்கள் ஸ்விடனில் பதிவாகியுள்ளன. இந்தத் தீர்ப்பின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்குள் அசான்ச் பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இருந்தும் இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வார் என்று நிருபர்கள் கூறுகின்றனர். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுத்து வரும் அசான்ச், அவை அரசியல் உள்நோக்கம் காரணமாக சுமத்தப்படுவதாகக் கூறி வருகிறார். அமெரிக்காவின் …
-
- 0 replies
- 653 views
-
-
பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பாலஸ்தீன அதிகாரத்தை ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ வாக்களித்துள்ளது. பாலஸ்தீனம் என்ற பெயரைக் குறிப்பாகப் பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன. ஆனாலும், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பாலஸ்தீனர்கள் எடுத்துவருகின்ற முயற்சிகளின் ஓர் அங்கமாக தற்போது அவர்கள் யுனெஸ்கோவில் இணைந்துள்ளனர். ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என பாலஸ்தீன நிர்வாகம் சென்ற மாதம் விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்க விருப்பத்தை …
-
- 10 replies
- 1k views
-
-
சில்லுகள் இல்லாமல் தரையிறங்கிய விமானம் A Boeing 767 on a flight from Newark, New Jersey, made a dramatic emergency landing at Warsaw, Poland's Frederic Chopin International airport Tuesday after problems with its landing gear, an airport spokeswoman said. All the passengers on the flight, from Newark Liberty International Airport to Warsaw, are safe and uninjured, she told CNN. Newark Liberty serves the greater New York area. The LOT Polish Airlines flight, which had been due to land at 1:35 p.m. local time, circled above the airport for an hour before coming down in a belly landing at 2:40, she said. "After noticing a central hydraulic system failure the…
-
- 6 replies
- 1k views
-
-
சர்வதேச பெண்கள் அமைப்பு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் நந்திதாஸ்! 2011-10-30 23:47:47 பெண்கள் அவலத்தை சினிமா மூலம் எடுத்துக் காட்டும் நடிகை நந்திதா தாஸ், சர்வதேச பெண்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள பெண் தலைவர்கள் இணைந்து சர்வதேச பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பல துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை தேர்ந்தெடுத்து கவுரப்படுத்தி தங்கள் அமைப்பில் சேர்க்கின்றனர். அதன்படி, பெண்களின் அவலத்தை தனது நடிப்பால் சினிமா மூலம் வெளிப்படுத்திய நடிகை நந்திதா தாஸ், சர்வதேச பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினரா…
-
- 3 replies
- 887 views
-
-
லிபியாவுக்கு புதிய பிரதமர் தேர்வு லிபியா நாட்டிற்கான தற்காலிக பிரதமரை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. லிபிய போராளிகள் குழுவின் உயர்மட்ட ஆயமான ரி.என்.ஏ நடாத்திய வாக்கெடுப்பில் 51 உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். மூவர் போட்டியிட்டனர் இவர்களில் லிபியாவின் பிரபல வர்த்தகரும் திரிப்போலி நகரத்தை சேர்ந்தவருமான Abdul Al – Reheem Al – Qeeb தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு 26 வாக்குகள் கிடைத்துள்ளன. லிபிய போராளிகள் ஆயம் மொத்தம் நான்கு தேர்தல்களை வரும் எட்டு மாத காலத்திற்குள் நடாத்த இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் அதிகாரம் ஜனநாயக முறைப்படி மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த வாரம் லிபிய போராளிகள் நாட்டின் நிர்வாகம் ஸாரியார் சட்ட…
-
- 0 replies
- 641 views
-
-
சீனாவில் இன்று காலை 5.58 மணியளவில் கிக்சுவான், கன்சு ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு கட்டிடங்கள் வீடுகள் குலுங்கின. இதைத் தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 மணி நேரம் கழித்து வடமேற்கு சீனாவில் உள்ள இலி என்ற பகுதியில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெரு நாட்டின் லிமாவில் 6.9 என ரிக்டர் அளவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 134 வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
-
- 0 replies
- 684 views
-
-
அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியைத் தாக்கிய பாரிய பனிப் புயல் காரணமாக 6 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனால் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதால் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பனிப்பொழிவின் காரணமாக நிவ்ஜேர்ஸி, கெனக்டிகட், மசாசுஸெட்ஸ் மற்றும் நிவ்யோர்க்கின் சில பகுதிகளில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிலிடெல்பியாவில் பனிப் பொழிவின் காரணமாக இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். பென்சில்வேனியாவிலுள்ள ஆலயத்தில் பனி விழுந்ததால் 84 வயது வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார். கெனக்டிகட்டில் 75,000 பேரும் நிவ்ஜேர்சியில் 600,000 பேரும், மின்சாரமின்றி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 702 views
-
-
சென்னை: விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள பிரபல நிறுனவங்களின் கடைகளுக்கு இன்று அதிகாலை சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. (சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்) அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையொட்டி அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள், பல அடுக்குமாடி கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு குழுவை, சென்னை ஐகோர்ட் கடந்த, 2006ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவினர் செய்த ஆய்வில், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில், 48 வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இந்த கட்டடங்களை இடிக்க, 2007ம் ஆண்டு கண்காணிப்பு…
-
- 0 replies
- 645 views
-
-
துனிஷீயா, எகிப்து, லிபியா ஆகிய அரபுநாடுகளில் மக்கள் ஒன்று திரண்டு நீண்ட கால சர்வாதிகாரிகளைத் துரத்தியும், வீழ்த்தியும் புரட்சி செய்தனர். இந்தப் புரட்சி ‘அரபு வசந்தம்’ என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. பாக்கிஸ்தானிலும் அத்தகைய மக்கள் புரட்சி காலத் தேவையாக உள்ளது என்று தஹ்ரீக்கெ இன்சாஃப் கட்சித் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் அணித்தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார். லாஹுரில், மினாரே பாக்கிஸ்தான் என்னுமிடத்தில் கூடிய 50,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடையே, பேரணியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். “மாற்றத்தை முன்னெடுப்போம்” என்றொரு முழக்கத்தைப் பற்றிக்கொண்ட இம்ரான்கான், “இந்த நாடு, திருடர்களிடமிருந்தும், சுரண்டல்வாதிகளிடமிருந்தும், ஊழல்பேர்வழிகளிடமிருந்த…
-
- 1 reply
- 764 views
-
-
உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது! Published on October 31, 2011-3:45 am உலக மக்கள் தொகை இன்று (31) 700 கோடியை தொட்டுவிட்டது. நேற்று (30) நள்ளிரவுடன் இந்த விசேட மக்கள் தொகை எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த முக்கிய விடயத்தை கொண்டாடும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜனத்தொகை நிதியத்தினால் 07 பில்லியன் பெறுமதியான திட்டங்கள் உலகம் முழுவதும் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 பில்லியன் மக்கள் வசிப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் எதிர்கால சவால்கள், சந்தர்ப்பம், மற்றும் ஏதும் செய்வதற்கு உள்ள திறமை, உலகின் எதிர்காலத்தை திட்டமிடுதல் ஆகிய செயற்பாடுகளின் கீழ் மேற்படி திட்டங்கள் அமையும். 07 பில்லியன் மக்களாக நாம் ஒருவருக் கொருவர் அக்கறையுடன் வசிப்போம் …
-
- 0 replies
- 447 views
-
-
03.11.11 ஹாட் டாபிக் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அத்வானியின் ரத யாத்திரை, இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவது, கூடங்குளம் அணுமின் நிலையம் என சென்சிடிவ் பிரச்னைகளை தமிழகத்தில் கையில் எடுக்க, பரபரப்பு அதிகரித்துள்ளது. லஞ்சம், ஊழலை எதிர்த்து அத்வானியின் நாடு தழுவிய ‘ஜன் சேத்னா யாத்ரா’ என்ற ‘மக்கள் விழிப்புணர்வு யாத்திரை’ பீகார் மாநிலத்தில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த சாப்ரா நகரில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 38 நாட்கள் நடக்கிறது. இந்த யாத்திரை 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 100 மாவட்டங்கள் வழியாக 7,600 கி.மீ. பயணித்து நவம்பர் 20-ம் தேதி டெல்லியில் நிற…
-
- 0 replies
- 582 views
-
-
ஆப்கனில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 14 பேர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் படையினர் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். நேட்டோ படையினர் பயணம் செய்த பஸ் மீது காரில் வந்த தலிபான் தீவிரவாதி மோதி வெடிக்கச் செய்ததில் நேட்டோ படையினர் 11 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் நகரத்தின் மேற்கு பகுதியான அஸாதாபாதின் குணார் மாகாணத்தில் மற்றொரு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. ஆப்கானிஸ்தான் உளவு அலுவலகத்துக்கு வெளியே பெண் மனித வெடிகுண்டு நடத்திய இத்தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். காந்தகார் நகரில் அமெரிக்க நடத்தி வரும் பொது மக்கள்-ராணுவ முகாம்கள் மீது தலிபான்கள் வெள்ளிக்கிழமை நான்கு மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்…
-
- 1 reply
- 738 views
-
-
நேரமாற்றம் ஐரோப்பாவெங்கும் நாளை அதிகாலை Winterக்கான நேரமாற்றம் நிகழ்கின்றது. மறக்காமல் உங்கள் கடிகாரங்களிலும் 1 மணி நேரத்தை குறைத்து விடுங்கள்.. ஆம் 29.10.06 ஞாயிறு அதிகாலை 3 மணியாகவிருக்கும் போது 2 மணியாக மாற்றப்படுகின்றது. மறந்து விடாதீர்கள் நண்பர்களே
-
- 28 replies
- 6k views
-
-
'அமெரிக்கா, இந்தியாவுடன் பாகிஸ்தானுக்கு யுத்தம் ஏற்பட்டால் பாகிஸ்தானை ஆப்கான் ஆதரிக்கும்' அமெரிக்கா அல்லது இந்தியாவுடன் பாகிஸ்தான் யுத்தம் புரிய நேரிட்டால் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவளிக்கும் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் கூறியுள்ளார். பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியொன்றிலேயே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்செவ்வியின் சில பகுதிகள் நேற்று ஒளிபரப்பப்பட்டன. குறிப்பாக இந்தியாவினால் பாகிஸ்தான் தாக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவளிக்குமா என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டது. அப்போது, பாகிஸ்தான் மீது யார் தாக்கினாலும் பாகிஸ்னுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவளிக்கும். பாகிஸ்தானின் ஒரு சகோதரனாக…
-
- 2 replies
- 933 views
-
-
மூவரையும் தூக்கிலிட வேண்டும்: மத்திய அரசு பதில் மனு முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத தலைவர் நிராகரித்துவிட்டதால், அவர்களை தூக்கிலிட உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராஜீவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், தங்களுடைய கருணை மனுக்களை 11 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருந்துவிட்டு, பிறகு நிராகரித்திருப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இவர்களின் மன…
-
- 8 replies
- 870 views
-
-
லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மகன்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தன்னை லிபியாவின் தென் பகுதியிலுள்ள பாலைவனத்திலிருந்து வெளியேற்றுவதற்காக விமானமொன்று வேண்டும் எனவும் கேட்டுள்ளதாக லிபிய இடைக்கால கவுன்ஸிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேணல் கடாபி கடந்தவாரம் கொல்லப்பட்ட பின்னர் அவரின் புதல்வர்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம், லிபிய கிளர்ச்சிப் படையினரிடமிருந்து தப்பியோடிக்கொண்டிருக்கிறார். கிளர்ச்சியாளர்களின் கைகளில் அகப்படாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐ.சி.சி.) சரணடைவதற்கு அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லிபியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவ…
-
- 1 reply
- 859 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 28 ஒக்ரோபர் 2011, 01:36 GMT ] [ கார்வண்ணன் ] அவுஸ்ரேலியாவின் சிட்னி வில்லாவூட் தடுப்பு நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவுஸ்ரேலியாவின் அகதிகள் பற்றிய கொள்கை குறித்த கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. “சுட்டிவிகடன்“ என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட 27 வயதான ஜெயசங்கர் ஜெயரட்ணம் என்ற இளைஞர் கடந்த புதன்கிழமை அதிகாலை, அதிகளவிலான தூக்க மாத்திரைகளை அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கடந்து ஆண்டு மார்ச் மாத இறுதிப் பகுதியில் இருந்து இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவரது தஞ்சக் கோரிக்கை கடந்த ஓகஸ்ட் மாதமே ஏற்கப்பட்டு விட்டது. ஆனால் அவுஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகளின் அறி…
-
- 2 replies
- 736 views
-
-
ஸ் ரீவ் யேப்ஸ் புதிய புத்தகம் நேற்று வெளியானது ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடுகளால் உலகின் சிகரங்களை தொட்டு அண்மையில் புற்நோயால் மரணமடைந்த ஸ் ரீவ் யேப்ஸ்சின் வாழ்க்கை வரலாறு நூல் வடிவில் நேற்று வெளியானது. வோல்ரர் ஈசக்சன் walter Isaacson இதை எழுதியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் 40 தடவைகள் ஸ் ரீவ் யேப்சை இவர் தொலைக்காட்சிக்காக பேட்டி எடுத்துள்ளார். மேலும் இவர் தொடர்பான கருத்துக்களை பல ஆயிரக்கணக்கானவரிடமிருந்து திரட்டியும் உள்ளார். ஸ் ரீவ் யேப்ஸ் பற்றிய பாரிய அனுபவத்துடன் நூலை வெளிக் கொணர்ந்துள்ளார். இவர் சி.என்.என் நிர்வாகத்தில் உள்ளவர், ரைம் சஞ்சிகையின் நிர்வாக எடிட்டர், மற்றும் ஐன்ஸ்டைன், பென்ஞமின் பிராங்கிளின், அன் அமெரிக்கன் லைப் கீஸிங்கர் போன்ற புகழ…
-
- 9 replies
- 1.3k views
-
-
அந்தமான் தீவுகளில் இந்தியா பாதுகாப்பை அதிகரிக்கிறது - சீன ஊடுருவலால் அதிர்ச்சி:- இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகள் இந்தியப் பெருங்கடலில் வரலாற்று ரீதியாகவும் பூகோளரீதியாகவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவிலிருந்து மிக தொலைவில் இருக்கும் அந்தமான் தீவுகள், தென்கிழக்கு ஆசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் அந்தமான் தீவுகளைக் கடந்தே இந்தியாவுக்கு எவ்வித ஆபத்தும் வர முடியும். இப்பகுதி மீது ஆரம்பத்தில் இருந்தே சீனாவுக்கு அதிக ஆர்வம் உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை…
-
- 7 replies
- 2k views
-
-
கடாபியின் இரகசிய இரசாயன ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிப்பு _ வீரகேசரி இணையம் 10/27/2011 5:11:28 PM லிபியாவில் கடாபியினது இரகசிய இரசாயன ஆயுதக் களஞ்சியசாலையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சிர்ட் நகரின் தெற்கே நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த 80 ஆயுதக் களஞ்சியசாலையொன்றிலேயே அபாயகரமான இரசாயன ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன. இந்த ஆயுதங்கள் இடைக்கால அரசாங்கப் படையினர் சிர்ட் நகரைக் கைப்பற்றும் வரை கடாபியின் படையினரின் காவலின் கீழ் இருந்தாக இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேட்டோவின் உளவு விமானங்கள் சிர்ட் நகரிலிருந்து தெற்கே 130 மைல் தொலைவில் ருகவா எனும் இடத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் சந்தேகத்துக்கிடமாக இரசாயன ஆயு…
-
- 0 replies
- 966 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 10/27/2011 10:53:25 AM Share சவூதி மன்னர் அப்துல்லா தனது அடுத்த வாரிசாகவும், புதிய இளவரசராகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் நயீப்பை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் இளவரசராக இருந்த சுல்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் இதைத்தொடர்ந்து புதிய இளவரசரைத் தேர்வு செய்யும் செயற்பாடு நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் தற்போது உள்துறை அமைச்சராக உள்ள நயீப் புதிய இளவரசராக தேர்வு செய்யப்படலாம் எனவும், அதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவுப்பு…
-
- 0 replies
- 664 views
-
-
சுதந்திர போராட்ட வீராங்கனை ஆங் சாங் சுகிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவம். மியான்மர் சுதந்திர போராட்ட வீராங்கனை ஆங் சாங் சுகிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வருபவர் ஆங் சாங் சுகி. ராணுவத்திற்கு எதிராக போராடியதற்காக 15 ஆண்டுகள் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகம் அவருக்கு உயரிய வாலன்பர்க் விருது வழங்கி கவுரவித்துள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு செல்ல ராணுவ அரசு அனுமதி வழங்காததால் இணையதளம் மூலம் அவர் இவ்விருதை பெற்றுக்கொண்டார். http://mykathiravan....a-news/?p=17868
-
- 0 replies
- 570 views
-