உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை முடியும் வரை அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர் ஓங் பெங் மீதும் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சர்,தொழிலதிபர் கைது கடந்த 11ஆம் திகதி அந்நாட்டு ஊழல் புலனாய்வுப் பிரிவினர் அமைச்சர் மற்றும் தொழிலதிபரை கைது செய்தனர். ஊழலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும், அப்படியானால் அமைச்சர் ஒருவர் ஊழலில் ஈடுபடுவதை மன்னிக்கவே முடியாது என்றும் ஊழல் புலனா…
-
- 3 replies
- 745 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 17 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் சுரங்கத்திலிருந்து லித்தியம் எடுப்பது தொடர்பாக இந்தியா மற்றும் அர்ஜெண்டினா இடையே மிக முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த திங்கள் கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள இந்த திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.200 கோடி என இந்திய அரசின் சுரங்க அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் கீழ், அரசு நிறுவனமான ‘மினரல் பிதேஷ் இந்தியா லிமிடெட் (கேபில்)’ அர்ஜெண்டினாவின் கேடமர்கா மாகாணத்தில் ஐந்து சுரங்கங்களை உருவாக்கி லித்தியம் எடுக்கும். கேபில், காடமார்காவின் அரசாங்க எரிசக்தி நிறுவனமான கேமியனுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
அமெரிக்க கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல்! செங்கடலில் ஏடன் வளைகுடாவில் அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் தமது கப்பலை தாக்கியதாகவும் ஆனால் கப்பல் பெரிய அளவில் சேதமடையவில்லை என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. ஹூதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதளுக்கு பின்னர் அமெரிக்க கப்பல் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும் கப்பலும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அக் கப்பலின் கேப்டன் தெரிவித்தார். காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டு…
-
- 0 replies
- 270 views
-
-
பட மூலாதாரம்,REUTERS 17 ஜனவரி 2024, 03:31 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் செவ்வாய்க்கிழமை அன்று, அண்டை நாடான இரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இரண்டு தளங்களைக் குறி வைத்ததாக இரான் கூறியதாக அந்நாட்டு ராணுவத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை நிராகரித்துள்ளது. இது “கடுமையான விளைவுகளுக்கு” வழிவகுக்கும் “சட்டவிரோத செயல்” என்று கூறியது. இராக் மற்றும் சிரியாவுக்கு அடுத்தபடியாக கடந்த சில நாட்களில் இரானின் தாக்குதலுக்கு உள்ளான மூன்ற…
-
- 4 replies
- 700 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, 1938 இல் செக்கோஸ்லோவாக்கியாவை விட்டு வெளியேற வின்டன் 669 குழந்தைகளுக்கு உதவினார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிட்லரின் படையினர் செக்கோஸ்லோவாக்கியாவின் வடக்குப் பகுதியான சூடேட்டென்லாந்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியதைக் கண்டு, ஆயிரக்கணக்கான யூத குடும்பங்கள், தலைநகரான ப்ராக் நோக்கி பயத்தில் வெளியேறினர். அவர்கள் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியும். குறைந்தபட்சம் அவர்கள் இன்னும் சில வாரங்களே உயிர்வாழ முடியும். இங்கிலாந்து தொழிலதிபர் நிகோலஸ் வின்டனின் திட்டத்தினால் பல குடும்பங்களுக்கு விடிவு காலம் கிடைத்தது. 1938 ஆம் ஆண்டில், வின்டன் ஒருங்கிணைத்த திட்டத்தால் செக்கோஸ்லோவ…
-
- 0 replies
- 580 views
- 1 follower
-
-
சீனாவில் அதிகரித்து வரும் இறப்பு விகிதம்! சீனாவில் இறப்பு விகிதமானது நாளுக்கு நாள் உயர்வடைந்து கொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு 2 மில்லியன் அளவுக்கு மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்தது. இந்நிலையில் சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்களே உள்ளனர் என தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் ஆரம்ப காலங்களில் மக்கள் தொகையைக் குறைக்க ‘ஒரு குழந்தை திட்டம்‘ நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமான அளவு குறைவடைந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் குறித்த திட்டத்தை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு விகிதம் எ…
-
-
- 1 reply
- 278 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஆலிஸ் கட்டி பதவி, இஸ்ரேல், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா எல்லையில் இருக்கும் இவர்கள் 'இஸ்ரேலின் கண்கள்' என அழைக்கப்படுகிறார்கள். இஸ்ரேல்-காஸா எல்லையில், பல ஆண்டுகளாக இந்த இளம் பெண்கள் படைப் பிரிவுக்கு ஒரு வேலை இருந்தது. அது, மணிக்கணக்கில் கண்காணிப்பு தளங்களில் அமர்ந்து, சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைப் பார்ப்பதும், அவற்றை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதும்தான். ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்திய அக்டோபர் 7-ஆம் தேதிக்கு முன், அந்த ஆயுதக்குழுவினர் எல்லையில் இருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் பயிற்சி மேற்கொள்வது, பணயக்கைதிகளை அழைத்துச் செல்வதுபோல பயிற்சி எடுப்பது…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
மனித உரிமை விவகாரங்களில் இரட்டை வேடம்போடும் உலக தலைவர்கள் - பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களிற்கு ஆபத்து - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் Published By: RAJEEBAN 14 JAN, 2024 | 12:59 PM உலக நாடுகளின் தலைவர்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவதால் சர்வதேச அளவில் மனித உரிமைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை நிறைவேற்றவேண்டிய தங்கள் கடப்பாட்டினை உலக தலைவர்கள் புறக்கணிப்பதால் உலகம் முழுவதும் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தனது வருடாந்த அறிக்கையில் சர்வதேச மனித உரிமை கண்காணிப…
-
- 1 reply
- 307 views
- 1 follower
-
-
மத்திய இஸ்ரேலிய நகரமான ரானானாவில் திங்கள்கிழமை இரட்டை தாக்குதல்களில் 70 வயதுடைய பெண் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 17 பேர் காயமடைந்தனர் என்று தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் நடந்த இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் சந்தேகத்திற்குரிய இருவர் ஹெப்ரோனில் வசிப்பவர்கள் என்று இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது. ஹெப்ரான் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஒரு நகரம். அவர்கள் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்ததாகவும் தற்போது போலீஸ் காவலில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் பல இடங்களில் வாகனங்களைத் திருடிச் சென்றுள்ளனர், மேலும் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை…
-
- 2 replies
- 364 views
- 2 followers
-
-
உலக நாடுகளை எச்சரிக்கும் வடகொரியா! ஹைப்பர்சோனிக் வார்ஹெட் பொருத்தப்பட்ட புதிய திட எரிபொருள் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த மற்றும் கடினமான ஆயுதங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை வடகொரியா மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அதன் முதல் இராணுவ உளவு செயற்கைக் கோளை ஏவியதை அடுத்து பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. பசிபிக் பகுதியில் அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகலின் பிரசன்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வடகொரியா, அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் திறனை மேம்படுத்துவதாக உறுதியளித்த…
-
- 0 replies
- 571 views
-
-
Published By: RAJEEBAN 13 JAN, 2024 | 07:50 PM சீனாவினால் பிரச்சினைக்குரியவராக கருதப்படுபவரும் தாய்வானின் இறைமை ஆதரவு ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளர் லாய்சிங் தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். 2020 முதல் தாய்வானின் ஜனாதிபதியாக பதவிவகிக்கும் லாய்சிங் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சீனாவின் கொள்கைக்கு எதிராக இறைமையுள்ள தாய்வானையும் தேசிய அடையாளத்தையும் முன்னிறுத்தும் அரசாங்கம் தொடர்ந்து தாய்வானை ஆட்சிபுரியும் நிலையை உருவாக்கியுள்ளது. லாய்சிங்கிற்கு 40 வீத வாக்குகள் கிடைத்துள்ளன. சீனாவுடனான எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய தாய்வானின் ஜனாதிபதி தேர்தலில் 19.5 மில்ல…
-
- 2 replies
- 332 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,STEPHEN ROSTAIN படக்குறிப்பு, பழங்கால வீடுகளுக்கு அடிப்படையாகக் கருதப்படும் 6,000 மேடுகள் இங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 29 நிமிடங்களுக்கு முன்னர் காட்டுக்குள் செழித்துப் படர்ந்த பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பண்டைய நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு அமேசானில் வாழும் மக்களின் வரலாற்றைப் பற்றிய நமது புரிதலை மாற்றுவதாக அமைந்துள்ளது. கிழக்கு ஈக்வடாரில் உள்ள உபானோ பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பொதுவெளிகள், சாலைகள் …
-
-
- 3 replies
- 536 views
- 1 follower
-
-
ஏமனுக்குள் புகுந்து இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் பல்முனை தாக்குதல் பட மூலாதாரம்,MINISTRY OF DEFENCE/PA WIRE 12 ஜனவரி 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது பல்முனை தாக்குதல்கள் நடத்தியுள்ளன. கடந்த நவம்பவர் மாதம் முதல், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கான எதிர்வினையே இது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மக்களை பாதுகாக்கவும், சர்வதேச வர்த்தகத்தை உறுதி செய்யவும், இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்த தயங்க மாட்டேன் என்றும் கூற…
-
- 5 replies
- 790 views
- 1 follower
-
-
1851 இலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரை மையமாக கொண்டு செயற்படும் பிரபல தின பத்திரிக்கை, தி நியூயோர்க் டைம்ஸ் (The New York Times). உலகெங்கிலும் இணைய வடிவில் சுமார் 9.41 மில்லியன் சந்தாதாரர்களும், அச்சு வடிவில் சுமார் 6,70,000 சந்தாதாரர்களும் கொண்டது இந்த தின பத்திரிகை. 2018 இல், சுசன் க்ரெய்க் (Susanne Craig), டேவிட் பார்ஸ்டோ (David Barstow) மற்றும் ரஸ்ஸல் ப்யூட்னர் (Russell Buettner) எனும் அப்பத்திரிகையின் 3 புலனாய்வு செய்தியாளர்கள், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சொத்துக்கள் மற்றும் வருமான வரி செலுத்துவதில் அவர்கள் பின்பற்றும் வழக்கங்கள் குறித்து ஒரு ஆய்வு கட்டுரையை பதிவிட்டனர். 2021 இல் இதில் உள்ள கருத்துகள் தவறானவை எனும் புகாருடன் டொ…
-
- 1 reply
- 453 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 13 JAN, 2024 | 03:49 PM நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது நீண்டகால காதலரான கிளார்க் கெய்ஃபோர்டை இன்று சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு 43 வயதான ஜெசிந்தா ஆர்டெர்னும் 47 வயதான கிளார்க் கெய்ஃபோர்டும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருமணம் இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றையதினம் நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் 325 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகிய ஹாக்ஸ் பே பகுதியில் திருமணம் நடைப்பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டிலிருந்து காதலித்துவந்த இவர்கள் திரு…
-
-
- 1 reply
- 348 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிராண்டன் லைவ்சே பதவி, பிபிசி நியூஸ் 15 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு அக்டோபரில் பெரு நாட்டின் தலைநகர் லிமா விமான நிலையத்தில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு 'ஏலியன் மம்மிகள்' மனிதனால் உருவாக்கப்பட்டவை என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். லிமாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெருவின் கலாச்சார அமைச்சகம் இந்த மம்மிகள் மனித உருவ பொம்மைகள் என்று கூறியது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று டிஎன்ஏ சோதனை முடிவுகளின் அடிப்படைய…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 22 DEC, 2023 | 12:09 PM அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் தான் செய்யாத குற்றத்திற்கு 48 வருடகால சிறைதண்டனை அனுபவித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 1975ம் ஆண்டு மதுக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் என்ற இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் க்ளின் சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் லூசியானா மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார். ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி, பின்னர் மரண தண்டனை சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது. …
-
- 1 reply
- 861 views
- 1 follower
-
-
யேமனில் உள்ள ஹூதி நகரங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அரேபிய கடலில் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றிய செய்தி ஆகியவற்றால் உலகளாவிய எண்ணெய் எதிர்காலம் இன்று கடுமையாக உயர்ந்தது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் ஃபியூச்சர்ஸ் ஆரம்ப வர்த்தகத்தில் ஒரு பீப்பாய்க்கு $74ஐ நோக்கி 2% உயர்ந்தது மற்றும் ப்ரெண்ட் எதிர்காலம் ஒரு பீப்பாய்க்கு $78ஐ நோக்கி 1.5% உயர்ந்தது. செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான ஹூதி தாக்குதல்களுக்கு பதிலடியாக யேமனில் உள்ள 12 இலக்குகள் மீது அமெரிக்க தலைமையிலான கூட்டணி இன்று தாக்குதல்களை நடத்தியது. பதிலடி கொடுப்போம் என ஹூதி துணை வெளிவிவகார அமைச்சர் சபதம் செய்தா…
-
- 1 reply
- 555 views
- 1 follower
-
-
மனிதனின் உற்ற நண்பனை இனி கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம் Digital News Team நாய்களை “மனிதனின் உற்ற நண்பன்” (Man’s best friend) என அடைமொழியிட்டு கூறுவது வழக்கம். நாய்களை பாதுகாப்பிற்கு ஏற்ற காவலனாகவும், தோழமைக்கு ஏற்ற உயிரினமாக கருதி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் அயல்நாடுகளில் அதிகம். தென் கொரிய மக்களில் ஒரு சிலர் நாய் இறைச்சி உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது உலகளவில் விலங்கின ஆர்வலர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்தது. தென் கொரியாவின் பல பகுதிகளில் நாய் இறைச்சி பிரியர்களுக்கென பல உணவகங்களில் அவை சமைக்கப்பட்டு, பரிமாறப்பட்டு வந்தது. இந்நிலையில், தென் கொரிய பாராளுமன்றம் நாய் இறைச்சியை…
-
-
- 8 replies
- 710 views
- 1 follower
-
-
புதிய ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் JN.1 பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மக்களுக்கான ஆபத்து தற்போது குறைவாக உள்ளதாகவும் தற்போதைய தடுப்பூசிகள் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. எனினும், குளிர்காலத்தில் கொரோனா மற்றும் பிற நோய் தொற்றுகள் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/285478
-
- 2 replies
- 611 views
- 1 follower
-
-
பிரான்ஸ் வரலாற்றில் முதன் முறையாக! பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக மிகவும் இளம் வயதில் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 34 வயதான இவர், கடந்த 20 மாதங்களாக பிரதமராக பதவி வகித்த Élisabeth Borne இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனினால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1365465
-
- 4 replies
- 681 views
- 1 follower
-
-
செவ்வாயன்று புளோரிடாவில் ஒரு பரந்த புயல், சூறாவளி எச்சரிக்கைகள் மற்றும் அதிக காற்று வீடுகளின் கூரைகளை வீசியது, முகாம்களில் புரட்டப்பட்டது மற்றும் தளபாடங்கள் மீது வீசியது. மற்றொரு புயல் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள நகரங்களை அரை அடிக்கும் அதிகமான பனியுடன் ஸ்தம்பிக்க வைத்தது, வடகிழக்கு நோக்கிச் செல்லும் போது நெடுஞ்சாலைகளில் மக்கள் சிக்கித் தவித்தனர்.
-
- 0 replies
- 672 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாண நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதியை பாய்ந்து தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது, டியோப்ரா ரெட்டன் (Deobra Redden) எனும் 30 வயதான கைதி பாய்ந்து தாக்கிய காட்சி, நீதிமன்ற கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், ஒருவரை கடுமையாக தாக்கிய குற்றசாட்டில் டியோப்ரா ரெட்டன் மீது வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். நீதிபதி மீது தாக்குதல் எனினும், அவருக்கு நன்னடத்தை சோதனை முறையான விடுதலையை (Probation) வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். …
-
- 6 replies
- 754 views
- 1 follower
-
-
உலகப் புகழ்பெற்ற மதபோதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு! ”உலகப் புகழ்பெற்ற நைஜீரியாவைச் சேர்ந்த மறைந்த மதபோதகரான டிபி ஜோசுவா (TB Joshua) மீது பாலியல் வன்கொடுமை, கட்டாயக் கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள், சுமத்தப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மதபோதகரினால் பாதிக்கப்பட்டவர்களினாலேயே குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சர்வதேச ஊடகமொன்று மேற்கொண்ட விசாரணையிலேயே குறித்த விடயம் அம்பலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1365294
-
- 1 reply
- 450 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் அது கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் ஆட்சி நடந்துகொண்டிருந்த 17ஆம் நூற்றாண்டு காலகட்டம். பைபிள் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு மாறான கருத்துகளைக் கூறும் அறிவியல் கோட்பாடுகள் மத நிந்தனை என முத்திரை குத்தப்பட்டு, தண்டிக்கப்பட்ட காலகட்டம். அந்தக் காலகட்டத்தில், இந்தப் பேரண்டத்தில் பூமிதான் மையமாக இருப்பதாகவும் அதைச் சுற்றியே சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் சுற்றுவதாகவும் நம்பப்பட்டது. அதை மறுப்பது கிறிஸ்தவ புனித நூலுக்கு எதிரானதாகக் கருதப்பட்ட காலகட்டம் அது. அந்தக் கோட்பாட்டைச் சந்தேகிக்கு…
-
- 2 replies
- 493 views
- 1 follower
-